திங்கள், 19 ஏப்ரல், 2021

'திங்க'க்கிழமை : டேட்ஸ், நட்ஸ் ஹெல்தி லட்டு - சுபாஷிணி ரெஸிப்பி

 

 டேட்ஸ், நட்ஸ் ஹெல்தி லட்டு 

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு 

வால்நட் 

பிஸ்தா 

இவைகள் தலா 1/4 கப் 

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் 2 அல்லது 3 கப்.

நெய் - 2 டேபிள் ஸ்பூன் 


செய்முறை:முதலில் கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம்பழத்தை மிக்சியில் இட்டு ஒரே ஒரு சுற்று சுற்றிக் கொள்ளுங்கள் அல்லது மத்தால் மசித்துக் கொள்ளவும். 

பாதாம்.பிஸ்தா, வால்நட், போன்றவைகளை சிறிதாக நறுக்கி, லேசாக வறுத்துக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு,அதில் மசிக்கப்பட்ட பேரீச்சையை  போட்டு கிளறி அதில் வறுத்த பருப்புகளை சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தி, வாணலியை கீழே இறக்கி, அந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி அவைகளை ப்ரிட்ஜில் ஐந்து நிமிடம் வைத்து சாப்பிடுங்கள். நெய் தடவப்பட்ட ட்ரேயில் கொட்டி பரப்பி துண்டுகளாகவும்  போடலாம்.   பிடிக்குமென்றால் கிஸ்மிஸ், கிரான்பெர்ரியும் சேர்த்துக் கொள்ளலாம்.

47 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  இறைவன் அருளில் எல்லோரும்
  பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று முதல் வேலைப்பளு குறைந்து வரும் என எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் ஆரோக்கியமான மன அமைதியுடன் கூடிய இனிய வாழ்க்கை அமையவும் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. இந்த ஆரோக்கியமான சாமான்களுடன் ஆன லட்டுவுடன் கோந்து ( வட மாநிலங்களில் சாப்பாட்டு கோந்து தனியாக அநேகமான கடைகளில் கிடைக்கும்.) சேர்த்து, கொப்பரைத் தேங்காயும் போட்டு, குங்குமப்பூ, ஜாதிக்காய்ப் பொடி, ஜாதிபத்திரி எல்லாமும் போட்டு ஒரு லட்டு பிரசவிச்ச பெண்களுக்குக் கொடுப்பாங்க பாருங்க! ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! எங்க பையர் பிறந்தப்போ ராஜஸ்தானில் நண்பர்கள் இந்த லட்டு பண்ணி எடுத்துவந்து எனக்குக் கொடுத்திருக்காங்க! அந்த நாளும் வந்திடாதோ!

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையாகச் செய்யப்பட்ட
  ட்ரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட் இனிப்பு.
  அருமையான படங்களுடன்
  சுலபமான செய்முறையில்
  சிறப்பான புரத சத்து மிக்க ரெசிப்பி.
  பார்த்து ரசிக்கிறேன். நல் வாழ்த்துகள்.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  வாழ்க நலம் எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 6. சத்துமிகு லட்டுவிற்கு மிக்க நன்றி நன்பர்களே.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம். இந்த,சத்தான லட்டு செய்ததாகவும்,அது மிகவும் ருசியாக இருந்ததாகவும் என்,மகள் கூறினாள். அதன் ரெசிப்பி அனுப்பும்படி நான் கேட்டதற்கிணங்க அவள் அனுப்பியதை உங்களோடு பகிர்ந்து கோண்டிருக்கிறேன். இதை முன்பே குறிப்பிட்டிருக்கலாம். நான் இனிமேல்தான் முயற்சிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான புரத மிக்க ரெசிப்பி.

  பதிலளிநீக்கு
 9. படங்கள் அருமை

  மிகச்சுலபமான செய்முறை நான்கூட செய்து எங்கள் பிளாக் வாசகர்களுக்கு அனுப்பி வைக்கலாம் போலயே... ஆனால் நெல்லையார் சம்மதிக்க மாட்டாரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கில்லர்ஜி! நெல்லையார் ஏதாவது சொன்னால், பா.வெ.மேடம்கிட்ட சொல்லிடுவேன் என்று சொல்லி விடுங்கள். ஹாஹா!

   நீக்கு
 10. Dry Fruits Laddu. சுவை நன்றாக இருக்கும். இங்கே சாப்பிடுவதுண்டு. இதனுடன் கீதாம்மா சொன்னது போல Edible Gum சேர்த்து செய்யப்படும் Gondh (கோந்த்) Ki Laddu மிகவும் சுவையாக இருக்கும்.

  நல்லதொரு ரெசிபி பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Edible gum சேர்த்து செய்து பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றி.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  அருமையான சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த லட்டு. நானும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வணக்கம் சகோதரரே// ?? என்ன குழப்பம்? நன்றி.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   வழக்கம் போல் காலை வணக்கம் சொல்ல தட்டச்சு செய்தேன். இன்று என் வருகை கொஞ்சம் தாமதம்.. அதனால் மணி 11 ஐ நெருங்கி விட்டதால், காலை வணக்கத்திற்கு பதில், அதிலேயே ரெசிபி பதிவுக்கு பதிலாக கருத்துரைத்து விட்டு வேலைகளை கவனிக்க சென்று விட்டேன். அந்த குழப்பந்தான்.:) வேறு ஒன்றுமில்லை. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 12. நல்ல சத்துள்ள காம்பினேஷன். செய்முறை நன்று. இதனையே தட்டில் பரப்பி, சதுரம் சதுரமாக துண்டம் போட்டு வைப்பார்கள். நான் பஹ்ரைனில் நிறைய தடவை வாங்குவேன். Process என்று எதுவும் கிடையாது, ஜீனியும் சேர்ப்பதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இதனையே தட்டில் பரப்பி, சதுரம் சதுரமாக துண்டம் போட்டு வைப்பார்கள்.// செய்முறையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. நன்றி.

   நீக்கு
 13. எனக்கு கே.வா.போ. கதைப் பகுதியில் வெளிவந்த 'மாய நோட்டு' கதை நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 14. இவைகளை தனித்தனியாக காலை உணவுடன் சாப்பிடுவது உண்டு அதனை அனைத்தையும் ஒன்றாக கலந்துவிட்டால் லட்டு செய்முறை இலகுவாகவும் உள்ளது செய்து பார்த்துவிடலாம் நன்றி

  பதிலளிநீக்கு
 15. மோபிலில் இருந்து எழுதினால் Vic என்ன வராமல் unknown என வருகிறது vic

  பதிலளிநீக்கு
 16. பாதாம் பிசின் இது  Gond Katira ,gond babool என்று ரெண்டு விதமா கிடைக்குது .இதில் முதலாமது பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் லட்டுபோல் செஞ்சு தராங்க .இன்னொன்று falooda  பால் ஷர்பத்தில்  ஊறவைச்சி சேர்ப்பாங்க .உடலுக்கு குளுமை தரும் வயிற்றுப்புண்களை ஆற்றும் 

  பதிலளிநீக்கு
 17. ட்ரை fruit நட்ஸ் லட்டு நல்லா இருக்குக்கா .இதோடு .அந்த பாதாம் பிஸினோட கொஞ்சம் சியா சீட்ஸும் சேர்த்து செய்யப்போறேன் .

  பதிலளிநீக்கு
 18. நல்ல ஸத்தான பொருட்கள். செய்வதும் சுலபம். யாருக்குத்தான் பிடிக்காது? விலை உயர்ந்ததும் கூட. யாருக்காவது செய்து கொடுத்தும் பாருங்கள்.பாராட்டு மழைதான். செய்துபாருங்கள். அருமை அன்புடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் செய்கிறேன். பாராட்டு மழையில் நனைய யாருக்குத்தான் பிடிக்காது? நன்றி.

   நீக்கு
 19. Dry nuts with Dates...

  இங்கே மட்டும் என்றல்ல எங்குமே இது பிரசித்தம்...

  பதிலளிநீக்கு
 20. அருமையா இருக்கு ...

  நானும் இது போல செய்வது உண்டு ...

  இப்போ கொஞ்ச நாளா இது செய்யாம விட்டு போச்சு ...மெனு ல சேர்த்துட்டேன் அடுத்த வாரம் செஞ்சுரலாம் ....பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல மோடிவேஷனல் பதிவு என்று சொல்லுங்கள். நன்றி.

   நீக்கு
 21. டேட்ஸ், நட்ஸ் ஹெல்தி லட்டு செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது.
  மருமகள் அடிக்கடி செய்வாள்.

  பதிலளிநீக்கு
 22. ஹை பானுக்கா சூப்பர் ரெசிப்பி. சுபாவுக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க. நல்லா செஞ்சுருக்காங்க.

  நம் வீட்டில் மிகவும் பிடித்த லட்டு. பேரீச்சம் பழம் அரைத்ததை நெய்யில் வதக்கியதில்லை...நோட்டட்.

  ஆனால் சூடாக நெய் விட்டு பிடித்திருக்கிறேன். அப்போது நிறைய நட்ஸ் எல்லாம் மகனின் அத்தை கொடுத்த போது. பல வருடங்களுக்கு முன்.

  அப்போது மகன் உலர் பருப்புகள் சாப்பிட மாட்டான். எனவே பருப்புகளை நெய் விட்டு வறுத்துவிட்டு பொடித்து செய்வதுண்டு. அவனுக்கு பால் மணம் பிடிக்கும் என்ப்தால் கூடவே கொஞ்சம் மில்க் பௌடர்கலந்தும் செய்வேன். இப்போது பருப்புகள் எல்லாமே சாப்பிடுகிறான்...என்னை எப்படி எல்லாம் ஏமாத்த்ருக்க என்று கேலி செய்வான்.

  ஆவின் ல கூட இருக்கு அதுவும் நன்றாக இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!