வெள்ளி, 11 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : காற்றோடு புல்லாங்குழல் -அது கண்ணே நீ சொல்லும் தமிழ்..

 எஸ்​ ஏ சந்திரசேகர் தயாரிப்பில் 1989 இல் வெளியான படம் ராஜநடை.  விஜயகாந்த், சீதா, கௌதமி, பேபி ஷாம்லி நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.​


நான் படம் பார்க்கவில்லை.  இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.  இன்னொரு விஷயம் சொல்லவேண்டும்.  இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ஒரே பாடல் இதுதான்.  விவரம் சேகரிக்க தேடியபோது இதில் ஒரு எஸ் பி பி பாடலும் இருக்கிறது என்று தெரிந்தது.  எனினும் அந்தப் பாடல் மனதைக் கவரவில்லை!
வாலி, புலமைப்பித்தன் இருவரும் பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.   ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடல் வாலி எழுதியதாய் இருக்கவேண்டும். நான் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி ஜெயச்சந்திரன் பாடியுள்ள பாடல்கள் 99% இனிமையான ஹிட் பாடல்களே!


விஜயகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கும்போது அவருடைய கம்பீரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  இந்தக் காட்சியிலும் அவரை ரசிக்க முடிந்தது.
கோபித்துக் கொண்டிருக்கும் குழந்தையை சமாதானப்படுத்தும் பாடல்.  மேலே நான் தனியாக விவரமே சொல்லி இருக்க வேண்டியதில்லை.  எல்லா விவரங்களும் பாடலின்போதே வந்துவிடும்!

சித்ரா பல்வியைத் தொடங்கிய உடனேயே ஒரு ஹம்மிங்குடன் இணைந்து விடுவார் ஜெயச்சந்திரன்.

கஸ்தூரி மான்குட்டியாம் -அது 
கண்ணீரை ஏன் சிந்துதாம் -உனை 
ஆவாரம் பூ தொட்டதோ - அதில் 
அம்மாடி புண்பட்டதோ 

கஸ்தூரி மான்குட்டியாம் -அது 
கண்ணீரை ஏன் சிந்துதாம் -உனை 
ஆவாரம் பூ தொட்டதோ - அதில் 
அம்மாடி புண்பட்டதோ 

தென்பாண்டி முத்துச்சரம் -உன் 
செவ்வாயில் சிந்தட்டுமே 
தென்பாண்டி முத்துச்சரம் -உன் 
செவ்வாயில் சிந்தட்டுமே 

அங்கு கண்காட்டும் நட்சத்திரம் -அதைக் 
கைநீட்டிக் கேட்கட்டுமே 
அங்கு கண்காட்டும் நட்சத்திரம் -அதைக் 
கைநீட்டிக் கேட்கட்டுமே 

என் வீட்டு மாடப்புறா இது 
என் தோளில் ஆடட்டுமே 

இது தேயாத மஞ்சள்நிலா -ஒரு 
தெம்மாங்கு பாடட்டுமே 

காற்றோடு புல்லாங்குழல் -அது 
கண்ணே நீ சொல்லும் தமிழ்..
காற்றோடு புல்லாங்குழல் -அது 
கண்ணே நீ சொல்லும் தமிழ்..

வரும் காலங்கள் நூறாகலாம் -எந்தன் 
பேர்சொல்ல நீ வாழலாம் 
வரும் காலங்கள் நூறாகலாம் -எந்தன் 
பேர்சொல்ல நீ வாழலாம் 

உன்னாலே நான் வாழ்கிறேன் - இங்கு 
உன் கண்ணில் நான் பார்க்கிறேன் 
என் கண்ணான கண் அல்லவோ -உன்னைக் 
காணாமல் கண்மூடுமோ..


=====================================================================================================

1974 இல் வெளிவந்த படம் பெண் ஒன்று கண்டேன்.  சித்ராலயா கோபு இயக்கத்தில் உருவான படம்.  அவர்களின் ஆஸ்தான ஹீரோ முத்துராமனுடன் பிரமீளா நடித்திருக்கும் படம்.

இதில் இரண்டு பாடல்கள் எஸ் பி பி க்கு.  ஒன்று  அதிகம் கேள்விப்படாத பாடல்.  காத்திருந்தேன் கட்டியணைக்க என்னும் பாடல்.

இன்றைய நேயர் விருப்பமாகவும், என் விருப்பதிலும் நீண்ட நாட்களாய் காத்திருப்பில் இருந்ததுமான இந்த இரண்டாவது பாடல்.  பானு அக்கா சமீபத்தில் அலைபேசிய போது இந்தப் பாடலை நேயர் விருப்பமாகக் கேட்டார்கள்.  சரி, நம் விருப்பதிலும் நீண்டநாளாய்க் காத்திருக்கும் பாடல், அதையும் பகிர்ந்து விடலாம் என்று பகிர்ந்துவிட்டேன்.  பலபேர் கேட்டிருக்கக்கூடும்.  ரசித்திருக்கவும் கூடும்.  மறுபடியும் ரசிக்க இப்போது இங்கே பகிர்வாக..

உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
.
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாளிகை
....
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது ஹம்சத்வனி
உன் குரல்வழி பிறந்தது ஹம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி
....
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை
....
நான் வாவெனெ அழைக்கையில்
விரைந்தோடி
வந்து தழுவிடும் தேவமனோஹரி
ஆரபிமானமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை
....
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை
....
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசந் தாவென நான் கேட்டேன்
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசந் தாவென நான் கேட்டேன்
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே
.....
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை

வாலியின் பாடலுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  பாடல் எஸ் பி பி யின் இனிமையான குரலில்..  ராகங்களின் பெயர்களை அணிவகுப்பாய் பாடலில் கேட்கலாம்.  அந்தந்த ராகங்களிலேயே அந்தத் வரிகளை பாடும்படி அமைத்திருப்பார் எம் எஸ் வி.

                        

===== 

37 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய இரு பாடல்களுமே அருமை. ராஜநடை படம் கேள்விபட்டுள்ளேன். ஆமாம். நீங்கள் சொல்வது போல் விஜயகாந்த் காவல்துறை அதிரிகாரியான நடிப்பில், உடையில் கம்பீரமாகத்தான் தெரிவார். இரண்டாவது.,அவர் கண்கள் அழகாக இருக்கும். நடிப்பையும் கண்களில் வெளிப்படுத்துவார்.

  இரண்டாவது படம் கேள்விப்பட்ட மாதிரியும் உள்ளது. அவ்வளவாக நினைவிலுமில்லை.

  ஆமாம்.. பாடல்களின் காணொளி இணைப்பு வரவில்லையே? பாடல்களை வாசித்து மட்டும் கண்டு கொண்டேன். அழகான பாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு வேளை நேற்றைய கேட்பரீஸ் விளம்பரம் போல பாடல்கள் காணொளி எங்காவது உள்ளதோ என தேடிப் பார்க்கிறேன். ஹா.ஹா.ஹா.

   நீக்கு
  2. மூன்றாவதாக ஒரு பாடலும் ஒளிந்திருக்கிறது கமலா அக்கா.   நேரம் கிடைக்கும்போது சுமாரான அந்தப் பாடலையும் கேளுங்கள்!  அதுவும் எஸ்  பி பி.

   ஆம், இரண்டாவது படம் வந்த வேகத்திலேயே காலி திரையரங்குகளைக் கண்டு பயந்து வெட்கப்பட்டுக்கொண்டு உள்ளே ஓடிவிட்டதாம்.

   காணொளி இப்போது பாருங்கள்.  வேறு முறையில் இரண்டாவதும் இணைத்திருக்கிறேன்.

   நன்றி கமலா அக்கா.

   நீக்கு
  3. இப்போது இரு காணொளிகளும் வந்து விட்டது. ஒருவேளை எனக்கு கைப்பேசியில் பார்க்கும் போது வரவில்லையோ, இல்லை வருவதற்கு தாமதமாகுமோ, என நினைத்து கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். இணைத்ததற்கு நன்றி.

   இரண்டுமே உடனே கேட்டு விட்டேன். முதலாவது படத்தின் டைட்டில்களோடு பாடல்.. இரண்டாவதும் வித்தியாசமான முறையில் உள்ளது. முத்துராமன், பிரமீளா நடிப்பில் பாடல் நன்றாக இருந்தது. பழையகால கருப்பு வெள்ளை படங்கள் அதுவும் குடும்ப கதையுடன் இருந்தால் நன்றாகத்தானே வரவேற்பை பெற்றிருக்கும். என்னவோ.. அந்தப படத்தின் தலையெழுத்தை யார் மாற்ற முடியும்.

   மூன்றாவதாக காணொளியா? அது முதலாவதுடன் இணைந்துள்ளதா ? இல்லை இரண்டாவதுடனா ? கண்டிப்பாக பார்க்கிறேன். எஸ்.பி.பி பாடல் என்றால், எத்தனைப் பாடலை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம். நன்றி.

   நீக்கு
  4. ஆகா.... நேற்றைய பதிவில் இனிதான விளம்பரங்களையும் இணைத்து விட்டீர்கள். நன்றி. நன்றி. ஒவ்வொன்றையும் கண்டு ருசியுடன் ரசித்தேன். ஆனால் சாக்லெட்க்கு குடைப் பிடிக்கும் இளைஞர் வரவில்லையே... ஹா.ஹா.ஹா.

   நீக்கு
  5. மூன்றாவது பாடல் காணொளியாய் இருக்காது.  காத்திருந்தேன் கட்டியணைக்க வரிகளைத் தொட்டால் பாடலுக்குச் செல்லலாம்.

   நீக்கு
 3. அன்பு ஸ்ரீராம் , அன்பு கமலாமா
  இன்னும் வரும் அனைவருக்கும் இந்த நாள் நல்ல நாளாக
  இருக்கட்டும்.
  ராஜ நடையில் அந்தக் குழந்தையின் நடிப்பு நன்றாக இருக்கும். அந்த பொம்மையைச்
  சுற்றிதான்
  கதை நடக்கும் என்று லேசாக நினைவில் இருக்கிறது.

  கஸ்தூரி மான்குட்டி பாட்டு அப்போது பிரபலம்.
  கேட்கவும் நன்றாக இருக்கிறது.

  அடுத்து வரும் எஸ்பி பி பாடல் மிக அழகு. ஒவ்வொரு ராகத்துக்கும்
  ஒரு வரி என்று இசை ஏறுவதும் இறங்குவதுமாக
  அருமையாக இணைக்கப்
  பட்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. //ஜெயச்சந்திரன் பாடியுள்ள பாடல்கள் 99% இனிமையான ஹிட் பாடல்களே//

  உண்மை ஏனோ அவருக்கு பாடல்கள் கொடுக்க மறுக்கப்பட்டது.


  ரசனையான கேட்ட பாடல்கள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  நிறையவே பாடி இருக்கிறார்.

   நன்றி ஜி.

   நீக்கு
 5. மூன்று காணொளி இல்லை, நாலு காணொளி இருக்கிறதுமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்ம்? எனக்கு இரண்டு தான் வந்திருக்கு. தேடிப் பார்க்கிறேன். இந்தப் படங்களே கேட்காத/அறியாதவை என்றால் பா.வெ. கிண்டல் பண்ணுவார். அதனால் ஒண்ணும் சொல்லலை! :))))

   நீக்கு
  2. மூன்றாவது கண்டு பிடிச்சுட்டேன். நாலாவதைத் தேடறேன். :)

   நீக்கு
  3. ஒவ்வொன்றும் இரண்டு முறை இறந்ததைச் சொல்லி இருப்பார் வல்லிம்மா!  அவை நீக்கபப்ட்டு விட்டன.  இரண்டு காணொளிகளும், ஒரு இணைப்பும் இருக்கும்!

   நீக்கு
  4. இருக்கு, இருக்கு.நீங்க சொன்னவை இருக்கு.

   நீக்கு
 6. ராஜ நடை அதிகமாகக் கேட்டதில்லை. இப்போது இப்பாடல்களைப் பற்றி அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

  என்றென்றும் நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 8. அந்த கஸ்தூரி மான் குட்டி... பாட்டைக் கேட்டதில்லை...

  ராகமாலிகை மனப்பாடம்...
  கேட்டு வெகு நாளாயிற்று..

  பதிவில் கேட்டதில் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஸ்தூரி மான் குட்டி பாடல் என் ஜெயச்சந்திரன் 2 கேசட்டில் இரண்டாவது பாடல்!

   நீக்கு
 9. //விரைந்தோடி
  வந்து தழுவிடும் தேவமனோஹரி
  ஆரபிமானமும்//

  இந்த வரிகளைப் படித்ததும் இதை எழுதியது கவிஞர் வாலி என்பதைப் புரிந்துகொண்டேன்.

  பாடலும் அருமை. கேட்டிருக்கேன் without realizing ராகங்கள்.

  நல்ல பாட்டை காட்சிப்படுத்தியதில் நல்லா பண்ணலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பாடல் வரிகளில், ராகப் 'பெயர்கள்' மட்டும்தான் உள்ளனவே தவிர, அந்த பெயர்களில் அந்தந்த ராகங்கள் அமைக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. காட்சிகள் பெரும்பாலும் சோபிப்பதில்லை நெல்லை.  பாடல்களை ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
 10. முடிவு பாடல் SPB : அவரின் பிரத்யோக குரல் - சில சொற்களை இழுவையின் போது மட்டுமே அறிந்தேன்... அருமை...

  பதிலளிநீக்கு
 11. என்னுடைய விருப்ப பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி. மிகவும் தாமதமாக நன்றி கூறுவதற்கு மன்னிக்கவும். 

  பதிலளிநீக்கு
 12. முதல் பாடலில் பெண் குரல் சித்ரா என்பது நம்ப முடியவில்லை. 

  பதிலளிநீக்கு
 13. முதல் பாடல் எனக்கும் பிடித்த பாடல். இரண்டாம் பாடல் கேட்ட நினைவில்லை.

  இளையராஜாவின் தொகுப்பொன்றை கேட்ட படியே இந்தப் பதிவினை படித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!