30.9.20

விதியை மதி வென்ற கதை

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்களே, அது நிஜமாகவே சாத்தியமா?

$ நல்லவை நடக்காத போதெல்லாம் விதியை நொந்துகொள்வதும் நடக்கும்போதெல்லாம் மதியைப் பாராட்டுதல் மனித இயல்பு.

# நீ மதியால் வெல்வது உன் விதி என கண்ணதாசன் ஒரு கூக்ளி போட்டிருக்கிறார். 

எது நடக்கிறதோ அதுவே விதிக்கப் பட்டது எனக் கருதினால் கேள்வியே புரியாததாகி விடுகிறது.

& ஓர் அலுவலகம். அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி அலுவல் சம்பந்தமாக வெளியூர் சென்று சில வேலைகள் செய்து திரும்ப வேண்டியிருக்கும். அப்படி வேலை செய்ய சென்று திரும்புபவர்கள் தாங்கள் சென்று வந்த செலவுகளை, அலுவலகத்தில் தக்க சான்றுகளுடன் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். 

ஆனால் - அந்த அலுவலகத்தில் ஒரு 'விதி' உண்டு. எந்த அலுவலரும், பயணம் சென்று திரும்பிய இரண்டு வருடங்களுக்குள் பயணச் செலவை அதற்குரிய விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ளலாம். இரண்டு வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டால் - எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. 

அந்த அலுவலகத்தில் வேலை செய்த மதியழகன் என்னும் மதி, அடிக்கடி டூர் சென்று வருவார். 

பயணத்தில் சேகரிக்கப்பட்ட ரசீதுகளை கவனமாக ஓரிடத்தில் சேர்த்து வைப்பார். இரண்டு வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் - நிதானமாக அவருக்கு எப்பொழுதெல்லாம் பணம் - எவ்வளவு தேவைப்படுகிறதோ அதற்கேற்றாற்போல் விண்ணப்பம் பூர்த்தி செய்து பெற்றுக்கொள்வார். 

ஒருநாள் திடீரென்று தன் ரசீதுகளை சரிபார்த்தவர் திடுக்கிட்டார். ஒரு கொத்து பழைய ரசீதுகள் - பயணம் சென்று வந்து இரண்டு வருடங்களுக்கு மேற்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டவை அவரிடம் தங்கிவிட்டன. 

விண்ணப்பப் படிவத்தில், பயணம் எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்று கேட்கப் பட்டிருந்த இடத்தில், மதி, 

1 year & 14 months என்று எழுதி அனுப்பி, பணத்தை வாங்கிவிட்டார். 

எனக்குத் தெரிந்து இங்கே மட்டும்தான் விதியை மதியால் வெல்ல முடிந்தது! 

==== 

வேண்டுகோள் : 

மின் நிலா 20 - அக்டோபர் ஐந்தாம் தேதி இதழ் - காந்தி 150 ஆவது ஆண்டு முடிந்து, 151 ஆவது ஆண்டு தொடங்கும் அக்டோபர் இரண்டாம் தேதிக்குப் பிறகு வெளியாகும் இதழ். 

காந்தி என்ற சொல்லை கேட்டவுடன், உங்கள் நினைவுக்கு வருவது என்ன என்று இங்கே கருத்துரைகள் பதியவும். 

அவற்றைத் தொகுத்து, மின்நிலா 20 இதழில் வெளியீடுவோம். 

====

எங்கள் கேள்விகள் :

1 ) உங்களுக்கு நாட்குறிப்பு (Diary) எழுதும் பழக்கம் உண்டா? இப்பொழுது இல்லை என்றால், எப்பொழுதாவது எழுதியது உண்டா?

2 ) எழுதிய காலத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் எவ்வளவு நாட்கள் குறிப்புகள் எழுதியது உண்டு?

3 ) காசு கொடுத்து டயரி வாங்கியது உண்டா - அல்லது ஓசி டயரிகள் மட்டும்தானா ?

4 ) எந்த வகை டயரிகள் உங்களுக்குப் பிடித்தவை? 

5 ) உங்கள் பழைய டயரிகளை எப்பொழுதாவது படித்துப் பார்ப்பது உண்டா? 

( கேட்கக் கூடாத கேள்வி : மற்றவர் டயரிகளை எப்பொழுதாவது படித்துப் பார்த்தது உண்டா? அது குறித்து சுவையான தகவல் ஏதேனும் பகிர இயலுமா? கற்பனையாக இருந்தாலும் !!) 

==== 

77 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

அனைவருக்கும் இனிமை நிறை நாளாக இருக்க வாழ்த்துகள்.
இறைவன் துணை எப்பொழுதும் நம்முடன் இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

விதி மதியை மாற்றுகிறது. சில சமயம்
மதி விதிக்கப்பட்டதைத் திருத்துவதாக நாம் நினைக்கிறோம்.
அதுவும் கடவுள் நினைத்ததால் தான் முடிகிறது
என்பது என் எண்ணம்.

சொல்லப்பட்ட உதாரணமும் ஒன்று.
ஒரு வருடம் பதினாலு மாதங்கள். :)
இதைக் கவனிக்க முடியாத தலைமைகள் இருக்கும்போது நமக்கேது
கவலை!!!

வல்லிசிம்ஹன் சொன்னது…

முதல் கேள்வி காந்தி அடிகளை
நினைத்தால் தோன்றுவது...
தன் அம்மாவுக்கு கொடுத்த மூன்று வாக்குகளை வாழ்க்கை முழுவதும்
காப்பாற்றியது.
இன்னும் சொல்லலாம். நல்லதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

இரண்டாவது
டயரி எழுதும் பழக்கம். என் ஏழாவது வயதில்
தினம் குறிப்பு எழுதுவதை ஆரம்பித்தேன். மதுரை பாட்டி வீட்டில்
வாடாமல்லி, அந்திமந்தாரைப் பூக்களைப்
பற்றியும் தோப்பில் ஆந்தையின் குரல் அச்சுறுத்தியதையும் எழுதி இருக்கிறேன்:)

வல்லிசிம்ஹன் சொன்னது…

அப்பொழுதெல்லாம் சின்ன அளவு டயரிகள் தான் எனக்குக் கிடைக்கும்.

ஓரிரண்டைத் தவிர மற்றவை என்னிடம் இல்லை.
மீண்டும் 1974 லிருந்து குறிப்புகள் தொடர்ந்தன. ஜனவரி மாதம் நிறைய குறிப்புகள் போகப் போகக் குறைந்துவிடும்:)

வல்லிசிம்ஹன் சொன்னது…

காசு கொடுத்தும் வாங்குவேன். சில அலுவலகங்களிலிருந்து இலவசமாக
வரும்.
எனக்கு லாண்ட்மார்க் போன்ற இடங்களிலிருந்து
10 பை 10" அங்குல டயரிகள் மிகப் பிடித்தம்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

எந்த வகை டயரிகள் பிடிக்கும்.
நல்ல தடித்த அட்டை போட்ட ,
சுலபத்தில் மடங்காத, முடிந்தால் லெதர்
வகை பெரிய டயரிகள் பிடிக்கும்.
உள்ளே வழவழப்பான பக்கங்கள்.
எழுத சுலபமாக கோடுகள் போட்ட, எல்லா தினங்களைப் பற்றியும்
குறிப்புகளுடனும், தினம் ஒரு செய்தி படிக்கும் படியான
(ஹப்பா) டயரியள் மிகப் பிடித்தவை.

வல்லிசிம்ஹன் சொன்னது…

எப்பொழுதாவது படிப்பது உண்டு.
என் வலைப்பதிவுக்கு வேண்டிய
எண்ணங்கள் அவைகளில் கிடைக்கும்:)
சில எழுத்துகள் அசடு வழியும். சிரிப்பாக வரும்.
அதுதானே வாழ்க்கை.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அம்மாவின் டயரி எப்பொழுதும் திறந்திருக்கும்.
ஓரிரண்டு இப்பொழுதும் என்னிடம் இருக்கின்றன.
அழகான எழுத்துகளுடன்

அன்றன்றைய அனுபவங்களைப் பதிவார்.
அவளைப் போலவே எண்ணங்களும் அழகு.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

Kamala Hariharan சொன்னது…

காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கௌதமன் சொன்னது…

// நல்லதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.// அங்கே நிறைய சொல்லிவிட்டீர்கள்!!

கௌதமன் சொன்னது…

ஆஹா!

கௌதமன் சொன்னது…

உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்!

கௌதமன் சொன்னது…

கருத்துரைக்கு நன்றி.

கௌதமன் சொன்னது…

நல்ல தேர்வு , நன்றி.

கௌதமன் சொன்னது…

ஹா ஹா !!

கௌதமன் சொன்னது…

ஆஹா! நல்லது!

கௌதமன் சொன்னது…

அன்பின் வணக்கம்.

கௌதமன் சொன்னது…

பிராத்தனைகளுக்கு நன்றி.

கௌதமன் சொன்னது…

ஆம், நன்றி.

கௌதமன் சொன்னது…

:))

KILLERGEE Devakottai சொன்னது…

விதவிதமான டைரிகள் என்னிடம் இருக்கிறது நான் எழுதியதுதான். பிறர் யாரும் படிக்க முடியாது. பெரும்பாலும் அன்பளிப்பு வந்தவையே...

ஏகாந்தன் ! சொன்னது…

’காந்தி மின் நிலா’ -வுக்காக:

ஜூன் 7, 2018. தென்னாப்பிரிக்காவின் டர்பன் (Durban) எனும் அழகிய துறைமுக நகருக்கருகிலுள்ள பீட்டர்மரீட்ஸ்பர்க் (Pietermaritzburg ) எனும் சிறிய ரயில்வே ஸ்டேஷன். மூவர்ணத் தோரணங்களால் தடபுடல் அலங்காரக் கோலம். இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 400 மீட்டர் நீளமான காதிவஸ்திரத்தை உடம்பில் போர்த்திக்கொண்டு, ஒரு சிறு ரயில்வண்டி டர்பனிலிருந்து பீட்டர்மரீட்ஸ்பர்க் வரை ஓட்டம் போட்டுக் காண்பித்துக்கொண்டிருந்தது. ஏன் இந்த ஓட்டம், ஸ்பெஷல் ஆட்டம்! இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜின் வருகையை முன்னிட்டு, தென்னாப்பிரிக்க அரசின் சிறப்பு ஏற்பாடுகள்..

பீட்டர்மரீட்ஸ்பர்க் ஸ்டேஷனில்தான் இளம் இந்திய வக்கீல் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி, வெறிபிடித்த வெள்ளையர்களால் வெளியே தள்ளப்பட்டார், ரயில்வண்டியின் முதல்வகுப்புப் பெட்டியிலிருந்து. ”என்னிடம் டிக்கெட் இருக்கிறது.. நான் எதற்கு இறங்கவேண்டும்?” - என வெள்ளையனை எதிர்த்துக் கேட்டதால் வந்த வினை. அதிர்ச்சியான மோஹன்தாஸ் நடுக்கும் குளிரில், தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு இரவெல்லாம் அந்த ரயில்நிலையத்தில் உட்கார்ந்திருந்தார். 125 வருடங்களுக்கு முன் ஜூன் 7, 1893-இன் இரவில் நடந்த கூத்து இது. வெள்ளையரின் அடக்குமுறைக்கு எதிராக, இனவெறிக்கெதிராக பின்னாளில் நிகழவிருக்கும் ’சத்யாக்ரஹ’ அமைதிப் போராட்டங்களின் ’விதை’, அந்தக் குளிர் இரவில் மோஹன்தாஸின் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. இனவெறி அரசை எதிர்க்கத் தயங்கிய, அடக்குமுறைகண்டு அஞ்சிய வேற்றினத்து வக்கீல்களையும், உரிமைப் போராட்டக்காரர்களையும் மெல்ல மெல்லச் சேர்த்துக்கொண்டு, அமைதிப் போராட்டம், தர்னா என தென்னாப்பிரிக்காவில்தான் சுபாரம்பம் கண்டார் காந்தி. தண்டனையாக தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு, காந்தியை வெவ்வேறு கேஸ்களில், நான்கு முறை ’உள்ளே’ தள்ளி வேடிக்கை பார்த்தது. இறுகிப்போயிருந்த காந்தியின் மனதில், இந்தியா திரும்பியதும் என்ன செய்யவேண்டும் என்கிற தெளிவு பிறந்தது..

கௌதமன் சொன்னது…

நன்றி.

கௌதமன் சொன்னது…

அற்புதமான பகிர்வு. நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

விதியை மதியால் வெல்லலாம் என்று விதியிருந்தால் விதியை வென்று விடலாம்..

ஆனாலும் விதி வென்று விடும்...

Jayakumar Chandrasekaran சொன்னது…

ஆக எது வென்றாலும் அதுவே விதி என்கிறீர்கள். Heads I win, Tails you lose 

கௌதமன் சொன்னது…

:))

துரை செல்வராஜூ சொன்னது…

பன்றியினால் மரணம் என்று கணிக்கப்பட்டது மன்னனின் மகனுக்கு..

வெகுண்டெழுந்த மன்னனின் மதி வேலை செய்தது...

அதன்படிக்கு - எந்த ஒன்றும் அணுகாதபடிக்கு முழுப் பாதுகாப்புடன் மாளிகை கட்டப்பட்டு அதனுள் வளர்க்கப்பட்டான் இளவரசன்..

வித விதமான பதுமைகளைக் கொண்டு உலகியல் கல்வி அவனுக்குக் கற்பிக்கப்பட்டது..

ஒருநாள் மன்னனுக்கு அவசரச் செய்தி ஒன்று பறந்தது..

அரண்மனை உள்மாடத்தில் வைக்கப்பட்டிருந்த பதுமை ஒன்று தலையில் விழுந்ததால் இளவரசர் பரலோகம் போய்ச் சேர்ந்தார்...

மன்னன் கத்தினான்..

என்ன கருமம் பிடித்த பதுமையடா.. அது!?..

காவலர்கள் நடுக்கத்துடன் சொன்னார்கள்..

பன்றி!..

ஆக, விதி வென்றே விட்டது..

இப்படிக் கணித்தவரே வராஹமிஹிரர்...

துரை செல்வராஜூ சொன்னது…

மகாராஜா பரீஷத் வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?..

விதி வென்றே தீரும்!..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எனது பக்கத்தில் 251 பக்கங்கள் எழுதி உள்ளதாக நினைக்கிறேன்... விதி பற்றிய சில குறிப்புகளும் உண்டு...!

துரை செல்வராஜூ சொன்னது…

ஐயன் திருவள்ளுவரின் திருவாக்கு..

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்..

Geetha Sambasivam சொன்னது…

பானுமதியைத் தவிர்த்து யாரும் கேள்விகளே கேட்கலை போல! எனக்குக் கேள்விகள் நிறைய இருந்தாலும் அந்தச் சமயம் வந்து எழுத முடியாமல் ஏதேனும் பிரச்னை. கேள்விகள் கேட்க நினைத்து எழுத ஆரம்பித்தால் அந்தக் கருத்தையே வெளியிட முடியாமல் இணையப் பிரச்னை அல்லது மின்சாரப் பிரச்னை!

Geetha Sambasivam சொன்னது…

எல்லோருக்கும் பல்வேறு பிரச்னைகள் இருக்கும். அதில் தீர்க்க முடியாத பிரச்னையாக நீங்கள் கருதுவது என்ன?

Geetha Sambasivam சொன்னது…

இந்த கோவிட்- 19 குடும்ப நபர்களிடையே இடைவெளியை அதிகரித்துள்ளதா? குறைத்துள்ளதா?

எஸ்பிபி இறந்த பின்னர் இத்தனை சர்ச்சைகள் தேவையா? அவருடைய ஆஸ்பத்திரிச் செலவை எல்லாம் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? மக்கள் ஏன் இவற்றில் அதீத ஈடுபாடு காட்டுகிறார்கள்?
அதே போல் இந்த நடிகர் வந்தார், அந்த நடிகர் வரலை இதெல்லாமும் தேவையா? இதனால் எல்லாம் எஸ்பிபி பிழைத்து வரப் போகிறாரா?

அவரை அடக்கம் செய்ததோ, எரித்ததோ அது அவர் சொந்த விருப்பம். அவங்க குடும்பத்தினரின் சொந்த விருப்பம். குடும்பத்தினர் விருப்பம். இதில் எல்லாம் பொதுமக்கள் கருத்துத் தேவையா?

Geetha Sambasivam சொன்னது…

சமீபகாலமாகப் பிறந்த குழந்தைகளை எரித்துக் கொல்வது, குத்திக் கொல்வது, பொட்டலமாய்க் கட்டிப் போடுவது என அதிகரித்து வருகிறது. தாய், தாய்மை எல்லாம் பொய்யோ எனவும் தோன்றுகிறது. ஒரு தாய் தன் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தானும் எரித்துக் கொண்டிருக்கிறாள். இத்தகைய வன்முறைக்கு என்ன காரணம்?

வரவர மனிதர்களுக்கு மனிதத் தன்மையே இல்லாமல் போகிறது. இதன் முக்கியக் காரணம் என்ன? வளர்ப்பா? சந்தர்ப்ப சூழ்நிலையா? அந்த நேரத்து மனோபாவமா?

Geetha Sambasivam சொன்னது…

1. முதல் முதல் டயரி கிடைச்சதே எனக்குப் பத்து வயசா இருக்கையிலே! என் நாத்தனார் கணவர் கொடுத்தார். இஃகி,இஃகி, இஃகி, அப்போ எனக்கும் கல்யாணம் ஆகலை. அவருக்கும் கல்யாணம் ஆகலை. சொல்லப் போனால் என் கல்யாணம் அவர் மூலம் நடக்கும்னு அப்போத் தெரியாது. என் சித்தப்பாவின் தம்பி அவர். அவருக்கு நிறைய டயரிகள் வரும். சித்தி மூலம் ஒரு சின்ன டயரி கொடுத்தனுப்பினார். ஏதோ பேத்தி இருந்தேனோ? நினைவில் இல்லை. ஆனால் பள்ளிப் பாடங்களை அதில் எழுதிப் பார்த்துப்பேன். கோலம் போட்டுப் பார்ப்பேன்.

2. அதெல்லாம் கணக்கில் வைச்சுக்கலை. அதுக்கப்புறமா ஒவ்வொரு வருஷமும் டயரி கொடுத்தனுப்புவார். கல்யாணம் ஆனப்புறமும் கொடுப்பார். அவற்றில் ஒன்றே ஒன்று இப்போ இருக்கு. கோலங்களும், நான் புடைவை வியாபாரம் செய்த கணக்குகள், வீட்டுக் கணக்குகள் என நிறைய இருக்கும். பள்ளியில் படிக்கையில், அப்புறம் எல்லாம் கதை கேட்கப் போகையில் அதில் கிடைக்கும் முக்கியக் குறிப்புக்களை எழுதி வைச்சுப்பேன். அந்த நோட்டு/டயரி இன்னமும் இருக்கு. அது நான் வலைப்பக்கம் ஆரம்பிச்சப்போ சில குறிப்புக்களுக்குப் பயன்பட்டது. அதைத் தவிர நான் வாங்கிய சம்பளம், சிசிஏ அரியர்ஸ் வாங்கினது, போனஸ் வாங்கினது எனக் குறிப்புக்கள் உண்டு. என் குழந்தைகள் அதை "அம்மா சம்பந்தப்பட்ட குறிப்புகள்" என்று கேலி செய்வார்கள்.

Geetha Sambasivam சொன்னது…

3.காசு கொடுத்தெல்லாம் டயரி வாங்குவாங்களா என்ன? பின்னாட்களில் லக்ஷ்மி சுந்தரம் ஃபைனான்ஸில் இருந்து ஒவ்வொரு வருஷமும் தபாலில்/கூரியரில் டயரி வரும். டயரியே அலுத்துப் போன காலம் அதெல்லாம்.

4.சில டயரிகளில் பொன்மொழிகள், சின்னச் சின்னக் குறிப்புகள் என இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும். அவை எல்லாம் உபயோகமானவை. சிலவற்றின் அட்டை நன்றாக இருக்கும். சிலவற்றின் அளவு பெரிதாக இருக்கும். டயரியிலேயே எல்லாவற்றையும் வைச்சுக்கும்படியா ஒரு டயரி கிடைச்சது. அதிலேயே பர்ஸ், ஃபோட்டோக்கள் வைச்சுக்கத் தனி இடம் (கம்பார்ட்மென்ட் எனலாமா) சான்றிதழ்கள் வைக்கும்படியாக ஜிப் ஃபோல்டர்னு கிட்டத்தட்ட ஒரு புத்தகம் மாதிரி இருக்கும். அது ஒரு வருஷம் கிடைச்சது.

5. பழசெல்லாம் இல்லை. முன்னே சொன்னாப்போல் எண்பதுகளில் பயன்படுத்திய டயரியும் நான் குறிப்புக்கள் எழுதி வைச்ச புத்தகம்/நோட்டு/டயரியும் தான் இருக்கு. அதுவும் தேடணும். நல்லவேளையா அதில் உயில் எல்லாம் எழுதி வைக்கலை1 :)))))))
மற்றவர்கள் டயரி எழுதுவாங்களானே தெரியாது. ஆனால் எங்க பொண்ணு ஒரு பிரமாதமான டயரி வைச்சிருந்தாள். அதில் பல விஷயங்களை எழுதி இருந்தாள். ஒரு வருஷம் அவளோட சென்னை வாசத்தின் போது நம்மவர் அதைப் பழைய பேப்பர் காரரிடம் போட்டு விட்டார். அவள் அழுத அழுகை! இப்போ நினைச்சாலும் வயித்தை என்னமோ பண்ணும். போடாதீங்கனு சொன்னேன். கேட்கலை! :( இப்போவும் அது நினைவு வந்தால் அவளுக்குத் தாங்காது.

Geetha Sambasivam சொன்னது…

விதியோ மதியோ எதுவாக இருந்தாலும் நமக்குக் கிடைக்கவேண்டியது கூடவும் செய்யாது, குறையவும் செய்யாது. அப்படியே கிடைக்கும். ஆகவே நான் எது கிடைக்கலைனாலும் கவலையோ/வருத்தமோ அடையாமல் சமாளிச்சுப்பேன். இது நமக்கு வேண்டாம்னு வைச்சிருக்கார் கடவுள் என மனதைத் தேற்றிக் கொண்டு விடுவேன்.

Geetha Sambasivam சொன்னது…

//நல்லதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.// அங்கே நிறைய சொல்லிவிட்டீர்கள்!!// where?

About Gandhi, count me out! :)))))


கௌதமன் சொன்னது…

ஆம், இதை நானும் படித்திருக்கிறேன்.

கௌதமன் சொன்னது…

மரணத்தை வென்றவர் எவரும் இல்லை; ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அளிப்பது ஸ்ரீமத் பாகவதம். (பரிக்ஷித் மகாராஜா பெற்ற சாபத்தினால் நமக்குத் தெரியவரும் நீதி, இதுவே)

கௌதமன் சொன்னது…

அப்படியா!

கௌதமன் சொன்னது…

நன்றி.

கௌதமன் சொன்னது…

ஆ ! பிரச்சனைகள் தீரட்டும்!

கௌதமன் சொன்னது…

பதில்கள் அளிப்போம்.

கௌதமன் சொன்னது…

பதில்கள் அளிப்போம்.

கௌதமன் சொன்னது…

பதில்கள் அளிப்போம்.

கௌதமன் சொன்னது…

சுவாரஸ்ய நாட்குறிப்புகள்!

கௌதமன் சொன்னது…

புன்னகைக்க வைத்து, பிறகு கண் கலங்க வைத்துவிட்டீர்கள்!

கௌதமன் சொன்னது…

ரஜினிகாந்த் வசனம் போல இருந்தாலும் இதில் உண்மை இருக்கிறது!

கௌதமன் சொன்னது…

நல்லதை 'மட்டும்' சொல்லிக்கோலக்கிறேன் என்று அவர் எழுதியதில், அந்த 'மட்டும்' பல கதைகளை சொல்கிறது என்று கூறியுள்ளேன்.

Geetha Sambasivam சொன்னது…

ஹாஹா! ரஜினி இப்படி எல்லாம் வசனம் பேசி இருக்காரா என்ன? நான் எப்போவுமே இதைச் சொல்லுவேன். இப்போக் கிடைச்சிருப்பதே அதிகம். more than enough என்று.

Bhanumathy Venkateswaran சொன்னது…

ஒருவன் மார்பை குண்டுகளால் துளைக்கும் பொழுது 'ஹே ராம்!' என்று சொல்ல முடியுமா? என்னும் வியப்புதான் காந்தியைப் பற்றி நினைக்கும் பொழுது மனதில் வரும்  

Geetha Sambasivam சொன்னது…

நெல்லையை எங்கே இரண்டு நாட்களாய்க் காணோம்? வாட்சப்பில் இருந்த நினைவு. ஆனால் இங்கே பதிவுகளுக்கு வரவில்லை.

Geetha Sambasivam சொன்னது…

அவர் அப்படிச் சொல்லவில்லை என்பதைத் திரு கல்யாணராமன்(காந்தியின் கடைசிக் காரியதரிசியாக இருந்தவர்) தெளிவாகத் தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Geetha Sambasivam சொன்னது…

அந்தக் குழப்பமான நேரத்தில் காந்தி பேசினாரே என்பதே யாருக்கும் புரியலை என்றிருக்கிறார்.

கௌதமன் சொன்னது…

உண்மைதான். கென்னடி கொலையான சம்பவம் குறித்து ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். அதில் கென்னடி, கழுத்தின் பின்புறத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்தவுடன், தன் கழுத்தை கைகளால் பிடித்தபடி, " Oh God! I am hit" என்று சொன்னதாக எழுதியுள்ளார்கள்.

கௌதமன் சொன்னது…

அதானே! எங்கே காணோம்?

கௌதமன் சொன்னது…

இருங்க - இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவருக்கு வாட்ஸ் அப் ல அனுப்பறேன்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

//மகாராஜா பரீஷத் வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?..விதி வென்றே தீரும்!..//பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்பது பரீக்ஷித்தின் விதி, ஆனால் அந்த ஏழு நாட்களுக்குள் சுக பிரும்மத்திடமிருந்து பாகவதத்தை கேட்டு அந்த மரணத்தை சிறப்பாக எதிர் கொண்டது அவர் மதி. 

கௌதமன் சொன்னது…

:))

G.M Balasubramaniam சொன்னது…

விதி மதி பற்றிய ஒரு சிறு கதை இரண்டு நண்பர்கள் சாலையில் செல்லாங்கு ஒருவனைகார்மோத அவன் அட்பட்டதில் துடிக்க ஒரு நண்பன் அவனை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கிறான்அவனுக்கு தக்க நேரத்தில் சிகிச்சை அளித்ததால் பிழைத்துக் கொள்கிறான் சிகிச்சைக்கு எடுத்துச்சென்றவன் தக்க நேரத்தில் சிகிச்சை அவனை காப்பாற்றியது என்கிறான்அவன் நண்ப அவனுக்குவிபத்டு ஏற்பட வேண்டும் என்படு விதி நீ காப்பாற்ற வேண்டுமென்பதும்விதி இதில் மதிக்கு என்னவேலை என்றானாம் -----து எப்படி இருக்கு?

ஏகாந்தன் ! சொன்னது…

//..கழுத்தை கைகளால் பிடித்தபடி, " Oh God! I am hit" என்று சொன்னதாக எழுதியுள்ளார்கள்.//

புத்தகச் சந்தையில் இந்த மாதிரி bakwas நிறைய உலவும் - ஆங்கிலத்திலும் குப்பைகளுக்குப் பஞ்சமில்லை!

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

வழக்கம் போல் கேள்வி,பதில்கள் அருமை. விதியின் கேள்விக்கு பதில்கள் நன்றாக உள்ளன. மதியால் வெல்ல முடியும் என்ற கதையில் வேண்டுமென்றால் மதி வெல்லும்படி தோன்றலாம். ஆனால் அதற்கும் விதியின் உதவி அவசியம்.

டைரி எப்போதோ சிறுவயதில், எழுதியிருக்கிறேன். அது ஒரு பழக்கமாக உடன் வந்ததில்லை. ஆனால், எங்கள் அப்பாவுக்கு இறுதி வரை தினமும் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. அதை நாங்கள் எப்போதாவது எடுத்துப் படிப்போம். அதில் எங்களைப் பற்றியும் நிறை குறைகளை எழுதியிருப்பதைப் படித்த பின் அந்த குறைகளை இனி செய்யாதிருக்க முடிவெடுப்போம்.அப்பாவிடமும் சொல்லி விடுவோம். அவரும் அதை ஒரு குறையாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடி இருப்பார். உங்கள் கேள்விகள் மலரும் நினைவுகளை தோற்றுவித்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு சொன்னது…

கேள்வியும் பதிலும் நன்றாக இருக்கிறது.
கடவுளின் (இயற்கை ) விருப்பத்தை மாற்ற யாரலும் இயலாது. நிகழ்வது நிகழ்ந்தே தீரும் என்றும், அவனின்று ஒரு அணுவும் அசையாது என்றும், எல்லாம் அவன் விருப்பபடிதான் நடக்கும் நம் கையில் இல்லை என்றும் சொல்வார்கள்.

அவர் விருப்பபடிதான் எல்லாம் நடக்கிறது என்று நம்பினால் மன அமைதி கிடைக்கும்.

கௌதமன் சொன்னது…

ஆம், அதே!

கௌதமன் சொன்னது…

சுவாரஸ்யமான டயரி பகிர்வு. நன்றி.

கௌதமன் சொன்னது…

நல்லா இருக்கு!

கௌதமன் சொன்னது…

:)

கோமதி அரசு சொன்னது…

காந்தி அடிகளை
நினைத்தால் தோன்றுவது கண் முன் அவர் தோற்றம் தான் அப்புறம் தான் மற்றவைகள்.


திருமணம் ஆகும் முன் சிறுவயதில் அப்பா கொடுத்த டைரியில் அம்மா சொல்லிக் கொடுத்த சமையல் குறிப்புகள், கோலம், ஸ்வாமி பாடல்கள், படித்த புத்தகங்கள் வார மாத இதழ்ல்கள் பேர்கள் எழுதி வைத்து இருக்கிறேன். படித்த பொன்மொழிகள், பிடித்த கருத்துக்களை எழுதி வைத்த டைரிகள் நிறைய இருக்கிறது.
எங்கள் ப்ளாக் தளத்தில் அதன் படங்கள் இடம் பெற்று இருக்கிறது திங்கள் பதிவில்.


1997 ல் உலக சமுதாய சங்கத்தில் ஆசிரிய பயிற்சி எடுத்துக் கொண்டு உடற்பயிற்சி, தியானம் பறிற்று வைக்கும் ஆசிரியராக மன்றத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட போது இன்று எத்தனை பேருக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்தேன், எத்தனை பேருக்கு இன்று தியானம் கற்றுக் கொடுத்தேன் என்று டைரில் எழுதி வைத்து இருப்பேன். அவர்கள் பேர் முகவரி எல்லாம் எழுதி வைத்து இருப்பேன்.

15 வருடம் தொடர்ந்து எழுதி வந்து இருக்கிறேன்.

காசு கொடுத்து டைரி வாங்கியது இல்லை.

2017ல் என் தாய் மாமா கொடுத்த இரண்டு டைரில் சிவாயநம, ஓம் சரவணபவ, ஓம் நமோ நாராயணாய, ஓம் சாயிராம், ஓம் சகதி ஓம், ஜெய அனுமான், ஓம் நமச்சிவாய
மந்திரங்களை மனதுக்கு எழுத வேண்டும் தோன்றும் நாளில் எழுதுவேன்.

பழைய டைரி குறிப்புகளை படித்துப் பார்ப்பேன்.

என் மாமனார் இறந்த பின் அவர்கள் எழுதி வைத்த டைரியை படித்து எங்கள் வீட்டில் அவர்கள் நினைவுகளைப்போற்ற ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொண்டோம்.

கோமதி இன்று குழந்தைகளுடன் மாயவரத்திலிருந்து வந்தாள், அவளை பஸ் ஸ்டாண்டு போய் அழைத்து வந்தேன் என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

அப்பா, அம்மா எழுதி வைத்தது எல்லாம் தம்பியிடம் இருக்கிறது. அதையும் படித்து இருக்கிறோம்.

என் கணவர் தொடர்ந்து டைரி எழுதி வருகிறார்கள். அவர்கள் யார் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் வருடா வருடம் புதிதாக வாங்கி விடுவார்கள்.

கௌதமன் சொன்னது…

சுவாரஸ்யமான கருத்துரைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்த வாரம் கேள்விகள் அதிகம் இல்லையே!

காந்தி - பெயரைக் கேட்டால் எனக்கு நினைவுக்கு வருபவர் வேறு ஒருவர்! நெய்வேலியில் என் சிறு வயதில் பழக்கமான நபர்! அவருக்கும் நீங்கள் கேட்கும் காந்திக்கும் சம்பந்தம் உண்டு! பெயர் மட்டும் இருவருக்கும் ஒன்று! வேலைகள் வேவ்வேறு!

கௌதமன் சொன்னது…

ஹா ஹா !

Geetha Sambasivam சொன்னது…

சென்ற நவம்பரில் டாலஸ் சென்றபோது கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகச் சொல்லப்படும் ஆஸ்வால்டு எங்கிருந்து சுட்டான் என்பதை அப்போதைய சூழ்நிலைப்படி அந்தக் கட்டிடத்தில் காட்சிப் படுத்தி இருப்பதைப் பார்த்தோம். அவர் சுடப்பட்டபோது சென்று கொண்டிருந்த ஊர்வலக் காரில் அவர் அமர்ந்திருந்ததையும், பின்னால் அவர் மனைவி அமர்ந்திருந்ததையும் அவரைச் சுட்டபோது அப்படியே கீழே சாய்ந்ததையும் அவர் மனைவி வாயில் கையை வைத்துக்கொண்டு ஏதோ கத்தினதையும் படமாக எடுத்திருக்கிறார்கள். கென்னடி ஏதும் பேசினதாகத் தெரியவில்லை அதில். அங்கேயும் நிறைய ஹேஷ்யங்கள், சொல்லாடல்கள்!

கௌதமன் சொன்னது…

சுவாரஸ்ய தகவல்களுக்கு நன்றி.