சனி, 2 மே, 2020

தங்க மனசுக்காரர்கள்.

லாக்டவுனால்  வாழ்க்கையே டவுனாகிக்கிடக்கும் ஏழைகள், தினசரிக் கூலிகள். வெளியே செல்லவில்லை எனில் காசு இல்லை. காசு இல்லை எனில் வயிற்றுக்குச் சோறும் இல்லை.  என்ன கொடுமை இது? சிந்தித்த இருவர் செயலில் இறங்கினர். தங்கள் நிலத்தை விற்றனர். பணம் கைக்கு வந்தது. மளிகை சாமான்கள் மொத்தமாக வாங்கி வீட்டில் அடுக்கிவைத்து, தங்கள் ஏரியாவின் ஏழைபாழைகளுக்கு இலவசமாக வினியோகிக்கின்றனர். வீட்டிலேயே சமையலுக்கான ஏற்பாடும். எதற்கு? சாமான்கள் கிடைத்தும் சமைக்க வழியில்லாதவரின் வயிற்றுக்கும் சோறிடவேண்டாமா?

கர்னாடகாவின் கோலார் நகரில் வாழும் பாஷா சகோதரர்கள். கோலார் என்றாலே தங்கமாயிற்றே!

லிங்க்:நன்றி : ஏகாந்தன்.

=============================
ஊரடங்கு நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்க : 

தமிழக பள்ளி கல்வி பாடதிட்டத்தில், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், tnschools.gov.in/textbooks என்ற இணையதளத்தில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், பாட வாரியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.சி.பி.எஸ்.இ., மாணவர்கள், வகுப்பு வாரியாக அனைத்து புத்தகங்களையும், epathshala.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.


நன்றி : தினமலர் ஏப்ரல் 27 இணைய பதிப்பு .


===============================ரட்டன் டாட்டாவின் அசகாய ஸாகஸங்கள்


                                       

ரமா ஸ்ரீனிவாசன் 


28 டிசம்பர் 1937ஆம் ஆண்டு பிறந்த ரட்டன் நாவல் டாடா பரம்பரை இந்தியத் தொழிலதிபர், பரோபகாரர் மற்றும் டாட்டா குழுமத்தின் முன்னால் சேர்மனாவார். அவருடைய 10ஆவது வயதில் பெற்றோர் விவாகரத்து செய்ததால், ரட்டன் டாட்டாவை அவரது பாட்டி நவாப்ஜி டாட்டா ஜே.என். பெடீட் பார்ஸீ அனாதையாஸ்ரமம் மூலம் தத்தெடுத்து வளர்த்தாளாக்கினார். டாட்டா அக்குழுமத்தின் எல்லாத் தொண்டு மற்றும் பரோபகார ட்ரஸ்டுகளுக்கும் இன்றும் தலைமை வகிக்கின்றார். இந்நாடு அவருக்கு பத்ம பூஷன் விருதை 2000லும் பத்ம விபூஷன் விருதை 2008லும் வழங்கி தன்னைப் பெருமை படுத்திக் கொண்டது. தொழில் ஆக்கச் சிந்தனைக்கும் பரோபகாரத்திற்கும் பெயர் போனவர் ரட்டன் டாட்டா.ஜம்ஷெட்ஜி டாட்டா “டாட்டா” நிறுவனத்தை முதல் முதல் ஸ்தாபித்தவர். அவரின் கொள்ளுப் பேரனும் நாவல் டாட்டாவின் பிள்ளையுமான ரட்டன் டாட்டா கார்னெல் ஆர்கிடெக்சரல் யூனிவர்சிடியில் தன் படிப்பை முடித்துக் கொண்டு 1961ல் டாட்டா நிறுவனத்தில் ஒரு உத்யோகஸ்தராகச் சேர்ந்தார். 1991ல் ஜே.ஆர்.டி. டாட்டா ஓய்வு பெற்றபோது, ரட்டன் டாட்டா சேர்மன் ஆனார். ரட்டன் டாட்டா மும்பையிலும் சிம்லாவிலுமாக தன் பள்ளி கல்வியை 8ஆவது வரை முடித்து பின்னர் தன் பள்ளி கல்வியை முழுமையாக நியூ யார்க் ரிவர்டேல் கன்ட்ரீ பள்ளியில் 1955ல் முடித்தார். கார்னெல் ஆர்கிடெக்சரல் யூனிவர்சிடியில் தன் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு ஏழு வார மேல்நிலை மேலாண்மை திட்டக் கல்வியை ஹார்வர்ட் வணிகத்துறை பள்ளியில் தேர்ச்சிப் பெற்று வெளி வந்தார். இன்று வரை ரட்டன் டாட்டா இந்த ஹார்வர்ட் வணிகத்துறை பள்ளிக்கு தன்னால் இயன்ற நிதி வழங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது ஒரு மாணவனின் மனதில் உள்ள கல்விக்கு தான் வழங்கும் மரியாதையைக் பறைசாற்றுகின்றது. 1970ல் மேலாண்மை பிரிவுக்கு உயரதிகாரியாக மாற்றப்பட்டு தன் திறமையை வெளிக் கொணர ஒரு தீமிதி சரித்திரமே எழுதினார் ரட்டன். அவர் டாட்டாவின் உறவு என்பதால் எந்த சலுகையும் காட்டப் படவில்லை. ஜே.ஆர்.டி.டாட்டா 1991ல் ஓய்வு பெற்ற பின் ரட்டன் டாட்டாவை தன் நிறுவன வாரிசாக நியமித்தார். அப்படியும் பல டாட்டா கம்பனிகளின் தலைவர்கள் அவரை தங்கள் தலைவராக ஏற்க மறுத்து எண்ணற்ற தொல்லைகளையும் குழப்பங்களையும் இவரை நோக்கி செலுத்தினர். யாவற்றையும் திறம்பட எதிர்த்து யார் தலைவர் என்பதை தெளிவாகத் தன் செயல் மூலம் காட்டி, கருமமே கண்ணாய் இருந்தார். 

திறம்மிகு கண்டுபிடிப்பிற்கும் இளம் திறமைக்கும் முன்னுரிமை அளித்து வெகு விரைவில் உலகே டாட்டா குழுமத்தை அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு கொண்டு சென்றார். அவரது 21 வருட தலைமையில் டாட்டா நிறுவனத்தின் வருவாய் 40 மடங்கும், லாபம் 50 மடங்கும் பெருகியது. அவரது உத்வேகத்தில் டாட்டா டீ டெட்லீ பிரான்டையும் டாட்டா மோடார்ஸ் ஜேகுவார் லாண்ட் ரோவரையும், டாட்டா ஸ்டீல் கோரஸையும் வாங்கி இந்திய நாட்டின் வர்த்தகமாக இருந்த டாட்டா நிறுவனத்தை ஒரு உலகளவு வணிகமாக மாற்றி அற்புதம் செய்தது. ஓர் சராசரி மனிதனின் தேவையை உணர்ந்து டாட்டா அவர்கள் டாட்டா நேனோ காரை உற்பத்தி செய்து இந்நாட்டிற்கு அளித்தார். 2012ல் 75 வயதை எட்டிய பின் தன் நிர்வாக அதிகாரங்களை விடுத்து, ஸிரஸ் மிஸ்டிரியை தன் வாரிசாக நியமித்தார். பல குழப்பங்களுக்கு நடுவில் ஸிரஸ் மிஸ்டிரி 2016ல் சேர்மேன் பதவியிலிருந்து விலக்கப் பட்டு, 2017ல் நடராஜன் சந்திரசேகரன் டாட்டா நிறுவனத்தின் சேர்மேனாக பதவியேற்றார். ஸ்னேப்டீல், டீபாக்ஸ், ஸையோமீ, பிட்காயின், நெஸ்டவே மற்றும் டாக்ஸ்பாட் போன்றவைகளில் முதலீடு செய்து பல அதிசயங்களை செய்தார். முதல் எலக்ட்ரிக் கார்களை டிகர் என்ற பெயரில் டாட்டா நிறுவனமே இந்நாட்டிற்கு அற்பணித்தது. பரோபகாரம் : என்றுமே டாட்டா அவர்கள் கல்விக்கும், மருத்துவத்திற்கும், கிராம வளர்ச்சிக்கும் முன்னுரிமை தந்து கொண்டிருப்பவர். ந்யூ சவுத் வேல்ஸ் யூனிவர்சிடியின் என்ஜினியரிங்க் பிரிவை ஊக்குவித்து கேபாஸிடிவ் டிஐயோனைஷேஷன் முறையை உருவாக்கி சிறந்த குடிநீரளிக்கும் பணியை வெற்றியுடன் முடிக்க வைத்தார். டாட்டா கல்வி மற்றும் முன்னேற்றம் டிரஸ்ட் அமெரிக்காவில் உள்ள கார்னெல் யூனிவர்சிடிக்கு 28 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கி நம் இந்திய மாணவர்களுக்கு நிதியுதவி செய்து பட்டப் படிப்பிற்கு உதவ ஏற்பாடு செய்திருக்கின்றார். இந்த ஸ்காலர்ஷிப் சுமார் 20 தகுதியுள்ள இந்தியர் கார்னெல் யூனிவர்ஸிடீ செல்ல வழி செய்யும். 2010ல் டாட்டா குழுமம் 50 மில்லியன் டாலர்களை கொடையாக அளித்து ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலில் ஓர் எக்ஸிக்யூடிவ் சென்டர் கட்ட உதவியது. இதற்கு டாட்டா ஹால் என்றே பெயர் சூட்டப் பட்டுள்ளது. அது ஓர் ஏழு மாடிக் கட்டிடம். 155,000 சதுர அடியுள்ள இக்கட்டிடம் படிப்பறைகள் மற்றும் பல்நோக்கு அறைகளைத் தவிர 180 படுக்கையறைகளையும் கொண்டதாகும். டாட்டா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (TCS) கார்னகி மெலன் யூனிவர்ஸிடிக்கு 35 மில்லியன் டாலர் கொடை கொடுத்து ஓர் 48,000 சதுர அடியுள்ள கட்டிடத்தை கட்ட உதவியிருக்கின்றது.2014ல் டாட்டா குழுமம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, மும்பைக்கு ரூ. 950 மில்லியன் கொடுத்து டாட்டா சென்டர் ஃபார் டெக்னாலஜி அண்ட் டிசைனை ஏற்படுத்தியிருக்கின்றது.ரட்டன் டாட்டாவின் தலைமையில் எம்.ஐ.டீ டாட்டா சென்டர் ஆஃப் டெக்னாலஜி அண்ட் டிஸைன் என்ற கிளைப் படிப்பை மசாச்சுசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் நிறுவி கீழ் மட்ட மக்களின் போராட்டங்களை எதிர்த்து வெற்றி பெற வழி செய்தது.இவை யாவையும் தாண்டி, கோவிட்-19 கோரத்தாண்டவத்தை ஆராய்ந்து கட்டுப் படுத்த இந்திய அரசாங்கத்திற்கு டாட்டா குழுமம் ரூ.1,500 கோடிகளை நன்கொடையாக வழங்கி தோள் கொடுத்துள்ளது.பத்ம விபூஷன் விருதை 2008லும் பத்ம பூஷன் விருதை 2000லும் பெற்றது மட்டுமல்லாது மேலும் 40 விருதுகளை பல்வேறு துறைகளில் பெற்றிருக்கின்றார் ரட்டன் டாட்டா. இந்த ரட்டன் டாட்டாவைப் பற்றிய ஓர் சுவையான கதையை இங்கு நான் எழுதுகின்றேன். 1946ல் இரண்டாவது உலகப் போரின் தாக்கத்தில் யாவற்றையும் இழந்த ஜெர்மனி கலையிழந்து நின்றது. அதன் மிகப் பெரிய கம்பெனி, க்ராஸ் மாஃபெய் தன் வளம் அத்தனையையும் இழந்து நிராதரவாக நின்றது. அப்போது, இரயில் வழிப் பயணமாக அங்கு ஜே.ஆர்.டி. டாட்டாவும் அவர் குழுமமும் வர்த்தகம் பேச வந்து இறங்கினார்கள். இந்தியாவில் என்ஜின்கள் தயாரிப்பது பற்றி உரையாடச் சென்றவர்களை போரின் களியாட்டம் வரவேற்றது.ஸ்தம்பித்து நின்ற இந்தியப் பிரதிநிதிகளிடம் ஜெர்மனிய அதிபர் வேலையிழந்த சிறந்த என்ஜினியர்கள் சிலரை இந்தியாவிற்கு கூட்டிச் செல்லுமாறு வேண்டினார்.மறு யோசனை இல்லாமல், எழுத்து வடிவ ஒப்பந்தம் எதுவும் இல்லாமல், டாட்டா அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு இந்தியா வந்து அவர்களுக்கு வேலையும் கொடுத்து அவர்களையும் குடும்பங்களையும் நன்றாக கவனித்து கொண்டார்.  


1950ல் திடீரென்று ஜெர்மனிக்கு ஓர் லெட்டர் டாட்டா குழுமத்திடமிருந்து வந்தது. அதில் டாட்டா ஜெர்மனிய அதிபருக்கு அவருடைய என்ஜினியர்களை அனுப்பி இந்திய என்ஜின்களை உற்பத்தி செய்ய உதவியதற்கு நன்றி கூறினார். டாட்டா கம்பனியின் என்ஜின்கள்தான் டாட்டா குழுமத்தின் முதல் உற்பத்தியாகும். மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் தயாரிக்க ஜெர்மன் என்ஜினியர்கள் நிறைய உதவி செய்தார்கள். அதிபரும் அவரது குழுமமும் ஆச்சரியமடைந்தார்கள்.


1970ல் டாட்டா குழுமம் ஓர் சட்டப் பூர்வமான நிதி உத்திரவாதத்தை வர்த்தக ரீதியாக ஜெர்மனிக்கு அளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது. ஆயின் அரசாங்க ஒழுங்கு முறைகளால் அவர்களால் அதை கொடுக்க முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தார்கள். இதை அறிந்த ஜெர்மன் நாட்டு வங்கியினர் டாட்டா லெட்டர்ஹெட்டில் ஓர் உத்திரவாதமே போதும் என்று கூறி சிக்கலைத் தவிர்த்தனர். நண்பர்களே, நம்பிக்கை வந்து குதிப்பதல்ல. அது வாழ்நாள் முழுவதும் வளர்க்கப் படும் ஒன்று.இக்கதையின் கரு என்னவென்றால் எது தவறு எது சரி என்பதை நிர்ணயிப்பது நாமே தவிர வேறு யாரும் இல்லை. நமது சுய நேர்மையின் அடிக்கோல் நம்மால்தான் வரையறுக்கப் படுகின்றது. நாம் எவ்வளவு நேர்மையாக இருக்க விழைகிறோமோ அவ்வளவு நேர்மை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும். தன் நிகரற்ற பண்பால் ரட்டன் டாட்டா அவர்கள் தன் நிறுவனத்தின் புகழை எங்கோ உயரத்தில் நிற்க வைத்தார், வைத்திருக்கின்றார், வைக்கப் போகின்றார். “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று – திருவள்ளுவர்


இக்குறளுக்கேற்ப தன் வாழ்க்கையை இன்று வரை வாழ்ந்து வருகின்ற திரு. ரட்டன் டாட்டா அவர்கள் நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்தி முடிக்கின்றேன்.


===========================================49 கருத்துகள்:

 1. சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை...

  நலமே வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை வணக்கம். இன்றைய பாசிடிவ் செய்திகள், அதிலும் சொத்தை விற்று உணவு வழங்கிய உள்ளங்கள் பாராட்டப்பட வேண்டியது.

  பதிலளிநீக்கு
 4. ரத்தன் டாடாவைப் பற்றிய செய்திகள் நன்று. நல்லவர்களைப் பற்றி எழுதிவரும் ரமா ஶ்ரீநிவாசன் பாராட்டுக்குரியவர்.

  மும்பையில் ஒரு மழை நாளில், இரவில் ஒருவர் மாட்டிக்கொண்டார். ரோடில் யாருமே இல்லை, கடைகள் யாவும் அடைக்கப்பட்டிருந்தன. ஒதுங்க இடம் இல்லை. அப்போது வந்த ஒரு கார், இவரைப் பார்த்து நின்றது. எங்கு போகவேணும் எனக்கேட்டு அங்கே அவரைக் கொண்டு சேர்த்தார் காரை ஓட்டியவர். அந்தப் பயணி அவருக்கு மிக்க நன்றி கூறி, தங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா எனக் கேட்டதற்கு, என்னை டாட்டா என அழைப்பர் எனச் சொன்னதாக, இந்தச் சம்பவத்தை எழுதியிருந்தார். இதை எழுதியது வாலியா என (அவரது தன் வரலாறு நூலில்- நானும் இந்த நூற்றாண்டும்) என நினைவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணம் படைத்தவர்கள் என்றாலே தனிரகம், அகந்தை பிடித்தவர்கள் என்கிற கருத்துகளை உடைப்பவர்.

   நீக்கு
  2. மிக்க நன்றி நெல்லைத்தமிழன் அவர்களை.

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா... இனிய காலை வணக்கம். அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 6. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  இல்லாதவர்க்குக் கனிவுடன் உணவு படைக்கும் உள்ளங்கள் இனிது வாழ வேண்டும்.
  நிலத்தை விற்று நமை செய்யும் இவர்கள் வாழ்வு மென்மேலும் சிறக்க வேண்டும்.

  ஜெ ஆர் டி டாட்டாவின் முகம் எப்போதும் நினைவில் இருக்கும்.
  அந்தக் கனிவான மனிதருக்கு வாரிசாக வந்தவரும்
  கொடை வள்ளலாக இருப்பது இன்னும் மேன்மை.

  விவரங்கள் வழங்கிய ரமாவுக்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ramah Srinivasan wrote about Ratan Tata. Not JRD Tata. :))))))

   நீக்கு
  2. அன்பு கீதா,
   எனக்கு ஜே ஆர்.டி நினைவுக்கு வந்தார். நான் என்ன செய்யட்டும்:)
   பழைய டாட்டா கம்பெனியில் வேலை செய்தவர்கள் என் உறவுக்காரர்கள்.
   அவ்ர்கள் வசித்த செம்பூர் டாட்டா கால்னியில்
   நாள் முழுவதும் வென்னீர் கிடைக்கும். துணி துவைக்க,
   பாத்திரம் ஊறப் போட்டுத் தேய்க்க,
   குளிக்க 24 மணி நேரமும் கிடைக்கும்.
   சுற்றிலும் காய்கறித் தோட்டம் போட்டு, மல்லிகை,கனகாம்பரம் எல்லாம் கட்டின நாட்கள்
   நினைவுக்கு வந்தன.
   ஒரு கொடையாளி உருவாக இவர்தான் முன்னோடி என்று
   சொல்ல வந்தேன்.
   நெல்லை சொன்னது கூட அவரைப் பற்றி என்றே தோன்றுகிறது.

   நீக்கு
 7. இனிய காலை வணக்கம் அம்மா.. வாங்க...

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவும் வாழ்த்துகளும். இனித் தொடரப் போகும் ஊரடங்கினால் மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மாநிலத்தையும், நாட்டையும் எவ்விதத் தொற்றும் இல்லாமல் மாற்றப் பிரார்த்தனைகள். இனியாவது சென்னை மக்கள் கூட்டம் கூடாமல் இடைவெளியைக் கடைப்பிடித்துச் சென்னையின் தொற்று நோய் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமாய்ப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா அக்கா... வாங்க.்்்்்். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி. சென்னைக்காரர்கள் அனைவரும் சொல்லப்படும் அறிவுரைகள் எல்லாம் தன்னைத்தவிர மற்றவர்களுக்கு என்று எடுத்துக் கொள்கிறார்கள். என்ன செய்ய...

   நீக்கு
 9. தங்கமனசுக்காரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். டாடா கம்பெனிகளின் சேர்மன் ஆன ரத்தன் டாடாவின் தேசப் பற்றும் வியக்கவைப்பது. கொரோனா பாதிப்புக்குச் சேவை செய்யும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியோர் தங்கத் தம் தாஜ் ஓட்டல்களை ஒழித்துக் கொடுத்திருக்கிறார். சகல வசதிகளோடும் அவர்கள் அங்கே தங்க ஏற்பாடுகள் செய்திருக்கார்.

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 11. ஏழை மக்களுக்கு உணவளிக்க தங்கள் நிலத்தை விற்ற பாஷா சகோதரர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
  காலத்திற்கு தேவையான மாற்றங்களை செய்யும் கல்வித்துறைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. ரத்தன் டாடா பற்றிய நெல்லைத் தமிழன் கூறியிருக்கும் செய்திகளை நானும்படித்திருக்கிறேன். ஒரு மோட்டார் பைக்கில், கணவன்,மனைவி,இரண்டு குழந்தைகள் என ஒரு குடும்பமே பயணித்ததை பார்த்த பிறகுதான் நடுத்தர வர்க்கத்தினரும் வாங்கக் கூடிய விலையில் ஒரு கார் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து Tata Nano கார்களை உற்பத்தி செய்ய Tata நிறுவனம் முடிவு செய்ததாம். இப்போது nano கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

  பதிலளிநீக்கு
 13. எனக்கு ஆச்சர்யமான விசயம் இவ்வளவு பில்லியன், மில்லியன் கணக்கில் தானம் செய்பவர்கள் தெருவோரம் ஒருவேளை உணவின்றி எவ்வளவோ மக்கள் வாழ்கிறார்களே அவர்களைப்பற்றி சிந்திக்கவே மாட்டார்களோ...?

  செய்தவர்களை நான் குறை காணவில்லை இப்படி தானங்கள் பகட்டுக்காக, சரித்திரத்தில் பெயர் பொறிப்பதற்கான தானமாக இருக்கிறதோ என்ற ஐயம் வருகிறது.

  இதில் சிறு பங்கு ஒதுங்கினாலே போதும் பல உயிர்களுக்கு உணவளித்து விடுதிகளே நடத்தும் அளவுக்கு செயல்படலாம்.

  அனாதை ஆஸ்ரமங்களுக்கு கொடுக்கலாம்.

  அமெரிக்க ஸ்கூலில் TATA HALL இதுதான் எண்ணமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டாடா கீழ்மட்ட மக்களுக்கும் பெருமளவு உதவுவதாக வெங்கட் சொல்லி இருக்கிறார் ஜி.

   நீக்கு
  2. கில்லர்ஜீ சார், ரட்டன் டாட்டா என் கமிஷனர் ஒருவரது நண்பராவார். ஆகவே, என் பெண்களுடன் மும்பை சென்ற போது, நான் ஆவல் காட்டியதால், என் கமிஷனர் அவரை சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர் இல்லத்தில் எங்கள் மூவருக்கும் மதிய உணவு கொடுத்து எங்களுடன் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். என்ன ஒரு எளிமை, என்ன ஒரு சௌஜன்யம், என்ன ஒரு அக்கரை. இவை யாவையும் நேரில் கண்டதால், கூறுகின்றேன். அவருக்கு நிகர் அவர்தான். அவர் படாடோபத்தை விரும்புவராகத் தெரியவில்லை. படாடோபம் இன்றி உதவுவராகவே எனக்கு தெரிந்தார்.

   நீக்கு
  3. நேரில் கண்டு பழகியவர் நீங்கள் ஆகவே மகிழ்ச்சி மேடம்.

   நீக்கு
  4. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ada!

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

  ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்பதற்காக தங்கள் நிலத்தை ஒற்றுமையான எண்ணங்களுடன் விற்று அவர்களின் தேவைகளை குறைகளின்றி கவனித்து செய்து வரும் பாஷா சகோதரர்கள் உண்மையிலேயே கருணை மனம் படைத்த சிறந்தவர். அவர்களுடைய சேவை மனப்பான்மைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  கல்வித்துறைகளின் தொண்டு மிகச் சிறந்தது.இப்போதைய காலகட்டத்தில் மிகவும் பயனுள்ளது.கல்வித்துறைக்கும், படித்துப்பயன் மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை நன்றாக உள்ளது. ரத்தன் டாடா பற்றி அவர் சொல்லியிருக்கும், உயர்வான கருத்துக்களையும் கருத்துரையில் அவரைப்பற்றி குறிப்பிட்ட நிகழ்வுகளையும் படித்து அறிந்து கொண்டேன். அவரின் சேவைகள், ஈகைத்திறன்கள் வியக்க வைக்கின்றன. அவரின் வாழ்க்கை இன்னும் பிரகாசமாக நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அறியாத விஷயங்கள் நிறைந்த இக்கட்டுரையை தொகுத்தளித்த சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலா, நல்ல விஷயங்களும் நல்லவர்களின் வாழ்க்கை கதைகளும் வெளி மனிதர்களுக்கு தெரிய வேண்டும் என்ற ஒரே குற்க்கோளுடன் நான் எழுதுகின்றேன்.

   நீக்கு
 15. நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 16. பாஷா சகோதரர்கள் செய்கிறார்களே உணவு தானம் வெறும் 25 லட்ச ரூபாயில் பல மில்லியன்களை தூக்கி எறிந்து விட்டதே...

  வாழ்க அவர்களது குலம்.

  பதிலளிநீக்கு
 17. செல்வர்க்கு அழகு
  செழுங்கிளை தாங்குதல்....

  இருக்குறவங்க
  அதைக் கொடுக்குறாங்க...
  இதைக் கொடுக்குறாங்க... ந்னு
  போட்டு விடுவதால்

  மனம் இருந்தும் பணம் இல்லாதோர்
  தம்நெஞ்சங்கள் பெரிதும் வருத்தப்படுகின்றன.

  இப்படியான சிக்கலை
  இறைவா நீ தான்..யா மாத்தி வைக்கணும்..ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி நான் பார்க்கவில்லை துரை சார். நம்மால் இயன்றதை நாம் செய்வோம். செய்வதுதான் முக்கியம் என்று நான் பார்க்கின்றேன். எவ்வளவு செய்கிரோம் என்பது அவரவர் சக்தியை பொருத்தது.

   நீக்கு
 18. நல்ல மனம் வாழ்க... இன்றைய பாசிடிவ் செய்திகள் ரத்தன் டாடா பற்றிய பகிர்வும் சிறப்பு. அவர் செய்து வரும் விஷயங்கள் வெளியே தெரிவதில்லை. ஏழை எளியோருக்கும் நிறைய செய்கிறார் - டாடா ட்ரஸ்ட் மூலம் அவர் செய்யும் விஷயங்கள் - குறிப்பாக கீழ் நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு உதவும் விஷயங்கள் நிறையவே உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரதன் டாடாவும் சரி, இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, அவர் மனைவி சுதாமூர்த்தி ஆகியோரும் சரி ஏழை, எளியவர்களுக்கு அதிக விளம்பரம் இன்றி உதவிகள் புரிகின்றனர். படிப்பு, வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குதல், மருத்துவ உதவி எனப் பல உதவிகள் செய்கின்றனர். பெரும்பாலும் வெளியே வருவதில்லை.

   நீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள் கீதா. ரட்டன் டாட்டா என் கமிஷனர் ஒருவரது நண்பராவார். ஆகவே, என் பெண்களுடன் மும்பை சென்ற போது, நான் ஆவல் காட்டியதால், என் கமிஷனர் அவரை சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர் இல்லத்தில் எங்கள் மூவருக்கும் மதிய உணவு கொடுத்து எங்களுடன் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். என்ன ஒரு எளிமை, என்ன ஒரு சௌஜன்யம், என்ன ஒரு அக்கரை. இவை யாவையும் நேரில் கண்டதால், கூறுகின்றேன். அவருக்கு நிகர் அவர்தான்.

   நீக்கு
  3. மிக்க நன்றி வெங்கட்.

   நீக்கு
 19. உதவிக் கரங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. கர்னாடகாவின் கோலார் நகரில் வாழும் பாஷா சகோதரர்கள் தங்கமனசுக்காரர்கள் தான். மனித நேயம் வாழ்க! வாழ்க வளமுடன்

  ரத்தன் டாடா அவர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். கட்டுரை ஆசிரியர் ரமா அவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி, நன்றிகள் உங்களுக்கு. சமையல் மற்றும் சாப்பாடு முடிந்து இப்போதுதான் வர முடிகின்றது.

   நீக்கு
 21. ரத்தன் டாடா பாரத ரத்னம் விருது உரியவர் .. பரம்பரையாகவே பரோபகார சிந்தனை உடையவர்கள். குழுமங்கள் அனைத்தும் அவர்களின் ட்ரஸ்ட் நடத்துகிறது எனவே பணக்காரர் பட்டியலில் இவர் பெயர் வராது

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!