வியாழன், 10 டிசம்பர், 2020

விரும்பியது கிடைக்கா விட்டால்....

 எனக்கொரு ராசி உண்டு.


நான் விரும்பி வாங்கும் பொருட்கள் திடீரென மார்க்கெட்டிலிருந்து காணாமல் போய்விடும்!

பணிக்கு வந்த புதிதில் செகண்ட் நேச்சர் என்றொரு டால்கம் பௌடர்.  ரொம்பப் பிடித்திருந்தது. 

மணல் கயிறு படத்தில் எஸ் வி சேகர் சொல்வார்..  "பொண்ணு என் கண்ணுக்கு அழகா இருக்கணும்..  மற்றவர்கள் கண்ணுக்கு அசிங்கமாக இருக்கணும்" என்பார்.  அது போல அப்புறம்தான் தெரிகிறது எனக்கு மட்டும்தான் அந்தப் பௌடர் பிடித்திருக்கிறது என்று..   கொஞ்ச மாதங்கள்..  அப்புறம் கேட்டால் "இப்போ எல்லாம் அது வர்றதில்லை ஸார்..  ப்ரொடக்ஷன் நிறுத்திட்டாங்க" என்றார்கள்!

அப்புறம் நான் மாறியது ஸ்பின்ஸ் சாண்டல்...  கொஞ்ச மாதங்கள்..  அப்புறம் அதுவும் போயே போச்சே..  இப்பவும் ஸ்பின்ஸ் டால்கம் பௌடரில் மற்ற வகைகள் வருகின்றன.  சாண்டல் மட்டும் வருவதில்லை!​  ஏன்னா நான் அதுதான் வாங்கி கொண்டிருந்தேன் பாருங்கள்!​

சோப்!

முதலில் இலக்கில்லாமல் அவ்வப்போது ஒவ்வொரு சோப்பை உபயோகித்துக் கொண்டிருந்த நான் திடீரென ஒரு நாள் ஒயிட் பாமாலிவ் சோப்பின் மணத்தில் சொக்கிப் போய் அதை தொடர்ந்து வாங்கத் தொடங்கினேன்.  சிகப்பு, நீலம் என்கிற நிறத்தில் எல்லாம் வரத்தொடங்கிய பாமாலிவ் பின்னர் சந்தையிலிருந்து காணாமல் போனது!  அல்லது ஒயிட் பாமாலிவ் காணாமல் போனது.




'எப்புட்டி அம்மகி நிப்பட்டியே கதி' என்று நான் ஓல்ட் சிந்தால் சோப்பில் செட்டில் ஆனேன்.  இப்போது கொஞ்ச காலமாய் கறுப்பு சிந்தால் சோப்பில் விழுந்திருக்கிறேன்.  கொஞ்சம் பழைய ஒயிட் பாமோலிவ் வாசனை இதில் அடிக்கிறதோ என்று சம்சயம்.   ஆனா பிடிச்சிருக்கு..  எனக்கு பிடிச்சிருக்கு..  என் பக்கத்தில் வர்றவங்களுக்கும் அந்த வாசனை பிடிச்சிருக்கு.. ("நீங்க என்ன சோப் உபயோகிக்கறீங்க?  நல்ல வாசனையா இருக்கே!" )

இது என்ன ஆகுமோ!

ஆமாம் நீங்கள் எல்லோரும் என்ன சோப் உபயோகிக்கிறீர்கள்!!!

​இது நான் சில வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் எழுதியது!  இதில் லேட்டஸ்ட்டாக ஒன்று சேர்ந்திருக்கிறது!​


விவா!




எப்பவோ பல வருடங்களுக்குமுன் இரவு படுக்கும் முன்பு விவா குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.  இது போகப் போக குவார்ட்டர் அடிக்கும் பழக்கம் போல தொற்றிக்கொண்டது!  விவா வாங்க மறந்த நேரங்களில் வேறேதாவது கொ(குடி)டுத்தால் பிடிக்காமல் போனது.  ஹார்லிக்ஸ் போன்றவை பிடிக்காது.  விவா மட்டும் ஏனோ பிடித்துப்போன நிலையில் இப்போது விவா தயாரிப்பை நிறுத்தி விட்டார்கள் என்று என் வாடிக்கைக் கடைக்காரர் சொன்னார்.  நானும் பதறிப்போய் பல கடைகளில் விசாரித்து விட்டேன்.  இதுவரை கிடைக்கவில்லை!  எனவே மேற்சொன்ன லிஸ்ட்டில் இதையும் சேர்த்துக் கொள்ளவேண்டி வந்துவிட்டது.




இன்னொன்றும் ஞாபகத்துக்கு வருகிறது.  பிளேட்!  ஷேவிங் செய்துகொள்ள நான் முன்பெல்லாம் சில்வர் பிரின்ஸ் பிளேடுதான் உபயோகிப்பேன்.  என்னது...  என்ன சொல்றீங்க?    சடாசட் உடனடி ரேஸர் எல்லாம் வந்துடுச்சே என்கிறீர்களா?  ஊ..ஹூம்...  எனக்கு அது ஒத்துவருவதில்லை.  நான் கடைக்கும் செல்வதில்லை.  நானேதான்.  சிலகாலம் டோபாஸ் உபயோகித்த பிறகு சில்வர் பிரின்ஸுக்கு மாறினேன்.  அது அவர்கள் கடை மூடும் நேரம் போலும்.  அதெல்லாம் கிடைப்பதில்லை என்று சொல்லி விட்டார்கள்.  இப்போது அந்தப் பெயர் சொல்லிக் கேட்டால் கடைக்காரர்கள் அப்படி ஒரு ப்ளேடு வந்ததா என்று கேட்கிறார்கள்.

==================================================================================================






================================================================================================

சுடச்சுட புதிதாய் எழுதிய கவிதை ஒன்று!  


தனித்திரு விழித்திரு


காலை நேரங்களில் 
காக்கைகளின் சத்தம் 
கலைக்கிறது 
தனித்திருக்கும் தாத்தாவின் 
கனத்த தனிமையை 

பள்ளி செல்லும் பிள்ளைகளையும் 
பழம் விற்கும் பாட்டியையும் 
பார்ப்பதில் 
கழிகிறது பகல் நேரங்கள் 

வீடு தேடி வரும் உணவு 
பரிமாற ஆளில்லை 

உணவை மட்டுமில்லை 
மனதையும்தான் 

மாலைகளில் 
ஏழு மணிக்கே 
அடங்கி விடும் 
தெருக்களின் மௌனத்தில் 
கனத்த இரவைக் கடக்க 
கதவைச்சாத்தி 
உள்ளே வருகையில் 
கண்களில் நிறைகிறது 
கடந்த காலங்களின் 
ஏக்க நினைவுகள் 

================================================================================================================

ஒருமுறை முருகன் இட்லிஸ் கடையில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்தோம்.  அங்கேயே சென்று சாப்பிட்டால் முன்னர் போல இல்லாமல்  சுவையாகவே இருந்தது.  ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உடன் அவர்கள் கொடுத்திருந்த ஸைட் டிஷ் வகையறாக்கள்!  சாம்பார், புதினா சட்னி, கொத்துமல்லி சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி வெங்காய சட்னி என்று சுவையாய் பலவகைகள்...  எனக்கு மதுரை கோரிப்பாளையம் ரோடோரக்கடை அனுபவங்கள் நினைவுக்கு வந்தன.  இன்னொரு அனுபவம் இருக்கிறது.  அது பின்னர்...




===============================================================================================


மதன் ஜோக்ஸ்....




*****                                                                     *******                                                    ******

சில வாரங்களுக்கு முன் ஒரு பழைய விளம்பரம் பற்றிச் சொல்லி இருந்தேன்!  கேட்பரிஸ் விளம்பரமான இந்த விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  அதுதான் இது.  இப்போது​ கூட இதன் விளம்பரம் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.  தெருவில் நடக்கும் இளம் நங்கைக்கு கட்டிடத்தின் மாடியிலிருந்து குடை பிடிக்கும் இளைஞன்!



157 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நான் சொன்ன விளம்பரம் அந்தத்தொகுப்பில் முதல் விளம்பரமாக வருகிறது.  நடனமாடும் நங்கை!

      நீக்கு
    2. பதிவின் இறுதியில் பாருங்கள்.  ஒரு காணொளி தெரியும்.

      நீக்கு
  2. ஹார்லிக்சுக்கும் விவாவுக்கும் என்ன வி?
    ஹார்லிக்ஸ் தயாரிப்பாளரிடமிருந்து போட்டிருக்குதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவர்கள் தயாரிப்புதான் அது.  ஆனால் எனக்கு ஹார்லிக்ஸ் பிடிக்காது.  அது ஜுரம் வந்தால் குடிக்கும் பானம் என்று மனதில் விழுந்து விட்டது!

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   வணக்கமும் நன்றியும்.

      நீக்கு
    2. அற்புதமான பதிவு.
      அனைவருக்கும் இனிய காலை வணக்கமும் ,
      நல் பிரார்த்தனைகளும்.
      காட்பரீஸ் விளம்பரத்துக்கு மிக நன்றி ஸ்ரீராம்.
      எங்க மகள் மருமகன் வந்து விட்டார்கள். உங்க விளம்பர சத்ததைக் கேட்டு!!!!!!!!

      அதானே எங்கியோ கேட்ட மாதிரி இருக்கே ஆஹா என்று ஒரே மகிழ்ச்சி.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  வாரா வாரம் விளம்பரங்களைத் தொடர எண்ணம்!

      நீக்கு
  4. அரைபிளேடு போடுவது எப்படி என்று எங்கள் ஜிம் குரு கற்றுக் கொடுப்பார். பிரின்ஸ் அல்லது 7’o clock எனறு நினைக்கிறேன்.. இந்த ரெண்டு தான் வாங்கி வரச் சொல்வார். முறையாகக் கற்றுக் கொண்டும் அவரைப் போல் “கீச” வரவில்லை. “அய்ரே, இதெல்லாம் ஒனுக்கெதுக்கு.. படிக்கிற புள்ள” என்று எனக்கு வகுப்பிலிருந்து டிசி கொடுத்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  5. பெயர் மறந்துபோச்சு.. அழகான பெயர்.
    16 வயதினிகே படத்தில் ரஜினிக்கு மாலிஷ் போடும் ஆசாமி எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்.. அவருடன் ஜிம் குருவும் வருவார்.. அவருக்கு ஏதோ பேரு உண்டே. நல்ல பேரு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினிக்கு மாலிஷ் போடுவது கவுண்ட்டமணி இல்லையோ...

      நீக்கு
  6. மதன் ஜோக்ஸ் அற்புதம். சிரித்து மகிழ்ந்தேன்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. வயதானவரின் கவிதை கண்ணில் நீர் வரவழைத்தது. ஆமாம்
    அதுதான் வாழ்க்கை. தனிமையும் முதுமையும்
    யாருக்கும் வேண்டாம். பாராட்டுகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதுமையைத் தவிர்க்க முடியாது.   தனிமையைத் தவிர்க்கலாம்!  நன்றிம்மா.

      நீக்கு
  8. ஸ்விக்கியில் இத்தனை டப்பாக்களில் கொடுக்கிறார்களா.
    அட !!!! பார்க்கவே அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடையைப் பொறுத்தது இல்லையா?  இந்தக் கடையில் அவ்வளவு ஸைட் டிஷ்!

      நீக்கு
  9. // நான் விரும்பி வாங்கும் பொருட்கள் திடீரென மார்க்கெட்டிலிருந்து காணாமல் போய்விடும்!// அனுஷ் மார்க்கெட் சரிந்ததற்கும் இது காரணமாக இருக்குமோ? சி பி ஐ விசாரணை தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிங் சக்க ஜிங் சக்க ஜிங் சக்க ஜிங்! இங்கே போட வேண்டியது எங்கேயோ போயிருந்தது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. அனுஷ் மார்க்கெட் சரிந்ததற்கும் இது காரணமாக இருக்குமோ? // ஹாஹாஹா!

      நீக்கு
    3. ஹா...  ஹா...  ஹா...   நல்ல சந்தேகம்.  எல்லாப் பழியையும் என்மேலேயே போடக்கூடாது.  முத்துசாமி கிட்ட சொல்லிடுவேன்,

      நீக்கு
  10. சிந்தால், டோபாஸ் சிங்கமும் வாங்குவார்.
    ஓல்ட் ஸ்பைஸ் ஆஃப்டர் ஷேவ் லோஷன்.

    துபாயில் கிடைத்தபோது டஜன் கணக்கில் வாங்கி வந்தோம்.

    உங்கள் காணாமல் போன வைபவங்கள் நிஜமாகவே
    பாவமாக இருக்கிறது.

    அரை ப்ளேட் அருணாச்சலம் ஒரு காரக்டர் இல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோபாஸ் கூட வாங்கி இருக்கிறேன்.  இப்போது கடையில் கேட்டால் சூப்பர் மேக்ஸ் என்று ஒன்றுதான் தருகிறார்கள். "More and more people, in more and more countries....... Use... Topaz stainless blade" என்று விளம்பரம் வரும்!

      நீக்கு
  11. செலக்ட் என்று ஒரு பௌடர் வந்ததோ. ஆஹா என்ன வாசனை. செகண்ட்
    நேச்சர் நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செலெக்ட் நினைவில்லை.  ஆனால் இரண்டாம் இயற்கை எனக்குப் பிடித்தது அதன் துரதிருஷ்டம்!

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.அநேகமாக மழை நின்று விட்டது என நினைக்கிறேன். அனைவர் வாழ்விலும் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. இங்கேயும் ஜோமோட்டோ, ஸ்விக்கி இருக்கின்றன ஸ்விக்கியில் அஷ்வின் உண்டு எனப் போட்டிருக்காங்க. ஆனால் நாங்க இதன் மூலம் மட்டும் அல்ல எதன் மூலமும் வெளியே வாங்குவது இல்லை. முருகன் இட்லிக் கடைக்கு மதுரை தளவாய் அக்ரஹாரத்தில் இருந்ததுக்கு ஒரே ஒரு முறை தவிர்க்க முடியாமல் போனோம். மற்றபடி அங்கே சாப்பிட்டதில்லை. அப்படி ஒண்ணும் உசத்தியாகவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையுமே ரொம்ப ஹைப் செய்யும்போது நம்ம எதிர்பார்ப்பு பல மடங்கு எகிரும். அப்போ சாப்பிட்டால் ஆஹா ஓஹோன்னு இருக்காது.

      நீங்க ரொம்ப சூப்பரா ஸ்வீட்ஸ் பண்ணுவீங்களாமே... நீங்க பண்ணின மனோகரம் ரொம்ப ரொம்ப நல்லா இருந்ததுன்னு சாப்டவங்கள்லாம் சொல்றாங்களே.. நானும் சாப்பிட்டுப் பார்க்கணும் என ஒரு மாதம் முன்னால் ஒரு சொந்தக்காரங்க சொன்னபோது, அப்படீலாம் இல்லை.. என்னை என்கரேஜ் செய்வதற்காகச் சொல்றால்க, நான் இப்போதான் கத்துக்கறேன், நிறைய மிஸ்டேக் வருது என்றெல்லாம் சொல்லி அவர் எதிர்பார்ப்பைக் குறைத்துவிட்டுத்தான் அவருக்கு இனிப்பு செய்துகொடுத்தேன். இல்லைனா அவங்க ரியாக்‌ஷன் அப்படி இருந்திருக்காது.

      நானும் முருகன் இட்லியில் ஒருமுறை சாப்பிட்ட (பல வருடங்களுக்குமுன்) சர்க்கரைப் பொங்கலை ஆஹா ஓஹோன்னு நினைத்தேன். சமீபத்தில் பசங்க அவங்க இட்லி மி பொடியை ஓவராக ரசிப்பதால் வீட்டில் முயற்சித்தேன், மி பொடியும், அது தடவிய இட்லியையும். அவ்வளவு நல்லால்லை, அதுபோல வரலைன்னுட்டாங்க

      நீக்கு
    2. மதுரை முருகன் கடையும் சரி, நங்கநல்லூர் முருகனும் சரி அவ்வளவு நன்றாய் இல்லை.  இது போரூர் முருகன் இட்லிஸ்!

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை..   ரொம்ப ஹைப் செய்தால் முதலிலேயே மனதில் ஒரு எதிர்ப்புணர்வு தோன்றி விடும்.  நான் கூட உங்களை மாதிரிதான்.  இன்னொரு தக்கினிக்கியும் உபாயோகிப்பேன்.  பசிநேரம் தாண்டி பரிமாறினால் பஞ்சையாய் சமைத்திருந்தாலும் அமிர்தமாய்த் தோன்றும்!!!  நலன் பெயர் வாங்கிவிடுவேன்!

      நீக்கு
  15. நேற்றுத் தற்செயலாக எதிலோ க்ரேன் விழுந்து மதனின் மருமகன் பலியானதாகப் படித்தேன். அதிலிருந்து மனசு சரியில்லை. மதன் துணுக்குகளை ரசிக்க முடியலை! அதே நினைவு வந்தது. அவர் இறந்து 2,3 வருஷம் ஆகி இருக்கும் போல. இருந்தாலும் வேதனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றுத் தற்செயலாக எதிலோ க்ரேன் விழுந்து மதனின் மருமகன் பலியானதாகப் படித்தேன். அதிலிருந்து மனசு சரியில்லை.// இந்தியன் 2 படப்பிடிப்பாம்.

      நீக்கு
    2. பழைய செய்தி. காலச்சக்கரம் நரசிம்மா பேஸ்புக் பதிவில் (நாசரத்பேட்டை) படித்திருப்பீர்கள்.

      நீக்கு
    3. நேற்றா....?  இது பழங்காலச் செய்தி!  மதன் இடிந்து போனார்.  மதன் நலமாகவே உள்ளார்.

      நீக்கு
    4. ஓ, காலச்சக்கரம் நரசிம்மா நாசரத்பேட்டைப் பதிவு முதலில் போட்டதை மாற்றி விட்டுப் பின்னர் எடிட் செய்து வேறே போட்டிருக்கார்.

      நீக்கு
    5. //நேற்றா....? இது பழங்காலச் செய்தி! // நான் படிச்சது நேத்திக்குத் தானே!

      நீக்கு
  16. நான் சின்ன வயசில் எல்லாம் சோப்பே பயன்படுத்தியதில்லை. கல்யாணம் ஆகிக் கூட. பின்னர் வடக்கே மாற்றிப் போகும் நிலை வந்தப்புறமாத் தான் சோப்பெல்லாம். கொஞ்ச நாட்கள் சிந்தால், ஹமாம், பின்னர் மைசூர் சான்டல் என ராணுவ கான்டீனில் அந்த மாசம் எந்த சோப் அதிகம் வருதோ அதை வாங்கிப் போடுவார். என்னோட அருமையான தோலுக்கு அதெல்லாம் ஒத்துக்காது. குப்பை மேனியையும், வேப்பிலையையும் போல் அது வேலை செய்ததில்லை. இப்போக் கொஞ்ச நாட்களாகப் பதஞ்சலியின் மூலிகை சோப். நடு நடுவில் குப்பை மேனி+வேப்பிலையும் உண்டு. இதில் உள்ள சுத்தம் வேறே எதிலும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'என் சருமத்தின் பளபளப்புக்குக் காரணம் என்ன’ என்று சாரு நிவேதிதா - அவர் தினம் குளிப்பவரா என்பதே சந்தேகம் - புத்தகம் எழுதி அமேஸானில் வெளியிடுகிறார். மூலிகைக்குளியலில் முழுமூச்சாக இறங்கும் நீங்களல்லவா அப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கவேண்டும்?

      இப்ப என்ன முழுகிப்போச்சு, டயம் இருக்கு..

      நீக்கு
    2. நான் விதம் விதமாக சோப் உபயோகித்திருக்கிறேன். பயத்தம் மாவு எனக்கும் தரப்பட்டிருக்கிறது.  தேய்த்துக்கொள்ள பீர்க்கை ஓடு (காய்ந்தது)  பொதுவாக நான் போட்டுக்கொள்வேனே தவிர பிறருக்கு சோப் போடுவதில்லை!!!   ஹிஹிஹி...    ஜோக்!

      நீக்கு
    3. பீர்க்கை ஓடெல்லாம் உடம்பில் சிவந்து தடிப்புத் தடிப்பாக வந்துடாதோ>

      @ஏகாந்தன், அப்படியா? எனக்குத் தெரியாதே! நானும் எழுதலாம் தான். அமேஸானில் தான் புத்தகங்கள் வெளியிட ஆரம்பிச்சாச்சே! :)

      நீக்கு
    4. ஓடா?  காய்ந்த நார் போல் அல்லவா இருக்கும்?!

      நீக்கு
    5. அது பீர்க்கை நுரை என்பாங்க நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் .ஆங்கிலப்பெயர் loofah மூன்று உள்ள பேக் இங்கே சுமார் 8 பவுண்டுக்கு கிடைக்குது . loofah has a mild raw smell. Avoid using a loofah on any part of your skin with reduced sensation; although the fibers in the gourd are unlikely to scratch your skin, it's safer to use only soft materials.

      நீக்கு
  17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    நலம் வாழ்க என்றன்றும்...

    பதிலளிநீக்கு
  18. கவுஜ மனதைக் கவர்ந்தது. இரண்டுமே!முதலாவது சிரிக்க வைத்தால் இரண்டாவது வேதனை கொடுத்தது. நம்ம ரங்க்ஸுக்கும் விவா தான் பிடிக்கும். எனக்கோ ஹார்லிக்ஸ் தான்! ஆனால் வாங்கவே மாட்டார். விவா முன்னால் எல்லாம் ஜகத்ஜித் மார்க்கெட்டிங் மூலம் வந்து கொண்டிருந்தது. ஹார்லிக்ஸுக்கு மாறினது தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ஆரம்பகால விவா இன்னும் சிறப்பாக இருக்கும்.  (JIL) இப்போதும் ஹார்லிக்ஸுக்கு இது பரவாயில்லை என்றே தோன்றும்.  நான் முன்னரே சொல்லி இருப்பது போல ஹார்லிக்ஸ் உடம்பு சரியில்லாமல் போனால் குடிக்கும் பானம் என்று மனதில் பதிந்து விட்டது.  சில காலங்களுக்கு ரசம் சாதமே அப்படிதான் தோன்றியது.

      நீக்கு
    2. ஜகத்ஜித் இன்டஸ்ட்ரீஸ் பற்றி ஏகாந்தனும் குறிப்பிட்டிருக்கார். ஹார்லிக்ஸ் காரங்க அப்புறமா வாங்கிட்டாங்க போல! அந்தப் பழைய விவா ஹார்லிக்ஸுக்குப் போட்டியா வந்தது தான். ஆனால் சுவை தனி மணமாக இருக்கும்.

      நீக்கு
    3. // ஆனால் சுவை தனி மணமாக இருக்கும். //

      ஆமாம்.  அதனால்தான் நான் அதன் ரசிகன்!

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    நாம் விரும்பியது சற்று விலகித்தான் போகும் போலிருக்கிறது. அது என்ன ராசியோ தெரியவில்லை... எங்களுக்கும் சில பொருட்கள் இந்த மாதிரி ஆகியிருக்கிறது. நாங்களும் உங்களைப் போல வேறு பொருட்களை விரும்ப ஆரம்பித்து விடுவோம்.(வேறு வழி..?)

    விவா ருசி நன்றாக இருக்கும். பிறகு மால்டோவா, பூஸ்ட், இப்போ எங்கள் வீட்டில் குழந்தைகளுக்காக மட்டும் போர்ன் விட்டாவில் வந்து நிற்கிறது. அந்தக்கால ஹார்லிக்ஸின் மணம், சுவை (நான் சொல்வது 70 பதுகளில்)இப்போது எதிலும் இல்லை. (குடிக்க வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன். அதற்குத்தானே அந்த விளம்பரம்....நினைவில்லை.) அதன் பிறகு அதிலும் எந்த சுவையுமில்லை. (ஒருவேளை நமக்குத்தான் ப. ப. பா. பு. விட்டதோ..? தெரியவில்லை.) முதல் பகுதியை (வி.போ. வி. போகும்) நன்றாக தொகுத்துள்ளீர்கள்.

    இரு கவிதைகளும் அருமை.ஒரு சாரலே போதுமென்ற உணர்வுடன் ஜன்னலை சாத்தச் சொல்வது... ஹா.ஹா.ஹா. சிரித்து முடியவில்லை..

    சுடச்சுட வடித்தது மனதை கலக்கமுறச் செய்தது. பாவம்..! அந்த தாத்தாவிற்கு நினைவுகளின் சுமை மட்டுமே ஆறுதல்கள் தந்து போகும். அவரது தனிமையின் கலக்கங்கள் நம் மனதையும் என்னவோ செய்கிறது. தலைப்பும் நன்றாக உள்ளது. தனித்திருக்கும் போது கண்டிப்பாக விழிப்புந்தானே... ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹா.ஹா.ஹா. சிரித்து முடியவில்லை..// கீதா ரங்கன்,என்று நினைத்து விட்டேன். அவர்தான் இப்படி எழுதுவார்.

      நீக்கு
    2. ஆமாம்..சகோதரி கீதா ரெங்கன் எங்கே? சில தினங்களாக மறுபடியும் அவரை காணவில்லை. சில சமயங்களில் நம் எழுத்து முறைகள் மாறி விடுகின்றன. எப்படியோ இன்று அவரை நினைவு கூர்ந்து விட்டேன். ஹா.ஹா. நன்றி சகோதரி.

      நீக்கு
    3. //ப. ப. பா. பு. விட்டதோ..? /

      ஹா..   ஹா..  ஹா...   (ஆமாம்...  ப ப பா பு  என்றால் என்ன?!!)


      பாராட்டுகளுக்கு நன்றி கமலா அக்கா..

      நீக்கு
    4. பழகப் பழக பாலும் புளித்து விட்டதோ?

      நீக்கு
    5. ஆமாம். KH-ன் வார்த்தைகளில் GR-ன் மணம், குணம்.. ஆச்சரிய வியாழன்தான் இன்று!

      நீக்கு
    6. எனக்கு மட்டும் ஏன் GR மணம் தெரியவில்லை?!!

      நீக்கு
    7. கருப்பு சிந்தாலை மாற்றினால் சரியாகிவிடும்!

      நீக்கு
    8. ஹா...   ஹா...  ஹா....   வெள்ளைப் பாமாலிவ் கிடைக்கட்டும்..  மாற்றி விடுவோம்!

      நீக்கு
    9. நான் உங்கள் அனைவரைப்போல எழுத்து குறுக்கி எழுதினேன்.(எங்கள் வீட்டில், (அம்மா வீட்டிலும்) இப்படித்தான் வார்த்தை குறுக்கி, முதல் எழுத்தை மட்டும் வைத்து பேசிக் கொள்வோம். இன்று உண்மையிலேயே அருமையான வியாழன்தான். GR-ன் மணம் குணத்துடன் என்னை ஒப்பிட்டது பெருமையாக உள்ளது. ஒருவேளை அவரும் என்னைப் போல் தற்சமயம் பியர்ஸ் உபயோகிக்கிறாரோ என்னவோ? ஹா.ஹா. அதிலும் முன்பிருந்த அந்தக்கால வாசனையில்லை. பேசாமல் சிறுவயதில் உபயோகித்த சீயக்காய். அரப்புத்தூளுக்கு மாறி விடுவதும் நன்றுதான் என பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். அந்த சீயக்காய் வாங்கி அதனுடன் பல வாசனாதி பொருட்கள் (கூடவே பாசத்தையும் கலந்து) சேர்த்து அரைத்து தந்த எங்கள் அம்மாவுக்கு எங்கே போவது? நடுவில் வந்து பிரபலமாக இருந்த புலி மார்க்கும் அந்த பழைய வாச(சீற்ற)த்தை இழந்து விட்டதோ என்னவோ... வாங்கிப் பார்க்க வேண்டும். அதுவும் காணாமல் போன லிஸ்டில் இருக்கிறதோ என்னவோ.. அதுவும் தெரியவில்லை.

      நீக்கு
  20. உங்கள் விருப்பமா நீங்க எழுதியிருக்கும் எதையும் நான் உபயோகித்ததில்லை, முயற்சித்ததும் இல்லை.

    நான் சிந்தாலில் புகழ்பெற்ற சிவப்பு கலர் ரேப்பர் உள்ளதுதான் உபயோகிப்பேன் (நான் ஒரு சோப் உபயோகிப்பதில்லை. 4-5 சோப்புகள் பாத்ரூமில் வைத்திருந்து அன்றைய மூடுக்குத் தகுந்தமாதிரி உபயோகிப்பேன். இதுபோல பலதிலும் அப்படித்தான். சின்ன வயதில் கிடைக்காத்துனால் என் மனதில் பதிந்த பழக்கம் அது). பஹ்ரைனில் சிந்தால் மற்ற கலர்களுக்கு, கருப்பு உட்பட, ஏகப்பட்ட ஆஃபர் இருக்கும், சாதாரணமாக சிவப்பு உறைக்கு ஆஃபர் வராது (விளம்பரமும் வராது, ஏன்னா பெஸ்ட் செல்லர்). ஒரு முறை என் டாக்டர், டெட்டால் பிராண்ட் சோப் உபயோகிக்காதீர்கள், சரும அலர்ஜி வரும், என்றார். அதனால் அந்த பிராண்ட் மட்டும் நிறுத்திவிட்டேன்.

    எனக்கு ரொம்பப் பிடித்தமாய் வாங்க நினைத்தது லைஃப்பாய் ஒரிஜனல் சோப். அது மார்க்கெட்டில் வழக்கொழிந்து போயிடுச்சு. கல்லூரிக் காலங்களில் லேப்பில் கைகழுவ உபயோகத்துக்கு வச்சிருப்பாங்க. பஹ்ரைனில் வேறு ஒரு கம்பெனி (எப்படீன்னு தெரியலை) லைஃ்பாய் ஒரிஜனல் மணத்தில் சிறிய சோப் வந்தது, மும்பையிலிருந்து என நினைவு. பிறகு அதுவும் கிடைக்கலை.

    உங்களில் யாராவது லைஃப்பாய் ஒரிஜினல் சோப், முதலில் வந்துகொண்டிருந்த லிம்கா, பாண்ட்ஸ் ஒரிஜனாக வந்த பவுடர் போன்றவற்றை மிஸ் செய்கிறீர்களா? (லக்ஸ்.. இன்னும் பல உண்டு)

    என் ஹாஸ்டல் வாழ்க்கையின்போது பிரபலமாக இருந்த பவுடர் நினைவுக்கு வரலை. பிற்காலத்தில் அது கிடைத்தபோது ஒருமுறை வாங்கினான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறுபது வருடங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டில் மூன்று லைபாய் சோப் வாங்குவார்கள். பெரிய அளவு சோப். ஒவ்வொன்றையும் பாதி பாதியாக வெட்டி, எனக்கு, மற்றும் அப்போது உடனிருந்த சகோதர சகோதரிகளுக்கு ஆளுக்கு அரை சோப் கொடுக்கப்படும். எவ்வளவு தேய்த்தாலும் தேயாமல் செங்கல் போல உறுதியாக இருக்கும். ஒரே போர் !! ஒரு அண்ணன் மட்டும் ஸ்பெஷலாக மகாராணி சாண்டல் சோப் போல ஏதேதோ வாங்கி உபயோகிப்பார். நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு ஆசை தீர மார்க்கெட்டில் விலை உயர்ந்த சோப் (அப்போது சிந்தால் பச்சை நிற சோப்) வாங்கி உபயோகிப்பேன்.

      நீக்கு
    2. Am longing to buy original lifebuoy fir several years. கிடைத்தால் சொல்லுங்க.

      அப்போ அதன் அருமை தெரியலை. அந்த வாசனை போல வராது

      நீக்கு
    3. வாங்க நெல்லை...   லைப்பாயில் அவ்வளவு விருப்பமா?    சிவப்பு ரேப்பர் இருப்பதுதான் ஓல்ட் சிந்தால் என்று அழைக்கப்படுகிறது.  எவர்க்ரீன்!  தரமானதாக இருக்கும்.  லிம்காவில் பௌடர் கேள்விப்பட்டதில்லை.  

      நீக்கு
    4. கேஜிஜி...   என் அப்பா கார்பாலிக் சோப் என்று ஒரு துணி துவைக்கும் சோப் கொண்டு வருவார்.  சவர்க்காரம் அலலது சவுக்காரம்!  அதை வைத்துத் துவைத்தால் துவைக்கும் ப்ரஷே தேவை இல்லை.  அவ்வளவு ஸ்ட்ராங்..  அவ்வளவு கொரகொரப்பு.  வாழ்நாளைக்கு ஒரு சோப் போதும்.  தண்ணீரிலேயே போட்டு வைத்தால் கூட கரையவே கரையாது!

      நீக்கு
    5. லிம்கா டிரிங். பழைய ருசி/மணத்துல சேர்க்கும் ஒரு பொருள் கேன்சரை உண்டாக்குதுன்னு பெரிய விஷயமாகி அப்புறம் அந்தப் பொருளை மாற்றியதும் இப்போதுள்ள சுமார் சுவைக்கு வந்துவிட்டது.

      நீக்கு
    6. ஓ...   நான் லிம்கா என்ற பெயரில் சோப் வேற வந்ததோ என்று குழம்பிவிட்டேன்!

      நீக்கு
  21. அனைவருக்கும் காலை வணக்கம். நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  22. //எப்புட்டி அம்மகி நிப்பட்டியே கதி// translation please.

    பதிலளிநீக்கு
  23. கடைசியாக ஜன்னலையும் மூடு என்றதால் கவிஞர் தப்பித்தார்..!

    பதிலளிநீக்கு
  24. உங்கள் சோப்புக் கதையில், என் சோப்பு ஆராய்ச்சிக் கதைகளை சேர்த்தால் பதிவு வந்து விழும் இங்கே! விட்டிடுவோம்.

    நான் இங்கே சொல்வது ஆரம்ப Viva ! அது எழுபதுகளில் ஹார்லிக்ஸுக்குப் போட்டியாக இன்னொரு கம்பெனியால் தயாரிக்கப்பட்டு வந்தது. பஞ்சாபின் ஜக்ஜீத் இண்டஸ்ட்ரீஸ்.. நன்றாக இருக்கும். வேகமாக மார்க்கெட் பிடித்தது. கண்ணாடி பாட்டிலில்தான் வரும். டெட்ரா-பேக் எல்லாமில்லை. பிற்காலத்தில் ஹார்லிக்ஸ் அந்த ப்ராண்ட் நேமை ‘வாங்கிவிட்டார்கள்’ என நினைக்கிறேன். இப்போது ஜக்ஜீத் இண்டஸ்ட்ரீஸின் முகவரி தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..  ஒருபொருள் பிரபலமாகி இன்னொரு பொருளுக்கு போட்டியானால் வல்லவன் இன்னொன்றை கபளீகரம் செய்து விடுகிறான்!

      நீக்கு
  25. என் சிறு வயதில் எங்கள் வீட்டில் கோகுல் சாண்டல் பவுடர்தான் வாங்குவார்கள். அது எனக்கு மூச்சு முட்டும். அதனால் உபயோகி்க்க மாட்டேன். பிறகு பாண்ட்ஸ் ட்ரீம் ஃபளவர் டால்க்(கோடைக் கானலும் சொகுசாய் மாற என்ற அதன் விளம்பர பாடல் இப்போதும் நினைவில் இருக்கிறது). பின்னர் இன்றுவரை யார்ட்லிதான்.
    சோப் வெகு நாட்களுக்கு ஹமாம். பின்னர் கொஞ்ச நாட்கள் பயத்தம் பொடடி. மஸ்கட் சென்ற புதிதில்,சருமம் அதிகம் வரண்டு போனதால் டாவ். அதை பயன்படுத்தினால்,முகத்தில் எண்ணெய் வழியும். எனவே மீண்டும் ஹமாம். அதுவும் கோடையில், குளித்த ஃப்ரெஷ்னெஸ் தராததால் கோடையில் மைசூர் சாண்டல், குளிர் காலத்தில் ஹமாம் என்று வைத்துக் கொண்டேன். சமீப காலத்தில் பேர்ஸீக்கு மாறியிருக்கிறேன். காதி சோப்பும் மிக நன்றாக இருக்கிறது. ஆனால் அது எப்போதும் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோகுல் சாண்டல் போட்டால் பௌடர்  போட்டிருக்கிறார்கள் என்று எதிரே பார்ப்போருக்குப் பறைசாற்றும்!  அப்படி முகத்தில் தெரியும்!  அதென்னவோ பாண்ட்ஸ் எனக்கு எப்போதுமே இஷ்டமாயிருந்ததில்லை.  பாண்ட்ஸ் சாண்டல் விதிவிலக்கு!

      நீக்கு
  26. எனக்கும் விவாதான் பிடிக்கும். அது கிடைப்பதில்லையா? பரவாயில்லை, மகன் வாங்கும் ஹார்லிக்ஸ் குடித்து பழகி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவாவில் சர்க்கரை அதிகமோ?

      நீக்கு
    2. விவாவில் சுவை அதிகம் (எனக்கு)  நான் வேறெதுவும் குடிப்பதில்லை பானு அக்கா...  குறிப்பாக கேட்பரிஸ்  சுவையில் எதுவுமே பிடிப்பதில்லை.

      நீக்கு
    3. விவாவில் மால்ட் அதிகம். There was something special about its composition. நீர்க்க பால்விட்டு ஆத்தினாலும், வாசனையாக குடிக்க சுவையாக இருக்கும். ஹார்லிக்ஸை வேகமாக ஓரங்கட்டிய இந்திய பராண்ட். ஜெனரல் ஸ்டோர்ஸ் தாண்டி, மெடிக்கல் ஸ்டோர்ஸ்களிலும், போர்ன்விடா, ஹார்லிக்ஸ், ராகிமால்ட்டோடு சிவப்பு மூடியில் கம்பீரமாக நிற்கும் விவா!

      நீக்கு
    4. அடடே...   விவாவுக்கு நிறைய ரசிகர்கள்...!

      நீக்கு
  27. இரு வேறு உணர்வுகளைச் சொன்ன இரண்டு,கவிதைகளும் அருமை. நினைவுகளே துணையாகிப் போகும் முதுமை..பயமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. காட்பரீஸ் விளம்பரங்கள் எல்லாமே ரசிக்கும்படி இருக்கும். இன்று பகிர்ந்திருக்கிறீர்களா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறுதியில் உள்ள காணொளி காண்க !

      நீக்கு
    2. என்ன, இப்படிக் கேட்டுட்டீங்க!

      நீக்கு
    3. ////இறுதியில் உள்ள காணொளி காண்க ! //  அப்படி எதுவும் கண்ணில் படவில்லையே? வல்லி அக்காவைத் தவிர வேறு யாராவது பார்த்தீர்களா?

      நீக்கு
    4. நான் இதோடு 2,3 தரம் பார்த்துட்டேன். இப்போவும் பார்த்துண்டே இருக்கேன்.

      நீக்கு
    5. ஏன் அந்தக் காணொளி சிலர் கண்ணில் தெரிகிறது?  சிலர் கண்ணில் தெரியவில்லை?

      நீக்கு
    6. எனக்கும் இதுவரை தெரியவில்லை. ஒருவேளை பதிவில் இன்று காணாமல் போன பொருட்களுக்கு துணை(போட்டி)யாக அதுவும் மாயமாகி விட்டது என நினைக்கிறேன். எப்படியும் பார்த்து விடலாம் என்ற நினைப்பில், கண்களை இடுக்கி தேடு தேடென்று தேடியதில் பல்வலி வந்ததுதான் மிச்சம். ஹா.ஹா.

      நீக்கு
    7. விளம்பரக் காணொளி இப்போது தெரிகிறதா என்று பாருங்கள்.

      நீக்கு
  29. fresca என்று ஒரு பவுடர் இருந்ததே? துத்தநாக கலரில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விப்பட்டதில்லை.  நான் தஞ்சை கான்வென்ட்டில் படித்தபோது என் வகுப்பு லீடர் பெயர் ஃபிரான்சிஸ்கா!  சட்டென இதுதான் நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
  30. விரும்பியது கிடைக்கா விட்டால் கிடைப்பதை விரும்ப பழக வேண்டும்

    பதிலளிநீக்கு
  31. நீங்கள் விரும்பியது எதுவாக இருந்தாலும் மறைந்து விடுகிறதே...

    இந்திய அரசியல்வாதிகளை நேசித்துப் பாருங்கள் ஜி.

    கவிதை அருமை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்திய அரசியல்வாதிகளை நேசித்துப் பாருங்கள் ஜி. // அவ்வ் - இப்படி ஒரு வழியா!

      நீக்கு
    2. ஒழிய வேண்டியவர்களை நேசிப்பது நல்ல உத்தி கில்லர் ஜி.  கவிதையை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  32. கோரிப்பாளையம் ரோட்டோரக் கடை - நான் 89ல் பாண்டிபஜார் பிரில்லியன்ட் டூடோரியல்ஸ் எதிரே கையேந்தி பவனில் பரோட்டா சாப்பிட்டிருக்கேன். அங்கு உணவு நல்லா இருக்கும்.

    பிறகு, அங்கே போஸ்ட் ஆபீஸ் எதிரே இரவு 7 மணிக்கு வேன் வந்து அங்கே டிபன்லாம் பண்ணுவாங்க. அங்க பொடி தோசைலாம் சாப்பிட்டிருக்கேன்.

    கையேந்தி பவன்கள் மட்டும் சுகாதாரமா இயங்கினாப்பவும் சாப்பிட ஆசைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் சாலையோரக் கையேந்தி பவன்கள் எப்போதுமே பிரபலம்.  மதுரையில் அப்பொஹெல்லாம் தேர்ந்தெடுத்த சில கடைகளே இப்படி இருந்தன.

      நீக்கு
  33. சாரல் கவிதை ரசிக்கவில்லை. கனவுக் கன்னி தொலைக்காட்சியில் பார்க்கும்போது அவள் கொட்டாவி விடுவது போன்றது. ஹாஹா

    தனித்திரு கவிதை சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   குறை சொல்வது போல இருக்கிறதா?   நன்றி நெல்லை.

      நீக்கு
    2. ஒரு கவிதை கொஞ்சம் சிந்தனையைத் தூண்டணும்.... யோசிக்க வைக்கணும்.

      தனித்திரு கவிதை எனக்கு புதுமைப்பித்தன் (?) கதை ஒன்றை நினைவுபடுத்தியது.

      சிலசமயம் பசங்க கொச கொசன்னு அவங்களுக்குள்ளேயே பேசிச் சிரிச்சு.. அப்புறம் பொருட்களை அங்க இங்க போட்டு களேபரப்படுத்துவாங்க. எனக்கு வீட்டுல வச்ச பொருள் வச்ச இடத்துல இருக்கணும். பஹ்ரைன் கிச்சன்லயே நான் போனிலேயே இந்த இடத்தில் இரண்டாவது வரிசை என்றெல்லாம் சொல்லுவேன். ஆனா என் பையன் 8வது படிக்கும்போதே... வீடு என்ன மியூசியமா வச்ச பொருள் அந்த அந்த இடத்துலயே இருக்க என்பான்.

      இந்தக் களேபரம் செய்யும் பசங்களும் ஒரு நாள் வேலை, அது இது என்று நம்மை விட்டுப் பிரியும்போது, வீடு அழகா சுத்தமா இருக்கும், ஆனால் நம் மனசு அப்போது அதையா விரும்பும்?

      கிராமத்துத் தாத்தா சொல்வதாக ஒரு வசனம் வரும், 'பேரப்புள்ளய தூக்கிக் கொஞ்சும்போது அது ஒண்ணுக்கடிச்சு என் வேட்டி நனஞ்சுபோகும் சுகத்துக்கு ஈடு வருமா' என்பதுபோல...

      வாழ்க்கைல ஒரு சமயம் குறையாத் தெரிவது, இன்னொரு சமயம் நிறையாத் தெரிவதுதான் வாழ்க்கையின் விநோதம் போல.

      எங்க ஊர்ல (சென்னைலதான்) எங்க வீட்டுக்கு எதிர் வரிசைல இரண்டு கிரவுண்ட் நிலத்தில் சாதாரண வீட்டில் மூன்று நாலு சகோதரர்கள் வசிக்கிறாங்க (வயது 65+ ஆவரேஜ்). பெண்கள் யாருமே கிடையாது. அவங்களே சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு ஏதோ வாழ்க்கை ஓடுது. எனக்கு அதைப் பார்க்கும்போது மனதுக்கு ஒருமாதிரிதான் இருக்கும்.

      எல்லாரும் ஜாலியா பேசறோம்னு, பெண்டாட்டி பற்றி ஏகப்பட்ட ஜோக்ஸ் சொல்லுவாங்க....அவங்களை ராட்சசி மாதிரி சித்தரிப்பதாக. கணவன் இல்லாமல் மனைவியால் வாழ்க்கையை ஓட்டிவிட முடியும். சரியாகத் தாங்கும் உறவினர்கள் இல்லாதவர்களுக்கு, மனைவியின் பிரிவு என்பது கிட்டத்தட்ட அநாதைப் பிழைப்பு தான்.

      நீக்கு
    3. தனித்திரு கவிதை உங்களை இந்த அளவு யோசிக்க வைத்திருப்பபது சந்தோஷம் தருகிறது நெல்லை.  நானும் நீங்கள் சொல்லியிருப்பதுபோல சிலரை நினைவில் யோசித்ததால்தான் அந்தக் கவிதை எழுதினேன்.  நீங்கள் சொல்லி இருக்கும் பெட்டர்ஹாஃப் விஷயம் முற்றிலும் முற்றிலும் உண்மை.

      நீக்கு
  34. அ முன் 2012 (20/10/2012)

    அ பின் 2013 (20/10/2013)

    முன் ஜன்னலா...?
    பின் ஜன்னலா...?

    அ = அனுஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 20-10-2013 இல் என்ன பகிர்ந்திருந்தேன் என்று நினைவில்லையே...   நினைவுபடுத்துங்களேன் DD.

      நீக்கு
  35. //விரும்பியது கிடைக்கா விட்டால்....//

    ஹீஹீ :) கிடைச்சதை விரும்பிக்க வேண்டியதுதான் .
    சோப் விஷயத்தில் எப்பவும் நான் சந்திரிகா இல்லைன்னா மெடிமிக்ஸ் தான் :) இங்கும் கிடைக்குது .சிந்தால் சோப்பில் அரவிந்த்சாமி வரார்னு என் ப்ரெண்ட்ஸ் ஜொள்ளிட்டு வாங்குவாங்க :)  .சிந்தால் சோப்பை துணிகளுக்கில் வைக்கும் வழக்கம் இன்னமும் இருக்கு .போன வாரம் 6 சோப்பை பழையது வீசினேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உபயோகிக்காமலேயே வாசனைக்காக பீரோவில் வைத்திருந்தீர்களா?  அட!   வாங்க ஏஞ்சல்!

      நீக்கு
    2. யெஸ் அதில் ஒரு சென்டிமென்ட் உண்டு அம்மாவுக்கு சிந்தால் பழைய சிந்தால் பிடிக்குமதனால் அவங்க நினைவில்  வார்டரோபில் அப்பப்போ வாங்கி வாசனையை முகர்ந்து அப்புறம் வீசிடுவேன் 

      நீக்கு
  36. விவா :) 19 வருஷம் முன்னாடி :) என் மகளுக்காக  விவா குடிச்சேன் .பால் வாசனையே பிடிக்காது வெறும் தண்ணியில் கலந்து குடிப்பேன் இந்த விவா மட்டுமே அப்போதைய ஒரே பானம்  எனக்கு .தேநீருக்கும் காபிக்கு டாக்டர் தடா போட்டிருந்தார் .பசியெடுக்கும்போதெல்லாம் விவா தான் அதுக்கப்புறம் தொடறதில்லை விவா .எனக்கென்னமோ இந்த HOT சாக்லேட் ட்ரிங்கிங் சாக்லேட் போர்ன்விட்டாலாம் பிடிப்பதில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காலையும் மாலையும் காஃபி!  காலை இரண்டாவது டோஸ் தேநீர்!  இரவு படுக்கப்போகும் முன்பு விவா!  விவா கிடைக்காததால் தாடி வளர்க்கத் தொடங்கி விட்டேன்!!!

      நீக்கு
    2. //விவா கிடைக்காததால் தாடி வளர்க்கத் தொடங்கி விட்டேன்!!!// - மோதிக்கும் அதே காரணம் இருக்குமோ?

      நீக்கு
  37. ஹாஹா மதன் ஞானி .அப்போவே ஸ்மார்ட் கார் ஐடியா தோணியிருக்கே .ட்ரெய்லரில் மரங்களை இல்லைன்னா மற்ற சாமான்களை கொண்டுபோறதுபோல் மாமியார் :)))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   இப்போது T20 கிரிக்கெட்டில் cheeer girls வருகிறார்கள் அல்லவா. அதை மதன் 76 லேயே ஜோக்காகப் போட்டிருந்தார்.

      நீக்கு
  38. ஸ்ஸ்ஸ் யப்பா எவ்ளோ பிளாஸ்டிக் பயன்பாடு ஸ்விக்கியில் கர்ர்ர்ர் .

    பதிலளிநீக்கு
  39. தனித்திரு விழித்திரு கவிதை நல்லா இருந்தாலும் ரசிக்க முடியலை .யாருமற்ற முதியோர் கண்முன் வந்துபோறாங்க :( 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உங்களை பாதிக்கிறது என்பதே கவிதையின் வெற்றிதானோ!!!!

      நீக்கு
  40. உண்மை
    சிறுவயதில் விரும்பிய பல பொருட்கள் இன்று இல்லாமல் போய்விட்டன

    பதிலளிநீக்கு
  41. கேட்பரீஸ் இத்தனை விளம்பரங்கள் வந்திருக்கா !!! நல்லா இருக்கு ஆனா எனக்கு நம்மூர் கேட்ப்ரிஸ் சுவை இங்கே கிடைக்கலை .  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் எனக்கு அதன் சுவை பிடிப்பதில்லை!  விளம்பரங்கள் மட்டும் ரசனை!

      நீக்கு
  42. ~விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக, கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பிடக்கூடாது”.. எங்கட கண்ணதாசன் அங்கிள் சொன்னவராக்கும்:)..

    ஊரில என்ன பாவித்தோம் என நினைவிலில்லை ஆனா இங்கு அப்பப்ப பாவித்தது...yardley talcum powder.. இப்ப நாங்கள் பவுடரே உபயோகிப்பதில்லை, கிறீம் மட்டும்தான்.

    சோப் எனில் இலங்கையில் லக்ஸ் சோப் தான்.. இங்கும் கிடைக்கிறது இடைக்கிடை வாங்குவோம், ஆனா இங்கு உடம்பு வறண்டு விடுவதனால் நாம் பாவிப்பது டவ் dove சோப் தான், அது போட்டால் ஒயிலியாக இருக்கும் ஸ்கின்.

    ஆனா எனக்கு அப்பவும் இப்பவும் மிக மிகப் பிடித்தது சாண்டல்வூட் சோப்... ஆஹா என்னா ஒரு வாசம், மஞ்சள் கட்டியாக ஓவல் சேப்ல இருக்குமே[முட்டையின் மஞ்சள்கருப்போல ஒரு நிறம்).. அந்த சேப்பும் அதன் வாசனையும் சொல்லி வேலையில்லை, ஆனா அது இங்கு கிடைப்பதில்லை, கனடாவில் போனால் வாங்குவோம். நீங்க போட்டிருக்கும் பாமோலிவ் பெரிசாக நமக்குப் பிடிப்பதில்லை, இதைவிட டஃப் சோப் வாங்கிப் பாருங்கோ நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா..   கண்ணதாசன் எல்லாவற்றுக்கும் விடை சொல்லி இருக்கிறார் பாருங்கள்டவ் சோப் வாங்கி பாஸ் உபயோகிக்கிறார்.  அவருக்கும் இருக்கும் பிரச்னைகளுக்கு அது உதவியாக இருக்கிறது!

      நீக்கு
  43. ஆவ்வ்வ்வ் விவா அங்கு கிடைக்குமோ? அது இலங்கையில்தான் கிடைக்கும் என நினைத்திருந்தேன்.. நாங்கள் வளர்ந்ததே விவா, நெஸ்டமோல்ட் குடிச்சுத்தான்.. இப்பவும் நான் நெஸ்டமோல்ட்டைக் கை விடவில்லை, தமிழ்க் கடையில கிடைக்கிறது, விவாவை விட சுவை அதிகம்.. விவாவும் கொரோனாவுக்கு முன்பு கிடைத்தது, பின்னர் வரத்தில்லை, இனி வரலாம்.

    ஹோர்லிக்ஸ் பெரிசா சுவை இல்லை.. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சக்கரை என்பதைப்போல, நெஸ்டமோல்ட், விவா கிடைக்காட்டில்தான் ஹோர்லிக்ஸ் வாங்குவோம்.. அதிலும் ஒரிஜினல் மட்டும்தான் சுவையாக இருக்கிறது, ஏனையவை சுவை குறைவு..

    நெஸ்டமோல்ட் இந்தியாவில் கிடைக்காதென்றே நினைக்கிறேன், அமேசனில் ஆனை விலையில் விற்கிறார்கள், ஆனா நீங்கள் நெஸ்டமோல்ட் குடிச்சால் விடவே மாட்டீங்கள்.. காணி பூமி வித்தும் குடிப்பீங்கள் ஹாஹாஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவா இங்கு கிடைக்கிறதா என்று கேட்டு விட்டீர்களே...   மறுபடியும் என்னை சோகம் சூழ்கிறது!!!  நெஸ்டோமால்ட் குடித்ததில்லை.  இங்கு கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

      நீக்கு
    2. அப்போ விவா நெஸ்டோமால்ட் நகலா?

      நீக்கு
    3. ///Nothing beats Nestomalt///
      Very true
      ........................
      No,.... Nestomalt’s brother😁

      நீக்கு
  44. கவிதை தப்பாக இருக்குதே..:)) சாரல் எனில் மழைத்தூறல்.. அப்போ வாயைத் திறந்தால் எச்சில் தெறிக்குமோ.. ஹையோ ஆண்டவா.. இப்படி ஆரும் பேசினால் அருவருக்குமே ... அதைப்போய் அன்பே... ஆருயிரே எண்டெல்லாம் கூப்பிடுறார் ஸ்ரீராம் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடன் சொன்னால்தானே மாற்றிக் கொள்வார்கள் அன்புள்ள அதிரா!   அதனால்தான் அன்பே ஆருயிரே!     அடுத்த கவிதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...!

      நீக்கு
    2. ஓ ... அன்பால திருத்துறாராமாம்ம்ம்ம்... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் ஹா ஹா ஹா

      நீக்கு
    3. இங்கு தேடிப்பார்த்தபோது நெஸ்டோமால்ட் கிடைக்கவில்லை.  அப்படி ஒரு பால் பௌடர்தான் கிடைக்கிறது!

      குறிப்பு :  மேலே ஸ்மைலி போட்டிருக்கும் இடத்தில் வரவேண்டிய பதில் இது!  அந்த ஸ்மைலியை இங்கு இறக்கிப் பார்த்துப் புன்னகைக்கவும்!

      நீக்கு
  45. தில்லி வந்த பிறகு Aramusk என்று ஒரு சோப் பயன்படுத்தத் துவங்கினேன். சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கவே இல்லை. இப்போது மீண்டும் கிடைக்கிறது - ஆன்லைன் தளங்களில் மட்டும்!

    வெட்டி அரட்டையின் மற்ற பகுதிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  46. உங்கள் தனித்துவமான ரசனையைப் புரிந்திடாத தயாரிப்பாளர்கள்.. விடுங்கள்..:)!

    ஹார்லிக்ஸ் என்றாலே காய்ச்சலுக்கானது எனும் உணர்வு எனக்கும் தங்கைகளுக்கும் உண்டு:).

    தாத்தாவின் கனத்த தனிமை நம் மனதையும் கனக்கச் செய்கிறது.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் தனித்துவமான ரசனையைப் புரிந்திடாத தயாரிப்பாளர்கள்.. விடுங்கள்..:)!//

      ஹா..  ஹா..  ஹா....

      //தாத்தாவின் கனத்த தனிமை நம் மனதையும் கனக்கச் செய்கிறது.//

      நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!