வெள்ளி, 9 ஏப்ரல், 2021

வெள்ளி வீடியோ : பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே 

 புதிய வாழ்க்கை என்றொரு படம்.  வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர் கதாநாயகன்.  1971 இல் வெளிவந்த இத்திரைப்படத்துக்கு கண்தாசன் பாடல்கள் எழுத, கே வி மகாதேவன் இசை.


படத்தைப் பற்றி விவரம் ஒன்றும் கிடைக்கவில்லை.  காட்சியில் வருவது ஜெய்சங்கருக்கு சகோதரியோ, காதலியா தெரியவில்லை.  பேசு பேசு என்கிறாரே, அந்தப் பாத்திரம் ஊமையா தெரியாது.  அல்லது மனநிலை சரி இல்லாதவரா, தெரியாது.  

எனக்குத் தெரிந்ததெல்லாம் எஸ் பி பி குரல்!

பேசு மனமே பேசு பேதை மனமே பேசு 
நாலுவகை குணமும் நிறைந்தே நடைபோடு 

கரையேறி ஆடிடும் அலைகள் கடலோடு மறுபடி ஓடும் 
அலைகூட நாணம் கொண்டாடும் அதுபோல பெண்மை கொண்டாடும் 
மூடிய பாடலும் நாணிய பார்வை நாடகம் 
மௌனமும் பெண்மையின் சீதனச் செல்வமன்றோ 

கொடியோடு தோன்றிய மலர்கள் குழலோடு சேருவதென்ன 
ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள் மறுவீடு தேடுவதென்ன 
பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே 
சொந்தமும் காதலும் இன்பமும் கொண்ட உள்ளத்திலே 

மலைபோல தோன்றிய சொந்தம் பனி போல மாறுவதிங்கு  
கனவாகத் தோன்றிய வாழ்வு நினைவாகக் காணுவதின்று 
போனது போகட்டும்  பாதையை  இன்று மாற்றிவிடு 
பூமியில் நீயும் ஆனந்த தீபம் ஏற்றிவிடு 


33 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் நோய் இல்லாமல் சுகமே வாழ
  இறைவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா..  வாங்க...  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. முதல் இரண்டு வரிகள் பள்ளிக் காலத்தில் கேட்டிருக்கிறேன். சரணம் பிறகு கேட்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை...  இன்று ஷெட்யூல் செய்து வைத்திருந்த பாடல்கள் வேறு.  5.30 ஐத் தாண்டியும் பப்ளிஷ் ஆகவிலையே என்று பார்த்தால் ஷெட்யூல் செய்து வைத்திருந்ததையே காணோம்.  அவசரமாக ஒரு பாடல் வேகமாக இணைத்தேன்!

   நீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் அமைதியாகவும், பிரச்னைகள் இன்றியும் தொற்றுக் குறைந்தும் இருக்கப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...  நேற்றைய தினம் ஒரு வருத்தத்தைத் தரும் நாளாக உங்களுக்கு அமைந்துவிட்டது.  வருத்தம்.

   நீக்கு
 5. இந்தப் பாடல் நிறையக் கேட்டிருக்கிறேன் மா.
  எஸ்பி பி குரல் மிக மிக இதம்.

  ஜெய்சங்கரும் ஜயபாரதியும்.
  மனம் தான் சரி இல்லைஎன்று நினைக்கிறேன்.

  ஆமாம் என்ன உறவென்று சொல்ல முடியவில்லை.
  தங்கையாக இருக்க முடியாது.:)
  ஒரு வேளை மன நல மருத்துவரும் நோயாளியுமோ!!!!
  நம் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

  நல்ல பாடல் தான்.
  மிக நன்றிமா ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படம் பப்படமாகிப்போனது போலும்ம்மா...   இந்த பாடல் மட்டும்தான் உருப்படி போல!  நன்றி. 

   நீக்கு
 6. பேசு மனமே பேசு...

  ஆனாலும்,
  மனம் பேசுவதில்லை..
  ஊமையாகிக் கிடக்கின்றது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிகிறது.  சற்றே தாமதமாகப் புரிந்தது.  வருத்தங்கள் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
 7. அடிக்கடி கேட்ட ஸூப்பர் பாடல் ஜி

  பதிலளிநீக்கு
 8. பாடல் நினைவிலில்லை. அதுவும் நல்லதுதான். மனப்படிவம் இன்றி வரிகளைப் பார்த்தேன். ஒன்றும் பெரிதாக இல்லை.

  ஆனால் பாட்டாகக் கேட்கையில்.. உயிர் உள்ளே நுழைந்துவிட, சாதாரண வரிகளும் எழுந்து நிற்கின்றன. ம்... இதனால்தான் எஸ்பிபி பெரிய ஆள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பாடல்கள் எஸ் பி பி க்கு அப்படி அமைந்திருக்கிறது.  நன்றி ஏகாந்தன்ஸ் ஸார்.

   நீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வாங்க கமலா அக்கா..  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  முன்பு அடிக்கடி கேட்டு இருக்கிறேன். பல வருடங்கள் கழித்து கேட்கிறேன்.
  மிக அமைதியாக எஸ் பி பி பாடுகிற பாடல்.

  படம் பார்க்கவில்லை , கதை தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  இந்தப் பாடல் அடிக்கடி கேட்டதில்லை என நினைக்கறேன். பாடல் வரிகளை இப்போதுதான் முதல் முறையாக படிப்பது போன்ற நினைவு. இந்தப் படமும் கேள்விப்பட்டதில்லை.

  ஆனால், எஸ்.பி.பியின் குரல் இனிமையில் எல்லாப் பாடல்களுமே சிறப்பாவது இயல்பு. இதனையும் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆனால், எஸ்.பி.பியின் குரல் இனிமையில் எல்லாப் பாடல்களுமே சிறப்பாவது இயல்பு.//

   அதைச் சொல்லுங்க...!

   நீக்கு
 12. காலை வணக்கம்.

  கேள்விப்படாத பாடல். மாலையில் காணொளி பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட்.

   //மாலையில் காணொளி பார்க்கிறேன்.//

   சரி.

   நீக்கு
 13. ஆஹா இன்று சோட் அண்ட் சுவீட் ஆக முடிச்சுக்கொண்டு ஸ்ரீராம் ஓடிவிட்டாரே.. ஆனா மிக அருமையான பாடல், பலமுறை கேட்டதுண்டு.. கண்ணதாசன் அங்கிளினுடையதெனில் சொல்லவோ வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதிரா..  சொல்ல பெரிய விவரமும் கிடைக்கவில்லை.  இரண்டுநாட்களுக்குமுன் ஷெட்யூல் செய்த பாடலும் என்ன ஆனது ன்று தெரியாயவில்லை.  சரியாய் செய்யவில்லை போல..  அவசரம்..  அதுதான்!

   நீக்கு
 14. சொல்ல மறந்திட்டேன்ன்.. இண்டைக்கு காலை எங்கட குயின் அம்மம்மாவின் ஆத்துக்காரர் இறைவனடி சேர்ந்துவிட்டார். பாவம் மனிசனுக்கு 99 வயசு... 100 ஆகும்வரை இழுத்துப் பிடிக்கப் பார்த்தனர் முடியேல்லை.

  இங்கு 100 ஆவது பிறந்த தினம், எவருக்கு[பிரிட்டிஸ் சிட்டிசென்ஸ்] வந்தாலும், குயின் அம்மம்மாவிடம் இருந்து வாழ்த்து மடல் வரும்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ...    அப்படியா?

   நேற்று துரை செல்வராஜூ ஸாரின் அம்மாவும் மறைந்து விட்டார்கள்.  வருத்தத்துக்குரிய நிகழ்வு.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!