திங்கள், 5 ஏப்ரல், 2021

"திங்க"க்கிழமை  :  கிழங்கு தோசை - வானம்பாடி ரெசிப்பி 

 கிழங்கு தோசை

வானம்பாடி 


தேவையான பொருட்கள்:

1.கிழங்கு -1/2 kg.

2. இட்லி அரிசி - 1 .1/2 கப்.

3. வரமிளகாய் - 5.காரமாக வேண்டாம் என்றால் 2 போதும்.

4.பெருங்காயம் - 1/2 ஸ்பூன்.

செய்முறை:

கிழங்கை தோல் உரித்து, நன்கு கழுவி, சிப்ஸ் சீவுவது போல சீவிக்கொள்ளவும். 


அரிசி 1 1/2 மணி நேரம் போல ஊற வைத்துக் கொள்ளவும். முதலில் ஊற வைத்த அரிசியையும், மிளகாய்களையும் போட்டு அரைத்துக் கொள்ளவும். 
அரிசி முக்கால்வாசி அரைத்த பின் அதனுடன் சீவி வைத்த கிழங்கையும், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும். நீர் சேர்த்து உப்பு கலந்து கொள்ளவும். 


உடனே சன்னமாக தோசை வார்த்து பரிமாற, புரதச் சத்து மிகுந்த சுவையாய் இருக்கும். 


குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இது எடுத்து வைத்து சாப்பிட நன்றாக இருக்காது. அன்றைக்கு செய்து அப்பொழுதே சாப்பிட உகந்தது. செய்வதற்கும் எளிமையான உணவு.36 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.எல்லோரும் எப்பொழுதும் நலமுடன் இருக்க இறை யருள் செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
  2. இன்றைக்கு என்ன கீதா சாம்பசிவம் மேடத்தைக் காணோம்?

   ப்ரார்த்தனையில் மூழ்கிவிட்டார்களா? (ஒருவேளை கேடரிங்கார் உணவு கொண்டுவந்து கொடுப்பார் போலிருக்கு)

   நீக்கு
 2. அருமையான செய்முறை. உருளைக்.கிழங்கு தாநே? நல்ல படங்கள். மிக நன்றி.அன்பு வானம்பாடி.செய்து பார்க்கிறேன் மா. நன்றி ஶ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உகி  இல்லையென்று நினைக்கிறேன்!

   நீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கங்கள்.வல்லிம்மா, இது மரவள்ளிக் கிழங்கில் செய்வது.செய்து பார்த்து சொல்லுங்கள் அம்மா.நன்றிம்மா!

   நீக்கு
 3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 4. பொதுவாக கிழங்கு என்று சொன்னால் எப்படி!...

  தஞ்சாவூர் பட்டுக்கோட்டை வட்டாரங்களில் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு சிறிது துவரம் பருப்பைச் சேர்த்து இதே முறையில் செய்வார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரவள்ளிக்கிழங்கு என்றுதான் நினைக்கிறேன்.  நானும் கேட்டிருந்தேன் அவரிடம்.

   நீக்கு
  2. சென்னையில் குளிர்,மழைக் காலங்களில்
   வண்டியில் நிறைய விற்பார்கள். வேக வைத்த
   வள்ளிக் கிழங்கு குச்சிக் கிழங்கு,
   வேர்க்கடலை வேக வைத்ததும், வறுத்ததுமாக
   ஒரு வயதானவர் சாயந்திர வேளைகளில்
   வருவார்.
   பலருக்கு இரவு உணவே அதுவாக அமையும்.

   மரவள்ளிக் கிழங்கு இங்கு கிடைத்தால்
   செய்யலாம். நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கம். மரவள்ளிக் கிழங்கு என சொல்லியிருக்க வேண்டும்.குழப்பியதற்கு மன்னிக்கவும். ரெசிபி பதிவிட்ட ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றி!

   நீக்கு
 5. மரவள்ளிக்கிழங்கு தோசை என்று பெயரிட்டு இருக்கலாமோ

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  இன்றைய மரவள்ளிக்கிழங்கு தோசை செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது.
  செய்முறையும் எளிதாக உள்ளது. இதை அறிமுகப்படுத்திய சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. உளுந்தின் வேலையை கிழங்கு செய்கிறதா? புதுவித ரெசிப்பி. செய்து பார்த்துவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 9. ஐயையோ.... நான் உருளை என்று புரிந்துகொண்டு, எப்படி இந்தக் கலரில் சீவியிருக்காங்கன்னு யோசித்தேன்... மரவள்ளிக்கிழங்கா? அப்போ அதுக்கு தடா ஆயிற்றே. பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 10. மர்ம யோகி மாதிரி கிழங்கு தோசை..ன்னு போட்டு விட்டாலும் நாங்க கண்டு புடிச்சிட்டோம்...ல!..

  பதிலளிநீக்கு
 11. மரவள்ளிக்கிழங்கு தோசை.. புதிய எளிய சமையல் குறிப்பாக இருக்கிறது. மரவல்லிக் கிழங்கு சிப்ஸ் மட்டும்தான் சாப்பிட்டிருக்கிறேன். பார்க்கலாம். 

  பதிலளிநீக்கு
 12. மாயவரத்தில் இருந்த போது இந்த தோசை செய்முறை கற்றுக் கொண்டேன்.
  இதில் இனிப்பும் செய்வார்கள். அந்த ஊர் மக்கள் இதை கிழங்கு அடை என்பார்கள். மரவள்ளி கிழங்கு நிறைய வரும் காலத்தில் எல்லோர் வீடுகளிலும் இனிப்படை, உறைப்படை உண்டு. மரவள்ளி சிப்ஸ் கடைகள் நிறைய இருக்கும் மாலை நேரம் .
  காலை பள்ளி வாசலில் வேக வைத்த மரவள்ளி கிழங்கு துண்டு போட்டு விற்பார்கள்.காரம் போட்டும் காரம் இல்லாமலும் கிடைக்கும்.

  செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. கிழங்கு தோசை - புதிதாக இருக்கிறது. இங்கே கேரளக் கடைகளில் கப்பா எனப்படும் மரவள்ளிக் கிழங்கு கிடைக்கிறது. முடிந்தால் வாங்கி செய்து பார்க்கிறேன்.

  சுவையான குறிப்பு - பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. மரவள்ளிக்கிழங்கானு தெரியாது. புக்ககத்தில் கீரிப்பிள்ளைக் கிழங்குனு ஒண்ணு விளையும். அதில் சிப்ஸ், கறி, கூட்டு, இம்மாதிரி தோசை/அடை எல்லாம் பண்ணுவார்கள். அதை நெட்டுக்குத்தாக நட்டால் உயரமாகவும் படுக்கை வசத்தில் நட்டால் அப்படியே படுக்கை வசத்திலும் வளரும் என்பார்கள். நிறையச் சாப்பிட்டிருக்கோம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!