ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

திப்புவின் வாள்

 

250 வருடங்களுக்கு முன்பு furniture செய்வோர் திறமை மிக்கவர்களாக இருந்திரு க்கிறார்கள் .


ஸ்ரீரங்கபட்டணத்தின் மாடல் , கூட்டம் இல்லாவிட்டாலும் எதிர்ப்புறம் நின்று போட்டோ எடுக்க வழியில்லை !


இவற்றை  வாங்க பிரான்ஸ்க்கு திப்பு கொடுத்த விலையையும்  raphel  போர் விமானங்களையும் ஒப்பிட்டு யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேரிட்டது. யார் ஜெயித்தார்கள் என்று கேட்கவிடாமல் .....ஆமாம், 'ஜருகண்டி'க்கு கன்னடத்தில் என்ன சொல்வார்கள்?)

 


architect உம் -  ஆர்டிஸ்ட்டும் ஒருவரேயா?கோட்டையைக் காக்க என்ன உபயோகித்திருப்பார்கள்?சேனாபதியின் மிடுக்கு.....

+திப்புவின் உடை 

forged in  fire  நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களோ?
Daamascas  ஸ்டீல் என்று ஒருவகை.  அமிலத்தில்  போட்டு எதோ அலங்காரம் செய்த மாதிரி தெரியும்.  அதே மாதிரி wootz  ஸ்டீல் என்று செய்வதை தென்னிந்தியர்களுக்கு 1000 வருடங்களுக்கு முன்னரே தெரியுமாம். 


திப்புவின் வாளும் wootz  வகை ஸ்டீல் என்பார்கள் 

திப்புவின் வாளுக்கு என்ன பெயர்? அது கடைசியாக பலி கொண்டது யாரை? 

= = = = = 


49 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

  எல்லோரும் புதிய கரோனா வலையில்
  இருந்து தப்பிக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  பயத்திலிருந்தும் நோயிலிருந்தும் அனைவரும் விடுபட இறைவனை இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. எல்லாப் படங்களும் ,அவைகளுக்குக் கொடுத்தத் தலைப்புகளும்
  மிக அருமை.

  wootz Steel இதுவரை கேள்விப்பட்டதில்லை.
  வரையப் பட்ட ஓவியங்கள் மிகவும் சிறப்பு.

  மலை இருக்கும் இடங்களில் எல்லாம் கோட்டைகள் எழுப்பி
  இருக்கிறார்.
  மலை எலி என்றும் அவருக்குப் பெயர் இருந்ததோ.
  அந்த மலையின் முன்புறம் ஒரு உடும்பு போலத் தோற்றம் அளிக்கும்
  பாறை எல்லாமே அற்புதம்.
  ஓவியங்களின் பின்னணி மிக அருமை.

  அதற்கான விளக்கங்களும் பாராட்டத்தக்கது.
  மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
 3. சேனாபதியின் மீசை ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ! நன்றி. மீசைக்குப் பெயர் பெற்றவர் நீங்கதானே!

   நீக்கு
 4. இப்போ கொரோனா பயத்தைவிட தடுப்பூசியை நினைத்துத்தான் அதிக பயம். இரண்டாவது டோஸ், உயில் எழுதினப்பறம் போட்டுக்கொள்ளலாமா என்று யோசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.ஹா.ஹா.நிஜமாகவே வாய் விட்டு சிரித்து விட்டேன் சகோதரரே.

   நீக்கு
  2. இதயம் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருந்தால் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை.

   நீக்கு
  3. விவேக், கிருஷ்ணமாச்சாரி யோக மையத்தில் 3 1/2 வருடங்களுக்கு மேல் தினமும் காலையில் யோகா செய்வாராம் (வயிரமுத்துவோடு). கொரோனா காலத்தில் யோகா மையத்துக்குப் போகமுடியாவிட்டாலும் வீட்டில் யோகா செய்வாராம். இதைத் தவிர உடற்பயிற்சி எல்லாம். இதயம் நல்ல நிலையில் இயங்குகிறதா என்று ஆராய்ச்சி பண்ணினால், சட்னு எதையும் (ஈசிஜி போன்று) பார்த்துச் சொல்லும் திறமையுடைய மருத்துவர்தான் காணக்கிடைப்பதில்லை.

   கேஜிஜி சார் மறுமொழியைப் பார்த்த உடனேயே, நம்ம கங்குலி, ஃபார்சூன் ஆயில், இதயத்துக்கு ரொம்ப நல்லது என்று விளம்பரத்தில் நடித்துவிட்டு தினமும் தொலைக்காட்சியில் சொல்லுவார். ஆறு மாசத்துக்குள்ள இதயப் பிரச்சனை என்று பிழைத்தது மறு பிறப்பு. அப்புறம் ஃபார்சூன் ஆயில், அந்த விளம்பரத்தையே வாபஸ் வாங்கிக்கொண்டது.

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய படங்களையும், அதற்கு பொருத்தமான வாசகங்களையும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. //ஜருகண்டிக்குக் கன்னடத்தில்..//

  ஒன்றைப் பற்றி எழுதிக் கொண்டே வரும் பொழுது, அதற்கு சம்பந்தமில்லாத இன்னொன்றைச் சொல்லி அதுபோல இது என்று சம்பந்தப்படுத்துவது எழுதுவதில் திறமை பெற்றோருக்கே சாத்தியப் 🚣 றது.

  வாசித்துக் கொண்டே வரும் அந்த 'ஜருகண்டி'யை உபயோகப்படுத்திக் கொண்டதை மிகவும் ரசித்தேன், ஸ்ரீ..!

  பதிலளிநீக்கு
 8. மூன்றாவது படம்.

  கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் மும்மொழி தான். நமக்கு மட்டும் சரிப்பட்டு வராதது, ஏனோ? ..

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அனைத்தும் நன்று.

  ஜருகண்டிக்கு கன்னடம்! ஹாஹா... ஹிந்தியில் கேட்டால் சொல்லி விடுவேன்! :)

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. அவருடைய சர்டிபிகேட் புக் பார்த்தால்தான் சரியாகத் தெரியும்.

   நீக்கு
  2. நெல்லை வேறே ஏதாவது சொல்லலாம்.
   அல்லது என்ன சொல்வார்ன்னு நாமாவது யூகிக்கலாம். :)))

   நீக்கு
  3. விஜயாலயன் என்ற ஜெயம் சார்ந்த பெயரை விசயாலயன் என்று செயம் சார்ந்து மாற்றுகிறோம்.
   ராஜராஜன், ராசராசன்
   பெயர் கொடுக்கும் அர்த்தம் முக்கியமில்லை அதை இப்படித்தான்
   எழுதுவேன் என்ற முனைப்பு தான் முக்கியமாகிறது.

   நீக்கு
  4. வெற்றுப் பெயர் மாற்றங்கள், பெயர் சூட்டல்களிபேயே தமிழனின் திருப்தியை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள்.
   தொல்காப்பியரின் தந்தை பெயர் நமக்குத் தெரியாது.
   ஆனால் அதே காலத்தில் வடக்கே வாழ்ந்த பேரரசர் அசோகர், அவரின் தந்தை பிந்துசாரர், தாத்தா சந்திர குப்தர் வரை நமக்குத் தெரியும்.

   நீக்கு
  5. இதெல்லாம் பற்றி விவரமாக என் தளத்தில் 'மொழி' தொடர் பகுதியில் எழுதவிருக்கிறேன்.

   நீக்கு
  6. விசயாலயன், ராசராசன்.... இந்தப் பப்பு 'ஸ்' என்ற எழுத்தில் வேகாது, இந்த டமிள் அறிஞர்களிடம். அதிலும் மூக்கை நுழைத்தால், மூக்கு இருக்காது அவங்களுக்கு. டக்குனு இன்னைக்கு சாயந்திரம் என்னவேலைனு இவங்கள்ட கேட்டா டிவில ப்ரோக்ராம் பார்க்கணும்னு சொல்லுவாங்க. அப்போ டமிள் காணாமப் போயிடும்.

   நீக்கு
  7. நம்ம பதிவுலகிலேயே தமிழ் ஆசிரியர்கள், தமிழாய்ந்த தமிழ் அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? கி.மு. கால தமிழ் பற்றி யாராவது ஆய்வுக் கட்டுரைகள் எழுத மாட்டார்களா என்றிருக்கிறது. இப்பொழ்து முதல் சங்கம், இடைச் சங்கம் எல்லாம் கற்பனை அப்படி எதுவும் இருந்ததில்லை என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் திருக்குறளுக்கு முற்பட்ட காலம் பற்றி சிந்திக்கக் கூட மறுக்கிறார்கள். 60 ஆண்டு கால தமிழ்ச் சிந்தனை எந்த வளர்ச்சியும் இல்லாமல் தேங்கிய குட்டையாய் பாசி படிந்து கிடப்பது வேதனையாக இருக்கிறது.

   நீக்கு
 12. ஜருகண்டிக்கு தமிழ் வார்த்தை சொன்னால் அதுவே ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு பொருளைக் கொடுக்குமே... இல்லையா? முந்துவரியிரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // முந்துவரியிரி// ஹா ! இது தமிழா ??

   நீக்கு
  2. ஜருகண்டிக்கு தமிழ் 'தள்ளு' ஹாஹா... இதன் அர்த்தம், அரசு அலுவலகங்களில் வேறு.

   நீக்கு
  3. ஜருகண்டி என்று திரைப்படம் வந்திருக்கே, தெரியுமோ?

   நீக்கு
  4. தியேட்டரிலிருந்து ஜருகண்டி ஆகிவிட்டது, வெளியிட்ட உடனேயே

   நீக்கு
  5. அக, ஜருகண்டிக்குத் தமிழ் சருகண்டி.
   அந்த ஜ,ச -வாக மாறினாலே தமிழ் ஆர்வலர் நிறைய பேருக்கு திருப்தி

   நீக்கு
 13. நாங்கள் சுற்றுலா சென்றபோது இவற்றைப் பார்த்துள்ளோம். நீங்கள் பகிர்ந்த விதம் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 14. ஜருகண்டிக்கு கன்னடம் என்ன என்று கூகிள் ஆண்டவரை கேட்டேன். இப்படி சொன்னது

  ಮುಂದೆ ಸಾಗುತ್ತಿರು
  Munde sāguttiru

  Jayakumar

  பதிலளிநீக்கு
 15. காட்சியகத்தை அழகாய் காட்சி படுத்தியது அருமை.
  அதற்கு பொருத்தமான வாசகங்கள் அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!