புதன், 13 மே, 2020

புதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது?நெல்லைத்தமிழன் : 

இன்றைக்கு கேள்வி கேட்டவர்களும் இருவர். பதில் சொன்னவர்களும் இருவர். இது யதேச்சையாக நிகழ்ந்ததா?

# ஆம்.

& இன்றைக்கு கேள்வி கேட்டிருப்பவர்கள் மூவர். பதில் சொல்லி இருப்பவர்களும் அதிகபட்சம் மூவர். 

அடிப்படைத் தகுதி, தப்பு, சரி என்பதில் இருக்கணும்னா யாருக்குமே அது கிடையாது. எனக்குத் தப்பு என்றால் இன்னொருவருக்கு அது சரியாக இருக்கும். எனக்குச் சரி எனப் படுவது இன்னொருவருக்குத் தவறாகவோ/தப்பாகவோ தோன்றும்// - இப்படி ஒரு பின்னூட்டத்துக்கு கீசா மேடம் சொல்லியிருந்தாங்க.   ஒரு பிரச்சனையில் நியாய தர்மம் சொல்லி, தீர்ப்புச் சொல்ல, அந்தப் பிரச்சனையில் சம்பந்தப்படாதவரால் முடியும் என்றே நினைக்கிறேன். உங்கள் அபிப்ராயம் என்ன?

$ பிரச்சினையில் சம்பந்தப் படாதவாறு மட்டுமின்றி, வாதி பிரதிவாதி இருவருடனும் உறவோ நட்போ இல்லாதவரால் திறமையாக செயல் பட முடியும்.

 # யார் நியாயம் தர்மம் சொன்னாலும் அதை மறுத்துச் சொல்ல இன்னொரு நடுநிலையாளர் இருப்பார். ஏதோ சொன்னோம் போனோம் என்று இருக்க வேண்டும்.

& நீங்க நினைப்பதுதான் சரி என்று நினைக்கிறேன். ஆலமரத்தடி கிராமப் பஞ்சாயத்து நாட்டாமை தொடங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி வரை வழக்கில் சம்பந்தப்படாதவராக இருப்பவர்தான் தீர்ப்பு சொல்வர்ர். சில நீதிமன்றங்களில், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிபதியின் உறவினர் என்றால், நீதிபதியே அந்த வழக்கை வேறு நீதிபதியின் அமர்வுக்கு மாற்றிவிடுவார் (என்று சினிமாக்களில் பார்த்ததுண்டு) 


"யானோ அரசன்.. யானே கள்வன்", 'பொற்கை பாண்டியன்", "மனுநீதிச் சோழன்' போன்று பல 'தலைவர்களை'க் கொண்டிருந்த நாடு இது. இப்போதும் இத்தகைய தலைவர்கள் உண்டா? அப்படி இருந்தால் அதற்கு உதாரணம் காட்ட முடியுமா?

$ நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கு யானே காரணம் என்றவரை....

# நாம் கொண்டாடும் மனு நீதி, பொற்கை எல்லாம் கற்பனா பாத்திரங்கள். அவர்கள் எக்காலத்திலும் இருக்க முடியும். இப்போது ஓகோ ஆகா என்று கொண்டாடப் படும் சில பெரிய பெயர்கள் அப்படியான கற்பனா சாதனைகள் பற்றிய கதைகளின் அடிப்படையில் பிரபலமானவர்களே.

& ஹி ஹி! அப்படி எல்லாம் யாராவது இப்போ இருந்தால், எதிர்கால சரித்திரப் புத்தகங்களில் "அ + இ + ஏ " பாடத்தில் மட்டும் இடம் பெறுவார்கள்! 

பாயசத்தில் உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது?

# பாயசத்தில் பிடித்தது பயற்றம் பருப்பு வெல்லப் பாயசம்.

& சின்ன வயதில் : ஜவ்வரிசிப் பாயசம் - ஒவ்வொரு ஜவ்வரிசியாக இலையில் விரல்களால் பிடிக்க முயற்சி செய்து தோற்றதில் ஆனந்தம். அப்புறம் ஏலக்காய் மணத்துடன், சூடான, இனிப்பு தூக்கலான, முந்திரி போட்ட பயத்தம் பருப்பு பாயசம். இப்போ எல்லாம் - எது கிடைக்குதோ அது.  

நாற்பது வகை பாயாசம் இருக்காம் ! இது சுட்டி 
கீ சா மேடத்தின் பாயாச பதிவு : இது சுட்டி 

கீதா சாம்பசிவம் : 

திருமணம் ஆன புதிதில் பெண் புதியவள் அந்தச் சூழ்நிலைக்கு. கணவனோ பழக்கப்பட்டவன். ஆகவே அவன் கொஞ்சம் அதிகாரத்துடன் தனக்குக் கீழ்ப்பட்டவள் இந்தப்பெண் என்னும் எண்ணத்துடன் நடந்து கொள்கிறானோ? அதன் பின்னர் வருடங்கள் ஏற ஏறப் பெண்ணின் முக்கியத்துவம் கிட்டத்தட்ட ஆதிக்கமாக மாறிவிடுகிறது. அவளே எல்லாம் என ஆகிவிடுகிறது. அப்போது கணவன் தான் அவளுக்குக் கீழ்ப்பட்டவன் என ஆகிவிடுகிறானோ?

# திருமணத்துக்குப் பின் கணவன் மனைவி பரஸ்பரம் என்ன மனப்பான்மையோடு வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள்  என்பதில் ஆண் பெண் எவரானாலும் அவரது  கருத்துக்கள் தம் அனுபவத்தின் அடிப்படையினதாக  இல்லாது ஒரு ஊகமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

& அப்படி எனக்குத் தோன்றவில்லை. இருவரிடையிலும் நல்ல புரிதல் இருந்தால், இந்த சந்தேகங்கள் எழ வாய்ப்பு இல்லை. 


ஆனாலும் கடைசிவரையிலும் தன் அகங்காரத்தைக் குறைத்துக்கொள்ளாமல் மனைவி தனக்குக் கட்டுப்பட்டவள் என எண்ணும் ஆணை எதில் சேர்ப்பது? தனக்கு வேண்டிய ஒவ்வொன்றுக்கும் பெண் கையேந்த வேண்டும் என எதிர்பார்க்கும் ஆண்?

# இன்றைய நிலையில் ஆண் தன் மனைவியை தனக்குக் கட்டுப்பட்ட நபராக நினைப்பதில்லை.  பெரும்பாலான கணவர்கள் தம் மனைவிக்குப் பரிந்து பெற்றோருடன் வாக்குவாதம் செய்வது சகஜம்.  காலக்கிரமத்தில் வீடு குடும்பம் குறித்து மனைவிக்குத் தெளிவு அதிகம் இருப்பதால் அவளுடைய கருத்துக்களை ஆண் மதித்து வாழ்கிறான்.
எனினும் ஆணாதிக்கம் ஊறிப்போன சமூகத்தில், ஆணுக்கு  "இவளுக்கு நான் இல்லை என்றால் எந்த நாயும் கவனித்துக் கொள்ளாது" என்ற மனவோட்டமும், கணவனுக்காகத் தன் உடல் பொருள் ஆவியை "தியாகம்" செய்து விட்டதாக எண்ணும் பெண்ணுக்கு " இந்த மனிதனுக்கு என்னைக்காட்டிலும் மேலாக நல்லது செய்தவர் இல்லை" என்ற எண்ணமும் இயல்பாக வளர்கிறது.


இன்னமும் பெண்ணை/குறிப்பாக மனைவியைத் தன் அடிமை என நினைக்கும் ஆணை என்ன சொல்வது?

# யாரும் யாருக்கும்"கீழ்ப்பட்டவர்" இல்லை என்பதே உண்மை. சத்தியம் எல்லார் கண்ணுக்கும் புலப் படுவதில்லை.

& அவருடைய அட்ரெஸ் குடுங்க. நேரில் போய்ப் பார்த்து, ரெண்டு தட்டு தட்டிவிட்டு வந்துவிடுகிறேன். 


ரொம்பவே தீவிரமான ஒரு கேள்வி. நேற்றும், முந்தாநாளும் இந்த மதுக்கடைகளைப் பக்கத்து மாநிலங்களில் திறப்பது பற்றிக் கேள்விப் பட்டுத் தமிழக மன்னாதி மன்னர்கள் பலரும் போய் வரிசையில் நின்றிருக்கிறார்கள். கூடவே பல அரசிகளும்! அவர்களில் இளவயதுப் பெண்கள் அதிகம். இது சரியா? இதனால் எதிர்காலத்தில் வரப்போகும் தலைமுறைக்கு ஏற்படப் போகும் ஆபத்து நினைத்தால் கலக்கமாக இருக்கிறதே!

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான ஆண்/பெண்கள் மது இல்லாமல் தங்களால் இருக்க முடியாது என்று நடந்து கொள்வது சரியா?


# மதுக்கடைகளை திறப்பதும், ஆண் பெண் சிறுவர் என்று மொய்ப்பதும் சரி என்று யார் சொல்ல முடியும் ?
ஆனால்  point of no return என்ற நிலையை அடைந்த பின் இந்த ஞானோதயம் பயன்படாது. லாட்டரி டிக்கெட் அஸ்தமனம் ஆனதுபோல் மதுக்கடை அழிவது சாத்தியமில்லை. காரணம் இலவசங்களின் கவர்ச்சியில் மயங்கி வாக்களிக்கும் மக்கள் கூட்டம். இதை விட்டால் சமாளிப்பது கஷ்டம் என குடிகாரர்களும் அரசாங்கமும் ஒருசேர நினைக்கும்போது என்ன செய்ய முடியும் ? 

& விநாச காலே, விபரீத புத்தி. 


ஒரு பக்கம் சின்ன எழுத்துக்களில் குடி உடல் நலத்துக்குக் கேடு என்று சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் மதுக்கடைகளைத் திறந்து உட்கார்ந்து குடிக்க வசதியும் செய்து கொடுக்கும் அரசு மக்களுக்கு நன்மை செய்கிறதா?

# பேருக்கு ஒரு கார்டு போட்டு விட்டு மதுவை சினிமா கொண்டாடுகிறது. பள்ளி மாணவர்கள் மதுவை ருசி (?) பார்க்க முனைகிறார்கள். 
கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.


இப்படி ஒரு தொற்று நோய் வரும் என எதிர்பார்த்தீர்களா? பலரும் சில பஞ்சாங்கங்களில் இது குறிப்பிட்டிருப்பதாகச் சொல்கின்றனர். அது உங்களுக்கு முன்னரே தெரியுமா?

# நோய் வரும் என எண்ணவில்லை. பஞ்சாங்கம் பார்த்ததுமில்லை. 
பார்த்திருந்தாலும் உறைத்திருக்காது.

& எப்பொழுதும் நல்லதே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் என்பதால் இதை எதிர்பார்க்கவில்லை. தொற்று எப்போ பூரணமாக விலகும் என்று யாராவது இன்றளவில் சொல்லி, அது அப்படியே நடக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று ஆசை உள்ளது. 


இப்போ உங்களை ஓட வைக்கும் ஒரு கேள்வி! இந்தக் கொரோனாவை இறைவன் ஏன் தடுக்கவில்லை? கொரோனாவுக்கு பயந்து அவன் கோயிலையே மூடிக் கொண்டு உள்ளே அல்லவோ இருக்கிறான்? அவனே பயப்படுகிறானே! இது பலர் கேள்வி. இதற்கு தர்க்க ரீதியாக என்ன பதில் சொல்வீர்கள்?

# கொரொனா இறைவன் படைக்கவில்லை. அதைத் தடுப்பது இறைவன் வேலையுமில்லை. "கோயில்" இறைவனின் உறைவிடமும் இல்லை. 
உலகைப் படைத்த கடவுள் இயற்கை நியதிகளை அமைத்துக் கொடுத்தபின் விலகிச் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்ற மனித உயிர் என்னவெல்லாம் சாதிக்கும், எங்கு போய் முடியும் என்பதில் இறைவனுக்கு நாட்டம் இல்லாமலும் இருக்கலாம்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவங்க மாநிலத்தில் பிழைக்க வழி இல்லை என்றே இங்கே வந்தார்கள். இப்போ மறுபடி அங்கே திரும்பிப் போய் என்ன செய்வார்கள்? அங்கே இப்போது வேலையோ சாப்பாட்டுக்கு வழியோ கிடைத்துவிடுமா? அல்லது உயிர் பயத்தினால் சொந்தத்திடம் போய்ச் சேரலாம் என்னும் எண்ணமா? எனக்கு அதுதான் சரியா இருக்கும் எனத் தோன்றுகிறது.

# நிலைமை சீரானபின் மீண்டும் வேலை தேடி அலைய வேண்டி வரும்.

& உயிர் பயம் ஒன்றுதான் பிரதான காரணம் என்று நினைக்கிறேன். ஏழ்மை அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து அதிகம் படிக்காத, உடல் உழைப்புக்கு அஞ்சாத மக்கள், பிழைப்பு தேடி, வேலை வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களுக்கு வருகிறார்கள். புலம் பெயர்ந்து வந்து இங்கு சம்பாதிக்கும் பத்தாயிரம் ரூபாயை விட சொந்த பந்தங்களோடு சேர்ந்து இருந்து, அவர்கள் ஊரில் சம்பாதிக்கும் இரண்டாயிரம் ரூபாய் மேல் என்று இன்றைய நிலையில் அவர்கள் நினைத்தால் அதில் தவறு இல்லை. 


ஜீவி :

எதை எழுதினாலும் (அது கற்பனைக் கதையாக இருந்தாலும்) பொதுவாக வைத்துப் பார்க்காமல் அதில் தன்னைப் பொருத்தி பலர் பார்க்கிறார்களே! இது என்ன பிளாக்கர் நோயா?..

# எழுத்துக்கள் அனுபவத்தின் அடிப்படையில் இருந்தால்தான் உயிர்ப்பு இருக்கும். பெரும்பாலான படைப்புகள் அனுபவத்தின் வெளிப்பாடுகள்தான்.  தன்னைப்பற்றி அறிந்த ஒருவர் எழுதியதில் தனக்கு நேரிட்ட நிகழ்ச்சி இருக்கிறது என்றால் அப்படித்தானே நினைக்கத் தோன்றும் ? புனைப் பெயர்கள் தோன்றியதே இதைத் தவிர்ப்பதற்காகத் தானோ ?

& நானும் ஆரம்ப காலத்தில் தன்னை வைத்துப் பார்ப்பவர்களை, கமெண்ட் செய்பவர்களை விசித்திரமாகத்தான் பார்த்தேன். அப்புறம், ஒவ்வொருவர் பாணி ஒவ்வொரு விதம் என்று தெரிந்து அதையும் ரசிக்கத் தெரிந்துகொண்டுவிட்டேன். 


பத்திரிகை வாசிப்பு மாதிரி பொது வாசிப்பு என்ற பயிற்சிக்கு பிளாக்கர் உலகில் என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.

# பொது வாசிப்பு என்றால் என்ன ? செயற்கையான பாராட்டுக்கள் இயற்கையான விமரிசனங்கள் இரண்டையும் தவிர்ப்பதா ? பிளாகர்களுக்கு ஆள் சேர்ப்பதும் கைதட்டல் வாங்குவதும் தான் நோக்கமா ?

& கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத சுதந்திர வெளியாக இருப்பதால்தான் பிளாகர் உலகம் சுவாரஸ்யமாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை எங்கள் வாசகர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை எங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களில் வசைச் சொற்கள் இன்றி எழுத முழு உரிமை உண்டு. 

=========================================== 


165 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ. வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

   மூன்று பேர் கேள்விகள்.
   மூன்று பேர் பதில்கள்.
   தற்போதைய நிலைமைக்குப் பொருத்தமான
   கேள்விகள். எத்தனை யோசித்தாலும்
   இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவில்லாமல்
   போய்க் கொண்டிருக்கிறது.

   ரயில்வேஸ்டேஷன் கும்பல் வீடியொ
   பயங்கரமாக இருக்கிறது.
   எத்தனை வாழ்க்கைகள் புரட்டிப் போடப்பட்டு விட்டன.

   //////சைனா,தெற்கு கொரியா,ஜெர்மனி என்று மீண்டு வரும்
   தொற்று யாருக்கும் கண்ணில் படவில்லையா.?
   இல்லை தங்களுக்கு ஒன்றும் நேராது என்ற அசட்டுத் தைரியமா.?
   இது அடுத்த புதனுக்கு உங்கள் முன் வைக்கப் படும் கேள்விகள்.////

   உண்மையில் நம் ஊர் இனித் தெளிந்துவிடுமோ என்னவோ.!

   நீக்கு
  3. தொற்று பரவுதல் பற்றி இன்னும் சரியான க்ளூ கிடைத்ததாகத் தெரியவில்லை. இன்னும் நான்கைந்து வாரங்களில் pattern தெரியும் என நினைக்கிறேன். அடுத்த வார கேள்விக்கு பதில் அளிப்போம்.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. அப்போதே வந்து பார்த்தேன். யாரும் வரவில்லை. குழல் இனிது.. யாழ் இனிது என்பது போல் இனிதான குறள் கொண்டு மீட்டப்படும் கருத்துரை வரி(சை)களுக்காக சற்று காத்திருந்தேன். இப்போது வந்தும் இன்னமும் மீட்டும் விரல்களை காணவில்லையே என நினைத்தபடி நான் வந்து விட்டேன். ராசிகளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் கணினி தடங்கல் பற்றி நேற்றைய பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

   நீக்கு
  2. ராசிகள் பற்றிய கேள்வி அடுத்த வாரத்திற்கான கேள்விதானே?

   நீக்கு
  3. ஆமாம்.. பொதுவாக முகராசி, கைராசி (எல்லாமே தலைவர் படங்கள் இல்லையா.. .ஆனால் எல்லாமே நன்றாகத்தான் ஓடின. தியேட்டரை விட்டு அல்ல.. ஹா ஹா) என்றெல்லாம் பார்க்கிறோமே அது சரிதானா? இல்லை அப்படி பார்க்கிறவர்களின் மனோபாவங்கள் முறைதானா? இன்று என் கேள்வி முதல் வருகை மாதிரி பதிவில் முதல் கேள்வியின் ராசி எப்படி இருக்கப் போகிறதோ? (நானும் என் ராசி பற்றி அடிக்கடி இப்படி ஏதாவது எனக்குள்ளே குறைச் சொல்லி, பின் நடந்ததும் நன்மைக்கே என சமாதானமும் செய்து கொள்வேன்.) நன்றி.

   நீக்கு
  4. என் புக்ககத்தில் இந்த மாதிரி ராசி பார்க்கும் வழக்கம் நிறையவே உண்டு. அதைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருத்தர் சுபாவம்! நானெல்லாம் ராசி பார்ப்பதில்லை. அது முகராசியோ, கைராசியோ எதுவானாலும், நடப்பது தான் நடக்கும் என்னும் எண்ணம் உண்டு.

   நீக்கு
  5. //நானெல்லாம் ராசி பார்ப்பதில்லை. அது முகராசியோ, கைராசியோ எதுவானாலும், நடப்பது தான் நடக்கும் என்னும் எண்ணம் உண்டு.//

   சூப்பர் கீசாக்கா.. இதேதான் நாங்களும்... “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”..

   நீக்கு
 3. ஜீவி சார், மற்றும் மற்றவர்கள் எழுத்தைப் படிக்கும் போது
  நம் வாழ்வில் நடந்ததும் நினைவுக்கு வருவது
  உண்மைதான்.நானும் அது போலப் பின்னூட்டம் இட்டிருக்க வாய்ப்புண்டு.
  பொதுவாக இது நடப்பதுதான்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஊரடங்கு நாலாம் கட்டம் வந்து கொண்டிருக்கிறது. வித்தியாசமானதாக இருக்கும் எனப் பிரதமர் சொல்கிறார். அதையும் கடந்து மக்கள் இந்தக் கொடிய நோயின் பிடியிலிருந்து விடுபட்டு எப்போதும் போல வாழ்வதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. இன்று கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பவர் மூவர் என & சொல்லி இருக்கார். ஆனால் பெரும்பாலும் # தான் பதில் சொல்லி இருக்கார். $ நெ.த.வின் ஓரிரு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி இருக்கார். மத்ததுக்கு பதில் தெரியலையா? &கூடியவரை சமாளிச்சிருக்கார்! எல்லோரும் வேலை மும்முரமோ? அல்லது கேள்விகள் சுவாரசியமாக இல்லையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் குடும்ப zoom video conferencing ல் பிசி. அதனால் சுலபமான கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பிவிட்டு மற்றதை எல்லாம் சாய்ஸ்ல விட்டுட்டாங்க.

   நீக்கு
 7. //எதை எழுதினாலும் (அது கற்பனைக் கதையாக இருந்தாலும்) பொதுவாக வைத்துப் பார்க்காமல் அதில் தன்னைப் பொருத்தி பலர் பார்க்கிறார்களே! இது என்ன பிளாக்கர் நோயா?..// குறிப்பிட்ட நபர் எழுதுவது போல் தன் வாழ்க்கையில் ஏதேனும் நிகழ்வு நடந்தால்/நடந்திருந்தால் அப்போது நினைத்துப் பார்க்க வாய்ப்பு உண்டு. இது பெரும்பாலும் அனைவரும் நினைப்பதே! அதிலும் சின்ன வயது விளையாட்டுகள், சாப்பாடுகள், பழக்கங்கள் என எழுதும்போது படிக்கும் அனைவருக்குமே (அப்படினு நான் நினைக்கிறேன்.) தங்கள் சிறு வயது நினைவுகளில் வருவது உண்டு.. அதைத் தவிர்த்து வெறும் பதிவாகப் படித்தால் அவங்க கொடுக்கும் கருத்து உயிர்ப்புடன் இருக்காது. அருமை, அற்புதம், நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் என்பதோடு முடிந்து விடும்.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம்.

  கமலா ஹரிஹரன் அவர்களின் பின்னூட்டமும், துரை செல்வராஜு சாரின் வருகைத் தாமதமும் என்னை எழுத வைக்கிறது.

  குழலினிது யாழ் இனிது என்பர் தம்மக்கள்
  மழலைச் சொல் கேளா தவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை, ஸ்ரீராம் இருவருக்குமே கணினிப் பிரச்னைகள். ஸ்ரீராமுக்கு கணினி மருத்துவர் வந்து பார்த்தால் சரியாகும் என்றார். துரைக்கு நிலைமை சரியாகணும். பல விதங்களிலும். அதனால் தான் அவரால் தொடர்ந்து வரமுடியவில்லை. முழு ஊரடங்கு வேறே! எந்த நிலைமையில் இருக்காரோ! :(

   நீக்கு
  2. //ஸ்ரீராமுக்கு கணினி மருத்துவர் வந்து பார்த்தால் சரியாகும் என்றார். துரைக்கு நிலைமை சரியாகணும்.//

   சென்னையில் ஊரடங்கு தொடங்கியதும் புதிதாகத் திருமணம் ஆகி இருந்த என் கணினி மருத்துவர் தஞ்சை அருகே உள்ள தனது கிராமத்துக்கு தனது இருசக்கர வாகனத்திலேயே சென்று விட்டார்.  

   இப்போது வரவேண்டும் என்றாலும் ஊர் விட்டு ஊர் வந்தால் பதினாலு அல்லது 21 நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்கிறார்களாம்.  அவர் என்று வந்து, தனிமையில் இருந்து, என்று என் வீடு வந்து, என் கணினியை சரிபடுத்துவது?!!  ஜூன் இரண்டாவது வாரம் ஆகலாம்!

   நீக்கு
  3. அம்பத்தூரில் இருந்தப்போ எனக்குக் கணினி மருத்துவராக இருந்த ஸ்ரீகாந்த் இன்னமும் அம்பத்தூரில் தான் இருக்கிறார். திறமை, எளிமை, நம்பிக்கை, குறைந்த அளவில் பணம், பல சமயங்களிலும் வந்து போனதுக்காக ரூ 150 மட்டும் (அப்போ உள்ள நிலைமை) வாங்கிக் கொண்டு போய்விடுவார். அதிகம் செலவு வைக்க மாட்டார்.

   நீக்கு
  4. //குழலினிது யாழ் இனிது என்பர் தம்மக்கள்
   மழலைச் சொல் கேளா தவர்.//

   எனக்கு இந்தக் குறளில் ஏனோ திருப்தி இல்லை நெல்லைத்தமிழன்.. இக்குறளை ஏன் எழுதினார் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு... ஏனெனில் குழந்தை இல்லாத எவ்வளவு தம்பதிகள் உலகில் இருக்கின்றனர், அப்போ அவர்களை இக்குறள் பாதிக்காதோ?.. எனக்குத் தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமை:))

   நீக்கு
  5. கடைசி மை தேம்ஸ் அருகே மேய்ந்து கொண்டிருந்தால் பிடித்து வீட்டருகே கட்டி வைத்துக்கொள்ளவும்!

   நீக்கு
  6. ஹா ஹா ஹா எதுக்கு?:) எனக்கு அந்தப்பால் பிடிக்காதாக்கும் ஹையோ ஹையோ..

   நீக்கு
  7. //தம்மக்கள் மழலைச் சொல் // - நம் நிலம், 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலம். 'தம் மக்கள்' என்றால் தன்னுடைய குழந்தைகள் என்று ஏன் குறுகி நினைக்கணும்? பக்கத்து வீட்டுக் குழந்தை பேசுவதையும் சிரிப்பதையும் நாம் ரசிக்க மாட்டோமா? இறைவனின் படைப்பான குழந்தையின் மழலைச் சொல் இன்பம், குழலையும் யாழையும் தோற்கடிக்கக்கூடியது என்றே எடுத்துக்கொள்வோமே.

   நீக்கு
  8. //இக்குறளை ஏன் எழுதினார் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு... //

   மேலே இந்த வசனம் சொன்னது, தாத்தாவுக்கு.. அதாவது தாத்தா ஏன் அப்படி எழுதினார் என நான் நினைப்பதுண்டு என்றேன்,....
   அது நெல்லைத்தமிழன் ஏன் எழுதினார் என்பது போல பொருள்படுது ஹா ஹா ஹா..

   நீங்க சொல்வது உண்மை நெல்லைத்தமிழன், நாம் அனைத்தையும் பொசிடிவ்வாக பார்க்கிறோம், ஆனாலும் சில சமயங்களில் சிலது மனதை வருடுது... இங்கும்.. தம் என்பதற்கும்.. நம் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டெல்லோ..

   இதேபோலத்தான் அவ்வைப் பாட்டியும் சொல்லிட்டுப் போயிட்டா.. “பெண்கள் சொல் கேளீர்” என ஹா ஹா ஹா.. அதுக்கும் பல விளக்கங்கள் சொல்கிறார்கள் பொஸிடிவ்வாக, இருந்தாலும் என் மனம் சமாதானப் படுவதாக இல்லை... ஹையோ ஹையோ..

   நீக்கு
  9. தையல் சொல் கேளேல் - மனதைத் தைக்கின்ற சொல்லை யார் சொன்னாலும் அதனை காது கொடுத்துக் கேட்கவேண்டாம், தேவையில்லாத மன வருத்தம் பட வேண்டாம். அது நிறைய இன்னல்களுக்கும் தவறுகளுக்கும் இட்டுச் செல்லும்.

   பிறர் சொல்லாத ஒரு கருத்தை, வார்த்தைகளைத் தைத்து நம்மிடம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவேண்டாம். இட்டுக்கட்டிச் சொல்பவர்கள் எப்போதுமே நல்லதை நினைத்து நமக்குச் சொல்வதில்லை.

   தையல் - அனுபவமில்லாத இளம் பெண் - சொற்களைக் கேட்கவேண்டாம், பொருட்படுத்த வேண்டாம்.

   இப்படிலாம் பாஸிடிவ் ஆக அர்த்தம் கொள்ள வேண்டியதுதானே. தானே ஒரு பெண்ணாக இருந்து ஒளவையார் அப்படி எழுதியிருப்பாரா?

   நீக்கு
  10. நன்றி நெல்லைத்தமிழன், விளக்கமான பதில் தந்திருக்கிறீங்கள்.. இதுக்குத்தான் ஒரு டமில்ப் புரொபிஸர் வேணுமென்கிறது:), ஆனாலும் நேக்கு டமில்ல டி தேன்ன்:)..

   //தையல் சொல் கேளேல்//
   ஹா ஹா ஹா நினைச்சு நினைச்சுப் பார்த்தேன்.. இந்த தையல் என்பது வரவே மாட்டேனென்றிட்டுதா.. பெண்கள் எனச் சொன்னேன்....:)

   நீக்கு
  11. நல்ல விளக்கங்கள் நெ த. நன்றி.

   நீக்கு
 9. //அந்த பக்கத்து வீடுகள் வர்ணனை அப்படியே தான் இருக்கும்.
  மழை விடாமல் பெய்து கொண்டே இருக்கும். ஓட்டு வீடு மட்டும் இல்லை நல்ல ஒட்டு கட்டிடங்களும் பாசம் பிடித்து பழைய கட்டிடம் போல்தான் காட்சி அளிக்கும். வருடத்திற்கு ஒரு முறை வெள்ளை அடித்தாலும் அப்படித்தான் இருக்கும்.// உதாரணத்துக்கு நேற்றைய கதையில் துரை கிராமத்து வீடுகள் பற்றிய வர்ணனை கொடுத்திருந்தார். கோமதி அரசு கிராமத்து அண்டை வீடுகளும் அப்படித்தான் இருக்கும் என்னும் பொருள்படும்படி கருத்துச் சொல்லி இருந்தார். இது அவர் அனுபவம். அவர் அனுபவித்த/பார்த்தவற்றை இங்கே சொல்லி இருக்கார்.இது ப்ளாகர் நோயெல்லாம் இல்லை. மனித சுபாவம். இப்போ நீங்க முதல் முதல் வாங்கிய சைகிள், பேனா,கைக்கடிகாரம் என எழுதி இருந்தால் அதைப் படிக்கும் நமக்கும் நாம் வாங்கிய அனுபவங்களே நினைவில் வரும். அநேகமாய் மதுரை பற்றி நான் எழுதிய நாட்களில் அநேக மதுரைக்காரர்கள் கிட்டத்தட்ட இதே அனுபவங்கள் எங்களுக்கும் இருந்தது என்றே சொல்லி இருந்தார்கள். எனக்கென்னமோ இது ஆழ்ந்து படிப்பதால் ஏற்படும் விளைவோ எனத் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதன் என்பவன் தன் அனுபவங்கள் எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்வதில்லை. அவை நினைவுபடுத்தப்படும்போது, தூண்டப்படும்போது அதனைப் பிறருக்குச் சொல்ல விழைகிறான்.

   இன்னொன்று, கதை மாந்தரின் பெயர் குறிப்பிட்டோ, குறிப்பிடாமலேயோ, வாசக வாசகியரைப் பற்றிச் சொல்வதாக சந்தேகம் வந்தால் அதுவும் தன்னைப் பொருத்திப் பார்க்கத் தூண்டும். கதையில், சம்பவத்தில் உள்குத்து இருக்கா என்று. பானுமதி வெங்கடேச்வரன்கூட, கதை மாந்தருக்கு பானு என்று பெயர் வைத்து எழுதப்பட்டிருந்த கதைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தார்.

   நீக்கு
  2. ஓ! இப்படி ஒரு கோணம் இருக்கா!

   நீக்கு
  3. //பானுமதி வெங்கடேச்வரன்கூட, கதை மாந்தருக்கு பானு என்று பெயர் வைத்து எழுதப்பட்டிருந்த கதைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தார்.// இங்கே ஒரு தன்னிலை விளக்கம்: பானு என்று கதை மாந்தருக்கு பெயர் வைத்ததில் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஒரு பிரபல பத்திரிகையில் அப்படி எழுதுவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எ.பி. போன்ற ஒரு சிறு குழுவில் இதை தவிர்ப்பது நலம். பின்னூட்மிடுகிறவர்கள் சங்கடப்படலாம் என்று ஒரு ஆலோசனையாக அவருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்தேன். நான் கூறியது ஒரு டிப் அவ்வளவே.

   நீக்கு
  4. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!! எனக்கு இதெல்லாம் எந்த யுகத்தில் நடந்ததுனே தெரியாது!

   நீக்கு
 10. ஜவ்வரிசியை ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிடுவதற்குள் மோர்சாதம் விளம்பிவிட்டுச் (துளசி டீச்சரின் வார்த்தை ப்ரயோகம்) சென்றுவிடுவார்களே. அப்போ இலையில் ஜ்பா அன்றெல்லாம் மோர் சாதம் கிடையாதா?

  அடுத்த பாயசப் பதிவு எப்போ வரும், பாயசம் என்றால் ஏகப்பட்ட வெரைட்டி உண்டேன்னு தெரியாமல் கீதா சாம்பசிவம் அவர்களின் இடுகைக்கு சுட்டி கொடுத்திருக்கீங்களே.. பாவம்.. எப்போ எழுதி முடிக்கப் போறாங்களோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாயசமா? பாயாசமா? அதே போல் பிரகாரமா? பிராகாரமா? ஜவ்வரிசிப் பாயசம் சின்ன வயசில் கல்யாணங்களில் முதல் நாள் இரவு (அப்போல்லாம் மாப்பிள்ளை அழைப்பு இருக்குமே) சாப்பிட்டது. அதன் பின்னர் சந்தர்ப்பம் வாய்த்தது எனில் எப்போதேனும் வெள்ளி,ஞாயிறுகளில் ஓட்டல்களில் சாப்பிட நேர்ந்தால்! ஜவ்வரிசிப் பாயசம் தான் கொடுப்பார்கள். அநேகமாய் நான் சாப்பிடுவதையே தவிர்த்துடுவேன். மத்தவங்க சாப்பிடும்போது பார்ப்பது தான்.

   நீக்கு
  2. நெ.த. அதென்ன ஜ்பா? நானெல்லாம் மோர் சாதம் முடிச்சதும் பாயசம் சாப்பிடும் ரகம். அப்படி யாரேனும் தெரியமால் வற்புறுத்திப் பாயசத்தை இலையில் பரிமாறிவிட்டால் அதோடு எழுந்துவிடுவேன். நோ மோர் சாதம்.

   நீக்கு
  3. பாயாசம் என்று சொன்னால் நன்கு நீட்டி அனுபவித்துப் பார்க்க முடிகிறது. பாயசம் என்றால் சட்டென்று கப்ல வாங்கி லிப்ல சுவைக்காமல் தொண்டையில் ஊற்றிக்கொள்வதைப் போல் தோன்றுகிறது. டி கே சி யின் பாயச சுவை ரசனை படித்திருக்கிறீர்களா?

   நீக்கு
  4. பாயசம் என்பதே ‘பாயாசம்’ ஆகிவிட்டிருக்கிறது. வடை என்பது (குறிப்பாக வடநாட்டில்) ‘வடா.. Badaa', சாம்பார் என்பது சாம்பர், ஊத்தப்பம் என்பது உத்தப்பம் என்றெல்லாம் mutate ஆகியிருப்பதைப்போலே!

   நீக்கு
  5. சில பாயச வகைகள் செய்முறை பற்றி திங்கற கிழமைக்கு அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

   நீக்கு
  6. @ பா.வெ. மேடம்... எனக்கு ரொம்ப பிடித்த டாபிக். நான் பஹ்ரைனில் செய்ய ஆரம்பித்தேன். பிறகு நிறுத்திவிட்டேன். 'எனக்குத் தெரிந்த பாயசங்கள்' என்ற தலைப்பில் எபிக்கு எழுதலாம் என நினைத்தேன்.

   @கீசா மேடம் - ஜ.பா என்று வரவேண்டியது ஐபேடில் அவரசரத்தில் ஜ்பா என்று வந்துவிட்டது. மத்தவங்களுக்குப் புரியாதபடி சுருக்கெழுத்துல நீங்க மட்டும்தான் எழுதணுமா? நானும் அப்படி அவ்வப்போது எழுதி மத்தவங்க தலையைப் பிச்சுக்க வைக்கலாம் என நினைத்தது டப்போ?

   நீக்கு
  7. //அப்படி யாரேனும் தெரியமால் வற்புறுத்திப் பாயசத்தை இலையில் பரிமாறிவிட்டால் // - எனக்கு உணவில் எப்போதும் கடைசி இனிப்புதான். பாயசம் பரிமாறின பிறகு மோர் சாதம் சாப்பிட்டதே இல்லை.

   @ பா.வெ - அரிசிப்பாயசம், அரிசி-க.பருப்பு பாயசம்-எனக்கு ரொம்பப் பிடித்தமானது, சேமியா பாயசம், தேங்காய் பாயசம் தவிர மற்றவற்றை நீங்க எபிக்கு எழுதிக்கோங்க. ஹா ஹா. இவற்றை மட்டும் எனக்கு விட்டுவிடுங்க.

   நீக்கு
  8. நெ.த.சிலர் ரசம் சாதத்துக்கு அப்புறம் இப்போப் பாயசம் வேண்டாம்னு சொன்னால் ஏதோ பிகு பண்ணிக்கிறேன் என்றே நினைக்கிறார்கள். அதெல்லாம் இருக்கட்டும், இந்தா,இப்போச் சாப்பிடுனு இலையில் ஊத்திடுவாங்க!வேறே வழியில்லாமல் உள்ளூரக் கடுப்புடன் பாயசத்தைச் சாப்பிடுவேன். ரசிக்கும் மனமே இருக்காது. ரொம்ப நெருங்கிய புரிந்தவர்கள் எனில் முன்கூட்டிச் சொல்லிடுவேன். நான் பாயசம் கடைசியில் சாப்பிட்டுக்கறேன் என.

   நீக்கு
  9. எனக்கு ஒரு சாதம்தான் சாப்பிட முடியும் (சாம்பார் விட்டுக்கொண்டோ இல்லைனா சாத்துமதோ). கரேமது கூட்டு இன்னொரு தடவை வந்தால் சாப்பிடுவேன். அப்புறம் நேரே பாயசம்தான். மோர் சாதம் பக்கமே போக மாட்டேன்.

   ஆனா கீசா மேடம்.. நீங்க சொல்ற மாதிரி பந்தில எப்படி போடுவாங்க (இந்தக் காலத்துல அதையும் செய்வாங்க. பாயசம் எல்லாம் ஒரு சின்ன 2 ருபாய் டீ கப்ல கொடுத்துடறாங்களே), பாயசம் பரிமாறிய பிறகுதான் மோரோ இல்லை தயிர் சாதமோ போட ஆரம்பிப்பாங்க.

   நீக்கு
 11. கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் அடிமை இல்லை.

  இருவருமே ஒருவருக்கொருவர் மரியாதைப் பயம் எடுத்துக் கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சியே...

  பதிலளிநீக்கு
 12. பயத்தம் பருப்பு பாயசம் ஆகாது. அது பயத்தம் கஞ்சி. ப.பருப்போடு க.பருப்பும் சேர்ந்தால்தான் அது பாயசம். அதில் கொஞ்சம் மு.பருப்பும்(மு.பருப்பு வறுத்தும் சேர்க்க வேண்டும்) அரைத்து விட்டு, தேங்காயை பல்லு பல்லாக கீறி,நெய்யில் வறுத்து சேர்த்து ஏலக்காய்,மணக்க இளம் சூட்டில்அருந்த வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ! ரசனையாக இருக்கு! நன்றி.

   நீக்கு
  2. ஸ்ராத்தங்களில் கடலைப்பருப்புச் சேர்ப்பதில்லை. வெறும் பயத்தம்பருப்புப் பாயசம் தான். நாங்க பருப்புப் பாயசம் என்போம். நன்றாகவே இருக்கும்.

   நீக்கு
  3. @ பா.வெ - சரியாச் சொல்லியிருக்கீங்க. பொதுவா பாயசம் பண்ணியாகணுமே என்று நினைக்கறவங்கதான் பயத்தம் கஞ்சில முந்திரி வறுத்துப்போட்டு பாயசம் என்ற பேர்ல தள்ளிவிடுவாங்க. நம் வழக்கத்தில் அனுமதிச்சிருந்தாங்கன்னா, சேமியாப் பாயசம் இன்னும் சுலபம்னு நினைச்சிருப்பாங்க. ஹா ஹா.

   நீக்கு
 13. ஜவ்வரிசியோடு கொஞ்சம் சேமியாவும் சேர்த்து, கண்டென்ஸ்ட் மில்கும் சேர்த்து செய்தால் நன்றாகவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ ! அப்படியா! தகவலுக்கு நன்றி.

   நீக்கு
  2. சேமியா தனியா இருக்கணும். அதோடு ஜவ்வரிசி சேர்ப்பதில்லை. சொல்லப் போனால் ஜவ்வரிசிப் பாயசம் சாப்பிட்டே எத்தனையோ வருடங்கள்! ஜவ்வரிசியில் லாடு நிறையப் பண்ணுவேன். சாபுதானா கிச்சடி, வடை,தாலிபீத், சில சமயம் வெள்ளையப்ப மாவில் ஜவ்வரிசியைப் போட்டு ஊற வைச்சுப் பண்னுவதும் உண்டு,

   நீக்கு
 14. கீதா அக்கா G.V.சார் கேட்டிருப்பது வேறு, நீங்கள் பதில் சொல்லியிருப்பது வேறு. இடங்கள், பொருள்கள் பற்றிய வர்ணனைக்கு பதில் அளிப்பது வேறு. ஒருவர் மாமியார் மருமகளை கொடுமை படுத்துவதேப் பற்றி எழூதினால் அதற்கு,"நான் அப்படியெல்லாம் செய்வது கிடையாது. என் மருமகளை மகள் போல பார்த்துக் கொள்கிறேன்" என்று பின்னூட்டமிட்டால் எப்படி இருக்கும்? அதைத்தான்"G.V.சார் குறிப்பிட்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படீங்கறீங்க? இருக்கலாம். ஆனால் அந்த மாதிரி சமயத்தில் நானும் எனக்குத் தெரிந்த மாமியார் கொடுமைகளைத் தான் குறிப்பிடுவேன்/குறிப்பிட்டிருப்பேன். முன்கூட்டி என் மருமகளைப் பார்த்துக்கொள்வது பற்றி நான் எழுதினால் "எங்கப்பா குதிருகுள் இல்லை!" என்பது போல் ஆகிவிடாதோ?

   நீக்கு
  2. //என் மருமகளை மகள் போல பார்த்துக் கொள்கிறேன்// - இது எங்காவது சாத்தியமா? சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக இந்த மாதிரி வாக்கியங்களை எழுத்தாளர்கள் எழுதிடறாங்க. மகள்ட சொல்லும் இந்த வாக்கியங்களை மருமகள்ட சொல்லிப்பாருங்க. அப்புறம் ரியாக்‌ஷன் எப்படி இருக்குன்னு.

   "என்ன..எட்டு மணியாச்சு.இன்னும் எழுந்துக்காம படுத்துக்கிட்டே இருக்க. சோம்பேறி சோம்பேறி..போ..வெந்நீர் போட்டிருக்கேன். குளிச்சுட்டு வா கழுத'

   "என்னது இது.. பேயாட்டம் தலையை விரிச்சுப் போட்டிருக்க. ஒழுங்கா பின்னிக்கிட்டு வா"

   "தடிமாடு மாதிரி வளர்ந்துருக்கயே.. தட்டை அலம்பணும்னு தெரியாது"

   "என்ன இது..குதிரையாட்டம் துள்ளித் துள்ளி நடக்கற. கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நட"

   இதெல்லாம் நாம கதைகள்ல அம்மா, பெண்ணைப் பார்த்துப் பேசுவதாக வரும். இது மாதிரி மருமகள்ட பேசற மாதிரி எங்காவது படிச்சிருக்கீங்களா?

   நீக்கு
  3. ஹாஹா அவ்வ்வ்வ் :) இதெல்லாம் தெரிஞ்சுதான் எங்கப்பா எனக்கு மாமியார் இல்லாத இடமா தேடினாரோன்னு டவுட் வருது :))

   நீக்கு
  4. //
   நெல்லைத் தமிழன்13 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 2:38
   //என் மருமகளை மகள் போல பார்த்துக் கொள்கிறேன்// - இது எங்காவது சாத்தியமா?//

   ஹா ஹா ஹா சாத்தியப்படும், ஆனா அதை மருமகள் தன் வாயால சொல்லும்போது:))

   நீக்கு
  5. //அதை மருமகள் தன் வாயால சொல்லும்போது:)// கண்டிப்பா பிறரிடம் தன் மாமியார் இருக்கும்போது சொல்வாங்க. மனசுல, 'தன் பெண் மாதிரியே சிடுசிடுன்னு சொல்றது, அதட்டறது, அதிகாரம் பண்ணறது... இதுல ஒண்ணும் கொறைச்சலில்லை' என்று நினைத்துக்குவாங்களோ

   நீக்கு
 15. பாயசத்தில் எனக்குப் பிடித்தது அம்பலப்புழை பால் பாயசம். அடுத்து சக்கைப் பிரதமன் , அடை பிரதமன், இளநீர் பாயசம், சேமியா பால் பாயசம். பிடிக்காதது கடலைப்பருப்பு பாயசம் (மோதக பூரணத்தில் பால் ஊற்றியது போல), ஜவ்வரிசி பாயசம் (வடாம் கூழில் சீனி பால் போட்டது போல்)

  Jayakumar

  பதிலளிநீக்கு
 16. கேள்வி பதில்கள் அருமை...

  கோயில் ? கோவில் ?

  கோயில்=கோய் + இல் = கள்ளுக்கடை / சாராயக்கடை / மதுப் பிரியர் கடை (07.மே.2020 ஆண்டு முதல்) / தமிழில்
  டாஸ்மாக்...

  கோவில்=கோ + இல் = ஆலயம் | அருள் உள்ளம் / இல்லம் | அரண்மனை... | ... | ... |

  // ரெண்டு தட்டு தட்டிவிட்டு // நானும் வருகிறேன்... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுவுக்கு நரவு, ஈழம், தோப்பீ, பானம், சாராயம் என்றெல்லாம் பொருள் உண்டு. 'கோய்' என்று நான் கேள்விப்பட்டதே இல்லை. இதற்கு சான்று தர இயலுமா?

   பழக்கத்தில் நாம் கோயில் என்றே கோவிலை எழுதினாலும், இலக்கணத்தின்படி கோவில் என்பதே சரியானது. பாய் + இல் = பாயில், மாசு + இல் = மாசில், கோ + இல் = கோவில், நா + இல் = நாவில்.

   கோவில் என்பதன் அர்த்தம் அரசனின் வீடு/இல்லம். நம் எல்லோருக்கும் அரசன் இறைவன் என்பதான் கோவில் என்பது, இறைவன் வாழும் ஆலயத்தைக் குறிப்பதாக மாறியது. அனேகமாக எல்லா இடத்திலும் 'கோயில்' என்றே எழுதியிருப்பார்கள், அபூர்வமாக கோவில் என்று குறிப்பிடுவர். 'கோவிலடி' என்பது ஊர் பெயர்.

   நீக்கு
  2. ஆஆஆஆஆஆஆ நானும் கோயில் தான் சரி என நினைச்சிருந்தேன்...

   நீக்கு
 17. இன்றைய கேள்விகளும் பதில்களும் சிந்தனையைத் தூண்டும் விதமாக...

  நன்று. பாராட்டுகள் - கேட்டவர்களுக்கும் பதில் சொன்னவர்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் காலை வணக்கங்கள்.
  நான் பெண்ணென்பதால், கீதாவின் முதல் கேள்வி என் கண்ணில் முதலில் பட்டது. "Man is the stronger sex; women are the weaker sex". இவை யாவும் உண்மைக்கு புரம்பானவை. ஒவ்வொரு பெண்ணும் ஒரு மகளாக, மனைவியாக, மருமகளாக, தாயாக என அஷ்டாவதாரங்கள் எடுக்கின்றாள். ஒரு உயிரை இவ்வுலகிற்குள் கொண்டு வருவது என்பது கடவுள் எங்களுக்கு கொடுத்த வரம். ஒரு ஆணுக்கு முதலில் அந்த வலி தெரியுமா? "நான்" என்ற அந்த அகந்தை ஒரு பாதுகாப்பின்மையின் வெளிப்படையாகத்தான் நான் பார்க்கின்றேன். எந்த ஒரு ஆணும் தனியாக இயங்க முடியாது. அதே போல் எந்த ஒரு பெண்ணும் தன்னிச்சையாக வாழ முடியாது. சக்தியும் சிவமும் வேண்டும். இதை உணராதவர்கள் உண்மை அறியாதவர்கள்.
  கீதாவின் 2வது கேள்வி : ஆண்களும் பெண்களும் (ஆதுவும் இள வயதிலேயே மதுப் பிரியர்களாகி விட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இதில் பெற்றோருக்கும் ஒரு சிறு பங்கு இருக்குமோ என்பது என் கருத்து. ஏனெனில், பல பெற்றோர்களும் அது போல் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறார்களா அல்லது தாங்களே சென்று மாட்டிக் கொள்கிறார்களா என்பது விளங்கவில்லை. எது எப்படியானாலும் நாம் நல்லவைகளையும் கெட்டவைகளையும் பிரித்து அறிவுருத்தி பிள்ளைகளை வளர்க்க பாடு படுவோம். நல்லதே நடக்கும் என்று நம்பினாலும் மேற்கூறிய சூழல் மிக வேகமாக பரவி வருகின்றது என்பதுதான் உண்மை.
  கீதாவின் 3வது கேள்வி : மிகக் கருத்துள்ள கேள்வி. அரசாங்கம் தன் பங்குக்கு நல்லதை செய்ய வேண்டும் என்பது அதன் தார்மீகப் பொருப்பாகும். இங்குதான் தார்மீகமே தொலைந்து விட்டதே. முதலில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்பதுதான் நாம சங்கீர்த்தனமாய் இருக்கின்றது. அப்புறம் எங்கு அரசாங்க செயல்பாடு?
  கீதாவின் 4வது கேள்வி : நாம் எவ்வளவு கெடுதல் செய்தாலும் கடவுள் பொருத்துக் கொண்டு நமக்கு நல்லதே செய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால், அது நியாயமா? மரங்களையும், வயல்களையும் அகற்றி வீடுகள் கட்டினோம். தண்ணீர் பஞ்சம் வந்தது. வெப்பம் அதிகரித்தது. சுற்று சூழல் மாசுற்றது. கடவுள் நமக்கு ஒரு புத்தி புகட்ட வேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ. அவரை பிழை சொல்லாதீர்கள். அவரை வீட ஒரு பொருமையானவரை நீங்கள் காண முடியுமா? நம் தவறுக்கு நாம் அனுபவிக்கின்றோம். அவ்வளவுதான்.
  கீதாவின் 5வது கேள்வி : மைக்ரன்ட் தொழிலாளிகளும் மனிதர்கள்தானே. வேலையும் இல்லாமல், இருக்கும் இடத்திலும் கோவிட் பயம், பணத் தட்டுப்பாடு போன்ற இன்னல்களுக்கு நடுவில் நாம் நம் ஊருக்கு சென்று நம் குடும்பத்துடன் இருப்போம் என்ற எண்ணம் வருவது இயல்பே. அதன் பின் தாக்கங்கள்தாம் அவர்களுக்கு தெரியவில்லை. இவர்களால் மற்றவருக்கு வரலாம் என்ற எண்ணம் அங்கு இல்லை. பாவம் பயந்து போயிருக்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறப்பான பதில்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. அருமையான பதில்கள் ரமா ஸ்ரீநிவாசன். நான் இப்போதுள்ள நிலைமையைக் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டியே கேள்விகளைக் கேட்கிறேன். மற்றபடி உங்கள் கருத்து தான் எனக்கும். அதிலும் கடவுள் பற்றிய கேள்விக்கு என்னுடைய பதில் அது தான். நிச்சயம் கடவுள் ஒருநாள் எந்தவிதத்திலாவது தண்டனை கொடுத்தே தீர்வார்.

   வெளிமாநிலத் தொழிலாளிகள் கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம். அரசால் ஏற்படுத்தப்பட்ட முகாம்கள், உணவளிக்கும் தொண்டர்கள்னு அவங்களுக்குக் கூடியவரை கவனித்துச் செய்யத் தான் செய்தார்கள். என்றாலும் இத்தனை பெரிய ஜனத்தொகை இருக்கும் நாட்ட்டிலே ஒவ்வொருத்தராய்க் கவனிக்க முடியாது. ஒரு சிலருக்குக் கவலை, பயம், ஊருக்குப் போக வேண்டும் என்னும் உத்வேகம். நடந்தாவது போகலாம் என்று கிளம்பிவிட்டார்கள். அவர்களுக்கு வழியில் ஆங்காங்கே ஓய்வெடுக்க இடங்களை ஏற்படுத்தி உணவு கொடுக்கவும், அல்லது பேருந்து வசதிகள் செய்து கொடுக்கவும் குறிப்பிட்ட மாநில அரசு முனைந்திருக்கலாம். நாம் உட்கார்ந்து கொண்டு சொல்லிவிடுகிறோம். இதைச் செயல்பாட்டில் கொண்டு வர அரசுக்கு ஏற்படும் பல தொல்லைகளை நாம் நினைத்துப் பார்க்க மாட்டோம். நினைச்ச நேரத்தில் அரசால் எதையும் செய்துவிட முடியாது என்பதே உண்மை.

   நீக்கு
  3. //கடவுள் ஒருநாள் எந்தவிதத்திலாவது தண்டனை கொடுத்தே தீர்வார்.// - இதுவும் ஒருவித நம்பிக்கைதானே.

   நீக்கு
  4. எனக்கு நம்பிக்கை அதிகம். அதுவும் கடவுள் கொடுக்கும் பதிலடி மிக வேகமாக எதிராளி தாங்க முடியாததாக அமைந்து விடுவதையும் கவனித்திருக்கிறேன்.

   நீக்கு
 19. //பொற்கை எல்லாம் கற்பனா பாத்திரங்கள். // - இதெல்லாம் இந்த கீதா சாம்பசிவம் மேடம் கண்ணில் படாதே.. உடனே நான் 'மதுரை இல்லை. அதனால் தெரியாது'ன்னு சொல்லிடுவாங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இது வரலாற்று சம்பவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கையை வெட்டிக்கொண்ட பொ பா வுக்கு, தங்கத்தால் கை செய்து பொருத்தியதை விட, ரப்பரால் செய்து பொருத்தியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். மற்றபடி, இதெல்லாம் உண்மையிலேயே நடந்தது என்று நினைத்தோம் என்றால் ...... .......

   நீக்கு
  2. அப்படி எல்லாம் இல்லை. அதற்கு பதில் ரொம்ப நீளமாகப்போயிடும். அதோடு பெரியவர் நம்பிக்கை வேறே. அதில் போய் நம் நம்பிக்கையை நடுவில் நுழைக்க வேண்டாம் என்னும் எண்ணம். இப்போ நீங்கள் கேட்டுவிட்டதால் சொல்கிறேன்.

   யானே கள்வன் எனச் சொன்ன மன்னன் நிஜத்தில் இருந்ததால் தானே சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் பிறந்தது. அது சரி, இவங்களோடு சிபிச்சக்கரவர்த்தியை விட்டுட்டீங்களே! :))))) இதெல்லாம் கற்பனை என்றால் நாயன்மார்கள் கதையும், பாண்டிமாதேவியின் பக்தியும், ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்துக்கும் அர்த்தமே இல்லாமல் போயிடும். இது என் தனிப்பட்ட கருத்து.

   நீக்கு
  3. கேஜிஜி சார்... ரப்பர் எப்போ கண்டுபிடித்தாங்க, உலோகத்தின் காலம் என்ன? பொற்கைப் பாண்டியன் கடைச்சங்ககாலப் பாண்டியர்களுள் ஒருவர்னு நினைக்கிறேன். கண்ணால் கண்டது மட்டும்தான் உண்மை என்றால், எந்த வரலாறும் பொய்தான். "வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று ஒருவர் சொன்னார் என்று இந்தக் காலப் பசங்கள்ட சொல்லிப்பாருங்க... சும்மா கதை விடாதீங்க என்பார்கள்.

   நீக்கு
  4. ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றைக் கூடக் கற்பனைனு சொல்பவர்கள் உண்டு. இதெல்லாம் ஒவ்வொருவர் கருத்து/நம்பிக்கை. மனிதருக்கு மனிதர் வேறுபடும்.

   நீக்கு
  5. அவர்கள் இவர்கள் அது இது எல்லாமே கற்பனை என்னும் இது தான் நமக்கான சாபக்கேடு...

   பிறிதொரு சமய நூல்களில் இறந்தவர் பிழைத்தார் என்று சொல்லப்படுவதைக் கேட்கும் போது மலர்கின்ற உள்ளம்
   திருநாவுக்கரசு விடத்தால் மாண்ட சிறுவனை மீட்டெடுத்தார் எனில் -
   போய்யா... போ... போய் வேற வேலையைப் பாரு!.. - என்று சொல்ல வேண்டியது...

   அரிது அரிது சைவ வைணவ
   நம்பிக்கைகளுடன் வாழ்தல் அரிது...

   நீக்கு
  6. சைவமென்றும் வைணவமென்றும் அன்றிருந்தது
   இன்றிருக்கிறது என்றுமிருக்கும் இந்துமதம்
   அரிப்பெடுத்தவர்கள் போகிறபோக்கில்
   எறிந்துவிட்டுச் செல்வார்கள் கல்லை
   எறிந்தாலென்ன.. என்ன செய்தால்தான் என்ன
   ‘மாடுமுட்டி கோபுரங்கள் சாய்வதில்லை
   மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை!’

   நீக்கு
  7. முதலில் அடுத்தவர்கள் பற்றிக் கவலைப்படுவதோ, அடுத்தவர்களைக் குறை சொல்வதோ தப்பு எனத்தான் நான் நினைப்பேன், நம் நம்பிக்கை நம்மோடு, அடுத்தவர் நம்பிக்கை அவர்களோடு...

   நீக்கு
  8. உமது நம்பிக்கை உம்மோடும், அடுத்தவர் நம்பிக்கை அவர்களோடும் இருக்கலாகாது என யார் சொன்னது இப்போது!

   நீக்கு
  9. அச்சச்சோ.. கெள அண்ணன் இங்க கொஞ்சம் ஓடி வாங்கோ.. ஏ அண்ணன் பொயிங்கிட்டார்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.. ஹையோ வைரவா.. நான் சொன்னது கீசாக்காவுக்கு... அதை மென்சன் பண்ணாமல் பதில் போட்டு விட்டேன் தப்பு என்மேல்தான் மன்னிச்சுக்கோங்கோ..

   //Geetha Sambasivam13 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 1:11
   ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றைக் கூடக் கற்பனைனு சொல்பவர்கள் உண்டு. இதெல்லாம் ஒவ்வொருவர் கருத்து/நம்பிக்கை. மனிதருக்கு மனிதர் வேறுபடும்.///

   இந்த மகாபாரதம், கம்பராமாயணம் கண்ணில பட்டுதா.. உடனே ஜம்ப் ஆகிட்டேன். அர்ச்சுனன் கண்ணுக்கு குருவித்தலை மட்டும்தான் தெரிஞ்சதாமே அப்பூடித்தான் மீக்கும் ஹா ஹா ஹா..

   ஏ அண்ணனுக்கு கிரிக்கட் மச் இல்லையே எனும் கோபத்தை அதிராமேல பொயிங்குறார்ர்... ஆஆஆஆஆ இதுக்கு மேல நான் இங்கின நிற்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈ.. மீ ஓடிடுறேன்ன்ன்..

   இது தெரியாமல்.. கீசாக்கா சோபாவில படுத்திருந்து ரிவி பார்க்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  10. நீங்கள் உங்கள் கையை நீட்டுவது சுதந்திரம்...

   அது என் முகத்தில் இடிபட்டால் சுதந்திரமா!..

   நீக்கு
  11. ///அர்ச்சுனன் கண்ணுக்கு குருவித்தலை மட்டும்தான் தெரிஞ்சதாமே அப்பூடித்தான் மீக்கும் ஹா ஹா ஹா..//

   ஹையோ ஹையோ பூனைக்கண்ணுக்கு குளத்து மீனும் புதரில் இருக்கும் சுண்டெலியும் னு தானே வரும் 

   நீக்கு
 20. எதைப் பற்றி எழுதினாலும் ஒப்பிட்டுப் பார்க்கும் ப்ளாக்கர் நோய்:) இதுவும் கொரானோ போல் தொற்றிக் கொண்டு விட்டதோ:)

  நல்ல கேள்வி பதில்கள் .

  பதிலளிநீக்கு
 21. //சின்ன எழுத்துக்களில் குடி உடல் நலத்துக்குக் கேடு என்று சொல்லிவிட்டு // - எனக்கும் இந்தச் சந்தேகம் ரொம்ப காலமா உண்டு. சிகரெட், கஞ்சா, பீடி, குடி, குட்கா, புகையிலை என்று இவை எல்லாமே உடல் நலத்துக்குக் கேடுதான். அப்படி இருக்கிறபோது, அரசாங்கம், அந்த ஃபேக்டரிகளை, தொழிலை இழுத்து மூடாமல், மக்களைப் பார்த்து 'நீ இதைச் செய்யாதே' என்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கா? குட்கா தயாரித்தால் மரண தண்டனை மட்டுமல்ல, குடும்பச் சொத்துகள் அனைத்தும் பற்முதல் செய்யப்படும் என்று சொன்னால் போதாதோ? எதுக்கு விளம்பரம், சினிமாக்களில் சின்ன எழுத்துகள் எல்லாம்?

  குடி, குட்கா போன்றவைகளை அனுமதிக்கும் அரசு, ஏன் போதை மருந்துகள், கஞ்சா போன்றவற்றையும் அனுமதிக்கக்கூடாது? அவைகளும் தொழில்கள் இல்லையா?

  பதிலளிநீக்கு
 22. //& அவருடைய அட்ரெஸ் குடுங்க. நேரில் போய்ப் பார்த்து, ரெண்டு தட்டு தட்டிவிட்டு வந்துவிடுகிறேன். // விலாசம் தெரியாது. தெரிந்தாலும் சொல்ல முடியாது. நிலைமை அப்படி! அப்போவும்/இப்போவும்/எப்போவும் அவங்களுக்குக் கஷ்டம் தான். கணவன் ஒத்துழைப்பே இல்லை. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. உங்களுக்குத் தெரியாது அவங்க நிலைமையோ, அவங்களையோ! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அப்போது கணவன் தான் அவளுக்குக் கீழ்ப்பட்டவன் என ஆகிவிடுகிறானோ?// - எதையும் கேள்வி கேட்கும் காலம் இது. இருவரில் யார் முக்கியம், யார் பெரியவர் என்ற கேள்வியே எழவில்லை. பழைய நூல்களில் பெண் என்பவள் ஆயுளுக்கும் அடிமைதான், திருமணம் வரை பெற்றோருக்கு, திருமணம் ஆனபின் கணவனுக்கு, பிறகு மகனுக்கு என்றே சொல்லியிருப்பதால் அதனைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். பெண் என்பவள், அந்த அந்த ஸ்டேஜில் அந்த அந்த ஆணின் பாதுகாப்பில் இருப்பவள் (அதாவது அவளைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு) என்பதே இதன் அர்த்தம்.

   சில ஆண்களிடம் பெண் தன்மை அதிகமாக இருக்கும், சில பெண்களிடம் ஆண் தன்மை அதிகமாக இருக்கும். அப்போது மற்றவர் அடங்கி நடப்பர் (தலைவன்/தலைவியாக ஏற்றுக்கொண்டு. IE LEADERSHIP.

   மற்றபடி இயற்கை படைத்துள்ள விதத்தை வைத்து, 'குழந்தை பெறுவதால்' பெண் உசத்தி என்றும், எங்க ஊர் சுத்தினாலும் எப்போ சுத்தினாலும் ஆணுக்கு பயம் கிடையாது என்பதால் ஆண் உசத்தி என்றும் நாம்தான் சொல்லிக்கணும். அறிவியல் பூர்வமாக, அறிவுத் திறமையில், மூளை செயல்படுவதன் திறமையில், பெண் ஆணை விடப் பலமடங்கு உசத்தி. பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் இதனை நாம் பார்க்கலாம்.

   ஆண் வயதாக வயதாக, அன்னையை மனைவியின் ரூபத்தில் காண்கிறான் அல்லது அவன் குழந்தைத் தன்மை உடையவனாக மாறுகிறான் என்பதுதான் சரியாக இருக்கும்.

   நீக்கு
  2. ஆஹா ! நெல்லை எங்கேயோ போயிட்டீங்க!

   நீக்கு
  3. ///கௌதமன் 13 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 1:21
   ஆஹா ! நெல்லை எங்கேயோ போயிட்டீங்க!//
   இல்லை இப்போ கொரோனாவால அவர் எங்கும் போகவில்லை:) சென்னையில்தான் இருக்கிறார் ஹா ஹா ஹா:))

   நீக்கு
 23. இந்த உரையாடலில் கீதா ரங்கன் கலந்து கொள்ளாதது ஒரு குறைதான்.கோமதி அரசு அவர்களும் இன்னும் வரவில்லை. தேம்ஸ் நதி தீரத்தினர் மொள்ளத்தான் வருவாங்க.

  பதிலளிநீக்கு
 24. //& அவருடைய அட்ரெஸ் குடுங்க. நேரில் போய்ப் பார்த்து, ரெண்டு தட்டு தட்டிவிட்டு வந்துவிடுகிறேன். //
  நானும் வரேன் நானும் வரேன் :))))))))  நீங்க அடிக்கிறதை பார்க்கணும் :))

  பதிலளிநீக்கு
 25. //& கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத சுதந்திர வெளியாக இருப்பதால்தான் பிளாகர் உலகம் சுவாரஸ்யமாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை எங்கள் வாசகர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை எங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களில் வசைச் சொற்கள் இன்றி எழுத முழு உரிமை உண்டு. ////

  என்னைப்பொறுத்தவரை வலைப்பக்கம் வருவது உரையாடுவது புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விட்டுச்செல்வதுன்னு தான் நான் இருக்கின்றேன் .இருக்கும்வரைக்கும் சந்தோஷமா ஜாலியா இருப்போம் .அதி தீவிர ஆர்ராய்ச்சிக்கெல்லாம் போறதில்லை :) 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆஆஆஆஆ அஞ்சு இவ்ளோ சீரியசாகப் பேசி நான் இண்டைக்குத்தான் பார்க்கிறேன் ஹா ஹா ஹா

   நீக்கு
  2. அதானே! கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 26. புதனன்று பூக்கின்ற
  வினா விடை - அதை
  விடியலில் படிப்பதற்கும்
  இணையத்தில் தடை..

  அணியுடைய் தமிழிலே
  அரிய தொருநடை
  வேறெங்கும் உண்டோ
  இதற்கு இணை!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வர கவி உடனே கவிதையாக பாடியது நன்றாக இருக்கிறது

   நீக்கு
  2. வேறெங்கும் உண்டோ
   இதற்கு இணை என்பதற்குப் பதிலாக
   வேறெங்கும் உண்டோ
   இத்தகு படை

   என்று சொல்லியிருக்கலாமோ?

   நீக்கு
  3. அவர் இன்னும் அடை ஞாபகத்தில் தான் இருக்கிறாரோ?

   நீக்கு
  4. சபாபதிக்கும் காயத்ரிக்கும் நல்லபடியாக கல்யாணம் நடந்து வாழ்க்கையை ஆரம்பித்து பால பஞ்சாட்சரத்துக்கு ஒரு பைங்கிளியித் தேடிக் கொண்டு இருக்கிறர்களாம்...

   நடையுடையார் அன்பினிலே
   நாள் தோறும் நயந்தாலும்
   விடையுடையார் கோயிலையே
   விளம்பு..

   நீக்கு
 27. கேள்விகளும், பதில்களும் அருமை.

  அதைவிட கலந்துரையாடல் போல் இருக்கும் பின்னூட்டங்களையும் படித்தேன்.
  நன்றாக இருக்கிறது.

  கீதா சாம்பசிவம் நான் சகோ துரை அவர்கள் பதிவுக்கு போட்டு இருந்த பின்னூட்டத்தை போட்டு இருந்தார்கள்.

  நான் இருந்த ஊர்கள் (சிறு வயது முதல்) பற்றி வந்தால் என் நினைவுகளை பகிர்ந்து கொள்வேன்.
  அதுவும் பல வருடம் இருந்த மாயவரம் பற்றி வந்தால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.


  //பாயாசம் என்று சொன்னால் நன்கு நீட்டி அனுபவித்துப் பார்க்க முடிகிறது. பாயசம் என்றால் சட்டென்று கப்ல வாங்கி லிப்ல சுவைக்காமல் தொண்டையில் ஊற்றிக்கொள்வதைப் போல்
  தோன்றுகிறது//

  இது நன்றாக இருக்கே! கெளதமன் சார்.

  இப்போது ஒரு மடக்கு தானே கப்பில் பாயசம் வைக்கிறார்கள். அதற்கு நீங்கள் சொன்னது சரிதான் அது பாயாசம் இல்லை.

  சிலர் தயிர் சாதம் சாப்பிட்டபிந்தான் பாயசம் சாப்பிடும் வழக்கம்.நாங்கள் ராஜ பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று கிண்டலாக சொல்வார்கள்.. இலையில் சாப்பிடும் போது பாயசத்துடன் அப்பளம், பூந்தி எல்லாம் கலந்து சாப்பிடுவார்கள் சிலர், (எங்கள் ஊர் பக்கம்.)
  பாயசம் பரிமாறியவுடன் அதன் மேல் பூந்தியை போட்டுக் கொண்டு வருவார்கள் கல்யாணவீடுகளில்.

  பானு என்னை தேடியதற்கு நன்றி.
  இப்போது காலை நேறம் வர முடிவது இல்லை. குழந்தைகள், காலை நேரம் பேசுகிறார்கள். பேரன் காலை நேரம் விளையாடுகிறான், உறவினர்கள் நலம் விசாரிக்கிறார்கள். அதனால் மெதுவாக மதிய ஓய்வு நேரத்தில் தான் வர முடிகிறது.

  மெதுவாக வந்ததால் எல்லோர் பதில்களையும் படிக்க முடிந்தது.
  நிறைய விஷயங்கள் அலசபட்டு இருக்கிறது.


  பதிலளிநீக்கு
 28. வர கவி உடனே கவிதையாக பாடியது நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 29. //நெல்லைத்தமிழன் :

  இன்றைக்கு கேள்வி கேட்டவர்களும் இருவர். பதில் சொன்னவர்களும் இருவர். இது யதேச்சையாக நிகழ்ந்ததா?//

  ஹையோ ஆண்டவா?:)) இதை எல்லாம் படிக்கவோ என்னை இன்னும் காசிக்குப் போக விடாமல் பிளேனைத்தடுத்து வைத்திருக்கிறாயப்பனே:)!!!.. என்னால முடியல்ல:)).. கொரோனா வந்தபின்பு மக்களுக்கு என்ன செய்கிறோம் எப்படி சிரிக்கிறோம் எப்படிச் சாப்பிடுறோம் என ஒன்றுமே புரியுதில்லை இப்போ:)).. விடுங்கோ நான் தேம்ஸ்க்கே போயிடுறேன்ன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா கண்ணைத் தொறந்து பாருங்க . தேம்ஸ் பக்கத்திலேதான் இருக்கீங்க.

   நீக்கு
 30. //ஒரு பிரச்சனையில் நியாய தர்மம் சொல்லி, தீர்ப்புச் சொல்ல, அந்தப் பிரச்சனையில் சம்பந்தப்படாதவரால் முடியும் என்றே நினைக்கிறேன். உங்கள் அபிப்ராயம் என்ன?//

  தீர்ப்புச் சொல்வது ஆரும் சொல்லலாம், வெளியே சொல்ல முடியாவிட்டாலும் நீதி ஞாயம் எது என்பது மனதில் தெரியும்.. ஆனால் அந்தத் தீர்ப்பை, அல்லது தாம் செய்தது தவறு என எல்லோரும் சொல்கிறார்கள் என்பதனால அதை தவறு என ஏற்றுக் கொள்வோம் எனும் மனப் பக்குவம், அந்த பிரச்சனைக்கு உள்ளானோரின் மனதில் தோன்றினால் மட்டுமே சாத்தியம்.. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதுபோல இருப்போருக்கு முன்னால் எந்தத் தீர்ப்பும் பலிக்காதே:(.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாதாரணமாக அதிரா தெளிவாகத்தானே பேசுவார்? இன்று என்ன ஆச்சு?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா நான் தெளிவாத்தான் பேசியிருக்கிறேன் பானு அக்கா, நீங்கதான் குழம்பிட்டீங்க ஹா ஹா ஹா:))

   நீக்கு
  3. எனக்கும் அதிரா எழுதியிருப்பது குழப்பமாய்தான் இருக்கு.

   நீக்கு
  4. தீர்ப்பு என்பது அதை ஏற்றுக்கொள்பவரின் மனநிலையை பொறுத்து .அதாவது 
   சிலர் இருப்பாங்க தான செய்ததுதான் சரி என்று (இவர்கள் முயலுக்கு 3 கால் என்று அடம்பிடிப்போர் இப்படிப்பட்டவங்ககிட்ட சம்பந்தப்படாதவர் பொதுவான நீதிபதி ஒரு தீர்ப்பை சொன்னாலும் ஏற்க மாட்டாங்க மனம் முழுக்க பிடிவாதக்  கொழுப்படைத்தவர்கள் .இவர்கள் தான் செய்தது மட்டுமே சரி என்ற ஒரே crooked மெண்டாலிட்டியுடன் இருப்போர்  பிரச்சினையில் நியாயம் தர்மம் எல்லாம் இருப்பதை உணரமுடியா கல்மனதுள்ளோர் இந்த மனநிலையுள்ளவர்கள் எந்த தீர்ப்பையும் ஏற்க மாட்டாங்க அது கடவுளேயானாலும் அவரிடமும் வியாக்கியானம் பேசுவார்கள் ..
   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சாமீ இந்த பிஞ்சு எப்படியெல்லாம் என்னை யோசிச்சி எழுத வச்சிட்டார் பாருங்க 

   நீக்கு
  5. நானா சொன்னது சரியா பிஞ்சு :) நான் சரியா புரிஞ்சிட்டேண்னு ஒழுங்கா வந்து ரிப்லை கொடுக்கவும் 

   நீக்கு
  6. ஆங்ங்ங் இதுக்குத்தான் ஒரு செக் வேணுமென்கிறது.. கரீட்டு அஞ்சு கரீட்டூஊஊஊஊஊஊ.. அப்பூடியே புட்டுப் புட்டு வச்சிட்டீங்கள்....
   ஓகே நான் இதனை ஒத்துக் கொள்கிறேன் எனச் சொன்னால் மட்டும்தானே அங்கு தீர்ப்பு முடியும், இல்லை எனில்.. தீர்ப்பு தப்பு என்பது போலத்தானே இருக்கும்... குற்றவாளிக்கு..

   இந்த மாதம் சம்பளம் 50 சதம் கூட்டப்படுகிறது அஞ்சுவுக்கு:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 31. //பாயசத்தில் உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது?//

  ஹா ஹா ஹா இது ரெம்ம்ம்ம்ப முக்கியமாக்கும் கர்ர்:)) சவ்வரிசி வாங்கவே வழியில்லை இங்கு... இருந்தாலும் மீயும் ஜொள்றேன்.. எங்கள் வீட்டில் பாயாசம் விரும்பிகள் இருவர்.. சின்ன மகன் மற்றும் நான்.. எனக்கு சேமியாப் பாயாசம் மட்டுமே பிடிக்கும் அதுவும் ஆராவது செய்து தரோணும்:)) நான் செய்து சாப்பிட மாட்டேன்:)).. சின்னவருக்கு சவ்வரிசிப் பா.... ஏனையோர் நாக்கில்க்குட வைக்க விட மாட்டினம் கர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 32. ஹா ஹா ஹா கீசாக்கா இன்னும் திருமண பந்தத்தை விட்டு வெளியே வரவில்லை:))

  கீசாக்கா என்னதான் போராட்டம் நடத்தினாலும்... உபதேசம் செய்தாலும் காசு கட்டி கிளாஸ்களுக்கு அனுப்பினாலும்.. திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

  என்பதைப்போலத்தான் சில ஆண்களும்.. அவர்களை ஒண்ணும் பண்ண முடியாது.. ஆனா இதுக்குப் பின்னால் இருக்கும் ஒரு பாதிக் காரணம் அந்த ஆணின் பெற்றோர்.. அவர்களின் வளர்ப்புமுறை எனத்தான் சொல்ல வேண்டும்... திருமணமாகும்போது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு புத்திமதி சொல்கின்றனர்... குடும்பத்தோடு ஒத்துப்போகோணும், கணவனை எப்படிக் கவனிக்கோணும்... சமையல் சொல்லிக் குடுத்து என்னமோ எல்லாம் சொல்லி அனுப்புகின்றனர் எல்லோ..

  அப்படித்தான், ஒரு ஆணுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும் பெற்றோர்.. மனைவியையும் அவர் குடும்பத்தையும் எப்படி நடத்த வேண்டும் என... அல்லது பெற்றோர் மிகவும் நல்ல நடத்தையாக நடந்து வந்தால் அவர்களைப் பார்த்து வளரும் பிள்ளையும் மனைவியை நன்கு பார்ப்பார்.

  எங்கட அப்பா, எனக்கு இருக்கச் சொல்லிப்போட்டு நிறையப் போதிச்சார்ர் திருமணத்தின் போது ஹா ஹா ஹா.. அதாவது, முக்கியமாக நீ அவரை சந்தேகப்பட்டிடக்கூடாது ஏனெனில் அவரின் தொழில் அப்படி என்பதால்.. அடுத்து அவருக்கு எந்நேரமும் அழைப்பு வரலாம், வேலையால் வீட்டுக்கு வர தாமதமாகலாம் இதனால நீதான் அவருக்கு பக்க பலமாக நின்று.. அஜஸ்ட் பண்ணி, சண்டை பிடிக்காமல் புரிஞ்சு நடக்கோணும் இப்படிப் பல... ஹா ஹா ஹா சத்தியமாக அப்போது நான் மனதில நினைச்சேன் இதை எல்லாம் ஏன் அப்பா சொல்கிறார், எனக்குத்தான் புரிஞ்சு நடக்கத் தெரியுமே என:)) ஹா ஹா ஹா..

  இதேபோல என் கணவரின் அப்பாவும் அடிக்கடி ஏதும் அட்வைஸ் சொல்வார் கணவருக்கு, சொல்லிப்போட்டுச் சொல்வார்... அதிராவோடு கலந்து பேசி அதிராவின் விருப்பப்படியே முடிவு எடுங்கோ, நாம் சொல்லி விட்டோம் என்பதற்காக டக்கென முடிவு எடுத்திடக்கூடாது என்பார்... இல்லை எண்டாலும் நான் விட்டிடுவனாக்கும் ம்ஹூம்ம் ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்போ உங்களை ஓட வைக்கும் ஒரு கேள்வி! இந்தக் கொரோனாவை இறைவன் ஏன் தடுக்கவில்லை? கொரோனாவுக்கு பயந்து அவன் கோயிலையே மூடிக் கொண்டு உள்ளே அல்லவோ இருக்கிறான்?//

   கீசாக்கா, கடவுளால ஒவ்வொருத்தரையும் தனித்தனியே கவனிக்க முடியாது என்பதாலதானாம் தாயைப் படைச்சார்ர்..

   அப்பூடித்தான், உலகத்தில அதிகரிச்சுப்போன அக்கிரமங்களைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், தன்னால நேரில போய் ஒவ்வொருத்தரையும் கொல்ல முடியாது என்பதனாலதான் கொரொனாவைப் படைச்சார்ர்.. ஹா ஹா ஹா ஹையோ இது “அதிரதத்துவம் 2020”:) மீ தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்:))..

   இன்னும் கொரோனா முடியவில்லையே.. இன்னும் எவ்வளவு பேர் போகப்போகிறோமோ.. அதுவும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

   நீக்கு
  2. பாதிப்பு அப்படி அதிரடி! அதிலும் அந்தக்கணவனின் உடன் பிறந்தவர்கள் எல்லாம் நன்றாகவே குடும்பத்தை நடத்துகிறார்கள். நல்லவேளையாக இந்தப் பெண்ணுக்கு அவங்க பக்கபலமாகவும் இருக்காங்க! இல்லைனால் பைத்தியமே பிடிச்சுடும். சில வீடுகளில் கணவன் வெறுத்தால் அவன் அப்பா, அம்மாவில் இருந்து கூடப்பிறந்தவங்க வரை எல்லோருமே வெறுப்பார்கள். அந்த மாதிரி இல்லையேனு சந்தோஷப்பட்டுக்கணும்.

   நீக்கு
  3. அச்சச்சோ நான் காவனிக்காமல் மற்றக் கொமெண்ட்டை பதிலளி யில் கொடுத்திட்டேன்.

   உண்மை கீசாக்கா.. சிலரின் செயல்களைப் பார்க்கும்போது, ரி வி யை உடைச்சுக்கொண்டு போய் அடிக்கலாமோ எனக் கோபம் வரப்பார்க்குது ஹா ஹா ஹா.. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. ஆனா இப்போ காலம் மாறிப்போச்சு... இப்போ ஆ எண்டாலும் டிவோஸ், ஊ எண்டாலும் டிவோஸ்:))) அதனால இருவரும் நல்ல படியாக ஒழுங்காக இருந்தால் தான் குடும்பம் நடக்கும்.. அதை இப்போதைய தலை முறை நன்கு புரிஞ்சிருக்குது.

   ஊரில ஒருவர் ஒரு பெண்ணை விரும்புகிறார்.. இப்போதைய ஜெனரேசன்... அவர் குண்டாக இருக்கிறார், எக்ஸசைஸ் எதுவும் பண்ணுவதில்லை, அப்பெண்ணோ நல்ல மெல்லிசு, டெய்லி ஜிம் போவா ஃபிட்டாக இருக்கிறா, இந்த போயிடம் போய்க் கெஞ்சுவாவாம் ஜிம் க்கு வரச் சொல்லி, இவர் போக மாட்டார்ர்.. திருமணம் முடிக்க இரு வீட்டாரும் சம்மதம்...

   இதைக் கேட்ட எங்கட மூத்தவர் சொன்னார். இப்படி அவர் குண்டாக இருந்தால், அந்த கேள் பின்பு டிவோஸ் எடுத்திடுவா, இவர்தான் தன்னை மாற்றி மெலியோணும் என்று.. இதுதான் இன்றைய தலைமுறை.. இனிமேல் காலத்தில் இந்தப் பெண்ணடிமைப் பாச்சா எல்லாம் பலிக்காதாக்கும்:)) ஹா ஹா ஹா

   அப்போதான் என்னால நம்ப முடியவில்லை... எங்கட மகன் இப்பூடி யோசிக்கும் அளவுக்கு வளர்ந்திட்டாரே என ஷொக்ட்ட்ட்ட்ட் ஆகிட்டேன் ஹா ஹா ஹா..

   நீக்கு
  4. தொடர் கருத்துகளில் ஆரம்பத்தில் உள்ள,அதிராவின் முதல் கருத்து superb. Excellent.

   நீக்கு
 33. //எதை எழுதினாலும் (அது கற்பனைக் கதையாக இருந்தாலும்) பொதுவாக வைத்துப் பார்க்காமல் அதில் தன்னைப் பொருத்தி பலர் பார்க்கிறார்களே! இது என்ன பிளாக்கர் நோயா?..//

  இதுபற்றிக் கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்.. அர்த்தமுள்ள இந்துமதத்தில் என நினைக்கிறேன்.

  இது நோயல்ல மனித இயல்பு.. எதைப்பார்த்தாலும், படிச்சாலும் அதில் நம்மை சம்பந்தப்படுத்தியே பார்ப்பது.. ஒரு திருமண வீட்டுக்குப் போனால்.. அங்கு நாம் மணப்பெண்ணாக இருப்பதை நினைப்பது, செத்த வீட்டுக்குப் போனால், செத்தது நாம் ஆக இருப்பின் எப்படி இருக்கும் என நினைப்பது... லொட்டரி விழுந்தால், எனக்கு விழுந்தால் எப்படி இருக்குமென நினைப்பது.. இப்படி... நம்மை சம்பந்தப்படுத்தாமல் வாழ்க்கை இல்லைத்தானே.. அதுதான் புளொக்குகளிலும்..

  பதிலளிநீக்கு
 34. //பத்திரிகை வாசிப்பு மாதிரி பொது வாசிப்பு என்ற பயிற்சிக்கு பிளாக்கர் உலகில் என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.//

  பத்திரிகை போல புளொக் படிக்கவும் பணம் அறவிட வேண்டும்:)), அப்போதான் தமக்குப் பிடித்ததை மட்டும் பணம் கொடுத்துப் படிப்பர்:)).. அப்போதான் நமக்குப் புரியும், மக்களுக்கு என்ன பிடிக்கிறதென்பது..
  யாரும் வேணுமென்று எதையும் ஒதுக்குவதில்லை, பிடித்ததைப் படிக்கிறார்கள், கொமெண்ட் போடுகிறார்கள் .. பிடிக்காததை விட்டு விடுகிறார்கள்.. மற்றும்படி வேண்டுமென ஆரும் ஆருடைய புளொக்கையும் படிக்காமல் விடுவதில்லை என நினைக்கிறேன்.

  இதுவும் ஒருவிதத்தில் சினிமா பார்ப்பதைப்போலத்தானோ என நான் நினைப்பதுண்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///ஆரும் ஆருடைய புளொக்கையும் படிக்காமல் விடுவதில்லை என நினைக்கிறேன்.//

   :)))))))))))

   நீக்கு
  2. அல்லோ மிஸ்டர்.. இந்த வசனட்த்ஹின் இம்போட்டனான சொல்லை கொப்பி பண்ணாமல் விட்டு விட்டீங்கள்...

   ///வேண்டுமென/////

   நீக்கு
  3. வேணாம் என் வாயை கிளற வேண்டாம் 

   நீக்கு
  4. haa haa haa me escapeeeeeeeeeeeeeeee

   https://i.ytimg.com/vi/Ln2j-lTQ8dw/maxresdefault.jpg

   நீக்கு
  5. எனக்குப் புரியவில்லை. ஏதேனும் உள்குத்து இருக்குமோ?

   நீக்கு
  6. எனக்கும்தான் புரியவில்லை கெள அண்ணன்.. அப்போ உள்... குத்துத்தான் போலும்:)) ஹா ஹா ஹா.. மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)

   நீக்கு
  7. @Gowthaman sir உள்குத்து எல்லாம் இல்லை சார் :)

   நீக்கு
  8. எனக்கு நேரடியா சொல்லித்தான் பழக்கம் ஆனா பிஞ்சு என்னை சொல்ல விடாம தடுக்கிங் :) 

   நீக்கு
  9. அதை கேள்வியா கூட கேட்க விட மாட்டேங்குறார்  பிஞ்சு ஞானி ஈ :)

   நீக்கு
  10. //Angel13 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 7:11
   அதை கேள்வியா கூட கேட்க விட மாட்டேங்குறார் பிஞ்சு ஞானி ஈ :)//

   ஹா ஹா ஹா இந்தக் கொரோனாக் காலாம் முடியட்டும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ:))

   நீக்கு
  11. //பத்திரிகை போல புளொக் படிக்கவும் பணம் அறவிட வேண்டும்:)), அப்போதான் தமக்குப் பிடித்ததை மட்டும் பணம் கொடுத்துப் படிப்பர்:)).. அப்போதான் நமக்குப் புரியும், மக்களுக்கு என்ன பிடிக்கிறதென்பது..// - அர்த்தமுள்ள பதில். சினிமாக்களைப் பத்திச் சொல்வாங்க. என்னதான் கலைப் படைப்பு என்றாலும், மக்கள் அதை விரும்பினால் அது 'வெற்றிப்படம்'. இல்லைனா அது 'தோல்விப்படம்', மக்களைக் குறை சொல்லி பிரயோசனமில்லை.

   தேர்தலிலும் அதே கதைதான். என்னதான் காள் காள் என்று பலர் கத்தினாலும், பெரும்பான்மை மக்களுக்குப் பிடித்த கட்சிதான் ஆட்சிக்கு வரும்.

   படிக்கறவங்க ரசனை மாறணும் என்று நினைத்தால், அது மிகக் கடினமான வேலை. எது உயர்ந்த ரசனை என்பதும் விவாதத்துக்கு உரியது.

   நீக்கு
  12. //படிக்கறவங்க ரசனை மாறணும் என்று நினைத்தால், அது மிகக் கடினமான வேலை. எது உயர்ந்த ரசனை என்பதும் விவாதத்துக்கு உரியது.//

   சூப்பர் நெல்லைத்தமிழன்.... நம்மை மக்கள் விரும்புகிறார்கள் இல்லையோ என சந்தேகப்படாமல், மக்கள் எதை விரும்புகிறார்கள் என நினைச்சு, நம்மை மாத்துவதுதான் மேலானது என நினைக்கிறேன்... அடுத்தவர்களைச் சந்தோசப்படுத்துவதில்தானே அதிக சந்தோசம் கிடைக்குது...

   நீக்கு
  13. //காள் காள் என்று பலர் கத்தினாலும்//

   ஹா ஹா ஹா நாங்கள் இதை.. வாள்/ழ் வாள்/ழ் எனக் கத்துகிறார்கள் என்போம்:)) எந்த ழ/ள பொருந்துமோ தெரியேல்லையே இதுக்கு:))

   நீக்கு
 35. ///தன்னால நேரில போய் ஒவ்வொருத்தரையும் கொல்ல முடியாது என்பதனாலதான் கொரொனாவைப் படைச்சார்ர்.. ஹா ஹா ஹா ஹையோ இது “அதிரதத்துவம் 2020”:) மீ தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்:))..//

  நம் சோகம்( the sad stories we have witnessed ) பிறரை தாக்ககூடாதில்லையா 
  "வாய் திறந்து பேச முடியாமல் இருக்கேன் :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா அஞ்சு... நான் நினைப்பது, நாமும் ஒன்றும் நல்லவர்கள் என்றில்லை:)).. எல்லா மனிதர்களிடமும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு... சிலரிடம் சில விகிதம் கூடிக் குறையும் அவ்வளவே.... விதியில எழுதப்பட்டிருந்தால்.. கொரோனா வராமலேயே மரணம் நமக்கு வரலாம்...

   மரத்திலே தொங்கிய பூனைக்குட்டியை, பயர் எஞ்சினை அழைத்துக் காப்பாற்றினார்களாம்.. காப்பாற்றி விட்டு, பாய் சொல்லிப்போட்டு அவர்கள் அந்தப் பயர் எஞ்சினை எடுத்தபோது, இந்தக்குட்டி, அந்த சில்லுக்குள்ளேயே ஒளிச்சிருந்து, இறந்துவிட்டது... அப்போ இதை என்ன என்பது.

   நான் நம்புவது விதியை..

   “விதி தவறாக இருக்குமேயானால், தெய்வம் கண்களை மூடிக் கொள்ளும், நாம் அழுது பயனில்லை”

   சொன்னவர் கண்ணதாசன் அங்கிள்..

   நீக்கு
  2. இதில் விதியை விட அந்த கேர்லெஸ் பூனைக்குட்டியின் ஒனறைத்தான் நான் குற்றம் சொல்வேன் .குழந்தையை கஷ்டப்பட்டு இறக்கி அதற்க்கு அரவணைப்பை தராமல் என்ன செஞ்சிட்டிருந்தார் ?? .இதற்கு அதை மேலே விட்டிருக்கலாம் 

   நீக்கு
  3. ///கொரோனா வராமலேயே மரணம் நமக்கு வரலாம்.//

   இப்போதுள்ள நிலைமையெல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு இந்த  சோ கால்ட் விதி இதெல்லாம் என்னை atheist ஆக்கிடுமோன்னு .சரி ஒன்று கேட்கின்றேன் எந்த வெளிதொடர்புமில்லாதோருக்கு எப்படி கொரோனா வந்தது அவர்களுக்கு பரப்பிய ஜந்துக்கள் நல்லா உண்டு தின்று திமிரெடுத்து உயிர்வாழும்போது எதற்கு ஒன்றுமறியாத அப்பாவிகள் மரிக்கணும் ?. எந்த  ஒரு உயிரும் நோய் வந்து பலகீனமடைந்து போவது இயற்கை இந்த நோய் ஜீன் குறைபாட்டாலோ இல்லை வேறெதாலோ varallai ஆனால் இந்த நோயை ஒருவருக்கு கொடுத்து அதுவும் அவரறியாமல் கொடுத்து அவரை நீ வாழ்ந்தது  போதும்னு அனுப்பி வைப்பது எவ்விதத்தில் நியாயம் ? மீண்டும் சொல்கிறேன் இப்போதுள்ள நிலைமையெல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு இந்த  சோ கால்ட் விதி இதெல்லாம் என்னை atheist ஆக்கிடுமோன்னு

   நீக்கு
  4. ஆஆஆஆஆஆஆவ் அஞ்சு கொஸ்ஸ்ஸன் மார்க் போட்டிட்டா, கெள அண்ணன் இது நெக்ஸ்ட் வீக்குக்கான கொஸ்ஸனூஊஊஊஊஊ நோட் பண்ணிக்கோங்க:)) ஹா ஹா ஹா

   நீக்கு
  5. அந்த ஓனரும் எவ்வளவு தூரம் கவலைப்பட்டிருப்பா... என்ன பண்ணுவது.. இதைத்தான் விதி என்கிறோம்.. அதாவது, நாம் போகும் ஸ்ரேஸன் வந்துவிட்டால் எப்படியும் இறங்கித்தான் ஆகோணும்.. பூஸ்குட்டிக்கு நேரம் வந்துவிட்டது, அதனாலதான் அந்த ஓனரின் கண்ணைக் கட்டிப்போட்டு விட்டது விதி, இல்லை எனில், மடியிலேயே தானே வச்சுத் தடவிக்கொடுப்போம் இப்படி ஒன்று நிகழ்ந்தால்.

   நீக்கு
  6. ஹ்ம்ம் உண்மைதான் எல்லாரும் நம்மைப்போல் இருக்கணும்னு எதிர்பார்ப்பதும் தவறுதான் .ஒரு முறை ஜெசி இரவு விண்டோ வழியா மல்டிகூட குதிச்சி வெளியேறிட்டா மீண்டும் உள்ளே வரத்தெரியாம ஓட்டுக்கு மேலேறி நைட்டெல்லாம் அழுகை எங்களுக்கு சத்தம் கேட்கவில்லை மகள் நினைச்சாவம் வேறே எதோ பூனைன்னு .காலை நானா புறாக்களை பார்க்க தோட்டத்துக்கு போன அம்மே அம்மேன்னு கீச்சு குரலில் சத்தம் ஏணிபோட்டு கணவரை  ஒட்டுக்கு ஏற்றி எடுத்து அப்படியே வச்சிருந்தேன் அரைமணிநேரம் அப்பவும் படபடப்பு நிற்க நேரமாச்சு ஜெசிக்கு .அப்படித்தானே அந்த பூனைக்குட்டியம் பயத்தில் இருந்திருக்கும் 

   நீக்கு
  7. ///பிஞ்சு ஞானி அதிரா:)13 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 7:51
   ஆஆஆஆஆஆஆவ் அஞ்சு கொஸ்ஸ்ஸன் மார்க் போட்டிட்டா, கெள அண்ணன் இது நெக்ஸ்ட் வீக்குக்கான கொஸ்ஸனூஊஊஊஊஊ நோட் பண்ணிக்கோங்க:)) ஹா ஹா ஹா//

   Garrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

   நீக்கு
  8. //ஜெசி இரவு விண்டோ வழியா மல்டிகூட குதிச்சி வெளியேறிட்டா மீண்டும் உள்ளே வரத்தெரியாம ஓட்டுக்கு மேலேறி நைட்டெல்லாம் அழுகை எங்களுக்கு சத்தம் கேட்கவில்லை//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) குழந்தை அழுததுகூடக் கேட்காமல் என்னாஆஆஆஆஅ நித்திரை வேண்டிக்கிடக்கூஊஊஊ:)) ஹா ஹா ஹா...

   நீக்கு
 36. இப்போ கிட்டத்தட்ட ஒரு மாதமாக எங்கள்புளொக் மட்டும் ரி..ஃபிறெஸ் பண்ணினால்.. நோர்மல் ஆக கொஞ்சம் ரைம் எடுக்குது.. முன்பு அப்படி இல்லை.. ஏனோ தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும்தான் எங்கள் பிளாக் சமீபமா  திறக்கவோ refresh செய்ய ரொம்ப லேட்டாகுது 

   நீக்கு
 37. எங்கள் ப்ளாக் தடங்கல்கள் புரிகிறது. கணினியில் அல்லது ஐபாட் மூலம் பார்க்கும்போது அதிக நேரம் எடுக்கின்றது என்று தெரிய வந்துள்ளது. எனக்கும் இதே அனுபவம். எங்கள் ப்ளாக் மொபைல் மூலமாக படிப்பவர்களுக்கு எதுவும் பிரச்னை இல்லை. சில மாற்றங்களை எங்கள் ப்ளாக் அமைப்பில் அடுத்த சில நாட்களில் செய்ய தீர்மானம் செய்துள்ளேன். ஏற்கெனவே சிலவற்றை செயல்படுத்தத் தொடங்கிவிட்டேன். விரைவில் பிரச்னை தீர்க்கப்படும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!