பானுமதி வெங்கடேஸ்வரன் :
எ.பி.யில் ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றி கேள்வி கேட்க முடியுமா?
# கேள்வி கேட்க முடியும். பதில்தான் தர இயலாது.
& நான் (சுக்ல) யஜுர் ஸாஹா அத்யாயி என்பதால் அதில் வருகின்ற ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருப்பேனா ?
பதினெட்டில் என்னைக் கவர்ந்தவை ஆறும், ஏழும்
" அனைத்துயிர்களையும் தன்னிலும், தன்னை அனைத்துயிர்களிலும்
காண்போர் எதையும் வெறுப்பதில்லை. (6)
ஆன்மாவே அனைத்துயிரும் ஆனது என அறிந்து ஒருமை கண்டோனுக்கு
ஏது மயக்கம் ஏது கவலை? (7)
(நன்றி : ஜடாயு - www.tamilhindu.com)
பஸ், ரயில் போன்றவற்றில் பயணிக்கும் பொழுது சக பிரயாணிகள் சகஜமாக உரையாடுகிறார்கள். ஆனால் விமான பயணங்களில் ரொம்பவும் பழகுவதில்லையே? ஏன்?
# நம்ம லெவல் அவங்களுக்கு ரொம்ப மேலே அல்லது கீழே என்று நினைப்பதால் இருக்கலாம். நாம் பேசினால் பதில் சொல்லிப் பேச்சு தொடரக் கூடும்.
& விமான பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் தங்கள் தொழில் தொடர்பாக, நேரத்தை அளவீட்டு செலவு செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் எண்ணம் அடுத்து என்ன என்பதைப் பற்றியே இருக்கும். மேலும் ஆறு / ஏழு மணி நேர இரயில் / பஸ் பயண தூரம் விமானத்தில் சென்றால் இருபது நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அப்படி இருக்கும்போது பேசிப் பழக எல்லாம் ஏது நேரம்?
பள்ளியில் சரித்திர பாடம் படித்து பொழுது உங்களை கவர்ந்த சரித்திர நாயகன் யார்?
# நான் படித்த காலத்தில் பூகோளம் சரித்திரம் இல்லாமல் போய் சமூக அறிவியல் வந்தது. அதில் சரித்திரம் மிகக் குறைவு.
என்னைக் கவர்ந்த சரித்திர நாயகன் (ஆச்சரியகரமாக) சந்திர குப்த மௌரியன் - ஏனென்று தெரியாமலேயே.
& சிவாஜி
வல்லிசிம்ஹன் :
பதில் சொல்வது சுலபம் இல்லை - இப்படி உணர்ந்திருக்கிறீர்களா?
# பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
& 'பதில் சொல்வது சுலபம் இல்லை' என்று சொல்லும்படியாக கேள்வி கேட்பதும் சுலபம் இல்லை!
கீதா சாம்பசிவம் :
1.உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்ன?
# படிப்பது, இசை , பிரசங்கங்கள் கேட்பது.
& கதை எழுதுவது.
2. தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பீர்களா/
# பார்ப்பதில்லை.
3. அதிலேயே மூழ்கி முத்தெடுப்பவர்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
# பொறுமைசாலிகள்.
& நேரத்தைக் கொலை செய்பவர்கள்.
4. ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வந்த தொடர்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்போதைய தொடர்களுக்கும் இப்போது வரும் தொடர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
# அப்போது வன்முறை அதிகம் காணப்பட்டதில்லை என்று தோன்றுகிறது.
& பொதிகையில் வந்த சில தொடர்கள் பார்த்தது உண்டு. இப்போ எதுவும் பார்ப்பதில்லை என்பதால் comparison செய்ய இயலாது.
5. உங்களுக்குப் பிடித்த/அல்லது நீங்கள் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி சானல் எது?
# தற்போது எதுவும் இல்லை.
& அடிக்கடி பார்ப்பது Republic TV.
6. யாரெல்லாம் அர்ச்சகர் ஆகலாம் என்பது பற்றிப் பேராசிரியர் திரு நாகசாமி அவர்கள் தினமலரில் எழுதி வருகிறார். படித்து வருகிறீர்களா? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
# பாரம்பரியமாக அர்ச்சகர் - குருக்கள் இருந்து வருகிறார்கள். இதில் மாற்றம் கொண்டு வர பெரிதாக தேவையில்லை என்று நினைக்கிறேன்.
& கட்டுரைகள் எதுவும் படிப்பதில்லை.
7.சுமார் பனிரண்டு வருடங்களாவது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஆகமவிதிகளை ஒரே வருஷம் பனிரண்டு மாதம் படிக்கும் டிப்ளமா கோர்ஸினால் பூர்த்தி செய்ய முடியுமா?
# முடியாதுதான். ஆனால் சாதாரண பூஜைக்கிரமங்களை குறுகிய காலத்தில் கற்க இயலும்.
8. கோவில்கள் அரசு அலுவலகங்கள் ஆக ஆரம்பித்தது எப்போதில் இருந்து?
# தேடிப் பார்த்ததில் - - -
1925ல் கோயில்கள் விடுதலைப் போராட்ட மையங்கள் ஆவதைக் கட்டுப்படுத்த நிர்வாகம் அரசின் மேற்பார்வைக்குள் கொண்டு வரப் பட்டதாம்.
9. கோவில் ஊழியர்கள் அரசு அலுவலர்களா? அப்படி எனில் அவர்களுக்கும் பணி ஓய்வு, பென்ஷன் எல்லாமும் உண்டா?
# அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிகராக சலுகைகள் கிடையாது.
10. தானாக இயலவில்லை என்பது வரைக்கும் தானே முன்னாட்களில் எல்லாம் அர்ச்சகர்கள் பணி புரிந்து/தொண்டு செய்து வந்தார்கள்! இப்போது அவர்களுக்குக் கட்டாய ஓய்வு கொடுப்பது சரியா? அதிலும் எந்தவிதமான ஊதியமும் கொடுக்காமல் அவர்களைக் கோயிலுக்கு வர வேண்டாம் என்று சொல்வது ஏற்புடையதா?
# சரிவரப் பணி செய்ய இயலாத நிலையில் அவர்கள் தொடர விழைவதால் மட்டும் பணியில் வைத்திருக்க முடியாது அல்லவா ?
= = = = =
சென்ற வாரம் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த பதிலும், படங்களுக்கு வந்த கருத்துகளும், மின்நிலா 069 இதழில், பக்கம் எண் 28 to 31 வெளியாகியுள்ளது. மின்நிலா MN069 சுட்டி
= = = = =
இந்த வார, எங்கள் கேள்விகள் :
1) நீங்கள் அடிக்கடி கொறிக்கும் சிறுதீனி எது?
2) நீங்கள் சமீபத்தில் தெரிந்து கொண்ட புதிய விஷயம் எது?
3) பேனா அல்லது பென்சிலை ஒரு மாதத்தில் எவ்வளவு முறை ஏதேனும் எழுத பயன்படுத்துவீர்கள் ?
படம் பார்த்துக் கருத்து சொல்லுங்க :
1)
2)
3)
= = = =
September 15 All India Engineer's day.
அகில இந்திய பொறியாளர் நாள் வாழ்த்துகள்.
= = = = =
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குஇனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குமுதலில் கண்ணில் பட்டது செல்லங்களின் படம் பப்பிகள்!! அடுத்து குழந்தையின் படம்.
அடுத்து முதல் ஸ்லோகம்!! அதன் அர்த்தம்...படங்களையும் ஸ்லோகத்தின் அர்த்தத்தையும் இணைத்துப் பார்த்தேன்..! என்ன அழகான அர்த்தம்.
நானும் மகனும் முன்பு பேசிக் கொள்வது. வெளி உருவத்தைக் கடந்து களைந்து பார்த்தால் எல்லாவற்றினுள்ளும் இருப்பது உயிர் தானே!
கீதா
பாருங்க கௌ அண்ணா என்னதான் நீங்க தத்துவம் போட்டாலும், பூரணம் என்றதும் திங்க நினைப்புத்தான் வருது!!!!!
நீக்குகீதா
:)))
நீக்கு" அனைத்துயிர்களையும் தன்னிலும், தன்னை அனைத்துயிர்களிலும்
பதிலளிநீக்குகாண்போர் எதையும் வெறுப்பதில்லை. (6)
ஆன்மாவே அனைத்துயிரும் ஆனது என அறிந்து ஒருமை கண்டோனுக்கு
ஏது மயக்கம் ஏது கவலை? (7)//
ஆமாம். இந்த நிலை அடைவது என்பது ஆறறிவிற்கு மிகப் பெரிய சவால்!
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு//விமான பயணங்களில் ரொம்பவும்// - இரயில் மாதிரி சௌகரியம் கிடையாது. பக்கத்துல உட்காருபவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், ஆண் பெண் வித்தியாசங்கள் எல்லாம் இருக்கிறது. நம்ம ஊரைச் சேர்ந்தவர்கள் என்றால் பேசத் தயக்கம் கிடையாது. ஆனால் கல்ஃப் வேலையைப் பொறுத்த வரையில் நிறைய அசௌகரியங்கள் இருக்கின்றன..அதனால் எல்லோரும் மனம் விட்டுப் பேச மாட்டார்கள். பிஸினெஸ் டிராவலின் போது, நேரக் குறைவு, அவனவன் ஓசில கிடைக்கும் டிரிங்க்ஸைக் குடிப்பதிலேயே பிஸியா இருப்பான்..இதுல பக்கத்துல உள்ளவனிடம் பேசவாவது? Long flightல் ஒருவேளை சாத்தியப்படலாம் (என் அனுபவம் எழுதியிருக்கேன் ஹாஹா)
பதிலளிநீக்குதுபாய் - லண்டன் விமானத்தில் எனக்கு அடுத்த (நடக்கும் இடைவெளியைத் தாண்டிய) இடத்தில் ஒரு இளம் பெண் தன் சிறு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது, அவர் நெல்லை சைவப் பிள்ளைமார், தன் கணவன் அசைவம் சாப்பிடும் வழக்கம் உள்ளவர் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். விமானம் நின்றபோது, தன் ஒரு hand luggage(bag) வெளியே கொண்டுவந்து தரமுடியுமா (லக்கேஜ் கலெக்ட் செய்யும் இடம் வரை) என்று கேட்டார். பையில் என்ன இருக்கு என்று கேட்டதற்கு கருவாடு என்றார். அந்த உதவியைச் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டேன்.
நீக்குஇனிய (!) அனுபவங்கள்! கருத்துரைக்கு நன்றி.
நீக்கு//சிறு தீனி// - இதுதான் என் எடை குறையாமல் இருப்பதற்கான காரணம். அதிலும் இனிப்புதான் மிக அதிகம்
பதிலளிநீக்கு//சமீபத்தில் தெரிந்துகொண்ட புதிய விஷயம்// - அசோகரைப் பற்றியது. அவர் ஒரு கொடுங்கோல் மன்னன், வரலாறு நமக்குக் கூறுவது எல்லாமே பொய் என்று.
//பென்சிலை/பேனாவை// - அடிக்கடி உபயோகிப்பேன். (இல்லைனா எழுதுவதே மறந்துவிடும்)
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்கு//தொலைக்காட்சித் தொடர்கள்// - பார்ப்பதே கிடையாது.... இரு வாரங்கள் முன்பு என் பையன் ஹாட்ஸ்டார் போட்டுவிட்டான். அதில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என்று பார்க்க ஆரம்பித்து என் நேரம் நிறைய வீணானது. அந்த நேரத்தில் உருப்படியான எவ்வளவோ செய்திருக்கலாம்.
பதிலளிநீக்குஆம், நீங்கள் சொல்வது சரிதான்.
நீக்குநான் அதான் ஹாட் ஸ்டார் ஆக்டிவேட்டே பண்ணலை. :(
நீக்குபஸ், ரயில் போன்றவற்றில் பயணிக்கும் பொழுது சக பிரயாணிகள் சகஜமாக உரையாடுகிறார்கள். ஆனால் விமான பயணங்களில் ரொம்பவும் பழகுவதில்லையே? ஏன்?//
பதிலளிநீக்குரயிலில் பேருந்தில் எல்லாம் கத்திப் பேச முடியும் ஆனால் விமானத்தில் அப்படிக் கத்திப் பேச முடியாதில்லையோ!!! ஹாஹாஹாஹா
விமானத்தில் செல்லும் போது அழுத்தம் காரணமாகக் காது அடைக்கக் கூடும்.
பொதுவாக உட்செவியின் காற்றழுத்தமும் வெளிச் செவியின் காற்றழுத்தமும் ஒரே சமநிலையில் இருக்க வேண்டும். ஆனால் நாம் உயரே செல்லும் போது இந்த இரு அழுத்தங்களும் சமநிலை ஆக நேரம் எடுக்கும். இது மலையில் அதிக உயரம் செல்லும் போதும் கூட , ரோத்தாங்க் பாஸ் போன்ற உயரங்களில் செல்லும் போதும் இந்தக் காற்றழுத்தத்தின் காரணமாக நம் கேட்கும் திறன் மாறுபடும். சமநிலை அடைந்ததும் பேசினால் கேட்கும் ஆனால் கொஞ்சம் குறவாகத்தான் கேட்கும் குறிப்பாகச் செவி கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கு இது சிரமமாகத்தான் இருக்கும். கேட்பதும் கடினம்தான். அல்டிட்யூட் நால்
மலையிலேனும் சமநிலை அடையயும் ஆனால் ப்ளேனில் பறக்கும் போது ஆல்டிட்யூட் மாறிக் கொண்டே இருக்கும். எனவே சம்நிலை அடைவது நிறைய நேரம் எடுக்கும். இதன் பெயர் இயர் பேரோட்ராமா (ear barotrauma).
இதுவும் காரணமாக இருக்கலாம். இது என் தனிப்பட்ட அனுபவத்தில் முதல் அனுபவத்தில் தெரிந்து கொண்டது. எனக்கு இந்தச் சிரமம் மலை ஏறும் போதும், விமானப் பயணத்தின் போதும் ஏற்பட்டதுண்டு.
கீதா
கீதா நீங்கள் அதிகம் யோசிக்கிறீர்களோ?
நீக்குவிளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குநல்லதாகத் தானே யோசிக்கிறாங்க. வேண்டாதவற்றை யோசிப்பதில்லையே! எனக்கெல்லாம் பல சமயங்களிலும் வேண்டாத சிந்தனைகளே வருகின்றன.
நீக்குபென்சில் பேனா இப்போது அடிக்கடி பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். இது நான் துளசியிடம் கற்றுக் கொண்டது. நான் கணினியிலே தட்டத் தொடங்கியதும் எளிதாக இருப்பதால் அதிலேயெ நான் எழுதுவதைத் தட்டிவிடுவேன். ஆனால் துளசி இப்போதும் (ஒரு வேளை கணினிப் பயன்பாடு இல்லாததால் இருக்கலாமோ??!!! இல்லை ஆசிரியர் என்பதாலோ??!!!) பேப்பரில் தான் எழுதுவார். கருத்துகள், பதிவுகள் (தங்கிலிஷில்!!!) அனுப்புவது , அவர் ஆங்கில பாட நோட்ஸ் எல்லாம் பேப்பரில் எழுதி ஃபோட்டோ எடுத்து அனுப்புவார். தட்டி இங்கு போடுவது, நோட்ஸ் அவருக்கு அனுப்புவது...என்று போகிறது. நல்ல பழக்கம் எனக்கு எழுதுவதே மறந்துவிடும் போல் தோன்ற நானும் இப்போது எழுதத் தொடங்கியுள்ளேன். அட்லீஸ்ட் குறிப்புகளேனும்.
பதிலளிநீக்குகீதா
நல்ல பழக்கம். நன்றி.
நீக்குதொலைக்காட்சி இணைப்பே இல்லை எனவே பார்க்கும் பழக்கமும் ஏற்பட்டதில்லை. ஆனால் இப்போது கணினியில் பார்க்கலாம் தான் ஆனால் பார்க்கும் பழக்கமே இல்லாததால் இப்போதும் வருவதில்லை. ஆனால் நல்ல படம் என்று தெரிந்தால் பார்க்கப் பிடிக்கும். அதுவும் சஸ்பென்ஸ் த்ரில்லர், காமெடி, மற்ற ஜெர்னர் எல்லாம் ரொம்ப சிறப்பான கதை, சிறப்பாக எடுக்கப்பட்டப் படம் என்றால் மட்டுமே கணினியில் எப்போதேனும் வாய்ப்பு நேரம் கிடைக்கும் போது பார்ப்பதுண்டு. அதுவும் இலவசமாக ஆன்லைனில் கிடைத்தால்தான்!!!! எந்த தளத்திலும் பைசா கட்டும் வாய்ப்பு கிடையாது என்பதால்.
பதிலளிநீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! எங்கே இலவசமாகக் கிடைக்குது தி.கீதா?
நீக்குநொறுக்குத் தீனி/சிறுதீனி பிடிக்கும் தான். திருநெல்வேலி முறுக்கு, தட்டை, மனகோரம் எல்லாம் ரொம்பப் பிடிக்கும் ஆனால் இப்போதெல்லாம் சாப்பிடுவதே இல்லை...ரொம்ப அரிது. தற்போது சாப்பிடுவது என்றால் பீச் சுண்டல் போன்று செய்வது, காய்களும் பொரியும், பழ சலாட் போன்றவைதான்.
பதிலளிநீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குமுதல் படம்!!! பூனை பால் குடிக்கும் என்றுசொல்லப்படுவ்து ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வனக்கம்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்.
நீக்குஇரண்டாவது படம்....குழந்தைகள் பெரியவர்களைப் பின்பற்றுவார்கள் ஸோ பெரியவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.
பதிலளிநீக்குமூன்றாவது படம், பாவம் நம்மவர்! தண்ணீர் கொடுக்கும் அந்த மனிதர் வாழ்க வாழ்வாங்கு! நேயம்!
கீதா
:)) கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம். வாழ்க வளமுடன்.
நீக்குஅகில இந்திய பொறியாளர் நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன். நன்றி.
நீக்குகேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். உபநிஷத் விளக்கம் சிறப்பு. இது எ.பி.யை அடுத்த லெவலுக்கு எடுதுத்துச் சென்று விட்டது. நன்றி.
பதிலளிநீக்குஎல்லாம் உங்கள் ஆசீர்வாதம். கருத்துரைக்கு நன்றி.
நீக்கு//எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.// அம்மாடியோவ்!
நீக்கு:))
நீக்கு//& சிவாஜி// எனக்கும் இவரை மிகவும் பிடித்தது. வாசகர்களின் கவனத்திற்கு இது மராட்டிய வீரன் சிவாஜி,ஜிவாஜி அல்ல.
பதிலளிநீக்குஇதைத்தவிர என்னைக் கவர்ந்தவர் கரிகால் சோழன். திருச்சியிலிருந்து எங்கள் ஊருக்கு கல்லணை வழியாகத்தான் செல்ல வேண்டும். நான் இப்போதிருக்கும் கல்லணையே கரிகாலன் கட்டியது என்று நினைத்துக் கொண்டு விட்டேன்.
பாராட்டுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
நீக்கு//என்னைக் கவர்ந்த சரித்திர நாயகன் (ஆச்சரியகரமாக) சந்திர குப்த மௌரியன் - ஏனென்று தெரியாமலேயே.// அப்படி ஏனென்று தெரியாமலேயே எனக்கு பிடிக்காதவர் அசோகர். ஒன் ஃபைன் மார்னிங்க் யுத்தம் வேண்டாம் என்று அவர் முடிவு செய்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடிந்ததில்லை. பள்ளிகளில் எல்லா வருடமும் கலிங்கப் போரை அடிப்படியாக கொண்டு'புத்தம் சரணம் கச்சாமி' என்று நாடகம் போட்டு போரடித்தது ஒரு காரணமோ? என்று தோன்றும்.
பதிலளிநீக்குஹா ஹா ஹா ! Come to think of it, yes, I too feel the same way. All my school years I have seen that budhdham saranam kichchaami(!)
நீக்குநான் முதல் முதல் அசோகச் சக்கரவர்த்தியைப் பற்றித் தெரிந்து கொண்டது ஹிந்தி மத்யமா படிக்கையிலே! ஒரே அதிர்ச்சி. கொஞ்சம் அழுகை கூட வந்தது. அதே போல் தான் பள்ளியில் படிக்கையில் படித்த நேரு மாமாவும், காந்தித்தாத்தாவும் நாளடைவில் செல்வாக்கு இழந்து போக ஆரம்பித்ததும் மனசுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.
நீக்கு// உபநிஷத் விளக்கம் சிறப்பு.. //
பதிலளிநீக்குதொடர்ந்து வழங்கலாம்..
நன்றி.
நீக்கு// தொலைக்காட்சித் தொடர்கள் - பார்ப்பதே!..//
பதிலளிநீக்குதொலைக் காட்சிப் பெட்டியையே பார்ப்பதில்லை...
அது நல்ல முடிவு !!
நீக்கு// கேள்வி கேட்பதும் சுலபம் இல்லை //
பதிலளிநீக்குஅருமை... கேள்வி பிறப்பதும்...!
நன்றி.
நீக்குஅன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குநேரம் இருப்பின் மின்னஞ்சலைக் கவனிக்கவும்...
ஸ்ரீராம் தன்னுடைய கணினியில், காணாமல் போன சில கோப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இரண்டு மூன்று நாட்களாக எ பி பக்கம் அவர் வரவில்லை.
நீக்குமெயில் பார்த்து பதில் அனுப்பி விட்டேன் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குசிறப்பான பதில்கள் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகேள்விகளும், பதில்களும் எப்போதும் போல் அருமையாக உள்ளது. உபநிஷத் விளக்கம் தெளிவாக அருமையாக உள்ளது. பூரணமாக இறையை (பரமாத்மாவை) உணரும் போது கண்டிப்பாக மனதில் அமைதி நிலவும். அருமையான கேள்விகள் கேட்டவர்களுக்கும் அதற்கு தெளிவாக பதில்கள் தந்தவர்களுக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
நீக்கு//விமானத்தில் சென்றால் இருபது நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அப்படி இருக்கும்போது பேசிப் பழக எல்லாம் ஏது நேரம்? // நீண்ட தூர விமானப் பயணங்களும் உண்டே! சென்னை-மதுரை, சென்னை-திருச்சி என்றால் வேண்டுமானால் 20 நிமிஷங்களில் முடியும்.
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன் கமெண்ட் பார்க்கவும்.
நீக்குநான் பதில் சொல்லும் முன்னரே பார்த்துட்டேன். அவரோட அரபு நாடுகள் பயணத்தை விடவும் அம்பேரிக்காவுக்கெல்லாம் மணிக்கணக்கா ஆகுமே! நான் அதைத் தான் சொன்னேன். அவரும் யு.கே., பாரிஸுக்கெல்லாம் நீண்ட பயணமாகச் சென்றிருக்கலாம். அதில் எல்லாம் யாரும் அத்தனை பேசுவது இல்லை.
நீக்குActually speaking, பஹ்ரைன் துபாய் பிரயாணங்களின்போது நான் தியானத்தில் ஆழ்ந்துவிடுவேன் (என்று நம்பிக்கொள்வேன்). அவர்கள் தரும் எதையும் வாங்கிக்கொள்ள மாட்டேன் (வெஜ்ஜா இல்லை நான் வெஜ்ஜா என்றெல்லாம் தெரியாது)
நீக்குநீண்ட பயணம் என்றால் நான் ஒரு சில காணொளிகள் பார்ப்பேன். அவ்ளோதான். மற்ற நேரங்களில் ஆழ்ந்த தூக்கம்.
தாகத்தோடு தவிக்கும் குரங்காருக்குத் தண்ணீர் கொடுக்கும் நல்ல மனம் வாழ்க!
பதிலளிநீக்குகுட்டிங்க எல்லாம் அம்மாவிடம் பால் குடிக்குது போல!
குழந்தைக்கும் யோகா கற்றுக் கொடுக்க முயற்சி செய்யறார்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு// குட்டிங்க எல்லாம் அம்மாவிடம் பால் குடிக்குது போல!// படத்தை நன்றாகப் பார்க்கவும். படத்தில் இருப்பவை இரண்டு நாய்கள் ஒரு பூனை.
நீக்கும்ம்ம்ம்ம், ஆமா, இல்ல! பூனையை நான் கவனிக்கவே இல்லை. குட்டிச் செல்லங்கள் தான் கண்களில் பட்டன.
நீக்குஎதற்கும் ஒரு முறை நீங்க கண் பரிசோதனை செய்துகொள்வது உத்தமம். படத்தில் இரண்டு நாய்கள் உறங்கிக்கொண்டுள்ளன; ஒரு பூனை ஒரு நாயின் மீது நின்று, இன்னவந்தரின் மீது நடக்கலாமா என்று யோசனை செய்கிறது. வேறு குட்டிச்செல்லங்கள் எதுவும் படத்தில் இல்லை. நீங்கள் செல்லங்கள் என்று நினைப்பவை மேலே இருக்கும் நாயின் கால்களை என்று நினைக்கிறேன்.
நீக்கு:) நா.ஒ.அ.கு. அதான்.
நீக்குநொறுக்குத் தீனி எனச் சின்ன வயசிலே இருந்து கல்யாணம் ஆன வரை பழக்கம் இல்லை. கல்யாணம் ஆகி வந்ததும் இவங்க சாப்பிடற சிறுதீனியைப் பார்த்து மயக்கமே வந்தது. ஆனாலும் அதில் பாதி கூட நான் இப்போவும் சாப்பிட மாட்டேன். வீட்டில் செய்த பக்ஷணங்கள் இருந்தால் மாலை வேளை காஃபி சாப்பிடும் முன் எடுத்துப்பேன். எப்போவானும் போடும் பஜ்ஜி, போண்டாவும் இதில் அடக்கம். மற்றபடி நோ நொறுக்கு! நோ தீனி.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குநான் செய்வது, கடைகளில் வாங்குவது எல்லாமே ரொம்ப நல்லாவே இருக்கும் என்பதால் நான் நிறைய நொறுக்குத் தீனி சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்வேன்.
நீக்குMy stomoch won't cooperate. It will reject.
நீக்குபுதுசா ஏதாவது தெரிந்து கொண்டேன் எனில் சொந்தம்/நட்பு பற்றித் தெரிந்து கொள்ள நேர்ந்தது.
பதிலளிநீக்குபென்சில்/பேனாவால் மளிகை சாமான் லிஸ்ட் போடுவதோடு சரி. மத்தபடி கதை எல்லாம் எழுதுவதில்லை. :)
கருத்துரைக்கு நன்றி.
நீக்குசரித்திர நாயகர்களில் என்னைக் கவர்ந்தவர் நின்ற சீர் நெடுமாற பாண்டியன் (கூன் பாண்டியன் எனவும் அழைக்கப்பட்டான்.) திருஞானசம்பந்தரால் ஆள்கொள்ளப்பட்டவர், 63 நாயன்மாரில் ஒருத்தர், மற்றும் இவர்களுக்கு முன்னால் இருந்த பாண்டியன் நெடுஞ்செழியன் (கண்ணகி இவனிடமே நீதி கேட்டு நின்றாள்), ஆகியோர். இவர்கள் ஏற்படுத்திய அருமையான சாம்ராஜ்யத்தைக் கெட்டுக் குட்டிச்சுவர் ஆக்கியது பிற்காலப் பாண்டியர்கள்.
பதிலளிநீக்குவடக்கேயிருந்த மாலிக்காபூரை வெற்றிலை பாக்கு வைத்து வரவழைத்து கோயில்களில் கொள்ளையிடும் வழக்கத்திற்கு வழி கோலியவர்கள் இவர்களே!.
நீக்குதகவலுக்கு நன்றி.
நீக்கும்ம்ம்ம், நினைக்க நினைக்க மனசும், உடம்பும் பத்திண்டு எரியும்! :(
நீக்கு//சரிவரப் பணி செய்ய இயலாத நிலையில் அவர்கள் தொடர விழைவதால் மட்டும் பணியில் வைத்திருக்க முடியாது அல்லவா ?// முன்னெல்லாம் இந்தக் கோயில் அர்ச்சகர்கள் பரம்பரையாக மட்டுமே வந்தது. அவ்வளவு ஏன்? சுமார் ஐம்பது வருடங்கள் முன் வரையும் அப்படித் தான். இப்போது கர்நாடகாவின் பிரபலமான பல கோயில்களில் அப்படித்தான்! கேரளா, ஆந்திராவிலும் இருக்கலாம். தமிழகத்திலும் பல கோயில்களில் அப்படித்தான் இருந்தது. ஆனால் எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தைப் புகுத்தியதில் ஆகம அடிப்படைகளோ, தீக்ஷையோ பெறாதவர்கள் கூட அர்ச்சகர்கள் ஆகலாம் என்னும் கட்டாயத்தின் பேரில் தன் கண்ணைப் போல் கருதி கடவுளுக்குச் சேவை செய்யும் அர்ச்சகர்களை வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டுப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படையோ/ அர்ச்சனை பற்றியோ/மக்களுக்கு அதில் உள்ள நம்பிக்கை பற்றியோ/தீக்ஷை பற்றியோ/ஈசனிடம் பற்றுக் கொள்வது பற்றியோ தெரியுமா?
பதிலளிநீக்குஎன்ன செய்வது! காலத்தின் கோலம்.
நீக்குஈசாவஸ்ய உபநிஷத் படிச்சாப்போல் இருக்கேனு நினைச்சால், ஹிஹிஹி, ஜடாயுனு சொல்லிட்டீங்க. தமிழ் ஹிந்துவில் படிச்சிருக்கேன் போல!
பதிலளிநீக்குகொஞ்சம் போய்ப் படுத்துட்டுப் பின்னர் வரேன். கணினி மருத்துவரை எதிர்பார்த்துக் காத்திருக்கேன்.
நன்றி. மீண்டும் வருக!
நீக்குகணினி மருத்துவர் வரவே இல்லை. இனிமேல் வருவாரானும் தெரியலை. பார்ப்போம். நாளை என்பது இருக்கே!
நீக்குநம்பிக்கை கொள்வோம்.
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேற்றுக் கரெக்டா ராத்திரி சாப்பிடற நேரத்துக்கு வந்தார். இதுக்காகவே மத்தியானம் எல்லா வேலையையும் பனிரண்டு மணிக்குள்ளே முடிச்சுண்டு உட்கார்ந்திருந்தால் வரலை சரியா ஆறரைக்கு வந்தார். நல்லவேளையாக் கல்லைப் போட இருந்தேன். இஃகி,இஃகி, தோசைக்கல்லைச் சொன்னேன்.
நீக்கு:)))
நீக்கு2. சமீபத்தில் புதிதாக கற்றுக் கொண்ட விஷயம் பாட் காஸ்டிங்(POD CASTING).
பதிலளிநீக்கு3. பேனாவை தினமும் ராம நாமம் எழுத பயன்படுத்துகிறேன்.
ஆஹா. நன்று.
நீக்குநான் புடிக்ச எலியை இந்த நாய் சாப்பிட்டு விட்டதா?
பதிலளிநீக்குபிள்ளைக்கு நல்ல முன்னோடியாய் இருக்கிறாரோ?
சிம்பன்சிக்கு தாகம் தணிக்கும் நல்ல உள்ளம் வாழ்க!
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு சன் டி.வி.யில் 'சுந்தரி' என்னும் சீரியலை பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். காரணம் அந்த கதா நாயகி. வெள்ளை வெளேர் நாயகிகளுக்கு மத்தியில் கருப்பாக, பளிச்சென்று நம்மூர் பெண்(girl next door) என்று தோன்றும்படி இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார்.
பதிலளிநீக்குநல்ல விளக்க உரை. நன்றி.
நீக்கும்ம்ம்ம்ம்ம்ம் எப்படியும் இப்போ முடியாது. ஆனாலும் நீங்க உங்க ராசியைப் பத்திச் சொன்னதினாலே கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. சுந்தரி பேசற மதுரைத் தமிழ் எப்ப்ப்பூடி? அமர்க்களமா இல்லை?
நீக்குஅனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
பதிலளிநீக்குஉபனிஷத் வாக்கியங்கள் மிகப் பிடித்தது.
கேள்விகளும் பதில்களும்,
பதில்களுக்கான பதில்களும் வெகு சுவாரஸ்யம்.
பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குபடங்களும் சுவாரஸ்யம். நாய்களும் பூனையும்!!
பதிலளிநீக்குஎன்றுமே சேராது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஹாஹா,.
பாப்பா அப்பாவைப் போல
பயிற்சி செய்வது சுவை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபுதுமைகளைப் படைக்கும் இஞ்சினீயர்களுக்கும், பழமைகளைக் காக்கும் எஞ்சினீயர்களுக்கும்
பதிலளிநீக்குமனம் நிறை வாழ்த்துகள்.
வாழ்வில் புதிதாகக் கற்ற பாடம்
அமைதியான நதி என்றும்
ஆடாத ஓடம் என்று நம் உடலையோ,
வாழ்க்கையையோ நம்ப முடியாது.
ஆட்டம் கண்டபின் சீராக்குவதை விட
எச்சரிக்கையாக இருப்பதே நலம்.
நல்ல கருத்து. நன்றி.
நீக்குபேனாவை மறப்பதில்லை. பால் பாயிண்ட்
பதிலளிநீக்குஸ்கெட்சஸ் போட மிக உபயோகம்.
கைகளுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎன் கேள்விக்கும் பதில் சொன்னதற்கு மிக நன்றி.
பதிலளிநீக்குஇன்றையக் கேள்வி.
1, கர்மா....இதில் நம்பிக்கை உண்டா?
2, புனர் பூர்வ ஜன்மாக்கள் நிஜமா?
3,நம் செயல்களுக்கு (நல்லதோ/கெட்டதோ)
இந்தப் பிறவியிலேயே பதில் வினை கிடைக்குமா?
இப்போதே நன்றி சொல்லிவிடுகிறேன்:)
கேள்விகளுக்கு நன்றி. பதில் அளிப்போம்.
நீக்குமுதலாவது படம் இன்னுமா தூங்குகிறாய் ?
பதிலளிநீக்குவாயேன் விளையாட.
இரண்டாவது என்னைப் பார்த்து வடிவாக செய்யேன் அப்பா.
மூன்றாவது தண்ணி ருசியாக இல்லையே. எங்கே வாங்கினே?
கேள்வி பதில்கள் நன்று. பேனா தினமும் உண்டு பேரன் எழுத்து பழகுகிறான்:)
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் நன்று.
பதிலளிநீக்குதொலைகாட்சி சீரியல்கள் - பார்க்காமல் இருப்பதே மேல்! :) நான் தொலைகாட்சி பார்ப்பதே இல்லை.
மற்ற விஷயங்களும் நன்று. செல்லங்களின் படம் - ரசித்தேன்.