ஞாயிறு, 20 டிசம்பர், 2020

மைசூர் ஹோட்டல்


காலை எழுந்தவுடன் கேமரா ஹோட்டல் பின்புறம் எல்லாவற்றையும் விட நம்மைக் கவர்ந்தது --- இந்தப் புளியமரம் தான் சடை சடையாகக் காய்த்திருந்தது தும்கூர் புளி போல மைசூர் புளியும் சின்ன வயதில் கல்யாணமஹாதேவியில் அடித்த லூட்டி நினைவுக்கு வந்தது . வேப்ப மரம் இவ்வளவு வளர்ந்திடிச்சு  கோவில் எதுவும்கட்டவில்லையா?மரங்களை வெட்டாமல் கட்டுமானங்கள் 
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடம் ஆமாம், கிளம்பிவிட்டோம் 


பின்னே தெரிவது யாரோ?அடுத்து நாம் செல்ல இருப்பது : படம்  பாருங்க !==== 

61 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அமைதி நிலவி ஆரோக்கியம் பெருகிடப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  என்றும் மன நிம்மதியும் , ஆரோக்கியமும்
  இறைவன் அளிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. மீ த முதல் போணி? இஃகி,இஃகி, இன்றைய நாள் கருத்துரைகள் பெருகிப் பதிவு பிரகாசிக்கவும் வாழ்த்துகள். படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு. அதிலும் புளிய, வேப்ப மரங்கள்.. வேப்ப மரம் பார்த்தால்! வேண்டாம், வேண்டாம் சொல்லலை. நெல்லை வந்து ஏதானும் கிண்டல் பண்ணுவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பத்தூர், அரவங்காடு, அகமதாபாத்? அப்புறம்?

   நீக்கு
  2. எங்க அம்பத்தூர் வீட்டுவாசல்ல நல்ல பெரிதா வளர்ந்திருந்தது. வெயில் காலத்துல வீட்டுக்குள்ள ஜிலுஜிலுன்னு காத்தோட்டமா இருக்கும். ரொம்ப வருஷம் கழித்து ரோட்டைச் சரி பண்ணறேன்னு வேப்பமரக் கிளைகள் சிலவற்றை வெட்டிட்டாங்க. இப்போ ஶ்ரீரங்கத்துல அடுக்குமாடி குடியிருப்பில் சௌகரியமா வசித்தாலும், எங்க அம்பத்தூர் வீடு, அங்க நாங்க விட்டுட்டு வந்த சுப்புக்குட்டிகளை மறக்கவே முடியாது

   நீக்கு
  3. ஹாஹாஹா, கௌதமன் சார், அம்பத்தூர் ஓகே. அரவங்காடும் ஓகே! அங்கே வாசல்லே பீச் மரம்! கொல்லையில் காய்கறித் தோட்டம். காரட், பட்டாணி, அவரை, செடி பீன்ஸ், புதினா எனப் போட்டிருந்தது. அஹமதாபாத் இல்லை. குஜராத்தில் நாங்க இருந்தது ஜாம்நகர். அப்புறமா அவர் தம்பி இருந்தது பரோடா. அஹமதாபாத் போய்ப் பார்த்து வந்துனு இருந்திருக்கோம். பருத்திச் சேலைகள் எடுக்கணும்னா அஹமதாபாதை விட்டால் வேறே ஊர் கிடையாது. :)))))

   நீக்கு
  4. நெல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
 4. இது மைசூர் ஜூவா? நீங்க போனது? நாங்களும் எண்பதுகளில் போனப்போப் போனோம். அதுக்கு முன்னாடி எழுபதுகளில் போனப்போப் போனோமா? நினைவில் இல்லை. இந்திர விலாஸ் என்னும் ஓட்டலில் கார,சாரமான சாப்பாடு சாப்பிட்ட நினைவு இருக்கு. எண்பதுகளில் போறச்சே "பெண்"களூர் விஜய் நகரில் நண்பர் ஒருத்தர் வீட்டில் தங்கியதால் சாப்பாடு கொடுத்துட்டாங்க! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைசூர் பெங்களுருவில் கார சாரமா?  ஆக்சிமோரான் போல இருக்கே!

   நீக்கு
  2. அதானே! ஆந்திராக்காரர்களாக இருந்திருப்பார்களோ?

   நீக்கு
  3. நேற்று முல்பாகல் என்ற புகழ்பெற்ற தோசையைச் சுவைக்கும் வாய்ப்பு இங்க கிடைத்தது. இரண்டே வகை தோசைகள்தான். நான் ஆர்டர் பண்ணினது, பாத் தோசா...ஹாஹா

   ஓரப்பகுதி மட்டும் நெய்யில் பொரித்து முறுகலாகவும் மீதிப்பகுதி கொஞ்சம் மெத்தென்றும் அதில் ஒரு கரண்டி மசாலாவும் (பூரிமசால்), இரண்டு பெரிய கரண்டி எலுமிச்சை சாதம் வைத்து மடித்த ஒரு அடிக்கும் குறைவான விட்டமுள்ள தோசை. (ம்ம்..நம்ம ஊர் சாதா தோசையே ஒன்னரை அடி இருக்கும்).

   ரொம்ப நல்லா இருந்தது (ஆர்டர் பண்ணும்போது இது என்னடா காம்பினேஷன் என நினைத்தேன்). 82 ரூபாய். முழுதும் நெய் விட்டு பண்ணினது. எலுமி சாத்த்தில் கிள்ளிப் போட்டிருந்த 3 பச்சை மிளகாயும் சூப்பர்.

   நீக்கு
  4. இப்போல்லாம் நம்ம ஊர் தோசை அளவையும் குறைச்சுட்டாங்க...  சின்னதாதான்  இருக்கு.  அதுலயும் ஒருமுறை ஆபர்னு சொல்லி ஆப்பு அடிச்சாங்க பாருங்க....

   நீக்கு
  5. I miss நம்ம ஊர் தோசை. ஆனா பாருங்க.... இந்த ஊர்ல சூப்பர் தோசைலாம் 35-50 ரூபாய்க்குள்ளதான். நம்ம ஊர் மாதிரி ஆனை விலை குதிரை விலைல ஹோட்டல்ல விற்பதில்லை.

   நீக்கு
  6. ஆஹா! நாக்கில் ஜலம் ஊற வைது விட்டீர்கள் நெல்லை. வெளியில் சாப்பிட்டு வெகு நாட்களாகி விட்டது.

   நீக்கு
  7. நாங்க போன வாரம் கண் மருத்துவரிடம் போயிட்டுத் திரும்பி வரச்சே ஏழேமுக்கால் ஆகிவிட்டது என்பதால் தெரிந்த மாமியிடம் இட்லி, தோசை வாங்கினோம். பரவாயில்லை ரகம். பொதுவாக இட்லி ஹோட்டல்களிலும் சரி, சிலர் வீடுகளிலும் சரி சொதப்பல்! :( ஒரு வேளை நான் இன்னமும் துணி போட்டு வார்ப்பதால் வித்தியாசம் தெரியுதோ என்னமோ!

   நீக்கு
 5. மைசூர்க் காட்சிகள் அழகு. புளிய மரமும் அதன் காய்களும்
  கண்ணுக்கு அருமை.

  கூடவே வரும் வரிகளும் சிறப்பு. புளியம்பழம் பறிக்க வில்லையோ.

  கட்டிடங்கள் மரங்களைச் சுற்றிக் கட்டப்
  பட்டிருக்கும் கருத்து மகிழ்ச்சியாக
  இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  மரங்களை சேதப்பபிடுத்தாமல் விட்டு வைத்திருப்பது சிறப்பு.  நன்றி வல்லிம்மா.

   நீக்கு
  2. இருபது வருடங்களுக்குள் கட்டப்பத்திருக்கும் பல கட்டிடங்கள் மரங்களை மதித்து இடம் கொடுத்து கட்டப்பட்டிருப்பவையாக இருக்கும்.

   நீக்கு
 6. அதுக்கப்புறமா 2,3 தரம் மைசூர் போனாலும் சாமுண்டி ஹில்ஸ் தவிர்த்து எங்கும் போகலை. 2006 ஆம் வருஷம் ஒரு கல்யாணத்துக்கு "பெண்"களூர்" போயிட்டு அப்படியே மைசூர் போனோம். அதன் பின்னர் 2007- 2008 ஆம் ஆண்டுகளில் வீடு பார்க்கப் போனோம். மைசூரில் ஒரு வீடு கிட்டத்தட்ட முடிவு பண்ணிட்டுப் பின்னர் ஜகா வாங்கினோம். அதுக்கப்புறமாக் கல்யாணங்களுக்குப் போனது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி..   நான் பெங்களூரு, மைசூர் இரண்டு இடங்களுக்கும் ஒரு விசேஷத்துக்குப் போயிட்டு, பட்டம் கட்டிய குதிரை மாதிரி திரும்பிட்டேன்.  எந்த இடமும் பார்த்ததில்லை!

   நீக்கு
  2. என்ன ஶ்ரீராம் இப்படிப் பண்ணிட்டீங்க. நான் எங்க போனாலும் தூக்கத்தை, உணவைத் தியாகம் செய்தாவது ஏதேனும் இடத்தைப் பார்க்காமல் வரமாட்டேன்.

   மைசூர் மசால் தோசையாவது சாப்டீங்களா?

   நீக்கு
  3. இல்லையே...   அப்போ இதை எல்லாம் யோசிக்கவே இல்லை.  மேலும் கும்பலா அழைச்சுட்டுப்போய் கொண்டு வந்து ஹோசூர்ல விட்டுட்டாங்க...  அங்கிருந்து சென்னை வந்தோம்!

   நீக்கு
  4. மைசூர் மசால் தோசை எல்லாம் வீட்டிலேயே பண்ணலாம் ஶ்ரீராம். மிவத்தல்+கொத்துமல்லி சேர்த்து உப்பு, பெருங்காயம் போட்டு நன்கு நைசாகச் சட்னி அரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக எடுத்துக் கரைத்து வைத்துக் கொண்டு தோசை வார்த்ததும் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போடும் முன்னர் சட்னியைப் பரவலாகத் தடவிட்டு நடுவில் உ.கி. மசாலா வைத்து வெண்ணெயும் வைத்து மூடி ஒரு முட்டை நெய் விட்டு நல்லா முறுமுறுனு எடுத்தால் மைசூர் மசாலா தோசை!

   நீக்கு
  5. கீசா மேடம்.... இந்தியன் எகானமியை நீங்க கவுக்கலாமா? எல்லாரும் வீட்டிலேயே எல்லாம் செஞ்சுக்க ஆரம்பித்தாங்கன்னா, ஹோட்டல் காரங்க எங்க போவாங்க, அங்க வேலை பார்க்கிறவங்க என்ன ஆவாங்க?

   இங்க உள்ள மைசூர் மசாலா தோசைல, சிவப்பு கலர்லனா சட்னி தடவியிருக்காங்க. ஆனா நம்ம ஊர் மசால்தான் இங்க கிடையாது. மிக அதிகமாக அவங்க உருளைக்கிழங்கு போடறாங்க. வெங்காயம் கண்டுபிடிக்கறது கஷ்டம்.

   நீக்கு
  6. அது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. மி.வத்தல் நிறைய வைச்சுட்டுக் கொத்துமல்லி கொஞ்சமா வைப்பாங்க. அது நிறம் கொடுக்கும்.

   நீக்கு
 7. பொதுவாத் தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில் மரங்களைப் பாதுகாக்கவே செய்கிறார்கள். நீர் நிலைகளையும். ஆனாலும் "பெண்"களூருவில் முதல் முதல்லே பார்த்தப்போ இருந்த தோட்டங்கள், தெருக்களில் கவிந்திருந்த மரங்கள், சாலைகளில் நடக்கையில் மரங்களின் இலைகள் உதிர்ந்து வரும் "சரக்" "சரக்" என்னும் சப்தங்கள் எல்லாம் கடைசியா 2013 இல் போனப்போப் பார்க்க முடியலை. அதுக்கப்புறம் போக வாய்ப்பு வரலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம ஊர்களிலும் சில இடங்களில் மரங்களை அழகாக விட்டு வைத்திருக்கிறார்கள்.  ஆனால் மிகச்சில இடங்களில்தான்.

   நீக்கு
  2. 2013 ஆம் ஆண்டு போனப்போ தொட்டமளூர் 2ஆம் தடவை, 3 ஆம் தடவை? நினைவில்லை. போனோம். முதலில் போனப்போ இருந்த பட்டாசாரியார் கடைசியாப் போனப்போ இல்லை.

   நீக்கு
  3. //தொட்டமளூர்// - இது எங்க இங்க வந்தது? நாங்க இரண்டு முறை போயிருக்கோம். முதல்ல தம்பிக்காக போனோம். அப்புறம் நாங்க சேவிக்கப் போனோம்.

   நீக்கு
  4. தொட்டமளூர் மைசூர்- பெண்களூர் நெடுஞ்சாலையில் தான் எனக்குத் தெரிஞ்சு அங்கேயே இருக்கு! :)))))

   நீக்கு
 8. வேப்பமரம் இன்னும் மஞ்சள் பூசிக் கொள்ளாமல் இருக்கிறதா.
  அரச மரம் பக்கம் இருந்தால்
  திருமணம் செய்து வைக்கலாம்.
  அடுத்த படி மிருகக் காட்சி சாலை.
  அங்கிருந்த எடுத்த படங்கள் இருக்கின்றன.
  அத்தனை பெரிய தந்தங்களோடு
  இருந்த உயரமான யானையுடன் சிங்கம் படம் எடுத்துக் கொண்டார்.
  மகளுக்கு இரண்டு வயது. பெரியவனுக்கு 4 வயது.
  இருவரும் யானை மேல் ஏற மறுத்து விட்டார்கள்:)
  படங்களுக்கு நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வல்லிம்மா..   இனிமையான நினைவுகள்.

   நீக்கு
  2. //சாலைகளில் நடக்கையில் மரங்களின் இலைகள் உதிர்ந்து வரும் "சரக்" "சரக்" என்னும் சப்தங்கள் எல்லாம் கடைசியா 2013 இல் போனப்போப் பார்க்க முடியலை.//ம்ஹும்! சான்ஸே இல்லை கீதா அக்கா. மேம்பாலங்களுக்காக நிறைய மரங்களை காவு கொடுத்து விட்டோம்.

   நீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலமே என்றும் வாழ்க...

  பதிலளிநீக்கு
 11. மைசூர் ரவாதோசை மிகவும் பிரசித்தம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்...

  அதைப் பற்றியும் எழுதுங்களேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னாது. ரவா தோசையா? அந்தக் கனவெல்லாம் கர்னாடகால வேண்டாம். அவரைக்காய் தோசை, மசால் தோசைன்னு எங்க சாப்பிட்டாலும் 50ரூபாய்க்கும் குறைவுதான்

   நீக்கு
  2. ஹாஹாஹா, ஆமாம் துரை, மைசூரில் ரவாதோசை அத்தனை பிரபலம் இல்லை. எம்டிஆரில் ரவா இட்லி பிரபலம். அவரைக்காயை வைத்து விதம் விதமாகப் பண்ணுவார்கள்.

   நீக்கு
  3. நெல்லை, தமிழ்நாட்டில் அதுவும் திருச்சியில் தான் எல்லாமே விலை அதிகம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். திருப்பதியில் (கீழே) பீமவிலாஸில் நாங்க இருவர் சாப்பிட்டதுக்குக் காஃபி, ஜிஎஸ்டி உட்பட 180 ரூக்குள் தான் ஆச்சு. இதைப் பத்தி எழுதியும் இருக்கேன். மும்பையிலும் நல்ல தரமான உணவு விலை குறைவாகவும் கிடைக்கிறது. ராமகிருஷ்ணாவில் (விலிபார்லா) தென்னிந்திய உனவு வகைகள் பிரமாதமாக இருக்கும். சாம்பார் அந்த ருசியில் சென்னை சேர்த்துத் தமிழகத்தின் எந்த ஊரிலும் இல்லை.

   நீக்கு
  4. கீசா மேடம்... ஒரு மாறுதலுக்குத்தான் இங்க நான் வெறும் இட்லி, சட்னி (ஜாம்பார் நஹீ நஹீ), கேசரிபாத், அப்புறம் தோசை சாப்பிடுவேன். நம்ம ஊர் உணவில்தான் எனக்கு விருப்பம். ஆனால் பையன் பழகிட்டான். மத்தவங்கள்லாம் என்ன இது நீங்க இப்படி ரிஜிட் ஆ இருக்கீங்களே என்பார்கள். இதுல ரவா இட்லி, எம்.டி.ஆர்னு என்னை வெறுப்பேத்தாதீங்க

   நீக்கு
  5. //சாம்பார் அந்த ருசியில் சென்னை சேர்த்துத் தமிழகத்தின்// - இன்னாத்தைச் சொல்றது? தமிழக சாம்பார் ருசிபோல வரவே வராது. ஒரு மாறுதலுக்கு வெளி இடங்கள்ல சாப்பிடலாம், ஆனா தமிழக சாம்பார், சட்னி, தோசை, மசாலா - அடிச்சுக்க ஆளே கிடையாது. (எனக்கென்னவோ திருவல்லிக்கேணி ரத்னா கஃபே சாம்பார் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. என்னத்தையோ அரைச்சுவிட்ட சாம்பார் மாதிரி இருக்கும்) பூர்வ ஜென்ம புண்ணியம்..பஹ்ரைன்ல பொள்ளாச்சியைச் சேர்ந்தவங்க கௌரிகிருஷ்ணா ஹோட்டல் வச்சாங்க. அது தவிர மதுரை மீனாட்சி பவன் என்று ஒன்று ஆரம்பித்தாங்க (அங்க டிஃபன் சூப்பர். துரதிருஷ்டவசமாக அந்த ஹோட்டல் நல்லா ஓடலை. அப்புறம் மூடிட்டாங்க). நஃபூரா என்று ஒரு தென்னிந்திய-தமிழக உணவகம். எல்லாம் நம்ம ஊர் சாப்பாடு, சாம்பார்....சூப்பரோ சூப்பர்.

   என்னவோ நீங்க மும்பை, திருப்பதி, விவிபார்லான்னு ஜல்லியடிக்கிறீங்க.

   திருச்சி ஆண்டார் தெரு ஹோட்டல்கள் என்று ஒருத்தர் (கோபு சார்) புகழ்ந்து எழுதுவார்... நான் சாப்பிட வாய்ப்பு கிடைக்கலை. அதுக்குள்ள ஒரு ஹோட்டலை இழுத்து மூடிட்டாங்க, இன்னொன்றில் ஒரு வேளை சாப்பாடுதான் போலிருக்கு. அஸ்வின்ஸ்ல உணவு நல்லா இருக்கும்னு தோணுது. நான் அவசர அவசரமாக பார்சல் வாங்கிய கலந்த சாதம் ரொம்ப நல்லா இருந்தது.

   ஞாயிறை திங்களா மாத்தினா ஸ்ரீராம், கேஜிஜி கோச்சுக்கப்போறாங்க

   நீக்கு
  6. திருச்சியின் அந்த ஓட்டல்கள் எல்லாம் முன்னொரு காலத்தில் நன்றாக இருந்திருக்கலாம். இப்போல்லாம் ஒரே சொதப்பல். எந்த ஓட்டலிலும் சாப்பிட லாயக்கில்லை. திருச்சியில் மட்டுமில்லை, இங்கே ஸ்ரீரங்கத்திலும் அதே கதி தான். தெற்கு கோபுர வாசல் முரளி காஃபிக் கடை ரொம்பவே பிரபலம்னு சொன்னாங்களேனு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி தரிசனம் முடிஞ்சு வரச்சே சாப்பிட்டால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! காஃபினு அதைச் சொல்றாங்களேனு இருந்தது. இப்போதைக்கு ஒரு மாத்வ மாமா/மாமியின் சாப்பாடு கொஞ்சம் பரவாயில்லை. அதுவும் எத்தனை நாளைக்கோ! ஒரு முறை மும்பை போய் விலிபார்லேயின் நான் சொன்ன ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமில் சாப்பிட்டுப் பாருங்க! புரியும். ஒடிஷா போனப்போ புவனேஷ்வரில் நாங்க சாப்பிட்ட ஓட்டலிலும் கூட நல்ல தரமான டிஃபன். சுவையாக இருந்தது. சென்னையிலோ/தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலோ அப்படி ஒண்ணும் கிடைப்பதில்லை.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  படங்கள் அனைத்தும் அருமை. அதற்கு பொருத்தமாக துணை நின்ற வாசகங்களையும் ரசித்தேன்.

  /காலை எழுந்தவுடன் கேமரா/

  பாரதியாரும் இப்போது இருந்திருந்தால், "காலை எழுந்தவுடன் கணினி" என்றுதான் சொல்லியிருப்பார். தற்சமயம் நமக்கென்றில்லாமல், குழந்தைகளின் படிப்பும் அதில்தானே...!

  வேப்பமரம், புளியமரம் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது. பொதுவாக மரங்களே அழகுதான். இப்போது இங்கும் மரங்களின் அழகை குறைத்து, மனிதர்கள் ஆதிக்கத்தை பெருக்கி கொண்டுள்ளார்கள். சூரியனின் வெப்ப பார்வை அதிகரிக்காமல் இருக்குமா?

  அடுத்து விலங்குகள் படமா? உள்ளே படமெடுக்க அனுமதிப்பார்களா? எனக்கு அப்போது (பத்து வருடங்களுக்கு முன்பு) சென்றது நினைவில்லை. இப்போதைய (இந்த வருட ஆரம்பத்தில்) சந்தர்ப்பம் கைநழுவி போனது. (ஆனால், எதுவுமே நம் கையில் இல்லை. பத்து விரல்களை தவிர.) அழகான படங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!