திங்கள், 14 டிசம்பர், 2020

திங்க'க்கிழமை : பொரிச்ச இட்லி

 அஞ்சு இட்லியை வச்சு அஞ்சுபேர் பசியாற முடியுமா?  முடிந்தது!


மழைபெய்துகொண்டிருந்த காலை.  கரண்ட் இல்லை.

பாஸ் பக்கத்தில் வந்தார்.  "மாவு கம்மியாதான் இருக்கு.  காலை என்ன செய்யலாம்?"

வீட்டில் ஏழு ஜீவன்கள் இருந்தன - என்னையும் சேர்த்து!

"ரவா கலந்துடு..."

"எங்கே இருக்கு?  மளிகை லிஸ்ட் போட்டாச்சு...  பிரவீண் இன்னும் கொண்டு வரலை"

சற்றுநேரம் மௌனம்.  "சும்மா இருந்தால் எப்படி?"

"என்ன செய்யச்சொல்றே?  விடு...  சமையல் முழுசா சமைச்சுடு..  நேராய் சாப்பாடே சாப்பிட்டுடலாம்"

"இட்லி சாப்பிட்டு நாளாச்சு...   எனக்குப் பிடிக்கும்..."  - நடுவில் சந்தர்ப்பம் தெரியாமல் காது கேட்காத மாமியார்!

"பத்து இட்லி வார்த்துடலாம்...  மூன்று பசங்களும் மேகி பார்த்துக்கட்டும்..." - பாஸ்.   

எப்போதும் போல கேள்வியும் அவரே..  பதிலும் அவரே...

"சரி...  நானும் மேகி சாப்ப்பிட்டுடறேன்"

இட்லி வார்த்து, கொஞ்சநேரம் கழித்து மாமியார் அனவுன்ஸ் செய்தார்...  "நான் மூன்று இட்லி எடுத்துண்டேன்!"

பாஸ் "எனக்கு ரெண்டு போதும்" என்றார்.  அஞ்சு இட்லி மீதி.  அண்ணனுக்கு அதைக் கொடுத்து விடலாம்.

மேகி செய்யப்போன இளைய மகன் அறிவித்தான் "மேகி காலி போல...   இல்லவே இல்லை!"

இருப்பது அஞ்சு இட்லி.    கடை ஏதும் இருக்குமா?  தெரியவில்லை.  ரவா, அரிசிமாவு எதுவும் கைவசம் இல்லை.  என்ன செய்ய!

நான் களத்தில் இறங்கவேண்டிய நேரம் வந்து விட்டது!  கீதா அக்கா சொல்வது போல திப்பிசம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது!


இரண்டு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி எடுத்து பொடியாய் நறுக்கிக்கொண்டேன்.  இரண்டு பல்  பூண்டு நசுக்கிப் போட்டேன்.  (நெல்லை மன்னிக்கவும்!) வாணலியில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கத் தொடங்கினேன்.  தேவையான உப்பு, காரப்பொடி சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து வற்ற வற்ற அதை தண்ணீர் விட்டு, தண்ணீர் விட்டு வதக்கிக்கொண்டே 

இருந்த ஐந்து இட்லிகளை கத்தியால் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டேன்.  அவற்றை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டேன்.  கொஞ்சம் ப்ரெட் துண்டங்கள் இருக்க அவற்றையும் அதே எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டேன்.


நன்றாக மையாக வதங்கியிருந்த வெங்காயம் தக்காளி  க்ரேவியில்  இவற்றைக் கலந்து திருப்பி விட்டு கொத்துமல்லியைப் பொடியாய் நறுக்கித் தூவி விட்டேன்.


பாருங்க...   இட்லி எவ்வளவு ஆரோக்யமான பண்டம்!  'அய்யே...   இட்லியா' என்று முகம் சுளித்து அதை அப்படியே சாப்பிட மறுக்கும் மகன்கள் கூட இப்படிச் செய்தால் உடனே சரி என்று காலி செய்து விடுகிறார்கள்.  ஆளுக்கு ஒரு கப்.   வயிறு 'டம்' என்று நிறைந்து விட்டது.

கடையில் சில்லி இட்லி ஃப்ரை என்று வாங்கி இருக்கிறோம்.  வேறு ஏதோ பெயரிலும் வாங்கி இருக்கிறோம்.  அதில் எல்லாம் இட்லி சொதசொத என்றுதான் இருக்கும்.  இதில் மொறுமொறுப்புடன் லேசாக வெங்காயதக்காளி க்ரேவியில் நனைந்து சாப்பிடவும் நன்றாய்தான் இருந்தது.

79 கருத்துகள்:

 1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்து எனினும் வேண்டற் பாற்றன்று..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. இட்லி இல்லாமல் Bread துண்டுகளைக் கொண்டு இவ்வாறு செய்வதுண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும்.  கொரோனா காலத்தில் அது மாலை வேளைகளில் லைட் டிஃபன்!

   நீக்கு
  2. அதாவது ஏப்ரல் முதலான கொரோனா லாக் காலங்களில்!

   நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
   ஆரோக்கியமே பிரதானமாக வாழ்க்கை அமைய வேண்டும்/ இறைவன் அருள் கிடைக்கட்டும்.

   நீக்கு
  4. வணக்கம் வல்லிம்மா...   ஆரோக்ய பண்டத்தைக் கெடுத்து வைத்திருக்கும் படங்களை பார்த்து ஆரோக்கியமே பிரதானமாக அமைய வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறதோ!   ஹிஹிஹிஹி...

   நீக்கு
  5. அச்சோ இல்லம்மா.
   சில நாட்களாக என்னைப் படுத்தும் தொந்தரவுகள்
   விலக வேண்டி அப்படி எழுதினேன்.

   நீக்கு
  6. சும்மா  ஜோக்குக்குதான் சொன்னேன்மா...

   நீக்கு
 3. மிக மிக அருமையான டிஃபன்.
  ஐந்து இட்லியும் ப்ரெட்துண்டுகளும்
  அனைவருக்கும் நிறைவாகப் போதியதா?
  .

  வெகு இனிமை. பகிர்ந்து உண்டு வாழ்தல்
  இந்த நாளுக்குப் பொருந்தும்.

  வெகு அழகாக யோசனை செய்து நிறைவேற்றி இருக்கும்
  விதம் சூப்பர்.
  மிகச் சுவையாக இருந்திருக்கும்.
  செய்வதையும் சிரமம் பார்க்காமல் படங்களுடன் கொடுத்திருப்பது
  அதை விட அருமை.
  வாழ்த்துகள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா.  எண்ணெயில் பொரிவதால் கொஞ்சம் போதும்.  செய்யும்போதே பதிவிட்டு விடலாம் என்று யோசித்து படங்கள் எடுத்து விட்டேன்.  மேலும் என் இளைய மகன் தன் நண்பர்களுக்குச் சொல்ல நான் செய்பவற்றை எப்போதுமே படம் பிடித்து விடுவான்.  சென்ற பதிவில் சப்பாத்தி மேல் சப்பாத்தி வைக்கும்போது காத்திருந்து புகைபபடம் எடுத்தவன் அவன்தான்!

   நீக்கு
  2. வெகு சுவாரஸ்யம். குழந்தைக்கு வாழ்த்துகள் மா.

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  நீங்கள் இட்லியை சுவையான டிபனாக மாற்றிய திறமை வெகு அருமை. பாராட்டுக்கள்.
  ஆமாம்... உங்களுக்கெல்லாம் அதுவும், காலை நேரத்தில் எப்படி 2,3 என்ற கணக்கில் இட்லி போதும்...! மதியம் 12 மணிக்குள் சாப்பிட்டு விடுவீர்களோ ? இல்லை, இட்லியின் அளவு பெரிதாக சற்று திக்காக இருக்குமோ?

  இட்லி பொதுவாக தினமும் சாப்பிடுவதே யாருக்கும் பிடிக்காத விஷயம்.(என்னைத்தவிர்த்து) ஆனால், நான் அம்மா வீட்டிலிருக்கும் போது, முக்கால்வாசிக்கும் மேலாக தினமும் காலை இட்லி சாப்பிட்டே வளர்ந்தவள். அதனால் நான் ஒரு "இட்லிப்பிரியை." அதனால்தான் மேற்கூறிய சந்தேகங்களை கேட்டேன்.

  நீங்கள் செய்து அசத்தியிருக்கும், இட்லி ஃபிரைடு படங்களுடன் அழகாக உள்ளது. கண்டிப்பாக வயிறு நிறைந்திருக்காது. ஆனால், இருப்பதை பங்கிட்டு நிலைமையை சமாளித்த பாங்கு அருமை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை நேரத்தில் அதிகம் போனால் 3 இட்லிகள் சாப்பிடலாம். அதுக்கு மேல் சாப்பிட்டால் அது காலை உணவு இல்லை. மதிய நேரச் சாப்பாடாகிவிடும். :))))) ஆனால் எங்க மாமனார் எல்லாம் இட்லிப் பிரியர் என்பதால் தினம் தினம் இட்லி பண்ணிக் கொடுத்தாலும் ஆசை தீராது. அக்கம்பக்கம் யார் வீட்டிலாவது இட்லி எனில் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுப்பார்.

   நீக்கு
  2. கமலா அக்கா, கீதா அக்கா...

   இட்லி பஞ்சு போல இருந்து, நல்ல சட்னி, சாம்பார் என்று துணைப்பொருட்கள் அமைந்து விட்டால் வித விதமான காம்பினேஷனில் அடிஅடி என்று அடித்து விட்டு மிளகாய்ப்பொடியில் புரட்டி எடுத்தும் இரண்டு இட்லி சாப்பிடலாம்!  நல்லெண்ணெய் முக்கியம்!  எங்கள் வீட்டு இட்லி சுமார் ரகம்.  சமீப காலங்களில் உளுந்தில்ஏதோ குறைபாடு உள்ளது...(நோ...நோ...   ஆடத்தெரியாத பழமொழி எல்லாம் நினைவுக்கு வரக்கூடாது..  தப்பு...)  எனவே பழைய மாதிரி தோசையே வரமாட்டேன் என்கிறது...

   நீக்கு
  3. வணக்கம் சகோதரரே சகோதரிக்கும் வணக்கம்.

   மாலை சகோதரியின் கமெண்ட்ஸ் பார்த்ததும் இதேதான் நானும் சொல்ல நினைத்தேன்.பொதுவாக ஹோட்டல் இட்லியென்றால், இரண்டுக்கு மேல் உள்ளே போகாது. சிலவிடங்களில் பஞ்சு போல் இருக்கும் அப்பவும் மூன்றுக்கு மேல் சாப்பிடுவது கஸ்டமாகத்தான் இருக்கும். (அதன் பின் அங்கு அனைவரும் என்ன சாப்பிடுகிறார்கள் என கண்கள் நோட்டமிட்டு,
   ஒரு பூரி செட், இல்லை விதவிதமான தோசைகளில் ஏதேனும் தேர்வு செய்து ஒன்று என சாப்பிட்டு விடுவோம். பிறகு காப்பி இல்லாது, காலை (ஹோட்டலுக்கு வெளியே) கீழேயே வைக்க முடியாது என்ற உணர்வு வேறு வந்து தொலைக்கும். அது வேறு விஷயம்.. அப்புறம் பில்லை பார்த்த பின் இதெல்லாம் தவிர்த்திருக்கலாமோ என்ற எண்ணமும்.. உடனே, அட.. இன்று ஒருநாள்தானே.. என்ற சமாதானமும் எழுவது இயற்கை.) ஆனால். வீட்டு இட்லி ஒரு நாலைந்தாவது நீங்கள் சொன்னபடி இருந்தால் சாப்பிட்டு விடுவோம். அப்போது மதிய உணவைப்பற்றிய கவலை மேகங்கள் ஏதும் சூழாது. அப்பாடா... சொல்வதற்குள் இரண்டு இட்லி சாப்புட வேண்டும் போல் ஆகி விட்டது. எங்கே போவது? உங்கள் வீட்டு தயாரிப்பை பார்த்து ரசித்து பார்த்து சாப்பிட்ட சந்தோஷத்துடன் இருக்க வேண்டியதுதான்.. ஹா. ஹா. ஹா.

   நீக்கு
  4. ஹா...   ஹா...  ஹா...  வீட்டு இட்லியும் பஞ்சு மாதிரி இருக்க வேண்டும்!

   நீக்கு
 6. மாவு கம்மியாத்தான் இருக்கு. கரண்ட் இல்லை... வெளில மழை... மளிகை சாமான்கள் இன்னும் வரலை...

  கலவர சிச்சுவேஷன்தான்.

  இரவு மோதி (மோடி ன்னாத்தான் அவர் பேரை எழுதின மாதிரியே இருக்கு) ஊரடங்கு என்று சொன்னவுடன், பசங்க வண்டியை எடுத்துக்கொண்டுபோய் இரவு ஒன்பது மணிக்கு, ஐந்துகிலோ ஆட்டா மாவு பேக்கட், மூணு கிலோ சோனா மசூரி மிக அதிக விலையில், எண்ணெய் பாக்கெட் இரண்டு ஆகியவை வாங்கிக் கொண்டு வந்தது நினைவுக்கு வந்தது. ஆரம்ப ஒரு மாதங்கள் கொஞ்சம் செட்டிலாக கஷ்டமாக இருந்தது.

  இதுபோல பஹ்ரைனில் இருந்தபோது, ப.சிதம்பரம் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்தபோது, தேவையில்லாமல் மனதில் கலவரம் உண்டாகி தேவையில்லாமல் 70-100 கிலோ ஸ்டாக் வைத்ததும் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாமாவையும் இட்லியாக வார்த்துக் கொண்டு வெங்காயம் நறுக்கிச் சேர்த்து இட்லி உப்புமாவாகப் பண்ணி இருந்தாலும் எல்லோருக்கும் வந்திருக்கும். ஆனால் ஸ்ரீராமின் மாமியார் வெங்காயம் சேர்க்க மாட்டார். இதுவும் நல்ல யோசானை தான். இட்லியை அப்படியே நல்லெண்ணெயில் வறுத்துக் கொண்டும் சேர்த்திருக்கலாம். பொரிக்காமல்!

   நீக்கு
  2. இட்லிஉப்புமாவுக்கு எதுக்கு வெங்காயம் சேர்க்கணும்? பச்சை மிளகாய் வாசனையிலேயே நல்லாவே இருக்குமே.......

   நீக்கு
  3. நெல்லை..    நேரம் நீங்கள் சொன்ன அளவு பழைய நேரம் அல்ல...   நிவர் புயல் நேரம்!  நான் கூட ஏப்ரல் முதல் வாரத்தில் அரிசி ஏக்கமாக ஸ்டாக் செய்து கொஞ்ச நாள் கழித்து  அரிசியைக் காப்பாற்ற வெவ்வேறு முயற்சிகள் எடுக்க வேண்டி இருந்தது!

   நீக்கு
  4. கீதா அக்கா..  இட்லி உப்புமா செய்திருக்கிறோமே...   இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று முயற்சித்தது!

   நீக்கு
  5. //இட்லியை அப்படியே நல்லெண்ணெயில் வறுத்துக் கொண்டும் சேர்த்திருக்கலாம். பொரிக்காமல்!//

   இதுவும் முன்னர் செய்திருக்கிறோம்.  பொரித்தால் ஒரு கவர்ச்சி.

   நீக்கு
 7. நல்ல தமிழ் ஃப்ரைடு இட்லி. இருக்க பொரிச்ச இட்லினு தலைப்பு வச்சிருக்கீங்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொன்ன மாதிரி சொன்னால் இதுதான் எனக்கு தெரியுமே என்று தங்கவேலு ஜோக் மாதிரி ஆயிடுமே என்றுதான்!

   நீக்கு
 8. இன்று அமாவாசை. கீசா மேடம் மிக மெதுவா மத்யானத்துக்கு மேலத்தான் வருவாங்க போலிருக்கு.

  தோசை மாவை வைத்துக்கொண்டு அதை வைத்தே சேவை செய்யுமளவு திப்பிச எக்ஸ்பர்ட் ஆச்சே அவங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமாவாசை வேலைகள் முடிந்து சாப்பாடும் சாப்பிட்டாகி விட்டது. நேத்திக்கு விருந்தினர் வந்திருந்த காரணத்தால் நாள் முழுவதும் பேச்சு, வேலை என்று இரவு பத்து மணி வரை சரியாப் போச்சு! காலையில் அவங்க கிளம்பிட்டாங்க என்றாலும் எனக்கு அன்றாடக் கடமைகள் முடிக்க வேண்டி இருந்தது.

   நீக்கு
 9. இட்லி ஃப்ரைடு மிக்ஸ்ட் கலவை நல்லாத்தான் இருக்கு.

  எனக்கென்னவோ ஆறு இட்லிக்குண்டான மாவை பத்து இட்லியா உங்க பாஸ் வார்த்துட்டாங்களோன்னு சந்தேகம்.

  ஸ்டேப்பிள்ஸ்னு சொல்ற சில ஐட்டங்கள் ஸ்டாக் இல்லைனா சமையல் கஷ்டமாயிடும். எனக்கு கருவேப்பிலை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி எப்போதும் இருக்கணும். அவசரத்துக்கு கிழங்கு வகைகள், ஓரிரண்டு வெங்காயமாவது இருக்கும்படி பார்த்துப்பேன். இது தவிர, கடுகு, சீரகம், மிளகாய், உ பருப்பு, மாவு வகைகள் சில பருப்புகள் ஸ்டாக் மெயின்டெய்ன் பண்ணுவது நான்தான்.

  என்னுடைய ஆசைக்காக எப்போதுமே வெல்லம் ஜீனி தேவைக்கு அதிகமாக ஸ்டாக் பண்ணியருப்பேன்.

  மகள் பால், வெண்ணெய், மைதா இவைகள் ஸ்டாக்கில் இருக்கணும் என்பாள்.

  இவைகளையும் மீறி சென்றவாரம் ரவை மற்றும் உடைத்த உளுந்து ஸ்டாக்கில் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் சமையலறையில் சில பொருட்கள் எப்போதும் கட்டாயம் இருப்பில் இருக்கவேண்டும்.  அப்போதுதான் சமைக்கும்போது கைவரும்.  பாஸ் சொல்வார் "எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு செய்து பெயர் வாங்குவதில் என்ன இருக்கிறது?"

   நீக்கு
 10. அது யார் யார் ஏழு பேர்கள் என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள். 4 ப்ளஸ் ஒன்றுதானே என்று யோசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீ, பாஸ், மாமியார், இளவல்கள் இருவர், அண்ணன், அனுஷ். = 7.

   நீக்கு
  2. அனுஷுக்குக் கொடுத்துட்டா அண்ணா பையர் பட்டினியா? :))))

   நீக்கு
  3. அண்ணா மட்டும்தானே சொல்லியிருக்கார் பதிவில்!

   நீக்கு
  4. பசங்கள் மூன்று பேரும் என்று(ம்) சொல்லி இருக்கிறேனே...  

   நீக்கு
  5. // மூன்று பசங்களும் மேகி பார்த்துக்கட்டும்// ஓஹோ. இன்னொரு பையன் பிறந்துவிட்டான் போலிருக்குனு நெனச்சேன்.

   நீக்கு
 11. இட்லி மஞ்சூரியன் பிரெட் சேர்த்து. சாசுக்கு பதில் தக்காளி தொக்கு. பார்க்க நல்லாத்தான் இருக்கு. வேறென்ன வேண்டும்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான்...   பொரிச்ச இட்லின்னும் சொல்லலாம், இட்லி ஃப்ரைன்னும் சொல்லலாம்...   நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்!!!!

   நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

   நீக்கு
 12. ஆகமொத்தம் இயற்கையாய் பிறந்த இட்லியை ஆப்ரேஷன செய்து சட்னி ஆக்கிட்டீங்க...

  பதிலளிநீக்கு
 13. இன்று திங்கக்கிழமையா வியாழனாஎன்னும் சந்தேகம் வந்தது

  பதிலளிநீக்கு
 14. ஹும்ம் ஹூம்ம்ம் இட்லிக்கும் காவி கலர் அடிச்சிட்டீங்களே ஸ்ரீராம் சரி சரி பொரிச்ச இட்லி என்பதற்கு பதில் ஆன்மிக இட்லி என்று சொல்லாமோ ஹீஹீ நீங்கள் கம்பை தூக்குவதற்குள் நான் தூங்கப் போயிடுறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று ஏர்லைன்ஸ் ஹோட்டல் என்ற இடத்தில் (பெங்களூர்) மசாலா தோசை சாப்பிட்டேன் (அந்த ஹோட்டல் மசாலா, தமிழ்நாடு ஸ்டைல்னு சொன்னாங்க). தோசைல காவி நிறத்துல சட்னியைத் தடவியிருந்தாங்க.

   இனிமேல், சிவப்பு அரிசி மற்றும் கேசரி நிறமி இட்லி, தோசைக்குச் சேர்க்கணும்னு ஏற்கனவே சட்டம் போட்டாச்சான்னு தெரியலை.

   நீக்கு
  2. பெங்களூர் மசாலா தோசைகளில் தக்காளி சாஸ்தான் தடவுகிறார்கள். சட்னி அல்ல.

   நீக்கு
  3. தோசைல, பூண்டு வெங்காயம் இதெல்லாம் உபயோகித்துப் பண்ணிய ஏதோ வஸ்துவைத் தடவுகிறார்கள். நம்ம ஊர் போல வராது... அழகான தோசை, அதற்குள் மசாலா. ம்....

   எனக்கு எப்போ சென்னை தோசை சாப்பிடுவோம்னு இருக்கு. பார்க்கலாம்...எப்போ வாய்ப்பு கிடைக்குதுன்னு.

   நீக்கு
  4. முன்னெல்லாம் (இப்போவும் யு.எஸ்ஸில்) மைசூர் மசாலா தோசை எனச்சிவப்பு நிறத்தில் உள்ள கொத்துமல்லிக் கா ஆஆஆஆரச் சட்னியைத் தடவிட்டு மசாலா வைத்துக் கொடுப்பாங்க/கொடுக்கிறாங்க. அந்த நிறமே கண்ணீர் வர வைக்கும். நான் சாப்பிட்டதில்லை. அதே போல் வெங்காய ஊத்தப்பத்திலும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயைச் சேர்த்துத் தூவறாங்க/கொத்துமல்லியும்! ஊத்தப்பம் சாப்பிட்டால் சுரீர் எனப் பச்சைமிளகாய்க் காரம்! :(

   நீக்கு
  5. எங்க மருமகள் சிவப்பு அரிசியில் அடை, தோசை, இட்லி எல்லாமும் பண்ணுகிறாள். கேசரி நிறத்தில் எல்லாம் வரதில்லை.

   நீக்கு
  6. வாங்க மதுரை...   இதிலும் அதுவா?!!  அப்போ நீங்க சமையலில் காரப்பொடியே யூஸ் பண்ண மாட்டீங்கன்னு சொல்லுங்க!

   நீக்கு
  7. கேஜிஜி...  கீதா அக்கா...   தக்காளி சாஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது.  தோசையிலும் இட்லியிலும் எவ்வளவு காரப்பொடி சேர்த்தாலும் காரம் தெரியாது.  பச்சை மிளகாய் அரைத்து விட்டால் சாப்பிட்டு முடித்ததும் நாக்கில் தீ உணரலாம்!  கலருக்கு ஒரு பீட்ரூட்டை அரைத்து மாவில் சேர்த்து செய்து பாருங்கள்.  நான் செய்து பேஸ்புக்கில் படம் கொடாஅ போட்டிருந்தேன்!  கலர்ஃபுல்!

   நீக்கு
  8. நெல்லைத்தமிழன் நீங்கள் சொன்ன மாதிரி சட்டம் வந்தாலும் வரும் என்ன கலரில் இருந்தால் என்ன டேஸ்ட்டாக இருந்தால் போது அதுவும் யாராவது சூடா பண்ணி கையில் வந்து கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போறேன். நீங்க வேணும் என்றால் நல்லா நெய் ஊற்றி கேசரி பண்ணிக் கொடுங்க நான் மறுக்காமல் சாப்பிடுவேன்

   நீக்கு
  9. ஸ்ரீராம் என் வீட்டு கிச்சன் சுவற்று கலர் காவி கலர்தான்.. அது எனக்கு மிகவும் பிடித்த கலர்

   நீக்கு
  10. எனக்கு எது சாப்பிட்டாலும் நல்லா காரமாக இருக்கனும் அப்படி இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்

   நீக்கு
 15. ஒரு வழியாத் திப்பிச வேலைகளை எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்திருப்பது சந்தோஷமாக இருக்கு! :))))))))))

  பதிலளிநீக்கு
 16. திப்பிச வேலைகள் - ஹாஹா... நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்க போல! :)

  பார்க்க நல்லாத்தான் இருக்கு!

  பதிலளிநீக்கு
 17. திங்ககிழமை ரெஸிபி அனுப்புபவர்கள் உடனே அனுப்பவும். அடுத்த வாரமும் ஒரு நிலைய வித்வானின் திப்பிசப் பதிவு அதற்கப்புறம் - இனிமே அனுப்புபவர்களின் ரெஸிபி வரிசைக்கிரமமாக வெளியாகும். அனுப்புங்க, அனுப்புங்க!!! quick !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த நிலையவித்துவானோட ரெசிப்பியோட தேதியை மாத்துங்க. நான் அனுப்பியாச்சு...ஹாஹா

   நீக்கு
  2. 2,3 குறிப்புகள் கை வசம் இருக்கு. தேடிப் பார்த்து எடுக்கணும்.

   நீக்கு
  3. பார்த்து பொறுமையா தேடிப்பாருங்க. அவசரத்துல அரிசி அடை என்று ஆரம்பித்து அதற்கு இரட்டை விளிம்பு தோசை படங்கள் வந்துடப்போகுது.

   நீக்கு
 18. இந்த வகையான இட்லியை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுசு புதுசா செய்து பார்க்க வேண்டியதுதான்.  நன்றி முனைவர் ஸார்.

   நீக்கு
 19. //அய்யே...   இட்லியா' என்று முகம் சுளித்து அதை அப்படியே சாப்பிட மறுக்கும் மகன்கள் கூட//
  ஹாஹ்ஹா இன்டர்நெஷனல் லெவலில் இட்லி யங்ஸ்டர்ஸ்கிட்ட பாடாய்ப்படுது :) எங்க மகளும் இட்லி பொங்கல்னா அலறுவா .தோசைன்னா அவ்ளோ ஆசை . இட்லியை எந் வடிவில் தந்தாலும் நோ தான் சொல்வா :)அந்த இட்லியின் அருமை இவங்களுக்கு தெர்ல :) 

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. என் மகளின் விருப்பம் தோசைத்தான் இட்லி வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவாள்.... எங்கள் வீட்டில் அநேகமாக அதுவும் எனக்கு தினமும் தோசைதான் ஒரு ஆஃப்பாயில் ஒரு தோசை அதுவும் காலை 6 மணிக்கு என் காலை உணவு முடிந்துவிடும்

   நீக்கு
 20. இந்த இட்லி கலவையுடன் கலர் குடை மிளகாய்களை அப்புறம் வெங்காயத்தாள் இதையும் சேர்த்திருந்தா அளவு இன்னும் கூட கிடைச்சிருக்கும் ..ரெசிப்பி நல்லா புதுசா இருக்கு .ஆனால் நான் எப்பவும் அந்த வெளேர் பஞ்சு இட்லியை இப்படி கலவர மேக்கப் போட விரும்ப மாட்டேன் :

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!