புதன், 23 டிசம்பர், 2020

நடிகர்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடுமா?

 

கீதா சாம்பசிவம் : 

நம்மால் திரைப்படத்தைத் தாண்டி யோசிக்க முடியவில்லையே ஏன்?

# கலியுகத்தில் நடன் விடன் காயகன் செல்வாக்கு ஓங்கி இருக்கும் என்று சொல்லி வைக்கப் பட்டிருக்கிறதாம். வேதவாக்கு பொய்க்கலாகாதல்லவா ?

& திரைப்படத்தைத் தாண்டி ---- என்றால் என்ன? எந்த திரைப்படம்? அதை ஏன் தாண்டவேண்டும்? 

திரைப்பட நடிகர்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடுமா?

# நல்லவராகவும் வல்லவராகவும் திரையில் தோன்றியவர்கள் நிஜவாழ்விலும் அப்படியே என நம்புவது மனித சுபாவம்.

& ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு எல்லோருமே ரூபாய்க்கு மூன்று படி - வந்த பிறகு --- என்னைப் பிடி, உன்னைப் பிடி !!

நடிகர்களை தெய்வமாக வணங்கும் பழக்கம் எப்போது முதல் ஏற்பட்டது?

# என் டி ஆர் , எம் ஜி ஆர் முடி சூட்டலுக்கு முன்பே..

& நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் சதவிகிதம் மிகவும் அதிகமாக இருந்த நாட்களில் ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கின்றேன். 

நெடுந்தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தன்மையை இழந்தே காணப்படுகிறார்கள். அதை ரசிக்க முடிகிறதா?

# அதிகப் பிரசங்கிக் குழந்தைகளை ரசிப்பது கடினம்.

& காக்கா முட்டைகள் ரொம்ப அபூர்வம். 

ஒரு நெடுந்தொடரில் இரண்டு சிறுவர்கள் ஐந்து, எட்டு வயதுக்குள்ளாகப் பெரியவர்கள் போல் சதித்திட்டம் தீட்டித் தங்களுக்கு வேண்டாத பெண் குழந்தையைப் பழி வாங்க நினைக்கிறார்கள். இது சரியல்ல என்று தெரிந்தும் ஒளிபரப்பாவது சரியா?

# தொடர்களின் நோக்கம் விளம்பரங்கள் வாயிலாக வருமானம்.  இதில் பொறுப்புணர்வுக்கு இடமில்லை.

& நல்ல வேளை - நான் எந்த தொடர்களும் பார்ப்பதில்லை. 

பானுமதி வெங்கடேஸ்வரன் :

சமீபத்தில் எதைப்பார்த்து/கேட்டு/படித்து இஃகி இஃகி என்று சிரித்தீர்கள்?

# வாய்விட்டு ச் சிரிக்கும்படியாக எதுவும் அமையவில்லை.

& வாட்ஸ் அப்பில் வந்த சில ஜோக்குகள் படித்து சிரித்தேன் - ஆனால் 'இஃப்கி இஃப்கி' என்றெல்லாம் சிரிக்கத் தெரியாது. ஓசைகளுக்கு மொழிவடிவம் கிடையாது. 
சூது,வாது என்கிறார்களே? சூது தெரியும் வாது...?

# வாது என்றால் வாதம். ஏதோ ஒன்றைக் குரங்குப் பிடியாக வைத்துக்கொண்டு வீண் விவாதம் செய்ய அறியாத நபர். 

வாட்ஸாப் செய்திகளை ஃபார்வர்ட் செய்வதுண்டா? எப்படிப்பட்ட செய்திகளை, எந்த குழுவிற்கு ஃபார்வர்ட் செய்வீர்கள்?

# அதிகம் ஃபார்வர்ட் செய்வதில்லை. படிக்கும் புத்தகங்களில் மனதை நெருடும் ஈர்க்கும் விஷயங்களை குடும்பக் குழுவுக்கு அனுப்புவதுண்டு. நல்ல நகைச்சுவையையும் கூட.

& நான் சாதாரணமாக வாட்ஸாப் செய்திகளை ஃபார்வர்ட் செய்வதில்லை. ஏன் என்றால்,  செய்தியின் 'ஆதி மூலம்' யார் என்று தெரியாமல் - நமக்கு ஃபார்வார்டு செய்தவர் யாரிடமிருந்து வந்த ஃபார்வார்டு செய்தியை நமக்கு ஃபார்வார்டு செய்தாரோ,  அவருக்கே  ஃபார்வார்டு செய்து - அந்த ஃபார்வார்டு செய்தவர் ஒருவேளை இது என்னுடைய ஒரிஜினல் செய்தியோ என்று பயந்து என்னிடம் மன்னிப்பு கோரினால் நான் யாரிடம் மன்னிப்பு கேட்பது என்ற குழப்பம் வந்துவிடும். 

= = = = 

எங்கள் கேள்விகள் : 

1) If X x X = 2 X and Y x Y x Y = 9 Y, what is the value of 2XY ? 

2) இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்த மன்னன் பெயர் என்ன?

3) கரும்பு - இதன் பயோலாஜிகல் பெயர் என்ன? 

4) கீழ்வரும் கேள்வியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்: 

     " உங்கள் பெற்றோருக்கு நீங்க எத்தனையாவது குழந்தை?"

(இவ்வளவு கஷ்டமான கேள்விகளா என்று பயந்தவர்களுக்கு - அடுத்து சுலபமா வாழைப்பழத்தை உரிப்பது போல ஒரு கேள்வி)  

5) மனோதத்துவ கேள்வி : 

படம் பார்த்து பதில் சொல்லுங்க --- 


வாழைப்பழத்தை நீங்க எந்தப் பக்கத்திலிருந்து உரிக்க ஆரம்பிப்பீர்கள் ? 

அ ?

ஆ ? 

இ : இதுவரை வாழைப்பழம் உரித்ததில்லை. யாராவது உரித்துக் கொடுத்தால் மட்டும் சாப்பிடுவேன். 

ஈ : பழத்தை கத்தியால் வெட்டி, சின்ன துண்டுகளை உரிக்காமல் - ஒரு அமுக்கு அமுக்கி -- தோலிருக்க சுளை விழுங்கியாக ---- 

உ : வேறு வழிகள் ஏதேனும் இருந்தால் --- ---

= = = = 

67 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம்.
  கேள்விகளும் அருகிப் போனால்
  எல்லோருக்கும் நிறைய புத்தி வந்து விட்டது என்று
  ஆகிவிட்டது.:)

  பதிலளிநீக்கு
 2. நடன் விடன் காயகன், தி.ஜானகிராமன் உபயோகிக்கும்
  சொல் அழகு.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். புதிதாக வந்திருக்கும் கொரோனோ குழந்தைகளை அதிகம் தாக்குவதாய்ச் சொல்கிறார்கள். அனைவரும் இந்தக் கொடிய தொற்றிலிருந்து விடுபட வேண்டும். முக்கியமாய்க் குழந்தைகளை கவனமாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும். உலக க்ஷேமத்திற்காகப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. கேள்வி, பதில்கள் அருமை. திரைப்படங்களைத் தாண்டி என்று கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லி இருப்பீங்க என்று யொசிச்சுண்டு இருக்கேன். :))))

  பதிலளிநீக்கு
 5. வாழைப்பழத் தோல்களைச் சாப்பிடுபவர்களைப் பார்த்திருக்கேன். நாம் சாப்பிட உரித்துப் போட்ட தோல்களைக் கூட எடுத்துச் சாப்பிடுவார்கள். நான் பொதுவாகக் காம்புப் பகுதியில் இருந்தே (அ) உரிக்க ஆரம்பிப்பேன். எப்போதேனும் அடிப்பகுதி!(ஆ) அது சரி, இந்த பதில் சொன்னதுக்கு என்ன பரிசு?

  பதிலளிநீக்கு
 6. நகைச்சுவை ஃபார்வர்ட் சில சமயம் நன்றாகத் தான் இருக்கும்.
  இங்கே பதிவிட்டிருக்கும்
  ஜோக்ஸ் நன்றாகத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. இரண்டாம் புலிகேசி? நான் தோற்கடிக்க வில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்த மன்னன் பெயர் என்ன? // நான் தோற்கடிக்க வில்லை.// நீங்க மன்னன் இல்லை; மன்னி.

   நீக்கு
 8. வாழைப் பழத்தை மேலிருந்து உரித்து, பழத்தின் மேல் கை படாமல் சாப்பிடுவோம்.

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. வாட்சப்பில் வந்த நகைச்சுவைகள் ரசிக்க வைத்தன. கடைசி நகைச்சுவைகள் கண்ணுக்குத் தெரியாமல் இருந்ததால் படிக்கவே முடியவில்லை.

  வாழைப்பழத்தை ஏதோ ஒரு பழைய ஒரு படத்தில் நடிகர் நாகேஷ் ." எந்தெந்த பாகத்தில் என்ன சத்து இருக்கோ யார் கண்டது.?" என்ற வசனத்தை கூறிக் கொண்டே அப்படியே வாழைப்பழத்தை முழுதாக தோலுடன் சாப்பிடுவார். அப்போதுதான் அதன் தோலில் ஏதாவது சத்து இருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்களோ? என்ற கேள்வி எனக்குத் தோன்றும்.

  நானும் முக்கால்வாசி தோல் பகுதியிலிருந்து (எல்லா வாழைப்பழத்திலும் அப்படி எடுக்க வராது.) எடுத்து சாப்பிடுவேன். பழத்தின் இனிப்பை விட அதன் துவர்ப்புடன் கூடிய இனிப்பு நன்றாக இருக்கும்.

  ஆமாம்.. அதில் அ,ஆ க்கு எந்த விளக்கமும் தராத பட்சத்தில் எப்படி அதற்குரிய பதில்களை சொல்வதாம்.?:) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளக்கம் எல்லாம் அடுத்த வாரம்தான். நீங்க அ பகுதியிலிருந்து உரிக்க ஆரம்பிப்பீர்களா அல்லது ஆ வா?

   நீக்கு
  2. குழப்பந்தான்...(அ..வும், ஆ..வும் எதுவென தெரியாத வரை...) பொதுவாக காம்புள்ள பகுதியை உரித்து சாப்பிடுவதுதான் அனைவருக்கும் வழக்கம். அனைகமாக எளிதாக என்று சொல்லி கேட்கப்பட்ட இந்த வாழைப்பழ வினாவிற்கே அடுத்த வார மனோதத்துவ நிபுணரின் வருகையா? அவசியம்தான்.. போலிருக்கிறது. ஹா.ஹா.ஹா.

   நீக்கு
  3. அ மற்றும் ஆ படத்தில் காட்டியுள்ளோம்.

   நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

   ஆகா.. இதுவரை நான் கவனிக்கவேயில்லையே...! தவறுக்கு வருந்துகிறேன். அப்படியானால் படத்தின் பிரகாரம் நான் ஆவன்னாதான்...நன்றி.

   நீக்கு
  5. கமலா ஹரிஹரன் மேடம் சரியாகச் சொல்லவில்லை.

   மொந்தன் வாழைப்பழம் (அதாவது சமையலுக்கான வாழைக்காய் பழுத்தால் வரும் வாழைப்பழம்) தோலின் உள்பகுதியைச் சாப்பிடமுடியும். சில சமயங்களில் நேந்திரன். மற்ற பழங்களின் தோலில் ஒண்ணும் இருக்காது.

   நீக்கு
 11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  எங்கெங்கும் நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 12. மிகச் சிறப்பான கேள்விகள்/ பதில்கள்..

  பதிலளிநீக்கு
 13. வாழைப் பழத்தின் காம்பு தான் மேல் பகுதி ..

  பதிலளிநீக்கு
 14. 1. 6.

  2. இரண்டாம் புலகேசியை(இதுதான் சரியான உச்சரிப்பாம்) போரில் தோற்கடித்த மன்னன் நரசிம்ம வர்ம,பல்லவன் இல்லையென்றால் ஹர்ஷவர்தன்.

  4. In birth order which place or position will you occupy?

  பதிலளிநீக்கு
 15. கேள்விகளுக்கு விடை

  1. 2XY = 12.
  2. புலிகேசியை வென்றவன் நரசிம்ம பல்லவன். சிவகாமியின் சபதம்.

  3. கூகிள் (ஆண்டவர் சரணம்) சொன்னது SACCHARUM OFFICINARUM. எனக்கு லத்தீன் எல்லாம் தெரியாது.

  4. How many elder brothers and sisters do you have? இது சரியில்லை என்றாலும் பரவாயில்லை. (உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்)

  5. தோலிருக்க சுளை முழுங்கி. பழத்தின் நீளவாக்கில் கீறி பழத்தை முழுதாக எடுத்து சாப்பிடுவது. நேந்திரன் பழங்களுக்கு இது பொருந்தும்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  2ம் புலிகேசியை தோற்கடித்தது முதலாம் நரசிம்ம வர்மர். படையெடுத்து (நான்) வருவதற்கு சற்று தாமதமாகி போனதால் வெற்றி முரசுகள் கொட்டி விட்டன. ஹா.ஹா.ஹா. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. WhatsApp-ல் வந்தவை சிரிக்க வைத்தன... அனுப்பும் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுகள்...!

  உ : ம்ஹிம்...

  ஊஊ : முக்கனிகளை பார்க்க மட்டுமே அனுமதி...!

  பதிலளிநீக்கு
 18. 5. பெரும்பாலும் அ தான். வெகு சில சமயங்களில் ஆ.

  பதிலளிநீக்கு
 19. மக்களே கேள்வி கேளுங்கள். கேள்விகள் இல்லையென்றால் அல்ஜீப்ரா, ஆங்கில இலக்கணம், சரித்திரம் என்று என்னவெல்லாமோ வருகிறது :((

  பதிலளிநீக்கு
 20. அடுத்த புதனுக்கான கேள்விகள்:
  1. உங்களுக்கு பிடித்த ராகம் எது? ஏன்?

  2. வாய்ப்பாட்டை விட வாத்திய இசையை ரசிப்பதற்கு நுட்பமான ரசனைவேண்டும் என்று தி.ஜானகிராமன் சொன்னதை ஒப்புக் கொள்கிறீர்களா?

  3. எந்த வாத்திய இசை பிடிக்கும்?
  a. நாதஸ்வரம்
  b. வீணை
  c. வயலின்
  d. புல்லாங்குழல்
  e. கிடார்
  f. மாண்டலின்
  g. கீ போர்ட்


  பதிலளிநீக்கு
 21. சஞ்சய் சுப்பிரமணியம் நல்ல வித்வத் உள்ளவர்தான். அவருடைய ஸ்வர ப்ரஸ்தாரங்கள் மெச்சத் தகுந்ததுதான், இருந்தாலும் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" பாடலுக்கு ஸ்வரம் பாடுவது அந்தப் பாடலின் மூடை கெடுத்து விடவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில பாடல்களுக்கு ஸ்வரம் போடாமல் பாடுவதே சிறப்பாக இருக்கும். பானுக்கா நீங்க சொல்றாப்ல ஸ்வரம் போட்டால் மூட் கெடும்....உணர்வோடு பாட வேண்டிய சில பாடல்களுக்கு ஸ்வரம் போடுவது சங்கீத வித்தையைக் காட்டலாம் ஆனால் அந்த ஃபீல் மிஸ் ஆகிவிடும்.

   கதனகுதூகலம் ராகத்திற்குச் ஸ்வரம் அதுவும் வேகமாகப் போடும் போது அந்த மகிழ்ச்சி, துள்ளல் நம்மையும் தொற்றிக் கொள்ளும்!

   கீதா

   நீக்கு
 22. 1.கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்களா?
  2.இப்போதெல்லாம் பொதுமக்கள் இல்லாமலேயே திருவிழாக்கள் நடைபெறுவதை ஆதரிக்கிறீர்களா?

  3.இப்போது திருமணங்களில் நாதஸ்வரத்துக்குப் பதிலாகச் செண்டை, மேளம் வைக்கிறாங்களே, உங்களுக்கு அதன் தாத்பரியம் தெரியுமா? புரிந்து கொண்டிருக்கிறீர்களா?
  4.மெல்லிசைக்கச்சேரி, கர்நாடகக் கச்சேரி எது திருமணங்களில் நன்றாக இருக்கும்?
  5.ரிசப்ஷனில் பிள்ளை/பெண் வீட்டுக்காரர்கள் சேர்ந்து திருமண ஜோடியோடு ஆடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அது நல்லதா?
  6.திருமண பந்தத்தின் உண்மையான அர்த்தமே மாறிக்கொண்டு ஒப்பந்தமாக மாறி வருவதை வரவேற்கிறீர்களா?
  7.அடுத்த தலைமுறைத் திருமணங்கள் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கேள்விகளுக்கு 2021 ஆம் ஆண்டு வரும் முதல் புதன்கிழமையில் பதில்கள் அளிப்போம்.

   நீக்கு
 23. கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். தொடரட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 24. மளிகைக் கடைக்கார்ரும் கடவுளிடம் வியாபாரம் நல்லா நடக்கணும்னு வேண்டுவார். ஆஸ்பத்திரிகள், டாக்டர்கள், மயானத் தொழிலாளர்கள், டாஸ்மாக் என பலதரப்பட்டவர்களும் கடவுளிடம் அவரவர் தொழில் தொழில் நல்லா நடக்க வேண்டிக்கொள்ளும்போது கடவுள் என்ன நினைப்பார்?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!