புதன், 21 ஏப்ரல், 2021

யூ டியூபிலோ அல்லது இணையத்திலோ செய்முறைகளைப் படிக்கும் பார்க்கும் வழக்கம் உண்டா?

 

நெல்லைத்தமிழன் : 

1.  ஒரு பாம்பு தவளையைப் பிடிக்கப் போகிறது. நீங்கள் தவளையைக் காப்பாற்றுவீர்களா இல்லை அதனதன் வாழ்க்கை அதனதுக்கு என்று சென்றுவிடுவீர்களா?   (இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்த பிறகுதான் அடுத்த கேள்வியை பகிரணும்)   

*பாம்பு நவளையைப் பிடிக்கும் முன் தவளை தப்பிவிட வாய்ப்பிருக்கிறதே..  பிடிக்கட்டும்....  அப்புறம் பார்க்கலாம்.

$ கடைசியாக பாம்பையும் தவளையையும் ஒரு சேரப்பார்த்து வெகுநாட்களாயிற்று நகர வாழ்க்கையில் நடக்கின்ற விஷயமாகத் தெரியவில்லை.

# முன்பு தவளையைக் காக்க பாம்பைக் கொல்லப் போயிருப்பேன்.

& " ஒரு பாம்பு தவளையைப் பிடிக்கப் போகிறது." - பழைய தமிழ்ப்படங்கள் வரிசையில்  'ஒரு  ஊதாப்பூ  கண் சிமிட்டுகிறது', 'ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது' போல - இந்தத் தலைப்பு நன்றாக இருக்கிறதே! 

2. ஒரு குழந்தை நடக்கிறது, பெரிய பள்ளம் முன்னால் இருக்கிறது. நீங்கள் உடனே போய் குழந்தையைத் தூக்குவீர்களா இல்லை அதனதன் விதி அதனதனுக்கு என்று சென்றுவிடுவீர்களா?  

*பாம்புக்கு சர்வைவல் பிரச்னை.  பள்ளத்துக்கு அந்தப் பிரச்னை இல்லை!! குழந்தையின் வாழ்க்கைப் பிரச்னை.

$ குழந்தையைக் காப்பாற்ற முயல்வேன்.

# குழந்தையைத் தூக்குவேன். இதில் முரண் எதுவும் இல்லை.

3. இரண்டு நண்பர்கள் அத்துவான இடத்தில் நடந்துகொண்டிருக்கிறீர்கள். வெறிநாய் துரத்த ஆரம்பித்தால், நண்பனையும் காப்பாற்ற முயல்வீர்களா இல்லை வேகவேகமாக ஓடித் தப்பிக்கப் பார்ப்பீர்களா?

*புலி துரத்தியபோது ஷூக்களை சரிசெய்து கொண்டவனிடம் நண்பன் கேட்டானாம் "புலியைவிட வேகமாக ஓடுவியா?". நண்பன் சொன்னானாம் " தேவையில்லை, உன்னைவிட வேகமாக ஓடினால் போதும்"

$ நீங்கள் ஒரே திகில் காட்சிகளாக விவரிக்கிறீர்களே இரவில் நன்றாகத் தூங்குகிறீர்களோ?

# தப்பிக்கத்தான் பார்ப்பேன். 

4. உங்களுக்கு மிகவும் பிடித்த பழம் என்றால் எதனைச் சொல்வீர்கள்?  

*வாழைப்பழம்.

$ வாழை.

# அன்றாடம் பயன்படும் மிளகாப்பழம் புளியம்பழம்.

& சிவப்பழம். 

5.  யூ டியூபிலோ அல்லது இணையத்திலோ செய்முறைகளைப் படிக்கும் பார்க்கும் வழக்கம் உண்டா? நீங்கள் செய்ய முயற்சிப்பீர்களா?

*இல்லை.  வழக்கமில்லை.

$ பார்த்து செய்வோரிடமே சொல்வதுண்டு.

# பார்ப்பது மட்டுமே உண்டு.

& இணையத்தில் படித்து, செய்துள்ளேன். 

6. காமராஜரால், இந்திய அரசியலுக்கு நேர்ந்த விபத்து என்று எதைச் சொல்வீர்கள்?

# நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று புரிகிறது என்கிறேன்.

$ படிக்காதவர்கள் அரசியலுக்குத்தான் லாயக்கு என்னும் மனப்பான்மை.

& அப்படி எதுவும் அவரால் அரசியலில் விபத்து ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். 

கீதா சாம்பசிவம் : 

1.இந்தக் காலக் குழந்தைகள்/குறிப்பாய்க் கடந்த பத்து வருடங்களுக்குள்ளாகப் பிறந்த குழந்தைகள் செல்ஃபோன்/ஐ பாட் போன்றவற்றில் கார்ட்டூன்கள் பார்ப்பதில் நேரத்தைச் செலவு செய்வது சரியா? சொல்லப் போனால் தாய்மாரே குழந்தையின் கையில் செல்ஃபோனைக் கொடுப்பதும், அந்தக் குழந்தை அதுவாகவே விரும்பிய கார்ட்டூன் சானலைப் போட்டுப் பார்ப்பதையும் கண்டு வருகிறேன். இது சரியா? கண்கள் பாதிப்படையாதா?

*தவறு.  கண்கள் கெடுவதைவிட மனம் கெடும் வாய்ப்பு அதிகம்!

$ கண்கள் பாதிப்படைகிறதா என்பதையும் நீங்களே கண்டிருப்பீர்கள்தானே? உங்கள் அனுபவம் என்ன சொல்கிறது?

# சரியில்லை என நாம் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள் ?

2. இன்றைய குழந்தைகளுக்கு இந்த விஷயங்களில் ஆர்வமும், கையாளுவதில் இலகுவான தன்மையும் இருப்பதைப் போல் பாட விஷயங்களிலும் அவர்களுக்கு இது உதவுகிறதா?

*கொஞ்சம் உதவலாம்.  கொரானா காலத்தில் வேறு வழியுமில்லை.

$ நாம் படித்த 60 வருட காலத்து முந்திய பாடங்களையும் தற்கால பாடங்களையும் முறையையும் ஒப்பிடுவது சரியன்று.

# இந்தத் தலைமுறை குழந்தைகள் மிக புத்திசாலிகள். திறமைசாலிகள். 

3. குழந்தைக்கெனத் தனியாக ஐபாட், செல்ஃபோன் ஆகியவை வாங்கிக் கொடுப்பது சரியா?

*எனக்கு சம்மதமில்லை.  தவறு என்பதே என் கருத்து.

$ ஏன் கூடாது? 

# குறிப்பிட்ட வயது தாண்டியபின் சரியோ இல்லையோ தவிர்க்க இயலாதது.

4.வெளியில் போய் விளையாடும் சந்தர்ப்பங்கள்/இப்போதைய வாழ்க்கை முறையில் முற்றிலும் தொலைந்து போய்விட்டன/போய்க்கொண்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான சூழ்நிலையா?

*இல்லை.  ஆனால் வேறு வழியும் இல்லை.  

$ அடுத்த பதிலைப் பார்க்கவும்.  

# இல்லை . கொரோனா விளைவுகளில் இதுவும் ஒன்று.

5.அடுக்குமாடிக் குடியிருப்புக் குழந்தைகள் பொதுவான ஓர் இடத்தில் விளையாடிக் களிக்கவென அந்தக் குடியிருப்பில் ஏற்பாடுகள் செய்யலாம். ஆனால் பெரும்பாலானோர் இதை ஓர் இடைஞ்சலாகவே கருதுகிறார்கள். குழந்தைகள் விளையாடுவதை எதிர்ப்பவர்களே அதிகம். இது குழந்தையின் மன/உடல் வளர்ச்சியைப் பாதிக்காதா?

*பாதிக்கலாம்.  நாம்  பழைய காலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்கிறோம்.  காலங்கள் மாறுகின்றன.  நடைமுறைகள் மாறலாம். மாற்று வழிகள் உண்டாகலாம்.  அதுவும் பழகிப் போகலாம். 

$ வாரம் ஒன்றிரண்டு நாட்கள் (கரோனாவுக்குப் பின் வரும் காலத்தில்) வெளியே போய் விளையாடலாம், ஆரோக்கியத்தை திரும்ப அடையலாம். 

 # பெரியவர்களின் மனவளர்ச்சி குன்றியதன் விளைவு ?

= = = = 

110 கருத்துகள்:

 1. அடாடா!இன்னிக்கும் நான் தானா? அல்லது நெல்லை/கில்லர்ஜி ஆகியோர் எட்டிப் பார்க்கிறார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலைல படித்தேன். எழுத ஆரம்பித்தேன் (ஐபேட்ல). அப்புறம் வேலை வந்ததால் விட்டுவிட்டு கிளம்பிவிட்டேன். நான் முதல்ல எழுதினா, கீசா குழந்தை அழுது அடம்பிடிக்கும் என்பதால் ஹிஹி

   நீக்கு
 2. ஹிஹிஹி, என்ன ஆச்சு எ.பிளாகுக்கு? இப்படி யாருமே இல்லாமல் காத்தாடுது! தனியா இருக்கப் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும் எனக்கு. ஆகவே சீக்கிரமாப் போயிடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேனே! க்ரீச் சப்தம் வந்தால் நான் தனியா இல்லைனு தெரியுமே!

   நீக்கு
 3. இந்த வாரம் ஶ்ரீராம் * எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருந்தால் & கேஜிஜி சில கேள்விகளுக்கான பதில்களைத் தவிர்த்திருக்கார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னால் சொல்லப்பட்டிருக்கும் பதிலும் என் பதிலும் ஒன்றே என்றால் நான் silent ஆகிவிடுவேன்.

   நீக்கு
 4. //நாம் படித்த 60 வருட காலத்து முந்திய பாடங்களையும் தற்கால பாடங்களையும் முறையையும் ஒப்பிடுவது சரியன்று.// நான் கேள்வி கேட்டது பாடமுறைகள் பற்றி இல்லை. குழந்தைகளின் படிப்புக்கு இந்த எலக்ட்ரானிக் சாதனங்களைக் கையாளுவது உதவியாக இருக்கா என்பதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உதவியாத்தான் இருக்கு. புத்தகம் போல் இல்லாமல், இதில், வேண்டாதவைகளும் பார்க்கமுடியும். உங்க ஜெனெரேஷன்ல பாடப் புத்தகத்துக்குள்ள குமுதம் பத்திரிகை வைத்துப் படித்திருப்பீங்க (வெளிப்படையா ஒத்துக்கோங்க). அதைக் கண்டுபிடித்துவிட முடியும். செல்போன், கம்ப்யூட்டர்ல அப்படி சட்னு அவங்களைக் கண்டுபிடிக்க முடியாது.

   நீக்கு
  2. // செல்போன், கம்ப்யூட்டர்ல அப்படி சட்னு அவங்களைக் கண்டுபிடிக்க முடியாது.// எனக்கு அப்படித் தோன்றவில்லை.

   நீக்கு
  3. //(வெளிப்படையா ஒத்துக்கோங்க). // எதுக்கு அடைப்புக்குறி எல்லாம்? நான் பாடப்புத்தகத்துக்குள் குமுதம், விகடன், கல்கி வைத்துப் படித்ததை என் அப்பா பார்த்துவிட்டுப் பள்ளியில் வந்து சொல்லி ஆசிரியர்களிடம் திட்டும்/அடியும் வாங்கி வைத்தது பற்றி அடிக்கடி எழுதி இருக்கேனே!

   நீக்கு
 5. பல குழந்தைகளும் இணைய வழிக் கல்வியின் தேர்வுகளில் ஏமாற்றி மதிப்பெண்கள் வாங்குவது பற்றிப் பலர் சொல்லி/எழுதி இருக்கிறார்கள். ஆகவே எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் படிப்பது/தேர்வு எழுதுவது பயனுள்ளதா என்பதே என் கேள்வி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு இரண்டு தலைமுறை முன்பு, எல்லாமே மனப்பாடமா ஒப்பிக்கணும், புத்தகமே கிடையாது. அது பயனுள்ளதாக இருந்ததா இல்லை உங்க கால, பாடப் புத்தகத்தைப் படித்து பேப்பரில் தேர்வு எழுதியது பயனுள்ளதாக இருந்ததா? அப்புறம் வங்கித் தேர்வுலாம் மல்டிபிள் ஆப்ஷன் என்பதுபோல வந்தது. அதைக் குறை சொல்ல முடியும் (இங்கி பிங்கி பாங்கி போட்டு விடை தேர்வு செய்யலாம். வளவள பதில்களில் கதைவிட முடியாது)... மாற்றம் வந்துக்கிட்டே இருக்கும்.

   நாங்களும் திருமணத்துக்குப் பெண் பார்ப்பதில் வந்த பல மாற்றங்களைப் பற்றியும் கேட்கலாம் இல்லையா?

   நீக்கு
  2. இன்னும் முன்னே போனால் குருகுலவாசத்தில் எலலாமே கர்ண பாடம்தானே!

   நீக்கு
  3. கேள்வியையே இரண்டு பேரும் புரிஞ்சுக்கலை. மனப்பாடம் பண்ணறதைப் பத்தியோ, புத்தகத்தைப் படித்துத் தேர்வு எழுதினது பற்றியோ இங்கே கேள்வி இல்லை. இணைய வழிக் கல்வியினால் பயனுண்டா? அதில் தேர்வும் இணைய வழியிலேயே எழுதுவதால் மாணவர்கள் உண்மையிலேயே திறன் படைத்தவர்கள் ஆகிறார்களா? என்பதே என் கேள்வி! அடுத்த வாரம் பதில் கொடுங்கள்.

   நீக்கு
  4. இணைய வழிக் கல்வியினால் பயன் உண்டு. ஆனால் நேரடியா கத்துக்கொள்வதுபோல ஆசிரியர், மாணவர் என்ற தொடர்பு இருக்காது என்பது குறை. கிளாஸை கட் அடித்துவிட்டு வேறு தளங்களுக்குள் பசங்க போவாங்க என்பதும் ஒரு குறை. ஆனால் அடித்தாலும் அழுதாலும் அவள்தான் பிள்ளை பெறணும் என்பதுபோல, அவங்கதான் படித்துத் தேர்வு எழுதணும்.

   திறன் - இதுல மத்தவங்களோட இண்டெரேக்‌ஷன் குறைவு. பலர்கிட்ட பழகும் வாய்ப்பு, உலகத்தோட ஒட்டி வாழ்வது குறைந்துவிடும்.

   யூ டியூப்ல பார்த்து சமையல் கத்துக்கறதுக்கும் உங்கள்ட நேரடியாக் கத்துக்கறதுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

   நீக்கு
 6. அண்ணா பல்கலைக்கழகத்தில் புத்தகங்களை வைத்துக் கொண்டு விடைகளைக் கண்டு பிடித்து எழுதலாம் என அனுமதித்திருப்பதைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்! அது மாணவர்களுக்கு உதவுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னா கேள்வி இது? புத்தகத்தை நன்றாகப் படிக்காமல், அந்த அந்தப் பகுதிகளை ரெஃபர் செய்து தேர்வில் எழுத முடியுமா? சட்டப் படிப்புக்கு இது ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் முறைதானே

   நீக்கு
  2. ஓ! சட்டப்படிப்புக்கு இருப்பது தெரியாது. குறிப்பிட்ட சில தேர்வுகளின் உண்டு என்பது தெரியும்.

   நீக்கு
  3. ஒரு பிரச்சனைக்கு, பழைய similar cases refer பண்ணி எழுதணும். ஆயிரம் கேஸ்களுக்கு மேல் இருக்கும். இதெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. நல்லா படிச்சிருந்தால் டக் என்று அந்த கேஸை புத்தகத்தில் பார்த்து (அல்லது ஒன்றுக்கு மேல்) எழுதமுடியும்.

   நீங்க தட்டச்சுத் தேர்வும் பார்த்துத்தானே எழுதினீங்க (ஹாஹா)

   நீக்கு
 7. என் கணவர் அலுவலகத் தேர்வுகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டு விடைகள் கண்டு பிடித்துக் குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுதுவது ஒரு சவால் என்பார்! ஆனால் அதில் தான் அவர் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு தான் முன் சொன்ன கேள்வி கேட்டிருக்கேன். இப்போதைய மாணவர்களின் அனுபவங்கள் இனிமேல் தான் தெரிய வரும். உங்களில் யாருக்கேனும் பரிச்சயம் உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அலுவலகத் துறைத்தேர்வு புத்தகத்தை வைத்துக்கொண்டு எழுதலாம்.  எழுதினேன்.  அதில் பெரிய பயன் இல்லை!  ஆனால் பார்முலாக்கள் பிட் எழுதி வைத்துக் கொள்ளலாம்!

   நீக்கு
  2. கண்டிப்பாக இப்போதைய மாணவர்கள் எழுதுவார்களா என்று தெரியவில்லை. ஒரு வேளை பார்த்து எழுதலாம் என்பதால் புத்தகத்தை ஒரு முறையேனும் புரட்டுவார்களோ?!

   இதில் எந்தப் பயனும் இல்லை என்றே தோன்றுகிறது

   கீதா

   நீக்கு
 8. என்னோட முதல் கேள்விக்கு # அவர்கள் அளித்திருக்கும் பதில் தான் என்னோடதும்.

  பதிலளிநீக்கு
 9. நான் வந்திருக்கிறேன் கீதாக்கா...

  நட்பூஸ், அக்காஸ் அம்மா, தங்கைகள், தம்பிகள் அண்ணாக்கள் எல்லாருக்கும் வணக்கம் பார்த்து நாளாச்சு

  தொடர்ந்து வர முயற்சி ...பார்ப்போம் முடிகிறதா என்று...

  அப்புறம் வருகிறேன் பதிவிற்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்வரவு, நல்வரவு. என்னோட பதிவிலேயும் உங்கள் கருத்துரை வந்திருக்கு. போய்ப் பார்க்கணும். நல்லபடியாக மறுபடி பதிவுகள் எழுதவும், பதிவுகள் படித்துக் கருத்துரை சொல்லவும் பிரார்த்தனைகள்/வாழ்த்துகள்.

   நீக்கு
  2. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

   நலமா? எப்படியிருக்கிறீர்கள்.? உங்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களைத்தான் கொஞ்ச நாட்களாக காண முடியவில்லையே என தினமும் நினைத்துக் கொள்ளுவேன் பழையபடி நீங்கள் எல்லா பதிவுகளுக்கும் வந்து, தாங்களும் நிறைய பதிவுகள் தந்து பழைய கலகலப்பான சூழ்நிலைகள் வர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வலைத்தளம் வாருங்கள். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. நேற்றுதான் நினைத்தேன் - கீதா.ஆர், ரமா.எஸ் - போன்றவர்கள் ’லீவ் வித்தவுட் பே’-யில், லாங்-லீவில் இருக்கிறார்களா, அல்லது சிம்ப்ளி அப்ஸ்காண்டிங்கா..? - என்று புதனில் கேட்டுவைப்போமா என்று!

   நீக்கு
  4. வரவேண்டும் பெண்ணே வர வேண்டும் உன் வலது கால் வைத்து வர வேண்டும்... வெல்கம்! வெல்கம்! என்று ஒரு பாடல் உண்டு. அதை  கீதா ரெங்கனுக்கு டெடிகேட் பண்ணுகிறேன். 

   நீக்கு
  5. ஸ்ரீராம், கல்யாண அகதிகள் என்னும் படத்தில் நரசிம்மன் இசையில் வெளியான மேலே குறிப்பிட்ட பாடலை ஒரு வெள்ளியில் பகிருங்களேன். 

   நீக்கு
  6. இந்தக்கா யாரு? கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கு கேள்விப்படாத மாதிரியும் இருக்கு. வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இவங்கதானே கீதா ரங்கன்(க்கா)?

   நீக்கு
  7. ரமா ஸ்ரீநிவாசன் எபி வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்!  பேஸ்புக்கில் பிஸி.  ரெங்கனுக்கு நல்வரவு.  இனி தளங்கள் களைகட்டும்.

   நீக்கு
  8. என்ன கீ.ரெ??? அரைக்கீரெ? முளைக்கீரெ? சிறுக்கீரெ?

   நீக்கு
  9. அரக்கீர பத்தி எழுதலாம்.... கொஞ்சம் கீதா ரங்கனுக்கு நேரம் சரியில்லாமல் போய்விட்டது. இல்லைனா எழுதியிருப்பேன்.

   நீக்கு
  10. கமலாக்கா ஆமாம் வந்திருக்கிறேன். தொடர வேண்டும் என்றும் நம்புகிறேன்..என் கணினி இன்னும் சரியாகலை அது எப்ப ஆகுமோ? இப்போதைக்கு எப்ப கணினி கிடைக்குமோ அன்று. நான் வேலை செய்வதாற்காக வாங்கிய இரவல் கணினியும் தோழி கேட்டதால் போயாச்சு.
   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
  11. கீதாக்கா, ஏகாந்தன் அண்ணா பானுக்கா அங்கிட்டும் ஆஜர் வைத்துவிட்டேன்.

   எல்லோருக்கும் மிக்க நன்றி.

   பானுக்கா ஹாஹாஹா அந்தப் பாட்டு!! சூப்பர்! ரெண்டு காலையும் எடுத்து வைச்சு கொஞ்சம அழுத்தமாகவே எடுத்து வைச்சு வருகிறேன்!!!!!!!

   ஸ்ரீராம் நான் தொடர வேண்டும் என்று எண்ணுகிறேன்நம்புகிறேன்..!!!

   கீதா

   நீக்கு
  12. கௌ அண்ணா ஹா ஹா ஹா எஸ் வந்தாச்சு...

   கீதாக்கா சிரித்துவிட்டேன் கிரே!!!

   //இந்தக்கா யாரு? கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கு கேள்விப்படாத மாதிரியும் இருக்கு. வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இவங்கதானே கீதா ரங்கன்(க்கா)?//

   கர்ர்ர்ர்ர்ர்ர் இங்கயே நேரம் சரியில்லை - மாயாவி அடிச்சு மாத்துது...இதுல வெளிநாடு வேறயா ஹாஹாஹா....

   பாருங்க புராணத்துல அரக்கன் பல உருவம் எடுத்தான் மறைந்தான் என்றெல்லாம் சொல்லுவதுண்டே இப்ப பாருங்க பல உருவத்துல வருதாமே இந்த மாயாவி! மறைஞ்சு என்னா அட்டாக்!

   நெல்லை இப்பவும் நேரம் ஒன்னும் சரியாகலை ....நீங்க இப்பவும் எழுதலாம். அரெக்கீர ஹா ஹா ஹா எழுதுங்க ஓட்டலாம்..

   அண்ணே அக்கா வந்தாச்சு இனி வாலை சுருட்டி இருக்கணுமாக்கும் இல்லேனா அதீஸ் பாலஸுக்கு கிச்சனுக்கு உங்களை குண்டு கட்டா தூக்கி போட்டுருவேன்!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  13. //அதீஸ் பாலஸுக்கு கிச்சனுக்கு// - அதை மட்டும் செஞ்சுடாதீங்க... அந்தக் கிச்சன்ல, கத்தி, வெட்டு, ரத்தம் என்று ஜாஸ்தியா இருக்கு. எது மேலயும் படாமல் போய்ப் பார்க்க முடியலை

   நீக்கு
 10. நானே தன்னந்தனியா எத்தனை நாழி பேசிட்டு இருக்கிறது! போயிட்டு மத்தியானமா வரேன். ஶ்ரீராமநவமிக்கான ஏற்பாடுகள் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம நவமிக்கு, சுலபமா பானகம், நீர்மோர் பண்ணினேன்னு படங்கள் போடாதீங்க. வடை, பாயசம் என்று முழுச் சாப்பாட்டை படம் எடுத்து பிறகு பதிவு எழுதுங்க.

   நீக்கு
  2. இந்த வெயிலுக்கு நீர்மோரும் பானகமும் அமிர்தம். கொஞ்ச நாட்களாக என்ன தாகம் என்கிறீர்கள்?  தண்ணீர் குடித்து மாளவில்லை.  நாவறட்சி தீர்வதில்லை.  வயிறு மட்டும் வீங்கிப்போகிறது.

   நீக்கு
  3. நீங்கள் சொல்வது லோகத்தின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்!

   நீக்கு
  4. வரும், வரும் படங்கள் வரும்.

   நீக்கு
 11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வாராமல் வந்திருக்கும்
  கீதா ரங்கனுக்கும் வணக்கம்.
  தொற்று பற்றிய தகவல்கள் சரியாக இல்லாத நிலையில் பிரார்த்தனைகள்
  மட்டுமே செய்ய முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா வணக்கம் வந்திருக்கிறேன் பார்ப்போம்..

   நன்றி அம்மா

   கீதா

   நீக்கு
 12. புதன் கிழமை கேள்விகளும் பதில்களும் சிரிப்பை
  கொடுத்தது இதுவே முதல் தடவை.
  நெல்லைத் தமிழனுக்கும் எங்கள் ப்ளாக்
  ஆசிரியர்களுக்கும் நல் வாழ்த்துகள்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ...   நானும் இன்று பதில் கொடுத்திருக்கிறேன் என்று பார்த்தால் இந்த் வாரம்தான் சிரிப்பாய் வருகிறது என்று சொல்லி இருக்கிறீர்களே...  ஊரே கைகொட்டிச் சிரிக்கிறதா!!

   நீக்கு
  2. இஃகி,இஃகி,இஃகி,இஃகி! வேணுங்கட்டிக்கு வேணும்! (ஶ்ரீராமுக்கு) வெங்கலங்கட்டிக்கு வேணும்!

   நீக்கு
 13. குழந்தைகள் கைகளில், அதாவது 6,7 மாதக் குழந்தைகள்
  கைகளில் பார்த்திருக்கிறேன்.
  ஸ்விட்சர்லாந்தில் பார்த்திருக்கிறேன்.
  முன்பெல்லாம் அழுதால் வாயில் ஏதோ
  ரப்பர் வைப்பார்கள். இப்போது மொபைல் கொடுக்கிறார்கள்.

  எட்டு வருடங்கள் முன்பே குழந்தைகளுக்கு ஐபாட்
  கொடுத்து சாப்பாடு ஊட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.
  இப்போது அவை இல்லாமல் குழந்தைகள் இல்லை. அதுவும்
  வெளியே விளையாடுவது குறைந்த பிறகு
  கணினி, செல்ஃபோன்,ஐபாட் என்று பல இணைப்புகள் ஒரு வீட்டில்.
  காலத்தின் கட்டாயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா... இருபது வருடங்களுக்கு முன்பு, தொலைக்காட்சியைப் போட்டு குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்ததாக நினைவு. அதற்கு இருபது வருடங்களுக்கு முன்பு, வீட்டு வாசலுக்கு வந்து, தெருவில் போகிற வருபவரைக் காண்பித்து குழந்தைக்கு சாதம் ஊட்டினார்கள்... அதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, எப்படா சாதத்தைப் பண்ணி நம் கண்ணில் காட்டப்போகிறார்கள் (விறகு கும்முட்டி அடுப்பில்) என்று குழந்தைகள் காத்துக்கொண்டிருந்திருக்குமோ?

   நீக்கு
  2. நாங்கல்லாம் சாப்பிடக் காத்துண்டு இருப்போம். என் அப்பாவோட பாஷையில் பறக்காவெட்டிகள்! (பறக்காவட்டிகள்?)

   நீக்கு
 14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 15. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. திகிலான கேள்விகள், திறமையான பதில்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. ரசித்தேன்.

  விஞ்ஞான வளர்ச்சிகள் காரணமாக இப்போது குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது இந்த முறைதான் (செல், ஐபாட், டி.வி) என்ற பழக்கம் வந்து விட்டது. அந்தக்காலம் மாதிரி கதைகள் கேட்டபடி உணவு கொடுக்கும்/ உண்ணும் பழக்கம் இப்போது முறையே சொல்பவர்/கேட்பவர் எவருக்கும் இல்லை.வேகமான காலத்தின் மாற்றம். இப்போது "ஒரு நாள்" என்பதே நம்மை வேகமாக கடக்கிறது என்கிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. பயனுள்ள கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் காலை வணக்கம். ராமநவமி வாழ்த்துகள். ஶ்ரீராமனின் அருளாலும், ஹனுமனின் அருளாலும் ஆரோக்யம் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 19. //இன்றைய குழந்தைகளுக்கு இந்த விஷயங்களில் ஆர்வமும், கையாளுவதில் இலகுவான தன்மையும் இருப்பதைப் போல் பாட விஷயங்களிலும் அவர்களுக்கு இது உதவுகிறதா?//உதவ முடியும். ஆனால் குழந்தைகள் அந்த வசதியை உபயோகப்படுத்திக் கொள்ள விரும்ப வேண்டுமே?     

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதும் கெட்டதும் எப்போதுமே நம் தெரிவில்.  குழந்தைகளுக்கு என்ன தெரியும், சரியான வழிகாட்டல் இல்லாவிடில்?

   நீக்கு
 20. //4.வெளியில் போய் விளையாடும் சந்தர்ப்பங்கள்/இப்போதைய வாழ்க்கை முறையில் முற்றிலும் தொலைந்து போய்விட்டன/போய்க்கொண்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான சூழ்நிலையா?//பெரிய குடியிருப்புகளில் அளிக்கப்படும் வசதிகளில்(amenities) children's play area என்பதும் உண்டு. அதைத் தவிர விளையாட நிறைய இடம் இருக்கும். இந்த கொரோனா காலத்திலும் எங்கள் வளாகத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டும், சைக்கிள் ஓட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். மாலை நாலு மணிக்கு அவர்கள் விளையாடும் சப்தம்தான் என்னை டிப்ரஷனுக்கு தள்ளாமல் இருக்கிறது. தனி வீடுகளில் கொஞ்சம் கஷ்டம். சிறிய அபார்ட்மெண்டுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும்   விளையாடுவது கஷ்டம்தான். அதனால்தான் இன்றைய இளம் தலைமுறையினர் இப்படிப்பட்ட பெரிய சொசைட்டிகளை  விரும்புகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கேயும் விளையாடுவாங்க தான்! இடமும் நிறையவே இருக்கு! ஆனால் நிபந்தனைகள் அதிகம்! :(

   நீக்கு
 21. நெல்லையைப் பார்த்து இரண்டு நாட்களுக்கு மேலாச்சு. எங்கே காணோம்? திடுக்குன்னு வந்து யோகாவில் இருந்தேன் என்பார். என்னதான் யோகானாலும் அதுக்கு ரெண்டு மணி நேரம் போதாது? பொதுவா யோகான்னு ரெண்டே வார்த்தைலே முடிச்சிக்கிறாங்க. மூச்சு பயிற்சி வேறே; யோகா வேறே. அப்படீங்களா? நெல்லை வந்து சொன்னாத்தான் ஓரளவாவது தெரியும். வர்ற போது வந்து சொல்லட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகா ... உடலுக்கு, jointsகளுக்கு, உள்ளே உள்ள உறுப்புகளையும் கொஞ்சம் அசைத்துப் பார்ப்பதற்கு. பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி மற்றும் நுரையீரலுக்கு உள் காற்று செலுத்தி உடலையே கொஞ்சம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள. தியானம் என்பது அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி அதற்கு அடுத்த நிலைக்குச் செல்ல.

   தியானம் இன்னும் ஆரம்பிக்களை (மீண்டும்).

   நீக்கு
 22. //காமராஜரால், இந்திய அரசியலுக்கு நேர்ந்த விபத்து// - நாலு எழுத்து படிக்கத் தெரியாதவனெல்லாம் அரசியல்வாதியாகி, அறிவு பெற்ற மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமராஜரைப் போன்ற நல்லவர்கள் கோடியில் ஒருவர் இருந்தாலே ஆச்சர்யம். ஆனால் எல்லா படிக்காத தற்குறிகளும் காமராஜரை உதாரணமாக வைத்துக்கொண்டு தலைவர்னு சொல்லிக்கிட்டு வந்துடறாங்க.

   நீக்கு
 23. //பாம்புக்கு சர்வைவல் பிரச்னை. பள்ளத்துக்கு அந்தப் பிரச்னை இல்லை!! குழந்தையின் வாழ்க்கைப் பிரச்னை.// - இந்தப் பதிலைப் பாராட்டுகிறேன். நம் செயல் யாரையாவது பாதிக்காத வரை நாம் செய்வது தர்மத்தின்பாற்பட்டதுதான்.

  பதிலளிநீக்கு
 24. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள்! இன்றைய பதிவு பயனுள்ளதாயும் , சிந்திக்கவைப்பதாயும் உள்ளது. phone , I -pad ஐ பிள்ளைகளிடம் கொடுக்காமல் இருக்கவும் முடியவில்லை.கொடுக்கவும் மனமில்லை. pandemic ல் இவற்றை பயன்படுத்துவது அதிகரித்திருப்பது வேதனையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வானம்பாடி..   வாங்க...   கொடுக்காமல் இருப்பதே உத்தமம்.  வேறுவழி இல்லையென்றால் ப்ரதிமத்திமம்!

   நீக்கு
 25. //கண்கள் கெடுவதைவிட மனம் கெடும் வாய்ப்பு அதிகம்!//

  யெஸ் டிட்டோ..

  3. குழந்தைக்கெனத் தனியாக ஐபாட், செல்ஃபோன் ஆகியவை வாங்கிக் கொடுப்பது சரியா?//

  நோ நோ நெவர்...

  வெளியில் போய் விளையாடும் சூழல் இல்லாதது நிஜமாகவே ஆரோக்கியமற்றதுதான். ஆனால் இப்போதையா சூழலில் என்ன செய்ய முடியும்? * பதிலே எனதும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 26. குழந்தைகள் விளையாடுவதை எதிர்ப்பவர்களே அதிகம். இது குழந்தையின் மன/உடல் வளர்ச்சியைப் பாதிக்காதா?//

  இது இந்தத் தொற்றின் காரணம் என்றும் சொல்ல முடியாதே தொற்று வருவதற்கு முன்னும் கூட விளையாட பல பெற்றோர் அனுமதித்ததில்லை. ரேங்க் படிப்பு அந்த வகுப்பு இந்த வகுப்பு என்று தான் பல விடுமுறைகள் கழியும். இது எப்போதுமே நல்லதல்ல தான். இப்போது ஆன்லைன் வகுப்புகள்!

  காலம் மாறிவருகிறதே!

  கீதா

  பதிலளிநீக்கு
 27. ////நீங்கள் தவளையைக் காப்பாற்றுவீர்களா //
  தவளையோ அல்லது food web இல் செகண்டரி கன்ஸ்யூமர் இருக்கும் உயிரினம் அது அதன் இருப்பிடத்தில் எதை செய்தாலும் நாம் உட்புக போவதில்லை ஆனால் அதே பாம்பூ நம் வீட்டுக்கும்  தோட்டத்துக்கு வந்து கண் முன்னாடி பிடிக்கப்போனா   பறவை தவளை இவற்றை காப்பாற்றணும் ..அது பாம்பின் உணவுனு நம்ம வீட்டு பொருளை விட்டுக்கொடுக்க முடியாத 
  நெல்லைத்தமிழனுக்கு எதுக்கு இவ்ளோ வில்லங்கமான கேள்விகள் :))))))))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட...இது வித்தியாசமான பதிலா இருக்கே... ஆனால் இதிலும் சுயநலம் இருக்கே?

   நீக்கு
  2. இல்லையில்லை நான் பக்கத்துவீட்டு கோழிக்குஞ்சா இருந்தாலும் முடிஞ்சா  கண்ணால் பார்த்தா காப்பாத்துவேன் :) ஒரு சின்ன உயிர்னாலும் அதுவும் உயிர்தானே கண்முன்னால் கைவிடல் தவறு .நீரில்  எறும்போ ஈயோ விழுந்து தத்தளிக்கும்போது பார்த்துட்டு சும்மா இருப்போமா ? நான் நிறைய எறும்புகளை காப்பாத்தி விட்டிருக்கேன் இதில் சுயநலமில்லையே :))))))))

   நீக்கு
 28. /2. ஒரு குழந்தை நடக்கிறது, பெரிய பள்ளம் முன்னால் இருக்கிறது. நீங்கள் உடனே போய் குழந்தையைத் தூக்குவீர்களா இல்லை அதனதன் விதி அதனதனுக்கு என்று சென்றுவிடுவீர்களா?  //
  அவ்வ்வ் ஹய்யோஓஓஓ ,,,, நான் உயிரை குடுத்தாச்சும் காப்பாற்றுவேன் .
  எனக்கு ரெண்டு வருஷமுன்னுக்கு வரைக்கும் இப்படி ஒரு கனவு வரும் தொடர்ந்து ..ஒரு பேருந்து போகுது வேகமா சிக்கனலில் உள்ள குழந்தை வேகமா போக அதை காப்பாற்ற நான் குறுக்கே பாய்ந்து விழுந்து குழந்தையை காப்பாற்றுவதுபோல் .ஆனா நான் மர்கயா ..இந்த கனவு அதுக்கெல்லாம் கவலைப்படவில்லை .ஆனால் நிச்சயம் என்னால் ஒரு உயிரை காக்க முடியும்னா நிச்சயம் எப்படியாச்சும் காப்பாற்றுவேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் ஏனோ இப்படியெல்லாம் யோசித்திருக்கிறேன். நாம ஏதாவது செய்யப்போய் அதனால் அந்தக் குழந்தைக்கோ அல்லது வேறு எதுக்கோ பிரச்சனை அதிகமானால் என்ன செய்வது என்று. ஆனாலும் அந்த க்ஷணத்தில் நமக்கு அடுத்தவங்களைக் காப்பாற்றும் எண்ணம் வேகமாக எழும் என்பது உண்மை.

   நீக்கு
 29. 3. இரண்டு நண்பர்கள் அத்துவான இடத்தில் நடந்துகொண்டிருக்கிறீர்கள். வெறிநாய் துரத்த ஆரம்பித்தால், நண்பனையும் காப்பாற்ற முயல்வீர்களா இல்லை வேகவேகமாக ஓடித் தப்பிக்கப் பார்ப்பீர்களா?//

  ஹாஹாஆ நெல்லைத்தமிழன் இம்மாதிரி சூழலில் உங்களை உங்க நண்பன் விட்டுப்போய் பிறகு எப்படியோ தப்பிச்சா மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்கும்போது நீங்க என்ன செய்வீங்க ?
  அநேகமா நெல்லைத்தமிழன் 2 அம வகுப்பு தமிழ் புக் படிச்சிருப்பார்னு நினைக்கிறன் :)ரெண்டு நண்பர்கள் கரடி கதை மாதிரிலா இருக்கு இது :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரச்சனை என்று வரும்போதுதான் மனிதன் சுயநலவாதி என்பது தெரியும், புரியும்

   நீக்கு
  2. ஹ்ம்ம் உண்மைதான் .அந்த மாதிரி சந்தர்ப்பம் சூழலோ எனக்கு வரவே கூடாது 

   நீக்கு
 30. //& சிவப்பழம். //

  /அப்படின்னா என்னா ?? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவனடியார்கள் என்பது பொருள். அவங்கள்ட ருத்திராட்சக் கொட்டை இருப்பதால் அப்படிப் பெயரா என்பது எனக்குத் தெரியாது.

   நீக்கு
  2. அவ்வ்வ்  தாங்க்ஸ் .நான் ஒருகணம் லொலொலிக்கா பழத்தை சொல்றார்னு நினைச்சிட்டேன் 

   நீக்கு
 31. நான் பிறகு வரேன் வேலைக்கு புறப்படறேன் 

  பதிலளிநீக்கு
 32. //5.  யூ டியூபிலோ அல்லது இணையத்திலோ செய்முறைகளைப் படிக்கும் பார்க்கும் வழக்கம் உண்டா? நீங்கள் செய்ய முயற்சிப்பீர்களா?//
  நான் செய்வேன் .ஒவ்வொருவரின் ரெசிப்பி வித்யாசமா இருக்கும் .ஆனால் எல்லாத்தையும் பார்த்து அதில் மை பெர்சனல் டச் சேர்த்து செய்வதுண்டு 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிட்டத்தட்ட நானும் அதேதான் செய்வேன். பொருட்கள் - இணையத்தில் உள்ளதுபோல். ஆனால் அளவுகள் என் டேஸ்ட் படி!

   நீக்கு
 33. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
  அதற்கு வந்து இருக்கும் பின்னூட்டங்களும் நன்றாக இருக்கிறது.

  காலம் மாறுகிறது. நாமும் நிறைய மாறி வருகிறோம்.
  குழந்தைகள் படிப்பு, செய்யும் வேலைகள், விளையாட்டு , என்று இப்போது எல்லாம் கணினி வழி என்று ஆகி விட்டது.

  நம்முடைய பொழுது போக்கும் இப்போது கணினி என்று ஆகி விட்டது. முன்பு வீட்டு வேலைகள் முடித்தவுடன் உற்றார், உறவினர், அண்டைவீடுகள், கோவில் என்று இருந்தோம்.

  குடும்பத்தினர்களுடன் மாதம் ஒரு சினிமா அவ்வளவுதான். இப்போது தொலைக்காட்சியில் சினிமா, யூ டியூபில் சினிமா, சமையல், கைவேலைகள், கோயில்விழாக்கள் என்று நிறைய பார்க்க வசதிகள்.

  பயன்படுத்துவதில் ஒரு வரைமுறை வைத்து கொண்டால் எல்லாம் நலமே.

  பதிலளிநீக்கு
 34. கேள்வி பதில்கள் சுவாரஸ்யம். தொடரட்டும். நெல்லைத்தமிழன் கேள்விக்கான பதில் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 35. கேள்விபதில்கள் சூப்பர். முதல் கேள்வியில் பாம்பைப் பார்த்தால் ஒன்று அடிப்போம் அல்லது ஓடி விடுவோம். அதை விட்டுட்டு தவளையை என்ன செய்யப் போகுதுன்னு வேடிக்கை பார்ப்போமா?.... எல்லாக் கேள்விக்கும் நானும் பதில் சொல்லிக்கொண்டேன்.. :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!