ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

அன்னமா? வாத்தா ?

மாமா அந்த மேகத்தைப் பார்த்தால் அன்ன பட்சி மாதிரி இல்லை?


அன்னம் என்றால் கழுத்து நீண்டு இருக்கும்  இது வேறேதோ ...ஆனா அழகாயிருக்கில்லை?



அன்னம் என்று பேசி சாப்பாட்டை நினைவு படுத்திவிட்டீர்கள் 
சத்திமுற்றப் புலவர்போல் இருந்தால் அந்தப்பட்சியைக் கேட்கலாம் 
சோறு எங்கே கிடைக்கும் என்று என்று ஆனந்த்  ஆரம்பிக்குமுன்,
டேய் அது கவி காளமேகம் ..என்று அர்ஜுன் ஆரம்பிக்க 


இரு, பறவை இரண்டு டவர் தாண்டி ..என்று ஏதோ சொல்கிறமாதிரி..



ஒரு கோவில் வரும்... அப்புறம்...



அப்போது நம் எதிரே வருகிறவர்களைக் கேட்கலாம் 




அப்போது மர உருவில் வந்த நாய்க்குட்டி 



இப்போதுதான் ஒரு வெள்ளை நாய்க்குட்டி தெற்கே போனது 



கொஞ்சம் வேகமாகப் போனால் அதைக்கேட்கலாம் 



அப்பாடா வெள்ளை நாய்க்குட்டியைப் பிடித்தாச்சு 



அது காட்டிய வழியில் பார்த்தால்...ஊம் ஹூம் ...அந்த வாசனையே நமக்கு வேண்டாம் 



அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் ...


சுத்தமாய் இருக்குதடி என்று மகள் பாட.....



சத்தமாய் இருக்குதடி என்று அவள் அண்ணி பாட 



பார்க்குமிடங்களெல்லாம் நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே என்று பாரதியின் பாடலை 


நினைவுறுத்திய சூழலில் 


சூடாக பிஸிபேளா பாத் சாப்பிட்டு, நல்ல காபி யு ம் கரும்பு ஜூஸ் உம்   குடித்து விட்டு காற்று மட்டும் சற்றுக் குறைவாக இருந்தால் இந்த விசிறி வாழைகள் எப்படி இருக்கும் என்றெண்ணிக்கொண்டே..


ஆகாயத்தை நோக்கி நன்றி செலுத்தி 



சிக்னல் விளக்கு மீது சோலார் பேனல் ?





இப்போதெல்லாம் இந்த மாதிரி wrought iron வேலைகள் செய்கிறார்களோ என்று வியந்து கொண்டே 


மைசூரில் நுழைந்தோம் 


தலைப்புகளை எழுத உட்கார்ந்தபோது கன்னித்தீவு நினைவுக்கு வந்தது ....பலன் ?


ஒரு பஸ் வந்தால் என்று யோசனையில்...

====== 


51 கருத்துகள்:

  1. வெண்மேக படங்கள் அழகு ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அதிசயமா முதல் ஆளா வந்திருக்கீங்க! இரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய ஞாயிறு காலை வணக்கம்.
    என்னாளும் பொன்னாளாக விளங்க இறைவன் அருளட்டும்.'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருள் நீக்க அருள் வேண்டுவோம். மருள் நீக்குவோம்.

      நீக்கு
  3. மேகங்கள் அழகென்றால் அவைகளுக்குக் கொடுத்த தலைப்புகளும் அதைவிட அழகு.
    கௌதமன் ஜி க்கு இனிய வாழ்த்துகள்.

    பாரதியார், சத்தி முற்றத்தார், கவி காளமேகம் எல்லோரும் வந்துவிட்டார்கள்.
    சாலைக் காட்சிகள் அழகு சித்திரங்கள்.

    மைசூர் வந்தாச்சு என்றால் இன்னும் கன்னித்தீவுதான்.

    நெல்லையைக் காணோம்.
    அன்பு துரையைக் காணோம்.
    தேவ கோட்டையாருக்கும் வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. எல்லோரும் எங்கே? நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்!

      நீக்கு
  4. நல்ல ரசனை. மேகங்கள், விளக்குகள், சாலையோரக் காட்சிகள்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அன்னம் என
    ஆனை என
    ஆகாய முகில்
    காட்டும் வண்ணங்கள்..

    கலையின் சின்னம் என
    கவியின் எண்ணம் என
    மனங் கொண்ட இளந்
    தேன் கிண்ணங்கள்..

    பதிலளிநீக்கு
  7. அதிகாலை 2:50 மணிக்கு எழ முடியாதபடிக்குக்
    களைப்பு... அதனால் தான் தாமதம்...

    பதிலளிநீக்கு
  8. வெள்ளிக்கிழமை காலிஃப்ளவர் சாம்பார்.. வாழைக்காய் வறுவல்... கடலை சட்னி..

    இன்னும் தோள் பட்டையில் பிரியமுடன் பிடித்துக் கொண்டிருக்கிறது வாழைக்காய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! எனக்கும் அந்தக் கஷ்டம் வரும்! வாழைக்காய் மற்றும் கிழங்கு வகைகள் சாப்பிட்டால் !

      நீக்கு
    2. காலிஃப்ளவரில் சாம்பார்?

      // இன்னும் தோள் பட்டையில் பிரியமுடன் பிடித்துக் கொண்டிருக்கிறது வாழைக்காய் //

      ஹா.. ஹா... ஹா...

      நீக்கு
    3. /இன்னும் தோள் பட்டையில் பிரியமுடன் பிடித்துக் கொண்டிருக்கிறது வாழைக்காய்/

      சிரமந்தான்... போன வார நடுவில் சாப்பிட்ட வாழைப்பூவும் நேற்றெல்லாம் தோளிலிருந்து இறங்க மறுத்துக் கொண்டேயிருந்தது.

      நீக்கு
    4. எனக்கு இந்த வாழைக்காய், உருளைக்கிழங்கு எதுவும் தொந்திரவு பண்ணாது. முழுக் கறுப்பு உளுந்து தான் ஒத்துக்காது. சில சமயங்களில் கீரை வகைகள், கருணைக்கிழங்கு மசியல் போன்றவை தொண்டையை அடைத்துக்கொண்டு சூடாக இருக்கும்.

      நீக்கு
    5. @கமலா, வாழைப்பூவுக்கு வாயுவா? ஆச்சரியம்! அதை வயிற்றுத் தொந்திரவுக்கு ரொம்ப நல்லது என்பார்களே! எனக்கு அதில் எல்லாம் எதுவும் பண்ணாது. பிரண்டை, கண்டந்திப்பிலி, கீரைகளில் சில, முழுக் கறுப்பு உளுந்து போன்றவை ஒத்துக்காது.

      நீக்கு
    6. அட? ஸ்ரீராமும் வந்திருக்காரா?

      நீக்கு
    7. வணக்கம் சகோதரி

      வாழைப்பூ வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. ஆனால் வாழை சம்பந்தபட்ட எல்லாமே சில சமயத்தில் வாயு சேஷ்டையை உண்டு பண்ணும். உ. கி கடலை வகைகளும் அப்படித்தான். பல சமயங்களில் ஒத்து வந்து விடும். சில சமயம் நம்மை சோதனைக்குள்ளாக்கும். அது எந்த சமயமென்று தெரியாததால், அதனிடம் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை வைப்பது உத்தமம்.:) நன்றி.

      நீக்கு
    8. //@கமலா, வாழைப்பூவுக்கு வாயுவா? ஆச்சரியம்!// - கீசா மேடம்.. இந்தக் கேள்விக்கு முன்னால் வந்திருக்கவேண்டிய கேள்வி வாழைப்பூல என்ன பண்ணினீங்க? பருப்புசிலி பண்ணிச் சாப்டீங்களான்னு கேட்டிருக்கணும். ஒருவேளை வாழைப்பூவின் துவர்ப்பு தெரியாம இருக்க நிறைய கடலைப்பருப்பு போட்டு கரேமது பண்ணினீங்களா, துவர்ப்பா இருக்குன்னு மத்தவங்க சாப்பிடாம டபாய்த்ததால நீங்க கொஞ்சம் அதிகமா சாப்பிடவேண்டி வந்துட்டதா... இப்படீல்லாம் உங்களுக்கு சந்தேகம் வரலையே..

      நீக்கு
    9. வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
      ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
      ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
      நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
      நான் மட்டும் இங்கிருக்க …நான் மட்டும் இங்கிருக்க..

      நீக்கு
    10. அதானே.. சகோதரி முன்னாடி கேட்க வேண்டிய கேள்விகளை தொகுத்து கேட்டதற்கு நன்றி. உங்கள் கேள்விக்கு.. இல்லையில்லை சந்தேகத்திற்காவாது பதில் சொல்லலாம். அன்றைய தினம் வாழைப்பூவில் வடை.

      நாங்கள் இங்கு வந்தபின் வாழைப்பூ அவ்வளவாக வாங்குவதேயில்லை. ஏனென்றால், தமிழ்நாட்டில் இருப்பது போல் இங்கு நல்ல வாழைப்பூவாக கிடைப்பதேயில்லை. ஒரு தடவை வாங்கி ஆய்ந்து சமைத்த பின் அத்தனை கசப்பு. அப்படியே எங்களுக்கு குட்பை சொல்லி விட்டு குப்பைக்கு போய் விட்டது. அதன் பின் வாழைபபூவுக்கு தடை. இந்த தடவையும் சற்று கசந்தது. அது ஏனென்று தெரியவில்லை. கரேமது பண்ணினால் நீங்கள் சொன்ன கதிதான். குழந்தைகள் அதையெல்லாம் கண்ணெடுத்து கூட பார்க்க மாட்டார்கள். எனவே வடை, அடை என ஒப்பேற்றினேன். ஹா.ஹா. ஆனாலும் வாழை இலையை (ஏனென்றால் அதை உண்ண மாட்டோம். ஹி.ஹி.நடுவில் ஒரு அ. ஜோ.) தவிர வாழையிலிருந்து வரும் மற்றதெல்லாம் வாயு சரீரம் உள்ளவர்களுக்கு வாய்வு தொல்லைதான் தரும் என்பது என் கணிப்பு. ஆனாலும் அவ்வப்போது இதையும் உணவில் சேர்க்க வேண்டும். அப்படித்தான் செய்தும் வருகிறோம். நன்றி.

      நீக்கு
    11. வாழைப்பூவில் துவரம்பருப்பு, தேங்காய், வெல்லம் போட்டுக் கறி பண்ணலாம். பருப்புசிலியும் பண்ணலாம். புளி விட்டுக் கூட்டுப் பண்ணலாம். பொரிச்ச குழம்பும் பண்ணலாம். அடைக்கும் போடுவேன். வடை பண்ணினதில்லை. அதோடு கடலைப்பருப்பு அரைக்கிலோ வாங்கினால் 2 மாசம் வரும். கடலைப்பருப்பு தாளிதத்திலே கூட அதிகம் பயன்படுத்த மாட்டேன். மற்றபடி இங்கே வாரம் ஒரு நாள் வாழைக்காய் (பிஞ்சு) பண்ணுவேன். அல்சருக்கு நல்லது. முற்றிய வாழைக்காய் எனில் பொடிமாஸ் தான். அல்லது வதக்கல். அநேகமாக முற்றியது வாங்குவது இல்லை.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    படங்கள் அழகு காலையில் படங்களை பார்த்ததிலிருந்து மனதிதுக்குள்ளிருக்கும் பட்சிகள் "நீல வான ஓடையில் நீந்துகின்ற பறவையே" என்ற பாடலை இசையோடு பாட வைத்து மகிழ வைத்துக் கொண்டிருக்கிறது.

    வழியெங்கும் விழி அசைக்கும் வெண் மேகங்கள் படங்களுக்கு அழகு என்றால், அதற்கு பொருத்தமான வரிகள் பாடலாக நீண்டு மைசூர் வரை கொண்டு வந்து விட்டிருப்பது அதை விட அழகு.

    /காற்று மட்டும் சற்றுக் குறைவாக இருந்தால் இந்த விசிறி வாழைகள் எப்படி இருக்கும்/

    குறைவாக அல்லாது நிறைவாகவே வீசும் காற்றையும் அதட்டி உருட்டி, தாம் பெற்றுக் கொண்டு இன்னும் இதமாக நன்றாகவே வீசி விட்டிருக்குமோ?

    கண்களுக்கு நிறைவான அத்தனைப் படங்களுக்கும் ஒவ்வொரு விளக்கம் அளிக்கலாம் போல இருக்கிறது. . அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. நீல வானமும், வெண்மேகம் தரும் காட்சிகளும் அழகு.
    பச்சை வண்ணம் கண்ணுக்கு அழகு.
    படங்களும் அதற்கு கொடுத்த விளக்கங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. இரண்டு நாட்களாகவே யாரையும் காணோமே! எல்லோருக்கும் வேலை மும்முரமா? அனைவருக்கும் பிரச்னைகள் விலகி இனிய வாழ்வு அமைய வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று காலை பத்தரை மணியிலிருந்து பனிரண்டு மணி வரையிலும் அவரவர் வீட்டில் சௌக்கியமாக இருந்த/இருக்கும் ஐந்து கிரஹங்களையும் போல் அனைவரும் அவரவர் வீட்டில் சௌக்கியமாகவும் இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. சத்திமுற்றப் புலவரும் தூது விட்டார் மனைவிக்கு. அதுவும் சரிதான்! அந்த மேகம் அன்னத்தைப் போலத்தான் இருக்கு! கழுத்தை அலகோடு சேர்த்துக் கீழே வைத்துக் கொள்ளும் சில சமயங்களில். அதைப் போல் இருக்கு இங்கேயும். வெள்ளை நாயும் அருமை. எல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன. கற்பனை வளமும் அபாரம். தூது பற்றி எல்லாம் எழுதி இருப்பதால் இந்த வாரம் ஸ்ரீராமோ, கேஜிஜியோ எழுதலை! கேஜிஎஸ்ஸே எழுதி இருப்பார்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. மேகங்கள் விதம் விதமான உருவங்களில் - கற்பனையில் தோன்றும் உருவங்கள் - நன்று.

    படங்கள் அனைத்தும் அழகு. பிஸி பேளா பாத் கூடவே கரும்பு ஜூஸ்! ஆஹா.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  14. @ ஸ்ரீராம்..
    //காலிஃப்ளவர் சாம்பாரா!..//

    காலிஃப்ளவர்,காரட்,சின்னவெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் அவ்வளவே...

    தேங்காய்ப் பால், பெருங்காயம், வெள்ளை மிளகுத்தூள் மட்டும்.. வேறு மசாலா சேர்ப்பதில்லை...

    மிகவும் பிடித்தமானது காலிஃப்ளவர்...

    பதிலளிநீக்கு
  15. அழகான படங்கள், அதற்கு பொருத்தமாக சிறுகதை போல கேப்ஷன்கள்! 

    பதிலளிநீக்கு
  16. கருப்பஞ்சாறு - இங்க பெங்களூர்ல நல்ல ஸ்டாண்டர்ட் ப்ராண்ட் கடையா கனோலா இருக்கு. ரொம்ப சுத்தமா தர்றாங்க, 20 ரூபாய். ஆனால் சென்னைல இது மாதிரி நான் பார்த்ததே இல்லை. இதுவும் கனோலா ப்ராண்டான்னு பார்த்தேன். வேற கடை போலிருக்கு.

    வானத்துப் பஞ்சுப்பொதிகள் எப்போதுமே அழகுதான். அன்னத்தைப் பார்த்தவருக்கு அதற்கு அடுத்த படத்துக்கு அடுத்த படத்தில் ரிஷபம் பார்த்துக்கொண்டிருப்பது தெரியலையா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!