அப்பாதுரை :
சென்னையை ஏன் நிறைய பேர் வெறுக்கிறார்கள்?
$ தன்னைப்போல் பிறரையும் நினைக்கிறார்களோ?
# காரணம் சொல்லிவிட்டு வெறுக்குமாறு கேட்டுக் கொள்வோமா ?
& 'சென்னையை வெறுக்கிறேன்' என்று யாருங்க உங்க கிட்ட வந்து சொன்னாங்க? நாகையில் நாங்க வாழ்ந்த காலங்களில் எல்லாம் சென்னை (அந்தக் காலத்தில் மெட்ராஸ்) என்றால், ஸ்வர்க்கபுரி, இன்பலோகம், பல பொழுதுபோக்குகள் நிறைந்த சுவாரஸ்யமான ஊர் - என்று நினைப்போம். சென்னையை விட்டு பெங்களூர் வந்த பிறகு, சில விஷயங்களில் சென்னையை விட பெங்களூர் மேல் என்று தோன்றுகிறது. சங்கீத சீசன், கிரிக்கட் சீசன் போன்ற சமயங்களில் சென்னைக்கு ஈடு இணை, இன்றும் உலகில் எங்கும் கிடையாது.
நெல்லைத் தமிழன்:
1. எனக்குப் பிடித்து எல்லோருக்கும் பிடிக்கணும் என மனித மனம் ஏன் எதிர்பார்க்கிறது? அப்படிப் பிடிக்கவில்லையானால், ஏன் குறை கூற விழைகிறது,
# ஐயோ இவ்வளவு நல்ல விஷயத்தை இப்படி மிஸ் பண்றாங்களே என்ற நல்லெண்ணம் அல்லது இதைக்கூட ரசிக்காத ஜடமாக இருக்காங்களே என்ற பச்சாத்தாபம் காரணமாக இருக்கலாம். ஒத்துப் போகாதவரை எல்லாரும் குறை கூற மாட்டார்கள்.
2. சுவர்க்கம், நரகம் என்பதற்கு விளக்கம், உங்கள் பார்வையில்?
# மன மகிழ்ச்சி மன நிறைவு சுவர்க்கம் ஏமாற்றம் எரிச்சல் பொறாமை நரகம்.
& ஒரு ஜென் கதை :
இராணுவ வீரன் நோபுஷிகே, தனக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்க, ஹகுயன் என்ற குருவை சந்தித்தான். அந்த குருவை சந்தித்து அந்த வீரன், "உண்மையில் சொர்க்கம், நரகம் என்று உள்ளதா?" என்று கேட்டான்.
அதற்கு அந்த குரு "நீ யார்?" என்று வீரனிடம் கேட்டார். அதற்கு "நான் ஒரு இராணுவ வீரன்" என்று கூறினான்.
நீ ஒரு ராணுவ வீரனா! என்று ஆச்சரியத்துடன் அந்த குரு "எந்த ஆட்சியாளர் உன்னை ஒரு பாதுகாப்பு வீரனாக தேர்ந்தெடுத்தது? உன் முகத்தில் ஒரு பிச்சைக்காரன் அம்சம் தெரிகிறது!" என்று அவனைப் பார்த்து கூறினார்.
அதனைக் கேட்டதும் கோபம் கொண்ட அவன், கோபம் தாங்காமல் தனது வாளை எடுத்தான். அதைப் பார்த்த அந்த குரு "ஓ! உன்னிடம் வாள் இருக்கிறதா? இருப்பினும் அந்த வாள் மிகவும் மந்தமாக காணப்படுகிறது. அது என் தலையை துண்டிக்காது" என்று கேலியாக கூறினார்.
இதை கேட்ட வீரனுக்கு, மிகுந்த கோபம் ஏற்பட்டு வாளை எடுத்து வீச முற்பட்டான். அப்போது குரு அவனிடம், "இங்கு தான் நரகத்தின் கதவுகள் திறந்தன!" என்று கூறினார்.
குருவின் வார்த்தைகளைக் கேட்டு வீரன் சற்று சாந்தம் கொண்டு, அவனுடைய ஒழுக்கத்தை அறிந்து மீண்டும் தனது வாளை உறையில் வைத்தான். இப்போது குரு "இங்கு தான் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தன" என்று கூறினார்.
பின் அந்த வீரன், "கோபம் உள்ள இடத்தில் நரகமும், குணம் உள்ள இடத்தில் சொர்க்கமும் உள்ளன" என்பதைப் புரிந்து குருவின் முன் தலை குனிந்து நின்றான்.
3. நம் இரத்த சொந்தங்களால் வெறுக்கப்படுவதைவிட நரகம் கஷ்டமாக இருக்குமா? எல்லோராலும் விரும்பப்படுவதைவிட சுவர்க்கம் நன்றாக இருந்துவிட முடியுமா?
# நிச்சயம் சாத்தியம்தான். மற்றவரால் விரும்பப் படுவதோ அல்லது வெறுக்கப் படுவதோ மட்டுமே லட்சியமாக இருக்க முடியாது.
4. 50 ரூபாய் கொடுத்தால் ஒரு கட்டு கீரை, 1கிலோ வெண்டை, 1/2 கிலோ கத்தரி (மூன்றும் சேர்த்து) வாங்கிவிட முடியும்போது, மனித மனம், ஏன் 300 ரூபாயும், உழைப்பும் சேர்த்து இதில் பாதியை அறுவடையாக வீட்டுத் தோட்டத்தில் அறுவடை செய்து மகிழ எண்ணுகிறது?
# அதுதான் படைப்பாளியின் உயர்நிலை திருப்தியும் ஆனந்தமும்.
& வீட்டுத் தோட்டம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகளை, இங்கே சென்று விவரமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
5. எழுதி எழுதி (வடுவூர் துரைசாமி ஐயங்கார். திஜர..... சாரு நிவேதிதா வரை....) எழுத்தாளர்கள் சாதித்தது என்ன?
# எழுதிப் பணம் குவித்தோர் உண்டு. எழுத்தினால் பரவலாகப் புகழ் பெற்றவர்களும் உண்டு. பேசப்பட்டவர்களும் உண்டு. இதெல்லாமே சாதனைதானே.
= = = =
சென்ற வாரம் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு வந்த பதில்களும், வெளியிடப்பட்ட படங்களுக்கு வந்த கருத்துகளும், மின்நிலா 67 இதழில், 25 ஆம் பக்கத்திலிருந்து, 31 ஆம் பக்கம் வரையிலும் பிரசுரித்துள்ளோம்.
மின்நிலா 67 இதழின் சுட்டி >>>> இதோ இங்கே <<<<<
= = = = = =
எங்கள் கேள்விகள் :
1) ஒரு குறிப்பிட்ட பொருளை - (குறிப்பிட்ட brand name கொண்ட ஒரு பொருளை) வாங்க ஒரு கடைக்கு செல்கிறீர்கள். அந்தக் கடையில், அந்த brand name கொண்ட பொருள் இல்லை. ஆனால் அதே பொருள் வேறு brand name உள்ளது. அதை வாங்குவீர்களா அல்லது, நீங்கள் விரும்பும் brand name கொண்ட பொருளை வேறு ஒரு கடைக்கு சென்று வாங்கிக்கொள்வீர்களா?
2) உங்கள் பூஜை அறை விளக்கில், என்ன எண்ணெய் உபயோகிக்கிறீர்கள்?
3) முக்கணிகளில் உங்களுக்குப் பிடித்த கனி எது? ஏன்?
= = = =
படம் பார்த்துக் கருத்து எழுதுங்க :
1)
2)
3)
= = = = =
அனைவருக்கும் இனிய புதன் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க
இறைவன் அருள வேண்டும்.
வணக்கம் .வல்லிம்மா. வாங்க...
நீக்குமுதல் கேள்வியிலேயே எனக்கு சந்தேகம்.
பதிலளிநீக்குசென்னையையை ஏன் வெறுக்க வேண்டும்.
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
என்று பாடியவர்கள் நாங்கள். வருடத்தில் இரண்டு மாதங்கள்
போய் வந்த இடம். மதுரை,திருச்சி வெய்யிலை,
தண்ணீர்க் கஷ்டங்களை மறக்க வைத்து மெரினா பீச்,
புது சினிமா, பாட்டி,மாமா,அத்தை கஸின் என்று
ரசித்துக் கழித்த காலங்களிலிருந்து
அங்கேயே குடி இருக்கும் காலம் வரை
வாழ்க்கையை ரசிக்க வைத்த நகரம்.
இப்போது மாறி இருப்பது மனிதர்களால்.
சென்னையிலிருக்கும் போது பெங்களூர் மிகப் பிடித்தது.
மும்பையும் பிடித்தது.
இந்த ஊர் வந்த பிறகு, சௌகரியங்களுக்காகப்
பிடித்தாலும்,
பழகிய மனிதர்களுக்காக அன்புடன் நினைக்க வைக்கும் இடம்.
ஆம் நீங்கள் சொல்வது சரிதான்.
நீக்குமுக்கனிகளில் எதையுமே சாப்பிட முடியாத
பதிலளிநீக்குகாலம் இது. கிடைத்தால்
மாம்பழத்துக்கே முதல் இடம்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவிளக்குக்கு உப்யோகிப்பது நல்லெண்ணெய்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குமுதல் படம் நல்ல ஃபோட்டோஷாப். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுலி ஆடு புல்லுக்கட்டு ஓடம் என்பது போல மனிதன் ,சிங்கம்,கல்,யானை சாப்பாடு.சிங்கம் தலையில் கல்லைப் போட்டு
யானைக்கு( சோளப்பொரி) சாப்பாடு கொடுத்து
வெளியே போய்விடலாம்:))))
நல்ல யோசனை. :))
நீக்குஅருவியில் குதிக்கப் போகும்
பதிலளிநீக்குபெண்ணுக்கு, ''இடம் பார்த்துக் குதி,
இஷ்டம் போலக் குதிக்காதே!!!"
:)))
நீக்குநாய்க்குட்டியா, ????
பதிலளிநீக்குநம்பிய நாய்க்குட்டியை நட்டாற்றில் விடாதே!!!
எல்லாம் ஒரே அட்வைஸ் மழையாக இருக்கிறதே!
நீக்கு🤣😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும் மன மகிழ்ச்சியும் அமைதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குசுமார் 2 மாதங்கள் கழித்து இன்று காலை எழுந்து ஸ்வாமி விளக்கேற்றிக் காஃபியும் போட்டேன். இது தொடரப் பிரார்த்திக்கிறேன். கொஞ்சம் கொஞ்சம் நடைப்பயிற்சியும் மேற்கொள்ளச் சொல்லி இருக்கார் மருத்துவர். அதுவும் தொடரணும். வீக்கம் மட்டும் அவ்வப்போது வந்து போகிறது. அது தான் கொஞ்சம் கவலை தருகிறது. கம்ப்ரெஸிவ் சாக்ஸ் போட்டால் சரியாயிடும் என்கிறார்கள். விரைவில் வாங்கிப் போட்டுக்கணும்.
பதிலளிநீக்குவிரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.
நீக்குவல்லிக்குப் பிடித்தது சென்னை என்பது எனக்குத் தெரியும். என்றாலும் எனக்குச் சென்னை வாழ்க்கை அவ்வளவு ரசம் இல்லை. மைசூர், "பெண்"களூர் என்றெல்லாம் இருந்து பார்த்துவிட்டுப் பிடிக்காமல் தான் திருச்சியைத் தேர்ந்தெடுத்தோம். வெயில் காலம் வெயில் அதிகம் என்றாலும் மாலை வேளையில் எதுவும் தெரியாது.
பதிலளிநீக்குகீதாமா, உங்களைப் பார்க்கும் போது சந்தோஷம்.
நீக்குகம்ப்ரஸ்ஸிவ் சாக்ஸ் எப்பொழுதும் நல்லது.
சிறந்த ஸாக்ஸ் வாங்க வேண்டும்.
நிறைய அழுத்தம் கொடுத்தால்
அதுவும் நன்றாக இருக்காது. உடம்பு
சரியாகட்டும்.
சென்னை நகர் ஒரு காலத்தில் நன்றாகத் தான் இருந்தது.
நீக்குஅதனால் சொன்னேன்.
:))
கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குபொதுவாக நான் எந்தப் பொருளையும் அவ்வளவு சீக்கிரம் வாங்க மாட்டேன். குறிப்பிட்ட ப்ரான்ட் பிடித்தது எனில் அதை மாற்றவும் மாட்டேன். அது எங்கே கிடைக்குமோ அங்கே தான் போய் வாங்குவேன்.
பதிலளிநீக்குவிளக்குக்கு எப்போவுமே நல்லெண்ணெய் தான். ஒரு சிலர் பாமாயில்/கடலை எண்ணெய் எனப் பயன்படுத்துகிறார்கள். கோயிலுக்கும் கொடுப்பார்கள். என் மனதுக்கு அது உவப்பாய் இல்லை.
நீங்கள் சொல்வது சரிதான் இப்பொழுதெல்லாம் கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டுகளில் பாமாயில் அதிகம் கலக்கிறார்கள் அது அப்படியே மழை காலத்தில் நெய் போல தங்கிவிடுகிறது.
நீக்குமுக்கனியுமே பிடிக்கும் என்றாலும் வாழைப்பழத்தில் குறிப்பிட்ட வகைகள் மட்டுமே. ஏலக்கி, மலைப்பழம், நல்ல நாட்டு வாழைப்பழம் ஆகியவற்றுக்குப் பின்னரே மற்ற வகை வாழைப்பழங்கள்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஹாஹாஹா, முதல் படம் எடிட் செய்து போட்டது இல்லையோ! யானை சிரிக்குது, அதைப் பார்த்துச் சிங்கம் ரசிக்குது. நடுவில் இருக்கும் பையருக்குத் தலைக்கு மேல் பாறை(?) தொங்குகிறது.
பதிலளிநீக்கு:)))
நீக்குபாவம் அந்தச் செல்லம். பயந்து கொண்டு இருக்கு.
பதிலளிநீக்குஅந்தப் பெண் அருவியில் குதிக்கப் போறாளா? குளிக்கப் போறாளா? பார்த்து பெண்ணே!
:)))
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்! வாங்கோ வாங்கோ!
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்கு3. வது படம்.... இந்தப் படத்தைப் பார்த்தவர்களில் எத்தனெபேர் அருவியை ரசித்திருப்பார்கள்?
நல்ல கேள்வி.
நீக்குகேள்விகளுக்கு பதில்
பதிலளிநீக்கு1. வாங்கும் பொருளைப் பொருத்து பிராண்ட் முக்கியத்துவம் பெறுகிறது. சுத்தம் சுகாதாரம் என நாம் நினைக்கும் பொருள்களிலோ (ஐடெக்ஸ், காஜல், இந்த சோப், பேஸ்ட், மேலும் பல பொருட்கள், நீடித்து உழைப்பது அல்லது பைசா வசூல் என நினைக்கும் பொருட்களின் பிராண்டையோ, இல்லை நமக்கு சௌகரியம் என நினைக்கைம், உதாரணம் மாருதி சுசுகி...) சுலபமாக பிராண்டை மாற்ற மாட்டோம். மற்றதில் வேறு சாய்ஸ் இருந்தாலோ, தேடும் பொருள் கிடைக்கவில்லை என்றாலோ மாற்றத் தயங்க மாட்டோம்.
2. பூஜை விளக்கில் நல்லெண்ணெய். மற்றபடி இப்போதெல்லாம் விளக்குவேற்ற இந்த எண்ணெய் வாங்குங்கள் என்ற ஏமாற்று வித்தையின் பக்கமே போவதில்லை. அதெல்லாம் சிம்ப்ளி ஃப்ராடுகள்.
3. முக்கனி அனைத்துமே பிடிக்கும். மூன்றும் இருந்தால், முதலில் பலா... இரண்டாவது எந்த மாம்பழம், வாழை என்பதைப் பொறுத்தது.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குசென்னையை யாரால் வெறுக்க முடியும்? அப்பாவோடு வாழ்வது பெரும்பாலும் கடினம், ஏனென்றால் பக்கத்தில் போலீஸ், வாத்தியார் இவர்களோடு வாழ்வதைப் போன்றது அது. அதற்காக அப்பாவை வெறுக்க முடியுமா?
பதிலளிநீக்குசென்னை பல கஷ்டங்களைக் கொடுத்தாலும் வாழ சுவர்க்கமான இடம்தான்.
நல்ல கருத்து. நன்றி.
நீக்குநீங்க சொல்றதைப் பார்த்தால். பணம், புகழ் பேசப்படுதல் இவற்றுக்காகத்தான் எழுத்தாளர்கள் எழுதறாங்களா?
பதிலளிநீக்குஇதுல உலகத்தைத் திருத்த வந்தவர்கள் மாதிரி சிலர் பில்டப் வேறு கொடுக்கறாங்களே
அதானே!
நீக்கு@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்கு// சென்னையை யாரால் வெறுக்க முடியும்? அப்பாவோடு வாழ்வது பெரும்பாலும் கடினம், ஏனென்றால் பக்கத்தில் போலீஸ், வாத்தியார் இவர்களோடு வாழ்வதைப் போன்றது அது. அதற்காக அப்பாவை வெறுக்க முடியுமா?..//
பெற்ற தந்தையும் சென்னையும் ஒன்றா?..
பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் (இங்க ஊர்) நற்ற வானிலும் நனி சிறந்ததுவே
நீக்குஆஹா !!
நீக்குநான் அருவியைத் தான் ரசித்தேன்...
பதிலளிநீக்குஅதாவது பெண்ணை ரசிக்கும் அருவியை ரசித்தீர்கள் என்று கூற வருகிறீர்களா?
நீக்கு// நான் அருவியைத் தான் ரசித்தேன்...// நம்பிட்டேன்.
நீக்குநாரதரே!..
பதிலளிநீக்குஅருவி என்றால் என்ன?..
அருவி மகள் என்றால் என்ன?..
அடுத்த புதன் கேள்வியா?
நீக்குஜென் கதை வெகு சிறப்பு. மற்ற பதில்களும் நன்று.
பதிலளிநீக்குநன்றி, நன்றி!
நீக்கு@ அன்பின் நெல்லை...
பதிலளிநீக்கு// பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் (இங்க ஊர்) நற்ற வானிலும் நனி சிறந்ததுவே.. //
தாமரைக் குளம் தான் .. அது அங்கே பிறக்கும் நீர்த் தாவரங்களுக்குச் சிறந்தது...
பனை உச்சி..வெட்ட வெளி... அது அங்கே பழுக்கும் பனங்காய்களுக்கு இனியது..
கன்கையிலே குளிக்கையிலே
காவிரியில் மனது வைத்தால்
அந்த சுகம் இது தருமோ!..
இந்த சுகம் அதில் வருமோ?..
- கவியரசர்..
ஆஹா ! எங்கேயோ போயிட்டீங்க!
நீக்கு//கங்கையிலே குளிக்கையிலே
நீக்குகாவிரியில் மனது வைத்தால்
அந்த சுகம் இது தருமோ!..
இந்த சுகம் அதில் வருமோ?..//
நாமெல்லோரும் (பெரும்பாலும்) அப்படித்தான் இல்லையா? நம்மிடம் அப்போது இல்லாத ஒன்றுக்கு ஏங்கி, இருக்கும் காலத்தை அனுபவிக்காமல்...
அந்தப் பெண் காலணிளைக் கழற்றி வைத்து விட்டு அருவியில் குதிக்கக் கூடாதோ!..
பதிலளிநீக்குகுளிப்பதற்கும் விதிமுறைகள் உள்ளன - என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியாது போலிருக்கின்றது...
😊😎😊😎
நீக்குநானும் நினைத்தேன்.
நீக்குஎன்ன அநியாயமா சிந்திக்கறீங்க. இந்த டிரெஸில் அவள் தண்ணீரில் விழ அவளுக்குப் பைத்தியமா? பாறையில் இப்படி அவள் குதிக்கிறாள், அவள் ஆள் பின்னாலிருந்து புகைப்படம் எடுத்திருக்கிறான். அவ்ளோதான்.
நீக்கு:)))
நீக்கு//நாகையில் நாங்க வாழ்ந்த காலங்களில் எல்லாம் சென்னை (அந்தக் காலத்தில் மெட்ராஸ்) என்றால், ஸ்வர்க்கபுரி, இன்பலோகம், பல பொழுதுபோக்குகள் நிறைந்த சுவாரஸ்யமான ஊர் - என்று நினைப்போம்.// அதே! அதே! நாகை என்பதற்கு பதில் திருச்சி என்று மாற்றிக் கொள்ளுங்கள். சென்னையிலேயே வசிக்க நேர்ந்த பொழுது அதன் கசகசப்பு, புழுதி, பொல்யூஷன் இவையெல்லாம் சென்னை மீது அதிருப்தியை உண்டாக்கின. இருந்தாலும் சென்னையை வெறுக்க முடியாது.
பதிலளிநீக்குஆம், சரியாகச் சொன்னீர்கள்!
நீக்குசொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப் போல வருமா...!
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு1. எனக்குத் தேவை பொருள்தான், பிராண்ட் அல்ல, எனவே திருப்தியாக இருந்தால் கிடைக்கும் பொருளை வாங்கி விடுவேன். பற்பசை, வெண்ணை, உள்ளாடைகள் பிராண்ட் மாற்றுவதில்லை. 2. நல்லெண்ணெய்தான். வெகு அபூர்வமாக சில சமயங்களில் தீபம் எண்ணெய் உபயோகிப்பது உண்டு. 3. மா,வாழை இரண்டுமே சம அளவில் பிடிக்கும். எல்லா சீசன்களிலும் கிடைக்கும், நிறைய நார்ச்சத்துள்ளது, நாராக இருக்கக்கூடாதே, புளிக்கக்கூடாதே, என்ற கவலையெல்லாம் கிடையாது எனவே வாழைப்பழம் அதிக ஓட்டுகள் வாங்கி முன்னணியில் நிற்கிறது.
பதிலளிநீக்குவிளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குரஸ்தாளி வாழைப்பழம் கொஞ்சம் புளிப்புச் சுவையுடன் இருக்கும். எனக்குப் பிடிக்காத வாழைப்பழங்களில் பூவன் பழமும், ரஸ்தாளியும் உண்டு.
நீக்குசெவ்வாழைக்கும் முதலிடம் உண்டு. இங்கே நிறையவே கிடைக்கிறது.
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குமுதல் படம் பிடிக்கவேயில்லை, ஏனென்றால் அத்தனையும் பொய்.இரண்டாவது படம் - க்யூட் குட்டி!மூன்றாவது படமும் பேட்ச் பண்ணப்பட்டதுதான் இருந்தாலும், குதிக்கும் அருவியில் குளிப்பதற்காக குதிக்கும் பெண் லிரில் சோப் விளம்பரத்தை நினைவுபடுத்துகிறார்.
பதிலளிநீக்குபொய்யை மெய் போலக் காட்டுவது கதைக்காக
நீக்குபானுமா. நாம் கதைப்பதற்காக உருவாக்கப் பட்ட படம்:)
கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குஅடுத்த புதனுக்கான கேள்வி...
பதிலளிநீக்கு1,,,,,கேள்வி கேட்பவர்களைப் பொறுத்து பதில் தரப்படுமா?
2, ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவர்களின் மனம்
எதை யோசிக்கும்?
3, கேள்விகள் புத்திக் கூர்மையை பிரகடனப்
படுத்துவதற்கா இல்லை பதில் சொல்பவர்களின் அறிவை சோதிப்பதற்கா?
முன் கூட்டியே நன்றி:)
நன்றி. பதில் அளிப்போம்.
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமுதல் படம் சிங்கத்தால் சாதம் சாப்பிட முடியாது. யானை வாழை இலையை சாப்பிடும் :))
பதிலளிநீக்குஇரண்டாவது படம் அழகிய குட்டி தண்ணீரை கண்டதும் நீந்துவதற்கு தயாரா ? ஓடுவதற்கு தயாரா?
மூன்றாவது படம் பால் போன்ற அருவி குதிக்கும் பெண் இரண்டுமே அழகு.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குமுக்கனிகள் மூன்றுமே பிடிக்கும்.
பதிலளிநீக்குவாழைக்கு ஓட்டு முதலிடம் கத்தி இன்றி உரித்து உடனே சாப்பிட்டு விடலாம் :))
ஆ ! சரியாகச் சொன்னீர்கள்! நன்றி.
நீக்குகேள்விகளும் பதில்களும் அருமை.
பதிலளிநீக்குபூஜை விளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெய் செக்கு நல்லெண்ணெய்.
முக்கனிகளும் பிடிக்கும். ஆனால் வாழைதான் பூஜைக்கு எப்போதும் கிடைக்கும்.அதைதான் எப்போதும் தேடுவோம். மா, பலா எல்லாம் சில பருவங்களில் மட்டுமே கிடைக்கும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபடங்கள் எல்லாம் தயார் செய்தவரை பாராட்ட வேண்டும்.
பதிலளிநீக்குநாய்குட்டியிடம் பார் "உன்னை போலவே இன்னொரு குட்டி "
அருவியும் அந்த பெண் படமும் சோப் விளம்பரத்தை நினைவு படுத்துகிறது. காலில் பூட்ஸ் அணிந்து அவர் குதிப்பது புல்வெளியில் .
உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள்! நன்றி.
நீக்கு1.விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களைத் தேர்வு செய்யும்/வாங்கும் வழக்கம் உண்டா?
பதிலளிநீக்கு2.வீட்டு உபயோகப் பொருட்களை விளம்பரங்களைப் பார்த்து வாங்குவீர்களா? அல்லது தேவையா என்பதை யோசித்து வாங்குவீர்களா?
3.மதுரை புதுமண்டபம் கடைகளில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி இருக்கீங்களா?
4.இது பற்றிய விளம்பரங்கள் வரும் யூ ட்யூப் சானல்களைத் தொடர்ந்து பார்ப்பீர்களா? நம்மவருக்கு இதான் பொழுது போக்கே! உடனே வாங்கறேன் என்று கிளம்பவும் செய்வார்.
5.எந்தப் பொருளுக்கும் நீண்ட காலப் பயன்பாடு இருந்தால் தான் வாங்கலாம் என்பது என் கருத்து. இது சரியா தப்பா? வாங்கிட்டுப் பயனில்லை எனில் தூக்கிப் போடுவீர்களா?
பதில்கள் அளிப்போம். நன்றி.
நீக்கு