ஞாயிறு, 31 மே, 2020

மேகங்களிலிருந்து ஒரு தேவதை..


குடை வெயிலுக்கா?  மழைக்கா?


தரையின் பளபளப்பு மழையினாலா?  




மறைந்திருந்து பார்க்கும் மர்மம் பக்கத்தில் உடைகிறது!



"வேணாம்...   முகமூடியை எடுத்தா உடனே ஃபோட்டோ புடிச்சுடுவாங்க...   அப்படியே இரு..."


மேகங்களிலிருந்து ஒரு தேவதை இறங்கி வருவாளா?


அப்படியே ஒரு போட்டோ...!



மழையே வா...   இளமை நனைய வா...


வீடு வாடகைக்கு விடப்படும்!



கோவிலா?  இயற்கையா?  எதைப் படம் பிடிப்பீர்கள்?  இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா?  அதுவும் சரிதான்!



ம்...ம்...   பார்த்தாச்சு, படம் எடுத்தாச்சுன்னா கிளம்புங்க....



சீக்கிரம் வாப்பா...   இங்க வந்து....


நல்ல செருப்பா ஒரு ஜோடி எடுப்பா....!


காத்திருக்கும் காரை விடுங்கள்..   எதிரே இருக்கும் வெட்டப்பட்ட வேரையும் விடுங்கள்.  காருக்குப் பின்னணியில் இருக்கும் மரம்!  அது ஏதோ ஓர்  உயிரினத்தை நினைவு படுத்தவில்லை?

=================================================


மின் நிலா 002 இங்கு சென்று படிங்க. download செஞ்சிக்குங்க! 

=================================================


81 கருத்துகள்:

  1. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ, வாங்கோ! வணக்கம்!

      நீக்கு
    2. இதுல பிரச்சனை என்னன்னா, நாம் தீச் சொற்களைப் பேசிவிட்டோம் என்பதை நாம் அறியாமல் இருப்பதுதான்.நாம சாதாரணமா சொன்னது இப்படியா அவங்க மனசைக் காயப்படுத்திற்று என்று புரிந்துகொள்ளும்போது அது டூ டூ மச் லேட்டாயிருக்கும்.

      நீக்கு
    3. //நாம் தீச் சொற்களைப் பேசிவிட்டோம் என்பதை நாம் அறியாமல் இருப்பதுதான்.நாம சாதாரணமா சொன்னது இப்படியா அவங்க மனசைக் காயப்படுத்திற்று //

      இது மிகச்சில சந்தர்ப்பங்களில்தான்.  பெரும்பாலும் அறிந்தே கோபத்தில் பேசுகிறோம்.

      நீக்கு
    4. ஆமாம் ஸ்‌ரீராம் பேசி விட்டு பின்னர் கோபம் தனிந்த பின், வருந்துகின்றோம். என்ன பயன்?

      நீக்கு
  2. மழையே வா..
    இளமை நனைய வா!...

    ஏன்?.. முதுமை
    நனையக் கூடாதா!...

    அது முன்பே நனைந்து
    தானே இருக்கிறது...
    அழகை நினைந்து
    தானே இருக்கிறது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே! முதுமையும் இளமையும் மனோநிலை மட்டுமே.
      A woman is as young as she looks;
      A man is as young as he feels.
      (Old is replaced by young in this popular saying)

      நீக்கு
    2. முதுமைக்கு இம்மியூனிட்டி கம்மி.  சளி பிடிச்சுடும்!

      நீக்கு
    3. உஷாராக இல்லாமலிருந்தால் இளமைக்கு ‘சனி’ பிடிச்சிடும்!

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    படங்கள் நல்லாருக்கு தண்ணீருக்கு குளத்தின் நடுவில் இருக்கும் மண்டபம்? அந்தப் படம் ரொம்ப அழகாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ, வாங்கோ! வணக்கம்!

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      தலைக்காவிரி வந்து விட்டார்களா.
      படங்கள் அத்தனையும் ,தலைப்புடன் சிறப்பாக இருக்கிறது.

      அந்தக் காருடனும் வேருடனும் இருக்கும்
      மரம் டைனொசார் தான். அதுவும் டி ரெக்ஸ்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா...   இனிய வணக்கம்.

      காருடனும் வேருடனும்...    இது கூட நல்லாதான் இருக்கு!

      நீக்கு
    4. எனக்கு யானையாகத் தெரிவது வல்லிம்மாவுக்கு டைனோசரா? ரொம்ப ஜுராசிக் பார்க் படங்கள் பார்க்கிறாங்களா இருக்கும்...க்கும்..க்கும்.

      நீக்கு
    5. வாங்க நெல்லை...   அவரவர் கண்களில் தெரியும் காட்சி அவரவர் கற்பனையைப் பொறுத்தது! இல்லையா?

      நீக்கு
  4. இன்றைக்கு அதிசயமாக அனைத்தும் படங்களும் தெளிவாக இருக்கு.

    சின்னப் பையன், வானத்திலிருந்து தேவதை வருவாளான்னு யோசிக்கற மாதிரி எழுதியது யாராயிருக்கும்?

    பதிலளிநீக்கு
  5. அருமையான படங்கள்
    கண்கள் குளிர்ந்தன

    பதிலளிநீக்கு
  6. செருப்பு ஜோடியைப் படித்ததும், திருவிண்ணகரில் ஒரு திருவிழாவின்போது, நூற்றுக்கணக்கான செருப்புகள் கோவிலில் இருக்க, என்னுடைய கால் பிரச்சனைக்கான செருப்பை யாரோ மாற்றிப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்கள். மதியம் 2 மணிக்கு கடை அடைத்திருக்கக்கூடாதே என பயந்து தேடி ஒரு ஜோடி ஸ்பெஷல் செருப்புகள் வாங்க வேண்டியதாகப் போயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் நம் செருப்பை போடும்போதே கால்கள் அவை நம்முடையவைதான் எனபதை அறிவிக்கும்.  தெரிந்தேதான் யாரோ உங்கள் செருப்பை எடுத்துக்கொண்டு போயிருப்பர்கள்!

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் ஊரடங்குத் தளர்வுகள் நல்லதொரு மாற்றத்தையும் ஆரோக்கியமான சூழ்நிலையையும் மக்கள் தொடரும்படி காப்பாற்றட்டும். மக்கள் உண்மையான நிலையைப் புரிந்து கொள்ளும் நேரம் வாய்க்கட்டும். லோகோ சமஸ்தோ சுகினோ பவந்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
  8. ஒருவழியாய்த் தலைக்காவிரிக்கு வந்து விட்டார்கள் போல! அங்கே ஒரு குருக்கள்/பண்டிதர்/புரோகிதர் எப்போவும் இருப்பார்னு சொல்லுவாங்க! இல்லையோ? அல்லது பார்க்கும் நேரம் கடந்து விட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   எனக்குத் தெரியாதே!

      நீக்கு
    2. நமக்கு உறவினரின் கல்யாணப் பத்திரிகை கொண்டுவரும் போஸ்ட்மேனைப் பார்த்து பெண் எந்த ஊர், என்ன நிறம் என்றெல்லாம் கீசா மேடம் கேட்பாங்க போலிருக்கு. அப்பாவி ஶ்ரீராம் கொடுத்த படங்களை அழகிய கேப்ஷன்களோடு (கேஜிஜி சாரும்) வெளியிடுகிறாரே தவிர, ஒவ்வொன்றாக விளக்கம் கேட்டால் என்னதான் செய்வாங்க?

      நீக்கு
    3. படங்களைப் பதிவில் ஏற்றுவது திரு கேஜிஎஸ் அவர்கள் தானே! அவர் வந்து பதில் சொல்லுவார். :)

      நீக்கு
  9. படங்கள் எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. எல்லோருக்கும் அவரவர் செருப்புகள் மாறாமல் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். மரத்தின் பின்னணியில் குட்டி ஆனை தெரிகிறது. தன் குட்டித் தும்பிக்கையை ஆட்டிக் கொண்டிருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...   உங்களுக்கு உங்கள் ஆஸ்தான யானைக்குட்டி தெரிகிறதா?!!

      //அவரவர் செருப்புகள் மாறாமல் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.//

      நல்ல செருப்பாய் கிடைத்திருக்கும் என்றே நம்புகிறேன்!

      நீக்கு
  10. "மழையே வா! இளமை நனைய வா!" தலைப்புக் கீழ்க் காணொளி எனில் அது வரவே இல்லை. பலமுறை முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். காணொளி திறக்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா..   ஹா...   அது காணொளியே இல்லை!  காணொளி மாதிரி!

      நீக்கு
  11. மின் நிலா தொகுப்புப் புத்தகம் நன்றாக இருக்கிறது. அந்த இலைகளோடு கூடிய படம்? அடுக்கு மல்லிப் பூ மாதிரியும் இருக்கு, பாரி ஜாதம் மாதிரியும் இருக்கு. படத்தைப் பெரிசு பண்ணியும் பார்த்தேன். இது ஞாயிற்றுக்கிழமைப் பதில் வந்த படமா? நினைவில் இல்லை. மற்றபடி ஒவ்வொரு பதிவுக்கும் தேர்ந்தெடுத்த கருத்துகளைச் சேர்த்திருக்கிறீர்கள். அரட்டையும் பரவாயில்லை. அவரவர் பெயரோடு வந்திருக்கலாம் என்றாலும் எழுதி இருக்கும் விஷயத்தை வைத்து யார் எழுதினது என்பது புரிகிறது. மஞ்சள் முகப்பு/அட்டை(?) நன்றாக இருக்கிறது. சென்ற வாரம் பார்க்கவில்லை, மறந்துட்டேன். அதான் இன்னிக்கு உடனே பார்த்துக் கருத்தும் சொல்லிவிட்டேன். லே அவுட் நன்றாக உள்ளது. இதிலே உள்ளடக்கம், தலையங்கம் மாதிரிக் கருத்துகள்னு போட்டால் ஓர் மின் இதழுக்கான முழுப் பதிப்பாக ஆகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  படிப்போரின் யோசனைகள் மின்னிதழை மேம்படுத்த உதவும்.  

      நீக்கு
    2. நன்றி. படிப்போரின் யோசனைகள் மின்னிதழை மேம்படுத்த உதவும்.

      நீக்கு
    3. பின்னூட்டத்துக்கும் கட் அன்ட் பேஸ்ட்ஆ?

      நீக்கு
  12. முதல் இரண்டு படங்கள் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய அழகு கொஞ்சம் படங்களும், அதற்கேற்ற வாக்கியங்களும் நன்றாக உள்ளது. தலைக்காவேரி தங்கள் புண்ணியத்தில் தரிசித்து கொண்டேன். இங்கு பெங்களூர் வந்து பல வருடங்களாயினும் இங்கு செல்லும் சந்தர்ப்பங்கள் இதுவரை அமையவில்லை.

    வானத்திலிருந்து இறங்கிய தேவதையை இறுதிவரை பார்க்கவே முடியவில்லையே.. சரி.. வீடியோ என்ற இடத்தில் பார்க்கலாமென சென்ற போது பானுமதி சகோதரியின் "ஏமாறச் சொன்னது நானோ" என்ற பாட்டு மட்டும் கேட்டது. ஹா. ஹா. ஹா. அப்போதுதான் புரிந்து கொண்டேன். "தேவதை இன்னமும் வானத்திலிருந்து இறங்கும் முயற்சியில் மட்டும் இருக்கிறாள் என்பதை.":)

    அந்த மரம் டைனோசர் மாதிரி எனக்கு தெரிகிறது. அனைத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. 'மழையே முத்து மழையே ...' . குளிரட்டும் பூமி.
    தலைக் காவேரி கோவிலா? நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. படங்கள் பையர் எடுத்து போல் உள்ளது. அதனால் தான் காமெரா வைத்திருப்பவரும் போட்டோக்குள் வந்து விட்டார். மேலும் இரண்டு படங்கள் தவிர அனைத்தும் போஸ் கொடுக்காமல் இயற்கையாகப் பிடிக்கப்பட்டுள்ளன.  போட்டோ பிடிக்கக்கூடாது என்ற போர்டையும் சேர்த்து போட்டோ பிடித்திருக்கிறீர்கள்!

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! அந்த போர்டை சேர்த்துப் படம் எடுக்கலாம் போலிருக்கு!

      நீக்கு
  17. படங்கள் அழகாகவும், அருமையாகவும் உள்ளன.!

    பதிலளிநீக்கு
  18. மின் நிலா ஜொலிக்கிறது. வாழ்க!வளர்க!

    பதிலளிநீக்கு
  19. நல்ல செருப்பா ஒரு ஜோடி எடுப்பா....மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    மின் நிலாவும் அழகான அட்டைப் படங்களுடன் நன்றாக உள்ளது. ஒவ்வொரு நாளும் விடுபட்ட பகுதிகளை அனைவரும் படிக்க உதவும் என்பதோடு, புதுமையாகவும் இருக்கிறது. முதல் பகுதியில் அரட்டையில் ஆசிரியர்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் சிந்தனைக்கு விருந்து. ரசித்தேன். மின் நிலாவுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதரவுக்கு நன்றி. அந்தத் தளத்தில் இந்த நேரம் வரை, நூறு பேர் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறார்கள். நன்றி!

      நீக்கு
  21. அனைவருக்கும் ஞாயிரு காலை வணக்கங்கள். புகைப் படங்கள் ஏ க்லாஸ். மழையும், இயற்கையும் கை கோர்த்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றன. அப்படியே போய் நனையலாம் போல் இருக்கின்றது.
    ஆம். அந்த கடைசிப் புகைப் படத்தில் உள்ள மரம் எனக்கு யானையை நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  22. மின் நிலா மிக அழகாக வடிவெடுத்திருக்கின்றது. அந்த இலையுடன் கூடிய மல்லிச் செடி கிட்டச் சென்று தொட்டு விடும் தூரம்தான் போல் இருக்கின்றது. இனி முன்னேற்றம்தான். நான் இதை என் நண்பர்களுக்குக் கூறி பார்க்கச் சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம், நண்பர்களுக்கு சொல்லுங்கள். அதற்காகத்தான் சுட்டி கொடுத்துள்ளோம். வாட்ஸ் அப் மூலமாக அனுப்பியிருக்கும் சுட்டியையும் உங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பலாம்.

      நீக்கு
  23. படங்கள் அனைத்தும் நன்று.

    மின் நிலா - தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
    மின்நிலா மிக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. கடைசி படத்தில் எனக்கு யானையும் அதன் முதுகு மேல் மயிலும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானையும், மயிலும்! புது காம்பினேஷனா இருக்கே!

      நீக்கு
  26. இப்போதான் மின்நிலா மின்னூலைப் பார்த்தேன், விரைந்து படித்தேன்.

    1. அரட்டை - நல்ல பகுதி. வெறும்ன எ.பி. இடுகைகளைக் கோர்ப்பதற்குப் பதிலாக.
    2. கவர்ந்த பின்னூட்டங்கள் அல்லது முக்கிய பின்னூட்டங்கள் - இதைத் தவிர்க்கலாம். இல்லாவிடில், யார் எழுதியது என்று சொல்லாமல் பின்னூட்டங்களை மட்டும் போடலாம் (கண்டண்ட் உள்ளவை மட்டும்). இல்லைனா, சிலர் பெயர் மட்டும் வருவது அவ்வளவாக நன்றாக இருக்காது என்று தோன்றுகிறது.
    3. மின்னூலின் முதல் படமும் (மலர்), சில இடுகைகளுக்கு முன் இருக்கும் படமும் கவரவில்லை. இதற்கு நீங்க தேர்ந்தெடுத்து படங்கள் சேர்க்கலாம். அல்லது வாசகர்களிடமிருந்தே படங்கள் வரவைத்து அதனைப் போடலாம் (காபிரைட்டைத் தவிர்க்க. எப்போ உங்களுக்கு போரடிக்குது என்று தோன்றுகிறதோ அப்போ இருக்கவே இருக்கு அனுஷ்கா, பாவனா, தமன்னா போன்றவர்கள்)
    4. ஒரு இடுகைக்கும் அடுத்த இடுகைக்கும் இடையில் ஒரு ப்ரேக் (Clear marking) இருக்கணும்.

    பொதுவா இடாலிக் ஃபாண்ட் உபயோகிக்க வேண்டாம். படிப்பது கஷ்டம்.


    போகப்போக, இது நல்ல புத்தக வடிவம் பெறும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான ஆலோசனைகளுக்கு நன்றி. எல்லாவற்றையும் கவனத்தில் கொள்கிறோம்.

      நீக்கு
    2. நீங்க சொன்னாப்போல் எதுவும் இல்லையே நெ.த.நன்றாகவே உள்ளன அனைத்தும். இடாலிக் ஃபான்டும் இல்லை.

      நீக்கு
    3. என்னா கீசா மேடம்....இப்பூடி சொல்லிப்புட்டீங்கோ... 'புதன் கேள்வி' க்கு முந்தைய படம், கேவாபோ வுக்கு முந்தைய படம் - blurredஆக இருக்குதுங்கோ. அப்பூறம் கனவுகள் முன்னுரை, வாணி ஜெயராம் பற்றிய பகுதிகள் இடாலிக் ஃபாண்ட்.

      நல்லா இருக்கு என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் நாங்களும் கீசா மேடம் மாதிரி ஆகலாம்னு நினைத்தால் விட மாட்டேன்றீங்களே (இன்றைய கசகசா தோசை நல்லா இருக்கு. இதில் கசகசாவுக்குப் பதில் பூசணிக்காய் விதையைச் சுற்றியிருப்பவற்றை மட்டும் போட்டால் இன்னும் ருசியாக இருக்கும். நாங்க கான்பூர்ல இருந்தபோது இப்படிச் செய்யச் சொல்லி எனக்குத் தெரிந்த பஞ்சாபிப் பெண் சொன்னார்... ஹா ஹா ஹா)

      நீக்கு
    4. முடிஞ்சா கண்ணாடியை மாத்திப் பார்க்கவும்.

      நீக்கு
    5. அந்த ஒரிகாமி(?)ப் படமும், அதுக்கு முந்தைய அடுக்கு மல்லிப் படமும் அருமையா வந்திருக்கு! உங்கள் கண்களில் ஏதோ கோளாறு. லக்ஷம் தரம் பார்த்துட்டேன்.

      நீக்கு
    6. பெரியவங்க சொன்னா, அது பெருமாளே சொன்ன மாதிரி. அதனால் நான் கப் சிப்.

      நீக்கு
  27. படங்கள் அனைத்தும் நன்று. நான் சென்று வந்த இடம். போக நந்தீஸ்வரர் ஆலயம் அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!