கடந்த பத்து நாட்களில் இரு அனுபவங்கள்.
கொரோனா பரவும் வேகம் கண்டு எல்லோருமே மிரண்டு போயிருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஏதோ ஒரு வகையில் எங்கோ செல்லும் வழியில் அதனிடம் மாட்டிக் கொள்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா என்பதே பொய் என்று சொன்ன பெரும்பாலோர் மாறி, கொஞ்சம் எச்சரிக்கையுடனும் இருக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் காலங்கடந்த ஞானோதயம்.
இந்த கொடிய அலையில் அகப்பட்டுக் கொண்டவர்களில் எங்கள் உறவு / நட்பு சுகுமாரின் மகனும் ஒருவன். 36 வயதில், அடுத்த மாதம் கல்யாணத்தை வைத்துக் கொண்டு அறிகுறிகளால் கவலைப்பட்டு, டெஸ்ட்டி, பாசிட்டிவ் என்று அறிந்து அலைச்சலைத் தொடங்கினான். இன்று நலமாக இருக்கிறான் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். ஒன்றாம் தேதி அன்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான்.
வீட்டில் தனி அறை, தனி ரெஸ்ட் ரூம் வசதிகள் இல்லாத நிலையாலும், வயதான பெற்றோர்கள் இருப்பதாலும், தனிமைப்படுத்தலுக்கு மருத்துவமனை தேடுவதில் தொடங்கியது அலைச்சல்.
அதற்கு ஒரு வாரம் முன்பு பாதிக்கப்பட்ட, என்னுடன் பணிபுரிந்து ஒய்வு பெற்றவரும் அவர் மனைவியும் இதேபோல அலைந்து ஒரு சிறிய தெருவில் இருந்த சிறு கிளினிக் போன்ற மருத்துவமனையில் இடம்பிடித்து, ஐந்து நாட்கள் அங்கிருந்து திரும்பி இருந்தார்கள். செலவு தலா ஒன்றேகால் லட்சம்.
இவன் கிங் இன்ஸ்டிட்டிட்யூட் சென்று இடமில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டு, மதியத்துக்குமேல் ஒரு சிபாரிசுடன் ராஜிவ்காந்தி ஆஸ்பத்திரி சென்றிருக்கிறான். மாலை ஏழுமணி வரை காத்திருந்து உள்ளே அனுமதிக்கப்பட்டதும் "உன் ஆக்சிஜன் லெவல் 95க்கு மேல் இருக்கிறது. CEE Guindy போ" என்று அனுப்ப, மதியத்திலிருந்தே சாப்பாடு இல்லாமல் இருந்தவன், இங்கு வந்திருக்கிறான். இங்கு அவனைச் சோதித்தவர்கள், "உன் ஆக்சிஜன் லெவல் 92 தான் இருக்கிறது. இங்கு எந்த வசதியும் இல்லை. ராஜீவ்காந்திக்கே போ" என்று சொல்ல, நொந்து போய் அங்கு தந்த சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுக் காத்திருந்து மறுபடி இரவு பதினொன்றரைக்குமேல் ஆம்புலன்ஸ் வந்ததும் (அன்று முதல்தான் இரவு நேர லாக்டவுன் ஆரம்பம்) மறுபடியும் ராஜிவ்காந்தி சென்று அவன் அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்படும்போது இரவு ஒரு மணி. அதுவரை நாங்களும் தூங்கவில்லை.
அங்குமே அவனுக்கு வாய்வழியாக உட்கொள்ளும் ஆன்டிபயாட்டிக்தான் தரப்பட்டது. மறுநாளே மறுபடி அவனை 'உன் ஆக்சிஜன் லெவல் ஓகே' என்று கூறி மறுபடி CEE Guindy க்கு அனுப்ப, மறுக்க முடியாமல் வேறு வழி இல்லாமல் இவனும் அவர்கள் காட்டிய வண்டியில் ஏறி, இங்கு வந்ததும் பழைய கதை. 'உன் ஆக்சிஜன் லெவல் 88' என்றார்கள். மறுபடி ராஜீவ்காந்திக்கு பேசினால் அங்கு இடமில்லை என்கிறார்கள். வேறு எந்த மருத்துவமனையிலும் இடமில்லை. ராமச்சந்திரா, சவீதா, என்று எங்கு கேட்டாலும் இதே பதில். மியாட் பக்கமே போகமுடியாது. ஒருநாளைக்கு ஒரு லட்சம். ஆனால் அங்குமே இடம் இல்லை என்பதே பதில். நான் மேலே சொன்ன சிறு மருத்துவமனை போன்ற தெருவோர மருத்துவமனை, க்ளினிக்குகளிலும் இடம் இல்லை.
எத்தனை எத்தனை பேர்கள் இது மாதிரி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களில் நம் நெருங்கிய உறவினனும் இப்படி என்றால் தூக்கம் வரவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. தெரிந்த அளவில் நிறைய மருத்துவ நண்பர்கள், அதிகாரிகள் என்று முயற்சித்து ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் அங்கேயே தொடர்ந்து இருக்கவே வேண்டி வந்தது.. பிறகு அவனை குப்புறப்படுத்துக் கொள்ளச்சொல்லி, மூச்சை இழுத்து நிறுத்தி விடச் சொல்லி.. கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சிஜன் அளவு சரியாகும் நிலைக்கு வந்தது.. இதில் அந்த இடம் பற்றி எல்லாம் தெரிந்துகொண்ட சில விவரங்களை வெளியில் சொல்ல முடியாது.
நான்கு நாட்களில் அவன் தந்தை சுகுமாருக்கும் வலுவாக அறிகுறிகள் தென்படத் தொடங்க அவரும் சோதனைக்குள்ளானதில், ஆச்சர்யம் நெகட்டிவ் என்று வந்தது இன்றுவரை தீராத மர்மம்.
இன்னொரு சம்பவம்... புகழ்பெற்ற ரெமிடிசெவிர் மருந்து. பாஸின் சித்தியின் சம்பந்தி வீட்டில், ஒரு இல்ல விழாவில், ஜுரம் போன்ற அறிகுறிகள் இருந்த ஒருவர் சற்றும் பொறுப்பில்லாமல் கலந்துகொண்ட விளைவு, அந்த விழாவை அட்டென்ட் செய்த ஏகப்பட்ட பேர்கள் கொரோனாவில் பாதிக்கப்படத் தொடங்கினார்கள்.
என்ன ஃபார்மாலிட்டியோ, என்ன அன்போ, இது மாதிரி விழாக்களுக்கு அழைப்பதும், அட்டென்ட் செய்வதும். அழைக்காமல் இருக்க முடியாது என்கிற சங்கடத்தில் அழைப்பவர்கள்...
அழைத்து விட்டார்களே, போகாமல் இருந்தால் தவறாக எண்ணுவார்களே என்று இவர்கள்.. எப்பவோ கொரோனா காலத்துக்கு முன் அவர்கள் இவர்கள் வீட்டு விழாக்களுக்குத் தவறாமல் வந்து இருப்பார்கள்.. அது நினைவில் வந்து மோத, இருபக்கமும் அல்லாடுவது இருக்கிறதே.. தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
அவர் இல்ல விழா ஒன்றுக்கு நான் வரவில்லை என்று சொன்னதும் எனது நண்பர் சொன்னார்..."அழைக்கிறேனே தவிர, வரவில்லை என்று சொன்னால் ஒரு நிம்மதி பரவுகிறது மனதில்" இப்போது ஒருவர் வீட்டில் கல்யாணம் காட்சி என்றால், எங்கே அழைத்து விடுவார்களோ என்கிற பயமும் இருக்கிறது இன்னொருபுறம்!
உறவொன்றுக்கு சஷ்டியப்த பூர்த்தி. நங்கள் வந்தே ஆகவேண்டும் என்று வறுபுறுத்தினார்கள். எவ்வளவு சொல்லியும் பிடிவாதம். நாங்கள் செல்லவில்லை. இப்போது பேச மாட்டேன் என்கிறார்கள்.
மேலே நான் சொல்லியிருக்கும் அந்த இல்ல விழாவை அட்டென்ட் செய்து பாதிக்கப்பட்டவர்களில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அந்த வயதானவருக்கு இந்த
ரெமிடிசெவிர் தேவைப்பட, இவர்கள் கையில் மருந்துசீட்டைக் கொடுத்து ''எங்களிடம் இல்லை, எங்கிருந்தாவது வாங்கி வா" என்று வழக்கம்போல சொல்லி விட, இவர்கள் எங்கும் கிடைக்காமல் அலைந்து திரிந்து ஒரு ஊசி 20,000 ரூபாய் என்று நான்கு ஊசி வாங்கி விட்டு எனக்குத் தொலைபேசினார்கள்.
இது உயிர்காக்கும் மருந்து அல்ல என்கிறது அரசு, சுகாதாரச்செயலார் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள். எனில், ஏன் இதை எல்லா மருத்துவர்களும் பரிந்துரைக்க வேண்டும்? ஆக்சிஜன் குறைந்தவர்களுக்கு ஆறுநாள் ஆக்சிஜன் கொடுக்கவேண்டிய நிலை என்றால், இந்த மருந்தைச் செலுத்தினால், ஐந்து நாட்களோ, நான்கு நாட்களோ ஆக்சிஜன் செலுத்தினால் போதுமாம். செயற்கையாகத் தட்டுப்படு ஏற்படுத்தினார்களோ, இல்லை பற்றாக்குறையோ... இந்த
ரெமிடிசெவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு. நானும் எனக்குத் தெரிந்த எங்கு கேட்டுப்பார்த்தாலும் இல்லை.
அந்நிலையில் கீழ்ப்பாக் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஒரு கவுண்டர் ஏற்பாடு செய்து (ஏற்கெனவே அங்கு இது மாதிரி இன்சுலின் ஊசிகள் வெளி மார்க்கெட்டைவிட குறைந்த விலையில் கொடுத்து வருவது வழக்கம்) ஒரிஜினல் மருந்துச் சீட்டு, வாங்குபவர், மற்றும் நோயாளியின் ஆதார் கார்டுடன் வந்தால் ரூ. 1580 க்கு ஊசி தருவதாக அறிவிக்க, அதை வேறு ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸாப்பில் பகிர, அது வைரலாகி, வெளியூர்களிலிருந்தெல்லாம் வந்து மருந்து வாங்கக் குவிந்தனர்.
நான் சொல்லி, அங்கு சீக்கிரமாகவே செல்வதாக எண்ணி நேரில் சென்ற உறவினர் திகைப்படையும் அளவில் கூட்டம். ஆடி கார்களில் எல்லாம் வந்து இறங்கி வரிசைக்கு வந்தார்களாம். காலை ஏழரைக்கு அங்கு சென்றவர், கூட்டத்தில் நின்று சிக்கி, மருந்தை வாங்கியபோது மாலை ஐந்தரை மணி. இத்தனைக்கும் முதலில் இவருக்கு முன்னால் 135 பேர்கள் மட்டுமே இருந்தனராம். அவர்களும் முதல் நாளே வந்து கிடைக்காமல் அதனால் டோக்கன் வாங்கியவர்கள் என்று சொன்னார்களாம்,. ஆனாலும் என்ன ஆனது என்று தெரியாமல் அவ்வளவு நேரமானது.
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால் ஊசிக்கு அவர்களே ஏற்பாடு செய்து விடுவார்கள். தனியார் மருத்துவமனைகள் என்பதால், மருந்து தட்டுப்பாடு என்றதும், சீட்டை எழுதிக் கிழித்துக் கையில் கொடுத்து விடுகிறார்கள். இன்ஷுரன்ஸ் கவரேஜ் வேறு இருக்கும் என்பதால் கவனமாகவே இருப்பார்கள். அதிக விலைக்கும் அவர்களால் கொடுக்க முடியாது.
அதிக காசுக்கு ஆசைப்பட்டு விற்றவர்கள் ஏழெட்டு பேர்கள் சிக்கியுள்ளனர். அதில் ஒரு மருத்துவர் உட்பட மருத்துவமனை ஊழியர்களும் அடக்கம்.
இத்தனை செத்தும் அந்த வயதானவர் பிழைக்கவில்லை என்பது இன்னொரு சோகம். அவரால், அவரது பிரசன்னத்தால் தொற்றுக்குள்ளாகியிருக்கும் அவரது உறவினர்கள் சிகிச்சையில், தனிமையில் இருக்கிறார்கள் இப்போது.
இந்தக் கொடுமைகளிலிருந்தெல்லாம் தப்பிக்க ஒரே வழி, கொரோனா நம்மை அண்டவிடாமல் செய்து கொள்வதுதான். வீட்டுக்குள் இருங்கள். வெளியில் சென்றாலு விலகியே இருங்கள். முகக்கவசம் மறக்காதீர்கள். அதையும் ஒழுங்காகப் போடுங்கள். கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ளுங்கள். வழியிலிருக்கும்போது கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொடாதீர்கள்.
கொரோனா பாதித்த ஒருவரிடமிருந்து - அது பாதித்திருக்கிறது என்று அறியும் முன் - அவரிடமிருந்து சிகரெட்டை வாங்கி அவர் நண்பர் இருவர் தங்கள் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டனராம். அவர்களிடமிருந்து சிகரெட்டை வாங்கி இன்னும் இருவர், மூவர் என்று கிட்டத்தட்ட பதினேழு பேர் கொரோனா பாதிப்பால்.
ஏன், எப்படி ஒரே அலுவலகத்தைச் சேர்ந்த 17 பேர் இப்படி ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பின்னர் ஆராய்ந்தபோது இது தெரிய வந்ததாம். உண்மையோ, பொய்யோ... வாட்ஸாப் செய்தி!
====================================================================================================
சுஜாதா ஒரு நாட்டுப்பாடல் வகை தனக்குப் பிடித்திருந்தது என்று பகிர்ந்திருந்தார். "வாடவெத்தில, வதங்க வெத்தில வாய்க்கு நல்லால்லே.. " என்று தொடங்கும் அந்தப் பாடல். அதன் பாணியில் சில வரிகள்...
வகைவகையா கொரோனா நியூஸ்
பார்க்கப் பிடிக்கலே
வக்கணையா எதிர்வாதம் பேசும் மக்கள்
கேட்கப் பிடிக்கலே
தினம் ஏறும் நோயாளிகள் கணக்கு
மனசுக்குப் பிடிக்கலே
வெளியில் போனால் மாஸ்க் இல்லாமல்
இருக்கப் பிடிக்கலே
கூட்டம் கூடும் இடங்கள் எங்கும்
போகப் பிடிக்கலே
தீநுண்மியிடம் சிக்கி தனியறையில்
ஒளியப் பிடிக்கல்லே
என்னால் இன்னும் நாலுபேர் அதில்
மாட்டப் பிடிக்கலே
இந்த உலகம் படும் அவஸ்தை நம்மால்
சஹிக்க முடியலே..
================================================================================================
பிலவ வருஷத்துக்கு மூன்று வெவ்வேறு பலன்கள்!
மதுரை,: 'நோய் தாக்கம் ஜூனில் குறையும்' என, பிலவ தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.பிலவ ஆண்டு பிறந்ததை முன்னிட்டு, நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், முதல் ஸ்தானீக பட்டர் ஹாலாஷ்ய நாத பட்டர், அம்மன், சுவாமி சன்னிதியில் பஞ்சாங்கத்தை வைத்து பூஜித்து, அதன் பலன்கள் குறித்து வாசித்தார்.
அவர் கூறியதாவது:பிலவ ஆண்டில், குறைந்த மழை பெய்யும். தொற்று நோய்கள் அதிகரிக்கும். நாட்டில் பொய், சூது அதிகரிக்கும். அரசின் நடவடிக்கையால் மக்கள் புண்படுவர். நலமற்ற வாழ்வு உண்டாகும். நான்கு கால் பிராணிகள் நோயால் நாசமடையும்.வேளாண் தொழில் குறையும். பசுக்களுக்கு நோய் ஏற்பட்டு, பால் உற்பத்தி குறையும். நாட்டில் சுமுகமான சூழல் நிலவாது.இவ்வாறு, அவர் கூறினார்.'இந்த பலன்கள் பலிக்கக் கூடாது. எழுத்து வடிவமாகவே இருந்துவிட வேண்டும்' என அம்மன், சுவாமி சன்னிதியில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்ததும், கோவில் குருக்கள் சிவமணி பஞ்சாங்கம் வாசித்து கூறியதாவது:இந்தாண்டு வங்க கடலில், 15 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, ஒன்பது பலவீனமாகி, ஆறு புயலாக வீசும். தமிழகத்தில் அனைத்து அணைகளும் நிரம்பும்; விவசாயம் பெரிதும் பாதிக்கும்.உலகளவில் கல்வி வளர்ச்சியில் இந்தியா முதலிடம் பிடிக்கும். சீனா, பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை ஏற்படும். பல புதிய நோய்கள் தாக்கும். இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தின் பலன்கள்: நெல், தானியங்கள் உள்பட அனைத்து விளைச்சல்களும் அதிகளவில் இருக்கும். நோய் தாக்கம், ஜூனில் முற்றிலும் அகலும். புதிய கொடிய நோய்கள் இல்லை. அனைவரும் கல்வியில் சிறந்த மேன்மை அடைவர். மக்கள் சுபிட்சம் பெறுவர்.சனிப்பெயர்ச்சி இல்லை. குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி உண்டு. கிரஹணங்கள் இல்லை. இயற்கை இடர்பாடுகள் இல்லை. கால நிலை சீராக இருக்கும். எண்ணெய் சார்ந்த தொழில்கள் ஏற்றம் இருக்கும். மேஷம், விருச்சிகம், கடக ராசிகள் அதிக நன்மை பெறும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கூறியதாவது:பிலவ ஆண்டில், குறைந்த மழை பெய்யும். தொற்று நோய்கள் அதிகரிக்கும். நாட்டில் பொய், சூது அதிகரிக்கும். அரசின் நடவடிக்கையால் மக்கள் புண்படுவர். நலமற்ற வாழ்வு உண்டாகும். நான்கு கால் பிராணிகள் நோயால் நாசமடையும்.வேளாண் தொழில் குறையும். பசுக்களுக்கு நோய் ஏற்பட்டு, பால் உற்பத்தி குறையும். நாட்டில் சுமுகமான சூழல் நிலவாது.இவ்வாறு, அவர் கூறினார்.'இந்த பலன்கள் பலிக்கக் கூடாது. எழுத்து வடிவமாகவே இருந்துவிட வேண்டும்' என அம்மன், சுவாமி சன்னிதியில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்ததும், கோவில் குருக்கள் சிவமணி பஞ்சாங்கம் வாசித்து கூறியதாவது:இந்தாண்டு வங்க கடலில், 15 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, ஒன்பது பலவீனமாகி, ஆறு புயலாக வீசும். தமிழகத்தில் அனைத்து அணைகளும் நிரம்பும்; விவசாயம் பெரிதும் பாதிக்கும்.உலகளவில் கல்வி வளர்ச்சியில் இந்தியா முதலிடம் பிடிக்கும். சீனா, பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை ஏற்படும். பல புதிய நோய்கள் தாக்கும். இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தின் பலன்கள்: நெல், தானியங்கள் உள்பட அனைத்து விளைச்சல்களும் அதிகளவில் இருக்கும். நோய் தாக்கம், ஜூனில் முற்றிலும் அகலும். புதிய கொடிய நோய்கள் இல்லை. அனைவரும் கல்வியில் சிறந்த மேன்மை அடைவர். மக்கள் சுபிட்சம் பெறுவர்.சனிப்பெயர்ச்சி இல்லை. குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி உண்டு. கிரஹணங்கள் இல்லை. இயற்கை இடர்பாடுகள் இல்லை. கால நிலை சீராக இருக்கும். எண்ணெய் சார்ந்த தொழில்கள் ஏற்றம் இருக்கும். மேஷம், விருச்சிகம், கடக ராசிகள் அதிக நன்மை பெறும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
==========================================================================================================
ஜீவி ஸார் அவர் வலைப்பக்கத்தில் தொல்காப்பியம் பற்றி எழுதி வருகிறார். சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்களில் தொல்காப்பியம் பற்றி சொன்ன சில விஷயங்கள்...! இதனால் பெரிய பயன் எதுவும் ஜீவி ஸாருக்கு விளையாது... பல்குத்த சிறுதுறும்பு!
===============================================================================================
இரு கண்கள் தெரிகிறதா?
சமீபத்தில் வீட்டுக்கு வந்து சென்ற ஒரு கூட்டிப் பூனாச்சு.. ஆனால் எங்கள் இல்லம் அதற்கு பிடிக்கவில்லை போல... எங்களுடன் ஒட்டவுமில்லை, தங்கவும் இல்லை. ஓரிரு நாட்களில் ஜாகை மாற்றிக்கொண்டு காணாமல் போனது!
நெல்லை ஸ்பெஷல்!
தமன்னாவின அழகின் ரகசியம்.... தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியிலிருந்து...
எப்போதும்வெள்ளை வெளேரென்றும், துாங்கி எழுந்தது போல, 'பிரெஷ்'ஷாகவும் காட்சி அளிப்பது எப்படி; அதற்கு என்னென்ன செய்கிறார் என்பது பற்றி நடிகை தமன்னா:
"எவ்வளவு தான் வேலை இருந்தாலும், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், உடற்பயிற்சி மேற்கொள்வேன்; கூடவே யோகாசனமும் உண்டு. அதை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளேன்.தினமும் இரவில், ஏழு மணி நேரம் துாங்கி, அதிகாலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்.
பகல் துாக்கம் அறவே கிடையாது. பகலில் துாங்கினால், உடல் எடை அதிகரிக்கும் என சொல்வதால், அதற்கு, 'நோ!'உணவில் கண்டிப்பாக தயிர் இருக்கும். அது, உடலை குளிர்ச்சி யாக வைத்திருக்க உதவும் என்பதால், தயிரின்றி உணவு கிடையாது.
மூன்று வேளை உணவிலும் தயிர் நிச்சயம் இருக்கும்.அத்துடன் உணவில் பழச்சாறுகள், சூப்புகள் கட்டாயம் இருக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வேன். அடிக்கடி தண்ணீர் அருந்தி, உடலில் நீர்ச்சத்தை, 'பேலன்ஸ்' செய்து கொள்வேன்.தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிப்பேன். அப்புறம், ஊற வைத்த பாதாம் கொட்டைகள் சிலவற்றை தினமும் எப்போதாவது சாப்பிடுவேன்.
இவ்வாறு செய்வதால், தோலின் மிருது தன்மை மற்றும் பளபளப்பு பராமரிக்கப்படுகிறது.'ஷூட்டிங்' இல்லை என்றால், முகத்திற்கு அன்று, 'ரெஸ்ட். மேக்கப்' போடுவது இல்லை. அதே நேரத்தில், முகத்தின் அழகை பராமரிக்கும் வகையில், 'கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைசிங்' போன்றவற்றை செய்வது உண்டு. மேலும், மஞ்சள்,கடலை மாவு, வேப்பிலை கலந்த, வீட்டிலேயே தயாரிக்கப்படும் மாவை, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து தண்ணீரால் கழுவிக் கொள்வதும் உண்டு. ரசாயனம் கலந்த ஷாம்புகளுக்கு பதிலாக, சீகக்காய், நெல்லிக்காய், பப்பாளி போன்ற இயற்கை பொருட்களால் ஆன பேஸ்டை பயன்படுத்தி, தலைமுடியை கழுவுகிறேன்.
அத்துடன் தலை முடியில் தேங்காய் எண்ணெய் தடவி, சிறிது நேரம் கழித்து, நன்கு தேய்த்து குளித்து விடுவேன்.முடி உதிர்வதை தடுக்க, வெங்காயச் சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, சுட வைத்து, சூடு ஆறிய பின் தலையில் தடவி வருவேன். இது போன்ற பல நடைமுறைகளை பின்பற்றுவதால் அழகாகவும், பளீர் தோற்றத்துடனும் இருக்கிறேன்.என்ன... நீங்களும், என் அழகு குறிப்புகளை பின்பற்றி, பளிச் அழகுடன் உலா வரத் தயாரா?
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குகொரோனா கொடுமைகள் படிக்கவே மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குதங்கையின் கொழுந்தனார் மூச்சு திணறல் என்று மருத்துவமனை போனால் முதலுதவி செய்யாமல் கொரோனா டெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பி விட்டது தனியார் மருத்துவமனை.
அங்கிருந்து அரசு மருத்துவமனை கூட்டி போனால் அவசர சிகிட்சை என்று கொரோனா வார்டில் அனுமதித்து விட்டார்கள். ஆகிஸிஜன் மெஷின் வேலை செய்யவில்லை, என்று வேறு மாற்றிய போது இறந்து விட்டார், சின்ன வயது.
இதற்கு இடையில் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து இருக்கிறார்கள் நெகட்டிவ் என்று வந்து இருக்கிறது.இருந்தாலும் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அவரை அனுமதித்தது தெரிந்து உறவுகள் இறப்புக்கு வர பயம். ஒரு சிலர் வந்து இருக்கிறார்கள்.
மிக மிக வருத்தமான செய்தி. இப்போது இந்தக் கொரோனா இளவயதுக் காரர்களையே அதிகம் தாக்குகிறது. மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
நீக்குகோமதிக்கா ரொம்பவே வேதனையான விஷயம். இந்த முறை ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் சின்னவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது போலும்
நீக்குரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். இப்போ மூச்சுத் திணறல் என்றாலே உடனே கொரோனா என்று முடிவு செய்கிறார்கள் என்றும் தோன்றுகிறது.
சரியான சிகிச்சை இல்லாமல் எல்லாமே மாறியிருக்கிறது போலும்.
கீதா
@கோமதி அக்கா: படிக்கவே மிகவும் சங்கடமாக இருக்கிறது. அந்த குடும்பத்திற்கு ஆறுதலையும், திடத்தையும் கடவுள் கொடுக்கட்டும்.
நீக்குஅன்பு ஸ்ரீராமுக்கும் மற்றும் வரப்போகும் அனைவருக்கும் இனிய
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
எங்கு பார்த்தாலும் தாண்டவமாடும் தொற்று
சீக்கிரம் தொலைய வேண்டும்.
எப்பொழுது பார்த்தாலும் கவலையாக இருக்கிறது.
இன்று இணையத்தில் தமிழ் நாட்டில் பாதுப்பைக் குறைத்து சொல்வதாகச்
செய்தி வந்திருக்கிறது.
நாளை முதல் அந்தச் செய்தியும் வராமல் தடுக்கப்
படலாம். இறைவனே கதி.
வாங்க வல்லிம்மா.. வணக்கம். மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அம்மா. சும்மா தேவை இல்லாமல் வெளியே சுற்றுகிறார்கள். என்ன செய்ய... இணைந்து பிரார்த்திப்போம்...
நீக்குஅன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குமிக மிக வருத்தமாக இருக்கிறது.
சென்னையிலிருந்து போன வாரம் முழுவதும்
இதே போலச் செய்திகள்.
மகனின் சமவயதுத் தோழன் தவறிவிட்டான்.
ஆண்டி என்று அவன் அழைத்தபடி
வரும் நினைவு மனதை உலுக்குகிறது.
உங்கள் தங்கையின் கணவரிடம் நம் ஆறுதலைச் சொல்லுங்கள்.
கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது அக்கா.
நீக்குஆறுதல் சொல்கிறேன் அக்கா. தங்கை ஓர்படியும் இப்போது மருத்துவமனையில் அதிர்ச்சி தாங்காமல் உடல் நலமில்லை அவளுக்கு சிறு வயது.
அவர்கள் குடும்பத்திற்கு இறைவன்தான் ஆறுதலும், தேறுதலும் தரவேண்டும்.
இதுமாதிரி இழப்பை எல்லாம் எப்படித் தாங்குவது... கஷ்டமான நேரங்கள்.. இறைவன்தான் காக்கவேண்டும்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் சூழ்க எங்கெங்கும்..
அனைவரது நலனுக்கும் பிரார்த்தனைகள்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குதிகிலூட்டும் கொரோனா விவரங்கள்.
பதிலளிநீக்குஸ்ரீராம்,
சென்ற வருடத்தைவிடத் தாக்கங்கள் அதிகம்.
தோழியின் நாத்தனார் கணவர், நோயாளி ஒருவரைக் காணப் போய்
இவரே தவறிவிட்டார்.
அவர்கள் வீட்டில் ஸ்ரீராம நவமியொட்டி நடந்த பூஜை நிகழ்ச்சியின் தலைமை
அர்ச்சகருக்குத் தொற்று இருந்திருக்கிறது.
மிக மிக அபாயகரமான நிலைமை.
யார் வேண்டுமானாலும் கோபித்துக் கொள்ளட்டும்.
எங்கேயூம் போக வேண்டாம்.
அதுவும் இந்த ஆந்த்ரா வேரியண்ட் தடுப்பூசி போட்டாலும் தாக்குகிறதாம்.
எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.
ஆம். மிக அபாயகரமான நிலை. இப்போது என்னுடன் பணிபுரியும் பெண்ணுக்கும் நேற்றுமுதல் கொரோனா.. எனவே அவருக்கும் சங்கடம். எனக்கும் சங்கடம்! அவர் உடல்நலனைப் பற்றி கவலை கொள்ளும் அதேநேரம், நான் இப்போது அரசு அறிவித்திருக்கும் ஐம்பது சதவிகித பணியாளர் சுழற்சியோ, வார ஓய்வோ கூட இல்லாமல் அடுத்த 21 நாட்களுக்கு அலுவலகம் செல்லவேண்டும். கவலையாக இருக்கிறது.
நீக்கு:(
நீக்குOMG!
நீக்குநீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட போதிலும் ஆபிஸ் செல்லும் போது டபுள் மாஸ்க அணிந்து செல்லுங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ளுங்கள் கூட்டமாக இருப்பதை தவிருங்கள். இதைவீட்டிலும் சில மாதங்கள் கடைபிடியுங்கள். நல்ல சத்துணைவுகளை சாப்பிடுங்கள் ஸ்ரீராம் இது உங்களுக்கு மட்டுமல்ல இந்த தளம் வரும் அனைவருக்கும் சொல்லிக் கொள்கின்றேன் Be Safe
நீக்குஆம் மதுரை.. முடிந்தவரை பத்திரம் அனைத்தும் மேற்கொள்கிறேன். எனினும் மனதில் இருக்கும் பயம் போகமாட்டேன் என்கிறது!
நீக்குநன்றி கீதா அக்கா, பானு அக்கா.
ஸ்ரீராம் கவனமாக இருங்க நீங்கள் பாதுகாப்பு எடுப்பீங்கன்னு தெரிந்தாலும்...
நீக்குகீதா
விதியின் மேல் பாரத்தைப் போட்டு...
நீக்கு//அவனை குப்புறப்படுத்துக் கொள்ளச்சொல்லி, மூச்சை இழுத்து நிறுத்தி விடச் சொல்லி.. கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சிஜன் அளவு சரியாகும் நிலைக்கு வந்தது.. //
பதிலளிநீக்குஅந்த முதலுதவிதான் செய்யச் சொல்லி இப்போது வருகிறது.
ரூ. 1580 ஊசியை 20,000 ரூபாய் என்று விற்பது கடவுளே!
அடுத்த மாதம் திருமணம் ஆக போகும் உங்கள் உறவினர் நலமாகி வீடு வந்தது மகிழ்ச்சி. நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். இறைவன் அருளால் நல்லபடியாக கல்யாணம் நடைபெறட்டும்.
சாரின் தம்பி மகனுக்கு மே 24 ம் தேதி கல்யாணம் என்ன செய்வது என்று முழித்து கொண்டு இருக்கிறார்கள்.
இறைவன் அருளால் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டுவதை விட வேறு ஒன்றும் செய்ய முடியாது.
அவர்கள் திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும். மணப்பெண்ணும் இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறாள். விழாவை அவர்களுக்குள் நடத்திக் கொள்வது நல்லது. ஆனால் அவர் என்னையும் பாஸையும் எதிர்பார்ப்பார்...
நீக்குஇறைவன் காக்கட்டும் ஸ்ரீராம். என் தோழியின் பெண்ணும்
நீக்குபாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருக்கிறாள். அவளும்
சரியாகி வரவேண்டும்.இள வயதுதான். இருந்தாலும் தாயாக தோழி படும்பாடு '
வேதனை.
உண்மை.
நீக்குபாதிக்கப்படுபவர்கள் வேதனையும் பயமும் ஒருபுறம். அங்கு செல்லவும் முடியாமல், செல்லாமல் இருக்கவும் முடியாமல் அவஸ்தைப் படுபவர்கள் நிலை ஒருபுறம்... பழைய வாணி ஜெயராம் பாடல் ஒன்று நினைவுக்குவ வருகிறது.. "ஒருபுறம் வேடன்... மறுபுறம் நாகம்... இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்..."
விழாவை அவர்களுக்குள் நடத்திக் கொள்வது நல்லது. //
நீக்குஅதே ஸ்ரீராம்...அதுதான் நல்லது. எந்தப் புத்துக்குள்ள என்ன பாம்பு இருக்கோன்னு தெரியாதது போல யாருக்கு கொரோனா இருக்குன்னே தெரியாத சூழலா வேற இருக்கு
கீதா
கொரோனா இருப்பவர்களும் சொல்லாமல் வெளியே நடமாடுகிறார்கள் கீதா...
நீக்குஉங்கள் கவிதை இந்த நேரத்துக்குச் சரியானது. என் மாமாவுக்கு சதாபிஷேகம்.
பதிலளிநீக்குயாரையும் அழைக்கவில்லை. அவரும் மனைவியும் மகளும் மருமகனுமே கடவுளை வழிபட்டுப்
பூர்த்தி செய்தார்கள்.
இனிமேல் இதுதான் சரிப்படும்.
பாதுகாப்பு. செலவும் மிச்சம்! கவிதை பாராட்டுக்கு நன்றி.
நீக்குADHE ADHE,.
நீக்குதமன்னா அழகாக இருக்கிறார்.
பதிலளிநீக்குஜீவி சாரின் எழுத்து கருத்துடன் இருக்கிறது.
பூனைக்குட்டி மிக அழகு. முதல் படத்துல் இரண்டு கண்களும் மிக
அருமையாகத் தெரிகிறது.
நன்றிம்மா.
நீக்கு//தமன்னா அழகாக இருக்கிறார்.// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹாஹாஹா
நீக்குஅந்தக் காலத்து படம் போட்டால் அழகாத்தான் இருப்பார். இப்போ ஆன்டி ஆயாச்சு. நீங்க 'தங்கம் வித்துடுங்க' என்று சொல்லும் விளம்பரம் பாருங்க.
////தமன்னா அழகாக இருக்கிறார்.//
நீக்குஅதாவது இந்தப் படத்தில்...!!!
ஏதோ ஸ்ரீராம் இம்புட்டு கஷ்டப்பட்டு ஒரு தமன்னா படம் போட்டு அழகு டிப்ஸும் கொடுத்தா, அதை ரசிக்கனும் இப்ப உள்ள தை ஆராயக் கூடாதாக்கும்...அப்போ அனுஷ்கா இப்பவும் அழகா இருக்காங்கன்னு சொல்றீங்க ரைட்டோ!!!!!!!!
நீக்குகீதா
:>))
நீக்குகாலத்துக்கு ஏற்ற கவிதை. உலக மக்கள் படும் துனபம் தாங்கமுடியவில்லைதான்.
பதிலளிநீக்குஆமாம். கவலையாக இருக்கிறது.
நீக்குஅவர் இல்ல விழா ஒன்றுக்கு நான் வரவில்லை என்று சொன்னதும் எனது நண்பர் சொன்னார்..."அழைக்கிறேனே தவிர, வரவில்லை என்று சொன்னால் ஒரு நிம்மதி பரவுகிறது மனதில்" இப்போது ஒருவர் வீட்டில் கல்யாணம் காட்சி என்றால், எங்கே அழைத்து விடுவார்களோ என்கிற பயமும் இருக்கிறது இன்னொருபுறம்!////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////பயப்பட வேண்டாம். உயிர் வாழ்வதே இப்போது முக்கியம்.
பதிலளிநீக்குஅதுவேதான் என் கருத்தும். ஆனால் மனம் வருந்துகிறார்கள், தவறாய் எடுத்துக் கொள்கிறார்கள்.
நீக்குதிருப்பரங்குன்றம் பஞ்சாங்க நலனையே நாம் எடுத்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. நான் கூட முன்பு ராசிபலனில் எது நாளளதாக இருக்கிறதோ ந்த ராசியில் இருப்பதாய் நினைத்துக் கொள்வேன். ராசிபலன் இப்போதெல்லாம் படிப்பதில்லை.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா வாங்க...
நீக்குதிரு சுகுமாரன் ,மகன் குண்மடைந்தது பெரிய நிம்மதி.
பதிலளிநீக்குஅவர்கள் வீட்டுத் திருமணம் இப்போது இருக்கும் நிலைமையில் பயம் தான்.
அதே... அதே...
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கிடைக்கும் செய்திகள் கலவரம் ஊட்டுகின்றன. பொதுவாக அனைவரும் நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு மனதில் அச்சமில்லாமல் வாழப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஅச்சமில்லாமல் வாழ? முயற்சிப்போம்!
நீக்குஇணைந்து பிரார்த்திப்போம். வாங்க கீதா அக்கா.. வணக்கம்.
பூனைக்குட்டியை முகநூலிலும் பார்த்தேன். சுஜாதா பற்றிய செய்திகள் படிச்சிருக்கேன். தொல்காப்பியத்துக்குக் கால நிர்ணயம் செய்வது ரொம்பக் கடினம். உங்கள் கவிதை அர்த்தமுள்ளது.
பதிலளிநீக்குதொல்காப்பியத்துக்கு காலம் அறிய அதில் வரும் பாண்டிய மன்னன் பெயர் முக்கியமானது. ஜீவி ஸார் அதைதான் ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அதே காலம்தான் மௌரியப்பேரரசன் அசோகன் காலமும் என்கிறார்.
நீக்குதிரு சுகுமார் மகனுக்கு நல்லபடியாகக் கல்யாணம் ஆகி அமைதியான/மகிழ்ச்சியான இல்வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கிறோம். உங்கள் அலுவலகத் தோழியின் உடல்நலனும் சீரடையப் பிரார்த்தனைகள். நீங்கள் பயம்/கவலை இல்லாமல் நிம்மதியாக வேலைக்குச் சென்று வர வேண்டும். ஓய்வும் நிறையக் கிடைக்க வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறீர்கள். நாம பஞ்சாங்க பலன்களில் இருந்து நமக்கு ஏற்றதை மட்டும் எடுத்துப்போம்.
பதிலளிநீக்குஎடுத்துப்போம்! நன்றி கீதா அக்கா.
நீக்குதொல்காப்பியரின் இயற்பெயர் "திரணதூமாக்னி" எனவும் அவர் ஜமதக்னி முனிவரின் பிள்ளை/சீடர் எனவும் சொல்லுவார்கள். எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியாது. அகத்தியரின் சீடர் எனவும்/இல்லை என்போரும் உண்டு. அகத்தியர் காலத்துக்கு முற்பட்ட பழைய தமிழ்நூல்களைக் கண்டு பிடித்ததால் தொல்காப்பியர் என்னும் பெயர் எனத் தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகம் கூறும்.
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் கீதா அக்கா. தொல்காப்பியர் அகத்தியரின் சீடர் என்றுதான் கேள்விபட்டிருக்கிறேன்.
நீக்குஅப்படியா? திரணதூமாக்னி... என்ன பெயர் அது! என்ன அர்த்தம் வருகிறது?
நீக்குஅட! வித்தியாசமான தகவல்கள் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே கீதாக்கா.
நீக்குகீதா
கொரோனா தகவல்கள் மிகவும் பீதியளிக்கின்றன. மருத்துவ தொழிலை புனிதமானது என்பார்கள், ஆனால் எரியற வீட்டில் புடுங்கியவரை லாபம் என்று அவர்கள் செயல்படுவது வேதனையைத்தான் தருகிறது.
பதிலளிநீக்குஅது சரிதான்... அவங்க நிலைமை (துப்புரவு ஊழியர் உட்பட) எவ்வளவு கஷ்டமானது. மனசுக்கும், உடலுக்கும், குடும்பத்துக்கும். இவங்களால குடும்பத்துக்கு வந்துடக்கூடாது, இவங்களுக்கு வந்துவிடக்கூடாது.. நினைத்தாலே பகீர் என்று இருக்கிறது.
நீக்குமருத்துவத் தொழில் எப்போதுமே அப்படித்தான் (கார்ப்பொரேட் மருத்துவமனைகள்). உங்களை நம்பி Eye pressure check பண்ணும் மெஷின், X Ray, ECG, Treadmill, CT Scan, Lab என்று ஏகப்பட்டது வாங்கி வச்சிருக்காங்க. அதுக்கு வேற எப்படித்தான் வேலை கொடுப்பதாம்?
பா.வெ. - இடுகையைப் படித்ததும் உங்கள் ஆதங்கம் சரிதான் என்று தோன்றியது. இது ஒரு opportunity என்று எடுத்துக்கொண்டு லாபத்தைப் பெருக்குகிறார்கள். லாபத்தைப் பெருக்கவேண்டும் என்று நினைத்தாலே மனசாட்சியை வெளியே கழற்றிப்போட்டுட வேண்டியதுதான்.
நீக்குதனியார் மருத்துவமனைகள் ரெமிடெசெவிர் எழுதும் அளவு அரசு மருத்துவமனையில் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். டெல்லியில் இந்த மருந்தை வாங்கிப் பதுக்கி வைத்திருப்பவர்கள் அரசியல்வாதிகள் என்று ஒரு பொதுநல வழக்குப் போட்டிருக்கிறார்கள் என்று படித்த நினைவு.
நீக்குஎங்கள் குடும்ப நண்பரின் மகனுக்கு அடுத்த வாரம் திருமணம். "யாரையும் அழைப்பதற்கு பயமாக இருக்கு, கூப்பிட்டு விட்டார்களே என்று அவர்கள் வந்து விட்டால் என்ன செய்வது?" என்றாள். அழைப்பிதழில் we seek your blessing for the newly wedded couple,join with us in Zoom.." என்றுதான் அடித்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஇதுதான்.. இதுதான் எல்லா இடத்திலும் பிரச்னை. சட்டென வெளிபப்டையாகப் பேசிவிடுதலே நலம்!
நீக்குநல்ல ஐடியா பானுக்கா! நான் இதைத்தான் சொல்லி வருகிறேன் எனக்கு மிக நெருங்கியவர்களிடம்.
நீக்குகீதா
ரத்தத்தில் ஆக்சிஜன் பணம் இல்லாதவர் பாடு பொன்றவை இன்னும் விளக்கமாக கூறலாம்வாசகர்களுக்கு உதவலாம்
பதிலளிநீக்குபணம் இருப்பவர் பாடே பரிதாபமாகத்தான் இருக்கிறது ஜி எம் பி ஸார்... ஆஸ்பத்திரிகளில் இடமில்லை. இடமிருந்தால் மருந்தில்லை. மருந்திருந்தால் ஆக்சிஜன் போதுமான அளவு இல்லை.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க... இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவீட்டில் பூனை குட்டி போட்டால் ஐஸ்வர்யம் வருமாம். பூனையை மீண்டும் வீட்டிற்கு வரவழியுங்கள். அதிரா வீட்டிற்கும், ஏஞ்சல் வீட்டிற்கும் இன்கம் டாக்ஸ் ரெய்டு வரச்சொல்லலாமா? ஹாஹா..
பதிலளிநீக்குஅப்ப்பா.. இதிலாவது பெண்களுக்கு preference இருக்கே... பாராட்டுகள்
நீக்குஇது தெரிந்துதான் யாரோ அதைத் தூக்கிப்போய் விட்டார்களோ என்னவோ!
நீக்கு@பானுமதி, எங்க அம்பத்தூர் வீட்டில் பூனை நிறையத் தரம் குட்டிகள் போட்டிருக்கிறது. நான் கூட விளையாட்டாக அதற்குப் பிரசவம் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது என்றெல்லாம் பதிவு எழுதி இருக்கேன். ஆனால் அந்தக் குட்டிகளைத் தெரு நாய்கள் படுத்தும் பாடு. அவை சீக்கிரம் வளர்ந்து வீட்டை விட்டுப் போனால் போதும்னு இருக்கும் எங்களுக்கு. நாய்களிடமிருந்து பூனைக்குட்டிகளைப் பாடுபட்டுக் காப்பாற்றி இருக்கோம். அப்படியும் ஒரு முறை ஐந்தாறு நாய்கள் சேர்ந்து கொண்டு எங்களோட காம்பவுண்டுக்குள்ளே ஏறிக் குதிச்சு பூனைக்குட்டிகளைக் கடித்துக்குதறி திக்குக்கு ஒன்றாகப் போட்டு! காலை எழுந்து வாசல் தெளிக்க வாசல் பக்கம் வந்தால்! பயங்கரம்! ஐந்து பூனைக்குட்டிகள்! அதுக்கப்புறமா வீட்டுக்கு நாயோ/பூனையோ எது வந்தாலும் விரட்டிடுவோம். காலம் எங்களையும் அங்கிருந்து விரட்டி விட்டது. இதையும் ஓர் பதிவாக எழுதி இருந்த நினைவு. பூனைக்குட்டிகளைத் தூக்கிப் போடும்போது மனசெல்லாம் ரத்தம் வடிந்தது. இத்தனைக்கும் நான் போடவில்லை/ அவரும், வேலை செய்த பெண்ணுமாகத் தூக்கிப் போட்டார்கள்.
நீக்குவீட்டில் பூனை குட்டி போட்டால் ஐஸ்வர்யம் வருமாம். //???????????????????????
நீக்குஅப்படியா? எங்க வீட்டிலயும் பூனை குட்டி போட்ட தருணங்கள் நிறைய!!!!! நாங்கள் காப்பாற்றியவையும் உண்டு...!!!!!!
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! இன்றும் என்றும் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன் மேடம்.. வாங்க...
நீக்குகொரோனா நிகழ்வுகளை விரிவாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனைத்தும் படிக்கையில் அடி மனதில் பயம் சூழுகிறது! ஒவ்வொரு நாளும் வேதனையான, கலங்க வைக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. என் நாற்பதாண்டு சினேகிதி, சென்னையிலிருந்தவர் கொரோனாவால் நுரையீரல்கள் சேதமடைந்து முந்தா நாள் இறந்து விட்டார். இன்னும் அவர் மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை. நண்பரின் அம்மா கால் தவறி விழுந்து காயமடைந்து தேறி வந்து கொண்டிருந்த போது, அவரைப்பார்க்க வந்த யாரோ ஒருவர் மூலம் தொற்று ஏற்பட்டு இறந்து விட்டார்கள். மிகக் கொடுமையான காட்சிகள் தினமும் அரங்கேறிக்கொன்டிருக்கின்றன.
பதிலளிநீக்குநடிகர் பாண்டு இன்று மறைந்தாராம். செய்தி பார்த்தேன். இந்தக் கொடுந்தொடரு குறைவதற்கும் இன்னும் என்னென்ன பாடு படுத்திவிட்டுப் போகுமோ... கலக்கமாக இருக்கிறது.
நீக்குஅர்த்தமுள்ள கவிதைக்கு வாழ்த்துக்கள்! கைப்பைக்குப் பின்னால் பூனை! புகைபப்டங்கள் அழகாயிருக்கின்றன!
பதிலளிநீக்குநன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகொரோனாவின் கோர தாண்டவங்கள் குறித்த செய்திகள் நல்ல விபரமாக சொல்லியிருக்கிறீர்கள். படிக்கவே பயமுறுத்துகிறது. மனதும் வேதனையடைகிறது. என்ன செய்வது? ஒழுங்காக பயணித்து வந்த காலம் இப்படி தீடிரென மாறும் என்று யார் கண்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக உலக மக்கள் அனைவரையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இறைவன்தான் வெகு விரைவில் இதிலிருந்து மக்கள் அனைவரையும் காக்க வேண்டும்.
தங்கள் உறவினர் திரு.சுகுமார் அவர்களின் மகன் நலமாக வீடு திரும்பியதற்கு சந்தோஷமடைகிறேன். அவர் பூரண உடல் நலம் பெற்று, திருமணம் நல்லபடியாக நடந்து, நூறாண்டு காலம் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கவிதை நன்றாக உள்ளது. இக்காலத்திற்கு ஏற்ற கவிதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்கு//செலவு தலா ஒன்றேகால் லட்சம். // - கொடுமை... இங்க நேற்றுத்தான் எங்க வளாகத்துக்காக, வெளியில் தனிமைப்படுத்துதல் வேண்டும் என்றால், தொலைக்காட்சி, வைஃபை இருக்கும் பெரிய அறை 2000 ரூபாய் (+ kits), நர்ஸ் உதவி 400 ரூபாய்/மணி நேரம் என்றெல்லாம் organize செய்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குகொரோனா, ஆரம்பம் முதல் இறுதி வரையில் மிகப் பெரிய பிஸினெஸாக மாறிவிட்டது. சென்ற வருட ஆரம்பத்தில், பிரிண்டட் மாஸ்க் என்று எங்க வளாகத்தில் ஒரு மார்வாரி வீட்டில் பிஸினெஸ் ஆரம்பித்துவிட்டார்கள். பின்பு சானிடைஸர்.. இப்போ ஆக்சிஜன்...
அந்த அறையில், மூன்று வேளை சைவ உணவும் உண்டு
நீக்குஇப்படி பிசினஸ் செய்வதை பாராட்டலாம் - அநியாய, ஏமாற்று பிசினஸ் இல்லை என்றால்... எப்படியோ பிழைக்க வழி செய்து கொள்கிறார்கள்!
நீக்குஇந்த மருத்துவமனைச் செலவுகள் இன்னமும் அச்சத்தை ஊட்டுகின்றன. இல்லாதவங்களுக்குக் கொரோனா வந்துவிட்டால்? நேத்திக்கு ஒரு வீடியோ பார்த்தேன். கணவன், மனைவி, மகள் மூவருக்கும் கொரோனா! அவங்க இருந்த வீட்டில் இருக்க விடலைனு சொந்த ஊருக்கு வந்திருக்காங்க. அங்கேயும் இருக்க விடாமல் ஊருக்கு வெளியே குடிசையில் இருக்கச் சொல்லி இருக்காங்க. அதில் அந்தக் கணவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட மனைவி மருத்துவ உதவி கேட்டிருக்கார். அங்கிருந்த சுகாதார நிலையத்தில் போதிய உபகரணங்கள் இல்லையாம். அந்தச் சமயம் மருத்துவரும் இல்லை. அந்தக் கணவரை வெளியே கொண்டு போட்டிருக்கிறார்கள். தண்ணீருக்குத் தவிக்கப் பெண் அவர் வாயில் நீர் ஊற்றப் போக, மனைவி பெண்ணை வேண்டாம் என்று தடுக்க அவர்கள் கண் முன்னேயே அவர் துடிதுடித்து இறந்து போகிறார். இந்தக் கொடூரங்களை எல்லாம் என்ன செய்ய? தினமலர் திருச்சி பதிப்பில் வந்த செய்தி இது! :(((( நேற்றுப் பூரா மனசு சரியாய் இல்லை.
நீக்குபணம் இருப்பவர்களே அதனால் பெரிய பயன் இல்லாமல் பரிதவிக்கையில் பணம் இல்லாதவர்கள் படு இன்னும் மிக மிக மிக மோசம்.
நீக்குநெருங்கிய உறவினர்களின் இழப்பு மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது...
பதிலளிநீக்குஉண்மை. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.
நீக்கு//ஜுரம் போன்ற அறிகுறிகள் இருந்த ஒருவர் சற்றும் பொறுப்பில்லாமல் கலந்துகொண்ட விளைவு,// - கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாதவர்கள் என்று தோன்றுகிறது. நிர்தாட்சண்யமா எந்த விழாவுக்கும் போகக்கூடாது. திருமணம் என்றாலும் நாம மேடைல அவங்க பக்கத்துல உட்கார்ந்துகொள்ளப்போவதில்லை. ஆன்லைனில் பார்த்துக்கொண்டாலே போதுமானது. யாரேனும் கண்ணை மூடிக்கொண்டு பாழுங்கிணற்றில் விழுவார்களா?
பதிலளிநீக்குஎன் மாமனார் வீட்டில் சில பல மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்களுக்கு inform பண்ணி, நீங்க வரவேண்டாம் என்றும் சொல்லிட்டாங்க. எனக்கு என்னடா இப்படிச் சொல்றாங்க (சென்னைல இருக்கிற மற்றும் பல உறவினர்களுக்கு) என்று தோன்றியது. ஆனால் அது எவ்வளவு தேவையான முன்னெச்சரிக்கை என்று பிறகு எனக்குப் புரிந்தது.
அந்தக் குடும்பத்தில் இன்று காலை இரண்டாவது டிக்கெட் வீழ்ந்தது. என்ன சொல்ல...
நீக்குஓ மை காட்! இன்னொருவருமா?
நீக்குபாருங்க பொறுப்பில்லாம கலந்து கிட்டு...ஹூம்...
நெல்லை முன்னெச்சரிக்கை மிக மிக அவசியம். இப்போ தேவையில்லாம செண்டிமென்ட்ஸ் அவசியமில்லை
கீதா
இப்போ இந்த இடுகையைப் படித்தாலே சானிடைசர் போட்டுக்கணுமோ என்று பயப்படும் அளவு இருக்கிறது இன்றைய பதிவு
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... சொன்னது பாதிதான் நெல்லை.. இன்னும் மீதி இருக்கிறது... தொடரும் போட்டுக்கொண்டே இருக்கிறது.
நீக்குகொரோனா பற்றி விழிப்புணர்வு செய்தியோடு...
பதிலளிநீக்குதேசத்தியாகி தமன்னாவின் அழகின் ரகசியம் அறிந்து கொண்டேன்.
ஹா.. ஹா.. ஹா... அந்த மட்டில் அழகு என்று ஒத்துக்கொண்டீர்களே...!
நீக்குநன்றி ஜி.
//இவ்வாறு செய்வதால், தோலின் மிருது தன்மை மற்றும் பளபளப்பு பராமரிக்கப்படுகிறது// - இவ்வளவு கஷ்டப்பட்டு மேனியைப் பாதுகாத்து, தப்பித் தவறி இயக்குநர் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், பாலா, அவரது ட்ரேட் மார்க்கான, தாரை முகத்தில் பூசி, கிழிந்த டிரெஸ் போட்டு பிச்சைக்காரியாக அல்லவா படம் முழுதும் வரவைப்பார்.
பதிலளிநீக்குஇன்னும் பாலா கண்ணில் தமன்னா படவில்லை போல!
நீக்கு15-H submission வேலைகளில் படு பிஸி. மேலோட்டமாகப் படித்து விட்டேன் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பின்னால் வருகிறேன், ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஓகே ஸார்.. வேலைகளை முடிச்சுட்டு வாங்க...
நீக்கு15h, 15G எல்லாமே ஆன்லைனில் பண்ணிடறேன். பத்து நிமிஷம் கூட ஆவதில்லை. :)))) ஹிஹிஹி, க.கை.நா. ஆக இருந்த நான் இப்போது க.தொ.நு.நி. ஆயாச்சு. எப்புடி இருந்த நான் எப்பூடி ஆயிட்டேன்!
நீக்குஅட! 15H, 15G - இரண்டுமேவா?
நீக்குதூள் கிளப்பறீங்க, போங்க!..
இந்த முறை கொரோனா ரொம்பவே ஆட்டி வைக்கிறது. அதுவும் ஹைதராபாத், மும்பியையில் எல்லாம் மூன்றாவது தொடங்கி வேறு ரூபத்தில் வருவதாகத் தகவல்..
பதிலளிநீக்குநான் வீட்டிலும் மாஸ்க் அணிகிறேன். வெளியில் மிஞ்சி மிஞ்சி கடைக்குப் போனால் டபிள் மாஸ்க் , ஃபேஸ் ஷீல்ட் என்றுதான் செல்கிறேன். எங்கள் சிறிய ஏரியாவில் 60 கேஸ் என்று ஆரோக்கியா சேது சொல்கிறது அதாவது 500 மீட்டருள்...ஆரோக்கியா சேது இல்லாதவர்களிலும் இருக்கலாம். எனவே இந்த பாதுகாப்பு..
ஸ்ரீராம் இன்னமும் கொரோனா பிஸினஸ் என்று சொல்பவர்கள் இருக்காங்க...
கீதா
ஆம்... இருக்காங்கதான். மேலும் மாஸ்க் அணிபவர்களும் எப்போதோ வாங்கிய மாஸ்க்கை தொளதொள என்று போட்டுக்கொண்டு வருகிறார்கள். மேல்துண்டு, முந்தானை, துப்பட்டாவால் 'மாஸ்க் போட்டு'க்கொண்டு வருபவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.
நீக்குஇன்று நலமாக இருக்கிறான் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். ஒன்றாம் தேதி அன்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான். //
பதிலளிநீக்குஹப்பா மனதிற்குச் சமாதானம். அவர் அப்பா சுகுமார் டெஸ்ட் கொடுத்தார் இல்லையா? அவர் எப்படி இருக்கிறார் ?
பல இடங்களில் பெட் இல்லாமல் சிறிய சிறிய க்ளினிக்கில் அட்மிட் ஆகி ரொம்பவே கொள்ளைஅடிக்கிறார்கள் என்பது உண்மை. வராமல் இருப்பது நலம்.
நாங்கள் இருக்கும் இப்போதைய வீட்டில் (இங்கு பல வீடுகளிலும்) ஒரு ரெஸ்ட் ரூம் தான்.
வேக்சின் போட்டு 3, 4 நாட்களில் ஒன்று கொரோனா போன்ற சிம்டம்ஸ் வருது இல்லைனா கொரோனாவே வருவதாகவும் தெரிகிறது.
வேக்சின் போட்டாலும் மிக மிக பாதுகாப்பாக இருப்பது நல்லது
அப்பாவிற்கு இரண்டாவது வேக்சின் போட்ட 3 வது நாளிலிருந்து தொண்டைக்கட்டு, ஜலதொஷம், இருமல்...ஜுரம் இல்லை என்றார். ஆனால் குரல் சரியாக இல்லை. காதும் கேட்பதில்லை எனவே ஃபோனில் பேசுவது சிரமமாக இருக்கு. எஸ் எம் எஸ் தான். ஊரில் இருக்கும் ஆயுர்வேத க்ளினிக்கில் ஆயுர்வேத மருந்து சாப்பிடுவதாகச் சொன்னார்.
கீதா
முதலாவது வேக்சின் , இரண்டாவது வேக்சின் போட்டவர்களும் பாதிக்கப்படுவது தடுப்பூசி போடாதவர்களுக்கு மனச்சோர்வை, பயத்தை உண்டு பண்ணுகிறது.
நீக்குஸ்ரீராம் பாவம் அவர் எப்படி அலைக்கழிச்சுருக்காங்க டென்ஷன் தான். இரவு 1 மணிக்கு அட்மிட் ஆகி கண்டிப்பாக இந்த டென்ஷனே நம் உடல் பிரச்சனையை அதிகரிக்கும்....ரொம்ப மோசமான அனுபவம்.
பதிலளிநீக்குஆனால் அரசு மருத்துவமனைகள் தான் நன்றாகக் கவனிப்பதாகவும் தெரிகிறது
கீதா
அவர்களால் முடிந்தவரை நன்றாக கவனிக்கிறார்கள்.
நீக்குநான்கு நாட்களில் அவன் தந்தை சுகுமாருக்கும் வலுவாக அறிகுறிகள் தென்படத் தொடங்க அவரும் சோதனைக்குள்ளானதில், ஆச்சர்யம் நெகட்டிவ் என்று வந்தது இன்றுவரை தீராத மர்மம். //
பதிலளிநீக்குஅட!! அது எப்படிப்பா? ஆச்சரியம் தான். நிறைய பேருக்கு சிம்டமே இல்லாமல் ஆனால் பாசிட்டிவ் வருவதாகவும் தெரிகிறது. அதுவும் சிடி ஸ்கான் எடுத்தால்தான் இந்த கொரோனா அலையில் தெரிகிறதாம் லங்க்ஸ் இன்ஃபெக்ஷன்.. என்னவொ போங்க...
எல்லாரும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்ன சொல்ல?
பயமாகத்தான் இருக்கிறது அதுவும் நீங்கள் தினமும் போய் வரீங்க...உங்கள் டென்ஷன் புரிகிறது ஸ்ரீராம்
கீதா
சிம்ப்டமே இல்லாமல் இருந்து உயிரை இழந்த இருவர் நட்பு வட்டத்தில்...
நீக்குஇந்த மூச்சு அடக்கிவைக்கும் பயிற்சி இருந்தால் நுரையீரல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தமா? யாரையும் இன்று தூங்க விடமாட்டீங்க போலிருக்கு ஸ்ரீராம்
நீக்குஒன்றும் புரியவில்லை நெல்லை. என் மாமா ஒருவர் சுமார் பாத்து வருடங்களுக்கு முன் யோகா கற்றுக்கொண்ட நாளிலிருந்து இன்னமும் தினமும் ஒழுங்காய்ச் செய்து வருகிறார். அவருடனேயே வகுப்புக்குச் சென்ற நான் ஓரிரு மாதங்கள் செய்ததோடு சரி..
நீக்குதிடீரென மூக்கில் விக்ஸ் அல்லது வேறு ஏதாவது காரமாக பட்டால் நாய் அஸ்க் அஸ்க் அஸ்க் என்று செய்யும் தெரியுமா.. அதுமாதிரி கூட என்னைச் செய்யச் சொன்னார்கள். கொஞ்சம் பலன் இருப்பது போல தோன்றியது.
//யாரையும் இன்று தூங்க விடமாட்டீங்க போலிருக்கு ஸ்ரீராம்//
நீக்குSorry...
பொறுப்பில்லாதவர்களால் ரொம்பவே பரவுது ஸ்ரீராம்.
பதிலளிநீக்குசென்னையில் உறைவினர் வீட்டில் அந்த அபார்மென்டில் மாடியில் இருந்த மாமா ஒருவருக்கு சிம்டம்ஸ் இருந்து டெஸ்டிற்குக் கொடுத்திருந்த வேளையில் தன் கம்ப்யூட்டரில் ஏதோ பிரச்சனை என்று உறவினரின் பெண்ணை அவர் மகள் அழைத்து தன் தந்தைக்கு உதவச் சொல்லி அழைக்க இவளும் சரி பாவம் வயதானவர் என்று போயிருக்கிறாள். இவள் சரி பார்க்க, அவள் அப்பாவும் செல்ல...அன்று மாலை அந்த வயதானவரின் மகள் இவளுக்கு மெசேஜ் என் அப்பாவிற்கு பாசிட்டிவ்...ஸாரி என்று...எப்படி இருக்கு பாருங்க
இவங்க உடனே டெஸ்டிர்குக் கொடுக்க நெகட்டிவ் என்று வந்தது. என்னிடம் சொன்னப்ப உடனே கொடுத்தால் தெரிய வாய்ப்பில்லை ஒரு 3, 4 நாள் கழித்துக் கொடுத்துப் பார் என்றேன். இப்போது 3 நாட்கள் முன்பு கொடுத்த போது வீட்டிலிருக்கும் மூன்று பேருக்கும் பாசிட்டிவ். ஆனால் எந்த சிம்ப்டமும் இல்லை. இவள் பெற்றோர் இருவரும் வேக்சின் இரண்டு டொஸ் போட்டுக் கொண்ட நாலு நாட்களில்...
இவள் முதல் டோஸ் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்..இப்படி
அந்த மாடி மாமா அவர் பெண் படித்தவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்களோ.
உறவினர் பெண்செம கடுப்பு
கீதா
ஒருபக்கம் பார்க்கும்போது இந்த செய்திகளை எல்லாம் இங்கு பகிர்ந்துகொண்டு பயமுறுத்துகிறோமோ என்றும் தோன்றுகிறது. எதிர்மறை எண்ணங்கள் பரவ காரணமாகிறோமோ என்றும் தோன்றுகிறது. எச்சரிக்கையாக எத்தனைபேர் எடுத்துக் கொள்வார்கள்?
நீக்குயாரும் யார் வீட்டுக்கும் போகக்கூடாது. அவ்ளோதான். அது யாராக இருந்தாலும் சரி. பலபேருக்கு அதன் தீவிரம் தெரிவதில்லை. ஏதோ ஜலதோஷம் போல கொரோனா பாசிடிவ் என்று நினைச்சுக்கறாங்க.
நீக்குஎனக்கு வர்ற ஆத்திரத்துல அந்தப் பெரியவரோட பெண்ணை இழுத்து நாலு அறை கொடுக்கலாமான்னு கோபம் வருது.
என்ன ஃபார்மாலிட்டியோ, என்ன அன்போ, இது மாதிரி விழாக்களுக்கு அழைப்பதும், அட்டென்ட் செய்வதும். அழைக்காமல் இருக்க முடியாது என்கிற சங்கடத்தில் அழைப்பவர்கள்... //
பதிலளிநீக்குஸ்ரீராம் அதே அதே. நீங்க எந்த விழாவுக்கும் போகாம இருங்க ஸ்ரீராம். மக்களுக்கு இன்னும் அறிவு வளரவில்லை. என்ன செண்டிமென்டோ? உயிர் முக்கியமா செண்டிமென்ட் முக்கியமா தெரியலை!
என்னைக் கேட்டால் ஜூமில் வைத்துவிடலாம் இப்போது இல்லாத டெக்னாலஜி வசதியா? கூட்டம் 5,6 பேருக்கு மேல் கூடக் கூடாது..
கீதா
ம்.......
நீக்குஅவர் இல்ல விழா ஒன்றுக்கு நான் வரவில்லை என்று சொன்னதும் எனது நண்பர் சொன்னார்..."அழைக்கிறேனே தவிர, வரவில்லை என்று சொன்னால் ஒரு நிம்மதி பரவுகிறது மனதில்" இப்போது ஒருவர் வீட்டில் கல்யாணம் காட்சி என்றால், எங்கே அழைத்து விடுவார்களோ என்கிற பயமும் இருக்கிறது இன்னொருபுறம்!//
பதிலளிநீக்குடிட்டோ ஸ்ரீராம்..
நாங்கள் செல்லவில்லை. இப்போது பேச மாட்டேன் என்கிறார்கள். //
போனா போறாங்க விடுங்க ஸ்ரீராம்...நம் ஹெல்த் தான் முக்கியம்
கொரோனா காலம் சுயநலம் போலத் தோன்றலாம் ஆனாலும் நம் குடும்பம் நம் ஹெல்த் என்று வரும் போது என்ன செய்ய முடியும்? சுயநலம் அல்லா சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை அவர்கள் அறிவதில்லை
கீதா
அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் வெளிவந்திருக்கிறார். முன்னர் போலில்லாமல் அடிக்கடி பொறுமை இழக்கிறார். வேறு சளி குண மாற்றங்களும் தெரிகின்றன. நான் கொரோனாவிலிருந்து வெளிவந்த சமயம் என் குணம் பற்றியும் என்னிடமும் முன்னர் அப்படியே சொன்னார்கள்.
நீக்குரெமிடிசெவிர் //
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் இந்த மருந்துக்கு அத்தனை தட்டுப்பாடு, டிமாண்டும். ஆக்சிஜன் கூடுவதற்கு யோகாவில் மகராசனா போன்று கவிழ்ந்து படுக்கும் ஆசனங்கள் பயிற்சிகல் இருக்கின்றன. அரசுமருத்துவமனைகளில் இது சொல்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். உங்கள் அண்ணன் மகனுக்குச் சொன்னது போல்
கீதா
அதெல்லாம் போதாது கீதா.. நம் ஆறுதலுக்கு சொல்லலாம். இப்போது கூட உதானா முத்திரை என்று கையை ஒருமாதிரி குவித்து வைத்துக் கொண்டால் ஆக்சிஜன் அளவு கூடும் என்று என் தங்கை வாட்சாப் அனுப்பி இருக்கிறார். ஆனால் இதெல்லாம் எந்த அளவு...?
நீக்குஅந்த உதானா முத்திரை நீங்க செய்யாமல் கையை சும்மா வச்சிருக்கும்போது அந்த வாட்சப் மெசேஜை எனக்கு ஃபார்வர்ட் செய்யுங்க ஸ்ரீராம்.
நீக்குஅனுப்பி விட்டேன் நெல்லை.
நீக்குகொரோனா பற்றி பேசினால் நிறைய ...ப்ளஸ் அதில் நடக்கும் ஊழல்களும்...மறுபுறம்.
பதிலளிநீக்குமருத்துவ சேவை புனிதமானது என்பது போய் ...என்னசொல்ல?
கீதா
50-50
நீக்குஉங்க கொரோனா பாடல் நல்லாருக்கு ஸ்ரீராம் ஆனால் அதேதான் நம் எல்லார் உள்ளத்திலும் இல்லையா? செய்தி பார்ப்பதே இல்லை மொபைலில் கூட. மனசுக்குப் பிடிக்கவில்லை பயமும் தொற்றிக் கொள்கிறது அதனால் பார்ப்பதே இல்லை
பதிலளிநீக்குகீதா
அதே....அதே....
நீக்குஒவ்வொரு கணிப்பும் ஒவ்வொரு மாதிரி உள்ளனவோ? மூன்றுமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே இல்லையா?
பதிலளிநீக்குகீதா
அதே... அதே...
நீக்குசுஜாதா எஸ் ஆர் கணையாழிப் பக்கங்கள் முன்பு சொன்னீங்களோ ஸ்ரீராம்.?
பதிலளிநீக்குதொல்காப்பியம் தகவல்கள் அறிந்து கொண்டேன் ஸ்ரீராம்..
கீதா
நன்றி.
நீக்குஅட பூனாச்சு உங்களை விடுவதில்லைன்னு பார்த்தால் ஜாகை மாற்றிக் கொண்டுவிட்டதா?
பதிலளிநீக்குபூனாச்சு செல்லம் அழகோ அழகு...குட்டி பூனாச்சு போல?! ஏன் ஜாகை மாற்றியதோ...இங்க அதை கொஞ்சுகின்றவர்கள் அதிகம் என்று தெரியலை போல...பழை வீட்டில் பூனாச்சு உங்களொடயே இருந்ததே...பாஸ் மடியில் உங்கள் கையில் கணினி அருகில் என்று.
கீதா
ஆனால் பழைய பூனையின் அழகு இதனிடம் இல்லை!
நீக்குஆஹா நெல்லை க்ளவுட் 9 லா? ஹா ஹாஹ் ஆ ஹா
பதிலளிநீக்குநெல்லையின் யோகா, தூக்கம் எல்லாம் ஹிஹிஹி இதுக்கு மேல நான் சொல்லி மாட்டிக்க மாட்டேனாக்கும்!!!!
கீதா
:-))
நீக்குநெல்லை!, அவங்க டிப்ஸ் எல்லாம் நோட்டட்? ஆனா அது பெண்களுக்காக்கும்! ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
15 பின்னூட்டங்களா, சகோ? அம்மாடி..
நீக்குஒரே ஒரு பின்னூடமெம்றாலும் மற்றவர்கள் கவனிக்காததை கவனித்துச் சொல்வது தான் சவாலான விஷயம்.
அந்த ஒண்ணு ஏதாவது தேறுதா பாருங்கள். நானும் பார்க்கிறேன்.
அட! அந்த 15 H, 15 G -ல் ஏதோ கிடைக்கும் போலிருக்கே! தேடிப் பாருங்கள், சகோ.
:>))
நீக்கு..தண்ணீருக்குத் தவிக்கப் பெண் அவர் வாயில் நீர் ஊற்றப் போக, மனைவி பெண்ணை வேண்டாம் என்று தடுக்க அவர்கள் கண் முன்னேயே அவர் துடிதுடித்து இறந்து ..//
பதிலளிநீக்குஎப்படி இருந்த காலம் எப்படி ஆகிவிட்டது? எதை எதையெல்லாம் கண்முன்னே நிறுத்துகிறது. பாசமலர்கள் வெறும் காகித மலர்களாக.. ஆங்காங்கே சாயம் வெளுப்பதும்...
:>((
நீக்குஉணவில் எப்போதும் தயிர் உண்டு
பதிலளிநீக்குஉடம்பில் எப்போதும் உயிர் உண்டு..
-இது என்ன தமன்னா ஃபிலாஸஃபி, வியாழனில்? அது சரி, இந்த வார்த்தைகள் தொல்காப்பியர் காலத்தில் இருந்தனவா?
ஹா.. ஹா.. ஹா...
நீக்கு..அரசின் நடவடிக்கையால் மக்கள் புண்படுவர். //
பதிலளிநீக்குமக்களின் நடவடிக்கைகளால் அரசு சிக்கித் தவிக்கும் என்பது விட்டுப்போய்விட்டதே..!
அது புரிந்து கொள்ளக்கூடியது!
நீக்குதமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் -
பதிலளிநீக்குஇருக்கிற கழகங்கள் போதாதென்று இந்தப் பெயரிலும் ஒரு கழகமா?
நேரடியான ஆங்கில மொழியாக்கம்.
தமிழில் பெயர் வைக்க முடியாத அளவுக்கு தாய்மொழித் தமிழில் சொல்லாட்சி இல்லாமலா போய் விட்டது?
TamilNadu Medical Services Corporation!
நீக்குNeyveli Lignite Corporation - என்பதற்கு தமிழில்?
நீக்குதமிழில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்!!!
நீக்குநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்!
Corporation என்ற வார்த்தைக்கு --
நீக்குஒன்றுக்கு கழகம்
மற்றதற்கு நிறுவனம்..
ஜல் சக்தித் துறை என்று தமிழில் எழுதுகிறார்கள். தொலைக்காட்சி, செய்தித்தாள் எல்லாவற்திலும் இப்படியே வழி மொழிகிறார்கள். அது என்ன ஜல்?
பதிலளிநீக்குபுதிய ஆட்சி வந்து தான் தமிழர்களுக்குப் புரிகிற மாதிரி தமிழக அளவில் பெயர் மாற்றங்கள் காண வேண்டும் போலிருக்கு.
அப்படியா எழுதுகிறார்கள்? நான் கவனித்ததில்லை ஜீவி ஸார்.
நீக்குநீர் மேலாண்மை எனத் தமிழிலும் இருக்கே!
நீக்குநீர் மேலாண்மை என்பது இந்த ஜல் சக்தியில் ஒரு பிரிவு! அவ்வளவு தான்!
நீக்குகட்டுப்பாடோடு வீட்டில் சமைத்த உணவை மட்டுமே உட்கொள்வது கொராவைத் தடுத்து ஒழிப்பதற்கான ஒரு வலுவான தடுப்பரண்.
பதிலளிநீக்குநண்பர்கள் கைக்கொள்ள வேண்டுகிறேன்.
உண்மை.. உண்மை... முயல்கிறேன் நாளை முதல்...!!!
நீக்குதிருக்குறள் அளவிலேயே பலர் தேங்கி விடுகின்றனர்.
பதிலளிநீக்குகுறளுக்கு முன்னாலான பழமையை படித்தறுவது தமிழுக்கு ஆக்க பூர்வமான பல பெருமைகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.
கலைஞரும், சுஜாதாவும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
* படித்தறிவது
பதிலளிநீக்குஅதற்கு நேரமும், பொறுமையும் இல்லாதிருக்கலாம்!!!!
நீக்குஎந்த குறுகிய வட்டத்திற்குள்ளும் தன்னை அடைத்து விடாதபடிக்கு வாழ்க்கை பூராவும் பல விஷயங்களிலும் பீறிட்டு வெளிப்பட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார் சுஜாதா.
பதிலளிநீக்குஏழு வார்த்தைகளுக்கு மீறி ஒரு வரி அமைம்து விடக்கூடாது என்று ஒரு முறை வரி சூத்திரம் மாதிரி சொன்னார். என்னால் முடியவில்லை. நீங்கள் முயற்சித்துப் பாருங்கள், ஸ்ரீராம். வெற்றி கிட்டினால் அவரை நெருங்கி விடலாம்.
பொதுவாகவே நீள வாக்கியங்கள் நான் படிப்பதுமில்லை, அமைப்பதுமில்லை ஜீவி ஸார். நமக்கே ஒரு வாக்கியம் நீண்டுகொண்டே போனால் படிக்கும் பொறுமை போய்விடும். அர்த்தம் மனதில் ஏறாது வெளியே ஓடிவிடும்!
நீக்குதிரு சுகுமாறன் தேறியது அறிந்து மகிழ்ந்தேன்
பதிலளிநீக்குஎச்சரிக்கையோடு இருப்பது அனைவருக்கும் நல்லது
Covid control Room
பதிலளிநீக்குவாட்ஸாப்பில் செய்தி அனுப்பியிருக்கிறேன்.
பாருங்கள், ஸ்ரீராம்.
கொரானா பற்றிய செய்திகளும், பாதிப்படைந்தவர்களின் அனுபவங்களும் பதற வைப்பதாகவே உள்ளன. கவலை தொனிக்கும் கவிதை யதார்த்தம். குட்டிப் பூனையின் படங்கள் அருமை. இருக்கும் பிரச்சனைகளுக்கு நடுவே முதலிரண்டு ஆருடங்கள் பீதியுற வைக்கின்றன. 3_வது ஆருடம் பலிக்கட்டும். அழகுக் குறிப்புகள் நன்று.
பதிலளிநீக்குபலிக்கலின்னா யாரும் கோவிக்க மாட்டாங்க பாருங்க.. ந
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதொற்று பற்றிய செய்திகள் கருத்துரை களிலும் நிறைய வந்துள்ளதை படித்தவுடன் சற்று பயம் மேலோங்குகிறது. அதற்கேற்றார் போல் பஞ்சாங்கத்தை விதவிதமாக வாசித்த செய்திகளும் பயத்தை உண்டாக்குகிறது. மூன்றாவது வாசிப்பு நன்மை தருவதாக இருப்பது ஆறுதலாக உள்ளது.
கைப்பைக்கிடையே பூனையின் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. வந்த பூனை நம்மோடு தங்கி விடுமா? பிறந்த குட்டியை எடுத்து வளர்த்தால்தானே நம்மோடு ஒட்டும்.. தொல்காப்பியர் செய்திகளை அறிந்து கொண்டேன். தமன்னாவின் அழகு குறிப்புகள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கொரொனா செய்தி அச்சமூட்டுகிறது. ஒரு நாளைக்கு லட்ச ரூபாய் கொடுத்தாலும் இடமில்லையா? சுஜாதா பற்றிய எஸ்.ஆர் கணிப்பு சரியே! மனசாட்சி?
பதிலளிநீக்குசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த தயிர் உதவும் என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன். அதாவது சாதம், ஊறுகாய், சாம்பார் என்று எதுவும் சேர்க்காமல் இரண்டு கரண்டி தயிர் மட்டும் சாப்பிட்டால் நல்லது.
பதிலளிநீக்கு