வெள்ளி, 15 மே, 2020

வெள்ளி வீடியோ  :  அடி வா வா எந்தன் தேவி சொல்லப் போறேன் ஒரு சேதி

​​போன வாரம் வியாழன் அரட்டையில் இசையமைப்பாளர் தேவா பற்றி பேச்சு வந்ததுமே முடிவு பண்ணி விட்டேன்.  அடுத்த வாரம் தேவா இசை அமைத்த பாடல்தான் என்று.


ஏற்கெனவே "மாட்டுக்கார மன்னாரு" என்கிற, 'அப்படி ஒரு படம் வந்ததா?' என்று கேட்குமளவிலான ஒரு படத்துக்கு தேவா இசை அமைத்திருந்தாலும் இந்தப் படம்தான் அவருக்குப் பெயர் வாங்கித் தந்தது.  ஏற்கெனவே பக்திப்பாடல் ஆல்பம், விளம்பரங்கள் செய்திருக்கிறாராம்.  இந்தப் பாடல் கேட்டபோது யார் இந்த இசை அமைப்பாளர் என்று திரும்பிப் பார்க்க வைத்தார் - என்னை!




இந்தப் பாடலின் வெற்றிக்கு பெரும் காரணமாக நான் கருதுவது எஸ்பிபி.  சரணங்களில் குழைவான குரலில் சும்மா புகுந்து விளையாடி இருப்பார்.  சுசீலாம்மாவையும் குறைத்துச் சொல்ல முடியாது.

ஆரம்ப இசை முதலே இது ஒரு கிராமியக் காதல் பாடலாக சிறக்கத் தொடங்கி விடும்.  என் வெள்ளி பாடல் லிஸ்ட்டில் ஏற்கெனவே இருந்த இந்தப் பாடலை இந்த வாரம் வெளியிடுவது என்று சென்ற வியாழன் தீர்மானித்தேன்.



1989 ஆம் ஆண்டு வெளியான ராமராஜன்-சீதா படம் மனசுக்கேத்த மகாராஜா.   இதற்கு கதை, திரைக்கதை எழுதியவர் பின்னாட்களில் இயக்குநராய் புகழ்பெற்ள அகத்தியன்.  ஆனால் கருணாநிதி சாந்தாராம் என்கிற பெயரில் எழுதி இருக்கிறார்.  இயக்கத்துக்காக முதல் தேசிய விருது பெற்ற முதல் தமிழ் இயக்குநர் அகத்தியன் என்பது குறிப்பிடத் தக்கது அல்லவா?



இந்தப்படத்தில் இன்னும் இரண்டு சுமாரான பாடல்கள் உண்டு.  எஸ்பிபி சித்ரா பாடிய 'முகமொரு நிலா விழியிரு நிலா அடடா மூன்று நிலா' மற்றும் மனோ ஜானகி பாடிய ஆறெங்கும்தானுறங்க ஆறுகடல் நீர் உறங்க ஸ்ரீரங்கம் தானுறங்க திருவானைக்கா உறங்க நானுறங்க வழியில்லையே ராசா' .  இந்தப் பாடலின் பல்லவி மட்டும் எனக்குப் பிடிக்கும்.

பாடலுக்குப் போவாமா?  புலமைப்பித்தன் பாடல்.

நான் ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே அட 
அந்தி சாயும் நேரத்திலே தினம்
காத்திருந்து காத்திருந்து 
மனசு கனலாப் போச்சு ஆசை மச்சான்....

நான் ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே அடி 
அந்தி சாயும் நேரத்திலே தினம்
காத்திருந்து காத்திருந்து 
மனசு கனலாப் போச்சு வாடிபுள்ள..

பன்னீர்த் தெளிக்கும் மேகம் அதுதான்
பருவப்பெண்ணின் கூந்தலோ
கண்ணே உனது கைகள் ரெண்டும் நானாடும் ஊஞ்சலோ..

கண்ணால் பழகி நீயும்தானே
கன்னி மனச மாத்தறே
பொன்னா எனது தேகமென்னு 
உரசி உரசிப் பார்க்கிறே

இது பூவானது நேத்து
இதை உன் கைகளில் போட்டு 
எங்கெங்கு நான் பார்தாலுமே 
அங்கங்கு உன் முகம்தான்..

சும்மாக் கிடந்த நெஞ்சுக்குள்ள 
சூடு கொஞ்சம் ஏறுது
தூங்கும்போதும் கண்ணுக்குள்ள
உன் முகம்தான் தோணுது

மெத்தை விரிச்சுப் போடவான்னு 
கேள்வி எதுக்குக் கேட்கிறே?
மெல்ல மெல்ல அணைக்கும்போது 
ஒதுங்கத்தானே பார்க்கிறேன்
அடி வா வா எந்தன் தேவி 
சொல்லப் போறேன் ஒரு சேதி
கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு பஞ்சணைதான்  இடுவேன்.








87 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை.. வாங்க...

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      ராமராஜன் படப் பாடல்கள் 80% நன்றாக இருக்கும். தேவா
      இசை அமைப்பா!!
      நான் எல்லாமே இளைய ராஜா என்று நினைத்தேன்.

      இதைக் கேட்டதும், ''ஆத்துமேட்டுல ஒரு பாட்டுக் கேக்குது''தான்
      நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    3. இனிய வணக்கம் வல்லிம்மா... ஆமாம்.. அப்போ ராமராஜன், விஜயகாந்த், மோகன் படங்களில் எல்லாம் பாடல்கள் நன்றாய் அமைந்து விடும்.

      நீங்கள் சொல்லி இருக்கும் பாட்டு இளையராஜா இசையில் மலேசியா-ஜானகி பாடிய கிராமத்து அத்தியாயம் பாடல்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி கில்லர் ஜி. நன்றி.

      நீக்கு
  3. பாலசுப்ரமணியத்தின் குரலில் அந்த கதா நாயகனும் ஒன்றி விடுவது போல
    ஒரு தோற்றம் வருவது போல அவர் பாடல்கள் இருக்கும். மிக மிக இனிமையான பாடல். சீதா தான் எத்தனை அழகு.
    நல்ல பாட்டுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா... நல்ல ட்யூன்களைத் தன் குரலால் மேலும் பூஸ்ட் பண்ணி சிறப்பாக்குவார் பாலு.

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இனிமையான பாடல். கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வெங்கட்..

      ரசனைக்கு நன்றி.

      நீக்கு
  5. கிராமராஜனின் இந்தப் பாடல் கேட்ட நினைவு இல்லை.

    பன்னீர் தெளிக்கும் கூந்தலோ - நான் இருக்கற இடத்துக்குப் பக்கத்துலயா களிச்சுட்டு வந்து தலை வரிக்கணும். சே.. மேலயும் பேப்பர்லயும் தண்ணீர் தெளிக்குது பார்.

    தூங்கும்போது கண்ணுக்குள்ள உன் முகம்தான் தெரியுது - ஐயோ.. காலைலயே ஏதானும் அங்க போ அதை வாங்கி வா, இதை வாங்கிவான்னு வேலை வச்சிருப்பாளே

    மெல்ல மெல்ல அணைக்கும்போது ஒதுங்கத்தானா பார்க்கிற (உங்க பாடல் வரி தட்டச்சு தவறுன்னு நினைக்கறேன்) - அடச் சே. உங்களுக்கு வேற வேலையில்லை. வளந்த பசங்க வீட்ல இருக்காங்கன்னு லஜ்ஜையில்லாமல்

    இப்படி பிற்காலத்தில் மனம் மாறிவிட என்ன காரணம்? சலிப்பால்லது வேறு ஏதேனுமா?



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா... இந்தப் பாடல் ஃபேமஸ்தான் நெல்லை.

      தட்டச்சுப் பிழை? செக் செய்யணும்!

      நீக்கு
    2. பொறுப்புத் தான் காரணம் நெல்லைத் தமிழரே! பொதுவாக ஆண் மனம் எப்போவும் அலை பாயும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் பொறுப்போடு அந்த அந்த நேரத்துக்குத் தான் இது இது செய்யணும்னு கட்டுப்பாடுகளோடு இருப்பது பெண் மட்டுமே! மாறுபட்ட பெண்கள் இருக்கலாம். அது வேறே! இது நீங்க கேட்டதுக்கு பதில்! ஏதோ என்னாலானது! :))))

      நீக்கு
    3. //ஆண் மனம் எப்போவும் அலை பாயும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் பொறுப்போடு அந்த அந்த நேரத்துக்குத் தான் இது இது செய்யணும்னு கட்டுப்பாடுகளோடு இருப்பது பெண் மட்டுமே! // - இது உண்மையும்கூட. நான் கூட விளையாட்டுக்குச் சொல்வேன், பசங்களுக்கு ஆயிரம் எங்கேஜ்மெண்ட்ஸ், பெண்களுக்கு பாடப்புத்தகம்தான். அதை ஒழுங்கா படிக்கலைனா வீட்டு வேலை செய்யச் சொல்லிடுவாங்கன்னு, பாடப்புத்தகத்தை மட்டும் படித்து நல்லா ஸ்கோர் பண்ணிடறாங்க. ஆனா பசங்க எல்லாத்துலயும் நுழையறதுனால, படிப்புல பெண்கள் அளவுக்கு ஸ்கோர் பண்ணறதில்லைனு.

      I think, same age groupல, பெண்கள், ஆண்களைவிட ஸ்மார்ட்னு. அதை 'அனுபவத்'தால் ஈடுகட்டத்தான் திருமணத்தின்போது வயது வித்தியாசம் வச்சிருந்தாங்களா?

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா. வணக்கம், நல்வரவு.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவும் வாழ்த்துகளும். அனைவரையும் இந்தக் கொடிய நோயின் பிடியிலிருந்து விடுவிக்க விடிவு காலம் பிறக்க இறைவனுக்குப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம் அனைவரும். வாங்க கீதா அக்கா... நல்வரவும், வணக்கமும்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பாடலைப் பற்றி, இசையமைத்திருப்பவர் பற்றி இவ்வளவு விபரங்கள் சேகரித்து தந்திருப்பது பிரமிக்க வைக்கிறது. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். ராமராஜனின் எத்தனையோ படப் பாடல்களை கேட்டு ரசித்திருந்தாலும், இந்தப் பாடல் கேட்ட நினைவில்லை. படமும் கேள்விப்பட்டதில்லை.

    எஸ். பி. பி குரலுக்கு கேட்கவா வேண்டும். அவர் பாடினால் அந்த பாட்டு ரசிக்கும்படியாக ஆகி விடும். கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  தேவா பற்றிய விவரங்கள் முன்னரே சொல்லி இருக்கிறேனே...  இந்தப் பாடல் அப்போது புகழ் பெற்ற பாடல்தான்.
      நன்றி அக்கா.

      நீக்கு
  9. ராமராஜன், சீதா ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் விஷயமே இன்னிக்குத் தான் தெரியும். நான் பார்த்த ஒரே ராமராஜன் படம் "கரகாட்டக்காரன்" தொலைக்காட்சி தயவில். மற்றபடி சீதா அருமையான நடிகை என்பது தெரியும். ஒரு சில படங்களின் ட்ரெயிலர்களில் பார்த்திருக்கேன். ஆனால் இப்போ ஏதோ ஒரு தொலைக்காட்சித் தொடரில் அவரும் வருவதாக அதன் முன்னோட்டங்களில் காட்டறாங்க. எனக்கு சீதா தான் அவர் என்பதே நம்பமுடியவில்லை. ஒண்ணு அவர் மாறி இருக்கணும், அல்லது கொடூரமான மேக்கப்பாக இருக்கணும். கண்களை எல்லாம் கன்னாபின்னாவென விரித்துக்கொண்டு கோரமான முகபாவத்துடன்! பார்க்கப் பாவமாக இருந்தது! எப்படி இருந்த சீதா! இப்படி ஆகிவிட்டாரே என! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமராஜன் சீதா ஒரே படத்தில்தான் நடித்திருக்கிறார்கள் என்று நினைவு.  சீரியல்களில் எல்லோருமே வில்லிகள்தானே! சீதா உ மு த யிலும் அருமையாய் நடித்திருப்பார். அழகாயும் இருப்பார்.

      நீக்கு
  10. மறந்துட்டேனே, அந்தத் தொடர் "சித்தி 2" தொடராம்! சரிதான். அப்போ ராதிகா தவிர்த்து மத்தவங்க எல்லாம் இப்படித் தான் என நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சீரியலே பார்பபதிலை என்பதால் தெரியாது!  நடிப்புக்கு சவால் என்று நடிக்க ஒத்துக்கொண்டாரோ என்னவோ!!!

      நீக்கு
  11. அந்த "ஸ்ரீரங்கம் தானுறங்க" வரிகள் எனக்குத் தாலாட்டுப்பாடலில் வரும் "ஆறிரண்டும் காவேரி, அதன் நடுவே ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் தானாடி, திருப்பாற்கடலாடி, மதுரைக்கடலாடி, மாமாங்கம் தானாடி தவமாய் தவமிருந்து நீ வந்து பிறந்தாயே!" என்னும் வரிகளை நினைவூட்டியது. இதில் திருவானைக்கா வராது. மதுரை வரும். ::)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாக் கவிஞர்களும்  இலக்கியங்களிலிருந்து எடுத்தாள்வது சகஜம்தானே?  அந்தப் பாடல்கள் இரண்டுக்கும் கூட சுட்டி கொடுத்திருக்கேன்.  விரும்பினால் பார்க்கலாம் / கேட்கலாம்.

      நீக்கு
  12. காலை வணக்கம். என்ன இன்று காலங்கார்த்தால களைகட்டி விட்டது?

    பதிலளிநீக்கு
  13. ..சுசீலாம்மாவையும் குறைத்துச் சொல்ல முடியாது.//

    முடியும். முடியும். யார் கேக்கப்போறா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் இப்போது பாடுவது குறித்து சொல்கிறீர்களா...  நான்அப்போதைய குறலை சொல்கிறேன் ஏகாந்தன் ஸார்!

      நீக்கு
  14. இப்போது அவர் பாடுகிறாரா எனத் தெரியாது. அப்போது பாடியதைத்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் குறைத்துச் சொன்னால்தான் என்ன, சுசீலாவுக்குப் பரிந்துகொண்டு யார் வரப்போகிறார்கள்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமாவில் அவர் இப்போது பாடுவவதில்லை.  ஒருமுறை அவர் மேடையில் பாடியது கேட்கக் கஷ்டமாக இருந்தது.

      நீக்கு
    2. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க ஏகாந்தன் சார்... பொதுவா பி.சுசீலா குரல், எல்லோரும் கேட்கக்கூடிய பாடல்களுக்கும், எஸ்.ஜானகி அவர்கள் குரல் கொஞ்சம் இளையவர்களுக்கும் (செக்ஸியான என்பதைத் தவிர்க்கிறேன். பி.சுசீலா அவர்கள், தண்ணீர் கேட்ட பெண்ணே தாகம் தணிஞ்சதா என்பது போன்ற பாடல்களைப் பாடவே மாட்டார். என்ன பாடல்னு புரியுதா?). எல்.ஆர்.ஈ அவர்கள் பெரும்பாலும் அந்தரகப் பாடல்கள் பாடினமாதிரியே ஒரு தோற்றம்.

      இரவின் மடியில் என்று இரவில் கேட்கும் பாடல்களை பி.சுசீலா அவர்கள்தான் பெரும்பாலும் ஆக்கிரமிப்பார்.

      நீக்கு
    3. இளையராஜா மீட்டுக்கொணர்ந்த ஜானகியின் ‘இளம்’ குரலில் ஒரு ஜெனரேஷனே மூழ்கிப்போயிருக்கையில் அவர்களுக்கு சுசீலாவின் அருமை, பெருமை எங்கே தெரியப்போகிறது என்கிற ஆதங்கத்தில்தான் மேற்கூறிய கமெண்ட்! மற்றபடி at anytime I would prefer Suseela's voice. சுசீலாவின் குரலில் தான் தமிழையே அனுபவித்தேன் எனவும் சொல்லலாம். சில பழையபாடல்கள் - பார்த்த ஞாபகம் இல்லையோ.., கங்கைக்கரைத் தோட்டம்.., கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ., அழைக்காதே.. நினைக்காதே.. அவையினிலே எனையே ராஜா..!, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு.. - என்றெல்லாம் அவர்குரலில் ரசித்த காலம். யூ-ட்யூபின் கைங்கர்யத்தில் அதை வெகுவாக மீட்டெடுக்கமுடிகிறது என்பதில் ஒரு நிம்மதி. ஹைடெக் வாழ்க!

      நீக்கு
  15. //மெல்ல மெல்ல அணைக்கும்போது
    ஒதுங்கத்தானே பார்க்கிறேன் //

    'ஒதுங்கத்தானே பார்க்கிறே?' -- என்று இருக்கணுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வரிகள் பெண்குரலில் ஒலிப்பதால் பொருத்தமே...

      நீக்கு

  16. //கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு பஞ்சணைதான் இடுவேன்.//

    நெஞ்சில் தானே, வெறும் வாய்ப்பந்தல் வீரர் தான் போலிருக்கு..

    புலமைப்பித்தன் மேல் குறையில்லை. அருமையான பாடலாசிரியர்.

    'ப்த்தம் புதிய புத்தகம் நீ.." இப்பொழுதும் காதுகளில் ஒலிக்கிறதே! எம்ஜிஆர்ன்னா ஸ்பெஷல் தான். அவரும் பாடல் வரிகளில், இசையில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வார். அதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும் எல்லா விஷயங்களிலும் அவருக்கு, அவருக்கே தனித்துவமாய் வாய்த்த கான்ஸ்ட்ரேஷன் இருந்தது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவருக்கு இது போதும் என்று முடிவு செய்துவிட்டார் போலும். சந்தத்துக்கும் சரியாப் பொருந்தலையோ என்றும் தோன்றியது!

      நீக்கு
  17. நேயர் விருப்பம்:

    நித்திரையில் வந்து
    நெஞ்சில் இடம் கொண்ட
    உத்தமன் யாரோடி தோழி?

    -- சுத்தானந்த பாரதி அவர்களின் இந்தப் பாடலை எந்தத் திரைப்படத்திலாவது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்களா?.. படுத்திருந்தால் ஒலிபரப்புங்களேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தானந்த பாரதி... எங்கள் தாத்தா!

      நீங்கள் போடும் புதிரைப் பார்த்தால் விடையை அறிவீர்கள் போல.... !

      நீக்கு
    2. ராமு படத்தில் ஒரு இரண்டு வரி மட்டும் கே.ஆர் விஜயா பாடுவது போல் வரும்.

      நீக்கு
    3. ஆமாம். ஆனால் ஜீவி ஸார் அந்த வரிகளைத் தழுவி இயற்றப்பட்ட பாடல் ஏதுமிருந்தால் அதைக் கேட்கிறார். "உன்னை நான் பார்க்கும்போது - யான் நோக்குங்கால்" போல..

      நீக்கு
    4. நிலவே என்னிடம் மயங்காதே! பாடலுக்கு முன் இரண்டு வரிகள் வரும்.

      நீக்கு
    5. @ஸ்ரீராம், நிஜம்மாவே சுத்தாநந்த பாரதியார் உங்க தாத்தாவா? என்ன ஆச்சரியம்? என்ன ஆச்சரியம்? அப்போ உங்களுக்கு மரபூர் சந்திரசேகரனைத் தெரியுமா? "ப்ளாஸ்டிக் சந்திரா" என அழைப்போம் சென்னையில் செனடாஃப் சாலையில் கூட்டுக்குடும்பமாக இருந்தார். இப்போவும் அங்கே தான் இருப்பார் என நினைக்கிறேன். நான் சுத்தாநந்த பாரதியைப் பற்றிப் பதிவு ஒன்றில் எழுதினதைப் பார்த்துட்டு என்னைத் தொடர்பு கொண்டார். 2006 ஆம் வருடம், நான் இணையத்துக்கு வந்த புதுசு. முதல் முதல் என்னைத் தொடர்பு கொண்டவர் அவரும் டோண்டு சாரும் தான்! ரொம்ப பயம்மா இருக்கும்! பதில் எல்லாம் கொடுக்க.

      நீக்கு
    6. சந்திரா தான் சுத்தானந்த பாரதியாரின் பெண் வழிப் பேரன் (அண்ணா பெண்) என்று சொல்வார். நான் சுத்தானந்த பாரதியாரை நிறையப் பார்த்திருக்கேன். காவி ஜிப்பாவுக்குள் இருந்து ஆரஞ்சு மிட்டாய்களை எடுத்துக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லுவார். இது ஒன்று தான் நன்றாக நினைவு! (அப்போவே தீனிப் பண்டாரம் தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) பாட்டெல்லாம் பாடுவார்.. எங்களையும் கூடப் பாடச் சொல்லுவார். அப்போது அவர் பசுமலை ஆசிரமத்தில் இருந்தார். அங்கிருந்து நடந்தே மதுரை டிவிஎஸ் நகரில் இருந்த எங்க மாமா வீட்டுக்கு வருவார். மாமாவின் சித்தப்பா (என் தாத்தாவின் தம்பி) சுதந்திரப் போராட்ட வீரர். சங்கு நாராயணன் என்னும் பெயர். தியாகிகள் ஓய்வூதியம் அவரைத் தேடி வந்தது. சுதந்திரச் சங்கு பத்திரிகையின் மதுரை விநியோகஸ்தர்! அப்போது தான் சுத்தானந்தரின் அறிமுகம் ஆகி இருந்திருக்கிறது. அடிக்கடி அவரைப் பார்க்க வருவார் சுத்தானந்தர். அப்போதெல்லாம் அவர் அருமை தெரியாது. அதிகம் போனால் எனக்குப் பத்துப் பனிரண்டு வயதுக்குள் இருக்கும். என் அம்மா எப்போவும் "அருள் புரிவாய் கருணைக்கடலே!" பாடலை அதிகம் பாடுவார். ஆனால் அது சுத்தானந்த பாரதியின் பாடல்னு எனக்குத் தெரியும்போது பதினைந்து வயசுக்கு மேல் ஆகிவிட்டது. ரொம்ப அசடாக நல்ல நல்ல வாய்ப்புக்களை எல்லாம் அருமை தெரியாமல் விட்டுட்டேன்! இப்போ நினைச்சாலும் மனதை வலிக்கும்.

      நீக்கு
    7. சுதந்திரச் சங்கு பத்திரிகையின் விநியோகத்தின் போது தான் சுத்தானந்தரின் அறிமுகம் ஆகி இருக்கிறது. என்று வந்திருக்கணும்.

      நீக்கு
    8. சுத்தானந்தரின் நேரடி சீடர் ஒருத்தர் மெலட்டூரைச் சேர்ந்தவர் நான் பார்க்கையிலேயே 80 வயது ஆகி விட்டிருந்தது. அம்பத்தூரில் "களஞ்சியம்" என்னும் பெயரில் வாடகைப் புத்தக நூலகம் வைத்திருந்தார். நான் அங்கே புத்தகம் எடுக்கப் போகும்போது பழக்கம். பல முக்கியப் புத்தகங்களை எனக்குக் குறிப்புகள் எடுக்கக் கொடுத்து உதவி இருக்கிறார். சுத்தானந்தரோடு அவர் அனுபவங்களைப் பேட்டி எடுத்து ஆடியோவை இணைத்து மின் தமிழுக்காகக் கொடுத்திருந்தேன். ஆனால் சந்திராவுக்கு அது என்னமோ அவ்வளவு பிடிக்கவில்லை. ஆகவே அந்தப் பேட்டியை வெளியிட முடியவில்லை. சத்குரு தியாகராஜர் பயன்படுத்திய வீணையோ அல்லது சுருதிப்பெட்டியோ சந்திராவின் வீட்டில் பூஜை அறையில் வைத்திருந்தார்கள். காட்டினார். ஒவ்வொரு விஜயதசமிக்கும், பகுள பஞ்சமிக்கும் விசேஷ ஆராதனைகள் உண்டு என்றும் சொல்லி இருந்தார். அம்பத்தூர்க் கார மாமா அது சுத்தானந்தரிடம் தான் இருந்தது என்பார். 2006 ஆம் ஆண்டில் இருந்து 2008-2009 ஆம் ஆண்டு வரையிலும் இது ஓடிக் கொண்டிருந்தது. பின்னர் அந்த மாமாவை அவர் பிள்ளை இங்கே அம்பத்தூரில் இருந்தது போதும்னு வீட்டைக் காலி செய்துகொண்டு பெரம்பூர் அழைத்துச் சென்றதும் தொடர்பே இல்லை. அவர் பெயர் மனதில் இருக்கு! வெளியே வரலை. வந்ததும் சொல்றேன்

      நீக்கு
    9. சுத்தானந்த பாரதி பெயரைக் கண்டதும் என்னையும் அறியாமல் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு விட்டேன். :( கட்டுப்பாட்டில் இருக்கணும்னு நினைச்சாலும் இம்மாதிரி விஷயங்களில் மறந்துடறேன். :( மன்னியுங்கள் ஸ்ரீராம்!

      நீக்கு
    10. என்ன இது கீதா அக்கா.. இதெல்லாம்தானே சுவாரஸ்யம்..

      நீக்கு
    11. சுத்தானந்த பாரதிபற்றி நீங்கள் எழுதியிக்கும் தகவல்கள் படிக்க நன்றாக இருக்கிறது. இதெல்லாம் புதிய விஷயங்களாயிற்றே. பகிர்ந்துகொண்டது அறியாத பலருக்கு நல்லதுதானே.
      எல்லோரும் இதைச் சொல்லக்கூடாது, அதைப் பகிரக்கூடாதெனக் ‘கட்டுப்பாட்டில்’ இருந்தால், அப்புறம் எங்கள் ப்ளாக் என்னாவது!

      நீக்கு
    12. நன்றி ஸ்ரீராம், நன்றி ஏகாந்தன். ஆனால் நான் இவற்றை எல்லாம் அடிக்கடி குழுமங்களில், என்னோட சில பதிவுகளில் பகிர்ந்திருக்கேன். இங்கே இன்று வரை சுத்தானந்தர் பற்றிப் பேச்சு வரலை என்பதால் சொல்லலை. இல்லை என்றால் நான் என்னையே மறந்துடுவேன். நம்ம ரேவதிக்கும் அவரைத் தெரியும். எனக்கு இப்போவும் காவி வேஷ்டி கட்டிக் கொண்டு நீளமான காவி ஜிப்பாவுடன் தாடி, மீசையுடன் தலையிலும் காவித்துணி (?) ஆமாம்னு நினைக்கிறேன், கட்டிக்கொண்டு வீராவேசமாகக் கண்கள் கண்ணீரைப் பொழிய அவர் பாடும் தேசபக்திப்பாடல்கள், எங்களை எல்லாம் (நாங்கள் என்பது என் சகோதரர்கள் தவிர்த்துக் கடைசிச் சித்தி, பெரியம்மா பிள்ளை, பெண் ஆகியோர், மாமா பிள்ளைகள் எல்லாம் சின்னக் குழந்தைகள்) அழைத்துத் திரும்பப் பாடச் சொல்லும் காட்சி நினைவில் வருகிறது. தாய்மொழி தெலுங்கு. ஆனால் அவர் பாடியவையோ தமிழில் பாடல்கள். தமிழுக்கு இவர் செய்திருக்கும் தொண்டைப் போல் இன்று யாரும் செய்திருப்பார்களா சந்தேகமே! பல பாடல்களை நாங்கள் ஆரம்பப்பள்ளிகளிலும், பின்னர் நடுத்தரப் பள்ளியில் படிக்கையிலும் பாடி இருக்கோம். ஆனால் அவரைப் பார்த்திருக்கோம், பேசி இருக்கோம் என்றெல்லாம் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத வயது! பின்னர் தான் புரிந்தது எப்படிப் பட்ட வாய்ப்புக் கிடைத்திருந்தும் தவற விட்டிருக்கோம் என! பின்னர் எங்கள் தாத்தா இறந்ததும் குடும்பம் சென்னைக்குக் குடி பெயர நானும் திருமணம் ஆகிப் போய்விட இதெல்லாம் மறந்தே போனது. அவர் இறந்த சமயம் நாங்க ஜாம்நகரில் இருந்தோம். தினசரிப் பத்திரிகையில் சின்னதாகச் செய்தி போட்டிருந்த நினைவு.

      நீக்கு
    13. நல்ல தகவல்கள் பின்னூட்டம் வாயிலாக. இவைகள்தாம் எ.பியின்மீதான கூடுதல் ஆர்வத்திற்குக் காரணம்.

      சுத்தானந்த பாரதி பற்றிப் படித்திருக்கிறேன். சட் என நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. என்னிடமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைக் கொடுத்துவிட்டதனால் ரெஃபர் பண்ணவும் இயலவில்லை.

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'ஆறிரண்டும் காவேரி' - எத்தனை வருடங்களுக்கு முன்னால் (அனேகமா என்னை மடியில் வைத்துத் தாலாட்டியிருப்பார்கள்) என் அம்மா மற்றும் பெரியம்மா பாடிக் கேட்டிருக்கிறேன். முதலிரண்டு வரிகள் மட்டும்தான் நினைவில் இருக்கிறது. (சும்மா நீங்க மதுரை அது இது என்று உங்க ஊர்ப்பேரைக் கொண்டுவந்திருக்கிறீர்களோ என்று சந்தேகம் ஹா ஹா. வைணவப் பாடல் போலத்தானே ஆரம்பிக்குது). அந்தப்பாடலைக் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி... நினைவை எங்கேயோ இழுத்துக்கொண்டு சென்றுவிட்டது அது.

      நான் என் குழந்தைகளுக்குப் பாடியது, 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' மற்றும் இன்னொரு பாரதியார் பாடல். அதை விட்டால் பிரபந்தத்தில் வரும் 'மாணிக்கம் கட்டி', 'மன்னுபுகழ் கெளசலைதன்' மற்றும் இன்னொரு பாடல்.

      நீக்கு
  18. இனிமையான பாடல் கேட்டேன். தேவா இசை என்று இப்போது தெரிந்து கொண்டேன்.
    படம் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படமெல்லாம் பார்க்கவில்லை கோமதி அக்கா. நன்றி, பாடலை ரசித்ததற்கு.

      நீக்கு
  19. //சுத்தானந்த பாரதி... எங்கள் தாத்தா!.. //

    அப்படியா, ஸ்ரீராம்! கேட்ட மாத்திரத்தில் மனம் சிலிர்க்கிறது. என்ன புண்ணிய ஆத்மா? எவ்வளவு பாக்யம் செய்த குடும்பப் பாரம்பரியம்! இது நான் அறியேன்.. அறிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

    இன்று காலையில் வழக்கம் போல திருமதி ரேவதி சங்கரன் அவர்களின் பிள்ளையார் பெட்டி நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்த பொழுது அவர் இந்தப் பாடலைக் குறிப்பிட்டதிலிருந்து மனம் ஒரு நிலை கொள்ளாது இந்த பாடலைச் சுற்றியே தவித்துக் கொண்டிருந்தது.. இந்த வெள்ளிப் பதிவில் அந்தப் பாடலை நேயர் விருப்பமாகக் கேட்கலாமே என்று கேட்டேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஎஸ் மனைவி வழியில் அவர் உறவு. அந்த வகையில் அவர் எனக்கு தூரத்து தாத்தா!

      நீக்கு
  20. //ஆனால் ஜீவி ஸார் அந்த வரிகளைத் தழுவி இயற்றப்பட்ட பாடல் ஏதுமிருந்தால் அதைக் கேட்கிறார்.//

    இல்லை, ஸ்ரீராம். எனக்கு உங்கள் தாத்தா கவியோகி இயற்றிய அந்தப் பாடல் தான் வேண்டும்.. என்.சி. வசந்த கோகிலம் அற்புதமாகப் பாடியிருக்கிறார். என்.சி.வி. என்றால் அப்பாதுரைக்கு உயிர். நான் அவர் பாடியதை எங்கள் பிளாக் வாட்ஸாப் குழுவில் அவருக்காக பதிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வசந்தகோகிலம் பாட்டு இணையத்தில் பார்த்தேன்.

      நீக்கு
  21. கீதாம்மா வேறு என் இளம் வயது மதுரை நினைவுகளைக் கிளறி விட்டிருக்கிறார்.

    சுதந்திரச் சங்கு! சங்கு சுப்ரமணியன் அவர்களின் பேச்சை மதுரை அன்னக்குழி மண்டபம் ஸ்கூலில் (மொட்டைக் கோபுரம் எதிரிலிருந்தது) ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது கேட்டதிலிருந்து பாரதியாரின் மீது மோஹம்
    தலைக்கேறியிருந்தது. இன்று வரை அந்தப் பித்துக்கு எந்த குறைவும் ஏற்பட்டதில்லை!

    பதிலளிநீக்கு
  22. அதனால் தான் உங்கள் தமையனார் பாரதியைத் தன் பெயருக்குப் பின்னால் கொண்டிருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாகவி நினைவு நாளன்று அவர் பிறந்ததால் அந்தப் பெயர்.

      நீக்கு
  23. கீதாம்மா குறிப்பிட்டிருக்கிற மாதிரி மனம் ரொம்பவும் பேதலித்து விட்டது.

    இந்தப் பகுதிக்கு இடைஞ்சல் வேண்டாம். விட்ட இடத்திலிருந்து தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வேகத்தை நான் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் இவற்றுக்கு பதிலும் இல்லை.

      நீக்கு
    2. கீதாக்கா சுத்தானந்த பாரதியார் பற்றிய தகவல்கள் வெகு ஸ்வாரஸ்யம்.

      ஸ்ரீராம் வாவ்! உங்க சொந்தத்தின் வழி தாத்தாவா!!

      கீதாக்கா, ஸ்ரீராம் பின்னணியில் எல்லாம் நிறைய வியப்பான ஸ்வாரஸ்யமான வரலாற்றுச் சிறப்புகள் இருக்கின்றன! அதனால்தான் எங்களுக்கும் இங்கு நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன.

      சுத்தானந்த பாரதியார் அவர்கள் 1000 த்திற்கும் மேர்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறார்.

      டிகேபி டிகேஜே குரலில் அருமையான பாடல் எப்படி பாடினரோ பாடல் சுத்தானந்த பாரதி எழுதிய பாடல்.

      சிந்துபைரவி படத்தில் வரும் ஆனந்த நடனம் ஆடினாள் பாட்டு ஒரு வரி தான் வரும் அது சுத்தானந்த பாரதியார் எழுதிய பாடலோ? தெரியவில்லை. சுத்தானந்த பாரதியாரும் ஆனந்த நடனமாடினாள் எழுதியிருக்கிறார். அபூர்வமான ராகம் கோபிகடிலகம். ஆனா சிந்துபைரவி பாடல் அந்த ராகமாய்த் தெரியவில்லை. எனவே இவர் எழுதிய பாடல்தானா என்றும் தெரியவில்லை.

      அருள் புரிவாய் கருணை கடலே ஹம்ஸத்வனி பாடல் என் அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடல். அதெல்லாம் பொற்காலம்

      கீதா

      நீக்கு
    3. // ஸ்ரீராம் பின்னணியில் எல்லாம் நிறைய வியப்பான ஸ்வாரஸ்யமான வரலாற்றுச் சிறப்புகள் இருக்கின்றன! //

      அந்தப் பெருமையை நான் சொந்தம் கொண்டாடவே முடியாது.  அவ்வளவு பெரிய மனிதர் என் அத்தையின் வழி உறவு.

      நீக்கு
  24. ஆஆஆஆஆஆ முதலில் நேற்றைய சமாச்சாரத்திற்கான பதிலை இங்கும் விளம்பரப் படுத்திடறேன்ன்.. நேற்றுத் தேடிய படம்...

    ///கோமதி அக்கா, ஸ்ரீராம், பானு அக்கா... நான் கண்டு பிடிச்சிட்டேன்.. இந்தப் படமோ இதை எப்படி மறந்தோம் என நினைப்பீங்கள் ஹா ஹா ஹா அது கமல் அங்கிள் நடிச்ச சூப்பர்ஹிட் படம்.. “ஒரு ஊதாப்பூக் கண் சிமிட்டுகிறது”..///

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நேற்றைய பதிவிலும் சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. கண்டுபிடித்து விட்டீர்களா? நல்லது அதிரா.

      நீக்கு
  25. ராமராஜன் - சீதா.. சூப்பர் ஜோடிப் பொருத்தம்.. நாம் சொல்லி என்ன பயன்:)..

    இந்தப் படமோ பாடலோ கேட்டதில்லை நான்.. என்னாம் பெரீஈய பாடல்... பாட்டு ஓகே, சில பாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்கும்போதுதான் நன்கு பிடிக்கும், சிலது கேட்ட மாத்திரமே பிடித்துவிடும்..

    இப்பாடலும் கேட்கக் கேட்கப் பிடிக்குதோ தெரியவில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோடிப்பொருத்தம்? எதை வைத்து இந்த முடிவு செய்யப்படுகிறது?!!!

      நானும் படம் பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பாடல் அவ்வப்போது கேட்பேன். மற்ற இரு பாடல்கள் காதில் விழும்போது கேட்பேன்.

      நீக்கு
    2. //ஜோடிப்பொருத்தம்? எதை வைத்து இந்த முடிவு செய்யப்படுகிறது?!!!//

      இது என்ன தெரியாதமாதிரியே ஒரு கிளவி:)). சினிமாவில், ட்றாமாவில் எல்லாம் தோற்றத்தை மட்டுமே வைத்தே ஜோடி சேர்த்து விடுகிறோம்ம்.. அவர்களின் மனங்கள் பொருந்தினால் என்ன பொருந்தாட்டில் என்ன?:)) ஹா ஹா ஹா. நமக்குப் பார்வைக்கு இதமாக இருக்கோணும்.. உயரம், மொத்தம் எல்லாம் ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. பிஞ்சு ராமராஜன் சீதா இங்குதான் பார்க்கிறேன். வேறு படம் தெரியல ஆனா நான் உமுத பார்த்ததுனால எனக்கு உமுத வில கமல் சீதா இன்னும் பெட்டர்னு தோனிச்சு. சீதா ரொம்ப அழ்ககா இருப்பாங்க அதுல. குறிப்பாகக் கண்! மற்றபடி வேறு ஏதோ ஒரு படம் அது நினைவில்லை. அதுலயும் நல்லா நடிச்சிருப்பாங்க.

      கீதா

      நீக்கு
    4. ஆமாம்...   அந்தக் கண்கள்!

      நீக்கு
  26. எஸ்.பி.பி பாடல் மிகவும் நன்றாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம்ஜி இந்தப் படம் பற்றியும் இப்போதுதான் அறிகிறேன். பாட்டும் இப்போதுதான் கேட்கிறேன். பாடல் நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. இந்தப் பாட்ட்டு இப்பத்தான் கேட்கிறேன் ஸ்ரீராம். கேட்டதும் டக்குனு மனசுல வந்த பாட்டு குழலூதும் கண்ணனுக்கு பாட்டு.

    பாட்டு நல்லாருக்கு. படம் தகவல் எல்லாமே புதுசு. தேவா இன்னும் சில நல்ல பாடல்கள் போட்டிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கீதாசா...  ஏதாவது ராகம் சொல்வீங்கன்னு பார்த்தா...   சொல்லாமலேயே போறீங்களே!!! 

      நீக்கு
    2. கீதா என்றிருக்க வேண்டும். சா தவறுதலாக வந்துள்ளது.

      நீக்கு
  29. இது வரை கேட்காத பாடல் இப்போது கேட்டேன் சுமார் ரகம் என்று தோன்றியது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!