வியாழன், 1 அக்டோபர், 2020

தங்கப் பெண்ணே தாராவே !


நாஞ்சில் மருமகள் - படித்ததில் ரசித்தது.


"தங்கப் பெண்ணே தாராவே !
தட்டான் கண்டால் பொன்னென்பான் 
தராசிலே வைத்து நிறு என்பான்
எங்கும் போகாமல் இங்கேயே இரு!"ஐவரை மணந்த வீட்டில் அவர் கலத்தில் யார் உண்பது??  வீட்டண்ணன் வெள்ளையம்பிள்ளை வந்தார்.  விளம்பினார் ஒரு தீர்ப்பு...

"ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு மனைவி
புருஷன் எச்சில் புசித்திட வேண்டும்
இடையில்,
தீபாவளியோ திருக்கார்த் திகையோ
வேறுஇம் மாதிரி விசேஷ நாள் 
வந்திடுமாகில், வரிசை வரிசையாய் 
ஐந்திலை யிட்டவை அனைத்திலும் அமுது 
படைத்துப் புருஷன் பருகிய பின்னர் 
பரிகலத் துள்ள பதார்த்தம் எல்லாம்
மனைவியர் சரியாய் வகுத்துண்ண வேண்டும்
வழக்குகள் ஒன்றும் வரலாகாது..."

சாப்பிடும்போது இது சரி, கன்னியாகுமரி போய் கடலில் குளிக்கையில் யார் கையைப் பிடிப்பார் அந்த ஐவரை மணந்தவர்?

"ஏககாலத்தில வர்களை எல்லாம் 
அங்கை பிடித்து நீர் ஆடு தற்குநான்
பன்னிரு கரத்துப் பரமன் அல்லவே
ஆயிரம் கரதவ் வண்ணலும் அல்லவே "

என்று புலம்பதான் முடியும்!

மருமகன் வருகிறான்.  கேள்வி கேட்கிறான்.  நாஞ்சில் நாட்டுப் பிள்ளைமார் குடும்பத்தினர் பாண்டிய நாட்டின் கல்வி கலாச்சாரம் கொள்வினை கொடுப்பினையில் மனம் வைத்திருந்தாலும், அரசியல் தொடர்பு காரணமாக கேரளத்தின் மருமக்கள் தாய முறைக்கு உள்ளாகி அவதிப்பட்டனர்.  சொத்திலே உரிமையும், பெற்ற பிள்ளைகளைவிட சகோதரியின் மக்களுக்கே - மருமக்களுக்கே அதிகமாயுண்டு.

"ஆரைக் கேட்டு நீர் ஐந்துகல் யாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர் ஐயா? 
பட்டப் பெயரும் பஞ்ச கல்யாணிப் 
பிள்ளை 'யென்று' நீர் பெற்று விட்டீரே!"

ஒப்புக்கொள்ளாத மாமன் நியாயமென்று வாதாடுகிறார்..  மருமகனின் படிப்புத் திறமையை எள்ளுகிறார்..

"ஏழு வருஷமாய் இங்கிலீஷ் படித்தாயே,
ஏ,பி,ஸி,டி எழுதத் தெரியுமா?
எத்தனை பணத்தை வாரி யெறிந்தேன்!
எல்லாம் பாழுக் கிறைத்த நீர்போல
ஆக்கி விட்டாயே அவலட்சணமே!"

படிப்பைவிட மருமகனுக்கு திண்டியில்தான் கவனம் என்று பட்டியலிடுகிறார்.

"ஆமை வடைக்காக அரைஞாண் பணயம்
பேரணிக் காகப் புத்தகம் பணயம்
சீடைக் காகச் சிலேட்டுப் பணயம்
காப்பிக் காகக் கடுக்கன் பணயம்
இப்படியாக எல்லாம் பணயம்


நீ பணயம் வைத்த பண்டம் அனைத்தும்
எத்தனை தரம்நான் மீட்டி யெடுத்துத்
தந்தே னப்பா தந்தே னப்பா !"

ஊஹூம்...  மருமகன் கோர்ட்டுக்குப் போய்விடுகிறான்..
அங்கு இரண்டே விஷயங்கள் நடக்கின்றன...  ஒன்று படிகள் கட்டுவது, இரண்டு பீஸுகள் வசூலிப்பது..

"பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும் 
சாக்‌ஷிப் படிகளும் சமன்ஸுப் படிகளும்
கணக்கி லடங்கா கமிஷன் படிகளும்
ஜப்திப் படிகளும் லேலப் படிகளும்
வாறண்டுப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும் இப்படி அப்படி
எல்லாப் படிகளும் ஏறி இறங்கி"

மூச்சு வாங்குகிறது ஐவரை மணந்த அந்த ஆணழகருக்கு!  பீஸுகள்...  அப்பப்பா அவைபற்றிய புலம்பல் 

"கோர்ட்டுப் பீஸு குமாஸ்தா பீஸு 
கூடிக் காப்பி குடிக்கப் பீஸு
வெற்றலை வாங்கிட நீவேறொரு பீஸு
வக்கீல்பீஸு மகமை பீஸு
வக்கா லத்து பகைக்கொரு பீஸு
எழுதப் பீஸு சொல்லப் பீஸு 
எழுதிய தாளை எடுக்க பீஸு
நிற்கப் பீஸு இருக்கப் பீஸு
நாட்டின் கையை மடக்கப் பீஸு"ஆய்ந்து ஓய்ந்த மனிதர் அந்திமக் காலத்தில் சொத்திழந்து ப​டு​த்த படுக்கையாகிறார்.  அண்டையகலாமலிருந்த நாலாவது அக்கா ஒரு நாள் காலை ஓடிப் போகிறாள்.

"ஐயோ சிவசிவ! அரஹர அரஹர 
போதும் போதுமிச் சன்மம் போதும்
பட்ட துயரமும் பாடும் போதும்
கணவர் கந்திய காலம், தண்ணீர்க் குடிக்கும் பாத்திரம் குடுக்கையானதும் 
பரந்த சட்டி படிக்கம் ஆனதும்
பாலும் அன்னப் பாலே யானதும் இனி
எடுத்துச் சொல்வது ஏனோ அம்மா!"

பெற்ற குழந்தையைப் பேணி வளர்க்க முடியாத மருமக்கள் தாய முறைமையால் வரும் கேட்டையும், பலதார மணத்தின் கொடுமையும், சொத்துரிமைக்காக நியாய மன்றம் போய் நாய்படாதபாடு படுவதையும் இக் கவிதை நூல் முழுக்க முழுக்க உதட்டளவுச் சிறப்பை வாரி வழங்குகிறது ; உள்ளத்தளவு நெருப்பை வாரிக் கொட்டுகிறது.


நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி் மான்மியம் என்ற கவிமணி தேசிக விநாயகம் புத்தகம் பற்றி டி என் சுகி சுப்ரமணியம் விமர்சனம்தான் இதெல்லாம்.  

இத்துணை அருமையான நூலை முதன் முதலாக திருவாங்கூர் 'தமிழன்' எனும் பத்திரிகையில் 1917 ஆம் ஆண்டு வெளியிடும்போது, பழந்தமிழ் ஓட்டுச் சுவடி ஏதோ ஒன்றிலிருந்து பெயர்த்து எழுதியது போன்று விடுதல்கள் தந்து நம்பும்படியாக பாவனை செய்தார்.  சமூகத்தின் ஊழலைச் சாட்டையடி போல ஹாஸ்யக் குஞ்சங்களைக் கட்டிக் கொண்டு நாஞ்சில் நாட்டவருக்குக் கொடுக்கும் திறனும், தெம்பும் தமது பெயரை காவ்யத்தின் முகப்பில் எழுதக் கூசினார்.

"சீதையின் கதையும் சிறுகதை வரலாறு யாகும்
பாஞ்சா லியின்கதை பழங்கதை யாகும்
தமியேன் கதைக்குச் சந்திர மதிக்கதை
உமியாம், தவிடாம், ஊதும் பொடியாம்"

பதினாறு வயதுப் பாவை பஞ்சகல்யாணிப் பிள்ளைக்கு ஐந்தாம் தாரமாகி மற்ற நால்வருக்கு அடிமையாகிப் பட்ட பாட்டை விளக்கும் கவிதை நடைக் கதை.

புத்தகத்தின் விலை ஒரு ரூபாய்!  வருடம் 1962.


======================================================================================

கேள்வி பதில்கள் பகுதியை சுவாரஸ்யமாக்கியவர்கள் அரசு.  அதாவது குமுதம் கேள்வி பதில் பகுதி.  அதிலிருந்து சில இங்கே பொக்கிஷமாக!


அவரா...   அவர் யாரென்றே எனக்குத் தெரியாதே!  அங்கதம்!


ஆ...   தமிழர்களைக் கேவலமாக....


மந்திரியின் முகவரி ரகசியமாக...


பின்னர் வந்து விட்ட எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலும்...அடுத்த வாரம் அதற்கான வாசகர் கடிதமும்!


கேள்வி கேட்கும் நேரமல்ல இது...!

=========================================================

வாஸ்து பகவானும் 
பேஸ்து அடித்துப் போயிருக்கிறார்.
உன் வெப்பத்தாலும் 
எரிக்க முடியவில்லையா அதை 
என்று 
கேள்வி கேட்கிறார் 
பாதுகாப்பாய் உள்நின்று 


83 கருத்துகள்:

 1. அன்பு ஸ்ரீராம், கௌதமன் ஜி அனைவருக்கும் இனிய
  காலை வணக்கம்.
  மிக அருமையான மருமக்கள் தாயம் பற்றிய தொகுப்பு
  படிக்கப் படிக்க இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... வணக்கம். இந்தப் புத்தகம் நீங்கள் படித்திருக்கிறீர்களா?

   நீக்கு
  2. இல்லைமா ஸ்ரீராம். என் தமிழ் அறிவு அவ்வளவு போதாது மா.
   நீங்கள் சொல்லி இருப்பது
   அத்தனை அருமையாக இருக்கிறது.

   நீக்கு
  3. ஓ... நன்றிம்மா.. நான் சொல்லியிருப்பது என்று சொல்வதைவிட பகிர்ந்திருப்பது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்!

   நீக்கு
 2. இறை அருளில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைபள் நிறைவேறி உலகம் நல்ல காற்றை சுவாசிக்கப் பிரார்த்தனைகள். வாங்க கமலா அக்கா.. வணக்கம்.

   நீக்கு
 4. "சீதையின் கதையும் சிறுகதை வரலாறு யாகும்
  பாஞ்சா லியின்கதை பழங்கதை யாகும்
  தமியேன் கதைக்குச் சந்திர மதிக்கதை
  உமியாம், தவிடாம், ஊதும் பொடியாம்"///////////திரு சுகி சுப்ரமண்யத்தின் அருமையான விமரிசனம்
  திகைக்க வைக்கிறது. எத்தனை தமிழ் வல்லுனர்கள் நம் தமிழகத்தில்!!!!

  ஆசிரியர் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை
  இப்படி ஒரு நூல் படைத்திருக்கிறார் என்றே தெரியாது.
  ஸ்ரீராமுக்கு மனம் நிறை நன்றி
  அருமையான தங்கம் போன்ற பதிவு.

  பதிலளிநீக்கு
 5. வாஸ்து பகவான் கவிதை புதுமையாக அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா... போன வாரம் கவிதையைக் காணோமே என்று தேடியவர்களுக்காக!

   நீக்கு
  2. இந்த வாரம் அனுஷ்காவை காணோமே என்று தேடுபவர்களுக்கு?

   நீக்கு
 6. அரசின் பதில்கள் சுவாரஸ்யம். இந்த லை, கொம்பு லை
  காலம் கொஞ்சம் பிரமிப்போடு பார்க்கிறேன்.
  மனதுக்கு அதை ஏற்பது அத்தனை கடினமாக இருந்தது.
  இப்பொழுதும் நான் கடிதம் எழுதினால் பழைய எழுத்துகளே
  எழுதுவேன்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அப்படி வந்து விடும். அப்புறம் சரியாக எழுதுவேன்.

   நீக்கு
 7. பெற்ற குழந்தையைப் பேணி வளர்க்க முடியாத மருமக்கள் தாய முறைமையால் வரும் கேட்டையும், பலதார மணத்தின் கொடுமையும், சொத்துரிமைக்காக நியாய மன்றம் போய் நாய்படாதபாடு படுவதையும் இக் கவிதை நூல் முழுக்க முழுக்க உதட்டளவுச் சிறப்பை வாரி வழங்குகிறது ; உள்ளத்தளவு நெருப்பை வாரிக் கொட்டுகிறது.////


  ஆமாம் நம் மனதிலும் அதே நெருப்பு.

  பதிலளிநீக்கு
 8. பொக்கிஷம் மிக மிக அருமை. நன்றி ஸ்ரீராம்.
  சாதிக் பாஷா.:)

  பதிலளிநீக்கு
 9. ஒரு ரூபாய்க்கு எவ்வளவு விசயங்கள் கிடைத்து இருக்கிறது.

  இன்று ஐம்பது ரூபாய்க்கு தமனா, அனுஷ்க்கா புகைப்படம்தான் கிடைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஆயிரம் ரூபாய் பெறுமே என்று சொல்கிறார்கள் இரண்டு பேர்கள்!

   நீக்கு
  2. கில்லர்ஜி... உங்களுக்கு சந்தேகம்னா, பதினைந்து கவர்ச்சிப் படங்களும் கிசு கிசுக்களும் போட்டு ஒரு இடுகை வெளியிடுங்க. அதுக்கு நூறு இடுகைகளுக்கான வாசிப்பு கிடைத்துவிடும்.

   டாஸ்மாக்குலதான் கூட்டம் அம்மும். இளனி கடையில் ஓரிரண்டு கிளவிகள் இருந்தாலே அதிகம்.

   நீக்கு
  3. கில்லர்ஜி.. அந்தக் காலத்தில் சொந்தச் சரக்கு இருந்தது!

   நீக்கு
  4. நெல்லை சொல்வதில் உண்மை இருக்கிறது.

   நீக்கு
  5. நான் ஒருக்காலமும் கூத்தாடிகளின் புகைப்படங்களை அவசியமின்றி பிரசுரிக்கமாட்டேன்.

   எனது எழுத்தை நேசித்து இரண்டு நபர்கள் வந்தாலே எனது மனதுக்கு திருப்தி.

   எனக்கு நன்றாக தெரியும் ரஜினி புகைப்படம் போட்டு நான்கு வார்த்தை புகழ்ந்து எழுதினால் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள்.

   நக்கீரன் பரம்பரையில் பிறந்த கில்லர்ஜி இதைச் செய்ய இயலுமோ ?

   நீக்கு
 10. காலையிலேயே படித்தவிட்டேன்.

  விளக்கமா பின்னூட்டம் போட நேரமில்லை.

  மருமக்கள் தாயம் என்பது மோசமான ஒரு முறை. அது ஆரம்பித்த காரணமே அசிங்கமானது. நம்பூதிரிகள், நாயர் இரு சமூகத்திலும், குறிப்பாக நம்பூதிரிகளால் நடந்த கேவலமான நடத்தைகளால்தான். நம்பூதிரியின் மனைவிக்கு அந்தர்ஜனம் எனப் பெயர். வீட்டை விட்டு எக்காரணம் கொண்டும் வரமாட்டார்கள், பிற ஆண்கள் கண்ணில் படமாட்டார்கள். அதேசமயம் நம்பூதிரி ஆண் பிற சமூகப் பெண்களை இரவுக்குக் கேட்டால் அதனை மறுக்கக் கூடாது என்பது இந்த சிஸ்டத்தின் ஆரம்பத்திற்குக் காரணம்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  முதலில் அறிமுகப்படுத்தியிருக்கும் புத்தகம் அருமை. அக்காலத்தில் ஒரு ரூபாய்க்கு அவ்வளவு மதிப்பு. அந்த ஒத்தை ரூபாயை வைத்துக் கொண்டு பாதி மாதத்திற்கு மேல் குடும்பத்தை கவனித்து விடலாம்.அந்த ஒரு ரூபாயைக் போன்ற புத்தகத்தின் மதிப்பும், அதன் அருமையான எழுத்து நடைகளும் மேலும் படிக்கத் தூண்டுகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனா அப்போ சம்பளமே இரண்டு ரூபாய்கள்தானே ஹா ஹா... இப்போ எல்லாப் பயல்களும் பத்தாயிரம், லட்சம் என மாதச் சம்பளம் சொல்றாங்க. அப்போவும் ஒரு ரூபாயில் பாதி மாத்த்தை ஓட்ட ஆசைப்படலாமா கமலா ஹரிஹரன் மேடம்?

   நீக்கு
  2. நான் ஒரு ரூபாய் எடுத்துக்கொண்டு போய் (என் பிறந்த நாளுக்கு அப்பா கொடுத்தார்) என்னென்ன சாப்பிட்டேன் தெரியுமா? என் இளைய சகோதரிக்கு பார்சல் வேற வாங்கி வந்தேன்!

   நீக்கு
  3. தங்கள் கருத்து உண்மை. நான் சொன்னது, அதுவும் மாதத்தில் பாதி நாட்களுக்கு மேல்.. கொஞ்சம் கைச்சிக்கனம் இருப்பவர்கள் முழு மாதத்தையும் ஓட்டி விடுவார்கள். நீங்கள் சொல்வது போல் மிச்சம் ஒரு ரூபாய் சேமிப்பு. இரண்டாவதாக அப்போதிருந்த காலம் நாகரீகம் வளரவில்லை. அதனால் மனிதர்களின் ஆசைகளும் அவ்வளவாக வளர்ச்சி எய்தவில்லை. அப்போதே எங்கள் பாட்டியும். அம்மாவும் அவர்கள் காலத்தில் இந்த ஒரு ரூபாயில் எவ்வளவு சாமான்கள் வாங்கலாம் என்று விரிவாக சொல்வார்கள். (அனைத்தும் நினைவிலில்லை) எனக்கு நினைவு தெரிந்து நாலணாவில் ஒரு லிட்டர் பால் வாங்கினோம். பைசாக்களில் வேர்க்கடலை மிட்டாய், பிஸ்கெட், ஆரஞ்சு வில்லைகள் போன்ற உணவுப் பொருளை வாங்கி சாப்பிட்டோம். (அது கெடுதல் என தெரியவுமில்லை.. அப்போதே ஆசைகள் உதயமாகத் தொடங்கி விட்டன.) திரையரங்குகளில் தரை டிக்கெட் நாலாணாவுக்கு வாங்கிச் சென்று படம் பார்க்கும் ஆவலை தணித்துக் கொண்டோம். (நாகரீகம் உறைக்கவில்லை) ஆனால் அந்த நாலாணாவை சேமிக்க பல நாட்களாகும். நம் எல்லோருக்குமே இவ்வித அனுபவங்கள் நிறைய இருக்கும். இன்னும் எத்தனையோ என் அறிவுக்கு உட்பட்டதை சொல்லிக் கொண்டே போகலாம். நன்றி.

   நீக்கு
  4. ஒரு ரூபாய்க்கு எவ்வளவு நினைவுகள்..்.. அதையும் சேர்த்துக்குங்க..

   நீக்கு
  5. அன்பு கமலா, நாலணா திரைப்படம்.
   நாலணா மீனாட்சி பவன் நாலு தோசை
   அப்பா சம்பளம் அப்போது 1954இல் 150 ரூபாய்!!!

   பிறந்த நாளைக்கு வாங்கின சாட்டின் துணி
   இரண்டு கஜம் 5 ரூபாய்.

   நீக்கு
  6. வணக்கம் சகோதரி

   தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   ஸ்ரீராம் சகோதரரும் பழைய நினைவுகளில் பங்கேற்றது மகிழ்ச்சி. நன்றி.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 12. அனைவருக்கும் காலை வணக்கம். சென்ற வாரம் கவிதை இல்லாததால் இந்த வாரம் கவிதைகளால் நிரப்பி விட்டீர்கள். அருமை!கவிமணியின் எழுத்தில் இருக்கும், கிண்டலும், கோபமும், அதற்கு சுகி சுப்பிரமணியனின் விமர்சனமும் போற்றத்தக்கவை. ஜோக் சூப்பர்! ஆனால் இன்றைய தலைமுறைக்கு புரியுமா? 

  பதிலளிநீக்கு
 13. நம்ம முறை, நல்லது என்ற பெயரால் பெண்ணை அடிமைப்படுத்தும் முறையாக மாறிவிட்டது, பல நூற்றாண்டுகளாய். இப்போதுதான் அதில் கொஞ்சம் மாற்றம் வர ஆரம்பித்திருக்கிறது. ஆண் சாப்பிட்ட பிறகுதான் பெண் சாப்பிடணும், அவள் சாப்பிட்டுவிட்டால் அதன் பிறகு அந்த உணவு ஆண்களுக்குப் பரிமாறும் தகுதியை இழக்கிறது என்பதெல்லாம் அதிசயச் சிந்தனையா எனக்குத் தோணுது.

  என்னைப் பொருத்த வரையில் இலங்கைத் தமிழர்களிடையே உள்ள சிஸ்டம் மிகச் சிறந்தது. ஆனால் நம் பாரம்பர்யமான ஆண் வாரிசு, அவன் பெற்றோர் மறைவுக்குப் பின் செய்யும் கடமைகள் என பலது இருப்பதால் அந்த முறை, அந்தக் கடமைகளைச் செய்யும் சமூகத்துக்குப் பொருந்துவதில்லை. மற்ற சமூகத்துக்கு ஏற்ற சிஸ்டம் அது என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. கேள்வி பதிலுக்கு தனி அந்தஸ்து தந்தது அரசு பதில்கள். நான் அரசு பதில்கள் புத்தகமாக வந்ததில் ஒரு பகுதி வைத்திருந்தேன். எஸ்.ஏ.பி. அவர்கள் பதில் கொடுத்துக் கொண்டிருந்த வரை நன்றாக இருந்தது, பின்னர் குமுதத்திற்கு ஆசிரியர் மாணவர்களும் அதே பெயரில் பதில் அளிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள  முடியவில்லை.    
  எஸ்.ஏ.பி.க்கு பிறகு குமுதத்தையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குமுதம் ஆனந்த விகடன் வகையறாக்களை விட்டு விலகி எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன...

   நீக்கு
  2. நானும் அப்படிதான். ஆனால் இங்கு அந்தக் கால குமுதம் பற்றி அல்லவா பேசுகிறோம்!

   நீக்கு
 15. அனைவருக்கும் காலை மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் பெருகப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 16. "தங்கப்பெண்ணே தாராவே!" பாடல் எனக்கு என் அப்பாவை நினைவூட்டியது. அவர் அடிக்கடி பாடும் பாடல் இது. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதி இருக்கார்னு கேள்வி தான். அதுவும் சொல்லித்தான் கேள்வி. படித்ததில்லை, பகிர்வுக்கு நன்றி,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு இந்த வரிகள் "தாழம்பூவே தங்கநிலாவே" பாடலை நினைவூட்டியது!

   நீக்கு
 17. என்னுடைய முந்தைய பதிலில் ஆசிரியர் ஆனவர்களும் என்று இருக்க வேண்டும்.  

  பதிலளிநீக்கு
 18. குமுதம் அரசு கேள்வி, பதிலில் என்னோட கேள்விகள் இருமுறை வந்திருக்கின்றன. அதுக்காகக் குமுதம் பிரதியும் கிடைத்துள்ளது. சுவாரசியமான பகுதி! இந்த "லை" "னை" இதை எல்லாம் நான் பழைய முறையில் தான் எழுதி வருகிறேன். மருமக்கள் தாயம் பற்றி எம்.டி.வாசுதேவன் நாயர் விபரமாக எழுதி இருப்பார். படித்திருக்கேன். பின்னர் வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்கள் அனைவரையும் ஒரு பாரா ஏதாவது சொந்தமாக கையால் எழுதி புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லலாம் போலவே... என்ன சிந்தனை திடீரென உதித்தது உட்பட சுவாரஸ்யமாயிருக்குமோ...

   நீக்கு
  2. பெரியார் சீர்திருத்திய எழுத்துக்களை அரசு அலுவல்களில் நடைமுறைப் படுத்தினார் எம்ஜிஆர்..

   துக்ளக்கில் மட்டும் பழைய நடைமுறை பல வருடங்களுக்குத் தொடர்ந்தது..

   எழுத்துக்களின் கொம்புகளை வளைத்தும் நெளித்தும் சித்திரம் போல எழுதிக் கொண்டிருந்த நான் பிற்பாடு மாற்றிக் கொண்டேன்..

   நீக்கு
  3. அரசு பதில்களில் என் கேள்விகளும் இரண்டு முறை பிரசுரம் ஆகியுள்ளது.

   நீக்கு
 19. மருமக்கள் தாயம் - கவிதை நூல் இப்போதும் கிடைக்கிறதா... படிக்க வேண்டும் போல் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 20. இந்த வாரக் கதம்பத்தில் இலக்கியச்சுவையோடிருக்கிறது. கவிமணியின் 1962 புத்தகம் கிடைக்குமா!

  ஈர விறகை ஈர மனதுடன் வாங்கி வரும் அப்பாவி அப்பாவின் படம் நன்றாக இருக்கிறது. சாமா!
  நாஞ்சில் மருமகளோ மாயாவின் தூரிகையில் நளினம், கவர்ச்சி !

  பதிலளிநீக்கு
 21. மின்சார (மாக) கனவு பட பாடல் ஞாபகம் வந்து, ஒத்த ரூபா சம்பள தலைமை, உச்சா மன்றத்தின் ஒத்த ரூபா நினைவையும் மறந்தவுடன், ஹா ஹா...!

  பதிலளிநீக்கு
 22. //நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி் மான்மியம் என்ற கவிமணி தேசிக விநாயகம் புத்தகம் பற்றி டி என் சுகி சுப்ரமணியம் விமர்சனம்தான் இதெல்லாம். //

  எவ்வளவு விஷயங்கள் இந்த புத்தகத்தில். விலை ஒரு ரூபாய் !

  ஈரவிறகால் அவதி பட்ட அம்மாவிடம் கேள்வி கேட்கலாமா?

  வாஸ்து கவிதையும் படமும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 23. மருமக்கள் தாயம் பற்றி என்றோ பள்ளிப் புத்தகத்தில் படித்தது, அதுவும் மூன்று மார்க் வினாவை குறி வைத்து மட்டுமே. இப்போது படிக்கும் போது, அதன் ஆழமும், தொன்மயும், அதோடு தொடர்புடைய வரலாறும் புரிகிறது. எங்கள் பிளாக் வந்தே பல நாள் ஆச்சு. Missed it, இனி அடிக்கடி வரணும். பிளாக் உலகில் புதுமை புகுத்திய பிளாக் இது 👏

  பதிலளிநீக்கு
 24. மருமக்கள் தாயம் பற்றி என்றோ பள்ளிப் புத்தகத்தில் படித்தது, அதுவும் மூன்று மார்க் வினாவை குறி வைத்து மட்டுமே. இப்போது படிக்கும் போது, அதன் ஆழமும், தொன்மயும், அதோடு தொடர்புடைய வரலாறும் புரிகிறது. எங்கள் பிளாக் வந்தே பல நாள் ஆச்சு. Missed it, இனி அடிக்கடி வரணும். பிளாக் உலகில் புதுமை புகுத்திய பிளாக் இது 👏

  பதிலளிநீக்கு

 25. "ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு மனைவி
  புருஷன் எச்சில் புசித்திட வேண்டும்
  "ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு மனைவி
  புருஷன் எச்சில் புசித்திட வேண்டும்
  ஐவரை மணந்த வீட்டில் அவர் கலத்தில் யார் உண்பது?? வீட்டண்ணன் வெள்ளையம்பிள்ளை வந்தார். விளம்பினார் ஒரு தீர்ப்பு...

  "ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு மனைவி
  புருஷன் எச்சில் புசித்திட வேண்டும் ஐவரை மணந்தது ஆணா பெண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மனைவியர் எனத் தெளிவாகச் சொல்லி இருக்காரே! ஐந்து பெண்களை மணந்த ஆணைப் பற்றித் தான் கவிதை!

   நீக்கு
 26. ஒரு ரூபாய்க்கு புத்தகம் - அந்தக் காலத்தில் ஒரு ரூபாயே அதிகமான மதிப்பு பெற்றிருக்குமே!

  தகவல்கள் அனைத்துமே சிறப்பு. தொடரட்டும் சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!