வியாழன், 16 செப்டம்பர், 2021

போயே போச்சே... போயிந்தே... இட்ஸ் கான்..

 சென்ற வார திங்கள் அன்று எனக்கு ஒரு சோகமான அனுபவம் ஏற்பட்டது!  காரணம் என் அலட்சியமும், திமிரும்தான்.

நான் எப்போதுமே வேண்டாத கோப்புகளை அழிக்க ஷிஃப்ட் டெலீட் உபயோகப்படுத்தி அழித்துப் பழக்கப்படுத்திக் கொண்டவன்.  கொழுப்புதான்.  அதைக் கற்றுக் கொண்ட இந்தப் பத்து வருடங்களில் இழப்பேதும் ஏற்பட்டதில்லை.  ஏதோ ஓரளவு கவனமாகவே இருந்திருக்கிறேன்.

கடந்த திங்கள் அன்று வெள்ளி வீடியோவில் இணைக்க டெஸ்க் டாப்பில் சேமித்து வைத்திருந்த விநாயகர் படங்களை அழிக்க முற்பட்டேன்.  ஆபீஸ் கிளம்பும் அவசரம் வேறு!

விநாயகர் அதை விரும்பவில்லை போல..  எனக்குப் பாடம் கற்பிக்க முற்பட்டார்.

ஷிஃப்ட் டெலிட் கொடுத்ததும் அது "நிசம்மாவா?  அழிச்சிடவா?" என்று கேட்ட போதாவது ஒரு பார்வை பார்த்திருக்கலாம்.  ஓவர் கான்ஃபிடன்ஸ்!  விதி...   'எஸ்' என்று கொடுத்து விட்டு வேகமாக எழ முற்பட்டேன்.  டெஸ்க்டாப்பில் பாதி ஃபைல் காணாமல்போய் வெற்றிடமாக காணப்பபட்டதும் சந்தேகப்பட்டு உட்கார்ந்து பார்த்தேன்.

ஆ....

தேடித்தேடி நான் சேமித்து வைத்திருந்த என் ஆயிரக்கணக்கான பிடிஃஎப் புத்தகங்கள், மற்றும் பிளாக்குக்கு எழுத சேமித்து வைத்திருந்த டிராஃப்ட், ஸ்க்ரீன்ஷாட்ஸ், படங்கள், குறிப்புகள் கொண்ட ஃபோல்டர் ஹோ கயா...  அது மட்டுமா?  'என் கவிதைகள்' என்று சேமித்து வைத்திருந்த 'வர்ட் ஃபைலு'ம் ஹோ கயா...

என் அலட்சியம், கவனமின்மை, திமிர் என்னவென்றால்...

இவற்றை வேறு இடத்தில், வேறு டிரைவில், ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவில் என்றெல்லாம் பேக்கப் வைத்திருந்திருக்கலாம்..  தாமதமான சூரிய நமஸ்காரம்!  ஏன், அதில் சுணக்கம் வந்ததென்றால்..  

புத்தகங்கள் நான் ஆங்காங்கே பார்க்கும்போதெல்லாம் இறக்கி சேமித்துக் கொண்டிருந்தேன்.  எனவே ஆங்காங்கே அவ்வப்போது அப்டேட் செய்ய சோம்பலாகிப் போனது.  எக்ஸ்டர்னல்;ஹார்ட் டிஸ்க் ஒன்று வைத்து அதில் வைத்திருந்தேன்.  ஓரிரு மாதங்களுக்கு முன்னால் அது ரீட் ஆகாமல் பீதியைக் கிளப்பியது.  ஏற்கெனவே ஒரு அனுபவம் அதிலும் உண்டு என்பதால் மறந்துபோய் அது ரீட் ஆனா ஒரு சமயம், அது விழித்துக்கொள்ளும் முன் அவற்றை அப்படியே கணினி, ஒயர்களை ஆட்டாமல், அசக்காமல் கணினியில் சேமித்தேன்.

அப்போது ஜாக்கிரதைக்காக நான் செய்த தவறு கண்ட்ரோல் எக்ஸ்!  ஏனென்றால் அது ரீட் ஆகாமல் போனால் ஸ்க்ராப்புக்கு அனுப்பும்போது நம் விஷயங்கள் அதில் இருக்கவேண்டாமே என்கிற மு,ஜா...   ஆனால் விதி புன்னகைத்துக் கொண்டிருந்தது தெரியவில்லை.  எனவே அங்கும் அது இப்போது கிடைக்காது காரணமில்லாமல் காரியமில்லை!

கவிதைகள் கதை என்னவென்றால், நான் எழுதிய கவிதைகளுக்கு என்னிடம் பேக்கப் கிடையாது என்பதால் சென்ற வருடமே, ஆனால் மே மாதத்திலிருந்துதான்,  அவற்றை சேர்க்க ஆரம்பித்தேன்.  முன்பல்லாம் பேஸ்புக்கில்தான் நிறைய எழுதி வெளியிட்டிருந்தேன்.  எனவே தினமும் வரும் மெமரிஸ் அப்பகுதியிலிருந்து அன்றன்றைய கவிதைகளை (2012 முதல்) சேமித்துக் கொண்டு வந்தேன்.  சென்ற வருட மத்தியில் ஒருமுறை ஸிஸ்டம் கிராஷ் ஆனது.  அப்போது அதுவரை சேமித்து வைத்திருந்தது காணாமல் போனது.  

இந்த வருடம் ஜனவரி ஒன்றிலிருந்து ஒழுங்காய் மறக்காமல் சேமித்து வந்தேன்.  சம்பவம் நடந்த நாள்வரை 90 பக்கங்கள் வந்திருந்தது.  அதில் நடுவில் நான் புதிதாய் எழுதியிருந்ததையும் போட்டு வைத்திருந்தேன்.  பேஸ்புக் சேமிப்பை முடித்துக் கொண்டு பிளாக்கிலிருந்து உட்கார்ந்து பொறுமையாய் அங்கு இருப்பவற்றை எடுக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

எனது சேமிப்புக்காக சேர்க்கத்தொடங்கி இருந்தாலும் சமீப காலமாய் அவற்றிலிருந்து கொஞ்சமாவது நல்லாயிருப்பவற்றை எடுத்து மின்னூல் வெளியிட முயற்சி செய்யலாமா என்கிற எண்ணம் துளிர் விட ஆரம்பித்திருந்தது.

அத்தனையும் போச்...  எம் ஆர் ராதா குரலில் "என் கவிதை,... என் டிராஃப்ட்,... என் சேமிப்புப் படங்கள்,... என் புத்தகங்கள் அத்தனையும் விட்டுப்போய் விட்டதே....ஏ...."

அதில் பிழைத்து வர வாய்ப்பில்லை என்று தெரிந்தும்  ஸிஸ்டம் ரெஸ்டோர் போட்டுப் பார்த்தேன்.  கூகுளில் வழி தேடினேன். என்னென்னவோ சொன்னது.  எல்கேக்கு ஒரு மெசேஜ் அனுப்பிக் கேட்டேன்.  வாய்ப்பில்லை என்பது போலதான் அவரும் சொன்னார்.  ஆனாலும் ஒரு லிங்க் அனுப்பி இருந்தார்.

என் நண்பன் ஒருவன் இதில் ஜித்தன்.  இதில் மட்டுமல்ல, பற்பல விஷயங்களிலும் ஜித்தன்.  அவனிடம் கேட்க மெசேஜ் அனுப்பி இருந்தேன்.  அவன் இரண்டு நாட்கள் கழித்துதான் பார்த்தான் என்பது வேறு விஷயம்.  

அப்புறம் என் கணினி மருத்துவருக்கு தகவல் அனுப்பினேன்.  "எடுத்துடலாம் ஸார்.." என்றார் பாசிட்டிவான குரலில்.  கொஞ்சம் நம்பிக்கை வந்ததது.

மதியம் வந்தவர் ஸ்டெல்லர் என்கிற மென்பொருளை போட்டு எடுக்கத் தொ......ட......ங்......கி.....னா.....ர்!

முதல் முஅயற்சியில் "சமீபத்தில்" என்று போட்டு எடுத்ததில் மிகச்சில பிடிஎப் புத்தகங்கள் தவிர வேறு எதையும் அது எடுக்கவில்லை.  அடுத்த முயற்சியில் 126 ஜிபி இறக்கத் தொடங்கியது.  மாலைக்கு மேல் அதை சேமிக்கத் தொடங்கினால் இரவு வரை 26 ஜிபிதான் இறங்கி இருந்தது.  மறுநாள் காலை வந்து பார்த்தபோது 'ரன் டைம் எரர்' என்று சொல்லி மூடி விட்டது.  எதுவும் கிடைக்கவில்லை.

அவ்வளவுதான்...  போயே போச்சே...  போயிந்தே...  இட்ஸ் கான் என்று விட்டாச்சு.  

இப்போது என்ன?  புத்தகங்கள் என்னென்ன சேமித்து வைத்திருந்தேனோ...   இனி மறுபடி கிடைக்கும்போது சேமிக்கத் தொடங்க வேண்டும். அவ்வப்போது கண்ணில்பட்டு, ஆங்காங்கே படித்து கிடைத்த புத்தகங்களின் பெயர் கூட நினைவில்லை.   ஒன்றிரண்டு ஞாபகம் வந்து தேடிப்போனாலோ, எரர் 404 என்கிறது!  ம்ம்ம்ம்...

கவிதைகளை மறுபடி வருகிற ஜனவரியிலிருந்து சேமிக்கத் தொடங்க வேண்டும்.  பேஸ்புக்கில் மட்டும் அந்த மெமரிஸ் பகுதியை நினைத்தபோது தேதி போட்டு தேட முடியும் என்கிற வசதி இருந்தால்....  ஹ்ம்ம்...

==============================================================================================================

இந்திரா மீதான வெறுப்பால் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அமெரிக்கா:



வாஷிங்டன்:"வங்க தேசத்தவர்கள் மீது, பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு, அமெரிக்க அதிபராக இருந்த, நிக்சன் ஆதரவுக்கரம் நீட்டினார்; அப்போதைய இந்திய பிரதமர், இந்திராவின் அதிரடி நடவடிக்கைகளால், மிரண்டு போன அமெரிக்கா, இந்தியா மீது, மும்முனை தாக்குதல் நடத்த திட்டமிட்டது' என, பிரபல வரலாற்று அறிஞர், கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில், குறிப்பிடப்பட்டு உள்ளது.

வரலாற்று ஆசிரியர் கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:

பாகிஸ்தான், 40 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கு, அப்போதைய, அமெரிக்க அதிபர், ரிச்சர்டு நிக்சன், ஆதரவு அளித்தார். சட்ட விரோதமாக, ஆயுத உதவிகளையும் அளித்தார்.இதற்கு உடந்தையாக, அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஹென்ரி கிஸ்சிங்கர் இருந்தார். ஆனால், இந்திராவின், துணிச்சல் மிக்க நடவடிக்கைகளால், வங்கதேச மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த கிஸ்சிங்கர், இந்தியா மீது, மூன்று விதமான தாக்குதல்களை நடத்த ஆயத்தமானார். அதாவது, சட்ட விரோதமாக, ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக, பாகிஸ்தானுக்கு, அமெரிக்க படைகளை அனுப்புவது, இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க, சீனாவுக்கு ரகசியமாக உதவுவது, வங்கக்கடலில், அமெரிக்க கடற்படை கப்பலை நிறுத்தி, அச்சுறுத்தலை ஏற்படுத்துவது என்பதே அந்த திட்டம்."இவற்றை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என, நிக்சனிடமும், கிஸ்சிங்கர் கேட்டுக் கொண்டார்.இவ்வாறு கேரி பாஸ் எழுதி உள்ளார்.
[ தினமலர் - செப் 12, 2013 ]

உண்மையோ... பொய்யோ... இணையத்தில் கண்ட ஃபோட்டோ... லேடியுடன் மோடி!



========================================================================================

ஃபேஸ்புக்கில் பார்த்தது..



===============================================================================================

வசீகரமான தலைப்பு!


======================================================================================

பிழைத்த கவிதைகளில் ஒன்று!

'இந்த'க் காலத்தில் 
அவர்கள் பங்களிப்பு 
என்று எதுவுமே 
இல்லாதிருப்பதுதான் 
'அந்தக் காலத்துல நான்' 
என்று தொடங்கும்
பலருடைய சோகம் 

============================================================================================

மதன்.. மதன்...


அந்த எதிர் வீட்டுக்காரர் கண்தான் படத்தில் விசேஷம்! ரெவாரெ நிற்கும் போஸ்!


பாஸிட்டிவா நினைங்க ஸார்...


ஹிஹிஹிஹி...


சொன்னா நம்பணும்!


மாத்தி யோசி! மறுநாள் போலீஸ் பார்த்து பீதியாயிருப்பாங்க!

133 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மாவிற்கு முதுகு வலி சரியாகிவிட்டதா? காலையில் வந்திருப்பதால் முழுவதும் சரியாகிவிட்டது என நினைக்கிறேன்

      நீக்கு
    2. நன்றி நெ.த. எனக்கு இப்போது மாலை 7.30.
      இனிய காலை வணக்கம் மா.
      முதுகுவலி அஜீரணத்தால் வந்தது. பத்தியம் ஒன்றே
      மருந்து.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா... வணக்கம். முதுகுவலி குறைந்தது மகிழ்ச்சி.

      நீக்கு
    4. வணக்கம் வல்லி சிம்ஹன் சகோதரி, நீங்கள் நலமடைந்தது குறித்து மிகவும் சந்தோஷம். இறைவன் எப்போதும் எல்லோருக்கும் துணையாயிருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    5. வல்லிம்மா சூப்பர்!!! உங்கள் வலி குறைந்தது சந்தோஷம்...உடல் நலன் பார்த்துக்கோங்க ரொம்ப ஸ்ட்ர்யின் இல்லாம

      கீதா

      நீக்கு
    6. Thanks Kamalama, junior Geetha,Nellai and Geethaamaa. நாக்கைக் கட்டுப்படுத்தினால் எல்லாம் சுபம்:)

      நீக்கு
  2. அபூர்வமாக கணிணியில் இப்படி நிகழ்ந்துவிடும்.

    நான் அவ்வப்போது ஒன்றுக்கு இரண்டாக external harddiskல் சேமித்துக்கொள்வேன்.

    சொந்தச் சரக்காக உள்ளவற்றைச் சேமிப்பேன் (மறக்காமல்). அவசரம் என்றால் எனக்கே மெயில் அனுப்பிக்கொள்வேன்.

    பிடிஎஃப் சேமிப்பு... வாய்ப்பு வரும்போது சேமித்துக்கொள்ளலாம். எழுதிய கதை, கவிதைகள்.. போன்ற சொந்தச் சரக்குகள்... இழந்தது மீண்டும் அதேபோல் கொண்டுவருவது மிக் கடினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இரண்டு மூன்று இடங்களில் சேமித்துக் கொண்டிருந்தால் பிழைத்திருக்கலாம்.  அலட்சியம்.  என் மேலான கோபம் இன்னமும் எனக்கு தீரவில்லை.  ஆறவில்லை.

      நீக்கு
    2. என் மேலான கோபம் இன்னமும் எனக்கு தீரவில்லை. ஆறவில்லை.//

      புரிகிறது ஸ்ரீராம். எனக்கும் இப்படி ஆச்சே நான் நொந்து என்னையே என்னை அப்படித் திட்டித் தீர்த்துக் கொண்டேன். ஆனால் நல்ல காலம் ஓரிரு ஃபைல்தான்....அதுக்கே நான் அப்படி நொந்தேன்

      உங்கள் நிலை நன்றாகவே புரிகிறது. கூடியவரை மூளையில் சேமித்திருப்பதை மீட்டெடுக்க முடிகிறதான்னு பாருங்க...ஆனால் பதிவுகள் எதைப்பற்றின்னு நினைவு இருக்க வேண்டுமே...

      கீதா

      நீக்கு
    3. மூளையில் இருப்பதை சேமிப்பதா?  அதெல்லாம் என்னைப் பொறுத்தவரை சாத்தியமே இல்லை கீதா.

      நீக்கு
    4. //மூளையில் இருப்பதை சேமிப்பதா?  அதெல்லாம் என்னைப் பொறுத்தவரை சாத்தியமே இல்லை//
      நல்ல வேளை மூளையே இல்லை என்று சொல்லாமல் இருந்தீர்கள். 

      Jayakumar

      நீக்கு
    5. ஹிஹிஹிஹி...    அதுதானே அர்த்தம்!

      நீக்கு
  3. நீங்கள் ஃபைல்களைத் தொலைத்தது சோகம். பாவம் எத்தனை நாட்களாகச் சேமித்திருக்கிறீர்கள்:(
    கவிதைகளும் தொலைந்தது இன்னும்
    வருத்தம்.
    திரும்பிக் கிடைக்குமென்றுதான் தோன்றுகிறது மா.
    இன்று எனக்குக் கூட
    இந்தக் கணினி என்னிடம் கேட்டுக்
    கொண்டே ஆர் யூ ஷ்யூர் என்று.
    ஆமாம் போன்னு சொன்ன பிறகும் எனக்கு என்ன கேட்கிறது என்றும் புரியவில்லை.
    பதில் சொல்லலைன்னால் நகரவில்லை.
    என்ன தொலைந்ததோ என்று இப்போது கவலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வல்லிம்மா...   எல்லா சேமிப்பும் போச்சு.  நாம் டெலிட் கட்டளை கொடுத்தால் அது 'நிசம்மா அழிச்சிடவா' என்று கேட்கும்.  'ஆமாம்'னா அழிச்சுடும்!

      நீக்கு
  4. பிழைத்த கவிதை நன்று.

    நன உலகில் இல்லாமல் வயதாகிவிட்டால் மனது கன உலகில் சஞ்சரிக்கத் தொடங்கி விடுகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கவிதை என்று மறுபடி பார்த்து விட்டு வந்தேன்!  அவ்வளவு ஞாபகம்.

      இளையவர்கள் வயதானவர்களை நிகழ்வுகளில் யோசனை கேட்பதில்லை, சேர்த்துக் கொள்வதில்லை.  அதான் நான் பார்த்துக்கறேன் இல்ல, நீ ரெஸ்ட் எடு மனோபாவம்!

      நீக்கு
    2. ஸ்ரீராம்... பெரியவங்க யோசனை என்ற அர்த்தத்தில் சொல்வதில்லை, அவங்க சொல்வது கட்டளை போல அமைந்துவிடுகிறது. பிறகு நம் இஷ்டப்படி மாற்றினால் அவங்க திட்டுவாங்க, அதிருப்தி அடைவாங்க, குறை சொல்வாங்க என்றெல்லாம் யோசித்து அவங்களைக் கேட்பதையே தவிர்த்துவிடறாங்க என்று தோன்றுகிறது.

      கேட்காமல் சொல்ல ஆரம்பிக்கலாம், இது ஆலோசனைதான், ஆனால் உன் இஷ்டப்படி செய்யலாம் என்பதை நாம் அவர்களுக்குக் காண்பித்துவிட்டால் (என்ன..இப்படிச் செய்யலையா? நான் மெனெக்கெட்டு சொன்னேனே..எனக்கு அப்பவே தெரியும் மாற்றிச் செய்தால் சொதப்பும் என்று... இதுகூட செய்யத் தெரியாதா என்றெல்லாம் கணைகளைத் தொடுக்கவே கூடாது)

      ஒரு வாட்சப் மெசேஜில். பெரியவர்களுக்கு முக்கிய அட்வைஸாக பத்து பாயிண்டுகள் போட்டிருந்தார்கள். அனைத்தும் ரொம்பவே ரெலெவண்ட் ஆக எனக்குத் தோன்றியது. அதில் மிக முக்கியமானது, இளையவர்கள் குடும்பத்தில் அவங்க சண்டையில் நுழையாமல், அந்த இடத்தைவிட்டே அகன்றுவிடுவது, (அல்லது நம்மிடம் பஞ்சாயத்து வந்தால், நம் ரத்தத்தைச் சாராதவர்கள் சார்பாகப் பேசணும்-இது என் அபிப்ராயம் ஹாஹா), அவங்க குழந்தை நமக்கு விளையாட்டுப் பொருள்தான், நாம் நம்மால் முடிந்ததை மட்டும் செய்யலாம், மற்றபடி அந்தக் குழந்தை, அவர்கள் குழந்தை and they are responsible, நாமல்ல என்பதை நன்றாகப் புரிந்துகொள்வது, அவங்களுக்கு இஷ்டமிருந்தால் மட்டும், அந்தக் குழந்தைக்குத் தேவையானவற்றைச் சொல்லிக்கொடுப்பது ie we are not our kid's வேலைக்காரங்க. அவங்க குடும்பம் அவங்க பார்த்துக்கணும், அவங்க என்ன கேட்டாலும், நம்மால் முடியும் வரை அதனைச் செய்து உதவியாக இருக்கணும். அந்தக் குழந்தையை அவங்க கண்டிக்கும்போது, திருத்தும்போது நம் மூக்கை அந்தப் பக்கமே நீட்டக்கூடாது. அந்தக் குழந்தை நம்மை நாடி வந்தால், நல்ல சமயத்தில் அவங்க பெற்றோர் சொல்வது சரி என்று மெதுவாகப் புரியவைக்கணும் (ஏன்னா..அந்தக் குழந்தையின் பெற்றோர் நம்மிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருப்பார்கள் ஹாஹா)

      நீக்கு
    3. கட்டளை போல சொல்பவர்கள் குறைவு.  அல்லது அவர்களுக்கு அந்த அதிகாரம் இருக்கும்.  இருக்குமிடத்து அது செல்லவும் செல்லும்.  மற்றவர்கள் யோசனை போல தயங்கித்தயங்கிச் சொல்வார்கள்.

      பஞ்சாயத்துகளில் நீங்கள் சொல்லி இருப்பது சரி!

      நீக்கு
  5. வசீகரமான தலைப்பு, பஜகோவிந்தத்தில் இருந்து உருவிய சமஸ்கிருத வார்த்தைகள் அல்லவா?

    மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதினி மேஷ கால சர்வம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...   எனக்குத் தெரியாம போச்சே...   சினிமாப் படம் பெயர் என்றால் சொல்லி இருப்பேன்!!!

      நீக்கு
    2. பெரிய குரு எனக்கு உண்டு, என்னிடம் செல்வம் உண்டு, எனக்கு நிறைய உறவினர்கள் உண்டு, நான் இளைஞன் ரொம்ப எனெர்ஜெடிக் - போன்ற கர்வங்கள் ஒரு நொடியில் காலத்தினால் மாறிவிடும். இது அந்த வரியின் அர்த்தம்

      நீக்கு
  6. அசோகமித்ரன் நினைவு - மிக அருமை... சனிக் கிழமை பகுதியில் வெளியாகி இருக்கலாம்.

    ஒருவர் நினைவை இவ்விதமாகப் போற்றுவது, இரங்கல் கூட்டங்கள் நடத்துவதைவி, மணிமண்டபங்கள் கட்டுவதைவிட மேலானது

    பதிலளிநீக்கு
  7. இந்தியாவின் ரஷ்யச் சார்பு நிலையால் (ஒருவேளை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு மனோநிலை காரணமாக இருந்திருக்கலாம்), அமைரிக்காவை பாகிஸ்தானை நெருங்க வைத்தது, இந்திய எதிர்ப்பு மனநிலை கொள்ள வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  உண்மைதான்.  ரசிக சார்பு நிலை என்பது எப்போது யாரால் மாற்றபப்ட்டது?  சோ எப்போதுமே அதை எதிர்த்துக் கொண்டே இருந்த ஞாபகம்.

      நீக்கு
    2. ரஷ்ய சார்பு நிலை என்று படிக்கவும்!

      நீக்கு
    3. நரசிம்ம ராவ் காலம்..அப்போதிலிருந்து மெதுவான மாற்றம்.. அதன் பிறகு மோடி காலத்தில் இது பெரிதும் balanced ஆக மாறியுள்ளது. அமெரிக்கா, காரியத்துக்கான நண்பன் மட்டும்தான். அவன் வியாபாரம் மட்டும்தான் அவன் குறிக்கோள். அது நிறைவேறாவிட்டால் அந்த நாட்டின் உள் விவகாரங்களில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துவான் (கூடங்குளம் போல..ஹாஹா)

      நீக்கு
    4. சந்திரசேகர் காலத்திலேயே மாறத் தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. எப்போதும் வெளி ஆள், திருமணம் செய்து வைத்தாலும் (அதற்கு அதீதமாக உதவினாலும்), டைவர்சிக்கு உதவினாலும், அந்த க்ஷணத்தில் நன்றி இருக்குமே தவிர பிற்பாடு கோபம், வெறுப்பு போன்றவையே மேலிடும். நாட்டைப் பிரித்தவர்களுக்கும் அதே கதிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் உதவி வாங்கிய நாடே நம்மிடம் விளையாடுவது கொடுமை!

      நீக்கு
    2. உள்ளூரில் என்ன நடக்கிறது? தெலுங்கானாவைப் பிரித்துக் கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசு. அவங்களுக்கு ஆந்திராவிலும் பூஜ்ஜியம், தெலுங்கானாவிலும் பூஜ்ஜியம். அவ்ளோதான் விஷயம்.

      நீக்கு
    3. மனித சுபாவம்.  தமிழ்நாடும் கர்நாடகாவும் காவிரி விஷயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் போல!

      நீக்கு
  9. எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவில் நீர் நிலை வந்தது மிகப் பெரிய விஷயம். அவரது மகனுக்கு வாழ்த்துகள். கீதாம்மாவுக்கு சந்தோஷமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. அந்தக் கால சோகம்" நல்ல கவிதை.
    இயலாமையே காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயலாமை என்பது பாதிதான். மீதி ஒதுக்கப்படும் காரணம்.

      நீக்கு
  11. அருமையான கதம்பத்தொகுப்பில்
    மனதை லேசாக்கினது மதன் அவர்களின்
    நகைச்சுவை.
    அதுவும் க்ளேர் அடிக்கப்பட்ட மாமா.
    ரங்குடுவின் நுரை நாட்டியம்:)

    பதிலளிநீக்கு
  12. கதை நன்றாக இருக்கிறது. ஒரு பக்கம் மட்டும் கொடுத்து
    ஆர்வம் கிளப்பி விட்டீர்கள் மா:(

    பதிலளிநீக்கு
  13. ஹென்றி கிஸ்ஸிங்கர் சரியான கோல்மால்
    பேர்வழி என்று அப்போது பேசப்பட்டது,
    நம்மூரில் கொண்டாடப்பட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூரில் ஏன் கொண்டாடப்பட்டார்? அவரது பாஸ் நிக்ஸன் வாட்டர்கேட் ஊழலுக்குப் பேர்போனவர்! ஊழல்-ங்கிற மூன்றெழுத்து மந்திரத்தக் கேட்டாலே நம்பாட்களுக்குக் குஷியாச்சே?

      நீக்கு
    2. அடடே.. நம்ம ஆளு, நம்ம இனம் என்பது போல ஒரு பாசம் வந்துவிடும் போல...

      நீக்கு
    3. எல்லாப் பத்திரிக்கைகளிலும் அப்போ வந்ததே. இவரை மாதிரி
      ஒரு அமைதிப் புறா கிடையாது என்று:)

      நீக்கு
    4. சண்டையா...... கூப்பிடு கிஸ்ஸிங்கரை' என்பது ஃபெமிலியர் ஃப்ரேஸ்:)

      நீக்கு
  14. ஸ்ரீராம் ரொம்ப வேதனையான விஷயம் ஃபைல்கள் எல்லாம் அழிந்தது.

    எனக்கு இப்படிக் கொத்தாக அழிந்ததில்லை.

    சரி வேஸ்ட் பின்னில் பார்த்தீர்களோ? அங்கு இருக்குமே...அங்கும் இல்லையோ நிரந்தரமாக அழி என்றதைத் தொட்டதால்?

    நான் கணினி ஷார்ட் கீஸ் பயன்படுத்துவதில்லை. பொதுவாக மௌஸ் தான். அதுவும் பார்த்து பார்த்து அழிக்க நினைப்பதைப் பார்த்து க்ளிக் செய்து பெரும்பாலும் மொத்தமாகச் செய்வதில்லை.

    எனக்குப் பெரும்பாலும் அழிபவை கம்ப்யூட்டர் க்ராஷ் ஆகும் போது ரெக்கவர் பண்ண முடியாமல் போவது என்பது ஆனால் இச்சமயம் எல்லாம் ரெக்கவர் ஆனது ஆனால் தாறுமாறாக...வேர்ட் ஃபைலில். மீண்டும் அதை ஃபேர்மாட்டிற்குக் கொண்டு வர சிரமமாக இருக்கிறது. என்றாலும் ஒவ்வொன்றையும் ஸ்பேஸ் தட்டி தட்டி கொண்டு வருகிறேன்.

    //அது ரீட் ஆகாமல் பீதியைக் கிளப்பியது. ஏற்கெனவே ஒரு அனுபவம் அதிலும் உண்டு என்பதால் மறந்துபோய் அது ரீட் ஆனா ஒரு சமயம், அது விழித்துக்கொள்ளும் முன் அவற்றை அப்படியே கணினி, ஒயர்களை ஆட்டாமல், அசக்காமல் கணினியில் சேமித்தேன்.//

    டிட்டோ டிட்டோ! எனக்கும் ஆகியிருக்கிறது இப்போதும். அதனாலேயே சில சுற்றுலாப் பயணங்கள் குறித்து எழுத முடியாமல் இருக்கிறது படங்கள் எல்லாம் அதில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய தற்காலிக டேட்டாஸை அழிக்க ஷிஃப்ட் டெலிட் கீஸ் உபயோகிப்பது என் வழக்கம்தான்.  அதுதான் இத்தனை வருடங்களில் முதன்முறையாக இப்படி ஒரு பெரு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.

      நீக்கு
    2. //அதனாலேயே சில சுற்றுலாப் பயணங்கள் குறித்து எழுத முடியாமல் // - இணையத்துக்கே பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் எட்டிப் பார்க்கிற மாதிரி இருக்கிறது (அதிலும் தினமும் கிடையாது). இதுல புது இடுகை எழுதுவேன் என்றெல்லாம் சொல்றாங்களே கீதா ரங்கன்(க்கா).. சரி சரி.. இன்னும் இரு மாதங்களில் அவர் எத்தனை இடுகைகள் எழுதுகிறார், எபியில் தி பதிவு எத்தனை எழுதுகிறார் என்று பார்க்கத்தானே போகிறேன் (இருக்கற சில நண்பர்களையும் கலாய்ப்பது நியாயமா? ஹாஹா)

      நீக்கு
    3. அவரே இருந்திருந்து இப்போதுதான் மறுபடி தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்...  அப்புறம் மறுபடி வனவாசம் சென்று விடுவார், ஜாக்கிரதை!

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. ஹென்றி கிஸ்ஸிங்கர் ஆமாம் இப்போது நினைவு வருகிறது என் மாமா (ஆசிரியர்) அவர்தான் இது பற்றி அப்போது எங்களுக்குச் சொன்னது. மற்றபடி வீட்டில் இதழ்கள் எதுவும் கிடையாதே மாமா வாசித்துவிட்டு எங்களுக்குச் சொல்வார். அப்படித் தெரிந்தவை கொஞ்சம் நினைவு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹென்றி கிஸ்ஸிங்கர் உங்கள் மாமாவா என்று கேட்டிருக்கிறார் ஏகாந்தன் ஸார்!!

      நீக்கு
  17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    நீங்கள் சேமித்த பகுதிகள், கவிதைகள், என அனைத்தும் இப்படி காணாமல் போனது மனதுக்கு வருத்தமாக உள்ளது. எத்தனை நாள் அரும்பாடுபட்டு சேர்த்த உழைப்பு. சட்டென போனது பெரும் இழப்புதான். எனக்கு ஒரு முறை இந்த டெஸ்க்டாப்பில் ஒரு ஆன்மிக பதிவு எழுதி வெளியிட போகும் தருணத்தில் இப்படி நிகழ்ந்து விட்டது. அன்று முழுவதும் அவ்வளவு வருத்தம். குழந்தைகள் அலுவலகத்திலிருந்து வந்ததும், அவர்களிடம் சொல்லி, தேடும் தொந்தரவுகளை அவர்களுக்கு நிறையவே தந்து விட்டேன்.(அவர்களால்தான் கணினியில் எழுதவே கற்று கொண்டேன்.) இப்போது என் கைப்பேசியில் தவறான தொடுதலிலும் சில காணாமல் போயிருக்கிறது.

    கவிதை நன்றாக உள்ளது. அந்நாளைய நம் உணர்வுகளை இவர்கள் மதிக்கவில்லையே என்ற சோகம் எழுவது இயல்புதானே.... இப்போது தங்களின் அருமையான எல்லா கவிதைகளும் அழிந்து விட்டதே என்ற சோகம் எனக்கும் வருகிறது. எல்லாம் உங்கள் நினைவு என்ற பெட்டகத்தில் தங்கி மீண்டும் அதே மாதிரி கிடைக்குமா?

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வெவற்றை இழந்தோம் என்று தெரிந்தால் அல்லவா அவற்றை எல்லாம் மீட்டெடுக்க!  நினைவில் இருக்காதே கமலா அக்கா...

      நீக்கு
  19. க்ணினியில் சேமிப்பு கை நழுவிப் போவது என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்..

    எனது கணினியில் இது மாதிரி ஆனதில்லை...

    மூன்றாண்டுகளுக்கு முன் ஊரில் இருந்து திரும்பும் முன் தாம்பரம் ஸ்டேஷனில் வைத்து எனது கைப் பேசியை மகனிடம் கொடுத்தேன்.. அவனும் தஞ்சைக்குத் திரும்பியதும் Format செய்து விட்டான்..
    குவைத்திற்கு வந்ததும் தான் தெரிந்தது - அதன் Note Pad ல் எழுதி வைத்திருந்த கவிதைகள் காற்றோடு கரைந்து விட்டன என்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைக் கேட்காமல் ஏன் அப்படி செய்து விட்டார் உங்கள் மகன்?  என்னென்ன வைத்திருந்தோம் என்பது கூட நினைவில் சரியாய் இருக்காது என்பதுவும் சோகம்.

      நீக்கு
  20. நகைச்சுவைகளை ரசித்தேன். குறிப்பாக, நாய் உயில்.

    பதிலளிநீக்கு
  21. நான் போட்ட கருத்து எங்கே? எனிவே.. மீண்டும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா... உங்கள் முதல் கமெண்ட் என் கண்ணில் படவில்லை.

      நீக்கு
  22. உங்கள் சேமிப்பு அத்தனையும் அழிந்து விட்டதாக?? உங்கள் நினைவில் இருக்கிறதா? நானும் நெல்லையைப் போல மெயிலில் சேமித்து விடுவேன். என் வீடியோ பதிவுகளை என் மகள் தனியாக சேமித்து வருகிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெயிலில் நான் சேர்ப்ப்பதில்லை.  மெயில்களிலேயே அவ்வப்போது நிறைய அழித்து விடுவேன்.  அங்கு ஸ்டோரேஜ் 15 ஜிபிதானே?

      நீக்கு
  23. புறக்கணிக்கப்படுவது தான் முதுமையின் சோகம்.
    மதன் ஜோக்ஸ் எப்போது சோடை போயிருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புறக்கணிக்கப்படுவது தான் முதுமையின்// - This is wrong perception. If we honestly introspect, how many decisions were taken after consulting our kids from 4th standard? We never do that and we do that only when we don't have an option (ie when they become adult and can't be ignored). அப்புறம் முதுமையில் நம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்று நாம் சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது? (என்று நான் நினைக்கிறேன்)

      நீக்கு
    2. சிறுவயதிலிருந்தே என் மீது எல்லா முடிவுகளும் திணிக்கப்பட்டதால், நான் முடிவெடுக்க திணறுவேன். அதனால் என் குழந்தைகள் மீது எந்த முடிவையும் திணித்தது கிடையாது. எந்த விஷயமாக இருந்தாலும் அதன் சாதக,பாதகங்களை அவர்களுக்கு விளக்குவேன், முடிவெடுப்பது அவர்கள்தான். புறக்கணிப்பது என்பது என்னைக் குறித்து சொல்லப்பட்டது அல்ல.

      நீக்கு
  24. இந்திரா காந்தி, நிக்ஸன், சந்திப்பு பற்றி வாட்ஜஸாப்பில் செய்தி வலம் வருகிறதே. கிஸ்ஸின்ஜருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது இல்லையா?

    பதிலளிநீக்கு
  25. ’அசோகமித்திரன் நினைவாக’//
    இது ‘செய்தி’!

    அவர் மகனா? மகன் தந்தைக்காற்றும் உதவி...

    இன்னொரு கோணம்: அதானே.. அரசாங்கம்தான் செய்திடுச்சோன்னு அதிர்ந்துட்டேன்.

    மேலும்: அதென்ன ‘நீர்க்குளம்’? நீரில்லாத இடங்களும் குளமென அழைக்கப்படுகின்றனவா குஷியோடு, தமிழ்நாட்டில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் நடுசெண்டர், கண்ணாடி க்ளாஸ் மாதிரிதான்!

      நீக்கு
    2. //நீரில்லாத இடங்களும் குளமென அழைக்கப்படுகின்றனவா குஷியோடு// பெங்களூர்ல இருப்பதால் இந்த மாதிரிலாம் யோசித்து கேள்வி கேட்கிறார் ஏகாந்தன் சார். கடும் மழைக்காலங்கள் தவிர, தமிழகத்தில் நிறைய குளங்களில் தண்ணீர் கிடையாது. சில குட்டையாகிவிடும். பல வறண்டு கிடக்கும்.

      நீக்கு
  26. அசோகமித்திரன் அவர்களின் மகன் செய்வது ஆகச் சிறந்த பணி. பாராட்டுகள். பாசிட்டிவ் செய்திக்கும் உட்படுமோ!

    அரசாங்கத்தின் கடமை...ஆனால்..இருந்தாலும் இப்படி நல்லுள்ளோம் படைத்தவர்கள் செய்வது மிகவும் நல்ல விஷயம் தான் இதெல்லாம் அரசாங்கத்தின் கண்ணில் படுமோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் அரசாங்கம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறுதானே!

      நீக்கு
  27. யொவன கர்வம் ஆமாம் தலைப்பே அழகு!

    கதை இடதுபக்கம் உள்ளது மட்டும் வாசிக்க முடிகிறது வலது பக்கம் (வாசிப்பவரின்) உள்ளது வாசிக்க இயலவில்லை.

    யார் எழுதியது? நன்றாக இருக்கிறது. இந்த ஒரு பக்கமே தலைப்புக்குள் கதை எப்போது நுழையும் என்று வாசிக்கத் தூண்டுகிறது.

    யௌவன கர்வம் என்ற சொல் பஜகோவிந்தத்தில் வரும் ஒரு வரியையும் நினைவு படுத்தியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யார் எழுதியது? //

      அதன் ஆசிரியர் மஞ்சுளா ரமேஷ்.  காலையே என் அக்கா போன் செய்து விடையைச் சொல்லி விட்டதோடு, 'அந்தப் புத்தகம் உன்னிடம் இருக்கா' என்றும் கேட்டு, இல்லை என்கிற பதிலைப் பெற்றுக்கொண்டார்!

      நீக்கு
    2. இங்கே இருக்கும் பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே என்னால் படிக்க முடிந்தது. கதை படித்த நினைவு. கொஞ்சம் மூளை வேலை செய்யாததால் கண்டுபிடிக்க முடியலை! :(

      நீக்கு
    3. ஒரு பத்தி/ அதாவது எனக்கு இடப்பக்கத்துப் பத்திகள்.

      நீக்கு
  28. 'இந்த'க் காலத்தில்
    அவர்கள் பங்களிப்பு
    என்று எதுவுமே
    இல்லாதிருப்பதுதான்
    'அந்தக் காலத்துல நான்'
    என்று தொடங்கும்
    பலருடைய சோகம் //

    நெகிழ்ச்சி ஸ்ரீராம். அது அவர்கள் ஒது/டு/க்கப்படுவதால் என்றும் சொல்லலாம் அல்லது அவர்கள் தங்களை முடக்கிக் கொள்வதால் என்றும் சொல்லலாம். இயலாமை என்று எத்தனையோ இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  எவ்வளவு விதமாக அர்த்தங்கள் எடுத்தாலும் முதுமை என்பது தனிமையோடு இணைந்து விடுகிறது!

      நீக்கு
  29. ஸ்ரீராம் டவுன் லோட் செய்வது கூடப் பிரச்சனை இல்லை. ஆனால் நம் படைப்புகள் அழிவதுதான். மிகப் பெரிய சோகம். ஏனென்றால் மீண்டும் அதே போன்று எழுத வர வேண்டுமே....மூளையிலும் ட்ரைவ் இருக்குதான் ஆனா அது எப்பவும் ஆக்டிவா இருக்கணுமே அதுவும் அழிஞ்சு அழிஞ்சுதானே போகிறது. ஆக்டிவ் ட்ரைவ் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!!! ஹூம்.

    நான் படைப்புகளை இரண்டு மூன்று இடங்களில் வைத்திருக்கிறேன். பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க், எக்ஸ்டெர்னல் என்று...மெயில் ஃபோல்டரிலும் சிலது இருக்கும். ப்ளாகர் ட்ராஃப்ட்டிலும் போட்டு வைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலையில் ஒரு சிப் பொருத்திக் கொள்ள வேண்டியதுதான்!

      நீக்கு
  30. அசோகமித்திரன் மகன் செய்திருக்கும் செய்தி கீதாக்காவுக்குப் பெருமையும், சந்தோஷமுமாக இருக்கும்!!! கீதாக்கா வந்துட்டாங்களா? பார்க்கலை மேலே போனால்தான் வந்திருக்காங்களா என்று தெரியும்..

    மதன் ஜோக்ஸ் என்றுமே ஜாலிதான். செம கற்பனை. ரசித்தேன். கார்ட்டூன் படங்களையும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. செல்லம் உயிலை மட்டும் கவ்விக் கொண்டு// ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  32. என் தம்பிகள் செய்து வரும் இந்த நல்ல விஷயம் பற்றி எங்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே தெரியும். நல்ல தொண்டுள்ளத்தோடு செய்திருக்கின்றனர். ஸ்ரீராமின் கோப்புகள் அழிந்ததில் வருத்தமாக இருக்கும். நான் எப்போவுமே 2,3 இடங்களில் வைப்பேன். கூகிள் ட்ரைவில், பென் ட்ரைவில், என வைத்துக் கொள்வேன். ஆனால் எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்காமல் டெலீட் கொடுத்தது இல்லை. நிதானமாக மத்தியானங்களில் உட்கார்ந்து தேவையா, இல்லையா என யோசித்துக் கொள்வேன். ஸ்ரீராம் அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் இதை எல்லாம் செய்திருக்க வேண்டாமோ? இனி என்ன சொல்லி என்ன செய்வது? பின்னர் வரேன். கோவிட் ஊசி போட்டுக்கொண்ட சான்றிதழைப் பிரின்ட் அவுட் எடுக்க வந்தேன். அப்படியே உட்கார்ந்துட்டேன். வேலை செய்யும் பெண்மணி இன்னிக்கும் எதிர்பாராமல் விடுமுறை. எனக்குக் கொஞ்சம் சரியாகிக் கொண்டிருக்குனு தெரிந்ததுமே லீவ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...  அவருக்கு வண்டஹ் எல்லாம்.  வேறு வேலைகளை ஒத்துக்கொண்டிருப்பார்...  நன்றி கீதா அக்கா.

      நீக்கு
    2. //அவருக்கு வண்டஹ் எல்லாம்./ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

      நீக்கு
    3. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

      நீக்கு
    4. என்ன எழுத நினைத்தேன் என்பது எனக்கும் மறந்து விட்டது!

      நீக்கு
  33. // வங்க தேசத்தவர்கள் மீது, பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு, அமெரிக்க அதிபராக இருந்த, நிக்சன் ஆதரவுக்கரம் நீட்டினார்..//

    ஆனாலும் அந்த வங்க தேசிகளில் பலர் நன்றி கெட்டவர்களாக இருப்பது தான் காலக் கொடுமை..

    வங்க தேசிகளால் பாரதம் அடைந்திருக்கும் தொல்லைகள் தான் அதிகம்..

    பதிலளிநீக்கு
  34. பைல்கள் அழிந்தது சோகம். அதனால் ஒரு சோக பாடல். 

    போனால் போகட்டும் போடா 
    இந்த கணினியில் நிலையாய் 
    இருந்த பைல்கள் ஏதடா 
    இருந்தது தெரியும் போவது எங்கே 
    போகுமிடம் நமக்கே தெரியாது.
    வந்த பைல்கள் எல்லாம் தங்கிவிட்டால்'
    கணினியில் சேமிக்க இடம் ஏது. 

    முதலில் நினைவில் வந்தது இந்த பாடல் 

    பாடுபட்டுத்  தேடிப்  பணத்தைப்  புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட  மானிடரே  கேளுங்கள்  -  கூடுவிட்டிங்
    காவிதான்  போயினபின்பு  யாரே  யநுபவிப்பார்
    பாவிகாள்  அந்தப்  பணம். 


    இந்திரா காந்தி இறந்தது 1984இல். அத்வானி 1990இல் ரதயாத்திரை நடத்தியபோது மோடி அதில் முன்னின்று நடத்தினார். அந்த போட்டோவில் உள்ள மோடி படம் போன்று உள்ளது இந்த போட்டோவில் மோடியின் முகம். இந்த போட்டோ 1983இல் எடுக்கப்பட்டது என்றாலும் அப்போது மோடிக்கு 33 வயது ஆகியிருக்கும். தாடி மற்றும் தலை நரைக்க வாய்ப்பில்லை.  மேலும் இந்திராகாந்தி RSS காரர்களை அனுக விட்டது கிடையாது. மோடி 18 வயது முதல் RSS உறுப்பினர். ஆக இந்த போட்டோ உண்மையானது இல்லை என்றே தோன்றுகிறது. 

    அந்தக்காலத்தில் என்று தொடங்கும் பலவும் 
    இந்தக்காலத்தின் இயலாமையே அன்றி 
    பங்களிப்பு இல்லாததால் இல்லை. 
    முடியும் ஆனால் முடியாது. 

    எ பி இல் மூத்த ஆசிரியர்கள் இப்போதும் பங்களிக்கிறார்கள்.சிறப்பு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்.எ பி யின் உறுப்பினர்கள் 90 சதவீதம் பேரன் பேத்தி உள்ளவர்களே. நீங்களும் இந்தக் காலத்து  ஜோக்குகளை விட்டு அந்தக்காலத்து மதன் ஜோக்குகள் வெளியிடுகிறீர்கள். ஆகவே கவிதை முரண்பாடு என்று நக்கீரன் (நான்) கூறுகிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் பொருத்தமாகத்தான் புனைந்திருக்கிறீர்கள் ஜெயக்குமார் சந்திரசேகர் சார்...

      இந்திரா-மோடி ஆராய்ச்சி சூப்பர்.  இருக்கலாமோடி என்று கேட்ட கேள்விக்கு இல்லை என்கிற பதில்!

      கவிதை முரண்பாடு என்று சொல்ல முடியாது.  எல்லா பங்களிப்பும் முழுமையாகாது.  எனினும் வாதிடாமல் உடன்படுகிறேன்.  நீங்கள் சொல்வது சரி.

      நீக்கு
  35. ஷிஃப்ட் டெலீட் அனுபவம் துயரம் தான்...
    https://www.cleverfiles.com/howto/recover-shift-deleted-files-windows.html - இதன் படி செய்தும் கோப்புகளை மீட்டி எடுத்துள்ளேன்... அதன்பின் சேமிப்பு அவசியம் என்று ஓரு பதிவு எழுதினேன்... (https://dindiguldhanabalan.blogspot.com/2017/01/How-to-add-pdf-in-blogspot.html) அதில் வலைப்பூவில் PDF இணைப்பதற்கான வழிமுறை(யும்) உண்டு...

    கணினியில் சேமிக்கும் புகைப்படங்கள், Excel, Word, PDF and notepad files போன்றவை அனைவருக்கும் பொதுவானது... (மறக்காமல் - மெனக்கெட்டு - சுருக்கமாக மடியின்மை + பல) அவ்வப்போது இவற்றை google drive-ல் தரவேற்றம் செய்து விடுவது நல்லது... திடீரென கணினிக்கு heart attack வந்து அமைதி ஆனாலும் கவலையில்லை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று பார்த்தேன் DD.  ட்ரில்லர் பற்றி சொல்லி இருப்பது நம்பிக்கை தருகிறது.  ஒரே ஒரு சந்தேகம் OS ஒரிஜினலை இல்லாவிட்டால் பிரச்னை இல்லையே...  அது ஒரு கவலை.  மேலும் என் நண்பனும் சொன்னான்.  அப்புறம் ஏதாவது மென்பொருள் ஏற்றி அது அதன்மேல் ரீரைட் ஆகிவிட்டால் அது வராது என்றான்.  

      நீக்கு
    2. எனது கணினி OS original இல்லை... ஆனாலும் அப்போது பிரச்சனை எதுவும் வரவில்லை...

      நீக்கு
  36. மேலே கேட்பொலி (mp3 files) கோப்புகளை சேர்த்துக் கொள்ளவும்... அதில் தற்போது புதிய சிக்கல்... தரவேற்றம் செய்வதில் ஒரு மாற்றம்... வலைப்பூவில் கேட்பொலி இணைப்பில் ஒரு மாற்றம்...

    இதனால் "திருக்குறளில் நகைச்சுவை" பதிவுகள் தாமதம்... அடுத்த பதிவில் இதைப்பற்றியும் எழுதி வைத்துள்ளேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடங்களுக்கு முன் ஒரே ஒருமுறை MP3 பார்மெட்டை ஒரு பதிவில் இணைத்தேன்.  அப்புறம் அந்தத் வழி நான் போவது கிடையாது.  அப்பாதுரை அடிக்கடி தன் பதிவுகளில் இந்த கேட்பொலிகளை இணைப்பார், பார்த்தி/கேட்டிருக்கிறேன்!

      நீக்கு
  37. ..ஹென்றி கிஸ்ஸிங்கர் ஆமாம் இப்போது நினைவு வருகிறது என் மாமா..//

    மாமாவா! திடுக்கிட்டேன். எபி-யில் எந்தமாதிரி வாசகர்கள் எல்லாம் இருக்கிறார்கள். கவனமாகக் கருத்திடவேண்டும் இனி...

    பதிலளிநீக்கு
  38. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு..
    நேற்றொரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றேன்.. நேரம் கிடைக்கும்போது கவனிக்கவும்..

    நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் அனுப்பி விட்டேனே... நேற்றைய பதிவிலும் சொல்லி இருந்தேன்.

      நீக்கு
  39. எனக்கு ஏற்பட்ட சோகமான அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

    வருத்தமாய்தான் இருக்கிறது. மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.
    உங்கள் கவிதைகளை முடிந்தவரை மீண்டும் தொகுத்து விடுங்கள்.

    அசோகமித்திரன் அவர்கள் மகன் ந்ல்ல காரியம் செய்து இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

    வசீகரமான தலைப்பு!, உங்கள் கவிதை, நகைசுவை பகிர்வு அனைத்தும் அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா.  மீண்டும் கவிதைகளைத் தொகுக்க நாள் பிடிக்கும்.  பார்ப்போம்.  

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  40. ப்லாகில் தொலைப்பது போன்ற செய்திகள் அத்தனயும் எனக்கு க்ரீக் அண்ட் லட்தின்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்...   பிளாக்கில் தொலைக்கவில்லை.  அங்கு தொலையவும் தொலையாது!  என் சேமிப்பில்- கணினியில் - தொலைத்தேன்.

      நீக்கு
  41. பதில்கள்
    1. பார்த்து விட்டு, இறக்கிக்கொண்டு விட்டேன் ஸார்.  பின்னர் படிக்கிறேன்.

      நீக்கு
  42. @ ஸ்ரீராம்..

    // பதில் அனுப்பி விட்டேனே... நேற்றைய பதிவிலும் சொல்லி இருந்தேன்..//

    அதென்னவோ Gmail ல் தகவல்கள் வந்தால் நினைவூட்டல் தெரிவது இல்லை.. அதனால் வழக்கம் போல குழல் விளக்காகி விட்டேன்..

    தகவலுக்கு நன்றி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  43. Recovery software பயன்படுத்தி அழித்ததை என்க முடியும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  44. சேமித்து வைத்த விஷயங்களை தற்செயலாக அழித்து விடுவது, அதுவும் நிரந்தரமாக அழித்து விடுவது.... சோகம்! பொதுவாக நான் ஒன்றிரண்டு இடங்களில் சேமித்து வைப்பேன். அவ்வப்போது Backup எடுத்துக் கொள்வது நல்ல விஷயம். இப்போதெல்லாம், பெரும்பாலும் நான் தட்டச்சு செய்வதற்கு Word பயன்படுத்துவதே இல்லை - எல்லாமே Google Docs தான்.

    துணுக்குகள் அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப்பொறுத்தவரை இப்போது கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்தான்!

      நன்றி வெங்கட்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!