சனி, 31 ஜூலை, 2021

DSP ஆவதே லட்சியம்; வெற்றி பெறுவது நிச்சயம் 

 கேலி, கிண்டல்களை புறக்கணித்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த முப்பது வயது திருநங்கை சிவன்யா சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக (SI) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக்கொண்டுள்ள சிவன்யாவின் லட்சியம் DSP ஆவதாம்.  அதற்காக க்ரூப் I தேர்வுகளும் எழுதத் தயாராகி வருகிறார்.

===========================================================================================================

மனநலம் பாதித்து சாலையில் சுற்றித் திரிந்தவர்களை மீட்டு மனநலக் காப்பகத்தில் வியாழக்கிழமை சேர்த்திருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன்.  அப்போது அவர்களுடனேயே அதே வாகனத்தில் பயணம் செய்த அமைச்சர், அவர்களுக்கான பரிசோதனைகளின்போதும் நேரடியாகப் பார்வையிட்டிருக்கிறார்.


====================================================================================================

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் (70) வாங்க ஒப்பந்தப் புள்ளி போடப்பட்டுள்ளது.  மூன்று பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் ஒரே நேரத்தில் 980 பேர் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை இந்த ரயில்கள்.


==========================================================================================================

33 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..

    குறள் நெறி வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. காவல்துறை ஆய்வாளர் சிவன்யா தனது பணியில் சிறக்கட்டும்.. வாழ்த்துவோம்!..

    பதிலளிநீக்கு
  4. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் நலமுடன் இருக்க இறைவன்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. செல்வி சிவன்யா அமோகமாக வெற்றி பெற வேண்டும். நல்வாழ்வு
    வாழ வேண்டும்.
    காவல்துறை வளம் பெருக , இன்னும் நிறைய
    நல் உள்ளங்கள் அங்கே இடம் பெற வேண்டும்.
    நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சரின் நற்செயலுக்கு பாராட்டுகள்.
    எல்லோரும் இதே கவனத்துடன் செயல் பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. மிக அதிசயமான செய்தி ஓட்டுனர் இல்லாத மெட்ரோ
    வண்டிகள்.
    சென்னை செழிக்க வேண்டும். பாதுகாப்புடன்
    இயங்கினால் மகிழ்ச்சி.
    நல்ல செய்திகளுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. சிவன்யா அவர்களுக்கு வாழ்த்துகள். அவர் மென்மேலும் பணியில் உயர வேண்டும். சமூகத்தில் அவர்களும் இணையவேண்டும். முதலமைச்சர் ரெக்க்னைஸ் செய்வது பாராட்டுக்குரியது. அமைச்சர் மா சுப்பிரமணியத்தின் மனித நேயம் பாராட்டப்படவேண்டியது

    பதிலளிநீக்கு
  10. ஓட்டுநர் இல்லாத மெட்ரோ பற்றிய செய்தி படித்தபோது ஓட்டுனர் இல்லாமல் சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகள் இல்லாமல் ஓடி பின்னர் பெரம்பூரில் கூட்ஸ் வண்டி மீது மோதி கவிழ்க்கப்பட்ட புறநகர் EMU நினைவுக்கு வந்தது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எல்லா நாளும் எ பிக்கு வருவேன். வியாழன் அன்று மட்டும் விரிவான பின்னூட்டம் இடுவேன். மற்ற நாளில் இல்லை. இன்று சனி பின்னூட்டம் அதிசயமாக  இருக்கிறதா? 

      Jayakumar

      நீக்கு
    2. //நான் எல்லா நாளும் எ பிக்கு வருவேன்.//


      அது யூகித்திருந்தேன்.

      //இன்று சனி பின்னூட்டம் அதிசயமாக இருக்கிறதா? /

      இல்லை.  முன்னரும் சனிக்கிழமைகளில் பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள் என்று ஞாபகம்.  விபத்து ஏற்பட்டது என்பதை நினைவு கூர்ந்ததற்கு சார் என்று அதிர்ச்சியானேன்!!!

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. சிவன்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவ்ர்கள் செயலை பாராட்ட வேண்டும், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  14. சிவன்யா மென்மேலும் உயர வாழ்த்துகள்.
    மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது. ஆரம்ப சூரத்தனமாக இல்லாமல் தொடரட்டும்.
    ஓட்டுநர் இல்லாத மெட்ரோ.. வருக வருக!

    பதிலளிநீக்கு
  15. நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவர்களது செயல் போற்றத்தக்கது.

    பதிலளிநீக்கு
  16. ல்லாமே இன்றைக்கு மிக நல்ல விஷயங்கள்! மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இங்கு [ ஐக்கிய அரபு குடியரசு ] கடந்த 11 வருடங்களாக செயல்ப‌ட்டு வருகிறது. பொது மக்களுக்கான மிகச் சிறந்த, செலவு குறைந்த சேவை இது.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    சாதனை படைத்த சிவன்யா அவர்கள் காவல் துறையில் மென்மேலும் உயர வாழ்த்துவோம்.
    நல்வாழ்வுத்துறை அமைச்சரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள்.
    ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் வருகைக்கு வாழ்த்துகள். மூன்றுமே முத்தான செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி. காலையில் நெட் தடையால்,உடனே வர இயலவில்லை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. சிவன்யா பற்றி தினமலரிலும் படித்தேன். மா.சுப்ரமணியம் பற்றியும்! தானியங்கி ரயில் பற்றிய செய்தி புதிது. ஓட்டுநர் இல்லாமல் நல்லபடியாகப் போக்குவரத்து நடக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!