ஞாயிறு, 17 மே, 2020

தலைக்காவேரி பயணம்.


              
நாம  தலைக்காவேரி போற அன்றைக்குத்தானா வருணனும் விசிட் செய்யணும்?


வருணன் கூடவே வந்தாலும் சாலையில் தண்ணீர் இல்லை! 


ஆமாம், நந்தி கருப்பா வெள்ளையா?


நந்தி குறுக்கே வந்தபோதே ....


நினைத்தோம்.. தடங்கலுக்கு வருந்தவேண்டிவரும் என்று.... 

இப்படி சாலையும் கூரையும் கூடியிருந்தால் குடித்தனத்துக்கு ஆகாதாம்


இவருக்கு ஆகாய கங்கையில் குளிப்பது என்றால் மிகவும் பிடித்தம் போல

சாலை இப்படி வெறிச்... இன்னும் motorcycle காரரைக் காணோம் என்று சொல்லி வாய் மூடுமுன்..கண் பட்டதோ!காக்கா ஓ ஷ் ...


என்னவோ ஊர் மாதிரி தெரியவில்லை?ஊர்தான்! 

இயற்கை ஓவியத்தைத் துடைக்கும் வைப்பர் பிளேடு! 


மின் இணைப்பு கொடுக்கும்போது road building இரண்டு பக்கமும் ரெட், ப்ளூ என்றும், மற்றதை மஞ்சள் என்றும் கொண்டு அடுத்தடுத்து இணைப்புகளுக்கு கொடுப்பார்களாம்


===============================

புதிர் இங்கே :  சொடுக்குக ! 

===============================

50 கருத்துகள்:

 1. ம்... ம்... வருணனையும், வர்ணனையும் ரசிக்க வைத்தது ஜி.

  பதிலளிநீக்கு
 2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
  துப்பாய தூவும் மழை

  இன்றைய படங்கள் இந்தக் குறளை நினைவுபடுத்தியது

  பதிலளிநீக்கு
 3. இனிய ஞாயிறு காலை வணக்கம்.
  மழையோடு படங்கள். இங்கேயும் மழை.

  மிக அருமை. தலைக்காவேரி வந்து விட்டார்களா.
  படங்களுக்கு அருமையான ஆச்சரியத் தலைப்புகள்.
  கிரிக்கெட் பார்க்காமலேயே கமெண்டரி கேட்பது போல!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கிரிக்கெட் பார்க்காமலேயே கமெண்டரி கேட்பது போல!!!! //

   ஹா... ஹா... ஹா..

   வாங்க வல்லிம்மா... வணக்கம்.

   நீக்கு
  2. வல்லிம்மா... இந்த ஊர்ல ரொம்பக் குளிரும்னு நினைத்தால் ஏப்ரல், மே வெக்கை ஜாஸ்தி இருக்கு. பெரும்பாலும் காற்றையும் காணோம்.

   மழை எப்போ வரும்னு இருக்கு.

   நீக்கு
  3. குளிர் விட்டுப் போச்சு போல அன்பு முரளிமா.நாங்கள் சென்ற போது மழையும் ,குளிரும்
   இருளும் இருந்தது, 1969 டிசம்பர்:)

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. புதிர் விடை  1. தீ. 2.  30 கணு  2 ஆட்டம். வினு 4 ஆட்டம். மொத்தம் 6 ஜெயம். பாக்கி 24 ஆட்டம் டிரா. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏனுங்கோ ஆறு ஆட்டம் ஆடினால் போதாதா! எதுக்கு டிரா ஆட்டம் எல்லாம் ஆடிகிட்டு இருக்கோணும்! சரியான விடைகள்.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  படங்கள் மிக அழகு. படங்களை குறித்த வர்ணனை அதற்கு குளிர்ச்சியான மகிழ்ச்சியை தந்ததால், மேலும் குளிர்ச்சி பெற வருணனையும் உடனழைத்து வந்து விட்டது போலும்..!

  வளைந்து செல்லும் பாதைகளும், மழையின் ஷவரில் குளித்தபடி சென்ற தங்கள் வாகனம், அந்த வாகனத்தின் உடன்பிறப்பான மற்ற வாகனங்களின் சந்தோஷங்களை உணர முடிந்தது.

  படங்களுக்கு பொருத்தமான வாசகங்களை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளைந்து செல்லும் பாதைகளும் அழகு. எனப் படிக்கவும்.( ஒரு சொல் விட்டுப் போனால், கேள்விகள் புதனாய் பிரகாசித்து அந்த பாராவை சரியாய் புரிந்து கொள்ள இயலாததாக்கி அந்த பாராவை வருத்தப்பட செய்து விடும். ஹா ஹா.)

   நீக்கு
  2. பாராட்டுரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 7. கர்னாடகாவின் புறநகர்ப் பகுதிகள், கிராம வெளி பச்சைப் பசேல் என்று இருப்பதால் பார்ப்பதற்கு ரம்யம். பெய்யும் மழையும் மேற்கொண்டு மெருகேற்றும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், ஆம், பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா, உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா !

   நீக்கு
 8. சாரல் விழும் சாலைப் படங்கள் அருமை
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 9. கௌ அண்ணா புதிர் விடை நெருப்பு

  கீதா

  பதிலளிநீக்கு
 10. மழை நேரத்தில் ஒரு சாலைப் பயணம் - ரசனை மிகு பயணம். படங்கள் அழகு.

  புதிர் விடைகள் ஏற்கனவே சொல்லி விட்டார்கள்! :)

  பதிலளிநீக்கு
 11. 6 ஆட்டம்?

  மழைநாளில் பயணம் போல. பயணமும் நன்றாக இருந்திருக்கும். படங்கள் இயாற்கையை நினைவூட்டுகிறது! கண்ணாடியில் மழைத்துளிகள் ரசித்தேன்
  கீதா

  பதிலளிநீக்கு
 12. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 13. சாரல் மழையில் பயணம் செய்ய மிகவும் அருமையாக இருக்கும். இயற்கை அழகை ரசித்துக் கொண்டு போகலாம். மழை சாரல் கண்ணாடியில் வரையும் ஓவியத்தை ரசிக்க தெரியாத வைப்பர் பிளேடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். ஹா ஹா அதைச் சொல்லுங்கள்! வைப்பருக்குத் தெரியுமா வையகத்தின் இயற்கை எழில்!

   நீக்கு
 14. அழகான நிறையப் படங்கள். எல்லாமும் நன்றாக இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியே அழகு. அதிலும் இது காவிரி பிறந்த இடம். அழகுக்குக் கேட்கணுமா? சாரலில் பயணமும், நீர்த்துளிகள் தெரியும் கார்க்கண்ணாடியும் அற்புதமான இயற்கை ஓவியமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 15. துரைக்கு இணையம் கிடைக்கவில்லையோ? பானுமதியைக் கூடக்காணோம்.இரட்டையர்கள் ஞாயிற்றுக்கிழமை வருவார்களா? இன்னிக்கு ஏன் போணி ஆகலை? ஒரு வேளைக் காவிரியைக் காட்டி இருந்தால் வந்திருப்பார்களாக இருக்கும். புதிருக்கும் விடையை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஆனால் நான் முதலாம் விடுகதைக்குத் தான் பதில் தெரிந்து வைத்திருந்தேன். இரண்டாவது யோசிக்கும் முன்னர் இங்கே விடை வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 16. வைப்பர் தான் அறியுமோ
  வழி காட்டும் அழகெல்லாம் - மழைத்
  துளி கூட்டும் எழிலெல்லாம்...

  ஆனாலும்
  வைப்பர் இன்றி அமையுமோ
  அருமையான பயணமும்!...

  பதிலளிநீக்கு
 17. வைப்பர் தான் அறியுமோ
  வழி காட்டும் அழகெல்லாம் - மழைத்
  துளி கூட்டும் எழிலெல்லாம்...

  ஆனாலும்
  வைப்பர் இன்றி அமையுமோ
  அருமையான பயணமும்!...

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் வணக்கம். மழை மழை மழை மழை மழை மழை அழகான மழை. கண்ணாடியில் தெரியும் மழைத் துளிகல் கண்ணை இழுக்கின்றன. அந்த மழை இங்கு வரக் கூடாதா? இறைவா வேண்டுகிறோம். நுங்கம்பாக்கத்தில் ஏற்கெனவே தண்ணீர் பஞ்சம் தொடங்கி விட்டது.

  பதிலளிநீக்கு
 19. மழையில் குளித்து வெழுத்த படங்கள் :) இயற்கை காட்சிகள்.

  பதிலளிநீக்கு
 20. இப்பொழுதும் தலைப்பில் தான் தலைக்காவேரி.

  இருப்பினும் கிடைத்த இடைவெளியில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

  காவேரி அல்ல காவிரி தான் அது. சங்க நூல்களில் காவிரி பற்றி அங்கங்கே குறிப்புகள் காணப்படுகின்றன. பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் காவிரி என்றே குறிப்பிடுகிறார். 'வான் பொய்ப்பினும் தான் பொய்யா
  மலை தலைய கடல் காவிரி' என்று நமக்கெல்லாம் தெரிந்த வரி, அவர் சொன்னது தான். பொருநராற்றுப் படையில்
  முடத்தாமக் கண்ணியார் காவிரி என்றே குறிப்பிட்டிருக்கிறார். கரிகாலச் சோழனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது
  'காவிரி புரக்கும் நாடு கிழவோனே' என்பார். புறநானூற்றிலும் காவிரி என்றே குறிப்பு வருகிறது.

  பிற்காலத்து சிலப்பதிகாரத்தில் ஆரம்ப போற்றல் துதியில் 'திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்'... தொடர்ச்சியாக ' ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரி போல்' என்கிறார்.

  அதனால் காவேரி என்பது பேச்சு வழக்கில் வந்திருக்கலாம் என்று கொள்வோம்.


  பதிலளிநீக்கு
 21. காவிரி பற்றிய தெளிவுபடுத்தல், பாடற்குறிப்புகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக அருமையான படங்கள் மனதுக்கு இதம். அனைவருக்கும் இனிய இரவுக்கான வணக்கம்.

   நீக்கு
 22. கருத்துரைத்த எல்லோருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. காட்டில் காய்ந்த நிலவாய்ப் போய் விடாமல் பார்த்து தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி, ஏகாந்தன் ஸார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!