சனி, 4 ஜூலை, 2020

நினைவு நல்லதும், வாக்கினிலே இனிமையும்...



1)  எஸ்.பி., பெருமாள் கூறுகையில், ''சாலைகளில் செல்லும் போது வாகன விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முன் வர வேண்டும். சில நேரங்களில் அதிக ரத்த இழப்பினால் கூட உயிரிழப்பு ஏற்பட்டு விடும். இதை தவிர்க்க மக்கள் மனம் இரங்கி உதவ வேண்டும், என்றார்....





2)  நினைவு நல்லதும், வாக்கினிலே இனிமையும்...

"கலையரசன் நடத்துநர் என்றால் பயணிகள் அனைவருக்கும் பிடிக்கும், மாணவர்களை படியில் நிற்காமல் பார்த்துக்கொள்கிரார்,

இவரைப்போன்ற நடத்துநர்களை யாரும் பாராட்டுவதில்லை, இவரை உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும்......"  (நன்றி புதிய தகவல்கள், துரை செல்வராஜூ ஸார்)



3)  இன்ஸ்பெக்டர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன் சகோதரியை இழந்த ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு ஆறுதல் கூறினார். அப்போது, `அம்மா நீங்க நல்லா இருக்கணும்' என கண்ணீர்மல்க அவர்கள் கூறினர். அதைக்கேட்ட போலீஸாரின் கண்களும் கலங்கின......  (நன்றி புதிய தகவல்கள், துரை செல்வராஜூ ஸார்)



4)  மேற்கு வங்க மாநிலத்தில், நோயால் அவதிப்படும் தனது தாயார் தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று அவதிப்படுவதை பார்த்த மகள், வீட்டிலேயே 15 அடி ஆழம் கிணறு தோண்டியுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது....



5)  மருத்துவம் படிக்கும் மாணவர், படிப்புச் செலவுக்கும், பெற்றோருக்கு உதவி செய்வதற்காகவும், நுங்கு விற்பனை செய்கிறார்.  சிவா.


6)  கொரோனா ஊரடங்கு காரணமாக கண்ணுக்கு எட்டிய துாரம் வரை மனித நடமாட்டமே இல்லை  வெறிச்சோடிக்கிடந்த சாலைகளில் தெரு நாய்கள் மட்டும் அங்கும் இங்கும் உலாத்திக்கொண்டும் அவ்வப்போது தலையை நிமிர்த்தி யாருடைய வரவையோ எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தன........  யார் அவர்?  எஸ்.ராஜேஷ்.  சென்னையில் போக்கு வரத்து போலீஸ்காரராக பணியாற்றுகிறார்.




=====================================================================

தீதும் நன்றும் பிறர் தர வாரா
ரமா ஸ்ரீநிவாசன் 

நண்பர்களே, நீங்கள் யாவரும் பிள்ளைகளாகவும், சகோதர
சகோதரிகளாகவும் வளர்ந்தீர்கள், கணவன்/மனைவிகளாக வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள், தாய் தந்தையராக அவதாரம் எடுத்திருக்கின்றீர்கள், சிலர் மாமனார்/மாமியாராகவும் பட்டம் பெற்றுள்ளீர்கள், சிலர் தாத்தா/பாட்டிகளாகவும் ஆகி விட்டீர்கள்.

ஆனால் நாம் யாவரும் கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு.
ஆகவே, நல்ல விஷயங்கள் நம் கண்களில் சிக்கும்போது அதைப் பகிர்ந்து மற்றவருக்கும் உதவும் வகையில் கொண்டு சேர்ப்போம் என்ற எண்ணத்தில் இவ்வாரம் இக்கட்டுரையை உங்களுடன் பகிர்கின்றேன்.

இக்கட்டுரையானது எல்லா பெற்றோர்களின் கவனத்தையும் கவர்ந்தால்
நான் எழுதியதின் நோக்கம் நிறைவேறும்.

ஒரு மஹா புத்திசாலியான மாணவன் சென்னை ஐ.ஐ.டி நுழைவுத்
தேர்வில் தேர்ச்சிப் பெற்றான். அங்கு பிரமாதமாக மதிப்பெண்கள் பெற்று, கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் தேர்வில் வெற்றி பெற்று எம்.பி.ஏ படிப்பிற்காக அங்கு சென்றான்.

அந்த பல்கலைகழகத்திலும் நல் மதிப்பெண்கள் பெற்று,  சிறந்த
நிறுவனம் ஒன்றில் மிக உயர்ந்த ஊதியத்துடன் அமெரிக்கப் பிரஜை 
ஆனான். திருமண வயது முதிர்ந்த்தும் ஓர் அழகிய தமிழ்ப் பெண்ணை கைப் பிடித்தான்.

காலம் ஓடியது. இருவரும் சேர்ந்து  கலை வண்ணம் கொண்ட
ஐந்து படுக்கையறைகள் அமைந்த வீட்டை வாங்கி, அதில் மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.



என்னவெல்லாம் சிறு வயதில் இந்தியாவில் கனவு கண்டானோ, அவை
யாவையும் அங்கே நினைவாக்கினான். தன் பெற்றோரைக் கூட்டிச் சென்று அமெரிக்காவைச் சுற்றிக் காண்பித்து சந்தோஷித்தான். அவனது பெற்றோரும் இந்தியா திரும்பி தங்கள் மகனின் புகழ் பாடிய வண்ணம் இருந்தனர்.

வெற்றியின் எல்லா அறிகுறிகளும் அந்த பையனிடத்தில் அடக்கம்
என்று கூறும் அளவிற்கு மிகச் சிறப்பாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.

ஆயின், அந்தோ சில ஆண்டுகளுக்கு முன் அம்மனிதன் தன் மனைவியையும் குழந்தைகளையும் சுட்டு கொன்று விட்டு தானும்
தற்கொலை செய்து கொண்டான்.

இத் தகவலை கேட்ட உடனேயே மிரண்டு போனேன். இரு பெண்களை
பெற்றவள் நான் என்பது ஒரு பக்கம் இருக்க அதில் பெரிய பெண் அமெரிக்காவிற்கு மேற் படிப்பிற்கு சென்றிருக்கிறாள் என்னும் புரியாத பயம் இன்னொரு பக்கம் ஓடியது.

என்னதான் தவறாகி விட்டது?

கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஸைகாலஜி அவனின்
வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து கீழ்க் கண்ட பேப்பரை சமர்ப்பித்தது.

இந்நிகழ்வாய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் அந்த மனிதரின்
குடும்பத்தையும் நண்பர்களையும் சந்தித்துப் பேசியதில் தெரிந்து
கொண்டதென்னவென்றால் அம்மனிதர் அமெரிக்காவின் பொருளாதார
வீழ்ச்சியின் காரணமாக தன் வேலையை இழந்து, வீட்டில் சில காலம் அமர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார் என்பதுதான்.

அவர் தன் ஊதியத்தை குறைத்து மற்ற நிறுவனங்களுக்கு
விண்ணப்பித்தும் பயனில்லாமல் போனது.

நண்பர்களே, “difficulties come in a row”. பணமில்லாததால் அவருடைய வீட்டின் இரண்டு அல்லது மூன்று மாத தவணைகள் கட்டாமல் தவறியதும், ஆசையுடன் வாங்கிய வீடு கை மாறியது.

அதையும் தாண்டி சில மாதங்கள் அவரும் அவர் குடும்பமும் எப்படியோ குறைந்த பணத்துடன் உயிர் வாழ்ந்தனர்.

பின்னர், குருட்டுத்தனமாக ஓர் வேகத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அவன் முதலில் தன் மனைவியையும் பெற்ற குழந்தைகளையும்
சுட்டுக் கொன்று விட்டு தானும் துப்பாக்கியைக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

அவனது பெற்றோர் அவனை எவ்வளவு சிரமப் பட்டு இவ்வுலகிற்குள்
வரவேற்றிருப்பார்கள்; எத்தனை கஷ்டங்களையும் சுக துக்கங்களையும்
தாண்டி அவனை ஆளாக்கியிருப்பார்கள்; அவனுக்கு ஒரு  நல்ல வாய்ப்பு
கிடைத்தவுடன் எவ்வளவு சந்தோஷித்திருப்பார்கள்; அவனே தன்
மனைவியையும் குழந்தைகளையும் எப்படி நேசித்திருப்பான் என்று
யோசியுங்கள் நண்பர்களே. எல்லாமே ஒரு நொடியில் இல்லை
என்றாவதற்கா?  நன்றாக அசை போடுங்கள் சினேகிதர்களே.  ஏனெனில் அவனுடைய முட்டாள்தனமான முடிவில் அவனுடைய பெற்றோருக்கும் பங்குண்டு.

அவன் கதையை ஆராய்ந்து தன் ஆய்வறிக்கையை வழங்கிய போது அந்த ஆராய்ச்சியாளர் அழுத்தமாக பதிவு செய்ததென்னவென்றால் அந்த அதிபுத்திசாலியான மனிதருக்கு வெற்றியை மகிழ்ச்சியுடன் எதிர் நோக்கக் கற்றுக் கொடுத்த அவனது பெற்றோர் அவனை தோல்விகளின் வலிக்கும் குழப்பத்திற்கும் தயார் செய்யவில்லை.

இப்பொழுது நாம் உண்மையான கேள்விக்கு வருவோம்.

ஆச்சரியத்திற்குரிய வெற்றி பெற்றோரின் வழக்கங்களும் பழக்கங்களும் யாவை?

முதன் முதலாக நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் நீங்கள் யாவற்றையும் அடைந்து விட்டீர்கள் என்று நம்பினால், அவை யாவையையும் அவசியம் இழக்கும் வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் உங்களை நெருங்கி வரலாம் என்பதையும் நம்புங்கள்.

ஏனெனில், அடுத்த பொருளாதார வீழ்ச்சி என்று இவ்வுலகைப் அடித்து
வீழ்த்தும் என்று நாம் அறியாமல் வாழ்கிறோம்.

நல்ல வெற்றிகரமானப் பழக்கம் தோல்விகளுக்கு நம்மை செவ்வென
தயார் செய்து கொள்வதேயாகும் என்று நான் அழுத்தமாக நம்புகின்றேன்.

நான் ஒவ்வொரு பெற்றோரையும் கையெடுத்து வேண்டிக் கொள்வது
என்னவென்றால் உங்கள் பிள்ளைகளை வெற்றிகளுக்கு மட்டுமே தயார்
செய்யாதீர்கள். தோல்விகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பதையும்
அவசியமான அழுத்தமான வாழ்க்கைப் பாடங்களாக கற்று கொடுங்கள்.

உயர் கணக்கு மற்றும் விஞ்ஞான பாடங்கள் நம் சந்ததியினரை சிறப்பாக போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வழி வகுப்பவை. ஆயின், வாழ்க்கை அனுபவங்கள் அவர்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொள்ளும் சக்தியை பன்மடங்கு வளர்க்கின்றன.



நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு பணம் எப்படி நமக்கு வேலை செய்கின்றது என்பதை மட்டும் போதித்தால் போதாது. அதே சமயம், நாம் எப்படி பணத்தின் பின் அலையக் கூடாது என்பதையும் சேர்த்து கற்றுக் கொடுப்பது அவசியம்.

நம் குழந்தைகளின் உள் மன வேட்கையை அடையாளம் காண உதவுவோம். ஏனெனில் அவர்கள் பெறும் இந்த பி.ஏ. அல்லது பி.எஸ்.ஸி பட்டங்கள் அடுத்த பொருளாதார வீழ்ச்சியின் போது உதவுமா என்பதையே நாம் அறியோம். அதே சமயம், அடுத்த பொருளாதார வீழ்ச்சி என்று, எப்படி நம்மை மறுபடி தாக்கும் என்பதையும் அறியோம்.

இக் கொரோனா காலத்தில் வீட்டில் குடும்பத்துடன் முடங்கி கிடக்கும்
நேரத்தில் உங்கள் வருங்கால சந்ததியினருக்கு வெற்றிகளின் மகிழ்ச்சிகளையும் அதே சமயம் தோல்விகளின் அழுத்தமான வலிகளைப் பற்றியும் உதாரணங்களோடு விளக்க முற்படுங்கள். கண்டிப்பாக சில முக்கியமான விஷயங்களாவது அவர்களின் காதுகளை சென்றடையும். அதே சமயம், சிரமமானதாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து அவர்களுடைய மன அளவிற்கு இறங்கிச் சென்று தரமான நேரத்தை (Quality time) செலவிடுவோம். ஒரு குழந்தையின் மிகப் பெரிய சொத்து அவன்/அவளுடைய பெற்றோர்தான். ஆகவே, என்றுமே கம்யூனிகேஷன் சேனல்களை திறந்து வையுங்கள். உங்கள் பிள்ளைகள் எங்கிருந்தாலும் உங்களிடம் ஆலோசனை கேட்கலாம் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தினீர்களானால் அவர்கள் வாழ்க்கை வழி தவற வாய்ப்பே இல்லை.

இவ்விதத்தில் நாம் இக்கொரோனா இடர் காலத்தையும் பயனுள்ளதாக
செலவிடுவோம்.

ஏனெனில் பிரியமானவர்களே,

“Success is a lousy Teacher ………………….
Failures teach us more.”

இப்போழுது புரிகிறதா நண்பர்களே?  “தீதும் நன்றும் பிறர் தர வாரா”.
நாம் நம் பிள்ளைகளுக்கு தரும் நல்லொழுக்கமும் சீரான வாழ்க்கை
நெறிகளும்தான் அவர்களுடன் நம் வடிவில் நல்ல பழக்கங்களாக முடிவு
வரை பயணிக்கும். நாம் நல் விதைகளை வித்திட்டால் நெடும் ஆலமரமாக ஓங்கி வளர்வார்கள். எனவே, கவனத்துடன் வளர்ப்போம். நல்ல பிரஜைகளை நாட்டுக்கு அர்ப்பணிப்போம்.
===

73 கருத்துகள்:

  1. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரென்ன சொல்வது நாமென்ன கேட்பதுன்னு நினைப்போமே தவிர, இப்படி எங்கே யோசிக்கிறோம்!

      வாழ்க நலம்.

      நீக்கு
    2. இன்றைய சூழலைக் கண் முன் நிறுத்துகின்றன - தங்களது வார்த்தைகள்!..

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார்... நான் நினைத்ததை ஶ்ரீராம் எழுதிவிட்டார். இப்போ எதிர்கட்சி தலைவர்கள், குறிப்பாக மன்மோகன்சிங், ப.சி, சோனியா போன்றவர்கள் தற்பொதைய மத்திய இரசுக்கும் அதன் தலைமைக்கும் நீட்டி முழக்கி அறிவுரைகளைச் சொல்லுகின்றனர். எப்படி பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களுக்கு இலவசமா உணவு அளிப்பது, சிறிய உயிரிழப்பையும் பெரும் பிரச்சனையாக ஆக்குவது, பெட்ரோலுக்கான வரி என்றெல்லாம் ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார்கள். அவங்க என்ன சொல்றாங்க என்பதில் என் மனம் செல்லுவதில்லை. இவங்க பத்தாண்டு ஆட்சியில் இருந்தபோது இவை எதையுமா நினைத்தே பார்க்காத்து மட்டுமல்ல, ஊழல்கள் பல செய்து அவற்றிர்க்குத் துணையாகவும் இருந்தார்கள். அதனால் இவங்க என்ன சொன்னாலும் சாத்தான் வேதம் ஓதுஙதுபோல தோணுது.

      அப்படி இருக்கையில் இந்தக் குறள் வழி நடப்பது எங்கனம்?

      நீக்கு
    4. நீங்கள் இப்படி எல்லாம் யோசிப்பதே குறள் வழி நடப்பதுதான் நெல்லை. அவர்கள் சொல்லும் விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அவர்களை பற்றியும், அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை பற்றியும், இப்போது அவர்கள் அப்படி பேசுவதன் நோக்கம் பற்றியும் யோசித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் பின்னூட்டம் தெரிவிக்கிறதே.

      நீக்கு
    5. துரை செல்வராஜூ ஐயா... அறத்தில் மயங்கிய பின், செவிப்பறையில் விழும் பொருளும் வீணாய் போய் விடுகிறதே...!

      @ 355 to 423...!

      நீக்கு
    6. ஆம்.. எனக்கு இந்த இரண்டு குறள்களிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு.

      நன்றி தனபாலன்...

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. நடத்துனர் கலையரசன், காவலர் ராஜேஸ்வரி போன்றோரது நற்செயல்கள் இன்றைய சமுதாயத்தில் பேசப்படாமல் போவது ஏனென்று தெரியவில்லை....

    மலர்களைய உதிர்க்கும் சூறைக் காற்று போல இன்றைய சூழல்...

    புழுதியால் மூடப்பட்ட மாணிக்கங்கள் எத்தனை எத்தனையோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  எனவேதானே அப்படி எங்காவது கண்ணில் படும் இது மாதிரி செய்திகளை இங்கு தொகுப்பதும், முடிந்தவரை நிறைய பேர்கள் கண்ணில் படவைப்பதும்!  நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. இனிய காலை, இனிய நாளுக்கான நல் வாழ்த்துகள்
      அன்பு ஸ்ரீராம் ,அன்பு துரை. இன்னும் வரப்போகிற நல்
      இதயங்கள் அனைவருக்கும்.

      நீக்கு
    3. நன்றி வல்லிம்மா...   வாங்க...   வணக்கம்.

      நீக்கு
    4. பபீதா சோரனுக்கும் ,அவர் சகோதரன், சகோதரிக்கும்
      மனம் நிறை நல்வாழ்த்துகள்.
      இது போன்ற மகளைப் பெற்றவர்கள்'
      எவ்வளவு முன் மாதிரியாக இருந்திருக்கவேண்டும்.
      அரசாங்கமும் உதவி செய்திருப்பது
      மிக்க மகிழ்ச்சி.
      நல வாழ்த்துகள்.

      நீக்கு
    5. காவலாளரின் நல் இதயம் என்றும் வாழ்க.
      எங்கள் சாலையிலும்
      நடை பயிற்சி மேற்கொள்ளும் ஒருவரை
      எதிர்னோக்கி நாயகள் வருகின்றன.
      அவர் பொறுமையாக ஒரு
      இடத்தைச் சுத்தம் செய்து ரொட்டித் துண்டுகளை வைக்கிறார்.
      நல்லறம் எங்கூம் ஓங்கட்டும்.

      நீக்கு
  4. சிவா போன்றவர்கள் மருத்துவராக ஆவது ஏழைகளுக்கு நன்மையை கொடுக்கும்.

    சிறப்பான கருத்துள்ள கட்டுரை.
    இன்றைய இளைய சமூகத்திடம் பெரியவர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களே அறிவுரை சொல்ல தயங்குகிறார்கள்.

    அதிக சதவீதம் மரியாதை என்பதே தெரியவில்லை காரணம் கண்டிப்பு இல்லை அதற்கு முக்கிய காரணம் நமக்கு இருப்பதோ ஒரே பிள்ளை என்று சுதந்திரத்தை கொடுப்பதே...

    அந்த மனிதரின் முடிவு தவறானதே சொகுசு வாழ்க்கையை இழந்து விட்டதால் குழந்தைகளையும் கொல்லணுமா ?

    இந்த இடத்தில் மேலேயுள்ள செய்திகளில் மருத்துவம் படிக்கும் சிவாவை நினைத்துப் பார்க்கிறேன். இவர் எதையும் வெல்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துக்கு நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
    2. கில்லர்ஜீ, மிக்க நன்றி. எனக்கும் அதுதான் தோன்றியது. குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் அல்லது மனைவிதான் என்ன தவறு செய்தாள். இந்த கொரோனா காலத்தில் மக்கள் மாஸ்க் இல்லாமல் திரியும்போதும் எனக்கு அந்த எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. உன் அறியாமையினால் நீ அவதியுறுவது உன் இஷ்டம். மற்றவர் ஏன் உன் அலட்சியத்தால் மருத்துவ ரீதியாகத் தாக்கப் பட வேண்டும் என்பதே என் கேள்வி. அறிவிலிகள் என்பதே என் கருத்து.

      நீக்கு
  5. மன முதிர்ச்சியுடன் செயல்படும்
    சிவா, இன்னும் நல்லபடி முன்னேற வேண்டும்.

    பெற்றோருக்கு உதவி செய்யும் இரு பிள்ளைகளை இன்று
    பார்த்துவிட்டோம்.
    இளைய சமுதாயம் நல்லபடியாக வளர்ந்து வருகிறதைக் காண
    மிக மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போன்ற நல்லவர்கள்
    செய்யும் நற்காரியங்கள்
    ஊரார்களுக்குத் தெரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. நடத்துனர் கலையரசன் பற்றிய செய்தியைப் பகிர்ந்த அன்பு துரைக்கு நன்றி.
    உண்மைதான் பஸ்பாஸ் மாணவர்களைப் பெரும்பாலான் நடத்துனர்கள் மதிப்பதில்லை.
    இவர் அதற்கு மாறாகக் கனிவுடன் நடத்துகிறார் என்ற செய்தியே
    மகிழ்ச்சி தருகிறது. நன்மை ஓங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  8. திருமதி ரமாவும் அவரது கணவரும் முன் மாதிரியான பெற்றோர்கள்.
    குழந்தைகளின் விருப்பப்படியே நடப்பவர்கள். அவர் எழுத்துப்
    போலவே நல்லதொரு குடும்பம் அவர்களுடையது.
    கலிஃபோ ர்னியா நிகழ்ச்சி அதிர்வலைகளைச் சென்ற வருடம் ஏற்படுத்தியது நிஜமே.

    பாவம் வழி தவறிப் போன வாழ்வு.
    வருத்தம் மேலிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லி மாமி, முடிவில் நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம் மகிழ்ச்சி என்பதை உணர்ந்தால் நாம் யாவரும் முன் மாதிரியான பெற்றோர்கள் ஆகி விடுவோம். எனினும் அடையாளம் கண்டு கூறியதற்கு மிக்க நன்றி

      நீக்கு
    2. உண்மையே ரமா.
      பொறுமையின் வடிவங்கள் நீங்களும்
      உங்கள் கணவரும்.
      பெரியோரைக் காப்பாற்றி ,
      குழந்தைகளையும் முன்னுக்கு வரச் செய்து
      சமுதாயத்துக்கு நன்மை செய்கிறீர்கள்.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். உலகளவில் லாஸ் ஏஞ்சலிஸுக்கு அடுத்துச் சென்னை தான் கொரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதாகத் தொலைக்காட்சிச் செய்தி கூறுகிறது. விரைவில் நாடே இந்தக் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடப் பிரார்த்திப்போம். உலக அளவிலான விமான சேவை இந்த மாதம் முடியக் கிடையாது என்றும் சொல்லிவிட்டார்கள்! :( காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்....   ஆகஸ்ட் பதினைந்து அன்று தடுப்பு மருந்து வெளியாக இந்தியா முயற்சி செய்து வருகிறது.   90 சதவிகிதம் தயார் நிலையில் இரண்டு தடுப்பு மருந்துகள் உள்ளன.  அதில் பாரத் பயோடெக் பற்றி அதிகம் செய்தியில் இடம் பெறுகிறது.  பார்ப்போம்.

      நீக்கு
  10. நல்ல மனிதர்கள் அனைவருமே இன்று புதியவர்கள். அறியாதவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். நுங்கு வியாபாரம் செய்து கொண்டே மருத்துவப் படிப்புப் படிக்கும் இளைஞன் கருணையும் அன்பும் கொண்டவனாக உருவெடுப்பான். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. திருமதி ரமா ஓர் அருமையான கருத்தை முன்னெடுத்து அதற்கான கட்டுரையைச் சிறப்பாக எழுதி இருக்கிறார் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பள்ளிகளில் நீதி போதனை என்னும் வகுப்புக்களைத் தடை செய்தது, கடவுள் வாழ்த்து கூடாது என்றது. பல பழமையான தமிழ் இலக்கியங்களைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது என்று சொல்லிக் கொண்டே போகலாம். எனினும் எல்லாவற்றையும் விட மோசமானது வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைக் கண்டிக்க முடியவில்லை. பெற்றோர் அதை ஏற்பதில்லை. ஆசிரியர்கள் மேல் குற்றம் சொல்லுவதோடு அவர்கள் மேல் வழக்குத் தொடரும் அளவுக்குப் போய் விடுகின்றனர். மாணவர்களும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வகுப்பில் அலட்சியமாகவும் ஆசிரியரிடம் மரியாதை இன்றியும் நடந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர். அதுவே விரைவில் அவர்கள் பெற்றோரிடம் கூடத் தங்களைப் பற்றிய உண்மை நிலவரத்தை மறைப்பதில் போய் முடிகிறது. பெரும்பாலான பெற்றோர் பின்னர் தான் உணர்கின்றனர். அதுக்குள் காலம் கடந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  12. அரசாங்கமும், மாணாக்கர்களுக்கு மதிப்பெண்களை அள்ளிப் போட்டு அவர்களை உண்மையான தகுதியை அறியவிடாமல் செய்து விடுகிறது. மேலும் தகுதிக்கான தேர்வுகளை எழுத மாணாக்கர்கள் தயார்ப்படுத்தப்படுவதில்லை. எல்லோரும் மாணவர்களுக்கு மன அழுத்தம் இதனால் அதிகம் ஆகிறது என்று சொல்லி ஒட்டுமொத்தமாக எதிர்ப்பைக் காட்டவும் அரசும் இதிலிருந்து பின் வாங்கி விடுகிறது. இப்போது எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை இப்படித் தான் கழித்துக் கட்டினார்கள். ஆங்கிலேய ஆட்சியின் போது கூட எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு, எஸ் எஸ் எல் சி பொதுத் தேர்வு ஆகியவற்றிற்குச் சிறப்புத் தேர்வு முறை இருந்து வந்தது. என் கணவர் எழுதும்போதும் எஸ் எஸ் எல்சி பொதுத் தேர்வுக்குச் சிறப்புத் தேர்வு முறை உண்டு. அதில் தேர்ச்சி பெற்றால் தான் பொதுத்தேர்வு எழுத முடியும் என்றிருந்தது. அதை எல்லாம் நீக்கியதோடு எல்லோருமே தேர்ச்சி அடைந்துவிட்டனர் என்னும் புதிய தேர்வு முறை இப்போது வந்துள்ளது. கடமை நாலு தரம் கூப்பிட்டாச்சு, வரேன் அப்புறமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, மதிப்பெண்கள் என்பவை ஓர் அங்கீகாரத்திற்கே. அவை ஒரு படிக்கற்களே. குழந்தைகளை வருத்தி அவர்களை மீள முடியா சுழலில் மாட்டி விட்டு விட்டு பின்னர் வருந்தும் பெற்றோர் பலர். கண் கெட்ட பிறகு சூரிய வெளிச்சம் இருந்துதான் என்ன பயன்"

      நீக்கு
  13. ரமா அவர்களின் கட்டுரையை அசுவாரசியமாகப் படிக்க ஆரம்பித்து பிறகு அது எதை நோக்கிச் செல்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டேன். நாம் முன்னேறணும், பெரிய நிலையில் வாழணும் என்ற அழுத்தமும் உத்வேகமும் ஒருவனுக்கு இருப்பதுபோல், சிக்கனமாக இருக்கணும், அதீதமாக ஆசைப்படக்கூடாது, எப்போதும் எதிர்காலத்துக்கு பொருள் சேர்த்துவைக்கணும், பஞ்சகாலம் எப்போ வரும்னு தெரியாது, Expect the Unexpected என்பதையெல்லாம் பள்ளிகளில் சொல்லித்தருவது அறவே ஒழிந்துவிட்டது.

    நான் படித்த காலத்திலேயே தமிழையா என்பவரும், உடற்பயிற்சி ஆசிரியரும், வரைகலை ஆசிரியரும் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாமலே இருந்தார்கள். பள்ளி வளாகம் சரிசெய்வது, ஆண்டுவிழா நாடகம், கலைப் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வது என்பதற்கே அவர்களை உபயோகப்படுத்துவர்.

    இவர்கள்தாம் மாணவனின் மூளையின் இன்னொரு பகுதியை வளர்த்தெடுப்பவர்கள்.

    கடனில் வாழ்க்கையை டாம்பீகமாக வாழ ஆரம்பித்தால், கஷ்டகாலம் வரும்போது சமாளிக்கத் தெரியாது. சிறுவயதில் சொல்லிக்கொடுத்த பஞ்சதந்திரக் கதைகள் நினைவுக்கு வருது.

    நல்ல கட்டுரை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சார், மிக முக்கியமான கருத்தை மேற்கோல் காட்டியிருக்கின்றீர்கள். "You should always save for a rainy day" என்று சொல்லி சொல்லி வளர்த்தார் எங்கள் தந்தை. அதையே நான் என் பெண்களுக்கு சொல்லி வளர்த்தேன். பயனுருவார்கள் என்று நம்புவோம்.

      நீக்கு
  14. உங்கள் பிள்ளைகள் எங்கிருந்தாலும் உங்களிடம் ஆலோசனை கேட்கலாம் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தினீர்களானால் அவர்கள் வாழ்க்கை வழி தவற வாய்ப்பே இல்லை..........




    சிறப்பான கருத்து ...

    பதிலளிநீக்கு
  15. சமுதாய உணர்வு ஒவ்வொருவரது உள்ளத்திலும் விரவியிருந்தவரைக்கும்
    பெற்றோர் - பிள்ளைகள் - ஆசிரியர் , உறவு என்பது நன்றாகவே இருந்தது...

    என்றைக்கு கல்விக்காக தனியாரிடத்தில் கொட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்களோ
    அன்றைக்குத் தோன்றியது அழிவு காலம்..

    தமிழ் மாதங்களின் பெயர்கள் தெரியாமலே வளர்ந்து விட்ட 16/18 வயதுடைய பிள்ளைகள்.

    தமிழ் மாதங்களின் பெயர்கள் அறியாதபடிக்கு வளர்க்கப்பட்ட இளந்தலைமுறைக்குத் தமிழ் கலாசாரம் வாழ்வியல் எல்லாம் எப்படித் தெரிந்திருக்க முடியும்?...

    பாரம்பரிய தமிழ் குடும்பத்தில் பிறந்து தமிழ் அறியாமலேயே வளர்ந்து விட்டவர்களையும்

    வடமாநிலங்களில் இருந்து தமிழ் மண்ணுக்குக் குடிபெயர்ந்து தமிழுடன் வாழ்பவர்களையும்
    தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வகைப் படுத்தி இருந்தார் கோபிநாத்...

    அதிலே ஒரு பெண் -
    எட்டுத் தொகை, பதிணெண் கீழ்க்கணக்கு தேவாரம் இதெல்லாம் தெரிந்து கொள்வதால் ஆகப் போவது என்ன!..

    - என்று எதிர்க் கேள்வி கேட்டிருந்தார்!...

    அந்தக் கணக்குகளுக்குள் உட்பட்ட
    கொன்றை வேந்தனும் ஆத்திச்சூடியும் ந்ல்வழியும் மிக மிக எளிமையாக நல்லறத்தைப் போதித்தது நல்ல எண்ணங்களை வளர்ப்பவை என்பதை உணராமல் போயினர் தமிழர்கள்...

    உன் குழந்தையும் என் குழந்தையும்
    நம் குழந்தையுடன் விளையாடுகின்றனர்.. என்பது தான் மேற்கத்தியக் கலாச்சாரம் என்று சொல்வார் எங்கள் தமிழாசிரியர்..

    அதைக் கண் முன்னால் காண நேர்ந்ததே!..
    அதுதான் காலக் கொடுமை...

    தமிழையும் அதன் கலாச்சாரத்தையும் அழிப்பதற்கென நம் நாட்டுக்குள் தோற்றுவிக்கப்பட்ட மேற்கத்தியக் கல்வி முறை அதில் வெற்றி பெற்று விட்டது...

    உதாரணங்கள் -

    படித்தவனே லஞ்சம் எனப் பிச்சை எடுக்கிறான்..

    இன்னும் ஒருபடி மேலே போய்
    தொழில் நுட்பத்துடன் கொள்ளையடிக்கிறான்..

    இதை தனியொருவன் செய்தாதண்டனை..

    அரசு ஊழியர் செய்தால் இடமாற்றம எனும் கடும் தண்டனை!

    பதிலளிநீக்கு
  16. உதாரணங்கள் இன்னும் பல சொல்லலாம்..

    எல்லாரும் அன்றாட நாட்டு நடப்புகளை அறிந்திருப்பீர்கள்.. அவற்றை நினைத்துப் பார்த்து தலைவிதியை நொந்து கொள்க!...

    பதிலளிநீக்கு
  17. 15 அடியில் தண்ணீரா?! அட்ரஸ் கேட்டு சொல்லுங்க சகோ...

    நடத்துனர் கலையரசனின் சேவை பாராட்டுக்குரியது..

    விபத்தில் காயப்பட்டவர்கள் அருகில் செல்ல போலீஸ், விசாரணை, கோர்ட், வழக்கே காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜி - /15 அடியில் தண்ணீரா?!/ அனேகமா பாலாற்று மணற்படுகையாக இருக்கும்.

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா... இவங்க ஊர் அப்படி...

      நீக்கு
  18. இரண்டு மற்றும் மூன்றாவது செய்திகள் புதியவை... நல்ல மனங்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    கட்டுரை அருமை... தோல்விகளை எவ்வாறு எதிர் கொள்வது மட்டுமல்ல... அவமானங்களையும் சாதனைகளாக மாற்றுவதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி.டி. சார் மிக்க நன்றி. பெற்றோர்களுக்கு புரிதன் அதிகரிக்க வேண்டும்.

      நீக்கு
  19. மருத்துவ மாணவன் சிவாவிற்கு நல்ல எதிரகாலம் அமைய வேண்டும்! இப்போதே பொறுப்பாக இருப்பதால் நிச்சயமாக வெல்வார்! நல்லது செய்வார். வாழ்த்துகள்!

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி வாழ்க! அருமையான செயல். கண் கலங்கிவிட்டது. மனிதநேயம்! வாழ்த்துகள். பாராட்டுகள்

    (ஸ்ரீராம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி என்று வந்திருக்க வேண்டியது டைப்போவில் அது கீழே வந்ததால் அந்த வரியின் அர்த்தம் மாறிப் போய்விடுவது போல் இருக்கிறது)

    எஸ் ராஜேஷ் வாவ்!! செல்லங்களுக்கும் ஒரு காவலர். மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள். அவரின் செயலும் மனதைத் தொட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா... இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி... ஆமாம்... சரிதான்.

      நீக்கு
  20. அம்மாவுக்காகக் கிணறு வெட்டிய பெண், நடத்துனர் கலையரசன், எஸ் பி பெருமாள் அவர்கள் அனைவரும் செய்வது நல்ல விஷயங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. நல்ல செய்திகள். சில முன்னரே படித்தவை. மற்றவையும் நன்று.

    கட்டுரை சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  22. நாம் யாவரும் கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு.
    ஆகவே, நல்ல விஷயங்கள் நம் கண்களில் சிக்கும்போது அதைப் பகிர்ந்து மற்றவருக்கும் உதவும் வகையில் கொண்டு சேர்ப்போம் //

    அதே! சூப்பர் ரமா..

    ரொம்ப அருமையான கட்டுரை! ரமா, பாராட்டுகள்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த மனிதர் பற்றி வாட்சப்பில் வந்தது.

    வாழ்வில் மிக முக்கியம் தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம். இது உளவியல் ரீதியாகவும் கூடச் சொல்லலாம்.

    ஒரு சிலருக்கு வாழ்க்கையில் பிறந்ததிலிருந்து எல்லாமே கிடைத்திருக்கும். எதற்கும் கஷ்டப்படாமல். பள்ளி கல்லூரியில் என்று எப்பவுமே முதல் ரேன்ங்க் பரிசு என்று இருப்பார்கள். இப்படியானவர்கள் 100 லிருந்து 99 , 98 வாங்கி இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்தால் கூடத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். இது ஒரு வெறியாகக் கூடச் சிலரிடம் மாறுவதுண்டு. இப்படியானவர்களால் ஒரு சிறு தோல்வியைக் கூடத் தாங்கும் சக்தி இருக்காது. இது பெண்களில் திருமணம் ஆகிப் போகும் போது பிரச்சனைகள் வரும்.

    மற்றொன்று எப்போதுமே பணத்தில் இருந்தவர்களுக்கும் தோல்வி சமயத்தில் அவர்களால் அதைத் தாங்கும் சக்தி இருப்பதில்லை. எதுவுமே ஈசியாகக் கிடைத்தால் வரும் விளைவு. தண்ணீர்ம, காற்று எல்லாமே இலவசம் என்று நாம் எப்படி மாசுபடுத்துகிறோம் தண்ணீரை வாரி இறைக்கிறோம். அது இலவசமாகக் கிடைத்த போது, தண்ணீர்க் கஷ்டம் வரும் ப்0ஒது பைசா கொடுத்து வாங்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம். அது போல சில பணம் இருந்தாலும் ஆடம்பரம் தவிர்த்து சில சிக்கன நடவடிக்கைகளையும் பழகிக் கொள்ள வேண்டும். பணம் இருக்கு என்பதால் தேவையில்லாமல் பல பொருட்கள் வாங்குவது. ஷோ காட்டுவது, ஸ்டேட்டஸ் என்று வாழ்வ்தால்...

    தோல்வி வரும் போது மனம் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் எதிர் கொள்ளும் சக்தி வேண்டும்...அப்போது நாம் என்ன செய்தால் நாம் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்று சிந்திக்கும் மனநிலை வேண்டுமே அல்லாமல் தளர்ந்தால் இதுதான் முடிவு.

    சிறு வயதிலிருந்தே இவை எல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் கற்றுக் கொள்பவர்கள் அதை உணர்ந்து வாழ்ந்தால் இப்படியான நிகழ்வுகள் இருக்காது.

    முன்பெல்லாம் பள்ளிகளில் நல்ல மாரல் க்ளாஸஸ் இருந்தன. இப்போதெல்லாம் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

    நல்ல கட்டுரை ரமா.

    இப்போது தொற்று எல்ளோருக்கும் பலதையும் கற்றுக் கொடுக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் 11வது வகுப்பு வரை மாரல் க்ளாஸ் உள்ள பள்ளியில் படித்ததால் என் பெண்கள் பயனடைந்தார்கள் என்றே கூற வேண்டும். என் பள்ளியில் இருந்த கன்னியாஸ்திரிகள் அழகாக வாழ்க்கை கல்விகளை புகட்டியதன் விளைவே என் வாழ்க்கை என்று தோன்றும்.ஏனெனில் ஒரு நாளில் எட்டு மணி நேரத்தை அங்குதான் கழிக்கின்றீர்கள்.

      நீக்கு
  23. பெற்றவர்களை அநாதையாய் தெருவில் விடும் பிள்ளைகள் நிறைந்த இக்காலத்தில் -

    தன்னை வளர்த்தவர் இறந்து விட்ட துக்கத்தைத் தாங்க மாட்டாமல் மாடியில் இருந்து குதித்து தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிற்து நாலுகால் செல்லம் ஒன்று..

    கான்பூரில் நடந்த இச்சம்பவம் சற்று முன் தினமலரில் வெளியாகி உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவமே.. அவைகளுக்குதான் என்ன ஒரு உணர்வு, பாசம்...

      நீக்கு
    2. சில நாட்கள் முன்பு Hachi-ko என்ற 1987ல் வெளிவந்த படத்தைப் பார்த்தேன். வளர்ப்பு நாயின் மீது அன்பைச் செலுத்துபவர்கள் மீது அது அவ்வளவு அன்பைச் செலுத்துகிறது, தன் எஜமானர் இறந்தது அறியாமல், தினமும் அவரை இரயில் நிலையத்தில் மாலை 4 மணிக்கு அழைத்துவரச் செல்வதுபோல, அவர் இறந்த பிறகும் அங்கு சென்று காத்திருந்து பிறகு திரும்புகிறது. பல வருடங்கள் அது இறக்கும் வரை இரயில் நிலையத்துக்குச் சென்று எஜமான் திரும்புவார் என்று காத்திருக்கிறது. ஆனால் அவரின் மனைவியே, நாய் வளர்க்காதீங்க, இதற்கு முன்பு நாய் வளர்த்து, அது இறந்தபிறகு எவ்வளவு மனக்கஷ்டம் அடைந்தோம் என்பதை நினைத்து இனி நாய் வேண்டாம் என்று சொல்லுவாங்க. வாய்ப்பு இருந்தால் இந்தப் படத்தைப் பாருங்க.

      நீக்கு
    3. ரயில் நிலையத்தில் எஜமானருக்காகக் காத்திருந்த நாயின் கதையைக் கேட்டிருக்கிறேன்...

      நீக்கு
  24. அனைத்து செய்திகளும் மிகவும் பாசிட்டிவ். அதில் ராஜேஸ்வரி அவர்களுக்கு நல்ல மனது.
    மருத்துவ மாணவன் சிவா பாவம் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றும் வருவார் என்றும் மனம் விழைந்து வாழ்த்துகிறது. என் மகன்கள் இருவருமே மருத்துவம் பயில்பவர்கள் அதுவும் தனியார்க்கல்லூரியில் என்பதால் புரிந்து கொள்ள முடிகிறது.

    ராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இப்படியான மனித நேயம் உள்ளவர்கள் போலீஸ் இடையே இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  25. சகோதரி ரமா ஸ்‌ரீனிவாசன் அவர்களின் கட்டுரை மிக மிக அருமை மட்டுமின்றி இப்போதைய தலையினருக்கும், பெற்றோருக்கும் மிகவும் தேவயான ஒன்று. Life is not full of roses. முட்களும் உண்டுதான். பெற்றோர் இதையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    சொல்லப்பட்டிருக்கும் உதாரண நிகழ்வு வேதனையான ஒன்று ஆனால் நல்ல பாடம். அருமையான கட்டுரை.

    வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  26. எஸ்.பி., பெருமாள் கூறியது நன்று.கலையரசன் நடத்துநர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் கருணைக்கு வாழ்த்துக்கள்.

    தாயின் கஷ்டத்தை போக்கிய மகள், பெற்றோர்களின் பாரத்தை குறைக்கும் பொறுப்பான மருத்துவம் படிக்கும் மகன் சிவா இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  27. ரமா ஸ்ரீநிவாசன் அவர்கள் கட்டுரை இந்தகால கட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.
    மனதிடமும் , தோல்வியை கண்டு துவளா மனம் வேண்டும், அது அவசியம் என்பதை அழுத்தமாக அழகாய் சொல்லி இருக்கிறார்.
    அவர் சொல்லிய குடும்பக்கதை மனதை கனக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  28. காவலர்கள் ராஜேஸ்வரி மற்றும் எஸ்.ராஜேஷ்,  நடத்துனர்  கலையரசன், அம்மாவுக்கு கிணறு வெட்டிய மகளும், மருத்துவம் படித்துக் கொண்டே பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இளநீர் விற்கும் சிவா என்று எல்லோருமே போற்றுதலுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  29. ரமா ஸ்ரீநிவாசன் அலசியிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமானது.  பள்ளி, கல்லூரிகளில் எப்போதும் முதலிடம் வகிக்கும் மாணவர்களை விட, சுமாராக, அல்லது நன்றாக படிக்காத மாணவர்களே சாதனையாளர்களாக ஜொலிப்பதாக பல வருடங்களுக்கு முன்பே ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்து. முதல் பெஞ்சு மாணவர்ளுக்கு தோல்வி என்றால் என்னவென்று தெரியாததால், நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் துவண்டு விடுகிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது. மேலும் நெ.த. சொல்லியிருப்பது போல் சிக்கனம், சேமிப்பு,பேராசை படாமல் இருப்பது போன்ற விஷயங்களை சிறு வயதிலிருந்தே கற்பிக்க வேண்டியது அவசியம்.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு, இந்த கட்டுரையானது இக்காலத்து பெற்றோருக்கு மிகவும் பொருந்தும். நாம் எப்படியோ பெற்றோர் கூறியதை கேட்டு வளர்ந்து இப்போது ஒன்றும் குறைந்து போகாமல் நிமிர்ந்து நிற்கின்றோம்.
      என்றைய பெற்றோர் நாளைய தலைமுறையினரை நன்றாக வளர்க்க அவர்கள் நன்றாக வளர்ந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

      நீக்கு
  30. யாவருக்கும் மதிய வணக்கங்கள். காவலர்கள் ராஜேஸ்வரி, எஸ்.பி.பெருமாள்,இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிறுவன் சிவா, அன்னைக்காக கிணறு வெட்டிய மகள், கண்டக்டர் கலையரசன் யாவரும் வணங்கப் பட வேண்டிய மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  31. நான் சிறு வியாபாரிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் நுங்கு விற்கும் ஒருவர் பற்றியும் எழுதி இருந்தேன் இவர்களில் பலரும் கூட்டாகச்செயல்படுபவர்கள்

    பதிலளிநீக்கு
  32. எப்பவும் வெற்றி அடைந்து இருப்பவர்களுக்கு தோல்வி பயத்தை உண்டு பண்ணுகிற்து நம்நாட்டில் பெரும்பாலான ஐடி கம்பனிகளில் வேலை செய்வோருஅடங்குவர் எனக்குதெரிந்த ஒருவர் இந்நிலையை சமாளிக்க முடியாது அவதிப்பப்டுகிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி சார்... தோல்வி பயத்தை உண்டுபண்ணும். மனவருத்தம் கொள்ளவைக்கும். எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்ளவைக்கும். ஆனால் இதற்கெல்லாம் அருமருந்து, முதலில் காசு வரும்போது, ஈ.எம்.ஐ யை நம்பி செலவை இழுத்துவைத்துக்கொள்வதற்குப் பதில் நம் எதிர்பார்ப்புகள், நம் சம்பாத்தியத்தில் சேமிப்பு போக மீதிக்குள் இருக்கவேண்டும். நான் வளர்ந்த இடங்களில் கற்றுக்கொண்டதுதான் எனக்குக் கைகொடுத்தது. இப்போது நினைக்கும்போது, அந்த மெண்டாலிட்டியால் நான் இழந்தது அனேகம் என்று தோன்றும். ஆனால் ஒட்டுவதுதான் ஒட்டும் என்று தேற்றிக்கொள்ளணும் (சொந்த சம்பாத்தியத்தில்தான் நான் 1/2 கிரவுண்டுக்கும் குறைவாக பி.டி.ஏ சைட் வாங்கினேன். ஆனால் எனக்கு ஆலோசனை சொன்ன அனைவரும் பேங்க் லோன் போட்டு 1 அல்லது 2 கிரவுண்ட் வாங்கச் சொன்னார்கள். வாங்கியிருந்தால் அதனை சர்வசாதாரணமாகக் கட்டியிருப்பேன் என்று பிற்காலத்தில் தோன்றியது. ஆனால் என் கொள்கையா நான் லோன் வாங்குவதில்லை, கிரடிட் கார்ட் வைத்துக்கொள்வதில்லை என்பதை இதுவரை இறைவன் அருளால் கடைபிடிக்க முடிந்தது. 25 வருட வெளிநாட்டு வாழ்க்கையில் கிரடிட் கார்டு வைத்துக்கொள்ளாத above middle class (from that country point of view) நான் ஒருவனாகத்தான் இருப்பேன்.

      நீக்கு
  33. இந்த வாரமும் ரமாஸ்ரீ அவர்கள் கட்டுரை சிறப்பு.
    பெற்றோர்கள் தாம் பிள்ளைகளின் தோல்வி கண்டு ரொம்பவும் சோர்ந்து போய்விடுகிறார்கள். தாங்கள் தாம் போட்டிகளில் பங்கு பெறுவது போலவே அவர்கள் உணர்வதால் இந்த ஏறுமாறு.
    டிவி ஷோக்களில் அவர்கள் படும் பாட்டை நேரிடையாகவே பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!