செவ்வாய், 12 மே, 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை  :  கல்யாண காலம் - துரை செல்வராஜூ 

கல்யாண காலம் ..

துரை செல்வராஜூ 

==================



சைக்கிள் பழசு..

அதை விடப் பழசு - அந்தக் கேரியர்...





ரெண்டு நாள் \மழையில் சாலை குண்டுங்குழிகளுமாகக் கிடக்க
அந்தக் கேரியரில் உட்கார்ந்து பயணிப்பது மிகுந்த சிரமமாக இருந்தது சபாபதிக்கு...

தஞ்சாவூர் பாசஞ்சரில் வந்து குத்தாலத்தில் இறங்கிய சபாபதியைக் கண்டதும் .. பஞ்சாட்சரம் - பால பஞ்சாட்சரத்துக்கு ஏகப்பட்ட சந்தோஷம்..

இவனும் அவனும் பத்து வருசங்களுக்கு முன்னால்
மாயவரம் மணி ஹோட்டலில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்...

இன்றைக்கு இருவருக்குமே இருபத்தைந்து இருபத்தாறு ஆகின்றது...

சபாபதி அந்தப் பக்கம் பாபநாசம்... பஞ்சாட்சரம் இங்கே உள்ளூர்க்காரன் தான்...

இருவருக்குமே வேலை என்று ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது கல்யாணம் போன்ற விசேஷ வீடுகளில் நளபாகம்....

ஏதோ ஒரு டீக்கடையில் போண்டா மடித்திருந்த தாளில் -

'' திருமணஞ்சேரிக்கு வாருங்கள்.. திருப்பம் நேர்வதைப் பாருங்கள்!... '' -
என்று இருந்ததைப் பார்த்து விட்டு அம்மாவிடம் போய்ச் சொன்னான் சபாபதி...

                    



மகனுக்கு நல்ல வேலை இன்னும் அமையவில்லை.. ஆனாலும் கல்யாணம் கூடி வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று மனதார நம்பிக் கொண்டிருந்த அந்தத் தாய் - '' திருமணஞ்சேரிக்குப் போய்ட்டு தான் வாயேன்!... '' - என்றாள்...

அதன்படி அங்கிருந்து ரயில் ஏறி வந்தவன் தான் சபாபதி...

குத்தாலத்தில் இறங்கி அங்கிருந்து மினி பஸ்ஸில் போகலாம் என்று
சொல்லியிருந்தார்கள்..

அதன்படி வந்து இறங்கியவனை எதிர்கொண்டவன் தான் பஞ்சாட்சரம்...

சபாபதியின் அப்பா காலமாகி ஐந்தாறு வருடங்கள் ஆகி விட்டன...
பஞ்சாட்சரத்தின் நிலைமையோ கொஞ்சம் கஷ்டம்..
அடுத்தடுத்து தாய் தந்தையரை இழந்தவன்..

ஆனாலும் கைராசி மிக்கவன்... மயிலாடுதுறைப் பக்கம் என்பதால்
இவனது கைப்பக்குவம் ஊரெங்கும் மணம் வீசும்...

'' சரி.. வா... வீட்டுக்குப் போய்விட்டு கோயிலுக்குப் போகலாம்!... ''
- என்று வற்புறுத்தி சபாபதியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டான்...

பத்து நிமிடங்களாயிற்று...

'' எப்போதடா அவன் வீடு வரும்!.. '' - என்றிருந்தது சபாபதிக்கு...

சபாவின் கஷ்டத்தை உணர்ந்தவனாக -
'' இதோ வந்தாச்சு... இன்னும் நாலு மிதி தான்!.. '' - என்றான் பஞ்சாட்சரம்...

'' இன்னும் நாலு மிதி இருக்கா!.. '' - அதிர்ந்து போனான் சபாபதி...

சொன்னது போலவே சரக்... - என பிரேக் போட்டு காலை ஊன்றினான் பஞ்சாட்சரம்...

'' வீட்டுக்கு வந்தாச்சு!.. '' - அவனிடமிருந்து உற்சாகம் பீறிட்டது...

சைக்கிளில் இருந்து குதித்து இறங்கினான் சபாபதி..

'' சபா... வேட்டி ஒன்னும் கிழியலையே!.... ''

'' இது வேறயா?... வேட்டியக் கிழிக்குமா உன் கேரியர்!... ''

'' அதுல ஒரு கம்பி விட்டுப் போச்சு... அதான் கேட்டேன்...
சீக்கிரத்துல அதைச் சரி பண்ணிடனும்... ''

சைக்கிளைத் திண்ணையின் ஓரமாக நிறுத்தி ஸ்டாண்டைப் போட்டான்...

ஸ்டாண்ட் நழுவிக் கொள்ள - நங்..என்று திண்ணையில் சாய்ந்தது சைக்கிள்..

'' ஸ்டாண்ட் வேற மாத்தனும்!... '' - பஞ்சாட்சரம் பரிதவிக்க

'' ஏன்!.. சைக்கிளையே மாத்திடேன்!... '' - என்ற சபாபதி சிரித்துக் கொண்டான்...

'' வா.. வா... வீட்டுக்குள்ளே வா!.. ''
உள்ளே நுழைந்தான் பஞ்சாட்சரம்...

இருப்பினும் வாசலில் நின்றபடியே நோட்டமிட்டான் சபாபதி...

பழைய காலத்து ஓட்டு வீடு..
பித்தளைப் பட்டியுடன் ரெண்டு உருளைத் தூண்கள்
திண்ணையில் தாழ்வாரம் தாங்கிகளாக...

திண்ணை முழுதும் மாக்கோலம்..
மழையின் ஈரத்தில் குழம்பிக் கிடந்தன...

இருபுறத் திண்ணைகளிலும் ரோஜாச் செடிகள் சின்னச் சின்ன பூக்களுடன்
      



நாகம், பூ, குடம், சரமணி - என்று அழகான வேலைப்பாடுகளுடன் அந்த நிலை..


அதன் இருபுறங்களிலும் எண்ணெய் வழிந்து பிசுக்காக விளக்கு மாடங்கள்....

'' காயத்ரி.. காயத்ரி!.. '' - பஞ்சாட்சரம் குரல் கொடுக்க

'' இதோ வர்றேன்...ண்ணா!.. '' - உள்ளிருந்து பதில் வந்தது...

சில விநாடிகளில் கையில் தண்ணீர் வாளியுடன் வந்தது அந்தச் செந்தாமரை...

சபாபதியின் மனதுக்குள் குயில் ஒன்று புகுந்து கொண்டு கூகூ.. எனக் கூவியது..

'' சபா... காலைக் கழுவிக்கோ!.. '' - என்றபடி வாளித் தண்ணீரைக் கால்களில் ஊற்றிக் கொண்டான் பஞ்சாட்சரம்....

வயதுக்கு வந்த பெண்ணிருக்கும் வீட்டுக்குள் நுழைவது எப்படி என்று தடுமாறி நின்றான் சபாபதி...

'' யார்?  - என்பது போல புருவங்களை உயர்த்தினாள் - காயத்ரி..

'' எங்கூட்டாளி.. சபாபதி!... '' - வாய் விட்டுச் சிரித்தான் பஞ்சாட்சரம்...

'' மாயவரம் மணி ஹோட்டல்... ல நாங்க ரெண்டு பேரும் ஒன்னா வேலை
பார்த்திருக்கோம்... இவனப் பத்தி எல்லாம் உங்கிட்ட சொல்லியிருக்கேன்...  நீ மறந்துட்டே... அதுவுந்தான் பத்து வருசத்துக்கு மேல ஆச்சே!... ''

ஈரமான கால்களை அருகில் கிடந்த சாக்கில் துடைத்துக் கொண்டு
நிலைப்படியைக் கடந்து காலை எடுத்து வைத்தான் சபாபதி..

'' காயத்ரி.. காலை சாப்பாடு என்னடா?.. '' - பஞ்சாட்சரத்தின் குரலில் பசி
தெரிந்தது...

'' தக்காளிச் சட்னி செஞ்சிட்டேன்.. பருப்பு அடை இப்போ வார்த்துத் தரேன்.. உங்கூட சிநேகிதர் வந்திருக்கிறதால அதுகூட கொஞ்சம் போல கேசரி.. இப்பவே சொல்லிடறேன் கேசரியில முந்திரி இருக்காது... காபிக்கு மட்டும் பால் வாங்கி வரணும்... ''

காயத்ரியின் மென்மையான பதிலைக் காதில் வாங்கியவாறு வீட்டின் உள்ளே நடந்தான் சபாபதி..

அவன் கண்கள் அந்த வீட்டை அளந்து கொண்டிருந்தன...

கூடத்தின் மூலையில் பழைய சேலையைப் போர்த்திக் கொண்டு தையல் மிஷின்..

பழசா.. ரொம்பப் பழசா... தெரியவில்லை...

ஆனாலும் மழையின் தாக்கம் நன்றாகவே தெரிந்தது...

சுவர் முழுதும் மழை நீர் வாசம்... ஈரமாகியிருந்த நாட்டு ஓடுகளின் கனம்
தாங்க மாட்டாமல் முகட்டு வளையின் குறுக்குச் சட்டங்கள் உள் வாங்கி
இருந்தன...

எந்நேரத்திலும் குறுக்குச் சட்டங்கள் முறித்துக் கொண்டு விழலாம்...

'' இப்படி பாதுகாப்பற்ற வீட்டினுள் எப்படி இரண்டு பேரும் வசிக்கிறார்கள்?... ''

சபாபதியின் மனதில் எழுந்த சந்தேகத்துக்கு பஞ்சாட்சரம் அவனாகவே பதில் சொன்னான்..

'' வெயில் பிரச்னை இல்லை... மழை தான் சிரமம்.. காயத்ரி கூடத்துல
படுத்துக்குவா.. நான் பக்கத்துல வள்ளலார் மடத்துல படுத்துப்பேன்...
வேறதுக்கும் பயமில்லை!... ''

இந்தக் கூடத்தில் எந்த நேரத்திலும் சரிந்து விழலாம் என்ற நிலையில்
ஓடுகள்.. இதற்குள் எப்படி அவள் பயமின்றி உறங்குவாள்?...

சபாபதியின் மனதிற்குள் கேள்விக்கணைகள்...

சில விநாடிகளில் கமகம என்று அடையின் முறுகல் வாசம்...

மின்னல் வேகத்தில் பனை ஓலைத் தடுக்குகள் கூடத்தில் இடப்பட்டன..

இரண்டு வாழையிலைகள்..  பளபளக்கும் பித்தளைக் குவளைகள்... காசிச் செம்பில் தண்ணீர்....

'' அண்ணா.. அவங்கள அழைச்சிட்டு வாங்க... சாப்பிடலாம்!... ''

'' சபாபதி... வா... சாப்பிடலாம்!.. '' - மனம் நிறைந்த அழைப்பு அது...

ஆவி பறக்க செம்பழுப்பு நிறமான பருப்பு அடைகள் ...
அவற்றின் வாசத்தோடு வாழையிலையின் மணமும் சேர்ந்து கமழ்ந்தது....
    


'' அடை எப்படியிருக்கு.. உன் ருசிக்கு ஒத்து வரும்..ன்னு நினைக்கிறேன்!... ''

.'' நல்லா இருக்கு பாலா... எங்கம்மா செய்ற மாதிரியே இருக்கு!... ''

அடையைச் சுவைத்த வண்ணம் ஏறிட்டு நோக்கினான் சபாபதி...

கூடத்தின் கீழ் மூலையில் விசுப் பலகையின் ஓரமாக நின்றிருந்த
காயத்ரியின் இதழ்களில் இளம் புன்னகை...

'' எல்லாம் சரியா இருக்கு.. இன்னும் கல்யாண வேளைதான் கூடிவரலை...  எனக்கு காயத்ரியோட கவலைதான்... ஒருத்தன் கையில புடிச்சிக் கொடுத்திட்டா நான் பாட்டுக்கு காசிக்குக் கிளம்பிப் போய்டுவேன்!... ''

'' ஏன்?... எதுக்கு!.. ''  - திரும்பி நோக்கினான் சபாபதி...

'' அங்கே இருக்குற மடத்துக்கு நல்ல ஆளா வேணுமாம்.. சாம்பு ஐயர்
கூப்பிட்டுக்கிட்டு இருக்கார்... மாசம் பதினைஞ்சாயிரம் தர்றேங்கிறார்...
இங்கே இருந்து காசிக்கு வர்றவங்களை நல்ல மாதிரியா கவனிச்சுக்கணும்..  அவ்வளவுதான்.. ''

'' ம்..ன்னு சொன்னா நாளைக்கே கிளம்பிடலாம்... ஆனா என் தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் ... அதுக்காகத்தான் காத்திருக்கிறேன்!... ''

மிகவும் அமைதியாக சொன்னான் பஞ்சாட்சரம்...

'' நீங்களே சொல்லுங்க... அண்ணா எனக்கொரு நல்ல வாழ்க்கை அமையணும்..ன்னு ஆசைப்படுற மாதிரி நான் ஆசைப்பட மாட்டேனா?..''

'' எங்கேயோ ஒரு மூலையில இவரு மட்டும் சாமியாரா இருப்பாராம்!...
நான் மட்டும் இங்கே சந்தோஷமா இருக்கணுமாம்.. இது நியாயமா?... ''

மெல்லியதாக விசும்பும் ஒலி கேட்டது...

'' டேய்... பாலா.. இப்பவே சொல்லு.. உனக்கு சம்மதமா?.. '' - என்றான் சபாபதி..

'' எதுக்கு!?... '' - ஆச்சர்யம் பால பஞ்சாட்சரத்துக்கு..

'' காயத்ரியை நான் கட்டிக்கிறதுக்கு!... ''

'' நாம அதப் பத்தி பேசலையே!... ''

'' இப்போ பேசுவோம்... உனக்கு சம்மதமா... சொல்லு!... ''

திணறிப் போனான் பஞ்சாட்சரம்.. கண்களில் நீர் சுரந்தது...

'' நான் சொல்றது இருக்கட்டும்.. காயத்ரி என்ன சொல்றாளோ!... ''

இதைக் கேட்டதும் சட்டென பின்கட்டுக்குள் ஓடி மறைந்தாள் காயத்ரி...

'' உங்க அம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களா?... '' - பஞ்சாட்சரத்தின் அடுத்த கேள்வி..

'' இப்பவே காயத்ரிய அழைச்சிக்கிட்டுப் போய் நின்னேன்...னு வை...
கட்டுறா தாலிய...ம்பாங்க!.... ''

'' சபா... நெலையான வருமானம் இல்லாம நீ இருக்கே... நானும் அப்படித்தான்...  சாம்பு ஐயரு சொல்ற மாதிரி காசி மடத்துக்குப் போனா ஏதோ வருமானம் கிடைக்கும்... அதையும் இந்த வீட்டையும் வச்சு உருட்டிப் புரட்டித் தான் ஏதாவது செய்யனும்..ன்னு இருக்கேன்!... ''

'' என்ன செய்யலாம்...ன்னு?.. ''

'' ஏதோ மேலுக்கு ஒரு அஞ்சு பவுனாவது போட வேணாமா?...
இப்போ எங்கையில அஞ்சு பவுனு தான் இருக்கு!... ''

சிரித்துக் கொண்ட சபாபதி சொன்னான்...

'' அம்மா சொன்னாங்க... கல்யாணம் நடக்கட்டும்.. எல்லாம் சரியாயிடும் ..
திருமணஞ்சேரிக்குப் போய்ட்டு தான் வாயேன்...ன்னு... ''

'' கோயில்..ல வரங் கேக்கத்தான் வந்தேன்...
அம்பாள் வாழ்க்கைத் துணையே கொடுத்துட்டா!... ''

'' நீ சரி.. ன்னு சொல்லு.. அடுத்த முகூர்த்தத்தில தாலியோட வர்றேன்...
அந்தத் திருமணஞ்சேரியில வச்சு கல்யாணம்... கோயில் வாசல்ல நாலு பேருக்கு சாப்பாடு!... ''

'' உந் தங்கச்சிக்கு நல்ல துணையா இருப்பேன்.. நீயும் இங்கேயே இரு...
உனக்கும் காலகாலத்துல ஒரு நல்லது நடக்கும்...
தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுல வேண்டியவங்க இருக்காங்க..
அங்கேயே ஒரு இட்லி கடையப் போடுவோம்!... ''

'' ஒருத்தருக்கொருத்தர் துணை... கடைக்கு வந்து சாப்புடுறவங்க வயிறும் மனசும் நெறைஞ்சா நாம எப்பவுமே நல்லாயிருக்கலாம்!... ''

'' உன் தங்கச்சியக் கூப்பிடு!... ''


   


'' ஏன்?..  நீ கூப்பிடேன்!.. '' - என்றான் பஞ்சாட்சரம்...

வேஷ்டியில் கையைத் துடைத்தவாறே எழுந்தான் சபாபதி...

'' சபா... என்ன வேட்டியில துடைச்சிக்கிறே!... '' - ஆச்சர்யம் பஞ்சாட்சரத்துக்கு..

'' நல்ல விஷயம் பேசியிருக்கோம்... அதனால தான்!... ''  - புன்னகைத்த சபாபதி

'' காயத்ரி.. இங்கே வா!... '' - என்றான் உரிமையுடன்...

மெல்ல வந்து எதிரில் நின்றாள் காயத்ரி...

ஏதொன்றும் சொல்லாமல் தனது வலது கையை நீட்டினான் சபாபதி..

வெட்கத்துடன் அவனது கையின் மீது தன் கையை வைத்தாள் காயத்ரி...

இருவரையும் ஆரத் தழுவிக் கொண்ட பஞ்சாட்சரத்தின் கண்களிலிருந்து நீர் வழிந்தது...


================================== 

116 கருத்துகள்:

  1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  3. இன்று வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இன்று வருகை தரும் அனைவருக்கும்... // அரசே! உங்க கதை படிக்க வருபவர்களுக்கு மட்டும் சிறப்பு வரவேற்பா!

      நீக்கு
    2. அப்படியெல்லாம் இல்லை...

      என்றைக்குமே எல்லாருக்கும் இனிய வரவேற்பு தான்...

      நீக்கு
  4. இன்று எனது கதையை அழகுறப் பதிப்பித்த
    அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அன்பின் KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கதையை எங்களுக்கு அனுப்பி வைத்த உங்களுக்கு எங்கள் நன்றி.

      நீக்கு
  5. சைக்கிள் பழசு..
    அதை விடப் பழசு - அந்தக் கேரியர்...

    கதையில வர்ற சைக்கிளை விடப் பழசா இருக்கே படத்துல வந்திருக்கிற சைக்கிள்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதானே வேணீங்கறது...நானா கதைல வர்ற மாதிரி அரதப் பழசால்லாம செகன்ட் ஹான்ட் சைக்கிள் படமா இருக்கேன்னு யோசித்தேன். ஹா ஹா

      ஆனா கதைல வர்றதைவிட பெண் புதுசா இருக்கேன்னு துரை செல்வராஜு சாருக்கு சந்தேகம் வரலையே

      நீக்கு
    2. ஹா ஹா ! இது பாயிண்டு! சைக்கிள் படத்தை தேர்ந்தெடுத்தபோது 'கதாசிரியர் சொல்லியிருக்கும் அளவுக்கு பழைய சைக்கிள் கிடைக்கவில்லையே, இந்தப் படம் அரதப் பழசான சைக்கிள் போலத் தெரியவில்லையே' என்று நினைத்தேன்!

      நீக்கு
    3. //இதுதானே வேணீங்கறது..// நெல்லைத்தமிழரே ! காயத்ரி தெரியும்; 'வேணீ'ங்கறது யாரு?

      நீக்கு
  6. இந்தப் பொண்ணு தான் காயத்ரியா!...
    கொடுத்து வெச்சவன் தான் சபாபதி...

    பதிலளிநீக்கு
  7. நாட்டாமே!..
    தலைப்பூவ மாத்தி வெக்கச் சொல்லி தந்தி அடிச்சிருந்தேனே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும். தவறு என் பக்கம். திருத்தங்கள் வேண்டி வந்த மெயிலை கவனிக்காமல் விட்டுவிட்டேன். Better late than never என்ற அடிப்படையில் சரி செய்துவிட்டேன்.

      நீக்கு
    2. என்ன இது ..
      பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு...

      எல்லாம் அம்பாள் - கோகிலாம்பாள் விருப்பம்...

      நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
    3. அந்தத் தலைப்பும் மணத்துக் கொண்டு தான் இருந்தது! :)

      நீக்கு
  8. வரங் கேக்க வந்தவனுக்கு
    வாழ்க்கைத் துணையையே கொடுத்துட்டாள் - அம்பாள்..

    என்னா ஒரு அதிர்ஷ்டம்!...

    பதிலளிநீக்கு
  9. இந்த சபாபதி எப்படி மயங்கி விழுந்தான்!?..

    வாசல் நடை பூச்செடியிலயா?..
    வார்த்து இட்ட கார அடையிலயா?..

    எல்லாம் அந்த அம்பாளுக்கே வெளிச்சம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு துரை, இனிய காலை வணக்கம். இன்னும் வரப்போகிற ஶ்ரீராம் ,மற்றும் அனவருக்கும் ,நெல்லைத தமிழனுக்கும் நல்ல நாளுக்கான வாழ்ததுகள்.

      நீக்கு
    2. // இந்த சபாபதி எப்படி மயங்கி விழுந்தான்!?..// எனக்கும் அந்த டவுட்டு இருந்தது. ஆனால் காயத்ரியின் படத்தைப் பார்த்ததுமே விடை கிடைத்துவிட்டது!

      நீக்கு
    3. //காயத்ரியின் படத்தைப்// - அண்ணன் சொன்னதும் உடனே அடை வார்த்தது, அளித்த பாங்கு, அமைதியான சுபாவம் - இவைதான் சபாபதியைக் கவர்ந்திருக்கணும். 'காயத்ரி அழகு'தான் காரணமா இருக்கும்னு சொல்கிற கேஜிஜி சாரை என்ன சொல்வது?

      நீக்கு
    4. கதையை படங்களால் அழகுறச் செய்தது கௌதம் ஜி அவர்கள்....

      நன்றி.. நன்றி..

      நீக்கு
  10. காலை வணக்கம் அனைவருக்கும்.

    கதையைப் படித்தேன். அருமையா வந்திருக்கு.

    எளிய மனிதர்களைப் பற்றி கதை புனைய அந்தச் சூழலின் அனுபவம் வேண்டும். நல்லா எழுதியிருக்கீங்க துரை சார்.

    அடையின் மணத்தைவி மண்ணோட மணம், . ஈர ஓடுகள், நனைந்த சுவர்கள், வயதாகிப்போன தூண்கள், மாசற்ற விருந்தோம்பல், லொட லொட சைக்கிள் என்று நேட்டிவிட்டி தூக்கலாகவே இருந்தது.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே அந்த சைக்கிள் படமும், அடை, தொட்டுக்க சட்டினி படம் போட்ட நல்லவருக்கும் நன்றி. இப்படிக் கதை படிக்கத் தான் இந்த செவ்வாய் வந்ததோ என்று நினைக்கிறேன். இரண்டு மணி நேரத்தில் ஒரு நல்ல வாழ்ககை உருவானதே.

      நீக்கு
    2. கதை எழுதி பெயர் வாங்குபவர்கள் உண்டு. சும்மா படம் காட்டி பெயர் வாங்குபவர்களும் உண்டு. இதில் நான் எந்த வகை என்று எனக்கே தெரிந்துவிட்டது!

      நீக்கு
    3. அந்தத் திண்ணையும், வீட்டின் மழைவாசமும்,விசுப்பலகையும்,
      திண்ணையின் ரோஜாச்செடிகளும்
      மிக மிக அருமை.

      நீக்கு
    4. நன்றி கௌதமன் ஜி. படம் இல்லாமல் கதையா.
      நினைத்தே பார்க்க முடியாது.

      நீக்கு
    5. ..இதில் நான் எந்த வகை என்று எனக்கே தெரிந்துவிட்டது!//

      சுயதரிசனத்துக்கென்று ஓர் அழகுண்டு!

      நீங்கள் போட்ட பெண்படம் பேசும்படம் போலிருக்கிறதே.. இன்று நிறைப்பேர் பேசுவார்கள்!

      நீக்கு
    6. அன்பின் நெல்லை அன்பின் வல்லியம்மா அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காயத்ரி இருக்கும் இடத்தில் பிசுக்கு மாடம் இருக்காதே. நிலை வேலைப்பாடு ஏகத்துக்கு அழகா இருக்கு. துரையின் கைவண்ணத்தில் ஓட்டு வீடு ரிப்பேர் செய்யப் பட்டு , பஞ்சாட்சரத்துக்கும் திருமணம் நடந்து காயத்ரி,சபாபதி பையனுக்கும, பஞ்சாட்சரம் மகளுக்கும் நிச்சயம் என் மனதில் நடத்தி விட்டேன்!

      நீக்கு
    2. க ஹ : பிரார்த்தனைகளுக்கு நன்றி.
      வ சி : ரொம்ப அட்வான்சுடு ஆக இருக்கீங்க! ஒரு தொலைகாட்சி தொடர் அளவுக்கு யோசிச்சிருக்கீங்க!

      நீக்கு
    3. விளக்கு மாடம் மழை நாட்களில் கொஞ்சம் பிசுபிசுப்பாகத்தான் இருக்கிறது...

      காயத்ரி மாதிரி நல்ல பிள்ளைகள் எப்போதும் வீட்டை பளிச் என்று வைத்துக் கொள்வார்கள்...

      தவிரவும் மழை நாட்களில் சுரண்டினால் காரை பெயர்த்துக் கொண்டு கையோடு வந்து விடும்...

      தை பிறந்ததும் எல்லாம் சரியாகி விடும்..
      கல்யாணமும் தான் கூடி வந்து விட்டதே..

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். பிரார்த்தனைகள். தளர்வு செய்யப்பட்டிருக்கும் ஊரடங்கினால் மக்கள் மனம் தளர்ச்சியுறாமல் ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து கொரோனா தாக்குதலைக் குறைக்கும்படிப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி. எங்கள் பிரார்த்தனையும் அதுவே.

      நீக்கு
    2. அக்கா அவர்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. கடைசிவரைக் கேசரியைக் கண்ணிலேயே காட்டலை. அடைப் படத்திலும் சரி, எழுத்திலும் சரி, கேசரியே வரலை. அந்தப் பஞ்சாட்சரம் தான் சொல்லக் கூடாதோ? சபாபதியும், காயத்ரியும் தான் மயக்கத்தில் இருந்துட்டாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேசரியை முதலிலேயே சாப்பிட்டுவிட்டார்கள்.

      நீக்கு
    2. அந்தக் கேசரி விவகாரம் என்னுடையதே..
      சபாபதியும் காயத்ரியும் அன்பில் சிக்குண்டதைக் கண்டு நான் தான் மயங்கி விழுந்து விட்டேன்...

      அங்கு கேசரி பரிமாறப்பட்டது உண்மையே.

      நீக்கு
  14. அங்கே உட்கார்ந்திருக்கும் பெண்தான் காயத்ரியா? பார்க்கத் திரைப்பட நடிகை மாதிரி இருக்காளே? :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாமா, காலைவணக்கம். அதானே கேசரி காணோமே!

      நீக்கு
    2. இரவு வணக்கம் வல்லி.

      நீக்கு
    3. // அங்கே உட்கார்ந்திருக்கும் பெண்தான் காயத்ரியா?// துரை சார்தான் பதில் சொல்லவேண்டும்.

      நீக்கு
    4. இவள்தான் காயத்ரி என்று திரு கௌதம் ஜி அவர்கள் சுட்டிக் காட்டிய பின் வேறொரு வார்த்தையும் உண்டோ!...

      நீக்கு
  15. நேற்று கௌதமன் சாரும், துரையும் பேசிக்கொண்டதில் இருந்தே இன்னிக்கு துரையின் கதை தான் என்பது புரிந்தது. வழக்கமான கிராமியப் பார்வையில் அருமையானதொரு கதை. எல்லாம் நன்மைக்கே என்பதை உணர்த்தும் கதை. பகிர்வுக்கு நன்றி துரை/எ.பி.ஆசிரியர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாப் புகழும் துரை சாருக்கே!

      நீக்கு
    2. இதற்கு நானென்ன சொல்வது!..
      என்னை மீண்டும் எழுதத் தூண்டிய எங்கள் பிளாக்கிற்குத் தான் எல்லாப் புகழும்...

      நீக்கு
  16. கதையை படித்ததும் திருமணஞ்சேரிக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம்'னு தோணுது ஜி

    பதிலளிநீக்கு
  17. அழகாக. வழக்கம்போல அவரது பாணியில்.. கதையாக இல்லாமல் ஒரு நிகழ்வு நடப்பதைப்போலவே இருந்தது. ஆசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. வேஷ்டியில் கையைத் துடைத்தவாறே எழுந்தான் சபாபதி...

    '' சபா... என்ன வேட்டியில துடைச்சிக்கிறே!... '' - ஆச்சர்யம் பஞ்சாட்சரத்துக்கு..

    '' நல்ல விஷயம் பேசியிருக்கோம்... அதனால தான்!... '' - புன்னகைத்த சபாபதி///////கை கழுவி விடப்போவதில்லை சபாபதி!!! அருமை/.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வரிகளை மிகவும் ரசித்து எழுதினேன்.... குறிப்பிட்டுச் சொன்னதற்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  20. திருமணஞ்சேரி பயணம், காயத்ரி, காயத்ரி என்று அண்ணன் குரல் கொடுக்க, இதோ வந்துட்டேன்னா.. என்று தங்கை பதிலளித்ததும் கதையின் முடிவு புரிந்து விடுகிறது, என்றாலும் துரை சாரின் கை வண்ணத்தில் அழகான வாசிப்பு அனுபவம். வீட்டின் வர்ணனையில் நம்மையும் உள்ளே அழைத்துச் சென்று விட்டார். பாராட்டுகளும் நன்றியும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. வீட்டுக் கூடத்தில் சாதாரணமாக நடக்கும் கதையில் என்ன ரகசியம் வைப்பது!... அன்பின் கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  21. காயத்ரி செய்தது தக்காளி சட்னி, படத்தில் இருப்பதோ தேங்காய் சட்னி.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் கதையிலேயே ஒரு வரி இருக்கிறதே... ஒருவேளை தக்காளிச் சட்னி இவருக்குப் பிடிக்காதோ.. தேங்காய்ச் சட்னியையும் செய்துடுவோம் என்று காயத்ரி நினைத்தாள் என்று எழுதியிருக்கிறாரே.

      நீக்கு
  22. கதையின் தலைப்பு மாறிவிட்டதே.. கன்னியின் படமும் மாறிவிடுமோ? எபி-யின் புதிய பாணியோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாசிரியர் விரும்பியபடி ...

      நீக்கு
    2. அந்தப் பழைய தலைப்பு எல்லாருக்கும் உகப்பாக இருக்குமோ என்று எண்ணினேன்...

      நீக்கு
  23. நன்றாகத்தான் இருக்கிறது கதை! ஆனால் இந்தக் காலத்துப் பையன் கள் நம்பவேண்டுமே! எவ்வளவு ஏழைப்பெண்ணாக இருந்தாலும் வசதியான பையனாக இருந்தால்தானே கழுத்தை நீட்டச் சம்மதிக்கிறாள்! அந்தக் காலத்தில் நாமெல்லாம் படாத பாடா? கடைசியில் உள்ள காயத்ரியின் படம் அழகாக உல்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரசிப்புக்கு நன்றி, இராய செ அவர்களே!

      நீக்கு
    2. வசதி என்னங்க வசதி...

      வாழச் சென்ற வீட்டை வசதியாக்கிய பெண்கள் இருக்கிறார்கள்... அசதியாக்கி அழித்தவர்களும் இருக்கிறார்கள்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா...

      நீக்கு
  24. மாயவரம் மணி ஓட்டல் மிஸ் செய்து விட்டேனே !


    //மகனுக்கு நல்ல வேலை இன்னும் அமையவில்லை.. ஆனாலும் கல்யாணம் கூடி வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று மனதார நம்பிக் கொண்டிருந்த அந்தத் தாய் - '' திருமணஞ்சேரிக்குப் போய்ட்டு தான் வாயேன்!... '' - என்றாள்...//

    தாயின் நம்பிக்கை வீண் போகவில்லை.

    //சில விநாடிகளில் கையில் தண்ணீர் வாளியுடன் வந்தது அந்தச் செந்தாமரை...

    சபாபதியின் மனதுக்குள் குயில் ஒன்று புகுந்து கொண்டு கூகூ.. எனக் கூவியது..//

    நிறைவு பகுதி படிக்கும் முன்பே செந்தாமரையைப் பார்த்துசபாபதியின் மனதுக்குள் இருந்த குயில் கூவி சொல்லிவிட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்!

      நீக்கு
    2. தாங்கள் எல்லாம் வனக்குயில்களோடு பேசிக் கொண்டு இருப்பவர்கள்.. இந்தக் கதைக் குயில்களின் மனம் அறிவது கஷ்டமா என்ன!...

      நீக்கு
    3. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  25. நேற்று முன் தினம் மாலையிலிருந்து 20/5 வரை இங்கே முழு ஊரடங்கு...

    இணையம் வேலை செய்யவில்லை...

    கணினியில் இப்போது வரை எபி திறக்க வில்லை...

    கதையைப் படித்து உற்சாகத்துடன் கருத்துரையிடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    அன்பின் KGG அவர்களுக்கும் நன்றி...

    விரைவில் வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க - வாசகர்கள் உங்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.

      நீக்கு
  26. அந்த பக்கத்து வீடுகள் வர்ணனை அப்படியே தான் இருக்கும்.
    மழை விடாமல் பெய்து கொண்டே இருக்கும். ஓட்டு வீடு மட்டும் இல்லை நல்ல ஒட்டு கட்டிடங்களும் பாசம் பிடித்து பழைய கட்டிடம் போல்தான் காட்சி அளிக்கும். வருடத்திற்கு ஒரு முறை வெள்ளை அடித்தாலும் அப்படித்தான் இருக்கும்.

    சுவர் எல்லாம் ஓதம் பூத்து நீர் துளிகள் சுவற்றில் இருக்கும்.


    // உந் தங்கச்சிக்கு நல்ல துணையா இருப்பேன்.. நீயும் இங்கேயே இரு...
    உனக்கும் காலகாலத்துல ஒரு நல்லது நடக்கும்...
    தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுல வேண்டியவங்க இருக்காங்க..
    அங்கேயே ஒரு இட்லி கடையப் போடுவோம்!... '' //

    எவ்வளவு அழகாய் முடிவு எடுத்து விட்டார் சபா.
    எல்லாம் நல்லபடியாக நிறைவு பெற்றதில் மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான அன்பும் உழைப்பும் யாரையும் கைவிடுவதில்லை...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  27. மனதில் மகிழ்ச்சி. நல்லதே நடக்கட்டும்.

    மனதுக்கு நிறைவு தந்த கதை. பாராட்டுகள் துரை செல்வராஜூ ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  28. கதைக்கு படங்கள் தேர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் திரு கௌதம் ஜி அவர்களது கை வண்ணம்...

      அவர்களுக்கு நன்றி...

      நீக்கு
  29. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அழகான கதை. அப்போதே படித்து விட்டேன். உடன் கருத்திடுவதற்கு நேரம் கூடி வரவில்லை. மன்னிக்கவும்.

    இந்நேரம் வரை மனசுக்குள் கதை நிறைவாக ஓடிக் கொண்டேயிருந்தது. அருமையான எழுத்து. இன்றைய தினம் நீங்கள் பகிர்ந்த குறளுக்கேற்ற கதை. (பழையது என்று எந்தப் பொருளையும் ஒதுக்காமல், அதனுடையே நிறைவாக வாழ கற்றுத் தந்த தங்கள் தாய் காட்டிய வழியில் நடந்து வாழ்ந்து வரும் அண்ணன் தங்கை. உதாரணம் அந்த சைக்கிள், தையல் மிஷின், வீட்டின் அமைப்புகள் இப்படி பலவற்றைச் சொல்லலாம்.)

    இப்படியாகப்பட்ட அழகான வர்ணனைகளுடன் கதையை நகர்த்தும் பாணி தங்கள் ஒருவருக்கே வரும். கதை படிக்கும் போது அதன் வர்ணனைகள் நிஜமாகவே எதிரில் நடப்பதை பார்ப்பது போன்ற உணர்வு...முடிவு திருப்தியாகத் தான் இருக்கும் என்பதை சைக்கிளில் வந்து சபாபதி வாசலில் இறங்கிய உடனேயே புரிந்து விட்டது.

    அருமையான கதைக்கு அழகான படங்கள். ஜாடிக்கேற்ற மூடியாய், பொருத்தமாக பொருந்தி விட்டது. படங்களை அந்தந்த இடங்களில் பொருந்த வைத்த எ. பி ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

    திருமணஞ்சேரிக்கு வந்தவனை பிரார்த்திக்க கோவிலுக்குக் கூட வரவழைக்காமல், திருமணத்தை சுமூகமாக வந்தவிடத்திலேயே நடத்தி வைத்த அந்த ஈசனுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அருமையான கதையை தந்த உங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      தங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்தது... மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  30. கதை நிகழ்விடத்தின் சூழல் வர்ணிப்புகளின் யதார்த்த சொற் சித்திர வடிவமைப்பில் என்றைக்குமே கோட்டை விட்டதில்லை, துரை செல்வராஜூ சார். அதற்காக அவர் பெரும் முயற்சிகள் ஏதும் எடுத்துக் கொண்டதாகக் காட்டிக் கொள்வதில்லை என்பது தான் விசேஷமாகச் சொல்ல வேண்டியது. விவரணைகள் அது பாட்டுக்க அதன் அதன் இடங்களில் அது அதுவாக வந்து அமர்ந்து கொண்டு விடுகின்றன. இந்த மாதிரியான இடங்களில் வாழக் கொடுத்து வைத்தவர்கள் படம் பிடித்தாற் போல அவற்றை தம் மனத்திற்குள் பொதித்து வைத்துக் கொள்வது தான் இதற்கான இரகசியம். வேண்டிய நேரத்து வேண்டியவைகளை ஒவ்வொன்றாய் எடுத்து சொன்னால் போயிற்று என்ற அளவில் இப்படியான வர்ணனைகள் அவரைப் பொருத்த மட்டில் வெகு சுலபமாய் அமைந்து விடுகின்றன.

    இருக்கவே இருக்கு, சிக்கலற்ற சுலபமான வாசிப்புக்கு உகந்த ஒரு கதை. இது போதாதா என்று கேட்டால் தாராளமாய்
    போதும். ஒரு சிறுகதை வடிவமைப்புக்கும் வாசிக்கும் மன அமைதிக்கும் இதுவே போதும். வாழ்த்துக்கள், துரை ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      இத்துணை விஷயங்களோ எனது கதையில்!..

      தாங்கள் சொல்லும் போது ஆச்சர்யமாக இருக்கிறது...

      தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  31. கதாபாத்திரங்களைப் போலவே நமக்கும் வயிறு நிறைந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிகரம் பாரதி அவர்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  32. //'' இது வேறயா?... வேட்டியக் கிழிக்குமா உன் கேரியர்!... ''

    '' அதுல ஒரு கம்பி விட்டுப் போச்சு... அதான் கேட்டேன்...
    சீக்கிரத்துல அதைச் சரி பண்ணிடனும்... ''//

    ஹா ஹா ஹா இப்படி சிலரின் சைக்கிள் சீற்றுகளிலும் நடப்பதுண்டு... பழைய நினைவுகள் தூண்டப்படுகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      அப்போதெல்லாம் பலருடைய சைக்கிள்களும் இப்படித்தான்...

      சிறிய பழுதாகத் தான் இருக்கும்..
      சீர் செய்ய நேரம் இருக்காது...

      பழைய நினைவுகளை எடுத்துச் சொன்னதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  33. அதுசரி, அந்தத் தோசை.. பஞ்சாச்சரம் வீட்டுத் தோசையேதானோ?:)...

    கதாசிரியர் சொன்னார், ரோஜாச் செடியில் சின்னச் சின்னப் பூக்கள் என:), ஆனால் படத்தில பெரிசு பெரிசாவெல்லோ தெரியுதூஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோசை! அடக் கடவுளே. அடையின் சுவை என்ன, கெத்து என்ன, காரம், மணம், குணம் என்ன! இப்படி எல்லாவற்றையும் 'சப்' என்று இரண்டே எழுத்துகளில் மாற்றிவிட்டீர்களே!
      ரோஜாச் செடி பூ காலையில் சின்னதாதான் இருந்துச்சு, நீங்க லேட்டா வந்து பார்க்கிறதால எல்லாம் வளர்ந்துடுச்சு.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அது அடையோ?:)) நான் டக்காலி ஓசை என நினைச்சேனே:)). அடையைவிடத் தோசை ஒன்றும் குறைஞ்சதில்லை கெள அண்ணன் புரிஞ்சுக்கோங்க:)).. முந்தைய செவியைப் பிந்தைய கொம்பு மறைக்கக்கூடாதாக்கும்:)) ஹா ஹா ஹா ..

      ஓ பூப் பெரித்திடுச்சோ.. அப்போ நாளைக்கும் வந்து பார்ப்பேன் இன்னும் பெரிசாகி இருக்கோணும் இல்லை எனில் காண்ட் கொர்ட்டில வழக்குப் பொடுவேன்:))

      நீக்கு
    3. ஹா ஹா ! அடை ரோஜாப்பூ, தோசை மல்லிகைப்பூ. இரண்டையும் ஒப்பிடுதல் கூடாது. நாளை ரோஜா செடி படத்தை zoom செய்து பார்க்கவும்.

      நீக்கு
    4. காலையுல் மலர்ந்த ரோஜாக்கள்
      நேரம் ஆக ஆக இதழ் விரிந்து கொண்டிருக்குமே...

      கவனித்ததில்லையா!...

      நீக்கு
  34. மனதுக்குக் குளிர்மையான அழகிய கதை துரை அண்ணன், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததைப்போல இருக்குது, ஆனாலும் எனக்கொரு டவுட்டூஊஊஊஊஉ.. டக்குப் பக்கென, தனக்கு உத்தியோகம் இல்லை, ஒரு திருமணம் பண்ணிட்டால் எல்லாம் சரியாகிடும் என அம்மா சொல்லிட்டா என்பதற்காக, காய்ஞ்ச மாடு கம்பில விழுந்ததைப்போல, பார்த்ததும் லபக்கெனக் கையைப் பிடிச்சிட்டார்ர்.. இம்முறையும் பெண்ணிடம் அனுமதி கேட்காமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    சரி பிடிச்சதுதான் பிடிச்சார்ர்.. கடசிவரை, எதையும் குத்திக் காட்டாமல்[என்ன கொண்டு வந்தாய், போய் நகை பணம் வாங்கிவா என:)], கண் கலங்காமல் பெண்ணை வச்சிருக்கோணும் எனச் சொல்லி வையுங்கோ துரை அண்ணன் சபாபதி மாமாவிடம் ஹா ஹா ஹா.. எத்தனை ஷோக்கள் பார்த்திட்டேன் நான் ..:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சீர் செனத்தி எல்லாம் தேம்ஸ் நதிக்கரை ராக்ஃபெல்லர் ஆண்ட்டி அதிரா செய்வாங்க!

      நீக்கு
    2. ///தேம்ஸ் நதிக்கரை ராக்ஃபெல்லர் ஆண்ட்டி அதிரா///

      ..ஙேஙேஙேஙேஙே.... ஹா ஹா ஹா புதுசு புதுசாப் பெயர் கண்டுபிடிக்கினமே:)) மீ ஓடிடுறேன்ன்ன்ன்ன்ன்ன் என் பீன்ஸ் செடிகள் என்னை வாவா என அழைக்குது கார்டினுக்குள்.. அவற்றைத் தடவித் தடவிப் பார்ப்பதில் என்னா ஒரு ஆனந்தம் தெரியுமோ...

      நீக்கு
    3. //காஞ்ச மாடு கம்பில் பாய்ந்த் மாதிரி..// என்னே ஒரு உவமை...

      ஆனாலும் சபாபதி தன் கையை நீட்டுகிறான்... காயத்ரி பிடித்துக் கொள்கிறாள்..

      சம்மதம் தான் வெளிப்படையாக இருக்கிறதே...

      கவனமாகப் படிப்பதில்லையா!..

      நீக்கு
  35. நாங்கள் சிறுவர்களாக இருந்த போது சைக்கிள் எங்கள் தெருவில் தூரவரும்போதே சத்தத்தில் தெரிந்துவிடும் யார் வருகிறார்கள் என்று இவ்வளவுக்கும் அவர் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருப்பவர் :)
    திருமணஞ்சேரிக்குப் போய் காயத்ரியுடன் இட்லிக்கடையும் வந்தாகிவிட்டது இன்னும் பலரும்:) பலவும் வரப்போகிறது பவர் புல் கடவுள்.
    இனிய கதை.இக்காலத்தில் இப்படி எல்லாம் யார் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி..
      தங்கள் வருகையும் மலரும் நினைவுடன் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  36. வாசிப்பவர் மனோபாவம்புரிந்து அதன்படி கதைப்பதில்; தேர்ந்தவர் துரை செல்வராஜுவாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  37. சாதாரண மனிதரிடையே சீராக நடைபோட்டுக்கொண்டிருந்த கதை, கடைசி ஐந்துவரிகளில் ‘தமிழ்ப்படம்’ காட்டிவிட்டதே. ‘சுபம்’ போடும் அவசரமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல.. என்ற நிலையில் இதற்கு மேல் என்ன சொல்வது!...

      நீக்கு
    2. அன்பின் ஏகாந்தன்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  38. ரமா ஸ்ரீநிவாஸன் சொல்கிறார்...

    Durai Sir, my PC has conked. I don't know to simultaneously use Engalblog and my gmail on my mobile. But, I want to comment about your story. Amazing, wonderful, thoughtful and candid. The way the story proceeded was wonderful and smooth. Hats off Sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி ரமாஸ்ரீ...

      சிரமத்துக்கு இடையே
      கருத்துரை தந்தமைக்கு நன்றி..

      நீக்கு
  39. அருமையான நடை. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!