புதன், 7 ஏப்ரல், 2021

மத்தவங்க கேட்காமலேயே உதவுவீங்களா?

 

நெல்லைத்தமிழன் : 

1.  ஒரு பிரச்சனைன்னு வந்தால், மத்தவங்க கேட்காமலேயே உதவுவீங்களா இல்லை அவரவர் விதிவழில தேவையில்லாமல் குறுக்கிடக்கூடாதுன்னு நினைப்பீங்களா?  

# சாதாரணமாக கேட்காமல் உதவி செய்வது சில சங்கடங்களை ஏற்படுத்த வல்லது.  உதவி ஏதும் தேவையா எனக் கேட்டு, அதன் பின் உதவ சில சந்தர்ப்பங்கள் கிடைத்ததுண்டு.

& = # சொல்வதுதான். 

2.  மனித நேயம், இரக்கம் என்றெல்லாம் எழுதிக்கொண்டே சிலரிடம்  வெறுப்பு காண்பிப்பவர்களைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?    

# சிலர் (வேறு)சிலரை அகாரணமாகக்கூட வெறுப்பது தவிர்க்க முடியாத உண்மை. உலகம் பலவிதம் அதிலே இவரும் ஒருரகம் என நினைப்பேன்.

& selective  மனித நேயம் + இரக்கம் கொண்டவர்களோ! 

3.  அப்பா அம்மாவிடம், சின்ன வயசுல தைரியமாக உங்க பிரச்சனைகளைச் சொல்வீங்களா இல்லை அதைப்பற்றிப் பேசவே மாட்டீங்களா?  

# பிரச்சினை எதானாலும் அதுபற்றிப்பேச சுதந்திரம் இருந்தது உண்மை எனினும் எல்லாவற்றையும் பேசத் துணிந்ததில்லை.  சில ஆப்த நண்பர்களிடம் பேசினதுண்டு. காரணம் நெருக்கம்தான். 

& சின்ன வயசுல என்னுடைய அம்மா, அப்பாவுக்குத் தெரியாத பிரச்சனை எதுவும் எனக்கு வந்ததில்லை. 

4. யாரிடம் உங்களால் எல்லாவற்றையும் மனம் திறந்து பேச முடிந்திருக்கிறது? என்ன காரணம்?  

& திருமதியிடம் மனம் திறந்து பேசுவேன். காரணம் எல்லா விஷயங்களிலும் எப்பவும் எனக்கு அவர் முழு ஆதரவு. 

5. உங்க வீட்டுக்கான காய்கறி பழங்களை நீங்களே பார்த்து வாங்கிவருவீங்களா இல்லை ஆன்லைனிலோ இல்லை யார் எதை வாங்கினாலும் கவலைப்பட மாட்டீங்களா?

 # வீட்டு அலுவல்களில் நேரடி ஈடுபாடு விலகிப் போய் வெகு நாட்கள் ஆகி விட்டன.

& நானும் வாங்குவதுண்டு, வாங்குபவரிடம், எனக்கு எது பிடிக்கும் / பிடிக்காது என்று முன்பே சொல்லிவிடுவேன். ஆன் லைன் ஆர்டரும் செய்வதுண்டு. FTH Daily app மூலம். 

கீதா சாம்பசிவம் : 

1) "நீட்" தேர்வுக்கான காலம் வந்து கொண்டு இருக்குனு நினைக்கிறேன்.அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தேவையா? தேவை இல்லையா?

& தேவைதான். 

2. மருத்துவப் படிப்புப் படிக்கும் மாணாக்கர்களுக்குப் பல்வேறு விதங்களில் தேர்வுகள் வைத்துத் தேர்வு செய்யும் வெளிநாட்டுப் படிப்பு முறை இங்கே உள்ளவர்கள் அறிவார்களா?

& இங்கே உள்ளவர்களைத்தான் கேட்க வேண்டும். (எனக்குத் தெரியாது) 

3. தேர்வே இல்லாமல் மருத்துவமோ, பொறியியலோ படிப்பதைஆதரிக்கிறீர்களா?

& இல்லை. அப்புறம் பரிட்சையே எழுதாமல் பாஸ் செய்யவேண்டும் என்றும் ஒரு நிலை ஏற்படலாம்! 

4. "நீட்" தேர்வுக்கு உள்ள எதிர்ப்பு ஜேஈஈ, ஐஐடி, மற்றும் சிவில் சர்வீஸ், எம்பிஏ படிப்புக்களின் தேர்வுக்கு ஏன் இருப்பதில்லை? அதில் மட்டும் தேர்வில் மாணாக்கர்களைத் தேர்வு செய்வது சரியா?

& கல்வித் தந்தைகள் அடிக்கும் கொள்ளைகள்தான் காரணம். மருத்துவக் கல்லூரி சீட் ஒவ்வொன்றுக்கும் பல லட்சங்கள் கொள்ளை அடித்துப் பழக்கம் ஆனவர்கள். மற்ற admission எல்லாம் அவ்வளவு கொள்ளை அடிக்க முடியாது. 

5.உயிர்காக்கும் படிப்புக்கு மாணாக்கர்களை அவங்க விரும்புகிறார்கள் என்பதற்காகத் தேர்வு செய்ய முடியுமா?

1 - 5

# நீட் தேர்வுக்கு எதிர்ப்பு என்பது விவேகம் சார்ந்த முடிவு அல்ல. அது வோட்டுகள் சேகரிக்க ஒரு யுக்தியாகச் செய்யப் படுவது. 

& முடியாது. 

6. முன்பு இருந்த படிப்புக் கட்டணம் அதிகமாக இருந்ததால் பலர் பாதியில் படிப்பை விட்டு விட்டுப் போய்விட்டார்கள். இது ஏற்கக் கூடியதா? அதன் பின்னர் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

# கட்டணம் காரணமாகப் படிப்பை பாதியில் நிறுத்துவது ஏதோ ஆயிரத்தில் ஒரு நிகழ்வு. இதில் ஏற்கவோ எதிர்க்கவோ ஏதுமில்லை. இயன்றால் உதவ வேண்டிய விஷயம்.

7. நீட் தேர்வைக் காங்கிரஸ் தன் ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வந்துவிட்டது. அப்போது அதை ஆதரித்தவர்கள் பின்னால் எதிர்ப்பது ஏன்?

 # வேண்டாத மாமியார் கைபட்டால் குற்றம் கால்பட்டால் பாபம்.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

இந்தக் கால குழந்தைகளுக்கு கதை சொல்லும் பொழுது, தராசு போன்ற எளிய வார்த்தைகள் கூட புரிவதில்லை. அதை weighing scale என்று ஆங்கிலத்தில் சொல்ல வேண்டியிருக்கிறதே?  இந்த நிலைக்கு என்ன காரணம்?

# நம் தவறுதான் காரணம். இங்லீஷ் நாலெட்ஜ் முக்கியம் என்று எண்ணி தமிழைத் தவிர்த்ததும் பின்தள்ளியதும் நாம்தானே.

& கொஞ்சம் யோசிக்க வேண்டிய நிலைதான். இந்தக் காலத்தில் பல பதின்ம வயது குழந்தைகளுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியவில்லை. 

ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் எதிரியாக இருப்பது பெருமையாக  கருதப்படுகிறது. வீரம் என்று கொண்டாடப் படுகிறது, ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு எதிரியாக இருப்பது இழிவாக பேசப்படுகிறதே?

# பகைவரை வெல்வது வீரம். பொறாமை அல்லது தன்னலம் காரணமாக பகைமை பாராட்டுவது சிறுமை. மற்றபடி ஆண் பெண் பேதம் காரணமாக அபிப்பிராயம் மாறக்கூடாது.

& யார், யாரை, எதற்காக எதிரியாக நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியப் பிரச்சனை. மாமனார் vs மாப்பிள்ளை, மாமியார் vs மருமகள் என்றெல்லாம் பார்த்தால் எதுவும் வீரம் கிடையாது. 

 = = = = =


76 கருத்துகள்:

 1. //அதை weighing scale என்று ஆங்கிலத்தில் சொல்ல வேண்டியிருக்கிறதே? இந்த நிலைக்கு என்ன காரணம் ?

  நம் தவறுதான் காரணம். இங்லீஷ் நாலெட்ஜ் முக்கியம் என்று எண்ணி தமிழைத் தவிர்த்ததும் பின்தள்ளியதும் நாம்தானே//

  ஸூப்பர் பதில் ஜி இரசித்தேன்

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் .என்றும் எல்லோரும் நல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 3. கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம். எனக்கு ஏன் கேள்விகளே தோன்றுவதில்லை என்று கேட்கத் தோன்றுகிறது:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..   ஹா..   அதற்கு பதிலும் நீங்கள்தான் அளிக்க வேண்டும்!!

   நீக்கு
  2. கேள்விகள் எத்தனையோ. பதில்கள் சொல்ல முடியாதவை அவை.
   மற்றவர்களின் விசாரணையில்
   கழிகிறது என் நேரம்:)

   நீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 5. “”இங்க்லிஷ் நாலெட்ஜ்”” மிக ரசித்தேன்.!

  பதிலளிநீக்கு
 6. எதிர்ப்பது என்றும் இடத்தையும், மனிதரையும் பொறுத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைம்மா.   மனதையும் என்று கூட சேர்த்துக் கொள்ளலாம்!

   நீக்கு
  2. ஆமாம் மா. மனதுக்கு ஒத்துக் கொள்ளாத விஷயத்துக்கு எதிர்க்க தைரியம் வேண்டும்.

   நீக்கு
 7. ஒருவர் சிரமப்படுகிறார் என்றால் உதவுவது நன்மையே.
  ஆனால் நம் உதவி உபத்திரவம் ஆகாமல்
  இருக்க வேண்டும்.
  அந்த உதவி செய்பவர்கள் முக்கால் வாசி
  பெற்றோர்.
  நண்பர்களிடம் சொன்னால் உதவி கிடைக்கலாம்.
  மிகவும் மான வமானம் பார்ப்பவர்களிடம் மிக எச்சரிக்கையாகத்
  தான் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. 4. யாரிடம் உங்களால் எல்லாவற்றையும் மனம் திறந்து பேச முடிந்திருக்கிறது? என்ன காரணம்? ///கணவரிடம் ,அதற்குப் பிறகு சகோதரர்களிடம்.
  எப்போதுமே ஆதரவு கிடைக்கும் . தீர்வுகளும் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 9. .. இந்தக் காலத்தில் பல பதின்ம வயது குழந்தைகளுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியவில்லை.//

  டமிள்? நோ! ஐ டோண்ட் நோ.. காண்ட் ஸ்பீக் ! - எனச் சொல்லும் யுவர்கள் அதிகமாகிவருகிறார்கள். அப்படி தங்கள் வாரிசுகள் சொல்வதைக் கேட்டு, முகத்தில் பெருமை மின்ன நிற்கும் பெற்றோர்கள் அருகே !

  பதிலளிநீக்கு
 10. //ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் எதிரியாக இருப்பது பெருமையாக கருதப்படுகிறது. வீரம்// - என்னா கேட்டிருக்காங்க கீசா மேடம்? இரண்டு சகோதரர்களிடையே கோபம் வந்து எதிரிபோல இருந்தால் அது வீரமா? வலிமையான ஒருவன், எளிய ஏதுமிலியிடம் தன் ஆண்மையைக் காட்டுவது வீரமா? இல்லை ராணி மங்கம்மா, போரில் தன்னை எதிர்த்தவர்களை, அது பெண்களாக இருந்தாலும் எதிர்த்தது இழிவா?

  இடத்தைப் பொறுத்து எந்தச் செயலுக்கும் அர்த்தம் மாறும்படும் அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீ சா மேடமா !! அவர் கேட்கவில்லையே!

   நீக்கு
  2. பா.வெ. மேடம்... ஹாஹா மனசுல கீசா மேடமே இருப்பதால் இந்தத் தவறு

   நீக்கு
  3. ஏதோ ஒரு மேடத்தை அட்டாக் செய்ய இன்றைய நாள்?

   நீக்கு
  4. //பா.வெ. மேடம்... ஹாஹா மனசுல கீசா மேடமே இருப்பதால் இந்தத் தவறு// கடவுளே இந்த நெல்லையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள். இல்லாததையும்,பொல்லாததையும் சொல்லி எங்களுக்குள் சண்டை மூட்டி விடப் பார்க்கிறார். இந்தக் கேள்வியை இரண்டு வாரங்களுக்கு முன்னரே கேட்க நினைத்தேன். மறந்து விட்டதால் லேட்டாக கேட்டேன். எந்த விதத்திலும் நான் கீதா அக்காவை என் எதிரியாக நினைக்கவில்லை. அவரும் அப்படித்தான்.  எனக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். 

   நீக்கு
  5. //ஏதோ ஒரு மேடத்தை அட்டாக் செய்ய இன்றைய நாள்?// இருக்கலாம், என்னை அட்டாக் செய்ய நெல்லை இந்த நாளை பயன்படுத்திக் கொள்கிறார் என்று நினைக்கிறேன். 

   நீக்கு
  6. கேள்வி பதில்களை ஸ்வாரஸ்யமாக்கலாம் என்ற நோக்கில் கேட்கப்படும் கேள்விகளை இப்படி திரிப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது. 

   நீக்கு
  7. அடக் கடவுளே..தமிழைப் புரிந்துகொள்வதிலும் குழப்பமா? என் மனதில் கீசா மேடமே இருந்ததால், பா.வெ. என எழுதுவதற்குப் பதிலாக கீசா மேடம் என்று எழுதிவிட்டேன்.... கோனார் நோட்ஸ் போறுமா?

   நீக்கு
  8. இரண்டு பேருமே பெஞ்ச் மேலே ஏறி நில்லுங்க. நான் சொல்றவரைக்கும்.

   நீக்கு
  9. இவர் யாரைச் சொல்கிறார்? இங்க மூன்று நாலு பேர் இருக்கோமே... நிச்சயம் என்னைச் சொல்லியிருக்கமாட்டார்...ஹிஹி

   நீக்கு
  10. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நெ.த. உங்களையும் பா.வெ. இரண்டு பேரையும் தான்! எப்போப் பார்த்தாலும் அவர் அடிச்சுட்டார், இவங்க கிள்ளிட்டார்னு ரெண்டு பேருக்கும் சண்டை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  11. நல்லவேளை ஆண் வாத்தியார் இல்லை. அவங்கன்னா, கண்ணை மூடிக்கிட்டு என்னை மட்டும் பெஞ்சு மேல ஏத்திவிட்டிருப்பாங்க. பரவாயில்லை..இப்போ பேச்சுத் துணைக்கு ஆள் இருக்கு

   நீக்கு
 11. நீட் தேர்வு - இது சம்பந்தமான எல்லா எதிர்ப்புகளுமே அரசியல். அதில் அர்த்தம் காண்பது கடினம். இதனை எதிர்ப்பவர்கள், நீட் தேர்வுக்காக எதிர்க்கவில்லை, பாஜகவை எதிர்க்க ஒரு சான்ஸ் என்பதால்தான் எதிர்க்கிறார்கள் என்பது என் எண்ணம். கிராமப்புற மாணவர்களைப்பற்றி ரொம்பவே கவலைப்படும் இவர்கள் (இவர்களில் யாருமே கிராமங்களில் இல்லை, தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்திருக்க மாட்டார்கள்), ஏன் 90 சதவிகித இடங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கணும் என்று குரல் கொடுப்பதில்லை?

  பதிலளிநீக்கு
 12. கேட்டோ கேட்காமலோ உதவியை, வாழ்நாள் முழுவதும் நன்றியுணர்வுடன் வாழ்பவர்கள், அதை நனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு எனக் கருதி செய்து விட்டால், அந்நிகழ்வே மறந்து போகும் - தொடர்ந்து செய்வதால்...!

  செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
  வானகமும் ஆற்றல் அரிது

  மேலும் 102 - 110

  பதிலளிநீக்கு
 13. //கல்வித் தந்தைகள் அடிக்கும் கொள்ளைகள்தான் காரணம். மருத்துவக் கல்லூரி சீட் ஒவ்வொன்றுக்கும் பல லட்சங்கள் கொள்ளை அடித்துப் பழக்கம் ஆனவர்கள். மற்ற admission எல்லாம் அவ்வளவு கொள்ளை அடிக்க முடியாது.// Very true. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 30 வருடங்களுக்கு முன்பு, PG course படிக்கவும், காசு கொடுத்தால் சீட் என்று இருந்தது. அப்போ நிறைய கல்லூரிகள் பணம் பண்ணினர் (அப்போதைய காசு 10-15 ஆயிரம்னு வச்சுக்கோங்க). இப்போதும் கல்லூரி அட்மிஷனுக்கு நிறைய பணம் கொடுக்கும் தேவை இருக்கு. ஆனால் மருத்துவக் கல்லூரிகளில் அது கோடிக்கும் அதிகமாக இருக்கிறது (5 வருடங்களுக்கு முன்பு, ராமசந்திரா மெடிக்கல் காலேஜில் 1 1/2 கோடி அட்மிஷனுக்கு. 90ல், அது 5 லட்சமாக இருந்தது)

   நீக்கு
 14. வினாக்களும்
  விடைகளும் ரசனை.. ரசனை..

  பதிலளிநீக்கு
 15. ஆனாலும் தமிழை அழித்தவர்கள் தமிழர்களே.. அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமிழ் நாட்டின் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே!..

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. மிகவும் ரசித்தேன். முதல் கேள்விக்கு தந்த பதில் சிறப்பானது.
  நாம் உதவி என்று செய்யப் போனாலும் சில சமயங்களில் அவர்களுக்கு அது உபத்திரவம் ஆகி விட தேவையில்லாத வெறுப்பு வந்து விடுகிறது. உதவி செய்யும் சமயங்களை இறைவன்தான் நிர்ணயித்து தர வேண்டும்.

  இன்றைய கேள்விகளுக்கு அத்தனை பதில்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமலா ஹரிஹரன். என்றென்றும் மன மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழவும் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமலா! உங்களுக்கு சந்தோஷத்தையும், ஆரோக்கியத்தையும் இறைவன் அருளட்டும். 

   நீக்கு
  3. கமலா ஹரிஹரன் மேடத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். விரைவில் நல்லதொரு பதிவினைப் போட்டு, அதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிங்க. ஹாஹா

   நீக்கு
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமலா அக்கா..

   நீக்கு
  5. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

   இன்று நான் எழுதி வெளியிட்ட என் பதிவில் உடனடியாக வந்து சொன்ன வாழ்த்துக்களுக்கும்,உடனடியாக இங்கும் வந்து தந்த தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும்,மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  6. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன் சகோதரி

   தங்கள் அன்பான வாழ்த்திற்கும், மனம் நிறைந்த இனிய பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  7. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

   தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்வுடனான நன்றிகள் சகோ.

   /விரைவில் நல்லதொரு பதிவினைப் போட்டு, அதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிங்க. ஹாஹா/

   ஹா.ஹா.ஹா. இன்று பதிவை போட்டு விட்டு உங்கள் அனைவரின் கருத்துக்காக காத்திருக்கிறேன். சகோதரிகள் கீதா சாம்பசிவம் வல்லிசிம்ஹன் அவர்களை தவிர்த்து யாருமே இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை. என் கைபேசியில் கருத்துரைகளுக்கு பதில் சொல்வதற்கு தாமதமாவதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், ஓரிரு நாட்களில் பதில் அளித்து விடுவேன் என இன்றைய தினத்தில் உறுதிமொழி எடுக்கவும் இறைவன்தான் துணை புரிய வேண்டும். ஹா. ஹா. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  8. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

   தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  9. சில சமயங்களில் சில வேலைகளில் பிஸியாக இருந்துடுவேன். இணையத்துக்கு வந்து கருத்தெழுதுவது குறைந்துவிடும்.

   கவிதைலாம் எழுதிக் கலக்கறீங்க கமலா ஹரிஹரன் மேடம்..

   நீக்கு
  10. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

   உங்கள் கருத்துக்கு நானும் விளையாட்டாகத்தான் குறிப்பிட்டேன். உங்கள் வேலை பளுவிலும் உடனே என் பதிவுக்கு வந்து பாராட்டி கருத்துக்கள் தந்ததற்கு மிக்க நன்றி. உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள்தான் என் எழுதும் ஆவலை மங்காமல் தந்து கொண்டுள்ளது. நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 17. //ஒரு பிரச்சனைன்னு வந்தால், மத்தவங்க கேட்காமலேயே உதவுவீங்களா இல்லை அவரவர் விதிவழில தேவையில்லாமல் குறுக்கிடக்கூடாதுன்னு நினைப்பீங்களா? //

  குறிப்பறிந்து செய்வது நலம் .சிலரால் எதையும் உதவி கேட்கும் மனநிலையில் இருக்க மாட்டாங்க அப்போ நாமே உதவி செய்து அதுவும் வலக்கை செய்வது இடகைக்கு தெரியாமல் உதவுவது நல்லது . 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறிப்பறிந்து செய்தாலும் அதனால் தொல்லைகள் அனுபவித்தது உண்டு! அதற்கு என்ன செய்யலாம்? :)))))

   நீக்கு
  2. கேட்காமலேயே உதவுவது, அபூர்வமாகத்தான் சரியாக இருக்கும் (ஒருவர் கஷ்டப்படுவதை பிறர் மூலமாக நாம் தெரிந்துகொண்டு, நம்மால் உதவக்கூடியதுக்கு). பிறருடைய குடும்பச் சண்டைகளிலோ, மற்றவற்றிலோ அனாவசியமாக மூக்கை நுழைக்கக்கூடாது என்பது என் அபிப்ராயம்.

   (இப்பவா இந்த இடத்துக்கு பிரயாணம் செய்யப் போறீங்க.. அங்க கொரோனா ரொம்ப ஜாஸ்தியா இருக்காம் என்றெல்லாம் சொன்னால், இவன் வாயை வச்சுட்டானா... அப்போ உருப்பட்ட மாதிரிதான் என்ற பேச்சைக் கேட்கணும். நிச்சயிக்கப் போகும் அந்தப் பெண்...என்று எதையும் நம்ம வாயால் சொல்லக்கூடாது...பெரிய லிஸ்ட் இருக்கு..ஹாஹா

   நீக்கு
  3. குறிப்பறிந்து உதவுதல்ன்னா இவங்க எதோ துன்பத்தில் இருக்காங்க என்பதை அறிந்து அத்துன்பத்தை நீக்கல் :) ஒருவருக்கு ஏதேனும் உதவி அவசியமா இருக்கும் ஆனா கேட்க தயக்கமா இருக்கும் அதை சொன்னேன் மற்றபடி படிப்பு வேலை வீடு ..டிராவல் பெண் எடுத்தால் எல்லாம் நாம் நுழையக்கூடாது ஏரியா 

   நீக்கு
 18. ///2.  மனித நேயம், இரக்கம் என்றெல்லாம் எழுதிக்கொண்டே சிலரிடம்  வெறுப்பு காண்பிப்பவர்களைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?    //
  கிக்கிய்ய் :)  அதை வெறுப்புன்னு சொல்றதை விட நானும்  சிலரை அவாய்ட் செய்ததுண்டு பிரச்சினைகள் வளராமல் தடுக்க 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், சொந்தங்களிலும், நட்பு வட்டத்திலும் சிலரை ஒதுக்கும்படி நேரிடுகிறது! தவிர்க்க முடிவதில்லை.

   நீக்கு
 19. //3. அப்பா அம்மாவிடம், சின்ன வயசுல தைரியமாக உங்க பிரச்சனைகளைச் சொல்வீங்களா இல்லை அதைப்பற்றிப் பேசவே மாட்டீங்களா? //
  ம்ஹூம் பயம் காரணமா ஒன்றுமே சொன்னதில்லை :) ஆனால் எங்கள் மகள் அனைத்தையும் டிஸ்கஸ் செய்வாள் எங்களோடு 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா, அம்மாவிடம் எல்லாம் அந்தக் காலங்களில் எல்லாவற்றையும் நேரிடையாகப் பேசவே முடியாதே! பயம் மட்டும் இல்லை. அவங்க எப்படி எடுத்துப்பாங்களோ என்னும் காரணமும் கூட!

   நீக்கு
  2. யெஸ்ஸ்ஸ் :) ஒரு கருத்தும் சொல்ல பயம் நோ அரசியல் நோ சினிமா இப்படித்தான் வளர்க்கப்பட்டோம் :)

   நீக்கு
 20. என்னோட கேள்விகளுக்குக் கொடுத்த பதில்களுக்கு நன்றி.

  //5.உயிர்காக்கும் படிப்புக்கு மாணாக்கர்களை அவங்க விரும்புகிறார்கள் என்பதற்காகத் தேர்வு செய்ய முடியுமா?

  1 - 5// இந்த பதில் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போதும், எதிலும் அப்படித் தேர்வு செய்யமுடியாது. ஆனால் விதிவிலக்குகள் உண்டு. அந்த மாணவருக்கு PASSION இருக்கு என்பது தெரிகிறது, மார்ஜினில்தான் அவரால் தேர்வில் வெற்றிபெற இயலவில்லை என்றால், அந்த மாதிரி சமயங்களில் உதவலாம்.

   அது சரி... எத்தனையோ தேர்வுகள்லாம் வைத்துத் தேர்ந்தெடுத்தவர்களில் பல மருத்துவர்கள் தவறுவதில்லையா (சமீபத்தில் மனைவிக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பின் தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவ கணவர், தில்லியில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்...என்று எத்தனையோபேர் உண்டே)

   நீக்கு
  2. 1 - 5// இந்த பதில் புரியவில்லை.// - கேள்விகள் ஒன்றிலிருந்து ஐந்து வரை எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் என்று # சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்.

   நீக்கு
 21. கேள்வி பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  //யாரிடம் உங்களால் எல்லாவற்றையும் மனம் திறந்து பேச முடிந்திருக்கிறது? என்ன காரணம்? //
  உங்கள் பதில் அருமை.

  வாழ்க்கைதுணையிடம் பகிர்வதுதான் நல்லது. நான் அப்படித்தான்.

  பதிலளிநீக்கு
 22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கோமதி அரசு சகோதரி

   உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மகிழ்வுடன் கூடிய மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!