திங்கள், 6 செப்டம்பர், 2021

'திங்க'க்கிழமை :      பொரி உருண்டை   - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 யாரோ, 'அட... இதெல்லாம் திங்க கிழமை பதிவுக்கு எழுதி அனுப்பலாமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று மனசுக்குள் சொல்லிக்கொள்வது எனக்குக் கேட்கிறது. என்னதான் மிகச் சுலபமான ரெசிப்பியாக இருந்தாலும், முதலில் செய்து பார்ப்பவருக்கு இதுவும் இன்னொரு இனிப்பு வகைதானே. இல்லையா?

நான் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் இங்கிருந்து அம்பிகா அல்லது வேறு கடைகளிலிருந்து பொரி உருண்டை, கடலை மிட்டாய், காராசேவு போன்றவையும் போவேன். இங்க பெங்களூர்ல condiments கடைகள் நிறைய உண்டு. நான் அவ்வப்போது தேங்காய் போளி, பொரி உருண்டை, கடலைமிட்டாய், முருக்கு போன்றவைகளை வாங்குவேன். கொரோனா காலத்தில் வெளில வாங்கவே ரொம்பவே யோசனையா இருக்கு. இதையெல்லாம் கைலதானே உருண்டை பிடிப்பாங்க என்று தோன்றுவதால், சாப்பிடவும் சங்கடமாக ஆகிடும். 


அதனாலத்தான் ஒரு நாள் வீட்டுல இருந்த பொரி பாக்கெட்டை உபயோகித்து நானே பொரி உருண்டை செய்துவிடலாம் என்று நினைத்துச் செய்தேன். எப்படிச் செய்தேன் என்பதை இங்கு எழுதுகிறேன்.


தேவையானவை

 

பொரி

வெல்லம் - 4 கப் பொரி என்றால் 1 கப் வெல்லம் போதும்.

ஏலக்காய் தூள்

தேங்காய் பற்கள் - நெய்யில் பொரித்தது - தேவை என்றால்


செய்முறை


1.  முதல்ல ஒரு பெரிய இலுப்புச்சட்டில, பொரியை கொஞ்சம் சூடுபடுத்துங்க. இது பொரி கொஞ்சம் க்ரிஸ்பியா இருக்கணும் என்பதற்காக. பிறகு ஒரு சல்லடை மூலம், அதில் உள்ள பொடிகளை எடுத்துவிடுங்க.  எவ்வளவு பொரி இருக்குன்னு அளந்துக்கோங்க. அதுக்கு நாலுல ஒரு பங்கு வெல்லம் வேணும்.


2. தேங்காய் பற்களை நெய்யில் பொரித்து எடுத்துவைத்துக்கோங்க.  பொட்டுக்கடலை சேர்க்கணும்னா, அதனையும் கொஞ்சமா சூடுபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.


3. வெல்லத்தை கடாயில் இட்டு, தண்ணீர் இட்டு கரையவைத்துக்கொள்ளவும். அதனை வடிகட்டி எடுத்துக்கொண்டு, ஒரு கடாயில் கொதிக்கவைத்து டங்கு பதம் வரவைக்கவும். (துளி பாகை  ஜலத்தில் போட்டால் உடனே கெட்டியாய்க்கொள்ளும். அதை எடுத்து கீழே போட்டால்-போடாதீங்க-ஹாஹா டங் என்ற சப்தம் வரும்)


4. வெல்லப்பாகுடன் ஏலக்காய் தூளைச் சேர்த்துக் கலக்கிவிட்டு, பொரியின்மேல் விட்டுக் கலக்கவும். 


5. கையில் நெய்யைத் தொட்டுக்கொண்டு, கலந்த பொரியை உருண்டை பிடிக்க வேண்டியதுதான்.  நெய் தொட்டுக்கொள்வது கை, சூடு பொறுக்க. அரிசி மாவைத் தொட்டுக்கொண்டும் உருண்டை பிடிக்கலாம். ஆனால் நெய்யைத் தொட்டுக்கொண்டு பிடித்தால் உருண்டை மணமாகவும் பளபள என்றும் இருக்கும். அரிசி மாவுன்னா, நிறம் டல்லா இருக்கும்.


6. உருண்டையை வேகமாகப் பிடிக்கலைனா பொரி கல்லு மாதிரி ஆயிடும். அதற்காக, சட் சட் என்று அரையும் குறையுமாக உருட்டி வைத்துவிட்டு, கடைசியில் மீண்டும் அதனை கொஞ்சம் அழுத்தி அழகிய உருண்டை பிடிக்கலாம்.  சிலர், பாகு சட் என்று கெட்டியாகிவிடக் கூடாது என்று கொஞ்சம் எலுமிச்சை சாறு, பாகை இறக்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன் கொதிக்கும் பாகில் விடுவார்கள்.


7. உருண்டை பிடிக்கும் பொருளைப் பொறுத்து, வெல்ல அளவு மாறும். பொரிக்கு 4க்கு 1 வெல்லம் என்றால், நிலக்கடலைக்கு, 2க்கு 1.
பொரி உருண்டை செய்யும்போது (என் பிறந்த நாள் அன்று செய்தேன்), மாமனார் வீட்டிற்கும் (அப்போ அவர் இருந்தார்) அனுப்பணும்னு நினைத்துத்தான் நிறைய பண்ணினேன். பண்ணின அப்புறம்தான் நினைவுக்கு வந்தது, அவர் பொரியை உணவில் சேர்ப்பதில்லை (வெளில பொரிப்பதாலும், உப்பு சேர்க்க வாய்ப்பு இருக்கு என்பதாலும்) 


 உங்களுக்கே தெரியும் இது ரொம்ப சுலபமான ரெசிப்பின்னு. இதைச் செய்துபார்க்காத பேச்சலர்ஸ் இருக்கலாம். செய்து பாருங்கள்.  இதே மெதட்ல எதை வேண்டுமானாலும் உருண்டை பிடிக்கலாம். பொட்டுக்கடலை, வறுத்த கடலை, கடலைப்பருப்பு, எள் என்று.  எதுக்கு இந்த கொரோனா காலத்துல வெளிலலாம் வாங்கிக்கிட்டு.

112 கருத்துகள்:

 1. பொரி உருண்டை, எள்ளுருண்டை, கடலை மிட்டாய், பஞ்சு மிட்டாய், வெள்ளை முறுக்கு, சவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், பெப்பெர்மிண்ட், என்று தெருவில் விற்கும் பண்டங்கள்! ஹூம் அது அந்தக்காலம். 

  பொரி உருண்டை என்றதும் பொனனார் தான் ஞாபகத்துக்கு வந்தார். அடுத்தது பொரி விளங்கா உருண்டையா? 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொருள்விளங்கா உருண்டை வந்துடுத்து போல! :)

   நீக்கு
  2. பொருள்விளங்கா உருண்டை...டிரெடிஷனல் மெதட்டில் வந்துக்கிட்டே இருக்கு. ஒரு சின்ன மிஸ்டேக்னால உருண்டை பிடிப்பதில் தவறு வந்துவிட்டது (மனைவி சொன்னதைக் கேட்கலை... அனுபவத்தில் தெரிந்துகொள்ளவேண்டியதாகிவிட்டது). அதனால் இன்னும் அனுப்பவில்லை. விரைவில் அனுப்புகிறேன்.

   நீக்கு
  3. வாங்க ஜெயகுமார் சார்...சிறுவயதை நினைவுபடுத்திவிட்டீர்கள். ஓரிரு தடவைகள்தான் சவ்வு மிட்டாய் (கையில் பல்லி அல்லது கடிகாரம் மாதிரி செய்து ஒட்டுவார்) வாங்கியிருக்கிறேன். பெப்பர்மிண்ட்-எங்க அப்பா, எனக்கு கூட்டல் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தபோது 1ம் வகுப்பிற்கும் முந்தி, மிட்டாய்களை வைத்துத்தான் எண்ணச் சொல்லிக்கொடுப்பார்... என் அப்பாவை இப்போது நினைத்துக்கொள்கிறேன்... இது நடந்தது பரமக்குடியில்... அங்க என் அப்பா ஹெட்மாஸ்டராக-முதன் முறையாக ஆனார்)

   நீக்கு
  4. பானுமதி பொருள்விளங்கா உருண்டை ஏற்கெனவே அனுப்பிச்சுட்டாங்கனு நினைக்கிறேன். :)))) நீங்க அனுப்பினால் அது டூப்ளிகேட்!

   நீக்கு
  5. ஹல்ல்ல்ல்லோ கீசா மேடம்... பொருளங்கா உருண்டை நெல்லைக்கே உரியது. வேறு மாவட்டத்தில் ஏதேனும் மாவு உருண்டையை பொருளங்கா உருண்டைன்னு சொல்லி அனுப்பினா, நெல்லை கம்பெனி பொறுப்பேற்காது. நல்ல பொருளங்கா உருண்டையை ஒருவர் அரை மணி நேரத்தில் சாப்பிட்டுவிட்டால், செய்தவருக்கு பொருளங்கா உருண்டை என்றாலே என்ன என்று தெரியாது என அர்த்தம்.

   என் பாட்டியின் காரியங்களின்போது (75-76?) எனக்கு பொருளங்கா உருண்டை கொடுத்தார்கள். அதுபோன்று கட்டியானது ருசியானது அதற்கப்புறம் எனக்குக் கிடைக்கவே இல்லை.

   நீக்கு
  6. விட்டால் சமையலே நெல்லையில் தான் பண்ணுவாங்கனு சொல்ல ஆரம்பிச்சுடுவீங்க போல! பொருள்விளங்கா உருண்டை தமிழகத்துக்கே உரியது. நெல்லைக்கு மட்டும் இல்லை. நல்லதுக்கும் வைப்பாங்க. முக்கியமாய்ப் பெண்ணைப் பிரசவத்துக்கு அழைத்துச் செல்கையில் இந்தப் பொருள்விளங்காப் பருப்புத் தேங்காய் கட்டாயம்.

   நீக்கு
  7. கீசா மேடம்...இப்போதான் இதனைப் படித்தேன்.

   நெல்லை தவிர வேறு எங்கு பொருள்விளங்கா உருண்டை கிடைக்கும்னு சொல்லுங்க பார்ப்போம். நான் பல ஊர்களுக்குச் செல்பவன்.

   நீங்க ஜம்முனு ஆனபிறகு, உங்கள் வீட்டிற்கே வந்து வாங்கிக்கொள்கிறேன் (அப்போ பார்க்கலாம் மதுரைக் காரங்களுக்கு இது தெரியுமா என்று ஹா ஹா)

   நீக்கு
  8. நீங்க பிறக்கும் முன்னரே சமைத்துப் பார் புத்தகம் எழுதின மீனாக்ஷி அம்மாள் மதுரைக்காரர் தான். மதுரை வக்கீல் மணி ஐயரின் புத்திரி. அவர் பொருள்விளங்கா உருண்டை பற்றித் தன் சமைத்துப் பார் புத்தகத்தில் குறிப்புக்கள் எப்போவோ கொடுத்திருக்கார். சுமார் நூறு வருடம் இருக்குமோ? எப்படியும் எழுபது/எண்பது வருடங்களுக்குக் குறையாது. அவர் கல்யாணம் ஆகிப் போனது தஞ்சைப் பக்கம் என்பதால் தஞ்சை ஜில்லாவின் சிறப்பு உணவுக் குறிப்புகளும் அவருடைய சமைத்துப் பார் புத்தகத்தில் கிடைக்கும். ஆகவே எது ஒன்றும் நெல்லைக்கே உரியது எனச் சொந்தம் கொண்டாடாதீர்கள். இவை எல்லாம் பாரம்பரிய உணவில் சேர்ந்தவை. ஆகவே எல்லா ஜில்லாக்காரங்களும் பண்ணுவதே!

   நீக்கு
  9. நீங்க சொல்லியிருப்பது உண்மைதான். முன்பு நெல்லைப் பகுதியும் ஒன்றுபட்ட மதுரை ஜில்லாவில் இருந்ததே.

   நீக்கு
 2. lovely lovely lovely.
  எளிமையான நொறுக்கு தீனி - யாராவது செய்து கொடுத்தால்.

  கை சூடு தான் கவலையாக இருக்கிறது :-). வேர்க்கடலை உருண்டை செய்து பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. வேர்க்கடலை = நிலக்கடலை, சரிதானே?

  நிலக்கடலை பெயர் இயற்கை என்று தோன்றுகிறது.. நினைத்துப் பார்க்கையில்.. (வேர்க்கடலைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? புதன் பதிலாளர்கள் கவனிக்க )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. i take it back.. எல்லா கடலையும் நிலக்கடலை தானே? நீர்க்கடலை வான்கடலை என்று ரகங்கள் இல்லையே? நிலக்கடலை நெல்லை வழக்கா?

   (புதன் பதிலாளர்களுக்கு அடிச்சு லாட்டரி)

   நீக்கு
  2. ஹய்யோ ஹய்யோ. நிலக்கடலை அல்லது வேர்க்கடலை தோண்டி எடுக்கப்படுவது. பூமியில் கிழங்கு போன்று இருக்கும். செடியைப் பிடுங்கி, வேரில் இருக்கும் கடலைகளைப் பறிப்பதால் வேர்க்கடலை என்றும், நிலத்தைத்தோண்டி எடுப்பதால் நிலக்கடலை   என்றும், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து முதலில் இங்கு வந்ததால் மணிலா கொட்டை என்றும் பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் GROUNDNUT என்றும் சொல்வார்கள்.

   Jayakumar

   நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
   எல்லோரும் என்றும் நலமுடன் இருக்க
   இறைவன் அருள வேண்டும்.

   நீக்கு
  4. அதிசய வருகை புரிந்துள்ள மூன்றாம் சுழி அப்பாதுரை சார்... வாங்க.

   வேர்க்கடலை உருண்டை செய்வது மிகச் சுலபம். ஆனால் அதற்கான வேர்க்கடலையை வறுத்து, தோலெடுத்து, இரண்டிரண்டாக உடைத்து (உடைக்காமலும் உருண்டை பிடிக்கலாம்).... இதுதான் கஷ்டம். அப்புறம் தோலை ஊதுகிறேன் என்று சமையலறையில் தோல் குப்பை சேர்ந்து மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கணும்.

   பிறகு வருகிறேன்...நடைப்பயிற்சி தொடரணும்..பிறகு தர்ப்பண வேலைகள்....

   நீக்கு
  5. இவ்ளோ வெசயம் கீதா ஜெயகுமார்!!! டேங்ஸுணே..

   நீக்கு
  6. இப்பல்லாம் தோல் நீக்கிய வேர்க்டலை கிடைக்குது (வசதி) :-)
   தரமான சுவையான
   கடலை உருண்டை தான் கிடைப்பதில்லை இங்கே..

   கடலை உருண்டை பர்பி சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன் எனலாம்.. ஒரு பாகெட் வாங்கினால் தீர்ந்து போகும் வரை சாப்பிட்டு அடுத்த பாகெட் எடுக்கும் வழக்கம் இருந்தது.. serial eater!!

   நீக்கு
  7. எனக்கு கடலை உருண்டை மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போ பண்ணறவங்க பெரும்பாலும் க்ளூகோஸ், சர்க்கரை இதெல்லாம் சேர்த்து சாப்பிடுபவர்கள் உடலைக் கெடுக்கறாங்க. இப்போ சமீபத்துல மகளை, சென்னையிலிருந்து வாங்கிவரச் சொல்லியிருந்தேன். 8 பாக்கெட் பக்கத்துலதான் இருக்கு

   நீக்கு
 3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 4. நேற்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்...

  இங்கே பொரி உருண்டை கிடைப்பதில்லையே - என்று..

  இந்த வாரம் பொரி உருண்டையானதால் -

  எதிர் வரும் வாரத்தில் இலந்தை வடையாக இருக்கலாம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜு சார்... எங்கள் அகத்தில் இலந்தைவடை சாப்பிடும் வழக்கம் கிடையாது. அதனால் அது வராது.

   எதிர்காலத்தில் (நம்ம பானுமதி வெங்கடேச்வரன் மேடம் அதற்குள் அனுப்பவில்லை என்றால்) கம்மர்கட், தேன் மிட்டாய் இரண்டும் செய்து, செய்முறையை அனுப்ப உத்தேசம் (இந்த வருடத்துக்குள்)

   நீக்கு
  2. கம்மர்கட் செய்தால் மிக்க்குறைவாகத்தான் செய்ய உத்தேசம். பாண்டிச்சேரியிலிருந்து நிறைய கம்மர்கட் தொடர்ந்து வாங்கிச் சென்று, சாப்பிட்டு, இரவு பல்துலக்க விட்டுப் போனதால் பற்கள் முதல்முறையாக ரிப்பேர் ஆயின. அதனால் கம்மர்கட் செய்வதற்கு மட்டும் யோசனை.

   என் பெண் சாக்லேட், பாஸ்தா-ரொம்ப அழகாக வந்திருந்தது, சமீபத்தில் செய்தா... ஆனால் கொஞ்சம் இருவருக்கும் தகராறு (ஹாஹாஹா) இருப்பதால், சமாதானம் ஆனபிறகுதான் படங்களை வாங்கி, எழுதி அனுப்பணும். அவள் கேக், சாக்லேட்..இன்னபிற (எனக்குப் பிடிக்காதவைகள்) நன்றாகச் செய்வாள். என்ன ஒண்ணு... யுத்தக் களத்தை அம்மா சரி பண்ணணும் (நான்லாம் கடுப்பாயிடுவேன்)

   நீக்கு
 5. துரையின் கேள்விக்கு அருமையாகப்
  பதில் கிடைத்தது.
  Jeyakumaar Chandrasekar அவர்களுக்கு
  மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி அமைதியான நல்வாழ்வு வாழப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 7 மணி என்பது கிட்டத்தட்ட மதியம் பக்கமில்லையோ? 5 மணிக்கே எபி கோவில் திறந்திடுமே..

   நீக்கு
 7. "நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!"
  1.முதல்லே இது என்ன பொரினு சொல்லலை. அரிசிப் பொரி? நெல் பொரி? அவல் பொரி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  2.அரிசிப் பொரி எல்லோரும் சாப்பிட மாட்டாங்க! அவல் பொரி, நெல் பொரியும் வீட்டில் பொரித்தால் தான் கார்த்திகைக்கே உருண்டை பிடிப்பாங்க. எங்க வீடுகளிலே அப்படித் தான்.

  மண் சட்டியில் மணல் போட்டு அவலையும் நெல்லையும் போட்டுப் பொரித்து எடுத்துச் சல்லடையில் சலித்து மணலை அகற்றிவிட்டுப் பின்னர் புடைத்து எடுத்துக் கொண்டு அதன் பின்னரும் இருக்கும் கற்களை அகற்றணும். நெல் பொரியானால் இருக்கும் நெல் குப்பைகளைப் பொறுக்கணும். கார்த்திகைக்கு 2,3 நாட்கள் முன்னரே ஆரம்பிக்கும் வேலை. அரிசிப் பொரி உருண்டை அநேகமாய்க் குழந்தைகளுக்கு மாலை வேளையில் கொடுக்கத்தான் பயன்படுத்துவார்கள். எங்க வீட்டில் அரிசிப் பொரியே வாங்க மாட்டாங்க. அப்போல்லாம் ரொம்ப ஆசையா இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவலையும் நெல்லையும்// ஹிஹிஹி, அவல் பொரிக்கு அவலைத் தனியாவும், நெல் பொரிக்கு நெல்லைத் தனியாவும் போட்டுப் பொரிச்சு எடுக்கணும். விட்டுப் போயிருக்கு.

   நீக்கு
  2. பொரி உருண்டைனா இதுதான். கார்த்திகைப் பொரி உருண்டை என்பது நெல் பொரியைக் குறிக்கும். அவல் பொரில உருண்டையா?

   //மண் சட்டில மணல் போட்டு// - ஐயோ... இது மாதிரி நம்மால் பண்ண முடியாதுப்பா... அதுவும் பொரி உருண்டை சாப்பிடும்போது தப்பித் தவறி ஒரு கல் அகப்பட்டாலும், அதற்கு அப்புறம் பொரி உருண்டை சாப்பிடும் ஆசையே போய்விடும்

   நீக்கு
  3. பொரி உருண்டைன்னா இதானா? சரியாப் போச்சு போங்க. நாங்கல்லாம் கார்த்திகைக்கு அவல் பொரியும், நெல் பொரியும் தான் வெல்லம் சேர்த்து உருண்டை பிடிப்போம். அவல் பொரியிலே உருண்டையாவா? மாமியார் வீட்டில் இதுக்குன்னே தனியா அவல் இடிப்பாங்க! :)))))) அவல் பொரியை எப்போதும் வறுக்கக் கூடாது என்பதால் கார்த்திகை சமயம் நிறையப் பண்ணி வைச்சுப்பாங்க. பொரி உருண்டையும் நிறையப் பண்ணுவாங்க. ஒரு நடுத்தரத் தேங்காய் அளவிலே ஒரு உருண்டை இருக்கும். மாசக்கணக்கில் வைச்சுப்பாங்க. அதோடு பொரியில் பருப்புத் தேங்காயும் இருக்கும். பெரிது பெரிதாக. அவல் பொரியில் ஒரு ஜோடி, நெல் பொரியில் ஒரு ஜோடி. அதைத் தவிர்த்து இரண்டு பொரியிலும் உருண்டைகள். கல்யாணம் பட்ட பாடு படும்.

   நீக்கு
  4. அதுக்குனு சல்லடை இருக்கு நெல்லை. அதிலே போட்டுச் சலித்தால் மண், கல், சின்னச் சின்னத் தூசிகள் வந்துடும். என்னிடம் இப்போவும் பருப்புச் சல்லடை, அரிசிச் சல்லடைனு தனித்தனியா வைச்சிருக்கேன்(எங்கேயோ) கீழே எடுக்கறாப்போல் மாவுச் சல்லடை தான்.

   நீக்கு
 8. பொரி உருண்டையைச் சாதாரணமாக
  நினைத்து விட முடியாது. சரியாகப் பாகு வைக்காவிடில்
  அத்தனையும் சொதப்பலாகிவிடும்:)
  மிக அருமையாகப் படங்களுடன்,
  சரியான அளவு கொடுத்து
  விளக்கமாகச் செய்முறை கொடுத்திருக்கும்
  அன்பு நெல்லைத்தமிழனுக்கு
  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

   எதுவுமே அளவில் அல்லது கவனத்தில் சொதப்பினால் சரியாக வராது. ஒரு குயவர் தச்சர் வேலையைப் போன்றதுதான் தவசிப்பிள்ளை வேலையும்.

   நான் பூரி மசால் நன்றாகப் பண்ணுவேன். மூன்று நாட்களுக்கு முன்பு கவனக் குறைவால் சின்சியராகச் செய்யலை. (வெறும் வெங்காயம் உருளை). பையனுக்கு மதியம் கொடுத்தனுப்ப நினைத்தபோது கொஞ்சம் ட்ரையாக இருப்பதாகத் தோன்றியதால் (நெகிழலாம் அவனுக்கு இருக்கக்கூடாதாம் வழிந்துவிடுமாம்), சட்டென கடலை மாவு கரைத்து அதில் விட்டு அடுப்பில் இரண்டு பிரட்டு பிரட்டினேன்.

   பெண், இது என்ன அப்பா கடலைப் பருப்பை அரைத்துவிட்டிருக்கா.. பச்சை வாசனையா இருக்கே என்று சொல்லவும்தான் தவறு புரிந்தது.

   நீக்கு
  2. அதனால் என்னமா. இன்னோரு நாளைக்கு நன்றாகச் செய்து விடுங்கள்.
   நல்ல கைப்பக்குவம் இருக்கிறது.கவலை இல்லை.

   நீக்கு
 9. நான் கல்யாணம் ஆகி 2 வருஷம் கழிச்சுப் பெண் பிறந்தப்புறமாத் தான் அவளுக்காக அரிசிப் பொரி வாங்கினோம். ஆனால் புக்ககத்தில் எல்லாப் பொரியும் சாப்பிடுவாங்க. அரிசிப் பொரி வாங்கியும் பல நாட்கள் ஒரு குற்ற உணர்வுடனேயே குழந்தைக்குக் கொடுத்துட்டு இருந்தேன். பின்னர் ராஜஸ்தான் வந்தப்புறமாத் தான் இந்த அரிசிப் பொரியை வைச்சுச்செய்யும் பேல் புரி, சாட் எல்லாம் தெரிய வந்தது. அங்கே வெறும் அரிசிப் பொரியை மிளகாய்த்தூள், பெருங்காயம் சேர்த்து நெய்யில் வறுத்தும் சாப்பிடுவாங்க. சென்னையில் ஒரு மாமி இந்த அரிசிப் பொரியைக் காஃபியில் போட்டுச் சாப்பிடுவாங்க. எப்படி இருக்குமோ?/இருந்திருக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான்லான் இந்தப் பொரியை சின்ன வயதில் சாப்பிட்ட நினைவே இல்லை. வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகுதான் இந்தப் பொரி இனிப்பில் ஆசை வந்தது. (சிலர், ஏதேனும் கொரிக்கணுமே என்று பொரி கடலை சாப்பிடுவாங்க).

   //அரிசிப் பொரியைக் காஃபியில் போட்டுச்// - ரசனைகள் பலவிதம். ஒருவேளை அந்தக் காப்பியை எப்படியாவது சாப்பிட்டுத் தொலைப்போம் என்று நினைத்திருப்பாரோ?

   நீக்கு
  2. //www.blogger.com refused to connect.//

   this blogger is giving trouble not letting me to comment

   நீக்கு
  3. எனக்கு தெரிஞ்ச ஒரு நாரோல் அக்கா கருப்பட்டி காப்பியில் கை முறுக்கை உடைச்சி போட்டு குடிப்பார் .ரசத்தில் அப்பளம் ஓகே ஆனா பொரி ,முறுக்கு காஃபி combo கதிகலங்க வைக்குது :)))

   நீக்கு
  4. ஏஞ்சலின்.... பலப் பல வருடங்களாக இணையத்துக்கே வரலை என்பதால், கூகுளாரோ இல்லை ப்ளாகரோ உங்களை சந்தேகப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஹாஹா.

   Tea உடன் ஏதேனும் இந்த மாதிரி சாப்பிட்டால் நல்லா இருக்கும். ஆனால் காபிலயா? அது காபியை அவமதிப்பது போல்தானே

   நீக்கு
 10. அடுத்தவாரமானும் வேறே யாரானும் சமையல் குறிப்பு எழுதி அனுப்புங்கப்பா! இல்லைனா நான் எழுதி அனுப்பிச்சுடுவேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இல்லைனா நான் எழுதி அனுப்பிச்சுடுவேன்// - எழுதி அனுப்புங்க. நான் அனுப்பி, இதோ வரும் அதோ வரும்னு நினைத்தேன். பார்த்தால் கொஞ்சம் தாமதமாக்கி தொடர்ந்து என்னுடைய செய்முறைகள் எல்லாத்தையும் ஷெட்யூல் பண்ணிட்டார் போலிருக்கு.

   அது சரி.. யார் செய்தார் என்று பார்க்காதீங்க. என்ன செய்திருக்கு என்றாவது பார்க்கலாமில்லையா?

   நீக்கு
 11. நெல்லை குத்தகைக்கு எடுத்துட்டார் எ.பி. "திங்க" பக்கத்தை! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லாச் செய்யறவங்கள்லாம், நான் பிஸி... எனக்கு பேத்தி வந்திருக்கா, ரொம்ப பிஸி.... எனக்கு கால் வலி இப்போதான் தேவலையாகிறது..ரொம்ப நேரம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து தட்டச்சு செய்யமுடியாது..... ஹேமா மேடம் ரொம்பவே பிஸி அதனால் அவங்கள்ட குறிப்பு இன்னும் வாங்க முடியலை... யாரும் அனுப்பலைனாத்தான் ஆஸ்தான வித்வான் பொறுப்பை எடுத்துப்பார் என்றெல்லாம் பலவித சாக்குப் போக்குகள் இருப்பதாலா?

   அப்படி இல்லை... ஓரிரு நாட்களில், அதுவரை ஆறு மாதங்களில் செய்திருந்து படங்கள் எடுத்திருந்தவைகளை மொத்தமாக அனுப்பிவிட்டேன்..அதுதான் காரணமாக இருக்கும். ஹாஹா

   நீக்கு
 12. @ கீதாக்கா..

  // நெல்லை குத்தகைக்கு எடுத்துட்டார் ... //

  அறுசுவைக்கு ஆஸ்தானம்..
  இப்படியான கைப்பக்குவம் நமக்கு வருவதில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்த்தால் - பாடல் வரிகள் என் நினைவுக்கு வருது..

   படங்களைப் பார்த்து ரொம்பவும் நினைச்சுக்காதீங்க. பசங்களுக்கு அவங்க அம்மா செய்வதுதான் பிடிக்கும்.

   நீக்கு
 13. அனைவருக்கும் காலை வணக்கம். நெல்லை நீங்கள் நிஜமாகவே ரொம்ப க்ரேட். இந்தக் கால பெண்களே இப்படிப்பட்ட விஷயங்களை செய்வதில்லை. உங்கள் ஆர்வமும், முனைப்பும் அதை பகிர்ந்து கொள்வதும் பாராட்டுக்குரிய விஷயங்கள்! Keep rocking!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.... என்னவோ ஒரு ஆர்வம்... ஆனா பாருங்க...நான் செய்வதைச் சாப்பிடும் கஸ்டமர்கள் வீட்டுக்குள் இல்லை. நான் 90 சதவிகிதமும் 10 சதம் மனைவியும் சாப்பிட வேண்டியதுதான். உறவினர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு இருந்தால் கொடுத்துடுவேன். பசங்களுக்கு நம்ம இனிப்பு வகை அவ்வளவாகப் பிடிக்காது (too much sweet, not good for health என்று என்ன என்னவோ சொல்வாங்க)

   நீக்கு
 14. பதில்கள்
  1. பாரம் இல்லா லட்டு - அட இது புதுமையா இருக்கே திண்டுக்கல் தனபாலன்

   நீக்கு
 15. பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி...சுலபம்தான்...ஆனால் சுத்தமா வெளியில் கிடைத்தால், வாங்கிச் சாப்பிடுவது இன்னும் சுலபம்

   நீக்கு
 16. //யாரோ, 'அட... இதெல்லாம் திங்க கிழமை பதிவுக்கு எழுதி அனுப்பலாமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று மனசுக்குள் சொல்லிக்கொள்வது எனக்குக் கேட்கிறது. என்னதான் மிகச் சுலபமான ரெசிப்பியாக இருந்தாலும், முதலில் செய்து பார்ப்பவருக்கு இதுவும் இன்னொரு இனிப்பு வகைதானே. இல்லையா?//

  ஆஆஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்ன்.. எனக்கு ஊரியூப்புக்கு இதெல்லாம் நல்லதாப் போச்சூ:)).. சூஊஊஊஊஊஊஉ பண்ணிடமாட்டீங்களே ரெசிப்பியைக் களவெடுத்தால் ஹா ஹா ஹா.. என்னோடதெல்லாம் முடிஞ்சபின்பு.. இப்பூடி எல்லாம் ஆரம்பிச்சிட வேண்டியதுதான்:).. ஆனா அதுக்கே இன்னும் 2 வருடமாகும் ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என்னதான் மிகச் சுலபமான ரெசிப்பியாக இருந்தாலும், முதலில் செய்து பார்ப்பவருக்கு இதுவும் இன்னொரு இனிப்பு வகைதானே. இல்லையா?//

   அஆவ்வ்வ் தலவீ எப்பயும் கருத்தா பேசுவாக :)
   அதீஸ் நீங்க ஒரு   ஸ்கொட்டிஷ் வில்லேஜ் ஆணீ ஸ்ஸ்ஸ்ஸ் டங் ஸ்லீப்பிங் :)) வில்லேஜ் ஞானி 

   நீக்கு
  2. //
   Angel6 செப்டம்பர், 2021 ’அன்று’ பிற்பகல் 5:43
   dheivamae ingethaan irukkingalaa :)///

   அம்மாடீஈஈ வந்திட்டாக:))

   https://amazinganimalphotos.com/wp-content/uploads/2014/11/peekaboo.jpg

   நீக்கு
  3. வாங்க அதிராமபட்டினம் (அதிராம்பட்டினம் இல்லை. எதை எழுதினாலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கூ...சும்மா பேசிப் பேசி யூ டியூபிலேயே வாழ்ந்தால் எழுதுவதே மறந்துபோகாதோ?) அதிரா.

   யூ டியூபில் உங்க செய்முறைகள், உங்க வழிகள்லயே எழுதுங்க. மற்ற செய்முறைகளைப் படித்தாலும் அதில் மானே தேனே போட்டு, ஏதோ நீங்களே நல்லூர்ல இருக்கும்போது உங்க அம்மா செய்தது, இல்லை நீங்க செய்து உங்க அம்மாவை அசத்தியது என்று அடிச்சு விடுங்கள். யூ டியூபில் இது ஒரு வசதி. உப்பு கம்மி, ஒரே எண்ணெய், காரம் மனுஷன் சாப்பிட முடியாது என்பது போல இருந்தாலும், சூப்பரா இருக்கல்லோ என்று ஒரு கொஞ்சல் மொழில சொல்லிட்டீங்கன்னா, எங்களைப்போல உங்கள் ரசிகர்கள், உண்மைதான் என்று நம்பிடுவாங்க

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கொமெண்ட் படிச்சு விழுந்து பிரண்டு சிரிச்சிட்டேன் ஹா ஹா ஹா..

   //ஏதோ நீங்களே நல்லூர்ல இருக்கும்போது உங்க அம்மா செய்தது, இல்லை நீங்க செய்து உங்க அம்மாவை அசத்தியது என்று அடிச்சு விடுங்கள்.///

   ஹா ஹா ஹா நான் எங்கே நல்லூருக்குப் போனேன்:))...

   ஹா ஹா ஹா இதுவரை செய்துபோடுவதெல்லாம் சொந்த .. தெர்ஞ்ச ரெசிப்பி என்பதால டப்பு வரல்ல:)).. புது ரெசிப்பி சிலது வீடியோ இல்லாமல் முதலில் ட்ரை பண்ணி, சரி பிழை கண்டு பிடிச்சுக் கரெக்ட் பண்ணி வச்சிருக்கிறேன்ன்.. அப்படிச் செய்யும்போது தப்பாகாதெல்லோ.. சமையலில் ஆரையும் பேய்க்காட்ட எனக்கு விருப்பமில்லை.. உண்மையையே சொல்லோணும், பின்பு நம்பிச் சமைச்சு திட்டுவினம் எல்லோ.. அதனால அதில தெளிவாக இருக்கிறேன்...

   //சூப்பரா இருக்கல்லோ என்று ஒரு கொஞ்சல் மொழில சொல்லிட்டீங்கன்னா, எங்களைப்போல உங்கள் ரசிகர்கள், உண்மைதான் என்று நம்பிடுவாங்க////

   இதென்ன இது புது வம்பாக்கிடக்கூஊஊஊஊஊஊஉ:))

   https://amazinganimalphotos.com/wp-content/uploads/2014/11/cat-hiding-in-books-2-photos-of-cat-trying-to-hide.jpg

   நீக்கு
 17. சாமீ இது எங்கள் பிளாக் தானே :)) தூங்கி எழும்பி வந்தேனா .எங்கே கால் வச்சேன்னு தெர்ல :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சலின். இது எங்கள் பிளாக்குதான். உங்களைப் பார்த்து கன காலமாகிட்டது. ஒருவேளை நீங்களும் இன்னொரு யூ டியூப் ஆரம்பிக்க வேலை பார்த்திட்டிருக்கீங்களோன்னு நினைத்தேன்.

   நீக்கு
  2. நோ நோ :)))))))) ஒரு காட்டில் ஒரு சிங்கம் தான் இருக்க முடியும் :) அது எங்க தலவீ அதீஸ் மட்டுமே :))

   நீக்கு
  3. என்னாதூஊஊஊஊஊ ஊரியூப் காடாமோ?:)).. ஹையோ ஆண்டவா எடுத்த வீச்சில எதையாவது கொழுத்தி எறிஞ்சிட்டுப் போயிடுவா:)).. பிறகு நானெல்லோ கையைப் பிடிச்சு.. காலைப்பிடிச்சு ஜமாதானமாக்கி விடவேண்டிக்கிடக்கு மக்களை:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல்ல:))

   நீக்கு
 18. படங்களை  போன்ல பார்த்தப்போ 4வது படம்  புளி சாதம் மாதிரி இருந்துச்சு :))) 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆவ்வ்வ்வ்வ்வ் இது என்ன அநியாயம்:)) ஒளிச்சு ஒளிச்செல்லோ இங்கின வந்தேன்ன்:))

   நீக்கு
  2. ஹலோவ் மேடம் :) நான் இப்பிடி தடாலடியா ஓடி வருவேன் சொல்லிட்டேன்

   நீக்கு
  3. ஏஞ்சலின்... நீங்க ஒரிஜினல் தமிழச்சிதான்.... பாத்திரத்தைப் பார்த்தாலே புளிசாதம் நினைவு வருதே.... மனுஷன் எவ்வளவு கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு பொரியையும் வெல்லப்பாகையும் கலந்திருக்கேன்... புளி சாதமாமே.. கர்ர்ர்ர்ர்ர். ஹாஹா

   நீக்கு
  4. ஹாஹாஆ :) புளியும் தயிரும் அப்பளமும் ஊறுகாயும் நமக்குள்  ஊறிப்போனவையாச்சே :)
   ஸ்ஸ் ஒரு ரகசியம் சொல்றேன் முந்த நேத்து ஒரு பெண்மணி நான் ஸ்பெனிஷானு கேட்டாங்க :) 

   நீக்கு
  5. அந்தப் பெண்மணி, உங்களை ஒரு ரெஸ்டாரண்டுக்குக் கூட்டிட்டுப் போனப்பறம் அந்த மாதிரி கேட்பாங்களா? (ஸ்பேனிஷானு?)

   நீக்கு
  6. கரெக்ட்டாப் பொயிண்டைப் பிடிச்சிட்டீங்க நெ.தமிழன் ஹா ஹா ஹா கை குடுங்கோ.. சே..சே வாணாம் மூணாஆஆஆவது அலையாமே:)).. ச்ச்சோ கும்பிட்டுக் கொள்கிறேன்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 19. ///துளி பாகை//
  தலை பாகை தெரியும் துளி பாகை என்றால் என்ன ????

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. என்னடா அதிசியமாக இருக்கு ரென்று பெரிய மனுஷிங்க இங்க வந்து அட்டகாசம் பண்ணிட்டு போயிருக்காங்க

   நீக்கு
  2. அடடா.. ட்றுத் மட்டும்தான் இங்கின எங்களை மறக்கவில்லை:)).. நெல்லைத்தமிழன் சொன்னார் ஆருமே மறக்க மாட்டினம் என கர்ர்ர்ர்ர்:)).. ஸ்ரீராம் கூட மறந்திட்டார்.. பாருங்கோ நெ.தமிழன்:))...

   அப்பாடா அஞ்சு நீங்க ஜொன்னதைக் கரீக்டாக் கொழுத்திப் போட்டிட்டனோ?:))..

   நீக்கு
 20. பொரி உருண்டை   நல்லாருக்கு .நான் இன்னிக்கு  இல்லேன்னா நாளைக்கு செய்யப்போறேன் :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீடியோ எடுத்துப் போட்டால்தான் நம்புவேன்ன்:)) இதைச் செய்தாவது டேவடைக் கிச்சினைத் தூசு டட்டுங்கோ:))

   நீக்கு
  2. அதீஸ் பேலஸ் ஓனர் அவர்களே :)அடுத்த சீஸன் மாஸ்டர் செஃப் கண்டெஸ்டண்ட் நீங்கதானாமே :) ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க :))

   நீக்கு
  3. நிச்சயம் செஞ்சு பாருங்க ஏஞ்சலின். ஆனால் தேவதை கிச்சனை தூசு தட்டினேன், அலர்ஜி ஆயிடுச்சி... இனி இன்னம் இரண்டு மாதங்களுக்கு இணையம் பக்கம் வரமாட்டேன் என்று காணாமல் போயிடாதீங்க.

   நீக்கு
  4. மாஸ்டர் செஃப் - அந்த மூணு பேரு இருந்தபோது (ஜட்ஜா..) ஆஸ்திரேலியன் மாஸ்டர் செஃப் சூப்பரா இருந்தது. அப்புறம் பார்க்கவே இல்லை. ராம்சே மற்றும் USA participants கொஞ்சம் ரஃப் ஆக இருப்பாங்க.

   நீக்கு
  5. நோ..அஞ்சு நோஓ.. முத்துராமன் மாமாட மூத்தமகன்:)) அல்லது ஜெ.ரவி அண்ணா வந்தால் மட்டும்தேன் மீ போவேனாக்கும்:)).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))..
   நான் பார்ப்பதில்லை.. எனக்கென்னமோ அது பிடிக்கவே இல்லை...

   நீக்கு
  6. //ஜெ.ரவி அண்ணா///

   🤣🤣🤣🤣omg .j.ra will leave film industry if he sees this comment

   நீக்கு
 21. // இங்கிருந்து அம்பிகா அல்லது வேறு கடைகளிலிருந்து///

  அதெப்பூடி லேடீஸ் நேம் மட்டும் நினைப்பில் இருக்குது:)).. ஏனையதெல்லாம் மறந்து போயிடுது:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊஉ:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பிகா ஸ்டோர்ஸ் என்பது கேரள (பாலக்காடுன்னு நினைக்கிறேன்) டைப் பல்பொருள் அங்காடி. அதில் பல்வேறு பொருட்கள், இஞ்சி மிட்டாய், கம்மர் கட் முதல்கொண்டு கிடைக்கும்.

   உடனே நடிகை அம்பிகா உங்க நினைவுக்கு வந்தால், நீங்க, என்னைவிட பதினைந்து வயசு பெரியவங்க...ஹாஹா

   நீக்கு
  2. //அம்பிகா ஸ்டோர்ஸ் என்பது கேரள//
   இவ்ளோ டீடெயிலா வேற தெரியுதே:)), ஆனாலும் ஏனைய கடைப்பெயர்கள் நினைவுக்கு வரல்லியே:)).. ஹையோ ஆண்டவா என் வாய்தேன் நேக்கு எடிரி:))..

   ///நீங்க, என்னைவிட பதினைந்து வயசு பெரியவங்க...ஹாஹா///
   90 வயசானாலும், இந்த வயசுப் பிரச்சனை மட்டும் முடிவுக்கு வராது போல ஹையோ ஹையோ:)).. ஒரு சுவீட் 16 உடன் போட்டி போடீனமே ஆண்டவா:))

   நீக்கு
 22. //1. முதல்ல ஒரு பெரிய இலுப்புச்சட்டில//

  இதை ஊரில நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்ன்.. இலௌப்பை மரம் என ஒன்று முன்பு இருந்ததாம், சின்ன வயசில இலுப்பங் கொட்டைகளை அடிச்சு விளையாடிய நினைவு.. ஆனா இலுப்பைச் சட்டி என்றால் எப்படி இருக்கும்... இப்பவும் கிடைக்குதோ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரும்புச் சட்டி தான்...இலுப்புச் சட்டின்னி மாறிடுச்சோ? கடாய்... இப்போ புரிந்ததா தமிழச்சி அதிரா அவர்களே

   நீங்க சொல்ற 'இலுப்பை' வேறு. ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை கேள்விப்பட்டிருக்கீங்களா?

   நீக்கு
  2. //இரும்புச் சட்டி தான்...இலுப்புச் சட்டின்னி மாறிடுச்சோ? //

   ஸ்ஸ்ஸ்ஸ் கொஸ்ஸன் கேட்டால் பதிலுக்குக் கொஸ்ஸன் கேய்க்கக்கூடா:)) கர்ர்:)).. அப்போ இரும்புச் சட்டி என்றே சொல்ல வேண்டியதுதானே:)).. அதென்ன புது ஸ்டைல் இலுப்பைச் சட்டியாமே:)).. கடாய் என்பதும் நெ தமிழன், தமிழ்நாட்டுச் சொல் வழக்கு எங்கள் நாட்டில் தெரியாத சொல் அது... நாங்கள் இரும்புச் சட்டி, வெள்ளிச் சட்டி, கல்வெள்ளிச்சட்டி.. மண்சட்டி, இப்போ நொன்ஸ்ரிக்.. இப்பூடித்தான் பேசுவோம்.. முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு இண்டநெட்டில.. கடாய் எனப் பார்த்து.. கிடாய் என்பதை மாறி எழுதிவிட்டினமோ என திடுக்கிட்டுத் தெளிஞ்சேனாக்கும்:)).. ஹா ஹா ஹா இப்பூடி என் பட்டினைத் தட்டி விட்டால்.. நிறைய ஸ்ரோறீஸ் இழுத்து விடுவேன்.. சரி போகட்டும் விடுங்கோ:))..

   நீக்கு
 23. ///டங்கு பதம் வரவைக்கவும். (துளி பாகை ஜலத்தில் போட்டால் உடனே கெட்டியாய்க்கொள்ளும். அதை எடுத்து கீழே போட்டால்-போடாதீங்க-ஹாஹா டங் என்ற சப்தம் வரும்)//

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதைப்பார்த்துச் சமைச்ச மாதிரித்தான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப சுலபம். இந்த தீபாவளிக்கு நீங்க ஒரு ஸ்வீட் செய்து போடுங்க. நான் பார்த்து கமெண்ட் போடறேன்.

   நீக்கு
  2. ///நான் பார்த்து கமெண்ட் போடறேன்.///

   இந்த வசனம் எங்கயோ இடிக்குதே ஜாமீஈஈஈஈஈ:)).. இப்போ நான் சுவீட் செய்து போடுறதோ வாணாமோ:))) ஹா ஹா ஹா

   நீக்கு
 24. ///பொரி உருண்டை செய்யும்போது (என் பிறந்த நாள் அன்று செய்தேன்///

  ஜொள்ளவே இல்ல:))

  பதிலளிநீக்கு
 25. பொரி உருண்டை நல்லா வந்திருக்குது.. வெங்கடேசப்பெருமாள் ஆப்பி ஆகியிருப்பார்.. ஆனா இந்த உருண்டை பிடிப்பதில ஒரு புரொப்பிலம்:)) என்னவெனில், பாகு பதம் பிழைச்சால்ல்.. உருண்டை நசுநசு என ஆகிடுமெல்லோ கல்லாக வராது.. சில ரவா லட்டுக்களும் அப்படித்தான்..

  பொரி அங்கு கடையில கிடைக்குதோ?.. அரிசிப்பொரிதானே?, நான் ஒரு பொருள் வாங்கி 6 மாசமாகுது:)) அதைப் பொரிச்சு, பொரி உருண்டை செய்வதற்கென:)).. ஆனா இன்னும் செய்யவில்லை.. இன்னும் ஒரு ஆறு மாசத்தால ரெசிப்பி வரலாம் அதீஸ் பலஸ் ல:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க சேனல் right directionலதான் போகுது அதிரா. அதே வழில போங்க (உங்கள் செய்முறை, garden, sea side etc.) இன்னும் பெரிய லெவலுக்கு வருவீங்க.

   ஆனால் நண்பர்கள் குறைந்துவிடுவார்கள் (இணையப் பதிவு போல வராது). உதாரணமா..சீராளன் அந்த ஏரியாவுக்கே வந்த மாதிரித் தெரியலையே

   நீக்கு
  2. //உங்க சேனல் right directionலதான் போகுது அதிரா. அதே வழில போங்க///

   மிக்க நன்றி ..மிக்க நன்றி..

   //(உங்கள் செய்முறை, garden, sea side etc.) இன்னும் பெரிய லெவலுக்கு வருவீங்க.//
   ஹா ஹா ஹா அது என்னமோ தெரியேல்லை ஆனா எனக்கு ஹப்பியாக இருக்குது..

   நட்புக்கள் குறையவில்லை..அங்கு புதியவர்கள் வருகிறார்கள் நெ தமிழன்... இங்கு போல நிறையக் கதைப்பதில்லையே தவிர, என்னிடம் வருவோரிடம் நானும் ஒழுங்காப் போகிறேன்ன்.. இப்படி அங்கும் புளொக் சிஸ்டம் தான் கொமெண்ட்டில போகுது..
   வளரும்வரை இப்படித்தான் வளர்த்தெடுக்கோணும் போல.. வளர்ந்திட்டால் பின்பு யாரும் கொமெண்ட்டைக் கவனிப்பதில்லைப்போல தெரியுது..

   சீராளன் வந்து சப்ஸ்கிரைப்பண்ணிக் கொமெண்ட்ஸ்சும் போட்டார்ர்.. தொடர்ந்து வருவதில்லை, ஆனா புளொக் போல அங்கும் பார்க்கலாம், எந்த எந்த நாட்டவர்கள் பார்க்கிறார்கள் என்பதை.. அதிலிருந்து ஓரளவுக்கு ஊகிக்கலாம், ஆரெல்லாம் பார்க்கினம் என...

   நீக்கு
 26. பொரி உருண்டை அழகாய் இருக்கிறது.
  நன்றாக வந்து இருக்கிறது.

  படங்களுடன் செய்முறை அருமை.

  பதிலளிநீக்கு
 27. சின்ன வயதில் சாப்பிட்டது இப்ப அது இங்கே கிடைத்தாலும் சாப்பிட பிடிக்கவில்லை... பொரி உருண்டைக்கு பதில் கடலைமிட்டாய்தான் என் சாய்ஸ் நெல்லைத்தமிழன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மதுரைத் தமிழன் துரை.

   உங்க ஊர்ல இது கிடைக்குதா? இந்த ஊர்ல, பல ஸ்வீட்ஸ் ஷாப்கள்ல நல்லா இருக்கும் (கிராண்ட் ஸ்நாக்ஸ் என்று பல பிராண்டுகளில்)

   நீக்கு
 28. பொரியில் பண்ணும் இந்த ஸ்வீட் உருண்டையாக பண்ணனும் என்று சட்டம் இருக்கா என்ன நெல்லைதமிழன்,, ஏன் அதை சதுரமாக செய்யக் கூடாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சதுரமா செய்யலாமே... ரொம்ப வருடங்களுக்கு முன்னால், கடலை மிட்டாயை சீப்பா விற்க, அதனுடன் பொரி கலந்து கடலைமிட்டாய் சைஸ்லயே வித்தாங்க (78ல்).

   ஆனா உங்க பின்னூட்டம் படித்த உடனேயே எனக்கு, செந்தில் சொல்லும் ஜோக்குதான் நினைவுக்கு வருது (அப்பம் என்ன வட்டமா இருக்கணும்னு சட்டமா? இது குஷ்பூ அப்பம் என்றெல்லாம் சொல்வது)

   நீக்கு
  2. அப்பூடியெண்டால் பொரிச்சதுரம் எண்டெல்லோ வரும்:))) ஹா ஹா ஹா..

   நீக்கு
  3. எப்படீல்லாம் யோசிக்கிறாங்க இந்த யூ டியூபர் அதிரா...

   நீக்கு
 29. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீதான் 100 ஊஊஊஊஊஊஊஊஉ:))

  https://www.youtube.com/watch?v=m3LlWmThK5c

  பதிலளிநீக்கு
 30. பொரி உருண்டையை விட கடலை உருண்டை பிடித்தமானது. இன்று தான் அம்மா செய்த கடலை உருண்டை சாப்பிட்டேன் நெல்லை!

  நல்ல குறிப்பு. சமையலில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் சிறப்பு. நிறைய பேருக்கு உண்பதில் ஆர்வம் இருக்கும் அளவிற்கு சமைப்பதில் இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தில்லி வெங்கட்.... ஆஹா... அம்மா இப்போதும் ஆர்வமாகச் செய்வதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய கான்சப்ட், எப்போதும் ஏதாவது சமையல் அறையில் டச் வைத்துக்கொண்டே இருக்கணும். எங்க அம்மா, ஒரு நேரத்தில் அதனைச் செய்யாததால், activeஆக இருப்பது போய், பண்ணாததால் செய்முறை மறந்தும் கடைசி 3 வருஷம் இருந்தாங்க.

   எனக்கு சமைப்பதில் இருக்கும் ஆர்வம், நான் செய்ததைச் சாப்பிடுவதில் இல்லை. ஹா ஹா.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!