சனி, 17 ஏப்ரல், 2021

கொரோனா அச்சம் வேண்டாம்: ஊக்கம் தரும் உளவியலாளர்கள் கருத்து.

 

105 நிமிடத்தில் 36 புத்தகங்களை வாசித்து இந்திய குழந்தை சாதனை. 


கியாரா என்கிற ஐந்து வயது இந்திய பூர்வீகம் கொண்ட அமெரிக்க சிறுமி தற்போது சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

சென்னையை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் குடியேறிய ரவீந்திரநாத் என்பது ஐந்து வயது மகள் கியாரா. நினைவு தெரிந்த நாளிலிருந்து இவருக்கு புத்தகங்கள்மீது ஆர்வம் அதிகம். இதனை அடுத்து இவரது பெற்றோர் இவருக்கு அதிக புத்தகங்களை வாங்கிக் கொடுத்து புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டினார்.

ஒரு நாளில் கிடைத்த நேரத்தில் எல்லாம் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் கியாரா. ஆலிஸ் இன் வொண்டர் லேண்ட், சின்ரெல்லா, ஷூட்டிங் ஸ்டார் உள்ளிட்ட பல குழந்தைகளுக்கான கதைகளையும், புதினங்களையும் அதிவேகமாக படிக்கும் திறனை பெற்றார் கியாரா. ஒரு புத்தகத்தை வாசிக்க இவர் மிகக் குறைந்த நேரத்தையே எடுத்துக் கொண்டுள்ளார்.

 


குழந்தைக்கு கௌரவம். 

ஐந்து வயதில் இந்த அளவு வேகத்தில் ஒரு புத்தகத்தை வாய்விட்டு படித்து முடிக்கும் திறன் இவருக்கு வந்ததை அடுத்து தங்களது மகளின் திறமையை உலகுக்கு காட்ட இவரது பெற்றோர் விரும்பினர். இதனை அடுத்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு இவரது பெயரை விண்ணப்பித்தனர்.

நூற்றி ஐந்து நிமிடங்களில் இவர் 36 புத்தகங்களை முழுவதுமாக வாய்விட்டுப் படித்து முடித்து விடுவார். இடையில் சிறிது நேரம்கூட ஓய்வு எடுக்க மாட்டார். அதிவேகமாக ஆங்கில வரிகளை படித்தாலும் புத்தகத்தின் கருத்தை மனதில் ஏற்றிக்கொள்வார்.

வார்த்தைகளில் பிசகு இருக்காது. இவரது மொழி ஆற்றல் மற்றும் வேகத்தை பாராட்டி இந்த கவுரவம் இவருக்கு கிடைத்துள்ளது. உலகில் மிகக்குறைந்த வயதில் இந்த சாதனையைப் படைத்த குழந்தை கியாராதான். எதிர்காலத்தில் மருத்துவராகும் லட்சியம் கொண்ட இவர், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

= = = =

செவ்வாய் கிரகத்தில் சிறிய ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா..!

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரி என்கிற அமைப்பு முன்னதாக பேர்சேவேரன்ஸ் என்கிற சிறிய ரக ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் முன்னதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சிறிய விமானம் ஒன்றை பறக்கவிட நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். இன்னும் மூன்று, நான்கு நாட்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வெறும் 40 வினாடிகள் செவ்வாய் கிரகத்தின் பரப்பிலிருந்து சிறிது உயரத்துக்கு இந்த ஹெலிகாப்டர் பறக்க உள்ளது.

இதன் புகைப்படங்களை பர்சிவியரன்ஸ் ரோவர் வெளியிடும். இதற்காகவே இந்த ரோவரில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.விமானத்தை முதன்முதலில் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் இதுபோலவே பரிசோதனை முயற்சியாக பூமியின் தரையிலிருந்து தாங்கள் வடிவமைத்த சிறிய விமானத்தை பறக்க விட்டனர். தற்போது செவ்வாய் கிரக பரப்பிலிருந்து சிறிய ஹெலிகாப்டரை பறக்க விடுவது ரைட் சகோதரர்களைப் போன்று தங்களுக்கும் சவாலான விஷயம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

( பின் குறிப்பு : 

ஹெலிகாப்டர் பறக்கவிடும் திட்டம் ஒத்திப் போடப்பட்டுள்ளது என்று செய்தி வந்துள்ளது) 

= = = = 

60 வயதில் வயதிலும் ரயில் ஓடுகளை உடலில் அடித்து உடைத்து சாதித்த யோகா ரவி 

 

= = = = 

கொரோனா அச்சம் வேண்டாம்: ஊக்கம் தரும் உளவியலாளர்கள் கருத்து. 

புதுடில்லி: கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளிக்கின்றனர். அவற்றை கீழே காணலாம்.

கிரிக்கெட் போட்டி அல்ல. 

* வைரஸ் பற்றிய செய்திகளிலிருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அது குறித்தான செய்திகள் அனைத்தையும் பல நாட்களாக நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

* இறப்பு எண்ணிக்கையைப் பார்க்க வேண்டாம். சமீபத்திய புள்ளிவிவரங்கள், ஸ்கோரை அறிய இது கிரிக்கெட் போட்டி அல்ல. எனவே அதனை தவிர்க்கவும்.

* கொரோனா வைரஸ் குறித்து இணையத்தில் கூடுதல் தகவல்களைத் தேடாதீர்கள். இது உங்கள் மன நிலையை பலவீனப்படுத்தும்.

* அபாயகரமான செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும். ஏனெனில் உங்களை போன்ற மன வலிமை சிலருக்கு இருக்காது. எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கருதி இதுப்போன்ற அபாயகரமான செய்திகளை அனுப்புவதால், மனசோர்வு ஏற்படலாம்.

இசையைக் கேளுங்கள். 

* முடிந்தால், வீட்டில் இனிமையான இசையைக் கேளுங்கள். குழந்தைகளை மகிழ்விக்க, கதைகள் சொல்வது, அவர்களுடன் பலகை விளையாட்டு விளையாடுவது, எதிர்கால திட்டங்களை பகிர்வது என உங்களை ஈடுபடுத்துங்கள்.

* வீட்டில் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற ஒழுக்கத்தை பேணுங்கள்.

* உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும், அதே நேரத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மனச்சோர்வடையச் செய்து வைரஸ்களுக்கு எதிராக பலவீனப்படுத்துகின்றன.

* மிக முக்கியமாக, இதுவும் கடந்து போகும், நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்.

= = = =

'பிளாஸ்டிக்' இல்லாத சலவை. 

சோப்புப் பொருட்கள் அன்றாடம் பயன்படுபவை. தூள் அல்லது திரவம் என எதையும் அடைத்து விற்க பிளாஸ்டிக்கே அதிகம் பயன்படுகிறது. இதனால், நகரத்து குப்பை மேடுகளில் 'டிடர்ஜென்ட்' சார்ந்த பிளாஸ்டிக்குகள் அதிகம் குவிகின்றன.

இதை தவிர்க்க, 'ட்ரூ எர்த்' என்ற நிறுவனம் 'எகோ ஸ்ட்ரிப்' என்ற அட்டையை உருவாக்கியுள்ளது. அடர்த்தியான சோப்புப் பொருட்களால் ஆனது இந்த அட்டை. இதை துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டால், சோப்புத் தூள் அல்லது திரவம் போலவே துணிகளை வெளுத்து விடுகிறது. ஆனா, இந்த அட்டையில் எந்தவித பிளாஸ்டிக் பயன்பாடும் இல்லை. தவிர, இந்த அட்டைகள் வைக்கப்பட்டுள்ள பெட்டியும் காகித அட்டையால் ஆனது.

பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கரண்டி என்று சோப்புத்தூள் மற்றும் திரவத்திற்கு தேவையான எதுவும் எகோ ஸ்ட்ரிப் சலவை அட்டைக்குத் தேவையில்லை. இது இலகுவாக இருப்பதால், இதை சுமக்கும் வாகனங்களால் வெளியிடப்படும் புகை மாசு 94 சதவீதம் குறையும்.

மேலும், உலகெங்கும் ட்ரூ எர்த்தின் கண்டுபிடிப்பை ஒரு ஆண்டு சலவைக்குப் பயன்படுத்தினால், கிடைக்கும் சுற்றுச்சூழல் பயன் மிக அதிகம். அதாவது, ஒரு பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் புழக்கத்திற்கு வருவதை தவிர்க்கலாம். தவிர, ஒரு நாள் உலகம் முழுவதும் 2.7 கோடி கார்களை சாலையிலிருந்து அகற்றினால் மீதமாகும் அளவுக்கு கார்பன் உமிழ்வை தவிர்க்க முடியும்.

= = = = 

தலை முடி தரும் மின்சாரம். 

சூரிய ஒளி மின் பலகை தயாரிப்பில் புரட்சியை நிகழ்த்தி வருகின்றன, 'பெரோவ்ஸ்கைட்' என்கிற தாதுக்கள். சிலிக்கனால் பலகைகளைவிட அதிக மின்சாரத்தை பெரோவ்ஸ்கைட் பலகைகள் உற்பத்தி செய்கின்றன. அதேசமயம், அதிக வெயிலால் நிலையற்ற தன்மையையும் அடைகின்றன.

இதனால், பெரோவ்ஸ்கைட்டின் நிலையற்ற தன்மையை போக்குவது எப்படி என்று பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அண்மையில், ஆஸ்திரேலியாவிலுள்ள, குவீன்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானிகள், முடி திருத்தகத்தில் வீணாகும் தலை முடி இதற்கு உதவலாம் என கண்டறிந்துள்ளனர்.

மனித தலைமுடியை 240 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் வைத்தால், அது மூலக்கூறு மட்டத்தில் கார்பன் மற்றும் நைட்ரஜன் பின்னிப் பிணைந்த ஒரு பொருளை தருகிறது. நேனோ புள்ளிகள் அடர்த்தியான இந்தப் பொருளை, பெரோவ்ஸ்கைட் சூரிய பலகைகளை தயாரிக்க விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.

தலைமுடியில் தயாரான கார்பன் நேனோ பொருள், பலகையின் மேல் கவசம் போல செயல்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த கவசம், பெரோவ்ஸ்கைட் தாதுவை, ஈரப்பதம், வெப்பம், ஆக்சிஜன் போன்றவற்றின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

வீசி எறியும் தலைமுடி, நாளைய ஆற்றல் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கப்போகிறது!

= = = = 

வித்தியாசமான செய்தி ஒன்று : 

வேப்பிலை கொத்துடன் வந்த தலைமை தகவல் கமிஷனர். 

தஞ்சாவூர் :கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, மாநில தலைமை தகவல் கமிஷனர், கையில் வேப்பிலை கொத்துடன் வலம் வருகிறார்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பொது தகவல் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்துக்கு வந்த தகவல் ஆணையர் ராஜகோபால், காரை விட்டு இறங்கும் போதே, கையில் கொத்தாக வேப்பிலையை எடுத்து வந்தார். முக கவசம் அணிந்திருந்த போதும், வாய் மற்றும் மூக்கை மூடியபடி, கூட்ட அரங்கிற்குள் சென்றார்.

முன்னதாக, கலெக்டர் அலுவலக நுழைவாயில் மற்றும் கூட்ட அரங்கின் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில், வேப்பிலைகளை தோரணமாக தொங்க விட்டிருந்தனர். ஒன்றரை மணி நேரம் கூட்டம் நடந்தது. அவ்வப்போது ராஜகோபால், அடிக்கடி வேப்பிலை கொத்தை மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்துக் கொண்டார்.

மேஜையிலும், தனக்கு முன்பாக வேப்பிலை கொத்து ஒன்றை வைத்திருந்தார்.

அவரது காரின் முன் இருக்கைக்கு எதிரேயும், கொத்து கொத்தாக வேப்பிலைகள் வைக்கப்பட்டிருந்தன. 'கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள, வேப்பிலை இயற்கையான கிருமிநாசினி என்பதால், அதை கையில் வைத்திருக்கிறார்' என, அலுவலர்கள் தெரிவித்தனர்.

= = = = 

K G Jawarlal's   Facebook post on 16.4.2021

அசுர வேகத்தில் பரவி வரும் இரண்டாம் அலை வைரஸ் பற்றி விழிப்புணர்வுக்காகக் கொஞ்சம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

செய்தி சேனல்களில் பொறுப்பான டாக்டர்கள் சிலர் பேசுவதை உங்களில் சிலர் கேட்டிருக்கலாம். அவையும், மேலும் கொஞ்சம் படித்ததும், இன்ஃபெக்ட் ஆனவர்களிடமும் அவர்களின் நன்பர்கள் உறவினர்களிடம் பேசியதிலும் நான் தெரிந்து கொண்டவை இவை.

1. முதல் அலையில், இன்ஃபெக்ட் ஆனதிலிருந்து சிம்ப்டம் தெரிய இரண்டொரு நாட்கள் ஆகும் என்றார்கள். மூக்கு, தொண்டை தாண்டி நுரையீரல் வரை தாக்க ஐந்தாறு நாட்கள் ஆயின. இம்முறை அதி விரைவாய் நுரையீரல் வரை போய்விடுகிறது. அதனால்தான் பலருக்கு டெஸ்டில் தெரிவதில்லை. ஸ்கேன் செய்தால்தான் தெரிகிறது. ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

2. சளி. காய்ச்சல், தொண்டை சிரமம், இருமல் இவையெல்லாம் முன்னர் சிம்ப்டமாய் இருந்தது. இம்முறை எடுத்த எடுப்பில் அதீத அயர்ச்சி, உடல்வலி, ஜுரம் இவையெல்லாம் இருக்கிறது. அதீத அயர்ச்சியும், உடல்வலியும் இருந்தால் உடனே உஷார் ஆகுங்கள்.

3. சிறிய பரப்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்தான் தொற்று உண்டாகிறது. அம்மாதிரி இடங்களில் அதிக நேரம் இருக்க வேண்டாம்.

4. வீட்டுக்குள்ளேயேதான் இருந்தேன், வெளியிலேயே போகல்லை ஆனாலும் தொத்திக்கிச்சு என்று சொல்பவர்கள் ஒன்று எதையோ மறைக்கிறார்கள் அல்லது மறந்து பேசுகிறார்கள். அப்படி வீட்டிலேயே இருந்தால் தொற்று வராது. பலரும் அறிந்த ஒரு அரைப் பிரபலம் அப்படி எழுதியிருக்கிறார். இது மக்களை அனாவசியமாய் பீதிக்கு உள்ளாக்கும். அப்படிக் காற்றில் வைரஸ் பரவியிருக்குமானால் போபால் விஷ வாயு போல ஆயிரக் கணக்கில் ஒரு ஊரிலேயே தொற்று உண்டாகும். மாவா எனப்படும் குட்கா டைப் பாக்கு உபயோகிக்கும் வழக்கம் இம்ம்யூனிட்டியைக் குறைத்து சிறிய அளவில் வைரஸ் இருந்தாலும் தொற்றும் அபாயத்தைத் தரும்.

5. வேப்பரைஸர் மிகவும் பலனளிப்பது என்று டாக்டர்களே சொல்கிறார்கள். வெளியில் போய் வந்தால் நாலு சொட்டு யூகலிப்டஸ் விட்டு வேப்பரைஸரில் ஆவி பிடியுங்கள்.

6. முகக் கவச விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். டூ வீலரில் தனியாகப் போகிறவன் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும் என்றெல்லாம் முட்டாள்தனமாக போஸ்ட் போடுகிறார்கள். வண்டியில் போகிறவர்கள் அதிக வெலாஸிட்டியில் வரும் காற்றை சுவாசிக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் போகும் வழியில் எங்கேனும் காற்றில் வைரஸ் இருக்குமானால் அது அதிவேகமாய் நுரையீரலுக்குள் போகும்.

7. கபசுரக் குடிநீரைக் காய்ச்சும்போது வரும் ஆவியைப் பிடியுங்கள். இது மிகுந்த பலனளிக்கும்.

8. பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கி வையுங்கள். ஆக்ஸிஜனை அவ்வப்போது மானிட்டர் செய்யுங்கள். வழக்கமாய் உங்களுக்கு எவ்வளவு இருக்குமோ அதைவிடை 5 எண்ணிக்கை குறைந்தால் உடனே டாக்டரைப் பாருங்கள். (ஏன் வழக்கமாய் என்று சொன்னேன் என்றால் 92 அல்லது 93 இருக்கும் சிலர் மூச்சுவிடச் சிரமம் இன்றி இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் COPD உள்ளவர்களாகவோ, முதியவர்களாகவோ இருப்பார்கள். மற்றபடி நார்மல் ஆசாமிகளுக்கு 96+ இருக்கும்.

9. முடிந்தால் சுவாசப் பயிற்சிகள் தொடர்ந்து செய்யுங்கள். நுரையீரலில் தொற்று உண்டான பிறகும் கூட தொற்றின் வீரியத்தைக் குறைக்கவல்லது பிராணாயாமம், கபாலபாதி மாதிரியான பயிற்சிகள்.

= = = = 


51 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோர் வாழ்விலும் ஆரோக்கியம் சிறந்து விளங்கித் தொற்றைக் குறித்த அச்சம் இல்லாமல் மன அமைதியுடன் வாழப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.  ஆம் பயமுறுத்தும் கொரோனா பரவல் வேகம்.  நடிகர் விவேக்கின் மறைவும் மக்களை என்னென்ன எண்ண / பேச வைக்குமோ என்று கவலை கொள்ளச் செய்கிறது.

   நீக்கு
  2. இன்று காலை விடிந்தவுடன் இதுதான் அதிர்ச்சியான செய்தி. மனதே சரியில்லை.

   நீக்கு
 2. இந்த வாரம் பெரிசு, பெரிசாகப் பல செய்திகள். ஜவர்லால் முகநூலுக்கு வந்துட்டாரா? தெரியாமல் போச்சு! நாசாவின் திட்டம் ஒத்திப் போடப்பட்டிருப்பதை நானும் படிச்சேன். குழந்தையின் படிக்கும் திறன் ஆச்சரியம் ஊட்டியது. புதிய செய்தியும் கூட. வேப்பிலைக்காரர் படத்தை வேறு எங்கேயோ பார்த்த நினைவு. சோப் பவுடர் பற்றிய செய்தியும் தலைமுடியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதும் புதிய செய்திகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜவர்லால் ரொம்ப நாட்களுக்கு முன்னரே பேஸ்புக்கிற்கு திரும்பி விட்டார்,

   நீக்கு
  2. திரும்பி விட்டார் இல்லை, முகநூல் பக்கங்கள் மாளிகையைத் தான் விலைக்கு வாங்கி அங்கேயே குடியிருக்கிறார். நம்ம மும்பை மோகன் கூடத் தான்.

   நீக்கு
  3. இன்னொரு மாளிகை எபி வாட்ஸாப் குருப்.

   வாராவராம் எபியில் எழுதிக் கொண்டிருந்த ஒருவர், எப்படியிருக்கிறது என்று பார்க்க எபி வாட்ஸாப் மாளிக்கைக்குப் போனவர், இந்த நிவாஸ் பிரமாதமாக இருக்கிறதே என்று அங்கையே தங்கி விட்டார்.

   யார் அவர் சொல்லுங்கள், பார்க்கலாம். குறிப்பிலேயே க்ளூ இருப்பது கூடுதல் தகவல்.

   நீக்கு
  4. அது ஜீவி சார்.... அடுத்தது ர.ஸ்ரீ ஹாஹா

   நீக்கு
  5. இதுக்குத் தான் இந்த மாதிரி தருணங்களில் நெல்லை வேணுங்கறது.. அந்த ர-வுக்கும் ஸ்ரீ-க்கும் இடையே கேப் விட்டு புள்ளி குத்தினார் பாருங்கள், அங்கிருக்கிறது சூட்சுமம!
   புதிர்களுக்கு எப்பொழதுமே முழு விடை சொல்லி விட்டால் சப்பென்று போய் விடும். அந்த விடையே இன்னும் குழப்பற மாதிரி யோசிக்க வைத்தால் மேலும் அழகு கூடும்.
   வெல்டன் நெல்லை..!

   நீக்கு
 3. இன்றும் நாளையும் வேலைகள் அதிகம். முடிந்தால் மத்தியானமா வருவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓகே அக்கா.  நீங்கள் கொடுத்த இரண்டாவது இராமாயண சுட்டியில் கமெண்ட் போடமுயன்று முயன்று ரோபோ படங்கள் படுத்தியதால் போட இயலவில்லை.  ஆனால் படித்து விட்டேன்.

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  நல்ல எண்ணங்களும் நல்ல எதிர்ப்பு சக்தியும்
  நம் உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்க
  இறைவன் அருள் புரிய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க வல்லிம்மா...  வணக்கம்.

   நீக்கு
 5. குழந்தை கியாராவின் சாதனை அசத்துகிறது.
  நல்ல செய்திக்கு நன்றி.

  நாசாவின் மார்ஸ் சாதனைகள் தொடரட்டும்.
  தாமதமானாலும் வெற்றிகரமாக நடக்க வேண்டும்.
  இந்த நவீன யுகத்தில் நாம் அறியும் விஞ்ஞான சாதனைகள்
  அற்புதம்.

  பதிலளிநீக்கு
 6. ட்ரூ எர்த் மிக நல்ல கண்டுபிடிப்பு. கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.
  இது உலகமெங்கும் பரவ வேண்டும். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வேப்பிலை சுமக்கும் கலெக்டர்.
  பத்திரமாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 8. திரு கேஜி ஜவர்லாலின் பதிவு
  மிகச் சிறப்பு.
  எல்லோரும் கடைபிடித்தால் நன்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.  இன்றைய வெங்கட் பதிவைப் படியுங்கள்.

   நீக்கு
 9. மிகச் சிறந்த பாசிடிவ் செய்திகளுக்கு மிக நன்றி கௌதமன் ஜி.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 11. நேர்மறைச் செய்திகளுடன் பதிவு.. சிறப்பு..

  அனைவரும் நலமாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக..

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 13. குழந்தை கியாராவின் மொழி ஆற்றலுக்கு வாழ்த்துக்கள். அவர் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.

  ம்யிலாடுதுறை யோகா ரவி அவர்கள் மன, உடல் உறுதிக்கு வாழ்த்துக்கள்.

  ஊக்கம் தரும் உளவியலாளர்கள் கருத்து மீண்டும் படித்தேன் நல்ல கருத்து.

  பிராணாயாமம், கபாலபாதி மாதிரியான பயிற்சிகள் சிறந்த பயிற்சிகள்.

  அனைத்தும் நல்ல செய்திகள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. கையில் வேப்பிலை, வாய்க்குக் கீழே முகக் கவசம்! நல்ல முன்மாதிரி...

  பதிலளிநீக்கு
 15. வேதனை தந்த மறைவுச் செய்தி. அதிகாலையில் காலமான கலைஞர் விவேக்.
  நேற்றிருந்தார், இன்றில்லை! - இதெல்லாம்தான் பெருமை இவ்வுலகிற்கு..

  பதிலளிநீக்கு
 16. அனைவருக்கும் காலை வணக்கம். சுட்டிக் குழந்தை கியாரா வாழ்க வளமுடன். தலைமுடியிலிருந்து மின்சாரம் வேறு எதிலோ படித்தேன். கொரோனா பற்றிய பாசிட்டிவ் செய்திகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. சிறப்பான செய்திகள். ட்ரூ எர்த் கண்டுபிடிப்பு நல்லதொரு விஷயம். இந்த முறை பயன்பாட்டிற்கு வந்தால் நம் உலகிற்கு நல்லது. அதனை எல்லோரும் பின்பற்றலாம்.

  படிப்பில் அசத்தும் சிறுமி - பாராட்டுகள்.

  அனைத்து செய்திகளும் சிறப்பு.

  பதிவின் கருத்துரையில் இன்றைய எனது பதிவினையும் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி.

  தொடரட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்! நோய்த்தொற்று நீங்கி அனைவரும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இன்றைய நேர்மறை செய்திகள் மனதிற்கு இதமளிக்கிறது. சிறுமி கியாராவின் வாசிப்புத்திறன் வியக்கவைக்கிறது. மின்சார உருவாக்கத்திற்கு பயன்படும் முடி. தொற்று குறித்த விழிப்புணர்வு பதிவிட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. கொரோனா அச்சம் வேண்டாம்: ஊக்கம் தரும் உளவியலாளர்கள் கருத்து.--

  என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிற கருத்துக்கள் அட்சர லட்சம் பெறும்.

  நண்பர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு வாட்ஸாப் தகவலாக இதை நண்பர்களுக்கு அனுப்புங்கள்.
  இந்த நேரத்தின் அவசரத் தேவை இது.
  இதை வெளியிட்ட எபிக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. கியாராவுக்கு வாழ்த்துகள் சொல்வோம்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. ஐந்து வயது குழந்தையின் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இறைவன் தந்த வரம். இறைவன் அருளால் அனேக வளங்களைப் பெற்று நன்றாக இருக்கட்டும்.

  பிளாஸ்டிக் இல்லாத சலவையும், தலைமுடியினால் மின்சாரம் பெறுவதும் சிறப்பான பயனுள்ள செய்திகள். ஒவ்வொரு கண்டு பிடிப்பும் வியப்பில் ஆழ்த்துகிறது.

  தொற்று காலத்தில் மனநிலை பாதிப்படையாமல் இருப்பதற்காக வழங்கியிருக்கும் ஆலோசனைகள் பயனுள்ளவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 22. வேப்பிலையைக் கொத்தோடு வரும் தகவல் கமிஷனர் என்ன சொல்ல வருகிறார்? கொஞ்சம் விட்டால் உடலுக்கே காட்டுவாசி மாதிரி வேப்பிலை உடை கட்டிக்கொண்டு வரச் சொல்வாரோ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!