திங்கள், 12 ஏப்ரல், 2021

திங்கக்கிழமை : சில்லி பனீர் - ஷ்யாமளா வெங்கட்ராமன்

 சில்லி பனீர்

சில்லி பனீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று.

ரெஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பனீர் ஆர்டர் செய்வார்கள்.  வீட்டில் ஏதாவது விசேஷம்,பிறந்தநாள் பார்ட்டி, மற்றும் நியூ 
யர்ஸ் பார்ட்டி ஆகியவற்றிற்கு விருந்துகளில் முதலிடம் வகிப்பது சில்லி பனீர் தான்.  இதை செய்வதில் என் மருமகள் expert .அவளிடம் இதை கற்றுக்கொண்டேன்.  இங்கிலாந்தில் இது இல்லாமல் ஒரு பார்ட்டியும் இல்லை ..இதை சுலபமாக வீட்டில் செய்யும் முறையை கூறுகிறேன் .நீங்களும் செய்து வீருந்தினர்களை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்

பனீர் --------------------------------------------------------- முன்னூறு கிராம்
cornflour ----------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் பச்சை,மஞ்சள் ,சிகப்பு -----------தலா ஒன்று ஆக மூன்று
பெரிய வெங்காயம் ----------------------------------------நான்கு
இஞ்சி -------------------------------------------------------------இரண்டு அங்குல நீளம்
பூண்டு --------------------------------------------------------------பத்து பல்
பச்சைமிளகாய் ---------------------------------------------------இரண்டு
எண்ணெய் -----------------------------------------------------------இரெண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை

கார்ன் flour மாவை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளுங்கள்.

பன்னீரை இரண்டு சென்டிமீட்டர் அளவு cube சதுரமாக நறுக்கு
கால் ஸ்பூன் மிளகு பொடி போடுங்கள்.

கார்ன் மாவு ,மிளகுப்பொடி சேர்த்து பன்னீர் துண்டுகளை பிசறி பத்து  நிமிடம் ஊற வையுங்கள். 

பின் எண்ணெய்யில் வறுத்து எடுங்கள்.

இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் மூன்றையும் நன்றாக மசிய இடித்து  எடுத்துக்கொள்ளுங்கள்.

வெங்காயம் குடைமிளகாய் இவைகளை ஒரு சென்டிமீட்டர் நீள அகலம்
உள்ள துண்டுகளாக நறுக்குங்கள்.

இஞ்சி ,பூண்டு மிளகாய் கலவையை எண்ணெய் விட்டு வதக்குங்கள்.

அத்துடன் கறிகாய் துண்டுகளை போட்டு முக்கால் வேக்காட்டில் வதக்கி எடுங்கள்.

அதில் டொமட்டோ சாஸ் (tomatto sauce) , சில்லி சாஸ் (chilli sauce) ,சோயா சாஸ் (soya sauce) மூன்றும் தலா  ஒரு டேபிள் ஸ்பூன்
ஊற்றி கலந்து, பின் வறுத்த பனீரை சேர்க்கவும்.   நன்றாக கலந்து வையுங்கள்.

அத்துடன் கொத்தமல்லி தழையை தூவுங்கள்.


அழகான நிறத்துடன் சில்லி பனீர் ரெடி

36 கருத்துகள்:

  1. இன்றைய சில்லி பனீர் செய்முறை நன்று. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே! எல்லோருக்கும் இலக்கண வகுப்பு எடுக்கலாமோனு நினைப்பேன். படங்கள் நன்றாக வந்திருக்கின்றன என்றும் யாரும் எழுத மாட்டார்கள். படங்கள் நன்றாக வந்திருக்கிறது என்பார்கள். என்னவோ போங்க! தமிழ் ததிங்கிணத்தோம் தாளம் போடுது! :(

      நீக்கு
    2. //படங்கள் நன்றாக வந்திருக்கின்றன என்றும் யாரும் எழுத மாட்டார்கள். படங்கள் நன்றாக வந்திருக்கிறது என்பார்// இதை எங்கே போய் சொல்வது? தமிழ் தொலைகாட்சி சேனல்களிலேயே செய்திகளில் அப்படித்தான் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல, மக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்பதற்கு, மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறது என்று வாசிக்கிறார்கள்.

      நீக்கு
    3. இலக்கணம் தவறுதான். நான் தபிழ் நிறைத் தெரிந்தவன் என்ற எண்ணத்திற்கு அவ்வப்போது வரும் பாடம்.

      நீக்கு
    4. ஹிஹிஹி, நெல்லை, தமிழ் நிறையத் தெரிஞ்சிருக்கணும். ஆனால் உங்களுக்கோ தபிழ் அல்லவோ நிறைத் தெரியுது! அதான்! :))))))))

      நீக்கு
  2. கீசா மேடம் இன்னும் வணக்கம் சொல்லவும், ப்ரார்த்திக்கவும் வரலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ..  இதோ வந்துடுவாங்க...  கொஞ்ச நேரம் இருங்க...

      நீக்கு
    2. @நெல்லை, இப்போல்லாம் நான் தினம் காலை வரமுடிவதில்லையே! நீங்க அதைக் கவனிக்கலை போல! இன்னிக்கு வந்திருக்கேன். நாளை எப்படியோ!

      நீக்கு
    3. அப்படீல்லாம் வராம இருக்காதீங்க... தினமும் காலைல முதல் ஆளா வந்து பயப்படுங்க.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே விளைக..  வாங்க துரை செல்வராஜூ ஸார்...   வணக்கம்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமே மேலோங்கிப் பிரச்னைகள் இல்லாமல் இருக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா.  வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. இது நிறையப் பண்ணிச் சாப்பிட்டிருக்கோம் அம்பேரிக்காவில். இங்கே பனீர் நம்ம ரங்க்ஸுக்கு அலர்ஜி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதனால் எப்போவானும் வாங்குவேன். அப்போல்லாம் பனீர் மடர் அல்லது கடாய் பனீர் என்று பண்ணிடுவேன். குடைமிளகாய் வாங்குவதும் எப்போதேனும். எனக்குப் பிடித்தது எதுவும் அநேகமாய் வாங்கவே மாட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 😂😁😁😁😁😁😁😁😁@ Geetha Sambasivam.நான் கவனித்தேன் ஏன் வருவதில்லையோ என்றும் கவலைதான்.
      வேலை இருக்கும். பட்டுக் குஞ்சுலுவோடு பேசும் நேரம் என்று நானே
      சமாதானம் சொல்லிக் கொள்வேன்:)

      நீக்கு
    2. வாங்க வல்லி. இந்த நேரம் குஞ்சுலுவுக்கு நடு இரவைத் தாண்டி காலை(?) இரண்டரை மணி இருக்கும். நாலரை மணி நேரம் வித்தியாசம். நாங்க இப்போல்லாம் வார நாட்களில் குஞ்சுலுவைப் பார்க்க முடிவதில்லை. அது பள்ளியிலிருந்து திரும்பி வரும் நேரம் அவங்க அப்பா/அம்மாவால் காட்ட முடியாது. மாலை நாலரைக்கு இருவருக்கும் நேரம் கிடைக்கும். அப்போ நம்ம நேரப்படி இரவு ஒன்பது மணி. சில நாட்கள் உட்கார்ந்திருந்து பார்ப்போம். சனி, ஞாயிறில் மத்தியானமாய்ப் பார்ப்போம். அவங்க நேரப்படி காலை பத்து மணி அல்லது மதியம் பனிரண்டுக்குள் பார்க்க முடியும்.

      நீக்கு
  6. இன்றைய செய்முறை அருமை. நல்ல காரசாரமாக
    ஏதோ ஒரு மெக்சிகன் மிளகாய் போட்டு
    ரசித்து சாப்பிடுவார்கள்.

    பேரன் தான் செய்வான்.
    மிக அருமையாகச் சொல்லி ,
    படமும் அழகாக வந்திருக்கிறது.
    நல் வாழ்த்துகள் சியாமளா வெங்கடராமன்.

    பதிலளிநீக்கு
  7. சுலபமாக செய்முறை விளக்கம் சொல்லிய விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம்.
    சில்லி பனீர் நன்றாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் பிடித்தது..செய்யத் தெரியாததால் கடையில் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்..இப்பதிவைப் பார்த்ததும் செய்ய எண்ணியுள்ளேன்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. சில்லி பனீர் செய்முறையும், படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய "திங்க"ப்பதிவில் சில்லி பனீர் செய்முறை அழகாகவும், அருமையாகவும் உள்ளது. சில்லி பனீர் செய்து பகிர்ந்த சகோதரிக்கு வாழ்த்துகள். நன்றிகள். இதை இன்று பகிர்ந்தமைக்கு உங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய வாழ்த்துக்கும் நன்றி களுக்கும் மனமார்ந்த நன்றி

      நீக்கு
  14. சில்லி பனீர் செய்முறை நன்று. எனக்குப் பிடிப்பதில்லை! :)

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  15. செய்முறை நன்று...

    பனீர் ஏனோ பிடிப்பதில்லை...

    பதிலளிநீக்கு
  16. சில்லி பனீர் செய்முறை , அருமையாகவும் அழகாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  17. சில்லி பனீர் செய்முறை இலகுவாக தோன்றுகிறது செய்து பார்த்து விடலாம் நன்றி

    பதிலளிநீக்கு
  18. கட்டாயம் செய்து பாருங்கள் நன்றாக வரும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!