பானுமதி வெங்கடேஸ்வரன்:
> உண்ணா நோன்பு, மெளன விரதம் போன்றவை அனுஷ்டித்த அனுபவம் உண்டா?
# உண்டு. உணவு கொள்ளாதிருப்பதும் வாய் பேசாதிருப்பதும் மிகுந்த புத்துணர்ச்சி தரவல்லவை. பல சமயம் அருகில் இருப்போர் நமக்கு விரத பங்கம் செய்வதில் ஆர்வம் காட்டுவது ஒரு ஆச்சரியம்.
$ சந்திரனுக்கு போன விண்வெளிக்கலத்தில் கோளாறு. நான் உண்ணா நோன்பு அனுசரித்து என்னால் தான் அனைவரும் திரும்பினதாக பெருமிதம் கொண்டேன்.
மௌன விரதம் பெரும்பாலும் கோபத்தின் வெளிப்பாடாகவே..
நான் இன்று மௌனவிரதம் என்று சட்டையில் சீட்டு குத்தி இருந்தும் நம்மிடம் வலிய வந்து பேச்சு கொடுத்தோர் பலர்.
& உண்ணா விரதம் இருந்த ஞாபகம் இல்லை. மௌன விரதம் இருந்தது உண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் பாதி நாளிலேயே மறந்து பேசிவிடுவேன்!
> இந்த வாரம் நிக்கி கல்ராணியின் தரிசனம் கிடைத்தது. அடுத்த வாரம் மடோனா செபாஸ்டியனை எதிர்பார்க்கலாமா?
& ஓ எதிர்பார்க்கலாமே !! இதோ --
2)
(இதில் வலது புறம் இருப்பவர்!)
நெல்லைத்தமிழன் :
> இதயத்துக்கும் உணர்வுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் காதலியிடம் உன்னை இதயத்தில் வைத்து பூஜிக்கிறேன் என்று பேத்தறாங்க?
# இதயம் என்பது மனதைக்குறிக்க வந்த சொல். மனதைக் காட்டிலும் பவித்ரமாக நமக்குள் இருப்பதாக எண்ணி அதை இதயம் என்று குறிப்பிடுகிறோம். (நமக்குள் ஏதோ ஒன்று இருப்பதாக நம்பி...)
& இதயத்தில் நான்கு அறைகள் உண்டு என்று படித்துள்ளேன். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவர் இருப்பரோ?
> ஐந்து நாட்கள் மனதுக்கு நிம்மதியா இருந்துட்டு வரலாம் என நினைக்கும் இடம் எது?
# திருவரங்கம் , அண்ணாமலை போன்ற தலங்கள். இமயமலைப் பிரதேசம் கன்யாகுமரி போன்ற இயற்கை கொழிக்கும் இடங்கள். ஹளேபீடு பேலூர் போன்ற சிற்ப சௌந்தர்யம் செழித்த பகுதிகள்.
& எங்கே போனாலும் மனமும் கூட வருகிறதே! நிம்மதி என்பது நமக்குள் இருப்பதா அல்லது வெளியில் கிடைக்கும் விஷயமா?
> யாரைப் பார்த்ததும், சந்தித்ததும் மிக மகிழ்ச்சி அடைகிறீர்கள்?
# உறவிலும் நட்பிலும் பலர் இருக்கிறார்கள். பொதுவாகச் சொல்வதானால் ஆறு முதல் பதினைந்து வயதுவரையிலான இளந்தலைமுறையினர்.
நல்ல இசைத்திறன் மிக்கவர்கள். அதி புத்திசாலிகள். அறிவும் ஆற்றலும் அழகும் அமையப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் இப்படி நிறைய...
& என்னைப் பார்த்ததும், சந்தித்ததும் யார் மிக மகிழ்ச்சி அடைகிறார்களோ, அவர்களை!
=======
அப்பாஜி பதில்கள் - மின்நிலா பொங்கல் மலருக்காக ---
இந்த டிசம்பர் மாதம் முழுவதும் புதன் பதிவுகளில், பின்னூட்டங்களில், நீங்க அப்பாதுரை சாரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை,
" அ கே " ( or A K) என்று குறிப்பிட்டு பதிவு செய்யுங்கள். மற்ற வாசகர்கள் அ கே - கேள்விகளுக்கு பின்னூட்டங்களில் பதில்கள் எதுவும் பதிய வேண்டாம் என்று அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் கேள்விகளும், அவற்றிற்கு அப்பாதுரை அவர்களின் பதிலும் தொகுக்கப்பட்டு, மின்நிலா பொங்கல் மலரில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் நாங்கள் பதில் சொல்லவேண்டிய கேள்விகளுக்கு " எ கே " (Or E K) என்று குறிப்பிட்டு கேட்கலாம்!
=======
சென்ற வார பதிவில் சில கேள்விகளுக்கு அப்பாதுரை சார் அளித்த பதில்கள்
அதற்குப் பின் நடந்த சில அரட்டைகள் - தொகுப்பு உங்களுக்காக இங்கே :
> சிற்றின்பம், பேரின்பம் இரண்டுக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன?
ஒன்று இட்லி, மிளகாய்ப்பொடி, நெஸ்கபே.
மற்றது இட்லி, மிளகாய்ப்பொடி, தேங்காய் சட்னி, சின்ன வெங்காய சாம்பார், தக்காளித் தொக்கு, அப்போது வறுத்தரைத்த பில்டர் காபி.
> ஒரு படம் வெற்றி பெறுவதாலோ, ஒரு நடிகர், நடிகையாலோ நமக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது. இருந்தாலும் படம் வெற்றியை நினைத்து நாம் சந்தோஷப்படுவதும், நடிகரை யாரேனும் கிண்டல் பண்ணினால் நாம் கோபப்படுவதும் எதனால்?
இந்த இரு நடிகர்களையும் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். கோபமே வராது எனக்கு. ஒருவர் -சன் மற்றவரும் -சன்.
கௌதமன் :
எனக்குத் தெரிந்து அஞ்சு -சன் இருக்கிறார்கள். நீங்க சொல்வதில் முதல் சன் தெரியும். மற்றவர் யார்?
நெல்லைத் தமிழன் :
இதிலெல்லாம் சந்தேகமா? சி-சன் அடுத்தது ஜெ-சன்.
msuzhi :
என் கணக்குல ஒண்ணு சரி.
Bhanumathy Venkateswaran :
தேங்காய் சீனிவாசன்
msuzhi :
நான் சொன்ன -சன் கமலஹாசன்.
கௌதமன் :
நான் சொன்ன ஐந்தாவது சன் : பவர் ஸ்டார் சீனிவாசன் !!
> திருமணத்துக்குச் செல்வதற்கு மிக முக்கியக் காரணங்களில், அங்கு போடப்படும் டிஃபன், விருந்தும் முக்கியமானது என்பது உண்மையா?
பதின்ம நாட்களில் உண்மை. [யாருக்குக் கல்யாணம் என்பது கூடத் தெரியாமல் கல்யாண சீசன் டயத்தில் மாம்பலம் வடபழனி பகுதி கல்யாண மண்டபங்களில் நிறைய புகுந்து சாப்பிட்டிருக்கிறோம். ஒரே ஒரு தடவை மாட்டிக்கொண்ட தருணம் பார்த்து சகிக்கவில்லை சமையல்.]
கௌதமன்:
கூட்டத்தில் நடுவே இருந்த காலி இருக்கைகள் இரண்டில் உட்கார்ந்துகொண்டோம். எனக்கு மனசு திக் திக் - அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சேரியை தலையை ஆட்டியவண்ணம் கண்ணை மூடி ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஒருவர் வரிசைகளுக்கிடையே புகுந்து எங்களை நோக்கி வந்தார். பயத்தில் நானும் கண்களை மூடி கச்சேரி ரசிப்பவனைப் போல நடிக்கலாமா என்று யோசிப்பதற்குள் அவர் அருகே வந்துவிட்டார்.
என்னைப் பார்த்து " டிபன் சாப்பிட்டாயிற்றா ?" என்று கேட்டார். அதைக் கேட்டதும் கண்ணைத் திறந்து பார்த்த ஒ வி ச - 'வேண்டாம்' என்று தலையை ஆட்டினார்.
விசாரித்தவர் உடனே போய் இரண்டு Fanta orange பாட்டில்களைக் கொண்டுவந்து, மூடி உடைத்து, எங்களிடம் கொடுத்து, 'இதையாவது குடிங்க' என்றார். வாங்கிக் குடித்தோம்.
கச்சேரி முடிந்து, கை தட்டி பாராட்டிவிட்டு வெளியே வந்த பிறகு ஒ வி ச விடம் 'இவர்கள் ஏற்கெனவே உனக்குத் தெரிந்தவர்களா?' என்று கேட்டேன்.
" யாருக்குத் தெரியும்?" என்றார் !
நன்றி.
ஒருவர் வரிசைகளுக்கிடையே புகுந்து எங்களை நோக்கி வந்தார். பயத்தில் நானும் கண்களை மூடி கச்சேரி ரசிப்பவனைப் போல நடிக்கலாமா என்று யோசிப்பதற்குள் அவர் அருகே வந்துவிட்டார்.
என்னைப் பார்த்து " டிபன் சாப்பிட்டாயிற்றா ?" என்று கேட்டார். அதைக் கேட்டதும் கண்ணைத் திறந்து பார்த்த ஒ வி ச - 'வேண்டாம்' என்று தலையை ஆட்டினார்.
விசாரித்தவர் உடனே போய் இரண்டு Fanta orange பாட்டில்களைக் கொண்டுவந்து, மூடி உடைத்து, எங்களிடம் கொடுத்து, 'இதையாவது குடிங்க' என்றார். வாங்கிக் குடித்தோம்.
கச்சேரி முடிந்து, கை தட்டி பாராட்டிவிட்டு வெளியே வந்த பிறகு ஒ வி ச விடம் 'இவர்கள் ஏற்கெனவே உனக்குத் தெரிந்தவர்களா?' என்று கேட்டேன்.
" யாருக்குத் தெரியும்?" என்றார் !
msuzhi :
அது ஒரு ஜாலியான காலம்.
ஒரு கல்யாணத்தில் அட்டகாசமான தேங்காய்ப்பால் பாயசம் போட்டார்கள் என்று நண்பன் எங்கள் அனைவரின் அப்போதைய மொத்த சொத்தான ஐந்து ரூபாயை ஓதிவிட்டான் (மொய்?); அவனை மொத்தி எடுத்து பல்லாவரத்துக்கு வித்தவுட்டில் பயந்து கொண்டே வந்தோம்.
=========
மின்நிலா பொங்கல் மலர், சிறந்த முறையில் தயாராகி வருகிறது. உங்கள் எல்லோருக்கும் பிடித்த பல அம்சங்கள் இடம் பெறுகின்றன. மேன்மேலும் உங்கள் படைப்புகளை engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.நன்றி.
========
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குமிக மிக சுவாரஸ்யமாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்.
நல்ல கேள்விகள் புத்திசாலித்தனமான
பதிலகல்.
வலது பக்கம் இருக்கு மடோனா சூப்பர்.
அப்பாதுரை வந்த கேள்விகளுக்குப் பதில் அளிப்பது மிகச் சிறப்பு.
பானுமதியும் அரட்டையில் பங்கெடுத்திருப்பது
இன்னும் அருமை.
சன் கள் பற்றிய கேள்வியும் பதில்களும்
சிரிக்க வைத்துவிட்டன.
மௌனவிரதம் இப்போது தானாக அமைகிறது.
உண்ணா விரதம் 40 வயதிலேயே முடித்துக் கொண்டேன்.
கௌதமன் ஜியின் கச்சேரி கலாட்டா
அருமை. டிஃபன் சாப்பிடாமல் வந்து விட்டார்களே. கௌரவம் தான்:)
நன்றி, நன்றி. பிரார்த்தனைகளுக்கும் + பாராட்டுகளுக்கும்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார கேள்விகள், பதில்கள் எப்போதும் போல் அருமை. வாராவாரம் விரதங்கள் என்று அவ்வளவாக மெனக்கெட்டு இருக்காவிடினும் நானும் பல வருடங்களுக்கு முன்பு வியாழனன்று மெளன விரதமாக ஒரு வருடத்திற்கும் மேலாக இருந்திருக்கிறேன். தங்கள் பதில்கள் உண்மைதான். அப்போதுதான் அதிலும் அன்றுதான் பேச வைக்கும் சூழ்நிலைகளை உறவுகள். நட்புகள் வலிய வந்து உண்டாக்குவார்கள். ஆனால்,ஏதாவது, அதிலும் என்றாவது, நம்முடைய பிரச்சனைகளை அவர்களிடம் சொல்லி வருத்தப்படும் போது, "பேசாமல் மெளனமாக இருந்து பாரேன்" என நமக்கு அறிவுறுத்துவதும் அவர்கள்தான். ஹா.ஹா
பகிர்வினுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆம், யதார்த்தமான உண்மை!
நீக்குசரியாக சொல்லியிருக்கிறீர்கள் கமலா.
நீக்குஆமோதித்தமைக்கு நன்றி, நன்றி கெளதமன் சகோதரருக்கும்,பானுமதி சகோதரிக்கும்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று இங்கே மழை இதுவரை இல்லை. அநேகமாய் மழை முடிஞ்சுடுத்தோ? தெரியலை. என்றாலும் அனைவரும் பாதுகாப்புடனும், பத்திரமாகவும் இருக்கப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்!
நீக்குஅப்பாதுரை போன வாரம் சொன்ன 2 "சன்"கள் ஜிவாஜி கணே"சன்", கமலஹா"சன்" என்றே நான் யூகித்தேன். ஆனால் சொல்ல விட்டுப் போயிருக்கு. இனிமேல் சொல்லி என்ன பயன்? அவார்டு போயிடுச்சே! :))))))
பதிலளிநீக்குஆறுதல் பரிசு உண்டு.
நீக்குயாரைப் பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள் என்னும் கேள்விக்கு பதில் இப்போதைக்குக் கு.கு தான். அதோட விஷமங்கள் நம்மை மறந்து சிரிக்க வைக்கும். அதைத் தவிர்த்து முகநூலில் பகரும் சின்னக் குழந்தைகளின் சுட்டித்தனங்கள், இரட்டையர், மூவர் அடிக்கும் லூட்டிகள், பெற்றோர் பொறுமையாகச் செய்யும் வேலைகள் என நம்மை மறந்து சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும்.
பதிலளிநீக்குஆம், பேரக்குழந்தைகளின் பேச்சும் செய்கைகளும் என்றுமே ரசிக்கத்தகுந்தவை.
நீக்குமெளன விரதம் தவிர மற்றொரு கேள்வியைௐ கேட்டு விட்டேன் என்று நினைத்துக் கொண்டு விட்டேனா??? கடவுளே!(இது அடுத்த வாரத்திற்கான கேள்வி அல்ல)
பதிலளிநீக்கு// கேட்டு விட்டேன் என்று நினைத்துக் கொண்டு விட்டேனா??? கடவுளே!// கடவுளிடம் கேள்வியா?
நீக்குநீங்க வேறு எதுவும் கேள்வி கேட்கவில்லை.
நீக்கு//கடவுளிடம் கேள்வியா?// எ.பி.யின் கடவுள் ,))
நீக்குஅப்பாடா அனுஷ்காவையும், தமன்னாவையும் தாண்டி மற்ற அழகிகளையும் எ.பி.க்கு அழைத்து வருவதற்கு நன்றி. "மடோனா செபாஸ்டியனா? அப்படி ஒரு நடிகையா?.. ஙே..." என்பாரே ஒருவர்.
பதிலளிநீக்கு:)))
நீக்குஉண்மையில் போன வாரமே கேட்க நினைத்துக் கேட்கவில்லை. இவங்க யாரையும் எனக்குத் தெரியாது என்பதே உண்மை. எனக்குத் தெரிந்த நடிகைகள் திரிஷா, நயன் தாரா, வரலக்ஷ்மி, காஜல் அகர்வால் (விளம்பரங்கள் மூலம்) போன்ற ஒரு சிலரே. அனுஷ்காவெல்லாம் இங்கே போட்டுப் போட்டு முகம் பழகி உள்ளது. இப்போதும் தமன்னா யார்னு தெரியாது. சமந்தானு ஒருத்தர் இருக்கார் போல. அவரும் யார்னு தெரியாது! பழைய நடிகைகளைத் தெரியும். அதிலேயும் சிலர் குழப்புவார்கள். தெரிந்து வைத்துக்கொண்டு ஆவது என்னமோ ஒண்ணும் இல்லை. ஆகவே இதற்காகக் கவலைப்படுவதும் இல்லை! :))))))) விஷால்னு ஒரு நடிகர் இருக்கார்னு தெரியும். அடையாளம் தெரியாது. ஆனால் இப்போக் கொஞ்ச நாட்களாகத் தொலைக்காட்சிச் செய்திகளில் விஷ்ணு விஷால் என ஒருத்தர் பெயர் வருது! இஃகி,இஃகி,இஃகி,இஃகி!
நீக்கு//இப்போதும் தமன்னா யார்னு தெரியாது. // - இதைப் பத்தி யாரிடமும் நீங்க கேட்கவேண்டாம். அவங்களுக்குச் சொல்லத் தெரியாது. பேசாம தொலைக்காட்சியை ஆன் பண்ணுங்க, பொதிகை பக்கம் போகவே போகாதீங்க. மத்த தமிழ் சேனலை அரை மணி நேரம் அதிகபட்சம் பார்த்தீங்கன்னா, ஒருத்தங்க அவ்வப்போது வந்து, வீட்டில் உள்ள தங்கத்தையெல்லாம் வித்து காசாக்கச் சொல்லி நமக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. அந்த அம்மா தான் தமன்னா ஆன்'டி. ஹாஹா
நீக்குஉங்களை நர்சிங் படிப்புக்குச் சேரச் சொல்லி ஒருத்தர் சொல்வாங்க. அவங்க தமன்னா ஆன்'டியோட அக்கா ராதிகா ஆஆன்'டி.
போதுமா?
:))))
நீக்குஇப்போதுதான் உண்ணா நோன்பு தொடங்கியிருக்கிறேன். மெளன விரதம் அனுஷ்டிக்க ஆசைதான். ஆனால், அப்போதெல்லாம்,"மெளன விரதம் என்றால் பேசாமல் இருப்பது மட்டும்தானா?" என்ற மஹா பெரியவரின் கேள்வி நினைவுக்கு வந்து விடுகிறது.
பதிலளிநீக்குபதிலையும் சேர்த்து சொல்லிடுங்க. புண்ணியமா போகும்.
நீக்குநான் ஒரு காலகட்டத்தில் 95/96 ஆம் வருஷங்களில் வியாழக்கிழமை மௌன விரதம்னு இருந்திருக்கேன். ஆனால் அன்னிக்குத் தான் தொலைபேசி அழைப்பு வரும். வீட்டுக்கு முக்கிய விருந்தாளிகள் வருவாங்க. பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்ததால் அது குறித்து யாரேனும் வருவாங்க! யோசிச்சுப் பார்த்துட்டு விட்டுட்டேன். ஆனால் சாப்பிடாமல் எல்லாம் இருந்திருக்கேன். சந்தோஷி மாதா விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் (ராத்திரி நிலாவைப் பார்த்துட்டுச் சாப்பிடுவேன்.) என பல விரதங்கள் இருந்திருக்கேன். ஒரு கட்டத்தில் செவ்வாய்க் கிழமை விரதம் மறுநாள் புதன் அன்றூ கார்த்திகை, அடுத்த நாள் சஷ்டி எனத் தொடர்ந்து வர நிலைமை மோசமாக மருத்துவர் கடுமையான எச்சரிக்கை கொடுத்து விரதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முன்னரே சொல்லி இருக்கேனோ?
நீக்குதினம் அதிகாலையில் பேச்சும் சிந்தனையும் இல்லாத விரதம் - அரை மணி நேரம் - இருப்பது நாளடைவில் இத்தகைய “விரதம்” கடைபிடிக்க உதவும் என்பார்கள்.
நீக்குஇதை என்னிடம் ஒருவர் அதிகாலையில் சொன்னார்.
சுவாரஸ்யமான பதில்கள் இரசித்தேன் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குநலம் வாழ்க...
வணக்கம், வாங்க.
நீக்குஎங்கள் உறவில் ஒரு பெண்மணி மஹா பெரியவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதனால் வியாழக் கிழமைகளில் மெளனவிரதம் அனுஷ்டிப்பார், அல்லது அப்படி நினைத்துக் கொள்வார். வாயைத் திறந்து பேச மாட்டாரே தவிர மனசில் நினைப்பதையெல்லாம் அபிநயம் பிடித்து, பேப்பரில் எழுதி காண்பித்து என்று ஒரு பக்கம்,எரிச்சலையும்,இன்னொரு பக்கம் சிரிப்பையும் வரவழைப்பார். இப்படிப் பட்டவர்களை பார்த்துதான் மஹா பெரியவர் அப்படி ஒரு கேள்வி,கேட்டாருப்பாரோ?
பதிலளிநீக்குஅனுஷ் அனுஷ் என்று ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்!!
நீக்குபானுமதி சொல்வதைப் பார்த்ததும் குஜராத் ஜாம்நகரில் இருந்தப்போ எங்க பெண்ணின் சிநேகிதி இருந்த நவராத்திரி விரதம் நினைவில் வருது. பத்து நாட்களும் எச்சில் கூட விழுங்காமல் மௌன விரதம்+உண்ணா நோன்பு! அநேகமாக மொத்த குஜராத்தும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும்.
நீக்குஅரட்டைகள் தொகுப்பையும் ரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு> இதயத்துக்கும் உணர்வுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் காதலியிடம் உன்னை இதயத்தில் வைத்து பூஜிக்கிறேன் என்று பேத்தறாங்க?
பதிலளிநீக்குகிழக்கத்திய மானுடாசார தத்துவங்களில் சக்கர தத்துவம் பிரபலமானது. நிறைய மேற்கத்திய வேதாந்திகள் கூட இதை அபேஸ் பண்ணி சுய சித்தாந்தங்களாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இதுல பாத்தமுன்னா நாலாவது (உச்சந்த்லையில்னது உள்ளங்கால் வகைக்கு ஏழு சக்கரம் கீது) சக்கரமான அனாகதம் இதயத்தை குறிக்கிறது.. அந்த நாளில் இதயம்தான் மனித இயக்கத்துக்கு ஆதாரம் என்று நம்பினார்கள்.. காதல் மட்டுமல்ல எந்த உணர்வுக்கும் இந்த அனாகதம் தான் ஆதாரம்னு நம்பினாங்க. 1600 வரையில்.. அதை ஒரு paragraph தள்ளி சொல்றேன்.
இந்திய சீன பிற்கால எகிப்திய கலாசாரங்கள் இதயம் எத்தனை முக்கியம் என்று பல கதைகளில் சித்தரிக்கின்றன (நம்ம அஞ்சனா குமாரன் இதயத்தை விரித்து சீதாராமனைக் காட்டினது போல). மிகவும் மதிக்கக் கூடிய எதுவும் இதயத்தில் வைப்பதாகவே சொல்லப்பட்டது.
1600களில் விலியம் ஹார்வே குறுக்கிட்டு “ஐயா இதயம் எல்லாம் சரிதான், மனித இயக்கத்துக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் தான், இதயக் துடிப்பையும் கட்டுப்படுத்துவது மூளை நரம்பு தான் ஐயா” என்று சொல்வதற்கு முன் பல நூற்றாண்டுகளாக இதயம் பேசிவிட்டது.
அப்படியே இல்லாவிட்டாலும் கண்ணே உன்னை என் மூளை நரம்பில் வைத்து பூஜிக்கிறேன்னு சொன்னா ஒரு மாதிரி இருக்கும். அதை விடுங்க, கண்ணே உன்னை என் நிராகுல சக்கரத்தில் வைத்து பூஜிக்கிறேன்னு சொன்னா அசல் பேத்தல்னு கால்ல இருக்கிறதை கழட்டி இதயத்துல அடிச்சுட்டு போயிடுவாங்க.. அதனால அனாகதமே பெட்டரு..
சுவாரசியமான கேள்வினு நினைக்க்கிறேன்.. (இடக்கரடக்கல் for இதென்ன பேத்தலான கேள்வினு சொல்லலே.. really ponderworthy)
.
* உச்சந்தலையிலந்து உள்ளங்கால் வரைக்கும்
நீக்குவிரிவான விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் ரசனை.
பதிலளிநீக்குஉண்ணாவிரதம் எல்லாம் இருந்திருக்கிறேன். இப்பொழுது இல்லை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஏ.கே. பதில்கள் ஸ்வாரஸ்யம். இந்த வாரத்திற்கான கேள்வி பதில்களும் நன்று.
பதிலளிநீக்கு