வெள்ளி, 8 மே, 2020

வெள்ளி வீடியோ  :   மெய் சிலிர்த்து முகம் சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே


​​1​968 இல் தாதா மிராசி இயக்கத்தில் வெளியான படம் பூவும் பொட்டும்.  ஏ வி எம் ராஜன், நாகேஷ், முத்துராமன் பாரதி ஆகியோர் நடித்த இந்தப் படத்துக்கான பாடல்களை மருதகாசி, கண்ணதாசன், வாலி ஆகியோர் இயற்ற ஆர் கோவர்தன்  இசை அமைத்திருக்கிறார்.


தாதா மிராசி பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு.  இவர் கதை சொல்லும் பாணியைதான் காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்ல பயன் படுத்தினாராம்.   ஸ்ரீதர் - கோபுவிடம் சிவாஜி கணேசன் அனுப்பி அவர் கதை சொன்ன பாணியைப் பார்த்து ஸ்ரீதர் சங்கடத்தில் நெளிந்தாராம்.  ஆனால் கோபு அவர்களோ அதிலிருக்கும் நகைச்சுவை பார்ட்டை எடுத்துக் கொண்டு நாகேஷுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டாராம்.

திரு கோபுவின் மகன் திரு காலச்சக்கரம் நரசிம்மா ஃபேஸ்புக்கில் எழுதிய தொடரில்  இதுபற்றிச் சொல்லி இருக்கிறார்.​

கண்ணதாசன் எழுதிய பாடல்.   டி எம் எஸ்- சுசீலா இனிய குரலில் அழகிய வரிகளுடனான பாடல்.


நாதஸ்வர ஓசையிலே, தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள்
கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில் 

மாலையிட்ட பூங்கழுத்தில் 
தாலிகட்டும் வேளையிலும் 
ஊரார்கள் வாழ்த்துரைக்க  
ஊர்வலத்தில் வரும்பொழுதும்
தேவன் வந்து பாடுகின்றான் 
தேவி நடமாடுகின்றாள்


மை வடித்தக் கண்ணிரண்டும் 
மண் பார்க்கும் பாவனையில் 
கை பிடித்த நாயகனின் 
கட்டழகு கண்டு வர 
மெய் சிலிர்த்து முகம் சிவக்கும் 
மெல்லிடையாள் கூந்தலிலே 
தேவி நடமாடுகின்றாள் 
தேவன் வந்து பாடுகின்றான்

கற்பில் ஒரு கண்ணகியாய், காதலுக்கு ஜானகியாய்
சிற்ப மகள் வாழ்கவென்று தேவன் வந்து பாடுகின்றான் 
பத்தினியைக் காவல் கொண்டு பார் புகழ வாழ்கவென்று 
சத்தியத்தின் மேடையிலே  தேவி நடம் ஆடுகிறாள்




84 கருத்துகள்:

  1. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான பாடல்...
    இனிமையான பாடல்...

    பதிலளிநீக்கு
  4. தேவன் வந்து பாடுகின்றான்...
    தேவி நடம் ஆடுகின்றாள்....

    பதிலளிநீக்கு
  5. மை வடித்த கண்ணிரண்டும்
    மண் பார்க்கும் பாவனையில்
    கை பிடித்த நாயகனின்
    கட்டழகைக் கண்டு வர..

    ஆகா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வரிகளைத்தான் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.

      நீக்கு
    2. இந்த மாதிரி வரிகளை எழுதிய, பாடிய, ரசித்த காலமெலாம் போய்விட்டபின், நாம் இருக்கிறோமே எதற்காக என மனம் தவிக்கிறது.

      கண்ணதாசன் ஆழ்ந்து ரசித்து எழுதியிருக்கிறார்.
      மருதகாசி என்ன பாவம் செய்தார், அவர் பாட்டொன்றையும் போட்டிருக்கலாமே? லாக்டவுன் சமயத்தில் ஒரு எக்ஸ்ட்ரா பாட்டுக்குக்கூடவா தட்டுப்பாடு!

      நீக்கு
    3. கணினிக் பஷ்டம் ஏகாந்தன் ஸார்!

      நீக்கு
  6. ஆனால் -
    இன்றைக்கு 98% இந்தப் பாடலைக்
    கடந்து விட்டது சமுதாயம்...

    அழகான இந்தப் பாடலை
    யாரும் எடுத்துப் பேசினால்
    எதிர்ப்புறத்தில் இருந்து வசவு கிடைக்கும்....

    இது மாதிரி நனி நாகரிகம் பேசும் இன்னொரு பாடலும் உண்டு....

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி. நல்வரவும், வணக்கமும்.

      நீக்கு
  8. கற்பில் ஒரு கண்ணகியாய், காதலுக்கு ஜானகியாய்
    சிற்ப மகள் வாழ்கவென்று தேவன் வந்து பாடுகின்றான் /////////அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    மிகப் பிரபலமான பாடல்.
    கற்பில் ஒரு கண்ணகியாய், இதெல்லாம் அப்போதிருந்த அமைப்பின்
    வாசகங்கள்.
    இப்போதும் நம் மக்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    அன்னாட்களில் ஏன் என்று கேட்கக் கூடத் தெரியாமல்
    ஒத்துத்தான் போனோம்.
    தவறேதும் நடக்கவில்லை.

    அடிப்படையில் பெண்கள் மாறி இருக்க மாட்டார்கள்.
    நடை உடை பாவனைகள் மாறி இருக்கலாம்.
    மிக அருமையான தமிழ்ப் பாடல்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..்். இனிய வணக்கம்.
      ஆமாம் அம்மா.. வரிகள் வெகு சிறப்பாய் அமைந்துவிட்ட இனிய பாடல்.

      நீக்கு
  9. நான் நாகையில் படித்த காலத்தில், அங்கு ஐ டி ஐ (Industrial Training Institute) ல் படித்தவர் எஸ் வெங்கடரமணி என்ற உறவினர். பெரியப்பாவின் பேரன். அவர் சொன்னது, "இந்தப் பாடலை அவர்களுடைய ஐ டி ஐ பயிற்சி பள்ளியில், வெள்ளிக்கிழமைகளில் காலை பிரேயர் நேரத்தில் பாடுவார்கள் என்று! இன்னமும் என்னால் அந்த தகவலை நம்பமுடியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரேயரில் பாடும் பாடலா இது?  நாதஸ்வரம் என்ற ஒரு வார்த்தையே போதும் என்று முடிவு செய்து விட்டார்கள் போல!

      நீக்கு
  10. இந்த பாடலும் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடலே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கை வானொலியில் போடாத இனிமையான பாடல் எது?!!  நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இன்று நல்ல பாடல் பகிர்ந்துள்ளீர்கள். பாடல் வரிகள் அர்த்தத்தோடு இருக்கணும் என்று 99 சதவிகிதம் நினைத்த காலம். இப்போ பாடலுக்கு கவிஞர்கள் தேவையில்லை. தமிழ் வார்த்தைகள்தான் தேவை. எங்க வார்த்தை வரலையோ அங்க ஏதாவது மொழி வார்த்தை அல்லது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் தாய் மொழியான ஆங்கில வார்த்தைகளைப் போட்டால் முடிந்தது கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  காலை வணக்கம்.

      இப்போதைய பாடல்களில் கவிநயம்....    தேடித்தான் பார்க்கணும்!

      நீக்கு
  13. எம்.எஸ்.வி இசையமைத்த படங்களில் 'இசை உதவி கோவர்தன்' என்று வருமே. அவர்தானே இது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இவர் இசை அமைத்த பாடல்களில் என்றுமே மறக்கமுடியாத பாடல் : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி - பட்டணத்தில் பூதம் படப் பாடல். (காபி ராகம்?)

      நீக்கு
    2. இந்தப் பாடல் பிருந்தாவன சாரங்கா என்று படித்த ஞாபகம்.

      நீக்கு
    3. அந்த சிவகாமி மகனிடம் சேதி போய்ச் சேர்ந்ததோ இல்லையோ.. பாடல் நம்மை விடுவதில்லை! சுசீலாவின் குரலில் பல பாடல்கள் தேவகானம்.

      நீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை வணங்கங்கள்! இந்த நாள் இனிய நாளாய் திகழ‌ட்டும்!

    பதிலளிநீக்கு
  15. இந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் அறுபதுகளில். வரிகள் அட்டகாசமாக இருக்கும். பாடலும் இனிமையே. ஆனால் பாடல் மெதுவாக இழுப்பது போல இருக்கும்!‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர் கோவர்தனம், அவருடைய சகோதரர் ஆர் சுதர்சனம், இவர்களின் தந்தை எல்லோருக்குமே கர்நாடக இசை தெரியும். சகோதரர்கள் இசை அமைத்துள்ள பாடல்கள் கர்நாடக இசை கொண்டதாக இருப்பின், மெதுவாக இழுப்பது போலத்தான் இருக்கும்.

      நீக்கு
    2. மிக மெதுவான பாடலாக இருந்தாலும் இந்தப் பாடலைத் தூக்கி நிறுத்துவது பாடலின் வரிகள்தான் இல்லையா?

      நீக்கு
    3. மிக மெதுவாக இருப்பதாலேயே ரசிக்கவும் முடிகிறது இல்லையா? இப்போதைய பாடல்களின் வரிகளும் புரியவில்லை; இசையும் ஒரே சத்தம். கேட்கவே முடியலை. நான் உட்கார்ந்து கேட்பதும் இல்லை.

      நீக்கு
    4. ஆமாம். இவ்வளவு குறைந்த ஸருதியில் ஆரம்பிக்கும் டி எம் எஸ் குரலும் அபூர்வம்.

      நீக்கு
  16. பெண்கள்னா, மெல்லிடையா இருக்கணும் என்ற அழுத்தத்தை சமூகம் தருதே..இதுமாதிரியான அழுத்தம் (உடலமைப்பில்) ஆண்களுக்கு சமூகம் insist செய்வதில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன இப்படிச் சொல்லிட்டீங்க ! விஷ்ணுச்சித்தர் காலத்திலிருந்தே ,' .... மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா.... ' என்று ஆண்களை திரண்ட தோள் உடையவர்களாக சொல்லி வருகிறார்களே!

      நீக்கு
    2. ஆ..  இவ்வளவு இலக்கியம் எனக்குத் தெரியாது!

      நீக்கு
    3. கம்பராமாயணத்தில் ராமனைக் குறித்த வர்ணனைகளைப் படித்துப் பாருங்கள்.

      நீக்கு
    4. சொல்லலாம் என்று நினைத்தேன்.
      ஆண்டாளும் அவள்பாட்டுக்கு “உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்..” என்று பாடிச்சென்றிருக்கிறாளே !

      நீக்கு
    5. கம்பராமாயணம் பற்றி நானும் சொல்ல நினைச்சேன். ஆனால் அரைகுறையாய்த் தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றி ஆரம்பிக்க வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

      நீக்கு
  17. மிகவும் பிடித்தமான பாடல்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  18. //தேவன் வந்து பாடுகின்றான்
    தேவி நடமாடுகின்றாள்
    ..............................

    தேவி நடமாடுகின்றாள்
    தேவன் வந்து பாடுகின்றான்.. //

    மாற்றி மாற்றி எடுத்தாண்டிருந்தாலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவி நடமாடுவதும், தேவன் பாடுவதும் மாறவில்லை.

      2.35 PM

      நீக்கு
    2. எனக்கு மாற்றுவது சிரமம்.

      நீக்கு
  19. இனிமையான பாடல். பிடித்த பாடல்.
    கேட்டு மகிழ்ந்தேன்.
    படமும் நன்றாக இருக்கும்.

    இந்த படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.
    எண்ணம் போல கண்ணன் வந்தான். பாடலும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா. ஆமாம், அந்தப் பாடலும் நன்றாயிருக்கும்.

      நீக்கு
  20. எங்கள் பிளாக் ஹோம் பேஜ் திறக்க நிறைய நேரம் எடுக்கிறது. இது பிரௌசர் குழப்பம் இல்லை. ஏன் எனில் மற்றைய பிளாகுகள் இது போல நேரம் எடுப்பதில்லை. மொபைளில் திறக்க நேரம் எடுப்பதில்லை. நான் உபயோகிப்பது க்ரோம் மற்றும் லினக்ஸ். கொஞ்சம் கவனிக்கவும். Jayakumar 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ஜேகே ஸார்... என்ன செய்யணும் என்று தெரியவில்லை. பார்க்கிறோம்.

      நீக்கு
    2. நான், எங்க ஏர்டெல் ஃபைபர் கனெக்‌ஷன்லதான் பிரச்சனைனு நினைத்தேன். ஆனால் எபி மட்டும்தான் கமெண்ட் மற்றும் இடதுபக்க லிஸ்ட் வர ரொம்ப நேரம் எடுக்குது. ஒரு வாரமா இந்தப் பிரச்சனை.

      நீக்கு
  21. கேட்டிருக்கிறேன் மிகவும் இனிய பாடல்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    அருமையான பாடல். அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஏவி. எம் ராஜன் நடித்துள்ள அந்த கால படங்களின் கதையம்சமும், அதில் வரும் பாடல்களும் ஒரளவு மனதில் நிலையாக இடம் பிடிக்கிற மாதிரி அமைந்து விடும். மற்றும் ஏவி. எம் ராஜன், புஷ்பலதா ஜோடிப் பொருத்தம் படங்களிலும் சரி..(உண்மை வாழ்க்கையிலும் சரி) பொருத்தமாக அமைந்து விட்டது.

    இது போல் இருளும்.ஒளியும் படத்தில் "திருமகள் தேடி வந்தாள்" என்றொரு பாடல் சுசீலா அவர்களின் குரலிலும்,எஸ். பி. பி குரலிலும் இரு தடவையாக வரும். அதுவும் மிகவும் நன்றாக இருக்கும். அந்த படக்கதையும் கடைசி வரை சுவாரஷ்யமாக இருக்கும்.

    இந்தப் பாடலையும் இப்போது கேட்டு ரசித்தேன். படம் குறித்த தகவல்களையும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... முதல் பாராவின் முதல் வரியைத் தவிர மற்ற வரிகளில் நான் கொஞ்சம் மாறுபடுவேன். இருளும் ஒளியும் பாடலும் மிக அருமையாக இருக்கும்.

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம். இன்று காலை வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு வரலாம் என்றிருந்ததில் இழுத்துக்கொண்டே போய் விட்டது. தொடர் வேலைகள். சமையல், சாப்பாடு, வெகு நாட்கள் கழித்துக் கிட்டத்தட்ட ஒரு மாசம் கழித்துப் பூத்தொடுத்தல்! அதன் பின்னர் கணினியைக் கவனிக்க முடியாது. சற்றுக் கண்களுக்கு ஓய்வு கொடுத்த பின்னர் இப்போது வந்தேன்.

    பதிலளிநீக்கு
  24. கொரோனா குறித்து ஒண்ணும் சொல்றாப்போல் இல்லை. எல்லா மாவட்டங்களும் போட்டி போட்டுக்கொண்டுக் கொரோனாத் தொற்றை அதிகரித்துக் கொண்டே போகின்றன. ஈசனடி போற்றி, எந்தையடி போற்றி என அவன் கால்களிலே விழுந்து வணங்கி வேண்டுவதைத் தவிர்த்து வேறே ஏதும் தெரியலை. அனைவரும் பூரண ஆரோக்கியத்தோடு இருக்கவும் மன வலிமையோடு எதிர்த்துப் போராடவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் பிரார்த்திப்போம். எப்போது குறையத் தொடங்குமோ...

      நீக்கு
  25. மேற்சொன்ன பாடல் அடிக்கடி கேட்டிருக்கேன். வானொலி உபயம். தொலைக்காட்சி உபயம். ஆனாலும் படம், நடிகர்கள், இசை அமைப்பாளர் என அனைவரையும் இப்போதே அறிந்தேன். திருமகள் தேடி வந்தாள் பாடலும், சிவகாமி மகனுக்குப் பாடலும் கூட மிகவும் பிடித்த பாடல். ஜிவாஜியின் "உயர்ந்த மனிதன்" படத்தைத் தண்டனை போல் லக்ஷம் தரம் பார்த்தது போல் பட்டணத்தில் பூதம் படமும் பார்த்திருக்கேன். ஜீ பூம்பாவைத் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்திருக்கேன். (பானுமதி, இப்போ என்ன சொல்லுவீங்க? )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பாடல் ரொம்பப் பிரபலம். அநேகமாக இந்தப் பாடலைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது.

      நீக்கு
  26. பாரதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளுள் ஒருவர். ஆனால் எம்ஜாருடன் நடித்தப்புறமா அவர் அதிகம் தமிழில் நடிக்கவில்லை என நினைக்கிறேன். எம்ஜாருடன் ஏதோ ஒரு படத்தில் நடிச்சிருக்கார்.ஜெமினியுடனும் நடிச்சிருக்கார்னு நினைக்கிறேன். அது ஸ்ரீதர் படமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரோதயம், அவளுக்கென்றோர் மனம்.

      சிவாஜியுடன் தங்கச் சுரங்கம். இதில் சிவாஜி ஜேம்ஸ்பாண்ட்!

      நீக்கு
    2. அந்தக் காலத்து குண்டுகளுக்கு நடுவே பாரதி ஒரு கொடி !

      நீக்கு
  27. 'அந்த'க் காலத்தில் - அதாவது - எனக்கு "மாலையிட்ட பூங்கழுத்தில் தாலிகட்டும் வேளை" வந்திராத காலத்தில் - இந்தப் படத்தைப் பார்த்தேன். பல நாட்களுக்கு அந்த நாதஸ்வர ஓசை என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அழகான படம், அருமையான பாடல்கள், அழகான பாரதி!

    பதிலளிநீக்கு
  28. இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன்.

    கதை சொல்லும் பாணி - தகவலுக்கு நன்றி. நாகேஷ் அந்த சீனில் பிரமாதமாக நடித்து இருப்பார்! இப்போதும் பார்க்கத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!