புதன், 20 மே, 2020

நேருவின் கதையை திரைப்படமாக எடுத்தால் கமல் பொருத்தமாக இருப்பாரா?


வல்லிசிம்ஹன் : 

சைனா,தெற்கு கொரியா,ஜெர்மனி என்று மீண்டு வரும்
தொற்று யாருக்கும் கண்ணில் படவில்லையா.?
இல்லை தங்களுக்கு ஒன்றும் நேராது என்ற அசட்டுத் தைரியமா.?# தொடர்ந்து வரும் தொற்று கண்ணில் படாமல் இல்லை. ஆனாலும் லாக் டவுன் என்பது ஓரளவுக்கு மேல் போனால் விபரீதமான பொருளாதாரச் சிக்கல்களை உண்டாக்குவதுடன் சட்ட ஒழுங்கு அத்து மீறல்களுக்கும் வழி வகுக்கும். ஆகவே தான் சில நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

& அரசாங்கம் உயிர் பிழைத்திருக்க என்ன வழி என்று சொல்லிவிட்டார்கள். சாம, தான, பேத , தண்ட வழிகளில் அறிவுறுத்திவிட்டார்கள். இதற்கு மேலும் புரியாதவர்களுக்கு என்ன செய்ய இயலும்? 


கமலா ஹரிஹரன் : 

ராசிகளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பொதுவாக முகராசி, கைராசி (எல்லாமே தலைவர் படங்கள் இல்லையா.. .ஆனால் எல்லாமே நன்றாகத்தான் ஓடின. தியேட்டரை விட்டு அல்ல.. ஹா ஹா) என்றெல்லாம் பார்க்கிறோமே அது சரிதானா? இல்லை அப்படி பார்க்கிறவர்களின் மனோபாவங்கள் முறைதானா?

# முகராசி, கைராசி எல்லாம் சரி தப்பு என்று வகைப் படுத்தக் கூடாது. அடுத்தவருக்குத் தீங்கு செய்யாத எதுவும் "தப்பு" ஆக முடியாது. பார்க்கிறவர் மனோபாவம் முறை "கெட்டதும்" அல்ல. இதெல்லாம் நம்பிக்கை பாற்பட்ட விஷயம்.  அவர்களுக்கு திருப்தி தருகிறதென்றால் இருந்து விட்டுப் போகட்டுமே. நம்பிக்கைகள் பலவும் மூட நம்பிக்கை யாகவும் இருக்கக் கூடும். 

ஜாதகம், நட்சத்திரம், ராசி, பெயர்ச்சி பலன்கள் விஷயத்தில் இருவேறு எதிரெதிர் மனோபாவம் காணப்படுகிறது. கணக்குப் போட்டு துல்லியமாக (நல்லது  & அல்லாதது) பலன் சொல்வது ஒரு பக்கம். காழியூர் ஹரிகேசநல்லூர் மாதிரி "நல்வாக்கு" மட்டும் சொல்வது மறு பக்கம். நல்வாக்கு பலராலும் விரும்பிப் பார்க்கப் படுகிறது. இதுவும் திருப்தி சம்பந்தப்பட்ட ஒன்றுதான். 

நான் ராசிபலன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. என் ஜாதகம் அதிர்ஷ்ட ஜாதகம். அதனால்தான் நான் பார்க்கத் தேவையின்றிப் போனது என்று வாதம் செய்வோருமுண்டு.

& கைராசி படம் தலைவர் படம் அல்ல. ஜெமினிகணேசன் - சரோஜாதேவி நடித்தது. ராசி என்ற பெயரோடு வந்த எந்தப் படத்தையும் நான் பார்த்ததில்லை. அந்தப் படங்களைப் பார்க்கும் ராசி எனக்கு இல்லை போலிருக்கு! (நிற்க. கன்னிராசி, மகராசி என்ற பெயர்களில் கூட படங்கள் வந்துள்ளன.)

நெல்லைத்தமிழன் : 

சிகரெட், கஞ்சா, பீடி, குடி, குட்கா, புகையிலை என்று இவை எல்லாமே உடல் நலத்துக்குக் கேடுதான். அப்படி இருக்கிறபோது, அரசாங்கம், அந்த ஃபேக்டரிகளை, தொழிலை இழுத்து மூடாமல், மக்களைப் பார்த்து 'நீ இதைச் செய்யாதே' என்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கா?

குட்கா தயாரித்தால் மரண தண்டனை மட்டுமல்ல, குடும்பச் சொத்துகள் அனைத்தும் பற்முதல் செய்யப்படும் என்று சொன்னால் போதாதோ? எதுக்கு விளம்பரம், சினிமாக்களில் சின்ன எழுத்துகள் எல்லாம்?

குடி, குட்கா போன்றவைகளை அனுமதிக்கும் அரசு, ஏன் போதை மருந்துகள், கஞ்சா போன்றவற்றையும் அனுமதிக்கக்கூடாது? அவைகளும் தொழில்கள் இல்லையா?


# "குடி குடியைக் கெடுக்கும்"  "புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு"  என்றெல்லாம் சின்ன எழுத்து கார்டுகள் கையாலாகாத்தனத்தின் பலவீனமான வெளிப்பாடுகள்.  அர்த்தமற்ற போலிச் சடங்குகள். பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் நொண்டிச் சமாதானங்கள். 

மதுவைப் பொறுத்தவரை மீளாநிலைக்கு வந்து விட்டோம். 

மிகக் கடுமையான சட்டங்கள் மிக அதிகமான ஊழலுக்கு வகை செய்யும். மக்களே உணர்ந்து ஒதுக்காதவரை இந்த அவலங்களிலிருந்து விமோசனம் இல்லை. மதுக்கடை மூடி இருந்தால் ஷேவிங் லோஷனைக் குடிக்கும் முட்டாள்களைக் கொண்டதல்லவா நம் பாரத மணித் திருநாடு !

& புகையிலை சில சுத்திகரிப்பு செயல்முறைகளிலும் பயன்படுத்துகிறார்கள் என்று கேள்வி. சில விவசாயிகள், செடிகளில் வருகின்ற பூச்சிகளை அழிக்க, புகையிலை கலந்த நீரைத் தெளிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். எல்லா பொருட்களிலும் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து, நன்மையையும் உண்டு, தீமையும் உண்டு. 


பிசிபெளாபாத்துக்கு உருளை வறுவல் நல்லா இருக்குமா அல்லது வாழைக்காய் சிப்சா?

# முதல்ல பிஸி பேளா பாத் நல்லா இருக்குமா ?

& வறுவல்களை தனியே நொறுக்குவதுதான் எனக்குப் பிடிக்கும். வாழைக்காய் வறுவலைவிட, உ வ crispy என்பதால் என்னுடைய ஓட்டு உ வ வுக்கே! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

1. நேருவின் கதையை திரைப்படமாக எடுத்தால் கமலஹாசன் பொருத்தமாக இருப்பாரா? இன்னும் ஏன் நேருவின் பயோ பிக் எடுக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை? 

# கமல்ஹாசன் தன் அதி மந்திர ஸ்தாயி குரலில் பேசாத பட்சத்தில் எந்த ரோலுக்கும் பொருத்தமானவர்தான். 

நேருவின் வாழ்க்கையில் மூன்று முக்கிய அம்சங்கள். 
ஒரு இங்கிலாந்து பெரிய இடத்துப் பெண்மணியுடனான "நட்பு". இதை ரஞ்சகமாகப் படமாக்கினால் சிக்கலான வழக்கு வாய்தாக்களுக்கு வகை செய்யும். 

இரண்டு அவரது நீண்...ட நாள் சிறைவாசம். இதை சுவாரஸ்யப் படுத்துமளவுக்கு நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தப் படவில்லை. 

அவர் 17 ஆண்டுக்கு மேலாக எதிர்ப்பே இன்றி ஓரளவு வெற்றி கரமாக வகித்த பிரதமர் பதவி.  இதிலும் சினிமாடிக் கன்டென்ட் கம்மி. 

காங்கிரஸ் மாதிரி கட்சி, பெரும் முதலீடு செய்து படம் எடுத்தால்தான் உண்டு. மற்றபடி வேறு யாரும் ரிஸ்க் எடுப்பது துர்லபம்.

& வேடப் பொருத்தம் கொஞ்சம் இருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் நேருவாக வந்து, அவர் 

" தொழில்துறை முன்னேற்றங்கள் நம் பின் நின்றாலும், ஏழை விவசாயியின் பிளந்து போன ஏர்க்காலின் முனையில், கடந்துபோன நாட்களின் காயங்கள் இழந்து போன பிம்பங்களாக பரிதவித்தால், செஞ்சோற்றுக் கடன் தீரும் நாள் வருமா? " 

என்று ஒரு ட்வீட் போட்டார் என்றால், காந்தியே ஃபிரேமை உடைத்துக்கொண்டு படத்திலிருந்து இறங்கி ஓடிவிடுவார்! 


2. சமீபத்தில் படித்த புத்தகம் எது?

# ஜே கிருஷ்ணமூர்த்தி "Awakening of Intelligence" . எல்லாரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம்.

& (மேற்கூறப்பட்டுள்ள "Awakening of Intelligence"  புத்தகம் PDF என்னிடம் உள்ளது. வேண்டுவோர் வாட்ஸ் ஆப் / மின்னஞ்சல் முகவரி தெரிவித்தால், அவர்களுக்கு அதை அனுப்புகிறேன்) 

நான் படித்தது Ribardo Bansi எழுதிய Pulao in Persia என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பு. 

3. சொந்தப்படம் எடுக்கும் நடிகர்கள் ஒன்றுக்கு இரண்டாய் அழகான கதாநாயகிகளை தங்களுக்கு ஜோடியாக போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் கதாநாயகிகளோ ஒரு சொங்கி ஹீரோவை கதாநாயகனாக்குகிறார்களே?

# பதில் அளிக்கும் தகுதி எனக்கில்லை. 

& சொந்தப்படம் எடுக்கும் நடிகர்கள், தன்னுடைய ரசிக, ரசிகைகள் + நடிகையின் ரசிகர்களை கவர்ந்து படம் பார்க்க இழுப்பதற்காக அழகான கதாநாயகிகளைப் போட்டு படம் எடுக்கிறார்கள். நடிகர்களுக்கு ரசிகமன்றங்கள் உண்டு. பெரும்பாலான நடிகைகளுக்கு அப்படி எல்லாம் மன்றங்கள் கிடையாது. 
நடிகைகள் எடுக்கும் படங்களில், அந்த நடிகைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதால், பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அதனால் சொங்கி நடிகர்களே சரணம் என்ற நிலை. 

4. வீரமாமுனிவருக்கு முன்பு வரை தமிழில் ஒற்றைக் கொம்பு , இரட்டை கொம்பு கிடையாது, ஒற்றெழுத்துகளில் மேலே புள்ளி வைக்கும் பழக்கம் கிடையாது. ஓலைச்சுவடிகளில் எழுதி வந்த காலத்தில், சுவடியில் புள்ளி வைத்தால் சுவடி கிழிந்து விடும் என்பதே காரணம் என்கிறார்களே, அப்படியானால் வீரமாமுனிவர் காலத்திற்கு முன்னால் தமிழில் ஆய்த எழுத்தை எப்படி எழுதியிருப்பார்கள்?  

# புள்ளி வைத்தால் பரவாயில்லை ஆனால் சுழி தான் ஓலையை பாதிக்கும்.  பழந்தமிழ் எழுத்துக்களில் ஆய்த எழுத்து மூன்று சுழிகளாக இன்றி வேறு மாதிரி இருந்திருக்கும். வேறு எழுத்துக்களின் வடிவங்கள் அப்படி எண்ண வைக்கின்றன.

5. வேலைக்கு சேர்ந்த புதிதில் ஆர்வக் கோளாறில் ஏதாவது அசட்டுத்தனம் செய்திருக்கிறீர்களா? 

 # இல்லை. 

& ஹி ஹி ! நிறைய உண்டு. இப்போ நினைவுக்கு வருவதில் ஒன்று: நான் சேர்ந்தபோது, எங்கள் தொழிற்சாலையில், எங்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சிக்காலம். முதல் ஆறு மாதங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒருநாள் அல்லது இரண்டுநாள் சென்று, அந்தப் பகுதியைப் பற்றி அறிந்துகொள்வது. இயந்திர சாலைப் பகுதியில், சில வேலைகளை, கண் தெரியாதவர் சிலர் செய்வார்கள். அப்படி ஒரு வேலை, புதிதாக செய்யப்பட்ட பற்சக்கரங்களில் உள்ள பற்களில் அரம் கொண்டு சுத்தப்படுத்துதல். அந்த வேலையில் ஈடுபட்டிருந்த கண் தெரியாத தொழிலாளியிடம், அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டறிந்தேன். சுருக்கமான பதில்கள் கொடுத்துக்கொண்டிருந்தார். மேலும் மேலும் கேள்விகள் நான் கேட்டதும், அவர், " தம்பீ - நான் வேலை செய்யும்போது பேசமாட்டேன். ஏன் என்றால், இந்த பற்சக்கரம் ஒவ்வொன்றிலும் நாற்பத்திரண்டு பற்கள். ஒவ்வொரு பற்சக்கரத்தையும், அச்சில் பொருத்தி, ஏதாவது ஒரு பல்லில் ஆரம்பித்து, நாற்பத்திரண்டு பல் எண்ணிக்கை வரும்வரை, கைகளால் அடுத்தடுத்த பல்லை உணர்ந்து , நாற்பத்திரண்டு எண்ணிக்கை வரும்வரை சுத்தம் செய்வேன். நடுவில் என் கவனம் சிதறினால், எண்ணிக்கை தவறிப்போகும். அதனால், வேலை முடித்து நான் ஓய்வு எடுக்கும்போது வந்து கேள்வி கேளுங்க" என்றார். என் ஆர்வ, அசட்டுத்தனம் அப்போதான் புரிந்தது! 

6. அரசியல் தலைவர் charismatic ஆக இருக்க வேண்டியது அவசியமா?  நம் நாட்டில்தான் இப்படிப்பட்ட நிலையா? வெளிநாடுகளிலும் உண்டா?

# Charisma இல்லாமல் தலைமைக்கு வருவது கடினம்.  எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும். Charisma வெறும் முக அழகு மட்டுமல்ல.=========================================

90 கருத்துகள்:

 1. " தொழில்துறை முன்னேற்றங்கள் நம் பின் நின்றாலும், ஏழை விவசாயியின் பிளந்து போன ஏர்க்காலின் முனையில், கடந்துபோன நாட்களின் காயங்கள் இழந்து போன பிம்பங்களாக பரிதவித்தால், செஞ்சோற்றுக் கடன் தீரும் நாள் வருமா? " ஆஹாஆஹா. விழுந்து விழுந்து சிரிக்க வைத்த வரிகள்.
  அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நேரு முகம் ஆங்குலர். கமலஹாசன் கொஞ்சம் ரவுண்டட்.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கேள்விக்கு நேரான பதில் கிடைத்தது.
   மிக மிக நன்றி மா

   நீக்கு
  2. இனிய வணக்கம். வாங்க வல்லிம்மா...

   நீக்கு
  3. இரசிப்புக்கு நன்றி! காலை வணக்கம்! இனிதே வாழ்க!

   நீக்கு
 2. உண்மைதான் இங்கே பொருளாதாரத்தைத்தான் முதலில் வைக்கிறார் தல.

  ரொம்பவும் இரண்டுங்கெட்டான் நிலைமை
  நம் நாட்டில். தினம் செய்திகளைப் படிக்கும் போது
  அந்த முகமில்லாத அப்பாவிகளின்
  பாதிப்புகள் சோகத்தில் ஆழ்த்துகின்றன.
  தொற்று பெரிதா, பசிப் போராட்டம் பெரிதா
  தெரியவில்லை.நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் காப்பாற்றிக்கொள்ளப்பட வேண்டியது உயிர். பிறகுதான் மற்றவை எல்லாம். சுவர் இருந்தால்தான் சித்திரம்.

   நீக்கு
  2. உண்மைதான். நியாயமான எண்ணம். ஜி.

   நீக்கு
 3. எனக்கும் சித்ரான்னங்களில் மிகவும் பிடித்தது புளியோதரையும், தயிர் சாதமும்
  தான்.
  வறுவலை எதற்கும் தொட்டுக் கொள்ள வேண்டாம்.
  அப்படியே சாப்பிடலாம்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆர்வக் கோளாறு பற்றிய பதில் நெகிழ்வாக இருந்தது.
   இளம்வயதில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பது இயல்புதானே.
   கண் தெரியாதவர்கள் அந்த வேலையைச் செய்தார்கள்
   என்றால் ஆச்சரியம் மேலிடுகிறது.
   சிங்கம் டிவிஎஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்தபோது கடின வேலைகள்
   கொடுப்பார்களாம். இஞ்சினை நகர்த்துவது,
   கியர் பாக்ஸ் கழற்றுவது என்று பொறுமையாகக் கற்றே
   பத்துவருடங்களில் உதவி மானேஜர் பொறுப்புக்கு வர முடிந்தது
   அவரால்.

   நீக்கு
  2. வணங்குகிறேன், அவர் திறமைக்கு.

   நீக்கு
 4. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

  சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 6 ஆம் கேள்விக்கு,
   நல்ல களையான முகமும், கம்பீரமும், தெளிவான பேச்சும்,
   கேட்பவர்களைக் கவரும் குரலும்,குணமும்
   தலைவருக்கு மிகத் தேவை..
   லால் பஹதூர் சாஸ்திரி நினைவுக்கு வருகிறார்.
   கூடவே நம் காமராஜரும், எம் ஜீ ஆரும்.,அவருக்குப் பின் ஜே
   அம்மாவும்

   நீக்கு
  2. வல்லிம்மா.... இந்திரா உங்கள் நினைவுக்கு வரலையா இல்லை ராஜீவ் காந்தி.

   லால்பகதூர் சாஸ்த்ரியா? இதை அவரே ஒத்துக்க மாட்டாரே...

   நாங்கள் முன்பு இருந்த பில்டிங்கில் சாஸ்த்ரியின் நெருங்கிய உறவினர் (சென்னை) வசித்தனர். அவங்க வீட்டு வேலைக்காரி, அந்தப் பெண் (அம்மா) ரொம்ப மோசமா நரத்தசம்பந்தம், டத்துவார், அரைகுறை சென்னைத் தமிழில் மோசமான கெட்ட வார்த்தைகள் எல்லாம் சொல்லித் திட்டுவார் என்று வருத்தப்பட்டிருக்கிறார்..

   நீக்கு
  3. அன்பு முரளிமா,
   வெறும் கரிஸ்மா போதுமா.
   நேர்மை ,உண்மை வேண்டாமா.
   சரி நான் கடைசியாகச் சொன்னவரையாவது வீக்லிங்க்
   என்று கூடாத நட்பினால் எடுத்துக் கொள்ளலாம்.
   மற்றவர்களைப் பற்றி நல்லதாக இப்போதெல்லாம் படிக்க முடியவில்லையே.
   வருத்தம் தான்.

   நீக்கு
 5. பானுமதி வெங்கடேச்வரனுக்கு கமலஹாசன் மீமு கோபமா இல்லை நேருவின் மீதா இல்லை எட்வினா தௌன்ட்பேடன் மீதா? இது புதன் கேள்வி இல்லை. ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் மீது கோபம் இருக்குமோ?

   நீக்கு
  2. யார் மீதும் எந்த கோபமும் இல்லை. அன்றொரு நாள் தொலை காட்சியில் கமலின் பக்கவாட்டு தோற்றத்தை பார்த்தபொழுது நேரு பாத்திரத்திற்கு பொருந்துவாரோ என்று தோன்றியது. ஆனால் நேருவின் கத்தி போன்ற கூர்மையான மூக்கு இவருக்கு கிடையாது.

   நீக்கு
  3. ஹா ஹா ! நல்ல வேளை நாங்க பயப்படவேண்டாம். நன்றி.

   நீக்கு
 6. அரசாங்கம் இதுவரை செய்தது, ஒரேயடியாக தொத்து பரவி, எல்லோரும் ஆஸ்பத்திரிக்குப் படையெடுத்தால் அரசாங்கத்தால் மேனேஜ் பண்ண முடியாது என்பதற்காக லாக்டவுன் அறிவித்ததும், மக்களுக்கு அவேர்னெஸ் கொண்டுவந்ததும்தான். இதற்குமேல் லாக்டவுனை நாடும் மக்களும் தாங்கமாட்டார்கள்.

  மக்கள்தாம் அவரவர் உடல்நலத்தில் கவனம் வைக்கணும்.

  பதிலளிநீக்கு
 7. லாக்டவுன் பத்தி நினைக்கும்போது, குழந்தை அங்கு இங்கு ஓடாமல் நாம் நிம்மதியாக இருக்கும்படி பேபி பெட் (கட்டில் போல நான்கு பக்க அடைப்புகளுடன் இருக்கும். குழந்தை திற்கலாம் ஆனால் வெளியா வர முடியாது). வாங்குவோம். ஆனால் அதன் உபயோகம் அதிகபட்சம் ஒரு வருடம்தான். பிறகு குழந்தை தன்னைத்தானே மேனேஜ் செய்துக்கணும். அதுபோல நமக்கு நாமே பாதுகாப்பாளர்.

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. இந்த தொற்று நோயிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொண்டு வாழ பழக வேண்டும். அதற்கான பயிற்சிதான் இந்த லாக்டவுன். பயிற்சியை மீறி தைரியமாகவோ, வீம்பிற்காகவோ செல்பவர்களை காக்க இறைவனை பிரார்த்துகெக வேண்டும். ஏனெனில் அதில் நம் சுயநலமும் அடங்கியிருக்கிறது.

  கமலுக்கு எல்லா வேடப்பொருத்தமும் நன்றாகவே அமைந்து விடும். அது அவரின் அதிர்ஷ்டம்+திறமை. ஆனால் உங்கள் வசனங்களை படித்து சிரித்து விட்டேன்.

  பொதுவாக கலவன் சாதத்திற்கு காரமில்லாத வறுவல்கள் நன்றாக இருக்கும். கலவன் சாதங்களே சுவையாக இருந்துவிட்டதெனில், இலையில் போட்ட வறுவல்கள் உண்ட வாய்க்கு பண்டந்தான்..

  என் கேள்விக்கான பதில் நன்றாக இருந்தது நான் சினிமாக்கள் பற்றி நிறைய தெரியாதவள். அதனால்தான் எல்லாம் அவரது படமாக இருக்குமென நினைத்து விட்டேன். கன்னி ராசியெல்லாம் நினைவுபடுத்திய பின் நினைவுக்கு வருகிறது. ஹா ஹா

  / என் ஜாதகம் அதிர்ஷ்ட ஜாதகம். அதனால்தான் நான் பார்க்கத் தேவையின்றிப் போனது என்று வாதம் செய்வோருமுண்டு/

  இப்படி வாதம் செய்து எதிராளியை "நீ ராசி அற்றவ(ள்)ன்.இறைவனை ஆழ்ந்த பக்தியுடன் துதிப்பதில்லை. நல்லதை எப்போதும் நினைக்காததினால் உன் ராசி உனக்கு பலனளிக்கவில்லை" என்று புண்படுத்துகிறவர்களும் உண்டு. எதுவுமே அவரவர்கள் வாங்கி வந்த வரங்களின் படிதான் நடக்கும் என்பதை ஒருபோதும் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அனைத்து பகிர்வினுக்கும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை கமலா, உங்கள் மனம் புரிகிறது. இந்த விஷயத்தில் எனக்கும் நிறைய அனுபவங்கள் உண்டு. அதிலும் பிறந்த நக்ஷத்திரத்தைக் குறித்துத் தாக்குபவர்கள் நிறையவே உண்டு. எல்லோரும் வேண்டிக்கொண்டா குறிப்பிட்ட நக்ஷத்திரத்தில் பிறக்கிறோம்? இப்போ அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நக்ஷத்திரம் பார்த்து நாள் குறித்துப் போவதாகச் சொல்கின்றனர். என்றாலும் அதுவும் கடவுள் அருள் இருந்தால் தான் நடக்கும்.

   நீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள். நடப்பவை யாவும் நம் முன் பிறவி கர்மவினைகள்தான்.

   நீக்கு
 10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா எல்லோருக்கும் பழகி விட்டது போலும். அரசும் அதைத் தானே சொன்னது! எல்லோரும் கொரோனாவுடன் பழகினாலும் அதை முற்றிலும் அழித்து ஒழிக்கப் போராடுவோம். தினம் தினம் பிரார்த்தனைகள் செய்வோம்.

  பதிலளிநீக்கு
 11. //# ஜே கிருஷ்ணமூர்த்தி "Awakening of Intelligence". எல்லாரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம்.//

  அருமையான புத்தகம்தான். But JK is NOT everyone's cup of tea !

  பதிலளிநீக்கு
 12. //மக்களே உணர்ந்து ஒதுக்காதவரை இந்த அவலங்களிலிருந்து விமோசனம் இல்லை//

  உண்மைதான் ஜி

  பதிலளிநீக்கு
 13. எல்லாக் கேள்விகளும் அதற்கான பதில்களும் நன்றாக உள்ளன. நேருவின் பாத்திரத்துக்கு உல(க்)கை நாயகரா? ரொம்பவே அலட்டல் ஜாஸ்தியா இருக்குமே! அதோடு கதையை அவருக்குப் பொருந்தும்படியாகக் கதாநாயகிகளை அமைத்து, வசனங்களை வைத்துனு எவ்வளவு பாடு படணும்! அநாவசியச் செலவும். # சொன்னாப்போல் காங்கிரஸ் கட்சியே எடுக்கட்டும். அதற்கான பொருளாதாரம் எல்லா வகைகளிலும் அவங்களிடம் தான் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமால் ஹசன் ஜின்னாவின் பாத்திரத்துக்கும் பொருத்தமாக இருப்பாரோ.. உயரந்தான் இடிக்கிறது!

   நீக்கு
  2. உயரப்படுத்த இப்பொழுது நிறைய வ(லி)ழிகள் இருக்கிறது நண்பரே.

   தசாவதாரத்தில் பாக்கிஸ்தானியாக வரவில்லையா ?

   நீக்கு
  3. ஓ.. தசாவதாரத்திலேயே அந்தக் காரியத்தை செய்திருக்கிறாரா! நான் பார்க்கவில்லை.

   நீக்கு
  4. நீங்க எல்லோரும் முக்கியமான விஷயத்தை மறக்கறீங்க. உலக்கை நடித்தால் எட்வினா காதல் காட்சிகள் 30%, உலக்கை இந்திராவுன் பழகுவது நமக்கு ஆபாசமாகத் தெரியாமல் அவர் நடிக்கணும், தமிழ் நாட்டில் தன் கட்சி வாக்குகளைக்கவரணும்னு நிறைய புருடா காட்சிகள் வைப்பார். இன்னும் பல ரிஷ்க் இருக்கே

   நீக்கு
  5. நமக்கு அதுல ஒரு அட்வான்டேஜ் இருக்கு. கமல் உடை அலங்காரம் யார்னு டைட்டில்ல பார்த்தோம்னா அவங்கதான் கமலுக்கு லேடஸ்ட்னு தெரிஞ்சுக்கலாம் (வீட்டுச் செலவுக்கான காசு?)

   நீக்கு
  6. தசாவதாரம் மட்டுமில்லை, உல(க்)கை நாயகரின் ஆரம்பகாலப் படங்கள் ஒன்றிரண்டைத் தவிர்த்து மற்றவை நான் பார்த்தது இல்லை. சில படங்களின் நகைச்சுவைக்காட்சிகள் பார்த்திருக்கேன். தெனாலி, பஞ்சதந்திரம்(?) அந்தப் போலி மருத்துவரா வருவாரே அந்தப் படம்! அதிலே கமலுக்கு ஜோடி யாரு? சிநேகாவா? ஆனால் இந்தப்படம் ஹிந்தியில் பார்த்திருக்கேன்.

   நீக்கு
 14. //@ நெல்லைத்தமிழன் : ..லால்பகதூர் சாஸ்த்ரியா? இதை அவரே ஒத்துக்க மாட்டாரே...//

  நான் சொல்ல நினைத்தேன்!

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் காலை வணக்கம். பதில்கள் ரசனையாக இருக்கின்றன. அதுவும் நேருவாக கமலின் வசனம்.. சான்ஸே இல்ல... இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. தொழிலாளி சொன்னது மனதை கவர்ந்தது...

  பூச்சிகளிடமிருந்து துணிகளையும் (சேலைகளை) புத்தகங்களையும் பாதுகாக்க புகையிலை உதவுகிறது...

  பதிலளிநீக்கு
 17. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஸ்பான்சர் பண்ணினால் வாய்ப்பு கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 18. நல்ல ரசனை... :)

  ஒரு ட்வீட் போட்டார் என்றால், காந்தியே ஃபிரேமை உடைத்துக்கொண்டு படத்திலிருந்து இறங்கி ஓடிவிடுவார்! ஹாஹா...

  பதிலளிநீக்கு
 19. அனைத்து கேள்விகளும் பதில்களும் அருமை.


  நன்றாக கண் பார்வை உள்ளோருக்கே வேலை நேரம் பேச்சுக் கொடுத்தால் கவனம் சிதறும் .
  அந்த தொழிலாளி சொன்ன பதில் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அப்போது அவர் எனக்கு உணர்த்திய நல்ல பாடம் - மற்றவர்களின் நிலை அறிந்து பேசவேண்டும் என்பது.

   நீக்கு
 20. ஆஆஆஆஆஆஆ இன்று எழும்பிப் பார்க்கிறேன் எல்லோருமே புதுப்போஸ்ட்ட்ட்.. என் குட்டிக் காலால எப்பூடி ஓடுவேன், குட்டிக் கையால எப்பூடிக் கொமெண்ட்ஸ் போட்டு முடிக்கப் போகிறேன் எனக் கலங்கி நிக்கிங் மீ:))..


  நேற்று, சின்ன மகனிடம் சொன்னேன்.. “கேர்ட்டினை மூடி விடுங்கோ”.... அவ்ர் சொன்னார்.. “ஐ ஆம் மூடிங் அம்மா” ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 21. காந்தியே ஃபிரேமைப் பிய்த்துக் கொண்டு ஓடி விடுவார்..

  அட்சர லட்சம் பெறும்....

  பதிலளிநீக்கு
 22. //பிசிபெளாபாத்துக்கு உருளை வறுவல் நல்லா இருக்குமா அல்லது வாழைக்காய் சிப்சா?//

  ஹையோ ஆண்டவா என்னை ஆராவது தூக்கிக்கொண்டுபோய்த் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. ரெண்டு ஜென்மத்துக்கும் புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு:)).. என்னால முடியல்ல சீரணி வீரபத்திரரே...:)

  பதிலளிநீக்கு
 23. //
  4. வீரமாமுனிவருக்கு முன்பு வரை தமிழில் ஒற்றைக் கொம்பு , இரட்டை கொம்பு கிடையாது, ஒற்றெழுத்துகளில் மேலே புள்ளி வைக்கும் பழக்கம் கிடையாது.//

  ஓ இப்படியும் ஒரு வரலாறு உண்டோ? அப்போ இப்பூடித்தான் இந்த ழ/ள இரண்டையும் ஆரோ வேண்டுமென உருவாக்கி விட்டிருப்பினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிக் கிடையாது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. "ழ" "ள" "ல" எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே உண்டாக்கும்.

   நீக்கு
  3. தஞ்சை கோயில் கல்வெட்டுகளிலேயே
   ழ, ள, ல வர்க்க எழுத்துக்கள் காணப்படுகின்றன..

   அதையெல்லாம் பிஞ்சு ஞானி நேரில் பார்த்திருக்க நியாயம் இல்லை...

   நீக்கு
 24. //
  ராசிகளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

  பிறந்த ராசியை, தேவைப்படும்போது பார்ப்பதில் தப்பில்லை, திருமணம்.. இப்படியான நேரங்களில்.

  மற்றும்படி கைராசி, முகராசி எனப் பார்ப்பது தப்பு, எனக்கதில் நம்பிக்கையுமில்லை.. இது மூட நம்பிக்கை என்றே சொல்லுவேன், அது நம் அன்றைய நாளைப் பொறுத்தே அமைகிறது..

  அடுத்தவர்களின் ராசி சரியில்லை எனச் சொல்லும்போது, நம்மையும் ஒருவர் இப்படிச் சொல்லக்கூடும், அப்போ நம் மனம் எவ்வளவு பாடுபடும் என்பதையும் நினைச்சுப் பார்க்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அடுத்தவர்களின் ராசி சரியில்லை எனச் சொல்லும்போது, நம்மையும் ஒருவர் இப்படிச் சொல்லக்கூடும், அப்போ நம் மனம் எவ்வளவு பாடுபடும் என்பதையும் நினைச்சுப் பார்க்க வேண்டும்...//

   அப்படி எல்லாம் நினைச்சுப் பார்க்க மாட்டாங்க பிஞ்சு, மத்தவங்க மனம் புண்படணும் என்பதற்காகவே சொல்றாங்க இல்லையா? என் ஜாதகம் ரொம்பவே உயர்த்தி, எனக்குச் சாதாரணமான யோகமெல்லாம் இல்லை, நான் தொட்டாலே போதும் என்றெல்லாம் சொல்லுபவர்களையும் என் கைராசி உசத்தி என்று சொல்லுபவர்களையும் வீட்டில் எந்தப் பலகாரம் செய்தாலும் நான் முதலில் தொட்டால் தான் அது விரைவாகவும் ருசியாகவும் பண்ண முடியும் என்பவர்களும் உண்டு. எல்லோரையும் பார்த்திருக்கேன்.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா உண்மை கீசாக்கா.. இப்படி கூச்ச நாச்சமே இல்லாமல் பலர் சொல்வதுண்டுதான், தம்மைத்தாமே பெருமையாக்கி:))..

   அடுத்தவர்கள் நம்மைப் புகழும்போதுதானே நமக்கது பெருமையாகும்.

   நீக்கு
 25. வீரமாமுனிவருக்கு முன்னால் தமிழும் கிரந்தமும் கலந்து எழுதப்பட்டது. பல கல்வெட்டுக்கள் கிரந்தத்திலேயே முழுக்க முழுக்க இருக்கின்றன. இப்போதும் பார்க்கலாம். நான் சுமாராக ஓரளவுக்கு கிரந்த எழுத்துக்களைப் படிப்பேன். என்றாலும் இப்போது பழக்கம் விட்டுப் போய்விட்டதால் கொஞ்சம் தடுமாற்றம் வருகிறது. ஆனாலும் ஒரு சில கல்வெட்டுக்களை மிக முயன்று படித்திருக்கிறேன். கிரந்தத்திலேயே சுந்தரகாண்டம் அப்பாவோடது என்னிடம் கொடுத்தார். நான் கிரந்தம் படிக்கிறேன் என்பதால்கொடுத்தார். ஆனால் அது தூள் தூளாகிவிட்டது. பேச்சே மணிப்ரவாளத்தில் தான் முன்னெல்லாம் இருக்கும் என்பார்கள். ஆகவே கிரந்தத்தின் பயன்பாடு அதிகம் இருந்து வந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 26. விக்கி பீடியா கொம்பில்லாமல் புள்ளிகள் இல்லாமல் எழுதுவது வார்த்தைகளின் பொருளில் மயக்கத்தைக் கொடுத்ததால் பிற்காலத்தில் மீண்டும் ஒற்றை, இரட்டைக் கொம்புகளோடும், புள்ளிகளோடும் எழுதப்பட்டதாகக் கூறுகிறது.

  பதிலளிநீக்கு
 27. கேள்வி பதில்கள் நன்கு அலசப்படுகின்றன.

  பதிலளிநீக்கு
 28. /// நேருவின் கதையைத் திரைப் படமாக எடுத்தால் கமல் பொருத்தமாக!?...///

  நேருவுக்கு இதற்கு மேலும் சோதனை வர வேண்டாம்...

  பதிலளிநீக்கு
 29. கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் ஸ்வாரஸ்யமாக ரசனையுட்ன இருக்கின்றன. நல்ல நகைச்சுவையுடனும் குறிப்பாக சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கேள்விக்கு, நேருவின் கதாபாத்திரம் ஏற்றால் கமல்ஹாஸன் பேசுவது போல சொல்லப்பட்ட பதில்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 30. என்னாது நேருவின் கதையை திரப்படமாக எடுத்தால் கமல்ஹாசன் பொருத்டமாக இருபபரா?!!!வா ஹா ஹா ஹா ஹா ஹா கடைசில போட்டிருக்கற படம் மட்டும் தான் மற்ற படி நோ பொருத்தம் அட் ஆல்!!

  இருங்க பதில் பார்த்துவிட்டு வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 31. " தொழில்துறை முன்னேற்றங்கள் நம் பின் நின்றாலும், ஏழை விவசாயியின் பிளந்து போன ஏர்க்காலின் முனையில், கடந்துபோன நாட்களின் காயங்கள் இழந்து போன பிம்பங்களாக பரிதவித்தால், செஞ்சோற்றுக் கடன் தீரும் நாள் வருமா? "

  என்று ஒரு ட்வீட் போட்டார் என்றால், காந்தியே ஃபிரேமை உடைத்துக்கொண்டு படத்திலிருந்து இறங்கி ஓடிவிடுவார்! //

  ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்து முடியலை...

  கீதா

  பதிலளிநீக்கு
 32. வேலைக்கு சேர்ந்த புதிதில் ஆர்வக் கோளாறில் ஏதாவது அசட்டுத்தனம் செய்திருக்கிறீர்களா? //

  இரண்டாவதான பதிலில் அவர் சொன்ன பதில் அசத்தல்...எவ்வளவு கடினமான வேலை அவருக்கு..

  கீதா

  பதிலளிநீக்கு
 33. பிசிபெளாபாத்துக்கு உருளை வறுவல் நல்லா இருக்குமா அல்லது வாழைக்காய் சிப்சா?//

  இரண்டுமே நோ. தனியாகச் சாப்பிடத்தான். பிபேபா க்கு அப்பளம் சிறந்த கோம்போ. அடுத்து வேண்டுமென்றால் வற்றல் வடாம்..

  கீதா

  பதிலளிநீக்கு
 34. சிகரெட், கஞ்சா, பீடி, குடி, குட்கா, புகையிலை என்று இவை எல்லாமே உடல் நலத்துக்குக் கேடுதான். அப்படி இருக்கிறபோது, அரசாங்கம், அந்த ஃபேக்டரிகளை, தொழிலை இழுத்து மூடாமல், மக்களைப் பார்த்து 'நீ இதைச் செய்யாதே' என்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கா?//

  நெல்லை ஹைஃபைவ்!! நீங்க என் அண்ணா/தம்பின்னு நிரூபிச்சிட்டீக...போனவாரம் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம் வீட்டில். உலகில் இதற்குத் தடை விதிக்கவில்லை. சில நாடுகளில் துப்பினால் குற்றம் ஃபைன் எல்லாம் உண்டு. நம்ம நாட்டில் சுத்தமாக இல்லை. இடையில் ஏதோ ரூல் வந்ததாகச் சொன்னாங்க ஆனால் இருப்பதாகத் தெரியவில்லை. அது போல குடி. கண்டிப்பாக இது முரண்! ஒரு பக்கம் மக்கள் நலத்திட்டம் என்று எல்லா நாடுகளும் செய்கின்றன..ஆனால் அந்த நலத்திட்டங்களை விட இந்த நலத்திட்டங்கள் தானே நல்லது இல்லையா.

  கீதா


  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!