திங்கள், 28 டிசம்பர், 2020

'திங்க'ட்கிழமை : பயனுள்ள பஜ்ஜி மாவு :: கௌதமன்



யாம் பெற்ற பேறு, பெறுக இவ்வையகம் எனும்  பரந்த நோக்கில் பகிரப்படும் தகவல். 

கண்டவர் விண்டிலர் என்றில்லாமல் - செய்பவர்கள் எல்லோரும், கண்டு, விண்டு தின்னலாம். 

நான் ஒரு முழுச் சோம்பேறி என்பதால், இயன்றவரை ரெடிமேட் தயாரிப்புகளை வைத்தே ஒப்பேற்றிவிடுவேன். 

சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். 

amazon ல பஜ்ஜி மாவு தேடினேன். 

பல தயாரிப்புகள் கண்ணில் பட்டன. MTR கூட ஒருமுறை முயற்சி செய்து பார்த்தேன். ஊஹூம் சரியா வரவில்லை. 

ஆனால், இதோ இந்த brand  வாங்கி பயன் படுத்தினேன். 

சூப்பரான பஜ்ஜிகள் தயார் செய்ய முடிந்தது. சுவையோ சுவை! 

நான் வாங்கிய பஜ்ஜி மிக்ஸ் இதுதான். 


வாங்க வேண்டியது, தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டியது. தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதம் வந்தவுடன், விருப்பபட்ட காய்களை வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து, சூடாக, சுவையாக சாப்பிட்டு மகிழுங்கள். 

நான் ஒரு  எக்ஸ்டென்ஷன் யுக்தியாக, அரைத்து வைத்துள்ள இட்லி மாவில் இந்த பஜ்ஜி மாவை சேர்த்து - அடை செய்து சாப்பிட்டதும் உண்டு. அதுவும் சுவையாக இருக்கும். 




====  

77 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று கேஜிஜி சாரின் கை வண்ணமா? வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பஜ்ஜி செய்த வித்த்தை படங்களோடு எழுதாமல் பஜ்ஜி மாவு பிராண்டுக்கு விளம்பரம் கொடுத்தது போலவே இருக்கு.

    குறைந்த பட்சம், இட்லியை குறுக்காக வெட்டினேன், பஜ்ஜி மாவில் தோய்த்து இட்லி பஜ்ஜி செய்தேன், பிரெட் பஜ்ஜி செய்தேன் என படங்களோட போட்டிருக்கலாம்.

    அது சரி... இந்த பிராண்ட் ஆன்லைனில் வாங்கியதா? எங்கு கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன்... 2 கிலோ 280 ரூபாய் (10 பாக்கெட், 200 கிராம்). இல்லைனா 1/2 கிலோ 140 ரூபாய்.

      பேசாம, ஆட்டா மாவு வாங்குங்க, ஒரு பாக்கெட் பஜ்ஜி மாவு 20 ரூபாய் என்று சொன்னால் வாங்கி டெஸ்ட் பண்ணலாம். 500 கிராமோ இல்லை 2 கிலோவோ வாங்கினால் மனைவியின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐ யார் சமாளிப்பது?

      பேசாம உங்களைப் பார்க்க வீட்டிற்கு வருபவர்களுக்கு 1 பாக்கெட் கொடுத்தால் நல்லது.

      நீக்கு
    2. 2 கிலோ மாவு 280 ரூபாயா? நான் கல்யாணமே பண்ணிடுவேனே! நமக்குக் கட்டுப்படி ஆகாது! இந்த விளையாட்டில் நான் இல்லை.

      நீக்கு
    3. நெல்லையாரே, "ஆட்டா" என்றாலே மாவு தான். பொதுவாக கோதுமை மாவைக் குறித்தாலும் அரிசி மாவை "சாவல் கி ஆட்டா" என்று சொல்லுவார்கள். கடலை மாவு என்றால் "பேசன்"

      நீக்கு
    4. நான்தான் சொன்னேனே - சோம்பேறிப் பிழைப்பு என்று. ஹோட்டல்களில் ஒரு பிளேட் பஜ்ஜி என்று ஆர்டர் செய்தால் மூன்று பஜ்ஜிகள் அல்லது நான்கு கொடுத்து நாற்பது / ஐம்பது ரூபாய் பில் போடுவார்கள். அதோடு கம்பேர் செய்தால் இந்த மாவு விலைகள் எல்லாம் ஒன்றும் இல்லை!!

      நீக்கு
    5. மாவு விலை பெரிய விஷயமில்லை. ஆனால் அளவு? பெங்களூர் வரும் வழியில் (கிருஷ்ணகிரி...) மங்களம் ஹோட்டலில் (நெடுஞ்சாலையில் இருக்கிறது, நல்ல ஹோட்டல்) 3 பஜ்ஜி கொண்ட ப்ளேட் 30 ரூபாய். ஆனால் 1/2 கிலோ பஜ்ஜி மாவை வைத்து என்ன செய்வது?

      எனக்குத் தெரிந்தவர் வீட்டில் தினமும் (அனேகமா) மாலை பஜ்ஜி போட்டு ஆளுக்கு 7-8 பஜ்ஜிகள் சாப்பிடுவாங்க. அப்படி வழக்கம் இருந்தால் 1/2 கிலோவோ இல்லை 1 கிலோவோ வாங்கலாம்.

      அப்புறம், கேசரி மிக்ஸ், ரவா மிக்ஸ் படம்லாம் போட்டு தி.பதிவு போடாதீங்க. அதை வைத்துப் பண்ணி, படங்கள் எடுத்துப் போட மறக்காதீங்க.

      நீக்கு
  3. பஜ்ஜி மாவு என்ற பெயரில் சீரகப் பொடி சேர்ப்பது, அதை இதைச் சேர்ப்பது என பல பிராண்டுகளும் கடுப்பேற்றுவது உண்மைதான்.

    எவனோ ஒரு பிராண்ட் சிறிய இட்லி மிளகாய் பொடி பாக்கெட் இலவசமாக்க் கொடுக்க, புதிய மிளகாய்ப்பொடி அரைக்காமல் அதை உபயோகித்து, இனிப்பான இட்லி மிளகாய் பொடியை மனுசன் திம்பானா என அசடு வழிந்ததும் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். நான் பல brand உபயோகித்த பின் இதை தேர்ந்தெடுத்து இதுவரை நான்கு முறை வாங்கி பயன்படுத்தி வருகிறேன்.

      நீக்கு
    2. ஒண்ணும் கேட்காதீங்க. இப்போல்லாம் காடரர் என்று சொல்லிக் கொள்பவர்களே எல்லாவற்றிலும் ஜீரகம் சேர்க்கின்றனர். புளிக்காய்ச்சலுக்குக்கூட ஜீரகம் சேர்க்கிறார்கள். முரளி வரதராஜன் என்றொரு காடரர், ஓம் காடரிங் சர்வீஸ் என நடத்தி வருபவர் எல்லாவற்றிலும் தேங்காய்ச் சாதம், எலுமிச்சைச் சாதம், புளியஞ்சாதம்னு எல்லாவற்றிற்கும் ஜீரகம் சேர்க்கிறார். சொல்லிப் பார்த்தேன், சாம்பாரில் இது போன்ற உணவு வகைகளில் ஜீரகம் சேர்க்க வேண்டாம் என்று. ம்ஹூம். விட்டுட்டேன். பொரிச்ச கூட்டில் கூட ஜீரகம். ஜீரகம் சேர்த்தால் நாங்க அதை மொளகூட்டல் என்போம். இப்போல்லாம் பொரிச்ச கூட்டே யாருக்கும் தெரியறதில்லை. மி.வத்தல், உ.பருப்பு, மிளகு, ஜீரகம் வறுத்துத்தேங்காயோடு அரைத்துவிட்டுக் கூட்டுனு பண்ணிட்டு அதைப் பொரிச்ச கூட்டு என்கிறார்கள். கஷ்டம், கஷ்டம்! சிலர் அதிலேயே புளியையும் கரைத்து விடுகிறார்கள்.

      நீக்கு
    3. பொரிச்ச குழம்புக்கும், பொரிச்ச கூட்டுக்கும் என்ன வித்தியாசம்?

      நீக்கு
    4. வீட்டில் சிலர் கேட்பார்களே என நினைத்து தான்கள் போட்டு, ரொம்ப அதிகமானாஅது பொரிச்ச கூட்டு. செய்து முடித்தபின் திடீர் விருந்தினர்கள் வந்து, அதனால் பொரிச்ச கூட்டில் வெந்நீர் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்தால் அது பொரிச்ச குழம்பு

      என்ன.. நான் சொல்வது சரிதானே ஹாஹா

      நீக்கு
    5. கீசா மேடம்- கேஜிஜி சார் சின்ன இடுகை செய்முறை இல்லாமல் போட்டா அது சிக்னேச்சராம். ஓம் காடரிங் சர்வீஸ் அவங்க சிக்னேச்சரான (தனித்துவம்) சீரகத்தை எல்லாத்திலும் சேர்த்தா அதை நீங்க குறை சொல்றீங்க. நியாயமாரே?

      இதெல்லாம் வத்தக்குழம்புக்கு பூண்டு போடுங்க, இட்லி மிளாப்படிக்கு வெல்லம் சேருங்க, அடைக்கு அரைக்கும்போது கைப்பிடி பூண்டு சேர்த்து அரைங்க என்பதுபோல தனுப்பட்ட ருசின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்

      நீக்கு
    6. அது சரி, நெல்லை, நீங்க வரச்சே நான் சாம்பார், ரசம், கூட்டு, மோர் எல்லாத்திலேயும் ஜீரகம் போட்டு மசால் வடையிலும் போட்டுப் பண்ணறேன். ஆனால் உங்களுக்கு மட்டும் தனியாக! எங்களுக்கெல்லாம் பிடிக்காது.

      நீக்கு
    7. @ஸ்ரீராம், பொரிச்ச குழம்புக்கு வறுத்து அரைத்தும் பண்ணலாம். வெறும் மி.பொடி, மிளகு பொடி போட்டுட்டு ஜீரகம்+தேங்காய் அரைச்சும் பண்ணலாம். பொரிச்ச குழம்பில் பாசிப்பருப்பு/எப்போவானும் து.பருப்பு கட்டாயம் சேர்க்கணும். பொரிச்ச கூட்டுக்கு ஏதேனும் ஒரு காய் இருந்தால் போதும். கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு இதே தி/பதிவில் முன்னர் போட்டிருக்கேன் படங்களோடு. அதைப் பாருங்க. பொரிச்ச கூட்டுக்குப் பருப்பெல்லாம் வேண்டாம். காயை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அரைத்துக் கொஞ்சமாய் சாம்பார்ப் பொடி, பெருங்காயம் போட்டு வெந்ததும் தேங்காய்+ஊறிய பச்சரிசி அல்லது அரிசி மாவு சேர்த்து அரைத்துக் கூட்டில் கலந்தால் போதும். தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, மி.வத்தல்+தேங்காய் வறுத்தும் கருகப்பிலையோடு சேர்த்துப் போடலாம்.

      நீக்கு
    8. //மசால் வடையிலும் போட்டுப் பண்ணறேன்.// - ஆஹா...அருமையாச் செய்யுங்க. அதற்கு அப்புறம் உள்ள டிரிப்பிலெல்லாம்...'அடடா... வெளில ஹோட்டல்ல சாப்பிட்டு வந்துட்டேனே...ஆஸ்ரமத்தில் சாப்பிட்டுட்டேனே...கோவில் பிரசாதம் நிறைய சாப்பிட்டுட்டேன் வயிறு ஃபுல்' என்பதுபோன்ற சாக்குப் போக்குகளையும் கேட்டுக்கொள்ளத் தயாரா இருங்க. ஹாஹா

      நீக்கு
    9. பாலிலே போட்டுக் கொடுத்துட்டாப் போச்சு! விடுவேனா!

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி ஆரோக்கியம் மிகுந்து வரப் பிரார்த்திப்போம். புதிய தொற்றிலிருந்து நம்மை நாமே காத்துக்கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  5. இன்னிக்கு நிலைய வித்வான்களின் கைவண்ணமாய்த் தான் இருக்கும் என எதிர்பார்த்தே வந்தேன். ஆனால் இங்கே கௌதமன் சார் சிக்னேச்சர் ட்யூனை மட்டும் போட்டுட்டுப் போயிருக்காரே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா, பஜ்ஜி செய்முறையும், பஜ்ஜிக்கான படங்களும் இல்லாமல் வெறும் மாவை மட்டும் காட்டினால் அது சிக்னேச்சர் ட்யூன் தானே! :)))) நெல்லை சொல்லி இருக்கார் போல!

      நீக்கு
  6. போயும் போயும் ஒரு பஜ்ஜி மாவுக்கு இத்தனை தேடலா? சரியாப் போச்சு போங்க! கடலை மாவு இருந்தாலே போதுமே! வீட்டில் இட்லி மாவு இருந்தால் அதோடு கடலைமாவைச் சேர்த்துக் கொஞ்சம் போல் உப்பு(இட்லிமாவில் உப்பு இருக்குமே) காரப்பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து பஜ்ஜி போட்டால் குண்டு குண்டாக உப்பிக் கொண்டு வரும் எண்ணெய் குடிக்காத பஜ்ஜிகளுக்கு நான் காரன்டி! இட்லிமாவு இல்லைனாலும் கவலைப்படாமல் கொஞ்சமாய் அரிசி மாவை (பொடி)ப் போட்டுப் பிடித்தால் கொஞ்சம் மைதாமாவையும் சேர்த்துக்கொண்டு உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து பஜ்ஜி போடலாம். இல்லைனாலும் வடக்கே போடுகிறாப்போல் தனிக்கடலைமாவிலும் போட்டுக்கலாம். போண்டா எல்லாம்(உ.கி.வெஜிடபுள்) அப்படித்தானே போடறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனா எல்லோரும் நல்லா நினைவு வச்சுக்குங்க. கொஞ்சம் அரிசி மா, எவ்வளவு கடலை மாவுக்கு எவ்வளவு இட்லி மாவு, துளி என்பது எவ்வளவு - இதற்கெல்லாம் அளவு வேணும்னா நீங்க திருவரங்கத்துக்குப் போய்தான் கேட்கணும்.

      இன்னொரு கீதா ரங்கன் இருக்காங்க. அவங்க கண்ணளவு கையளவு சொல்வாங்க.

      ஆகமொத்தம் நாமதான் தலையைப் பிச்சுக்கணும்

      நீக்கு
    2. அடடே..  இட்லிமாவில் முயற்சித்தது இல்லையே...   ஒருதரம் பார்த்துடணும்!

      நீக்கு
    3. குரோம்பேட்டை சி எல் சி ரோடில் ஒரு நாயர் மாலை நேரங்களில் வாழைக்காய் பஜ்ஜி போட்டு விற்பது உண்டு. பஜ்ஜி மாவில் கொஞ்சம் உப்பு போடுங்க நாயரே என்று சொன்னால் சரி என்று தலை ஆட்டுவார். ஆனால் மீண்டும் அதே உப்பில்லாத பஜ்ஜிதான் போடுவார். ஆனாலும் சூடாக, சுவையாக இருக்கும்.

      நீக்கு
    4. ரோட்டுக் கடைகளில் போடும் பஜ்ஜிகள்போல ஏன் வீட்டில் வருவதுல்லை? - புதன் கேள்வி

      நீக்கு
    5. அடுத்த சந்தேகம்..... எங்க பஜ்ஜி செய்த படங்கள்லாம் போட்டோம்னா, பஜ்ஜி மிக்ஸ் கவர்ல உள்ள மாதிரியே அழகா உப்பலா வராது என்ற காரணத்தினால செய்த பஜ்ஜி படங்களைப் போடவில்லையா கேஜிஜி சார்?

      நீக்கு
    6. படம் எடுத்தேன். ஆனால் மொபைல் காலரியில் அவசரத்திற்கு தேடிக் கிடைக்கவில்லை.

      நீக்கு
    7. அதெப்படி? மொபைல் காலரியில் எல்லாப் படங்களும் சேர்ந்து தானே இருக்கணும். பஜ்ஜி படங்கள் மட்டும் எப்படிக் காணாமல் போனது? காக்காய் தான் தூக்கிப் போய் இருக்கணும்.

      நீக்கு
    8. கணினிக்கு அவற்றை ட்ரான்ஸ்பர் செய்தபோது எந்தப் பெயரில், எங்கே சென்று மாட்டிக்கொண்டது என்று தெரியவில்லை. படங்களை சேமிக்கும்போது மின்நிலாவுக்காக - மீம்ஸ் தயாரிக்க, என்று பல கோப்புகளில் போட்டு வைப்பேன். சிலவற்றை எக்ஸ்டர்னல் டிரைவ் ஸ்டோரேஜ் என்னும் பெரும் கடலுக்கும் செல்லும். இந்த பஜ்ஜிகள் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுவிட்டன !

      நீக்கு
  7. உங்களுக்கு ரெடிமேட் தான் வேணும்னா மல்லிகா பத்ரிநாத்தின் கைவண்ணத்தில் வந்தவை கொஞ்சம் பயன்படுத்தறாப்போல் இருக்கும். அவங்களோட அடை மாவு நம்ம ரங்க்ஸ் ஊட்டியில் இருக்கிறச்சே வாங்கிப் பண்ணினேன் என்று சொல்லுவார். நான் இந்த ரெடிமேட் விஷயத்துக்கெல்லாம் போவதே இல்லை. எல்லாவற்றிலும் அது திப்பிசமாக இருந்தாலும் நம்ம கைவண்ணம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திப்பிசம் எல்லாம் ஆன் லைன் ல வாங்க முடியாது!

      நீக்கு
    2. ஆன்லைனில் வாங்கி திப்பிசம் பண்ணலாம்.  நல்ல வந்தால் திப்பிசத்தை ஆன்லைனில் விற்றுவிடலாம்!

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
    என்றென்றும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  10. பஜ்ஜி!...

    அப்படியே தேநீரும் வழங்கியிருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஜ்ஜியே தரலை.. இதுல தேநீர் வேற கேட்கறீங்களே

      நீக்கு
    2. ஹா. ஹா.இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதில் நான் இன்னமும் காலை காப்பியே குடிக்கவில்லை என இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. வருகிறேன்.🙏.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. காலை நேரத்தில், அதுவும் இந்த மார்கழி குளிரில் சூடான பஜ்ஜிகளை (பஜ்ஜி செய்யும் மாவை) நினைவூட்டி அறிமுகபடுத்தியுள்ளீர்கள். முன்பு எப்போதோ ஒரு முறை ஒரு அவசரத்திற்கு ஈகிள் பிராண்ட் பஜ்ஜி மாவு உபயோகபடுத்தியதாய் நினைவு. அதுவும் நன்றாக வந்திருந்தது. அது வாங்கும் காசுக்கு, நம் வீட்டிலேயே கடலை மாவு அரிசி மாவு தாராளமாக வாங்கி கலந்து செய்து விடலாம் என்பதால், இது போல் நிறைய வகைகளை இதுவரை வாங்கியதேயில்லை. ஆனால், இப்போதுள்ள கால கட்டத்தில், அனைவருக்கும் ரெடிமேட் உணவுகள்தான் செளகரியமாக உள்ளது. நானும் தாங்கள் அறிமுகபடுத்தியதை குறித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது கிட்ஸ், எம்டிஆர் போன்ற ரெடிமேட் உணவுகள் (அந்த பேக்கை வெந்நீரில் பத்து நிமிஷம் வைத்திருந்தால் பொங்கலோ, சீரக சாதம், சப்பாத்தி சைட் டிஷ் போன்றவை ரெடியாயிடும். ஆனால் அது அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்பதுபோல்தான் இருக்கும். நான் பிலிப்பைன்ஸ் பயணத்தின்போது உபயோகித்திருக்கேன்.

      ரெடிமேட் பஜ்ஜி மாவு உள்ளூரில் வேலையை சுலபமாக்கும். அது அதிகம் விற்பனை ஆவதில்லை போலிருக்கு. அதனால்தான் மற்ற மிக்ஸ்களோடு பல சமயங்களில் இலவசமா கொடுக்கறாங்க

      நீக்கு
    2. நான் ரெடிமேட் மாவுகளை பயன்படுத்தக் காரணம் - ingredients என்ன விகிதத்தில் சேர்க்கவேண்டும், என்ன பதம் என்றெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. வேண்டிய அளவு எடுத்துக்கொண்டு, குறைந்த நேரத்தில் வேண்டிய வஸ்துவை தயார் செய்து சாப்பிட்டுவிடலாம்.

      நீக்கு
    3. நீங்க சொல்வது சரிதான் கௌதமன் சார். ஆனால் இரண்டு பேருக்கு மட்டும் எனில் இந்த திடீர்த்தயாரிப்புகள் சரியா இருக்கலாம். பெரிய குடும்பங்களுக்கு எல்லாம் இது கொஞ்சம் கட்டுப்படி ஆகாது என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
    4. நெல்லை சொல்லுவது போன்ற உணவு வகைகள் நான் விமானங்களில் கொடுக்கையில் தான் சாப்பிட்டிருக்கேன். போஹா, உப்புமா, பொங்கல் போன்றவை இப்படித்தான் வெந்நீர் சேர்த்துக் கொடுத்துப் பத்து நிமிஷம் கழிச்சுச் சாப்பிடச் சொல்லுவாங்க! அதுவும் இன்டிகோவில் இப்படித்தான் வரும்!

      நீக்கு
    5. // இரண்டு பேருக்கு மட்டும் எனில் இந்த திடீர்த்தயாரிப்புகள் சரியா இருக்கலாம். பெரிய குடும்பங்களுக்கு எல்லாம் இது கொஞ்சம் கட்டுப்படி ஆகாது என்றே நினைக்கிறேன்.// ஆம், இது 100% சரியே.

      நீக்கு
  12. என்னாதூஊஊ கெள அண்ணன் பஜ்ஜி செய்திட்டாரோ ஆவ்வ்வ்வ்வ்... அமேசனில் இப்போ கிடைக்காத பொருட்களே இல்லையே... இனிமேல் கெள அண்ணன் எனபோட்டுத் தேடினாலும் அமேசனில் கிடைக்கலாம் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  13. அதுசரி பஜ்ஜிப் படங்கள் எங்கே கெள அண்ணன்?.. சாப்பிட்டு முடிச்ச பின்புதான் போஸ்ட் போடும் நினைவு வந்ததோ...

    பதிலளிநீக்கு
  14. நல்ல செய்தி. நாளையே முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அந்தக் காலங்களில் எங்க வீடுகளில் பஜ்ஜி செய்யும் முறையே தனியாக இருக்கும். கடலைமாவெல்லாம் கடைகளில் அவ்வளவு எளிதாய்க்கிடைத்துவிடாது. ஆகவே தீபாவளிக்கு மாவு திரிக்கையில் கூடவே திரித்து வைத்துக் கொள்வார்கள். ஆனாலும் பஜ்ஜிக்கு மாவு கரைப்பது தனி முறை. நான்கு பேருக்கு பஜ்ஜி எனில் ஒரு கைப்பிடி அரிசியும், துவரம்பருப்பும் ஊற வைக்கணும். அதிலேயே மி.வத்தல், பெருங்காயம் சேர்த்திருப்பாங்க. அதனால் நன்கு களைந்து ஊற வைக்கணும். இரௌ கைப்பிடி உளுந்து தனியாக ஊற வைக்கணும். இரண்டு மணி நேரமாவது ஊறின பின்னர் உளுந்தை முதலில் கொடகொடவென அரைத்து எடுத்துக் கொண்டு அரிசி+துவரம்பருப்புக் கலவையைக் கொஞ்சம் கெட்டியாக அரைப்பார்கள். பின்னர் இதில் தேவையான அளவு கடலைமாவு சேர்த்துக் கரைத்துக் கொண்டு பஜ்ஜி போடுவார்கள். பஜ்ஜி தட்டைதட்டையாக மெலிதாக வராமல் நன்கு உப்பிக் கொண்டு பெரிது பெரிதாக வரும். இப்படிச் செய்ய முடியலைனால் இட்லி, தோசைக்கு அரைக்கையில் அரைத்த உடனே அந்த மாவில் கடலை மாவு சேர்த்துக் கொண்டு உப்பு, காரம் தேவைக்குப் போட்டுக் கலந்து பெருங்காயப் பொடி சேர்த்து பஜ்ஜிகளைத் தயாரிக்கலாம். இவை இரண்டு முறைகளிலும் காராவடை, உ.கி.போண்டா போன்றவையும் பண்ணிக்கலாம். ஏற்கெனவே சில முறை சொன்ன நினைவு.

    பதிலளிநீக்கு
  16. அட... இன்னிக்கு சமையல் குறிப்பிற்குப் பதிலாக பஜ்ஜி மாவுக்கு விளம்பரம்! சமையல் குறிப்பு எழுத ஆளே இல்லாமல் போயிற்றா என்ன? களத்துல இறங்க வேண்டும் போல! ஹாஹா....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!