திங்கள், 18 மே, 2020

பிஸி பேளா பாத் :: ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி


அச்சம் தரும் சூழ்நிலையிலிருந்து விடுபட்டு,  ஒரு நல்ல உணவைத் தயாரித்து நாமும் உண்டு, நம் குடும்பத்தாருக்கும் அளிப்போம் என்று முடிவு செய்து நான் பிஸி பேளா பாத் தயாரித்தேன். அதற்கு கூட உண்ண வறுவல் இல்லாததால், அப்பளம் பொரித்து சமாளித்தேன். 


உண்மையிலேயே சுவையாக இருந்தது. அது கோவிட் படுத்தும் பாட்டினாலோ அல்லது பொழுது போகாமல் இருப்பதாலோ தெரியவில்லை. எல்லோருமே நன்றாக உள்ளதாக கூறினார்கள். 

நீங்களும் சமைத்துப் பாருங்கள். 

வேண்டிய பொருட்கள் : 

மசாலா விழுதிற்கு : 

1 ஸ்பூன் எண்ணை (நான் நல்லெண்ணை உபயோகித்தேன்) 

1 ஸ்பூன் தனியா 

½ ஸ்பூன் உ.பருப்பு 

½ ஸ்பூன் க.பருப்பு 

5 கேஷ்மீர் சிவப்பு மிளகாய் (நிறத்திற்காக) நான் வெறும் மிளகாய்தான் சேர்த்துக் கொண்டேன். 

¼ ஸ்பூன் வெந்தயம் 

சில கருவேப்பிலை இலைகள் 

2 ஸ்பூன்,  திருகிய தேங்காய் 

 


சிறிது நீர் விழுது அரைப்பதற்கு 


 

சாம்பார் சாதம் அல்லது பிசி பேளா பாத்திற்கு : 

2 ஸ்பூன் நெய் அல்லது வெண்ணை 

½ ஸ்பூன் கடுகு 

½ ஸ்பூன் ஜீரகம் 

ஒரு சிட்டிகை பெருங்காயம் 

சில கருவேப்பிலை இலைகள் 

1 காய்ந்த மிளகாய் 

½ வெங்காயம் 

½ நன்றாக சிறிதாக வெட்டிய தக்காளி 

நீளமாக சிறு துண்டுகளாக வெட்டிய 1 கேரட் 

5 பீன்ஸ் நீளமாக வெட்டியவை 

1 வெட்டிய முறுங்கைக் காய் 

 



1 கப் நீர் அல்லது உங்களுக்கு வேண்டியபடி 

½ ஸ்பூன் மஞ்சள் பொடி 

சுவைக்கேற்ப உப்பு 

1 பெரிய நெல்லிக்காய் அளவு புளி (நீரில் ஊற வைக்க வேண்டும்) 

½ ஸ்பூன் வெல்லம் 

இரண்டு கப் வேக வைத்த சாதம் (பொல பொலவென இருக்க வேண்டும்) 

½ கப் வேக வைத்த துவரம்பருப்பு 


செய்முறை : 

1. முதலில் வானலியை நன்றாக சூடாக்கி, எண்ணை சேர்த்து, மசாலா 
விழுதிற்கான எல்லா பொருட்களையும் நன்றாக வறுத்துக் 
 கொள்ளவும். 

2. வேண்டிய தண்ணீர் விட்டு, மிக்ஸியில் நன்றாக விழுதாக அரைத்துக் 
கொள்ளவும். 

3. அடுத்தது, ஒரு வானலியில் 2 ஸ்பூன் நெய்யை விட்டு தாளிக்க 
வேண்டிய பொருட்களை தாளித்துக் கொள்ளவும். 

4. இப்போது, வெட்டிய வெங்காயத்தை போட்டு நன்றாக 
பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

5. பிறகு வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். 

6. இப்போது வெட்டி வைத்திருக்கும் காய்கள், நீர், மஞ்சள் பொடி மற்றும் 
உப்பை கலந்து விடவும். 

7. வானலியை ஒரு மூடி போட்டு மூடி, இக்கலவையை நன்றாக 5 
நிமிடங்கள் கொதிக்க விடவும். 

8. இப்போது, ஊற வைத்த புளி நீர் மற்றும் வெல்லத்தையும் சேர்த்து 
நன்றாக கொதிக்க விடவும். 

 


9. கொதித்த பின்னர், அரைத்து வைத்த மசாலா விழுது, வேக வைத்த 
துவரம்பருப்பு, சாதம் யாவற்றையும் வாணலியில் சேர்த்து கலக்கவும். 

 

10. எல்லாவற்றையும் நன்றாக கலந்து, தேவைக்கேற்றார் போல் நீர் 
சேர்த்துக் கொள்ளவும். 

11. 5 நிமிடங்கள் குறைந்த நெருப்பில் வைத்து கொதிக்க விடவும். பிஸி 
பேளா பாத் சிறிது இருகும். 

12. இறக்கி கீழே வைத்து, மேலே சிறிது நெய் ஊற்றி அப்பளத்துடனோ, 
உருளை வறுவலுடனோ பரிமாருங்கள். 

எங்கள் வீட்டில் பெரியவர்கள் உள்ளதால், நான் வெங்காயம், முருங்கைக் காய் சேர்க்காமல் செய்தேன். மிக அருமையாக வந்தது. சமைத்து சுவையுங்கள். 

==================================

76 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பிஸியான திங்கள் காலைக்கு பிசிபேளா அருமைதான்.

    ரமாஸ்ரீக்கு அன்பு வாழ்த்துகள்.
    சாம்பார் சாதத்திற்கான குறிப்புகள் பிரமாதம்.

    பிசிபேளாவில் கொஞ்சம் வெல்லம் சேர்ப்பார்கள் பெங்கலூர்க்காரர்கள்.
    அசட்டுத் தித்திப்பாக இருக்கும்:)

    மீனக்ஷி அம்மாள் குறிப்பில்
    அடுப்பு எப்படி மூட்டுவது என்னும் குறிப்பு கூட இருக்கும்.
    அது ஒன்றுதான் நீங்கள் எழுதவில்லை.
    சூப்பர் சாப்பாடு. ஜூன் 30 தொற்றிலிருந்து விடுதலை என்கிறார்கள் சிலர் . நல்லதை நினைப்போமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம். வல்லி மாமி, நான் திருமணாகி வந்த புதிதில் என் அம்மா எனக்கு சீறாகக் கொடுத்த முதல் பொருள் மீனாஷி அம்மாள் சமையல் புத்தகம்தான். மிகவும் உதவியாக இருந்தது, இருக்கிறது, இருக்கும். இதிலிருந்துதான் என் பெண்களுக்கும் சமையல் குறிப்புகள் அனுப்பிக் கொண்டிருக்கின்றேன்.

      நீக்கு
  2. ஞாலம் கருதினும் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை, மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கடந்த இரு நாட்களாகத் தொலைக்காட்சிச் செய்திகள் பார்க்க உட்கார நேரம் இல்லாததால் தற்போதைய நிலவரம் தெரியவில்லை. என்றாலும் தமிழ்நாட்டிலும் முக்கியமாக இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரப் பிரார்த்திக்கிறேன். நேற்று சங்கரா தொலைக்காட்சி மூலம் சிருங்கேரி மடம் சொல்லி இருந்தபடி மாலை ஆறுமணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம் நடந்தது. உலக க்ஷேமத்திற்காகப் பிரார்த்தித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகள், அதுவும் பிரதிபலன் எதிர்பாராத பிறர் நலம் விழையும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும். நன்றி, வாழ்க வளமுடன்!

      நீக்கு
  5. இதுதான் பிஸிபேளா பாத் என்பதா!...

    செய்து விட்டால் போகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பிஸியாக இல்லை (வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறேன்) அப்போ நான் இதன் பக்கம் போகக்கூடாதா?

      நீக்கு
    2. யார் சொன்னா நீங்க பிஸியாக இல்லைன்னு கௌதமன் ஜி?
      எபி மெயிண்டைன் பண்றதே பெரிய வேலை.
      இனி நீங்களும் ரெசிபி கொடுக்க வேண்டும்.

      நீக்கு
  6. துரை இன்னிக்கு வந்துட்டார் போலிருக்கு! ரமா ஸ்ரீநிவாசனின் செய்முறை நன்றாக உள்ளது. ஆனால் இதை நாங்கள் சாம்பார் சாதம் என்றே சொல்வோம். பிஸிபேளா பாத் எனில் அதற்கு ஒரு டீஸ்பூன் சோம்பு, 2அல்லது 3 ஏலக்காய்(கறுப்பு ஏலக்காய் எனில் ஒன்று) ஒரு சின்னத் துண்டு லவங்கப்பட்டை, 2 கிராம்பு ஆகியவற்றை வெறும் வாணலியிலோ அல்லது மற்ற சாமான்களை வறுக்கும்போதோ சேர்த்துப் போட்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்வோம். (பொடி அதிகமாகப் போனாலும் பின்னால் ஒரு நாள் வாங்கி பாத் அல்லது சில சப்பாத்திக்கூட்டுகளுக்குப் பயன்படும்.) அரிசி, துவரம்பருப்பைக் கொஞ்சம் வேர்க்கடலை சேர்த்துக் குழைய வேக வைத்துக் கொண்டு அதில் தான் புளி ஜலத்தை விடுவோம். காய்களை நன்கு வதக்கி அரிசி, பருப்பு அரை வேக்காடு ஆனபின்னர் அதில் சேர்ப்போம். புளி ஜலம் விட்டு நன்கு சேர்ந்து வரும்போது பொடித்த பொடியைப் போட்டுக் கிளறிவிட்டு, நெய்யில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் தேவையானால் ஒரு பச்சை மிளகாய் தாளிப்போம். கொத்துமல்லி தூவுவோம். எங்க வீட்டில் பெரியவங்க இருந்தப்போ அவங்க சோம்பு, லவங்கப்பட்டை சாப்பிட மாட்டார்கள் என்பதால் ஏலக்காயும், கிராம்பும் மட்டும் பொடித்துக் கடைசியில் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஒரு சுவையான செய்முறை. நன்றி.

      நீக்கு
    2. கீதா, எங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கும் சரி, என் கணவருக்கும் சரி பிஸி பேளாவில் பட்டை, சோம்பு, லவங்கம், ஏலை எதுவும் பிடிக்காது. எனவே, சிறிது மாற்றி செய்வேன்.

      நீக்கு
  7. சில சமயங்களில் சாதம் அதிகம் மிஞ்சினாலோ, அல்லது சாம்பார் மிஞ்சினாலோ திப்பிச முறையில் இந்த மாதிரி சாம்பார் சாதமாகச் செய்வதுண்டு. ஆனால் யாரிடமும் மூச்சு விடக் கூடாது! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))))))))))))))))))).அன்பின் வணக்கம், கௌதமன் ஜி, துரை, கீதாமா,முரளிமா.

      நீக்கு
    2. எனக்குப் புரிந்துவிட்டது. உங்க வீட்டுக்கு மாலைல வந்து சாம்பார் சாதம் போட்டீங்கன்னா, சந்தேகப்படுங்க என்று டிப்ஸ் கொடுத்துவிட்டீர்கள் கீசா மேடம். மறப்பேனா?

      நீக்கு
    3. ஹாஹா, சாயங்காலத்துக்கு எல்லாம் இல்லை. சில சமயங்களில் மறுநாளும் பண்ணுவேனே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?

      நீக்கு
  8. பிசிபெளீபாத் செய்முறையும் படங்களும் அழகு.

    இந்த ஊரில் எங்கும் பிசிபெளாபாத் கிடைக்கும். பட்டை சோம்பு சேர்த்திருப்பார்கள்.

    நான் சாம்பார் சாத்த்துக்கே ரசிகன் இல்லை. இதுல பிசிபெளாபாத்தை எங்கே செய்து சாப்பிடுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சார், நானும் அதேதான். பிஸி பேளா பாத் மற்றவருக்கு செய்து விட்டு, ரசமும் கறியமுதும் உண்டு விடுவேன்.

      நீக்கு
    2. சில சமயங்களில் சில சாம்பார்கள் அனுஷ் போல அழகாய் அமைந்துவிடும். பாஸ் வெண்டைக்காய் சாம்பார் அருமையாச் செய்வார். ஏனோ காய் மாறும்போது சுவை கொஞ்சம் குறைவாய் அமைந்து விடும்!

      நீக்கு
  9. பிசிபெளாபாத் என்றதும் என் நினைவுக்கு சட் என, ஜிஎம்பி சார் அவரது சென்னை விசிட்டில் பல பதிவர்களை அழைத்திருந்ததும், வந்திருந்தவர்களுக்கு பிசிபெளாபாத் அளித்ததாக எழுதியிருந்ததும்தான் நினைவுக்கு வருகிறது.

    பிசிபெளாபாத்துக்கு உருளை வறுவல் நல்லா இருக்குமா அல்லது வாழைக்காய் சிப்சா என்பதை புதன் கேற்வி பதிலுக்கு அனுப்பிடலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான கேள்வி! பதில் அளிப்போம்!

      நீக்கு
    2. என்னையும் ஶ்ரீராமையும் கேட்டால் உருளையோ,வாழைக்காயோ எந்த சிப்ஸாக இருந்தாலும் தனியாக சாப்பிடத்தான் நன்றாக இருக்கும் என்போம். ஹா ஹா! பிஸிபேளா பாத்திற்கு என் சாய்ஸ் பொரித்த உளுந்து அப்பளம்.

      நீக்கு
    3. சிப்ஸ் விஷயத்தில் மேலேகண்ட கருத்துடன் உடன்படுகிறேன்!

      நீக்கு
    4. பிசிபெளாபாத் கர்நாடகா. உளுந்து அப்பளாம் நெல்லை. எப்படி ஜாயின் ஆகும்? சாம்பார் சாதம்னாக்கூட ஏத்துக்கலாம்

      ஏகாந்தன் சார் கருத்து கிளியரா இல்லை

      நீக்கு
    5. BV சொன்னதையே நானும்! சிப்ஸ் என்பது கொறித்தல்.. தட்டில் ஏன் விழவேண்டும்! தனியாகக் கொடுத்துவிடலாம். காஃபி, டீயோடு பக்கத்தில் ஒரு bowl-ல் வைத்துவிடலாம்!

      நீக்கு
    6. ஹைஃபைவ் பானுக்கா அண்ட் ஏகாந்தன் அண்ணா. சிப்ஸ் தனியாகத்தான். இதுக்கு அப்பளம் தான் பெஸ்ட் கோம்போ...

      கீதா

      நீக்கு
    7. // என்னையும் ஶ்ரீராமையும் கேட்டால் உருளையோ,வாழைக்காயோ எந்த சிப்ஸாக இருந்தாலும் தனியாக சாப்பிடத்தான் நன்றாக இருக்கும் என்போம். //

      அதே அதே சபாபதே...!

      நீக்கு
  10. நாங்க மேல்கோட்டை போயிருந்தப்போ அங்கே சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம் என யோசித்து பட்டாசாரியாரைக் கேட்டதில் அவர் வீட்டிலிருந்து கொண்டு வந்து தருவதாகச் சொல்லிக் கோயில் மண்டபத்தில் உட்கார்ந்திருக்கச் சொன்னார். பின்னர் அவர் பிள்ளையிடம், சாம்பார் சாதமும், தயிர் சாதமும் கொடுத்தனுப்பி இருந்தார். மந்தார இலைகளில் கொடுத்த அந்த சாம்பார் சாதம் கிட்டத்தட்ட ரமா ஸ்ரீநிவாசன் சொல்லி இருக்கும் முறையில் தான் லவங்கப்பட்டையோ, சோம்போ இல்லாமல் பண்ணி இருந்தார்கள். அருமையாக இருந்தது. சாம்பாரே பிடிக்காத நானே வாங்கிச் சாப்பிட்டேன். அதே போல் இங்கே ஸ்ரீரங்கத்தில் ஒரு மாத்வர் வீட்டு கிரஹப்ரவேசத்தில் போட்ட சாம்பார் சாதம்! அருமை! காய்கள் போட்டிருந்தால் தொட்டுக்கவே வேண்டாம். ஆனால் லவங்கம், சோம்பு, ஏலம், கிராம்பு பொடித்துப் போட்டுப் பண்ணும்போது நான் தொட்டுக்க வெங்காயப் பச்சடி பண்ணி அப்பளம் பொரிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனையான, சுவையான கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
    2. கீதா, என்ன ஆச்சரியம்!!!! நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் அங்கு சென்றபோது அந்த பட்டாச்சாரி எங்களுக்கும் உண்ண இதைக் கொடுத்தார். மிக சுவையாக இருந்ததால், அவர் மனைவியிடன் கேட்டு ஒரு தாளில் எழுதிக் கொண்டு வந்தேன். அந்த ரெஸிப்பிதான் இது. அஹா அஹா அஹா Great minds think alike.

      நீக்கு
    3. இப்படி அநியாயத்துக்கு அந்த பட்டாச்சாரிக்கு கிரெடிட் கொடுக்க மறந்துட்டீங்களே... ஹா ஹா

      நான் மார்ச் 30 அங்கு இருந்திருக்கணும், ஏப்ரல் 2 வைரமுடி சேவை சேவிச்சிருக்கணும். டூர் கேன்சல் ஆயிடுத்து.

      அது சரி... Great Men. (Women இல்லை) think alikeனா சொல்லுவாங்க.

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய தினம் திங்கப் பதிவில் சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் தயாரிப்பான பிஸிபேளாபாத் நன்றாக உள்ளது. படங்களையும், விபரமான செய்முறை விளக்கங்களையும், அழகாக சேர்த்து தந்துள்ளார். காய்கறிகளுடன் சேரும் சாதம் எப்போதுமே ருசியாகத்தான் இருக்கும். இதற்கு எண்ணெய்யில் பொரித்த அப்பளம். வறுவல் முதலியவை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், கூட நாலு கவளமாக உட் கொள்வோம். அதன் பின் மோர் சாதம் கூட கொஞ்சமாகதான் எடுத்துக் கொள்வோம். அருமையான முறையில் இந்த பிஸிபேளாபாத்தை அறிமுகப்படுத்திய சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம். ரமா ஶ்ரீனிவாசனின் பிஸிபேளாபாத் நன்றாக வந்திருக்கிறது. இதே சாம்பார் சாதம், அல்லது கூட்டாஞ்சோறு என்றுதான் சொல்ல வேண்டும் என்பது வெங்கடேஷ் பட் அவர்களின் வாக்கு. பிஸிபேளாபாத்தில் காய்கள் சேர்க்கக் கூடாதாம். பிஸிபேளாபாத்தோ, சாம்பார் சாதமோ அதற்கு தொட்டுக்கொள்ள பொரித்த அப்பளம்தான் பெஸ்ட் என்று எனக்குத் தோன்றும். உடுப்பி ஹோட்டல்களில் பிஸிபேளாபாத்தின் மேல் காரா பூந்தி தூவி கொடுப்பார்கள். எனக்கு காரா பூந்தி இல்லாமல் கொண்டு வாருங்கள் என்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! (ஆனால், எனக்கு காராபூந்திதான் அதிகம் பிடிக்கும்!) கரகரப்பான காராபூந்தியை, ஹோட்டல்களில், தயிர்வடைக்கு மேல் தூவி அதை நமுத்துப் போகச்செய்கின்ற செயலை மனதுக்குள் வன்மையாகக் கண்டிப்பேன்.

      நீக்கு
    2. அதேதான். என்ன ரசனையோ என்று நினைத்துக் கொள்வேன். சில சமயம் காரா பூந்தி சிக்கு வாடை வேறு அடிக்கும்.

      நீக்கு
    3. தயிர் வடைக்கு எங்க ஊர்லலாம் (பஹ்ரைன்) அப்போ காராபூந்தி தூவிக் கொடுப்பார்கள். எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு பூந்தி ரெய்த்தாவும் பிடிக்கும்.

      நீங்க ரெண்டுபேரும் ஏதோ திரேதாயுகத்துல பூந,தி பண்ணி கலியுக தயிர்வடைல போட்டுத் தர்றார் என்பதுபோலச் சொல்றீங்களே...

      நீக்கு
    4. காய்கள் போட்டுச்செய்வது சாம்பார் சாதம் என்றே சொல்லுவார்கள்.பிசிபேளா ஹூளி அன்னாவில் காய்கள் அதிகம் தென்படாது.

      நீக்கு
    5. தயிர்வடைக்கெல்லாம் பச்சைச் சட்னி, சிவப்புச் சட்னி தான்! அவற்றோடு சாப்பிடும் சுவை இந்தக் காராபூந்தி, ஓமப்பொடியில் எல்லாம் இருக்காது.

      நீக்கு
    6. காய்கள் போட்டுச்செய்வது சாம்பார் சாதம் என்றே சொல்லுவார்கள்.பிசிபேளா ஹூளி அன்னாவில் காய்கள் அதிகம் தென்படாது.//

      அதே அதே...

      பானுக்கா நெல்லை கூட்டாஞ்சோறு அது சுவை வேறு. கொஞ்சம் செய்முறை வேறு. அது தனி டேஸ்ட்.

      //தயிர்வடைக்கெல்லாம் பச்சைச் சட்னி, சிவப்புச் சட்னி தான்! அவற்றோடு சாப்பிடும் சுவை இந்தக் காராபூந்தி, ஓமப்பொடியில் எல்லாம் இருக்காது.//

      ஆஹா மிகவும் பிடித்தது இதுவும்....செமையா இருக்கும்

      கீதா

      நீக்கு
  14. அருமையா இருக்கே. காலையில் காபி குடிக்கறப்பவே பசியை தூண்டுது

    பதிலளிநீக்கு
  15. காஷ்மீரி சில்லி உபயோகப்படுத்தும் பொழுது சாம்பார் சாதத்தின் ஒரிஜனல் மஞ்சள் நிறம் இல்லாமல் மிகவும் சிவப்பாக இருக்குமே? பங்களூர் வந்த புதிதில் சாம்பார் பொடி அரைப்பதற்கு காஷ்மீரி சில்லியை வாங்கி விட்டேன். அரைத்து வந்த சாம்பார் பொடி செக்கச்செவேல் என்று பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஷ்மீரி சில்லி காரம் அதிகம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். உபயோகித்ததில்லை. உபயோகித்துள்ளவர்கள் கா சி காரம் பற்றி சொல்லவும்.

      நீக்கு
    2. காஷ்மீரி சில்லியில் காரம் குறைவாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    3. நான் காஷ்மீர் சில்லியின் ரசிகன். இட்லி பொடிக்கு அதையும் உபயோகித்தால் நல்ல சிவப்பா இட்லி பொடி இருக்கும், ஆனால் காரம் அதிகமா இருக்காது.

      அந்த நிறத்துக்காகவே கா.சி பொடியையும் வாங்கி வந்து, வெறும் மி.பொடி டப்பாவில் கலந்து விடுவேன். மனைவிக்கு காரம் அளவு கன்ஃ்ப்யூஸ் ஆவதால் கடிந்துகொள்வாள் (நான் பண்ணும்போது அவ்வப்போது டேஸ்ட் பார்ப்பேன். அவங்கள்லாம் கண்டருளப்பண்ணும்வரை டேஸ்ட்லாம் பார்க்க மாட்டாங்க)

      நீக்கு
    4. நான் இன்று வரை காஷ்மீரி மிளகாய் வற்றலைப் பார்த்தது கூட இல்லை அல்லது பார்த்திருந்தால் இதான் காஷ்மீரி மிளகாய் வற்றல்னு தெரியாது! அது இல்லாமலே தான் சமைத்து வருகிறேன்.

      நீக்கு
    5. காஷ்மீரி சில்லியில் கலர் மட்டும்தான் இருக்கும். காரமிருக்காது!

      நீக்கு
  16. எனக்கு பிசிபேளா பாத் என்றால் சிறிய அலர்ஜி காரணம் லவங்கப்பட்டை, அது இல்லாமல் ரமணி அவர்கல் செய்த பிஸ்பேளா சாதத்திற்கு நிறைய லைக்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வரவர மசாலா வாசனையே பிடிக்க மாட்டேன் என்கிறது.

      நீக்கு
  17. பிஸி பேளா பாத் செய்முறை அருமை... எனக்கும் மக்களுக்கும் பிடிக்கும் என்பதால் வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு...

    பதிலளிநீக்கு
  18. காட்சிப்படுத்தி சொல்லிய விதம் அழகு

    "பிஸி பேளா பாத்" பெயர்தான் ஸ்விம்மிங் ஃபூல் சமாச்சாரம் போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. //பிஸி பேளா பாத்" பெயர்தான் ஸ்விம்மிங் ஃபூல் சமாச்சாரம் போல் இருக்கிறது.// ஹாஹா! கர்நாடகாவின் சிறப்பு உணவான இதை அவர்கள் பிஸிபேளாஹீளி அன்னா என்பார்கள். சூடான சாம்பார் சாதம் என்று பொருள் என்று நினைக்கிறேன். பாத் என்பது எந்த மொழி என்று தெரியவில்லை. தயிர் சாதம் என்பதை பகாளா பாத் என்கிறோம். நான்கூட கல்கண்டு பாத் என்று ஒரு ரெசிபி எழுதியிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  20. Bபிஸி என்றால் கன்னடத்தில் சூடான என அர்த்தம். Bபிஸிபேளாபாத் பொதுவாக நான் வீட்டில் செய்வதில்லை. எனது நண்பர் ஒருவர் கன்னடர் - சென்னையிலேயே பிறந்த வளர்ந்தவர் - தற்போது தில்லி வாசி - அவர் வீட்டில் அடிக்கடி இந்த Bபிஸிபேளாபாத் செய்வதுண்டு. எப்போது செய்தாலும், அன்றைக்கு எனக்கும் உண்டு! :) அதனால் இதைச் செய்ய களத்தில் இறங்குவதே இல்லை! ஹாஹா...

    சுவையான குறிப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  21. சுவை. எங்கள் வீட்டில் பிஸிபேளாபாத் (பருப்பு,தக்காளி) உண்டு.

    சாம்பார் சாதத்துக்கு (பூசணி,மரவள்ளி,பயித்தை,கத் திரி,உருளை,கீரை,தக்காளி, புடோல்,வாழைக்காய்,பருப்பு ) சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  22. பிஸி பேளா பாத் நன்றாக இருக்கிறது. படங்களும், செய்முறையும்.
    கர்நாடகா பிஸி பேளா பாத்தில் பட்டை கிராம்பு இருக்கும் இதில் இல்லை.

    பதிலளிநீக்கு
  23. பாத் என்பது சிங்களதில கிரிபாத் =தேங்காய் சாதம் ரெசிப்பி ./ yellow ரைஸ் =கஹா பாத் dunthel  பாத் =நெய் சாதம் ..இதிலிருந்து அறிவது பாத் என்பது ரைஸ் :)

    பதிலளிநீக்கு
  24. பிஸி பேளா பாத் நல்லா இருக்கு அந்த fresh பீன்ஸ் பார்க்க ஆசையா இருக்கு .இதுவரை செய்ததில்லை செய்து பார்க்கிறேன் 

    பதிலளிநீக்கு
  25. தெளிவான விளக்கங்களோடு, அருமையான ஒரு ரெசிப்பி.

    பதிலளிநீக்கு
  26. பிஸி பேளா பாத் பிஸி பிஸியா இல்லாம ஆறிப்போனப்புறம் வந்திருக்கேனோ!! ஹா ஹா ஹா ஹா

    நல்லா வந்திருக்கு ரமா. குறிப்புகளும் செம. சூப்பர்!! கம கம இங்கே வீசுது!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. கன்னட பிஸி பேளா அன்னா ஹூளி ல பட்டை, கிராம்பு, ஏலம் கொஞ்சமே கொஞ்சம் சேர்ப்பாங்க. அப்புறம் வெஜ்ஜிஸ் கிடையாது ஒன்லி சின்ன வெங்காயம் மட்டுமே போடுவாங்க.

    ரமா நீங்க சொல்லிருக்கீங்களே ஏன் பட்டை போடலைன்னு காட் இட். எங்க வீட்டுலயும் மாமியார் மாமனார் பெரியவங்க இருக்கறப்ப வெங்காயம் இந்த மசாலா போடாம ஏலம் கிராம்பு மட்டும் போட்டு செஞ்சுட்டு எங்களுக்கு எல்லாம் சிவெ , பட்டை ஏலம் கிராம்பு தாளித்து தனியா செய்துடறது. சில சமயம் வெஜ்ஜிஸ் சேர்த்தும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  28. பிசி பேளா ஹுளி அன்ன என்றால் சூடான பருப்பு புளி சாத என்று அர்த்தம் எனது தலம் பூவையி எண்ணக்கள் ல் செய்முறையை பகிர்ந்திருக்கிறேன் இதற்கு காராபூந்தி தொட்டுக் கொள்ள உபயோகித்தால் நன்றாயிருக்கும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!