செவ்வாய், 7 செப்டம்பர், 2021

சிறுகதை :  தாயிற் சிறந்த கோயில் - துரை செல்வராஜூ 

 தாயிற் சிறந்த கோயில்..

துரை செல்வராஜூ 

----------------------------------------------

இது துரை செல்வராஜூ ஸாரின் 50 வது சிறுகதை.

" மாமா.. இட்லி எடுத்துட்டு வர்றேன்.. சாப்பிட வாங்க... உங்களுக்கும் பசிக்கும்!.. "

ஜனனி குரல் கொடுத்தாள்..

வாசலில் நாற்காலியில் அமர்ந்திருந்த  சபேசன் -  " சரி..ம்மா!.. " - என்றவாறு யோசித்தார்..

' காய்கறி வாங்கிக் கொண்டு வரும்போது  - வழியில் பழனியப்பன் விடாப்பிடியாக வாங்கிக் கொடுத்த காஃபி இன்னும் நாக்கில் தித்திக்கிறது.. அரை மணி நேரத்துக்கு அப்புறம் கூட சாப்பிட்டுக் கொள்ளலாம்... ஆனாலும் இந்தப் பிள்ளைக்கு வேறு வேலை இருக்கிறதோ என்னவோ!.. '  யோசித்ததோடு நிறுத்திக் கொண்டார்.. 

ஒன்றும் சொல்லவில்லை.

அதற்குள் சாப்பாட்டு மேஜையில் புத்தம் புதிய சில்வர் தட்டை எடுத்து வைத்தாள் ஜனனி...

மேஜையில்  சின்ன வெங்காய சாம்பார், தேங்காய் சட்னி, புதினா சட்னி, மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய் எல்லாம் இருந்தன.. கூடவே செம்மஞ்சள் நிறத்தில் நெய் மணக்கும் அசோகா...

கச்சிதமாக சமைப்பதும் பரிமாறுவதும் கை வந்த கலை மருமகளுக்கு...

" வாங்க.. மாமா!... " - என்றவாறு பரிமாறுவதற்குத் தயாரானாள் ஜனனி..

" அம்மா சாப்பிட்டாங்களாம்மா?.. "

" இப்போ தான் சாப்பிட்டாங்க மாமா!... "

" சாப்பிட்டேங்க... அண்ணா!.. "  உட்பக்கத்தில் இருந்து குரல் கேட்டது..

சம்பந்திபுரம் வந்திருக்கிறார்கள்..  அதாவது ஜனனியின் அம்மா..

" சரி!.. " - என்றவாறு எழுந்து வந்தவர் மேஜையில் இருந்த கதகதப்பான வெந்நீரை ஒருவாய் பருகி விட்டு சாப்பிட ஆரம்பித்தார்...

ஒன்றரை வருடத்துக்கு முன் முழங்கால் மூட்டில் வலி ஏற்பட்ட பிறகே நாற்காலியும் மேஜையும்.. அதற்கு முன் வீட்டில் எல்லாருக்கும் ஓலைத் தடுக்கும் மனைப் பலகையும் தான்...

ஜனனி இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து ஏழு மாதங்கள் ஆகின்றன...
' மூணாம் மாசம் தாலி பெருக்கிப் போட்டுடலாம்.. ' - ன்னு கௌரி -  சபேசனின் இல்லத்தரசி - பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டிருக்க -  ' எங்க குடும்பத்து வழக்கம் இப்படித்தான்!...' - ன்னு அஞ்சாவது மாசம் தான் விசேஷம் செய்தார்கள் ஜனனியின் வீட்டார்கள்..

கௌரியம்மாள் ஒன்னும் சொல்லவில்லை..

மறுநாளுக்கு மறுநாள் மாரியம்மன் கோயிலுக்கு தம்பதிகளுடன் போனார்கள்.. அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி மஞ்சப்பட்டும் எலுமிச்சம் மாலையும் சாற்றுப்படி செய்தார்கள்...

ஜனனிக்கு சந்தோஷம்.. ன்னா சந்தோஷம்.. தாங்க முடியலை..

" ஸ்கூல் டூர்லயும் அடுத்த தெரு சுற்றுலாவுலயும் வந்து அரக்கப் பரக்க அம்மனை கும்பிட்டு இருக்கேன்... இப்படி அம்மனோட பக்கத்துல நின்னு கண்ணார தரிசிப்போம்..ன்னு கனவு கூடக் கண்டதில்லை.. அத்தே!... "

ஜனனிக்கு கண்ணெல்லாம் தண்ணி வழியுது..

கொடிமரத்துக்குப் பக்கத்தில நிக்க வச்சி  கால்ல விழுந்து கும்பிட்டதும் மாமியாருக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சி...

உள்பிரகாரத்தில பேச்சியம்மனைக் கும்பிட்ட ஜனனி ஒரு ஓரமாப் போயி பேச்சியம்மன் விபூதிய வயித்தில தடவிக் கொண்டதைப் பார்த்ததும் கௌரியம்மாளிடம் அம்மனே வந்து இறங்கி விட்டாள்..

" மா விளக்கு ஏத்தி வெச்சே..
மங்கலத்தைத் தந்திருக்கேன்..
கொடி விளக்கு ஏத்தி வெச்சே..
குடி விளங்கச் செஞ்சிருக்கேன்..
துணை விளக்கு ஏத்தி வெச்சே..
தூளி கட்ட வெச்சிருக்கேன்..
நெய் விளக்கு ஏத்தி வெச்சே..
கை நிறையத் தந்திருக்கேன்!..."

கௌரியம்மாள் இப்படிப் பேசக் கூடியவர்கள் அல்ல... ஆயினும் வார்த்தைகள் பொங்கிப் பெருகி வந்தன..

ரெண்டு பேர் கூடி கௌரியம்மாளைப் பிடித்தும் நிலை கட்ட முடியவில்லை..

உள்ளிருந்து ஐயர் வந்து திருநீறு போடும்படி ஆகிவிட்டது..

அதற்குப் பிறகு மலரும் மணமும் போல ஆகி விட்டார்கள் மாமியாரும் மருமகளும்...

ஜனனி வந்த நாளாக வீட்டில் சுபமான செய்திகளும் சந்தோஷமான அலைகளும் தான்...

ஜனனி இந்த வீட்டுக்குள் நுழைந்த நாளில் இருந்து தூபம் என்றால் கரித் துண்டுகளைப் போட்டு உண்டாக்கிய தணல் தான்... தீபம் என்றால் பசுநெய் அல்லது நல்லெண்ணய் தான்...

கம்பியூட்டர் சாம்பிராணி கத்தரிக்காய் சாம்பிராணி, பாட்டுப் பாடி கும்மி அடிக்கும் வாசனை எண்ணெய் - இதெல்லாம் ஜனனிக்கு பிடிக்காது என்றறிந்ததும் மாமியாருக்கு மகிழ்ச்சி..

' கௌரியும் ஜனனியும் ஒத்துப் போவார்களா!.. ' - என்று தவித்துக் கொண்டிருந்த சபேசன் இவற்றை எல்லாம் கண்டதும் - கொடும் வெயிலில் குளுகுளு இளநீர் குடித்தது போல் ஆகி விட்டார்...

தற்போது -   ' ரெண்டு மாசமாக முழுகாமல் இருக்கிறாள் ஜனனி.. ' - என்று அறிந்ததும் இன்னும் சந்தோஷம்..  விடியற் காலையில் பதநீர்  குடித்த மாதிரி இருக்கிறார்...

மாமனாரையும் மாமியாரையும் மிகுந்த மரியாதையுடன் நடத்திய ஜனனி - 
கோலம் போட்டு குத்து விளக்கு ஏற்றுவதில் இருந்து கொண்டைக் கடலை குருமா வைப்பது வரை ஒவ்வொன்றையும் அவர்களைக் கேட்டுக் கொண்டே செய்தாள்..

நடைமுறையில் ஏதும் மாற்றம் இருந்தால், ' எங்கள் வீட்டில் அப்படிச் செய்வோம்..  எங்கள் வீட்டில் இப்படிச் செய்வோம்!.. ' என்றெல்லாம் வெடி குண்டுகள் வீசியதில்லை...

அதே போல் பெரியவர்களும் ஜனனியைக் கலந்து கொள்ளாமல் கறிவேப்பிலை கொத்தமல்லி கூட வாங்குவதில்லை...

" மாமா.. இன்னொரு இட்லி!.. "  ஜனனியின் குரல் கேட்டு நினைவுக்குத் திரும்பினார் சபேசன்..

" சாப்பிடுங்க மாமா... சாப்பிடுங்க மாமா!.. " -  என்று பரிமாறியதில்
தன்னை மறந்து இரண்டு இட்லி அதிகமாக சாப்பிட்டதைப் போல் இருந்தது அவருக்கு..

எழுந்து கை கழுவி விட்டு வருவதற்குள் மசாலா தேநீர் பிளாஸ்க்குடன் அவர் முன்னே வந்தாள் ஜனனி...

" சரிம்மா.. நான் கோயிலுக்குப் போய்ட்டு மத்தியானமா வர்றேன்.. எதும் சேதி... ன்னா போன் பண்ணும்மா!.. "

பிளாஸ்கை கையில் வாங்கிக் கொண்டார்..

இந்தத் தெருவின் முனையிலிருக்கும் பிள்ளையார் கோயிலில் திருப்பணி நடக்கிறது... நிர்வாகக் குழுவில் இவரும் ஒருவர்... ரெண்டு மாசமா அங்கே போய் மேற்பார்வை செய்வது வழக்கமாகி இருக்கிறது...

வாசலில் இறங்கிய சபேசன் சைக்கிளில் ஏறிச் சென்றதும் வாசல் கம்பிக் கதவைப்  பூட்டி விட்டு வந்தாள் ஜனனி..

வீட்டில் ஜனனியையும் அவள் அம்மாவையும் தவிர யாரும் இல்லை..

கூடத்தின் சோபாவில் ஆசுவாசமாக அமர்ந்து கொண்ட ஜனனியின் அம்மா - 
" உன் மாமியார் எப்போ வருவாங்களாம்!.. "

சும்மா ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக ஆரம்பித்தார்கள்..

" வர்ற வெள்ளிக் கிழமையன்னைக்கு திருவாரூர்ல அவங்க அண்ணன் மகன் கல்யாணம்.. பெங்களூர் போயிருக்கிற உன்  மருமகன் நாளைக்கு வர்றாங்க... இங்கேயிருந்து நாம வியாழக்கிழமை மத்தியானமா புறப்படுறோம்..  கல்யாணம் முடிஞ்சதும்  நம்மோட சேர்ந்து வந்துடுவாங்க!... "

ஜனனி விவரித்தாள்...

" மாப்பிள்ளையும் பெங்களூர் போயி ரெண்டு நாளாகுது.. வாயும் வயிறுமா இருக்குற பொண்ண தனியா விட்டுட்டுப் போறமே ...ன்னு அறிவில்லே உன் மாமியாருக்கு?.. "

" அதான் நீ வந்திருக்கியே!.. துணைக்கு உன்னை வந்து இருக்கச் சொன்னதே அவங்க தானே... உங்கிட்ட விவரம் சொல்லிட்டுத் தானே கல்யாண வீட்டுக்குப் போனாங்க?... இப்போ வந்து குதிக்கிறே!.. "

அம்மா இப்படி பேசுவதைக் கேட்டு ஆச்சர்யம் ஜனனிக்கு...

" இருந்தாலும் இந்தக் கெழவன நம்பி?.. "

" என்னம்மா... பேச்சு ஒரு மாதிரியாப் போகுது?.. உனக்கென்ன பதினெட்டு வயசா!... அப்பாவுக்கென்ன இருவத்து நாலு வயசா!..  நீங்களும் கிழம் தானே...
அவங்க இருக்கிறப்போ அண்ணே.. அண்ணே... ங்கிறது.. இல்லாத நேரத்துல கிழவன்..ங்கிறது..   ஓயாம டீவி சீரியல் பார்த்து உம் மனசும் கெட்டுக் குட்டிச் சுவராப் போய்டுச்சு!... "

சிரித்துக் கொண்டே சொன்னாலும் உள்ளுக்குள் கோபம் எழுந்தது..

" வெளுத்ததெல்லாம் பாலா?.. உனக்கு ஒன்னும் தெரியாது ஜனனி.. அண்ணன்.. ன்னு கூப்புட்டா அண்ணன் ஆகிடுவாங்களா?.. நீ தான் அந்தக் கிழவனையும் கிழவியையும் தலைல வைச்சிக்கிட்டு ஆடுறே!.. சோளக் கஞ்சியும் கேப்பைக் கூழும் கரைச்சு ஊத்தி விரட்டி அடிக்காம வாய்க்கு வக்கணையா இட்லி அவிச்சு சட்னி தாளிச்சு அசோகா கிளறிக்கிட்டு இருக்குறே!.. இதுக்கா உன்னை இங்கே கட்டிக் கொடுத்தது?.. "

அதிர்ந்து போனாள் ஜனனி...

" நீ இப்படியும் பேசுவியா அம்மா?.. உன்னோட இன்னொரு முகமா இது?.. நாளைக்கே தம்பிக்கு கல்யாணம் நடந்து அவம் பொண்டாட்டி உனக்கும் அப்பாவுக்கும் இந்த மாதிரி செஞ்சா - அப்போ உம் முகத்தை எங்கே கொண்டு  போய் வச்சுக்குவே?.. "

மகள் இப்படிக் கேட்பாள் என்று எதிர் பார்க்கவில்லை..

" உன்னோட நல்லதுக்குத் தான் சொல்றேன்... ஊர்ல நாட்டுல நடக்காததா?... அவங்க அவங்க புள்ளை பொண்ணுக்கு கல்யாணம் ஆனதும் அவங்களா போய் முதியோர் இல்லத்துல படுத்துக்குற காலம் இது!... "

" ஓ...அப்படியா!.. அப்போ தம்பிக்கு கல்யாணம் ஆனதும் அப்பாவை அழைச்சுக்கிட்டு முதியோர் இல்லத்துக்குப் போயிடுவே.. ன்னு சொல்லு!.. "

" நீ ஏன் எடக்குமடக்கா பேசறே ஜனனி?.. வயசாகிட்டாலே உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி குறையுதாம்... சீக்கு பிணி எல்லாம் அதுனால தான் பெருகுதாம்... பச்சை உடம்புக்காரி... நாளைக்கு நீயும் உம் புள்ளையும் நோய் நொடியில்லாம  நல்லா இருக்கணுமா.. வேண்டாமா!..  உனக்கு நல்லது தானே சொல்றேன்!.. அதுக்காகவா என்னய எதுத்துப் பேசறே!.. "

- வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள் ஜனனியின் அம்மா..

" மாமா ஹை ஸ்கூல்..ல கிளார்க்கா இருந்து கஷ்டப்பட்டு - இந்த வீட்டை எடுத்துக் கட்டியிருக்காங்க... மகன் வாழணும்..  மருமக வாழணும்.. பேரப் பிள்ளைங்களும்  சந்தோஷமா வாழணும்.. ன்னு தான் இந்த வீட்டைக் கட்டியிருப்பாங்க.. இந்த வீட்டுல நான் சந்தோஷமா இருக்கறதுக்குக் காரணம் என் புருஷன் மட்டுமில்லை.. மாமா அத்தையோட   அந்த சந்தோஷமும் அவங்களோட ஆசீர்வாதங்களும் தான்!.. "

" அப்போ நம்ம வீட்டுல நீ சந்தோஷமா இருந்தது இல்லையா?.. "

" சந்தோஷம் தான்... யாரு இல்லை..ந்னு சொன்னது?.. திருவையாத்துல ஓடுற காவேரித் தண்ணி கும்பகோணத்துல  ஒரு ருசி... மயிலாடுதுறையில வேற ருசி... ஆனாலும் தண்ணி காவேரித் தண்ணி தான்... "

" போதும் நீ இலக்கணம் பேசுனது!.. நான் கேட்டதுக்குப் பதிலச் சொல்லு!... "

" பதிலா?.. இதோ சொல்றேன்.. கேட்டுக்கோ!.. இவ்ளோ பெரிய வீடு.. வீடு நெறைய சந்தோஷம்.. இதெல்லாம் கொடுத்தவங்களோட நிம்மதியில ஒரு தூசி விழக் கூடாது.. அதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன்.. இது அவங்க வீடு... அவங்க இருந்தாலும் இல்லா விட்டாலும் இது அவங்க வீடு தான்.. நான் சொல்றது உனக்குப் பிடிக்கலே...ன்னா இன்னைக்கே ஊருக்குக் கிளம்பிடும்மா!... "


கோபம் தெறித்தது ஜனனியின் கண்களில்...

கொஞ்ச நேரம் ஆகியிருக்கும்..

இறுக்கம் தளராமல் அமர்ந்திருந்த தாயின் முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது.. தாயின் அருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள் ஜனனி..

" ஏம்மா.. இப்படியெல்லாம் பேசினே!?... "

தாயின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்..

அடுத்த சில தினங்களில்  திருவாரூர் பயணம்... கல்யாணம் நல்லபடியாக நடந்து வீட்டுக்குத் திரும்பியதும் - ஜனனியின் அம்மா -

" ஏழாம் மாதம் வளைகாப்பு வைத்துக் கொள்ளலாம்!.." - என்று சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்..

மூன்றாம் நாள் ஜனனியின் வாட்ஸாப்பில் குரல் பதிவு ஒன்று...

' அம்மா தான்!.. ' - என்று மகிழ்ச்சியுடன் திறந்தாள்..

" ஜனனி... சௌக்கியமா.. அம்மா!.. மாப்பிள்ளை, அண்ணா, அத்தாச்சி எல்லாரும் சௌக்கியம் தானே!.. நான் ரொம்பவும் கொடுத்து வச்சவ... பொறந்த வீட்ல தடால்... புடால்.. ன்னு இருந்த எம் பொண்ணு புகுந்த வீட்ல எப்படி நடந்துக்குவாளோ?..  எம் மகளால அந்தப் பெரியவங்களுக்கு எந்தத் தொந்தரவும்  வந்துடக் கூடாதே.. ன்னு  தவிச்சுக்கிட்டு இருந்தேன்... அதைத் தெரிஞ்சுக்கத் தான் அன்னைக்குப் பேச்சு கொடுத்தேன்... அவங்க மேல நீ வச்சிருக்கிற பிரியம் மரியாதை எல்லாத்தையும் கண்ணாரப் பார்த்தேன்.. காதாரக் கேட்டேன்... எம்மனசு நிம்மதியாச்சு ஜனனி... எம் மகளா இருந்த ஜனனி வேற... அவங்க மருமகளா இருக்குற ஜனனி வேற.. ன்னு புரிஞ்சிக்கிட்டேன்.. அப்பாகிட்டேயும் நடந்தது எல்லாம் சொன்னேன்..  அழுதுட்டார்.. அன்பும் பாசமும் தான் உன் ரத்தத்துல ஓடித் துடிக்குது.. அந்த ரத்தத்துல தான் உன் சிசு ஊறிக் கிடக்குது... நீ எப்படி அவங்களைக் காலம் எல்லாம் வைச்சு காப்பாத்துவாயோ அதே மாதிரி உன் வயித்துல பிறக்கிற பிள்ளைகளும் உன்னையும் மாப்பிள்ளையையும் நல்லபடியா வைச்சு காப்பாத்துவாங்க... இது எங்களோட  ஆசீர்வாதம்..டா தங்கம்!... நானும் அப்பாவும் தம்பியும் அடுத்த வாரம் அங்கே வர்றோம்!.. "

ஜனனியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது...

குரல் ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்த கௌரியம்மாள் -

" வாயும் வயிறுமா இருக்கிற பொண்ணு கண் கலங்கலாமா!.."

- என்றபடி, மருமகளைத் தோளில் சாய்த்துக் கொண்டார்கள்..

ஃஃஃ

77 கருத்துகள்:

  1. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இன்று எனது ஆக்கத்தினை பதிவு செய்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அன்பின் KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு...

    இது எனது ஐம்பதாவது சிறுகதை.. மகிழ்ச்சி..

    இத்தனையும் தாங்கள் அளித்த உற்சாகத்தினால் தான் ஆயிற்று... நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிபாடுகிறீர்கள்.  சிறப்பாக கதைகள் புனைகிறீர்கள்.  பழைய விவரங்களும், ஆன்மீகத்தகவல்களும் அறிந்து வைத்திருக்கிறீர்கள்.. உங்கள் திறமையினால் நீங்கள் ஒளிவிடுகிறீர்கள்.

      நீக்கு
  5. அடேங்கப்பா!...

    அந்தப் பொண்ணு ஜனனிக்குத் தான் எத்தனை கோபம்!..

    இல்லீங்க... நான் ஒன்னும் சொல்லலை!..

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் அன்பு துரை செல்வராஜு.
    நல்ல நாளாக வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. திரு. KGG அவர்களது கை வண்ணத்திற்கு மீண்டும் நன்றி...

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கிய வாழ்வு நம்முடன் தொடர
    இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  9. துரை செல்வராஜு கதை என்றால்
    அன்பு,ஆதரவு எல்லாம் எதிர்பார்க்கலாம். இன்றும் ஏமாறவில்லை.
    நல்ல கதைக்களன்.
    மாமியார், மாமனார், சம்பந்தி,மருமகள் என்று ஒட்டு மொத்தக் குடும்பமும்
    நல்லுறவாக இருப்பதையே மனம்
    விரும்புகிறது.

    கண்ணில் கோபம் தெறிக்கும் ஜனனி படம்
    மிக அருமையாக வந்திருக்கிறது.கௌதமன் ஜியின் கைவண்ணம்
    அழகு.

    பதிலளிநீக்கு
  10. அம்மன் கோவில், அருள் கொள்ளும் கௌரி அம்மாள்,
    வயிற்றில் விபூதித் தடவிக் கொள்ளும் ஜனனி ,
    அவளை சோதித்துப் பார்க்கும் அம்மா
    எல்லோரும் அற்புதத்தில் ஆழ்த்துகிறார்கள்.

    அன்பு சூழும் உலகம். கனிவு ஒன்றையே
    காணும் மருமகள், கோயில் கட்டி மகிழும்
    சபேசன்,
    அம்மாவின் வாய்ஸ் மெயிலைச் சத்தமிட்டுப்
    படிக்கும் ஜனனி யின் நற்குணத்தை
    எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.!
    மனம் நிறை வாழ்த்துகள் அன்பு துரை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கெங்கும் குடும்பங்களில் அன்பும் அறமும் தழைத்தோங்க வேண்டும்...

      தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  11. அழகான கதையின் பாசிட்டிவ் +
    நற்குணம் மனதைக் கவர்கிறது.
    பதிவிட்டதற்கு எங்கள் ப்ளாகிற்கும்
    ஸ்ரீராமுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  13. ஜனனியின் அம்மா பேசும்போதே கதையின் முடிவை யூகித்துவிட்டாலும் நடுவில் கோயில் திருப்பணிக்கு மேற்பார்வைக்குப் போன பெரியவர் திடீரென வந்துவிடுவாரோ என்னும் திருப்பத்தையும் மனம் எதிர்பார்த்தது. ஆனால் கதை துரையோடதாச்சே! அவர் பார்வை யுதிஷ்டிரனின் பார்வை! அருமையான குடும்பக் கதை! ஐம்பதாவது கதைக்கும் சேர்த்து வாழ்த்துகள் துரை. பாராட்டுகளும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதிட்டிரன் என்று தமிழில் எழுதுங்க கீதா சாம்பசிவம் மேடம்... ய வில் தமிழ் வார்த்தை ஆரம்பிக்குமா என்ன?

      நீக்கு
    2. உங்க இஷ்டப்படி எல்லாம் தமிழைக் கொலை பண்ண முடியாது. இப்போத் தான் முகநூலில் தமிழ் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் அளிச்சுட்டு அதே மனநிலையில் வந்திருக்கேன். ஆமாம், ஜாக்கிரதை! உச்சரிப்புக்கு ஏற்றபடி தான் எழுதுவாங்க. உதிட்டிரன் எல்லாம் உங்களைப் போன்ற தனித்தமிழ் ஆர்வலர்கள் எழுதுவது.

      நீக்கு
    3. யாரது என்று கேட்க மாட்டீங்களாக்கும்? ஆரது என்பீர்களோ? யார் வந்தாங்க என்றும் கேட்க மாட்டீங்க இல்லையா? ஆரு வந்தாங்க என்பீர்களோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    4. @ அன்பின் நெல்லை..

      // மேடம்... ய வில் தமிழ் வார்த்தை ஆரம்பிக்குமா என்ன?..//

      தமிழில் ஆரம்பிக்காவிட்டால் போகின்றது.. ஒலியை வரி வடிவப்படுத்துவதில் பிழை என்ன?..

      யக்ஞராமன் என்பதை வேள்வி ராமன் என்று மொழி பெயர்த்துக் கொள்ளலாமா!..

      நீக்கு
    5. @ கீதாக்கா..

      // யாரது என்று கேட்க மாட்டீங்களாக்கும்?.. //

      ஆகா!..

      நீக்கு
    6. நெல்லைத்தமிழன் யயாதியை எப்படி சொல்வார்?

      நீக்கு
    7. 1. ஆர் என்பதுதான் தமிழ். யார் என்பது பிழை.
      2. வேற்பெறு மொழிப் பெயர்களுக்கு தமிழ் விதி பொருந்தாது.
      3. உச்சரிப்பு பிரகாரம் எழுதுவது என்பது பல மொழிகளில் இல்லை. Seen - பார்த்தான், காட்சி. ஆனால் காட்சி scene. BUT PUT GOOD QUITE QUIET குழப்பங்களை நினைவில் வையுங்கள் ராமன் லக்குமணன் தவறு. இராமன் இலக்குவணன் சரி

      கவிதை இலக்கணப்படிதீன் அமையும். உரையாடல்களில் இலக்கண மீறல் இருக்கலாம்,

      நீக்கு
    8. @கௌதமன், யயாதியை நெல்லை உயாதி என்பார். ஆரது என்பது எழுதி இருக்கக் கூடாது. அவர் கூற்றுப்படி "ஊரது"னு தான் எழுதி இருக்கணும். உச்சரிப்புப் பிரகாரமே பலரும் எழுதுகிறார்கள்/எழுதுவார்கள்/எழுதினார்கள். இவருக்குனு தனிச் சட்டம்! ம்ஹூம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    9. "யதார்த்தம்" நெல்லைக்கு உதார்த்தம்
      "யாகம்" நெல்லைக்கு ஊகம்
      "யுத்தம்" நெல்லைக்கு உத்தம்
      "யுவன்" "யுவதி" நெல்லைக்கு உவன், உவதி!
      "யோக்கியம்" யோக்கியவான்" "யோக்கியவதி" நெல்லைக்கு ஊக்கியம், ஊக்கியவான், ஊக்கியவதி!

      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    10. யாத்திரையை எப்படிச் சொல்லுவீங்க நெல்லை? ஊத்திரைனா?

      பொதுவாக "யா"வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிரந்தத்தில் வருபவை. அதனால் தனித்தமிழர்கள் மாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் சொற்களை அப்படியே உள்ளது உள்ளபடி எழுதினாலோ, உச்சரித்தாலோ தான் பொருள் சரியாக வரும்.

      நீக்கு
    11. "யமதர்மன்" "யமி" "யவனர்" ஆகியோரை எப்படிச் சொல்லுவீர்கள் நெல்லை?

      நீக்கு
    12. கீதா சாம்பசிவம் மேடம்....இவற்றில் என்னிடம் சேலஞ்ச் செய்யாதீர்கள்.

      நீங்கள் எழுதியவற்றில் எது தமிழ் என்று சொல்ல இயலுமா? அனேகமாக எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை.

      கீதா என்பதே சமஸ்கிருதம்தான். தமிழ் எழுத்தில் எழுதுவதால் தமிழாகிவிடுமா?

      கிரந்தம் என்றொரு மொழியின் காரணமே வேறு. தமிழில், சமஸ்கிருதம் போல உச்சரிப்புகள் (ka, kh, Ga, Gha) இல்லாததால், அப்படியே வடமொழியிலிருந்து, அதே சமயம் உபயோகிக்க ஒரு மொழி வேண்டும் என்பதால் கிரந்தம் உருவானது. எனக்கு கிரந்தம் 4ம் வகுப்பு படிக்கும்போதே பரிச்சயம். ஒரு வருடத்துக்கு முன்னால் திரும்பவும் கற்றுக்கொண்டேன்.

      அதனால் கிரந்தம் என்பது தனித்த மொழி கிடையாது. அதாவது கிரந்தத்தில் இந்தச் சொல் இருக்கிறது என்ற கான்சப்டே கிடையாது. அது சமஸ்கிருதத்தில் இருந்தால், கிரந்தத்தில் எழுதும்போது வந்திருக்கும்.

      நீக்கு
    13. கந்தம் - வாசனை. துர்கந்தம், ஸுகந்தம். தமிழில் கந்தம் என்பதன் வார்த்தை நாற்றம். துர்நாற்றம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பிறகு நாற்றம் என்பதற்கே துர்நாற்றம் என்று தவறாக பொருள் வழங்கி அதுவே தொடர்ந்துவிட்டது.

      'உன் வாய்ச்சுவையும் நாற்றமும்' என்பது ஆண்டாள் பாசுரம்.

      யாத்திரை என்பது யாத்ரா என்ற சமஸ்கிருதச் சொல். நித்திரை (தூக்கம் என்பது தமிழ்ச்சொல்), மாத்திரை-சமஸ்கிருதம் மாத்ரா.... இது பற்றி நிறைய எழுதலாம்.

      ஆரம்ப காலங்களில் பக்தி/திரையிசைப் பாடல்களில் நிறைய சமஸ்கிருதத்திலிருந்து வழக்கில் வந்த வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டன. பிறகு அதற்கான தமிழ் வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.

      நீக்கு
    14. தந்தை என்பது தமிழ் வார்த்தை. அதனையே 'இவர் என் தமப்பன்' என்று சொல்லும் வழக்கம் உண்டு (பழங்காலத்தில்). காலப்போக்கில் தமப்பன் என்பது தகப்பன் என்று மறுவியது. இதுபோலவே, மரதகம் என்பது தமிழ் வார்த்தை. அதுவும் உச்சரிப்புப் பிழையால் பிற்காலத்தில் மரகதம் என்று மாறியது. அதுபோலவே, ஆர் என்பதும் யார் என்று மாறியது. நேரடியாகத் தெரியும் சமஸ்கிருத வார்த்தைகளைத் தமிழில் இலக்கியத்தில் எழுதும்போது நான் கூறியதுபோல உருத்திரன், உதிட்டிரன் என்றெல்லாம் எழுதினர்.

      எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்பதே இலக்கணம் என்று நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், அதனைக் கேள்வி கேட்க முடியாது.

      கொஞ்சம் விட்டால், 'முடியாது கேள்வி அதனைக் கேட்க' என்பதே சரியான வார்த்தை என்று சொல்லிடுவீங்க போலிருக்கு.

      நீக்கு
    15. //"யமதர்மன்" "யமி" "யவனர்"// - யமி என்றால் என்ன? உமி தெரியும்.
      "யதார்த்தம்" - இயல்பு/இயல்வு என்று இருக்கும்போது எதற்கு யதார்த்தம்-சமஸ்கிருதம்?
      "யாகம்" சமஸ்கிருதம். வேள்வி என்று இருக்கும்போது உங்களுக்கு ஏன் யாகம் தேவைப்படுகிறது?
      "யுத்தம்" - போர் என்று இருக்கும்போது சமஸ்கிருத யுத்தம் எதற்கு?
      "யுவன்" "யுவதி" - இளைஞன், இளைஞி இருக்கும்போது (இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன. பேதை பெதும்பை.....வாலிபன்....) எதற்கு சமஸ்கிருதம்?
      "யோக்கியம்" யோக்கியவான்" "யோக்கியவதி" - நேர்மை, நேர்மையானவன், நேர்மையானவள் இருக்கும்போது எதற்கு சமஸ்கிருத வார்த்தை?

      பரிதி இருக்கும்போது சூரியன் எதற்கு? மதி இருக்க சந்திரன் எதற்கு? இவையெல்லாம் தமிழில் கலந்துவிட்ட சமஸ்கிருத வார்த்தைகள்.

      நீக்கு
    16. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

      இடையில் தமிழில் சொல் ஆரச்ய்ச்சி.. அருமை..

      நன்றியக்கா..

      நீக்கு
  14. முகத்தை மட்டும் கடன் வாங்கிட்டு மற்றதைக் கேஜிஜி சார் வரைந்திருக்காரோ என்னும் எண்ணம் வந்தது. படம் அருமை. வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் ஜனனி! வாழ்த்துகள் கேஜீ சார்.

    பதிலளிநீக்கு
  15. அன்பின் ஸ்ரீராம், வல்லியம்மா மற்றும் கீதாக்கா அனைவருக்கும் நன்றி..

    வேலைக்கு நேரமாகி விட்டது...
    மதியத்துக்குப் பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  16. சிறப்பான சிறுகதை. அம்மா, ஜனனியின் மனதைக் கலைப்பதுபோல இருப்பதைக் கண்டு, இதெல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக நடப்பதுதானே என்று நினைத்துக்கொண்டேன். பெண்கள், முதல்ல தனிவீட்டுக்குத்தானே போறோம், சொந்த வீடுதானே, லக்கேஜ்லாம் (கணவன் பெற்றோர்) வரமாட்டாங்கள் இல்லையா என்றெல்லாம்தான் கண்டிஷன் போடுவதைப் படிக்கிறேன்.

    கடைசியில் ட்விஸ்ட் கொடுத்து கதையை நன்றாக முடித்ததற்குப் பாராட்டுகள். 50வது சிறுகதை... எ.பிக்கும் பாராட்டுகள். அவங்க உத்வேகம் தரலைனா எழுதுவது கடினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தாங்கள் சொல்லியிருப்பது போலத் தான் தற்போது எங்கும் நடந்து கொண்டிருக்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  17. ஒரே ஒரு பெண் (வேறு குழந்தைகள் இல்லாதவங்க) இருக்கும் வீட்டில், பெண் எடுப்பதே மிகப் பெரிய ரிஸ்க் ஆக ஆகிவிட்ட காலம் இது. ஹாஹா. பெற்றோருக்கு, தன் மகள் வீட்டில் இருந்தால், தங்கள் வயதான காலத்துக்கு மிக உபயோகமாக இருக்கும்னு நினைத்துக்கொள்றாங்க (என்று பல இடங்களில் கேள்விப்படறேன்). தங்கள் காலத்திற்குப் பின், பெண் வருத்தப்படுவாளே என்பதைப் புரிந்துகொள்வதில்லை. ஒரு குழந்தை பிறந்தாலும், தங்கள் வீட்டுக்கு இழுத்துக்கொள்வதைக் கேள்விப்படறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      உலக நடப்பை சொல்லி இருக்கின்றீர்கள்.. நன்றி..

      நீக்கு
  18. //நீ எப்படி அவங்களைக் காலம் எல்லாம் வைச்சு காப்பாத்துவாயோ அதே மாதிரி உன் வயித்துல பிறக்கிற பிள்ளைகளும் உன்னையும் மாப்பிள்ளையையும் நல்லபடியா வைச்சு காப்பாத்துவாங்க... இது எங்களோட ஆசீர்வாதம்..டா தங்கம்//

    இதுதான் உண்மை ஜி ஐம்பதாவது கதைக்கு வாழ்த்துகள்.

    ஜனனி போல எல்லோருக்கும் மருமகள் கிடைத்தால் ???
    ஓர் முதியவருக்கு வேறென்ன வேண்டும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  19. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ...
    ஜகத்காரணி நீ பரிபூரணி நீ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  20. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! இன்றைய கதை அருமை! தங்கள் ஐம்பதாவது கதை. முத்திரைக் கதை எனவே சொல்லலாம்! அம்மன் அருள் நிலைத்திருக்கட்டும் . நன்மகளீரால் வீடும், நாடும் நலம் பெறட்டும்!நல்ல எண்ணங்கள், வார்த்தைகளாய் வடித்து நல்லதொரு கதை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      // அம்மன் அருள் நிலைத்திருக்கட்டும் . நன்மகளிரால் வீடும், நாடும் நலம் பெறட்டும்!.. //

      நல்ல சொல்லடைவு..

      நன்றி..

      நீக்கு
  21. துரை சார் கதையில் எங்கேயிருந்து சீரியல் வில்லி வந்தாள்? என்று நினைத்தேன். நல்ல வேளை, அப்படி இல்லை. 50வது கதை, பொன்னான கதைதான்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  22. 50 ஆவது கதைக்கு வாழ்த்துக்கள். நல்ல கதைக்கு பாரட்டுகள்.
    மிக அருமையான கதை.ஜனனி மற்றும் அனைவரின் நல்ல குணங்களும் சொன்னவிதம் அருமை.
    கெளதமன் சாரும் ஜனனி அம்மவிடம் கேட்கும் கேள்விக்கு ஏற்ற மாதிரி படம் பொருத்தமாக வரைந்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்தும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. நல்லதொரு கதை. அம்மா வைத்த தேர்வில் மகள் தேர்வாகி விட்டார்!

    வழமை போல மனதைத் தொடும் துரை செல்வராஜூ ஐயாவின் கதை. மனதுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. ஜனனி அன்பான மருமகளாக ,மனதுக்கு நிறைவான கதை.
    ஐம்பதாவதுக்கு பாராட்டுகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!