கத்தரிக்காய் கறி வீட்டில் அதிகம் செய்வதில்லையே தவிர ஏதாவது விருந்துகளில் அது பரிமாறப்பட்டால் பாஸுக்கு என் மீது கரிசனமும் பாசமும் வந்து விடும்.
"உங்களுக்குப் பிடிக்குமே... சட்டுனு எடுத்துண்டுடுங்களேன்..."
என்னதான் பிடிக்கும் என்றாலும் மூன்று நான்கு பங்கு போட்டுக்கொள்ள முடியுமா என்ன! அதுவும் மற்ற ஐட்டங்கள் அணிவகுக்கும்போது?! மறுத்து விடுவேன். விஷயம் ஒன்றுமில்லை. பாஸுக்கு கத்தரிக்காய் பிடிக்காது.
அதே போல கொஞ்சம் சந்தேகமான ஏதாவது ஒரு ஐட்டம் விருந்து லிஸ்ட்டில் இலையில் விழுந்தால் தொடமாட்டார். நிறைய மிச்சம் வைத்துவிடுவார்.
சென்ற வாரத்தில் ஒரு கல்யாண ரிஸப்ஷனுக்குச் சென்றிருந்தோம். எப்போதுமே என் வழக்கம் என்ன என்றால் இலையில் எதுவும் வீணாக்காமல் சாப்பிட்டு விடுவேன். அதற்குத் தகுந்தாற்போல, பரிமாறும் வரிசையில் வருபவற்றை வடிகட்டி கொஞ்சம் கொஞ்சம்தான் பரிமாறச் செய்வேன். உசிலி, பொரித்த அப்பளம் போன்றவற்றை மறுத்தே விடுவேன்!
ஏற்கெனவே போட்டுத் தயாராய் இரு க்கும் ஐட்டங்களை என்ன செய்ய முடியும்!
அப்படிப் போட்டு வைத்திருந்ததில் ரசமலாய், ரோட்டி, (ருமானி ரோட்டியாம். கையுறை அணிந்த அந்தப் பெண் அப்புறம் சொன்னார்) பனீர் பட்டர் மசாலா, போன்றவற்றை வரிசைக் கிரமத்தில் காலி செய்தேன். சிறு தோசை அல்லது ஊத்தப்பம் அல்லது கல்தோசை ஒன்று இருந்தது. அதற்கு சட்னி சாம்பார் எதுவும் போடவில்லையே என்று யோசித்தபடி காலி செய்தேன். பருப்பு கோசுமல்லி என்று நினைத்து நான் எடுத்து சாப்பிட்டது கோஸ் கறி! அவ்வளவு பொடியாய்த் துருவி இருந்தார்கள். மஞ்சள்பொடி போட்டு தாட்டியிருந்தார் போல!
அதற்கு அருகில் இன்னொரு பிரவுன் ஐட்டம் ஒன்று..
பக்கத்திலிருந்து பாஸ் என் கையைப் பிறாண்டினார். "இது என்ன? கலந்த குழம்பு சாதமா?"
"லூசு.. குழம்பு சாதம் இத்தனூண்டுதான் வைப்பார்களா? அதுவும் முன்னாலேயே வைப்பார்களா என்ன... அதையும் அங்கேயா வைப்பார்கள்? பார்த்தால் சர்க்கரைப் பொங்கல் மாதிரி இருக்கிறது. அப்புறம் கடைசியாய் சாப்பிட வேண்டியதுதான்" என்றேன்.
சொல்லிக் கொண்டிருக்கும்போதே கலந்த சாம்பார் சாதம் வந்து விட்டது. அவர்கள் கரண்டி சைஸைப் பார்த்து விட்டு என் இலைக்கு அரைக் கரண்டி சாங்க்ஷன் செய்தேன்!
"நான் சொன்னது சரியா?" என்பது போல பாஸை பெருமை பொங்கப் பார்த்தேன். அவர் ப்ரவுன் கலர் ஐட்டத்திலேயே தேங்கியிருந்தார்.
"ரிஸப்ஷன் டின்னரில் சர்க்கரைப்பொங்கல் வைப்பார்களா?" விடாமல் துளைத்தார்.
"இப்போதான் புதுசு புதுசா என்னென்னவோ ட்ரை பண்றாங்களே... அதுமாதிரி இதுவும் உண்டோ என்னவோ..." அவர்கள் வைத்திருந்த ஸ்ப்ரிங் ரோல் எனப்படும் வஸ்துவை வாயில் வைத்துக் கடித்.....து இழுத்தபடியே சொன்னேன். 'வேகவே இல்லையோ....'
எங்களை கவனித்தபடி அருகிலேயே நின்றிருந்த தலைக்குல்லாய், கையுறை அணிந்த பெண் பாஸின் தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து கொடுத்தபடி சொன்னார்...
"அது வடகறி ஸார்"
"எது?"
நான் சர்க்கரைப் பொங்கல் என்று குறிப்பிட்ட உருண்டையை நோக்கி விரலை நீட்டினார்.
"ஆ..."
என் தண்ணீர் பாட்டிலைத் திறக்க முற்பட்டவரைத் தடுத்தேன். வீட்டிலிருந்து கொண்டுபோயிருந்த வெந்நீர் பிளாஸ்க்கைக் காட்டினேன். அப்படியே அவர் வடகறி என்று சொன்னதை எடுத்துச் சுவைத்தேன். ஆமாம்.. அப்படிதான் இருந்தது. தோசைக்கு இதுதான் தொட்டுக்கொள்ள வைத்திருந்திருக்கிறார்கள்!
மின்னம் மினி டிஸ்போஸபிள் பேப்பர் பிளேட்டில் அதைவிட மின்னம் மினியாய் காணப்பட்ட உருளையைக் காட்டி 'இது என்ன' என்று வினவினேன்.
"காஜூ ஸ்வீட் ஸார்..."
"எவ்வளவு மினி?" என்று பாஸிடம் வியப்பு காட்டினேன்.
நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதைக் கவனித்தபடியே இருந்திருக்கிறார் போல... "அதையே எல்லோரும் அப்படியே வைத்து விட்டு எழுந்து போகிறார்கள்" என்று மற்ற இலைகளைக் காட்டினார் அந்தப் பெண்.
வாஸ்தவம்தான். அதே சமயம் அவர்கள் எல்லாம் அது என்ன என்று அறிந்திருப்பார்களா என்கிற கேள்வியும் வந்ததது!
ஆனால் பொதுவாகவே இது போன்ற விருந்துகளில் கைகழுவ எழுந்து போகும்போது 98 சதவிகித இலைகளில் பலப்பல பதார்த்தங்கள் அப்படியே இருப்பதைப் பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கும்.
எப்படித் தடுக்கலாம்? மிகவும் கஷ்டம்தான். சாப்பிடுபவர்கள் வரும் முன்னரே ஒரு ஈடு பரிமாறுவதை நிறுத்தி எல்லோரும் அமர்ந்த உடன் கேட்டுப் பரிமாறலாம். சிலர் இதை அல்பமாய் நினைப்பார்கள். சாப்பிடுபவர்களும், அவர்கள் பரிமாறும்போது "யாருக்கு வந்த விருந்தோ" என்று பார்த்துக் கொண்டிராமல், தான் சாப்பிடக் கூடியவற்றை மட்டும் தேவையான அளவு பரிமாறச் சொல்லலாம்.
நடக்குமா என்ன!
இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னுடன் பணிபுரிந்து ஒய்வு பெற்ற சக ஊழியர் ஒருவரின் மகன் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். அதிருஷ்ட வசமாக நாங்கள்தான் முதல் பந்தி. அவர்கள் இன்னும் பத்து நிமிடங்கள் ஆகட்டும் என்று இருந்தவர்களை உசுப்பி பரிமாற வைத்தேன். வரிசையாக எங்கள் குழு அமர்ந்தபின் அவர்களுக்கும் வேறு வழி இல்லை. எங்களுக்கும் வேறு வழி இல்லை. ஏனென்றால் நகரின் மறுகோடியில் வரவேற்பு.. எப்போது சாப்பிட்டு, எப்போது வரிசையில் நின்று, எப்போது மொய்க்கவர் கொடுத்து எப்போது கிளம்ப? மணமக்கள் வேறு வரவேற்பு என்றால் ஆறு மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும் ஏழரைக்கு மேல் எட்டு மணிக்கு என்றெல்லாம் மேடைக்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
பரிமாற ஆரம்பிக்கும்போதே தேவையானதை மட்டும் பரிமாற வைத்து, அதது என்னவென்று தெரிந்து கொண்டு, இரண்டாம் முறை வந்தாலும் வேண்டாம் என்று சொல்லி, எதையும் மிச்சம் வைக்காமல் நான் சாப்பிட்டதை பொறுப்பாளர் ஒருவர் அருகிலேயே நின்று கவனித்துக் கொண்டிருந்தார். ரசம் கப்பில் கேட்டதும் யாரையும் ஏவாமல் அவரே ஓடிப்போய் எடுத்து வந்து தந்தார். அதேபோல பாயசமும் இரண்டாம் கப் கேட்டதும் மகிழ்ச்சியுடன் தந்தார். இவர்கள் வைத்த லிஸ்ட்டில் மசால் தோசை ஹோட்டல் சைசில் பெரிதாகவே இருந்தது ஸ்பெஷல். சாதாரணமாக மினி மசால் தோசைதான் வைப்பார்கள். அதையும் சொல்லி வழக்கம்போல அவரிடம் feedback கொடுத்து விட்டு வந்தேன்!
============================== ============================== ============================== ===========
என்னென்னமோ பெயரில் முடிவெட்டிக் கொள்கிறார்கள். புள்ளிங்கோ வாம். அது ஒரு முடிவெட்டும் ஸ்டைலாம்! பேப்பரில் பார்த்தேன். அது போல மீசையும் தாடியும் விதம் விதமாய்... சமீபத்தில் அப்படி ஒரு தாடி மீசையைப் பார்த்தபோது தோன்றியது!
'விட்டு விடாதே..
விழுந்து விடுவேன்!'
தாவாங்கட்டையைப்
பிடித்துக்
கெஞ்சிக் கொண்டிருக்கிறது
தாடி.
பற்றிக் கொள்ள
கைகளை நீட்டுகிறது
மீசை!
============================== ============================== ============================== ====
எஸ் பி பி படம் போட்ட - எஸ் பி பி ஸ்பெஷல் ஜெமினி சினிமாவில் அப்போது வந்த கட்டுரை. எஸ் பி பி படம் பார்த்ததுமே வாங்கி வைத்திருந்தேன். சமீபத்தில் கூட கண்ணில் பட்டது. எங்கோ வைத்திருக்கிறேன் எஸ் பி பிக்காக அந்தப் புத்தகம் இன்னும்!
"நரம்புத் தளர்ச்சி நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்த சமயம் பெங்களூரில் ஒரு விழா. பாலு அழைத்ததால் நானும் அதில் கலந்து கொண்டேன். கலந்து கொண்டேன் என்று சொல்வதை விட கலாட்டா செய்தேன் என்பதே பொருத்தம்.
எஸ்! என்ன செய்கிறேன் என்றே தெரியாத நிலையில் மேடையில் அமர்ந்து சிகரெட் பிடித்தேன். கேலி பேசியவர்களை அடிக்கத் துணிந்தேன். விழா அல்லோல கல்லோலப் பட்டது. என்னை யாராலும் அடக்க முடியவில்லை. அருகில் இருந்த பாலு என்னை அமைதிப் படுத்தினார். என்னை மறந்திருந்த அந்த நிலையிலும் 'மகுடிக்குக் கட்டுண்ட நாகம்' போல பாலுவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டேன்.
மற்றொரு சமயம்...
பம்பாயிலுள்ள தமிழ்ச் சங்கம் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. நான், பாலு, பாரதிராஜா மூவரும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம்.
'சங்கராபரணம்' வெளிவந்த சமயம் அது. பாடல்கள் எல்லோராலும் பாராட்டப் பட்டன. எங்களுடன் பயணம் செய்த ஒரு வெளிநாட்டவர் பாலுவை அடையாளம் தெரிந்து கொண்டு 'சங்கராபரணம்' பாடல்களைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார்.
நாங்கள் ஆச்சரியமடைந்தோம். பாலு சற்றும் தயங்காமல் பாடத் தொடங்கி விட்டார். அன்று எங்களுடன் பயணம் செய்தவர் அனைவரும் இசை மழையில் நனைந்தனர்.
'சகோதர சவால்' என்ற கன்னடப் படத்துக்காகத்தான் பாலு முதன்முதலில் எனக்காகப் பாடினார்.அது எனக்கு முதல் டூயட் பாடலும் கூட. தமிழில் 'ராஜா என்பார், மந்திரி என்பார்' பாடல்தான் பாலு எனக்காகப் பாடி நான் வாயசைத்த முதல் தமிழ்ப்பாடல்..."
1982 ஆம் வருடம் ஜெமினி சினிமாவுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த்.
============================== ============================== ============================== =
நேற்றைய பதிவில் நெல்லை தமன்னா பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எனவே அவர் பற்றி படித்த ஒரு செய்தியை இங்கு பகிர்கிறேன்!
தமன்னா பற்றி செய்தி சொல்லி, அனுஷ் பற்றிச் சொல்லவில்லை என்றால் நெல்லை வருத்தப்படுவார். எனவே அனுஷ் பற்றி ஒரு செய்தி..
========================================================================================================
மதன்...
இது கொஞ்சம் ஓவராதான் இருக்கு!
உன் கண் உன்னை ஏமாற்றினால்... டடடா டடடா...
தனியார் கம்பெனி.. எதற்கெல்லாம் ஒத்திகை தேவையாயிருக்கிறது!
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
பதிலளிநீக்குஎல்லோரும் ஆரோக்கியத்துடனும் மன நலத்துடனும் இருக்கப் பிரார்த்தனைகள்.
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குசுவையான கல்யாண சமையல் பதிவு.
பதிலளிநீக்குபாஸுக்குக் கத்திரிக்காய் பிடிக்காதா!!!!
என்னப்பா கொடுமை இது:)
என் பெரிய தம்பிக்கும் பிடிக்காது.
அதற்காகக் கல்யாண பந்தியிலே அடுத்த இலை உபசாரமா:))))
நாம் உட்கார்ந்ததும் பரிமாற வந்தால்
கையைக் குறுக்கே நீட்டலாம்,
ஏற்கனவே போட்டு வைத்திருந்தால் சிரமம் தான்.
நானும் வடகறியைச் சர்க்கரைப் பொங்கல் என்றே நினைத்தேன்.
சர்க்கரைப் பொங்கலை முதலில் போடுவார்களா.
ஸ்பெஷல் ஆச்சே.. அளந்து பிறகு தான்
போடுவார்கள்.
பாசுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி கத்தரிக்காய் பிடிக்காது. நானும் இளையவனும் போட்டுக்கொள்வோம் அம்மா.
நீக்குஇது போன்ற கல்யாண விருந்துகளில் சர்க்கரைப் பொங்கல் மிக மிக அபூர்வம் அம்மா. நன் பார்த்ததில்லை.
அதே போல கொஞ்சம் சந்தேகமான ஏதாவது ஒரு ஐட்டம் விருந்து லிஸ்ட்டில் இலையில் விழுந்தால் தொடமாட்டார். நிறைய மிச்சம் வைத்துவிடுவார்.//////
பதிலளிநீக்குநானும் அப்படியே. பிடிக்காததை எப்படி சாப்பிடுவது:(
அது என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டு சுவை பார்ப்பேன் நான்!
நீக்குமசால் தோசை ஹோட்டல் சைசில் பெரிதாகவே இருந்தது ஸ்பெஷல். சாதாரணமாக மினி மசால் தோசைதான் வைப்பார்கள். அதையும் சொல்லி வழக்கம்போல அவரிடம் feedback கொடுத்து விட்டு வந்தேன்!"""""
பதிலளிநீக்குபொறுப்பான எபி ஆசிரியர். !!!
பின்னூட்டமும் ஃபீட் பாக் உம்
மிக முக்கியம் என்று உயர்த்தி வைக்கும் குணம்.
விருந்து கொடுத்தவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிக நல்ல விஷயம் ஸ்ரீராம்.
ஆமாம் அம்மா. நாம் சமைக்கும்போது யார் என்ன அபிப்ராயம் சொல்கிறார் என்று எதிர்பார்ப்போம் அல்லவா..
நீக்குதிதி, சுபம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வீட்டுக்கு ஒரு சமையல் மாமி வந்து சமைத்துக் கொடுப்பார். அவர் என்னிடம் சொல்வார், 'யார், எதை மறுபடியும் கேட்டு வாங்குகிறார்கள் என்று பார்த்துச் சொல்லேன்' என்பார். அதேபோல 'இலைக்கு அடியில் வைத்திருக்கும் சாதஉப்பு கலவையை எடுக்கிறார்களா, எந்தப் பதார்த்தத்துக்கு எடுக்கிறார்கள் என்றும் பார்க்கச் சொல்வார்!
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஇன்றைக்கு கதம்பம் நல்லாவே இருக்கு. நிறைய பின்னூட்டங்களை எதிர்பார்க்கலாம்.
நான் நடக்கச் செல்லவேண்டும். அதனால் பிறகுதான் வர முடியும்.
ஸ்ரீராம்... 50 வயது ஆனவரையும், 27 வயசு வாலிபரையும் ஒரே டிராக்கில் ஓடவிடலாமா? அ என்றால் அவர் 24 வயது படத்தையும் த என்றால் 33 வயது படத்தையும் போடுவது நியாயமா? ஹாஹா
வாங்க நெல்லை, வணக்கம். தமன்னாவுக்கு 24 வயதா? பத்து வருடங்களாகவா? அனுஷுக்கு பதினோரு வருடங்கள் அதிகமாகி சொல்கிறீர்கள்!!!!
நீக்குமதன் நகைச்சுவை எப்பொழுதுமே ரசிக்க வைக்கும். போனஸ் திருடர்
பதிலளிநீக்குசூப்பர்:)
உண்மை அம்மா.
நீக்குதாடியைத் தாங்கும் மீசை மிகச் சிறந்த கற்பனை.
பதிலளிநீக்குநல்ல கவிதை மா. வாழ்த்துகள். சந்திரபாபு
குறுந்தாடி நினைவுக்கு வந்தது:)
நன்றி அம்மா.
நீக்கு//எதெற்கெல்லாம் ஒத்திகை// - இது ரொம்பவே முக்கியம் ஸ்ரீராம்... நாம் பேசும் டாபிக், அதுவும் முடிவு எடுக்கும் நிலையில் உள்ளவர்களிடம் பேசப்போகிறோம், சட் என்று வாய் தவறி ஏதாவது வார்த்தை வந்துவிட்டால் அது நேரடியாக நம்மை பாதிக்கும் என்பதால் ரொம்பவே ரிஹர்சல் எடுத்துவிட்டுத்தான் பேசப் போகணும். இப்படிக் குறுக்குக் கேள்வி கேட்டால் என்ன மாதிரி பதில் சொல்லணும் என்றெல்லாம் நான் தயார் செய்யாமல் செல்லவே மாட்டேன்.
பதிலளிநீக்கு90ல், கெம்ப்ளாஸ்டில், அப்போது சேர்ந்த இளவயது சார்டர்ட் அக்கவுண்டண்ட், சேர்ந்து 4 மாதங்களில் தொழிற்சாலையின் தலைவரிடம் சென்று, என் சம்பளம் மிகவும் குறைவு, அதை நீங்கள் மாற்ற வேண்டும் என்று கொஞ்சம் ஃபோர்ஸ் ஆகச் சொன்னான். அதற்கு அந்தத் தலைவர், The gates are always open என்று சொல்லிவிட்டார். எனக்கு என் பெர்ஃபார்மன்ஸைப் பற்றி அறிந்திருந்ததால், என்னுடைய சாஃப்ட் கடிதத்திற்கு, கம்பெனி GM Finance என்னிடம் வந்து, தக்க காலம் வரும்போது நான் நிறைய உனக்குச் செய்கிறேன் என்று சொன்னார்.
ரொம்வே சென்சிடிவ் ஆன விஷயம் இது. எப்போ தணியனும், எப்போ அவங்க சொல்லும் தவறான குற்றச்சாட்டை டைஜஸ்ட் பண்ணிக்கணும் என்றெல்லாம் நல்லாவே அறிந்து வைத்திருக்கணும்.
புரிகிறது நெல்லை.. அது தெரிந்துதான் எதற்கெல்லாம் ஒத்திகை என்று ஆதங்கப் பட்டிருக்கிறேன்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்.. இறையருள் சூழ்க எங்கெங்கும்..
பதிலளிநீக்குவாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்...
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குசெப்டம்பர் 25 வந்துவிட்டது. எஸ்பிபி ஸாரின் மறைவு
பதிலளிநீக்குஎப்படியெல்லாம் கலக்கியது. சரியாக நீங்கள்
நினைவில் வைத்து எழுதி இருப்பது ஆச்சரியமே இல்லை. ரஜினிக்கு
ஆதரவு செய்தார் என்பது புது செய்தி.
ஆ... மிகுந்த தற்செயல் அம்மா. இது நான்கைந்து வருடங்களுக்கு பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். மெமரிஸ் பகுதியில் காட்டியது. அதை எடுத்து போட்டேன்.
நீக்குநம்மவர்களுக்கு பொதுவா ஃபப்ஃபே சாப்பிடவே தெரியாது. காணாததைக் கண்டவர்கள் போல தட்டு முழுவதும் நிரப்பிக்கொண்டு பிறகு பாதிக்கு மேல் குப்பைக் கூடையில் போடுவார்கள்.
பதிலளிநீக்குமெனுவை அறிவிப்பது, இத்தகைய விருந்துகளுக்கு ரொம்பவே முக்கியம்னு நினைக்கிறேன். எதைத் தவிர்க்கலாம், எதை அப்போதே வாங்கிக்கொள்ளலாம் என்பதை முடிவு செய்ய உபயோகமாக இருக்கும். இன்னொன்று, சாப்பிடுபவர்களும், இவங்க எப்படியும் இலைக்கு இவ்வளவு என்று நல்லாவே பணத்தைக் கறக்கப் போறாங்க, வேண்டாம்னு சொன்னால், இதனை வித்துடுவாங்க என்ற எண்ணம் கொண்டும், போடுவதை எல்லாம் வாங்கிக்கொள்வார்கள். அதையும் மனசுல வச்சுக்கணும்.
முன்னர் சொல்லி இருந்தேன் என்று நினைக்கிறேன். என் நண்பன் மகள் திருமணத்தில் 132 ஐட்டங்கள் பெயர் போட்டு மெனு கார்ட் கொடுத்திருந்தார்கள். எல்லோருக்கும் எல்லாவற்றையும் சுவைத்துப் பார்க்கவ வேண்டும் என்றும் தோன்றும். பஃபே விருந்துகளில் அந்தத் தட்டில் என்னென்னவோ முடிந்தவரை எல்லா ஐட்டங்களை நிரப்பிக்கொண்டு செல்வதையும் பார்த்திருக்கிறேன்!
நீக்குஎன் அக்கா பையன் ரிசப்ஷன் உட்லேண்ட்சில் நடந்தது. பஃபே சிஸ்டம். சாப்பிட்ட பலர் பூரி,சாம்பார் சாதம் போன்றவைகளுக்கு ஒரு தட்டும், தயிர் சாதத்திற்கு வேறு ஒரு தட்டும் எடுத்துக்கொள்ள, ஹோட்டல்காரர்கள் தட்டு கணக்கு வைத்து பில்லை தீட்டி விட்டார்கள்.
நீக்குஅடப்பாவி... இப்படி ஒரு ஆபத்தா...
நீக்குபஃபே என்றால் என்ன என்பது தமிழ்நாட்டுச் சமையல்காரர்களுக்கும் தெரியவில்லை. பொதுமக்களுக்கும் தெரியவில்லை. பஃபே சாப்பாடு முறையில் தட்டை எடுத்துக்கொண்டு, கிண்ணங்கள் தேவையானால் அவற்றையும் எடுத்துக்கொண்டு தேவையான உணவைப் போட்டுக்கொண்டு சாப்பிட்ட உடன் அடுத்த முறை எடுத்துக்கொள்ளப் பழைய சாப்பிட்ட தட்டைப் பயன்படுத்தக் கூடாது. அதை அப்படியே வைத்துவிடணும். ஸ்பூனையும் அதிலேயே கவிழ்த்திவிட்டால் ஸ்பூனோடு தேவை இல்லை என்பது பொருள். ஆகவே இரண்டாம் முறை உணவு எடுக்கப் புதிய தட்டு, புதிய ஸ்பூன் என்றே எடுக்கணும். அதே போல் கடைசியில் கொடுக்கப்படும் டெசர்ட் எடுக்க பவுல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கணும். அதுக்கு ஃபோர்க் தேவையானால் ஃபோர்க், பெரிய ஸ்பூன் என்று தனியாக இருக்கும். அவற்றில் தான் எடுத்துக்கணும். ஆனால் இங்கே பஃபே என்னும் பெயரில் அந்த அந்த உணவுக்கு அருகே பரிமாறும் பரிசாரகர்கள் நின்றுகொண்டு கரண்டிகளால் நம் தட்டில் உணவை வைக்கிறார். இப்படி ஒவ்வொருத்தராக நாம் நகர்ந்து வந்து உணவை வாங்கிக்கணும். நடுவில் தட்டு நிரம்பிவிட்டால் போய்விட்டுச் சாப்பிட்டுப் பின்னர் திரும்ப வாங்கிக்காத உணவை வாங்கிக்கணும் எனில் அதே தட்டுத் தான். அதிலேயே வாங்கிக்கணும். சகிக்காது. ஆனால் தட்டை வைச்சுட்டுப் புதிய தட்டு எடுத்தோமானால் பாவம் கல்யாணம் நடத்துபவர். அவர் தலையில் சுமை விழும். தட்டைக் கணக்கில் எடுத்துக்கறாங்க. இது மிகத் தவறான ஒன்று. பஃபேயில் வைத்திருக்கும் அனைத்து உணவுகளுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு இத்தனை ரூபாய் என்று தான் கணக்கில் எடுத்துக்கணும். தட்டைக் கணக்கில் எடுத்துக்கவே கூடாது. இதை எல்லாம் பெரிய கம்பெனிகளின் பஃபேக்களிலோ அல்லது பெரிய ஓட்டல்களில் நடக்கும் பஃபேயிலே செய்ய முடியாது என்றே நினைக்கிறேன். நான் பார்த்தவரை தமிழ்நாட்டிலேயே வடநாட்டுக்காரங்க கொடுக்கும் ரிசப்ஷனின் பஃபே சாப்பாடு முறை நான் சொன்னாப்போலவே கொடுப்பாங்க. தட்டுக் கணக்கில் வராது. நபர்கள் மட்டுமே கணக்கு.
நீக்குசாப்பிட்ட தட்டிலேயே உணவை வாங்கிக்கும்போது அவங்க என்னதான் தூக்கிப் போட்டாலும் கொஞ்சமானும் இடிக்கத் தான் செய்கிறது. :( இது ஆரோக்கியமானதே அல்ல. பஃபே முறை பற்றி ஓர் செயல்முறை விளக்கம் கொடுத்தால் தேவலை.
நீக்குஆக மொத்தம் இதனால் அறியப்படும் கருத்து யாதெனில், நாம் செல்லும் விருந்துகளில் பஃபே முறை இல்லாமலிருந்தால் சௌகர்யம். இல்லையா?!!
நீக்குஆமாம், இலையில் போட்டு உட்கார வைத்து விடலாம். அது பரவாயில்லை. தேவை எனில் வாங்கிக்கலாம்.
நீக்குகீதாக்கா சொல்லியிருக்கும் பஃபே முறைதான் பஃபே டிட்டோ செய்கிறேன்.
நீக்குஆனால் நம்மூரில் பல ஊர்களில் இருக்கும் தண்ணிக் கஷ்டம், சமையற் குழுவிற்கு வேலைப் பளு....என்பன பார்க்கும் போது இலை பரிமாறிச் சாப்பிடுவதுதான் நல்லது.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குஎஸ் பி பி... அவர் ஒரு ஜெம். அவர்போல மனிதர்களைப் பார்ப்பதே அபூர்வம்.
பதிலளிநீக்குசென்னை ஏர்போர்ட் லாஞ்சில், கமல் வந்திருந்தார். அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள மனது ஆசைப்பட்டது. தயங்கிவிட்டேன். பிறகு கமல் கண் அயர்ந்தார். அப்போ எஸ் பி பி, அவர் மனைவி, ஷைலஜா ஆகியோர் வந்தார்கள். எஸ் பி பி கமலைத் தொந்தரவு செய்யாமல் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டார். எஸ் பி பியோடு போட்டோ எடுத்துக்க விட்டுப்போய்விட்டது (பக்கத்தில் இருந்த ஷைலஜாவைக் கண்டால் எனக்குப் பயம்தான். சலங்கை ஒலி படத்தின் பாதிப்பு அது)
அடடா... நல்ல வாய்ப்புதான். கமலை விடுங்கள். எஸ் பி பி யை விட்டு விட்டீர்களே.. எனக்கு சுஜாதாவை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று முதலில் தோன்றிய காலம் உண்டு. இப்போது எனக்கு அப்படி இருக்கும் ஆசை இளையராஜா!
நீக்குஅவர் அகந்தைப் பேச்சுகளையும் மீறி, அவரை ஒருமுறை பார்க்கவேண்டும் என்று தோன்றும்!
நல்ல டிஃபன் சாப்பிட்டது என்றால் அது 2018ல் கேஜிஒய் சதாபிஷேகத்தின்போதுதான். (இருந்து சாப்பாட்டையும் சாப்பிட்டிருக்கணுமோ? என்னடா இது... மதியச் சாப்பாட்டுக்கும் உட்கார்ந்துவிட்டானே என்று நினைத்திருப்பாரோ ஹாஹா). அதற்கு அப்புறம் நிறைய விசேஷங்களில் சொல்லிக்கொள்ளும்படியான உணவு அமையலை.
பதிலளிநீக்குஆஹா... KGY இதைப் படித்து மகிழ்ந்திருப்பார் என்று நம்புகிறேன். நீங்கள் ஆஞ்சியைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பி விட்டீர்கள். சாப்பாடும் நன்றாக இருந்தது.
நீக்குKGY இந்தப் பக்கமெல்லாம் வருவதாகவே தெரியவில்லையே! வந்திருந்தால் ஒன்றிரண்டு பிடிச்சபதிவுக்காவது தன் கருத்தைப் பதியாமல் இருந்திருப்பாரா?
நீக்குஆனா பாருங்க ஶ்ரீராம்.. அந்த டீமை நான் உபயோகப்படுத்திக்கொள்ள முடியாது. இல்லைனா contact numbers லாம் பத்திரமா வச்சிருந்திருப்பேன்
நீக்குஎந்த டீம் நெல்லை?
நீக்குவாங்க ஜீவி ஸார்.. ஆம் KGY பெரும்பாலும் பிளாக் பக்கம் வருவதில்லை. அவர் இசை ரசிகர்.
வெள்ளிக்கிழமை கொண்டாட்டம். இசை ரசிகர்களுக்கும் எந்தக் குறையையும் வைப்பதில்லையே, நீங்கள்?
நீக்குஅவர் திரை இசையில் பெரும்பாலும் நாட்டம் கொள்வதில்லை ஜீவி ஸார்... இந்த வரியில் பெரும்பாலும் என்கிற வார்த்தையையே எடுத்து விடலாம்!
நீக்குதமன்னாவும் அனுஷ்காவும் மாறி மாறி
பதிலளிநீக்குஎபியில் வலம் வந்த காலம் நினைவில்.
இன்றைக்குப் பார்க்கும் விதத்தில் இருவரும் இல்லையோ.
நிறைய பாப்புலாரிட்டி வந்த பிறகு கொஞ்சம்
குறைந்தாலும் மன வருத்தம் தான். பாஹுபலிக்குப்
பிறகு இருவரும் வேறு வெற்றி பார்த்தார்களோ
இல்லையோ.
பாவம் தான்.
அவர்கள் எங்கள் மனதில் இளமையாகவே இருக்கிறார்கள் அம்மா... இல்லையா நெல்லை?!!!!
நீக்குஅப்புறம் இருவருக்கும் ஹிட் படமென்ன, படமே இல்லை என்று நினைக்கிறேன்.
ஓரளவு உண்மைதான் ஶ்ரீராம். இந்த தமன்னா ஆன்டி மட்டும் தங்கத்தை வித்துடுங்க என்று விளம்பரத்தில் இப்போது தோன்றி கடுப்பேத்தாமல் இருந்தால் எவ்வளவு நன்னாக இருக்கும்? ஹாஹா
நீக்குஹா.. ஹா... ஹா... இவர் போன்ற பிரபலங்களுக்கெல்லாம் திருமண வாழ்க்கை காலத்தில் அமையாதது ஒரு நஷ்டம்.
நீக்குஅவர்கள் எங்கள் மனதில் இளமையாகவே இருக்கிறார்கள் அம்மா... இல்லையா நெல்லை?!!!!//
நீக்குஸ்ரீராம் நெல்லைக்கு தமன்னா பாட்டியாகிட்டாங்க இதுல போய் அவரையும் சேத்துக்கறீங்களெ!!!! ஹாஹாஹா
கீதா
:>))
நீக்குபல விஷயங்களை அருமையாகக் கலந்து
பதிலளிநீக்குகொடுத்த பதிவுக்கு மனம் நிறை வாழ்த்துகள் மா.
நன்றி அம்மா. நேற்றிரவு ஏழு மணிக்கு மேல்தான் வியாழன் பதிவு பற்றிய நினைவே வந்ததது. சாப்பிட்டு விட்டு அவசரமாக போட்ட பதிவு!
நீக்குதாடி-மீசை காலமிது! இரண்டுக்குமான உறவு முக்கியம்.
பதிலளிநீக்குகீழே வளர, வளர, மேலே காலியாகிக்கொண்டிருப்பதை யாரும் கவனிப்பதில்லை...
இதாவது மிஞ்சி இருக்கிறதே என்கிற ஆறுதல் காரணமாயிருக்கும்.!!!
நீக்குஉண்மை
நீக்குJayakumar
//கீழே வளர, வளர, மேலே காலியாகிக்கொண்டிருப்பதை யாரும் கவனிப்பதில்லை...// கவனத்தை திசை திருப்பத்தான் தாடியோ?
நீக்குவரவேற்பு நிகழ்வின் உணவுகள் படிக்கப் படிக்க சுவைக்கின்றன
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குகத்தரிக்காய் கறி வீட்டில் அதிகம் செய்வதில்லையே தவிர ஏதாவது விருந்துகளில் அது பரிமாறப்பட்டால் பாஸுக்கு என் மீது கரிசனமும் பாசமும் வந்து விடும். //
பதிலளிநீக்குஹாஹாஹா....
பாஸுக்குக் கத்தரிக்காய் பிடிக்காதே!
அதே போல கொஞ்சம் சந்தேகமான ஏதாவது ஒரு ஐட்டம் விருந்து லிஸ்ட்டில் இலையில் விழுந்தால் தொடமாட்டார். நிறைய மிச்சம் வைத்துவிடுவார்.//
ஹாஹாஹா
நான் ஜஸ்ட் நேரெதிர்! அது என்ன என்று சுவைத்து நான் செய்தது இல்லை என்றால் உடனே வீட்டில் செய்து பார்ப்பது, அதன் பின் அதைப் பல விதங்களில் நம்ம கைவண்ணம் காட்டி உல்டா செய்வது என்று சோதனைகள் நிறைய செய்வதுண்டு ஹாஹா. புதியதைச் சாப்பிட ஆர்வமும் இருப்பவர்கள் இருப்பதால்...
கீதா
ஆ... நீங்கள் செய்தே பார்த்து விடுவீர்களா? கிரேட்! வாங்க கீதா...
நீக்குஎப்போதுமே என் வழக்கம் என்ன என்றால் இலையில் எதுவும் வீணாக்காமல் சாப்பிட்டு விடுவேன். அதற்குத் தகுந்தாற்போல, பரிமாறும் வரிசையில் வருபவற்றை வடிகட்டி கொஞ்சம் கொஞ்சம்தான் பரிமாறச் செய்வேன்.//
பதிலளிநீக்குஅதே அதே..நானும் அதே...
ஏற்கெனவே போட்டுத் தயாராய் இருக்கும் ஐட்டங்களை என்ன செய்ய முடியும்! //
ஆமாம் எனக்குக் குறிப்பாக ஸ்வீட் மற்றும் ஊறுகாய்!! சாப்பாட்டின் அளவு!!! இந்த இரண்டுமே பிடிக்காது என்றில்லை....நானே ஸ்வீட்டு!! ஊறுகாயும் சாப்பிடுவதைத் தவிர்க்கிறேன். ஆனால் ஊறுகாயேனும் சாப்பிட்டுவிடுவேன்..ஸ்வீட்டை பார்த்துக் கொண்டே இருப்பேன்....மகன் என்றால் அவன் பால் கலந்த ஸ்வீட் என்றால் வாங்கிக் கொண்டுவிடுவான். அவனும் அப்புறம் ஸ்வீட் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகிறான். அம்மா ஸ்வீட்டாச்சே என்று. கணவர் இருந்தால் நைசாக அவரிடம் கேட்கவே வேண்டாம் அங்க தள்ளி விட்டுடலாம்! எந்த ஸ்வீட்டுக்கும் என்றுமே நோ சொல்ல மாட்டார்.
கீதா
எனக்கென்னவோ இந்த கீதா ரங்கன், போன ஜென்மத்துல, அடுத்த ஜென்மத்துக்கும் சேர்த்து ஸ்வீட்ஸ் சாப்பிட்டிருப்பார்னு தோணுது.
நீக்குஹாஹாஹாஹா நெல்லை...இருக்கலாம் நெல்லை ஹூம் என்ன பண்ண இப்ப திருப்தியா சாப்பிட முடியவில்லையே!!!
நீக்குகீதா
தாவங்கடைக்குப் பதில் தவடை என்று திருத்தி படித்துப் பாருங்கள். ஒசை நயம் தளை தட்டாமல் இன்னும் அழகாய் பொருந்தி வரும்.
பதிலளிநீக்குஎனக்கு என்னவோ தவடை என்கிற வார்த்தை பிடிக்கவில்லை ஜீவி ஸார்...
நீக்கு:>)))
தவடை பிடிக்கலேனா, தாடை.
நீக்கும்ம்ம்... சட்டென தோன்றியது தாவாவங்கட்டைதான். தாடை ஓகேதான்!
நீக்குஸ்ரீராம் அந்த ப்ரௌன் வஸ்து தோசைக்குத் தொட்டுக் கொள்வதாக இருந்திருக்கும். ஒரு வேளை அது வடைகறி அல்லது வெங்காயம் போட்ட கெட்டிக் கொத்ஸு அல்லது வதக்கியது அல்லது அப்படியான ஒன்றாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஇதுக்குத்தான் இலைல உள்ளத முதல்ல எல்லாம் டேஸ்ட் பாத்திரணும் அப்பத்தான் எது எதுக்கு ஜோடின்னு பார்த்து சேர்த்து வைக்கணும் ஹிஹிஹிஹி
நான் செய்யும் வழக்கம். சில சமயம் ஜோடி மாத்தியும் சுவைப்பேன்!!!!!
கீதா
நானும் இஷ்டப்படி சுவைப்பேன்தான்.
நீக்கு* தாவாங்கட்டைக்கு
பதிலளிநீக்குபு
நீக்குரி
ந்
த
து
!
பாருங்க சொன்னேனில்ல அது வடைகறியாகத்தான் இருக்கும்னு!!! மதியம் செய்த வடை மீந்திருக்குமோ!!!? ஹாஹாஹா
பதிலளிநீக்கு//கைகழுவ எழுந்து போகும்போது 98 சதவிகித இலைகளில் பலப்பல பதார்த்தங்கள் அப்படியே இருப்பதைப் பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கும்.//
ஆமாம் எனக்கும் தோன்றுவதுண்டு.
// சாப்பிடுபவர்களும், அவர்கள் பரிமாறும்போது "யாருக்கு வந்த விருந்தோ" என்று பார்த்துக் கொண்டிராமல், தான் சாப்பிடக் கூடியவற்றை மட்டும் தேவையான அளவு பரிமாறச் சொல்லலாம்.//
ஆமாம் ஸ்ரீராம் ஆனால் பாருங்க பெரும்பாலானோர் கவனிக்காம போட்டுக்கிட்டு இல்லைனா சும்மா வேண்டாம்னு சொல்லாம எல்லாத்தையும் வாங்கிப் போட்டுக் கொள்வார்கள் ஆனால் கடைசியில் நிறைய மீதம் வைப்பார்கள். எனக்குக் கொஞ்சம் கோபம் வரும்.
கீதா
எனக்குப் பிடிக்காத்தை இலையில் வாங்கிக்கொள்ளப் பிடிக்காது. கல்யாண உணவிலும், புளியோதரை, மிக்சர், தேன்குழல் போன்ற வஸ்துக்களை வேண்டாம்னு சொல்லிடுவேன்.
நீக்குஅது சரி... உணவை வீண்டிக்கிறார்கள் என்று கவலைப்படறீங்களே.. ஸ்வீட் இன்னொன்று கேட்டால் கொடுத்திடுவாங்களா இந்த கேடர்ர்ஸ்?
இதில் பெண்கள்தான் வீணடிப்பதில் அதிக சதவிகிதம் என்று நினைக்கிறேன் கீதா... ஹிஹிஹி... பரிமாறும்போது வேண்டாம் என்று சொல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!!!
நீக்குநெல்லை ஸ்வீட் கேட்டா கொடுப்பாங்க...பெரும்பாலும் அதாவது அங்கேயே செய்து சாப்பாடு கொடுப்பதென்றால்...வெளியிலிருந்து வரவழைத்து என்றால் கொடுப்பது அபூர்வம். ஏனென்றால் கணக்கு உண்டே...
நீக்குஸ்ரீராம் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். அதுவும் குழந்தைகளுக்கும் தனி இலை போடச் சொல்லி...வீணாக்குவார்கள்.
கீதா
மணமக்கள் வேறு வரவேற்பு என்றால் ஆறு மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும் ஏழரைக்கு மேல் எட்டு மணிக்கு என்றெல்லாம் மேடைக்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். //
பதிலளிநீக்குஎனக்குக் கடுப்பாகும் விஷயம். இது.
என் தனிப்பட்டக் கருத்து இப்போதெல்லாம் கூகுள் பே, அது இது என்று இருக்கிறதே...அல்லது அப்படியான கல்யாண மொய் அக்கவுன்ட் என்று ....அதற்கு நேரடியாகச் செலுத்திவிட்டால்...இந்த வரிசை கூட்டம் தாமதம் எல்லாம் தவிர்க்கலாம் இல்லையா?
கீதா
மொய் கூகுள் பே போன்றவற்றில் அனுப்பலாம்தான். மேடையில் ஏறி நின்று பல்லைக் காட்டி போஸ் கொடுக்க வேண்டுமே..! என்னவோ போங்க... அலங்காரத்துக்கு (மேக்கப்) லேட் ஆகிவிட்டது என்று எட்டு மணிக்கு மேல் மேடைக்கு வருவதை பெண் மாப்பிள்ளைகள் மாற்றிக் கொள்ளவேண்டும். வந்திருப்பவர்கள் சிரமங்களை புரிந்து கொள்ளவேண்டும்.
நீக்குமேடையில் ஏறி நின்று பல்லைக் காட்டி போஸ் கொடுக்க வேண்டுமே..! //
நீக்குஹிஹிஹி
நான் நைசா கழண்டுறுவேன்...ஹாஹாஹா பெரும்பாலும் ஃபோட்டோவில் நிற்பதில்லை....நெருங்கிய குடும்ப விசேஷம் என்றால் தவிர்க்க முடியாததால்....
இரண்டாவது பார்ட் பதிலில் டிட்டோ
கீதா
__/\__
நீக்குமுதல் பகுதியின் கடைசிப் பத்தி டிட்டோ என் வழக்கமும்.என்பதால்..
பதிலளிநீக்குகீதா
ஆரம்ப காலங்களில் எனக்கென்ன என்று வந்துவிடுவேன். இப்போதெல்லாம் இது புதுப்பழக்கம்!
நீக்குஎத்தனை காலத்துக்கு தமனா, அனுஷ் புராணம்? எங்கள் பிளாக்கிற்கு வயசாகி விட்டதாலா?..
பதிலளிநீக்குஹஹ்ஹ்ஹாஹா... (நெல்லை பாணி) விட்டுப் போயிடுத்து..
நீக்குவயதாகாததால்..!
நீக்குஒரு கவிதை அரைகுறையாய் நினைவுக்கு வந்து பல்லிடுக்குப் பாக்காய் தொல்லை தருகிறது. யாரோ பிரபலம் எழுதி சுஜாதா ரெபர் செய்த கவிதை... மனக்கதவம் தட்டி என்று வரும்... சிற்பி கவிதை என்று நினைவு. முழுவதும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது!
மனக்கதவு தட்டி
நீக்குமாணிக்கம் கொட்டுகின்ற
எனக்கு வயதாவதில்லை
என்றும் இளையவன் நான் '
இதுதான் சிற்பி கவிதை. தேடி எடுத்து விட்டேன்!
தாடி மீசை கவிதை - ஹாஹாஹாஹாஹாஹ....நல்ல ரசனையான கற்பனை ஸ்ரீராம்!!! அதுவும் மீசை தாடியைப் பிடிக்குதாமே ஆஹா!!
பதிலளிநீக்குபுல்லிங்கோ ஸ்டைல் தலைல தொப்பி வைச்சாப்ல இருக்குமே! அதுக்குக் கலர் வேற அடிச்சிக்கறாங்க. பெண்களுக்கு நிகராகப் போட்டியாக ஆண் பிள்ளைகளும் இப்ப...அவர்களுக்கும் அழகுநிலையம் எல்லாம் நிறைய வந்துவிட்டது.
கீதா
ஹையோ... கண்றாவி கீதா அது!
நீக்குஎஸ்ஸு ஹைஃபைவ் ஸ்ரீராம் எனக்கும் ...
நீக்குகீதா
எஸ்பிபி விஷயம் வெகு சுவாரசியம்.
பதிலளிநீக்குநான்அறிந்த வரை அவர் ரசிகர்களின் வேண்டுகோள் உண்மையாக இருந்தால் அவர் உடனே பாடிவிடுவார் என்று. பந்தா எதுவும் செய்யாமல். எளிமையானவர் என்றுதான் எல்லாரும் சொல்லியிருந்தார்கள். அஞ்சலியின் போது.
இப்பவும் அவர் இல்லை என்று வருந்துவதுண்டு.
கீதா
எஸ் பி பியை விடுங்கள். அதில் சொல்லப்பட்டிருக்கும் ரஜினி கலாட்டா பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...
நீக்குஸ்ரீராம் நேற்று அப்புறம் வர முடியாமல் விட்டுப் போச்சு...இரண்டு மெயினா
நீக்குருமாலி ரோட்டி ...அது மெலிதாக கர்சீஃப் போல செய்யறது...முடிஞ்சா செய்யும் விதம் நான் செய்யும் போது (இப்பல்லாம் ரொம்பக் குறைந்துவிட்டது இதெல்லாம் செய்வது) படம் எடுத்து அனுப்புகிறேன்.
அடுத்து ரஜனி...அவர் செய்த கலாட்டா ரொம்ப அசிங்கம் தான். பப்ளிக்கா...அதுவும் அந்தக் காலகட்டத்தில் அவர் ரொம்ப ரூட் ஆகத்தான் இருப்பதாக அறிந்திருக்கிறேன். ...ஆனால் அவர் அதை வெளிப்படையாகச் சொன்னதைப் பாராட்டலாம். கூடவே பாருங்க எஸ்பிபி பத்தி
//என்னை மறந்திருந்த அந்த நிலையிலும் 'மகுடிக்குக் கட்டுண்ட நாகம்' போல பாலுவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டேன். //
எஸ்பிபி க்ரேட்! அவர் குரல் அப்படியான ஒன்று. சாதாரணமாகப் பேசினாலே ஒருவரை சாந்தப்படுத்தும் குரல்!
ரஜனிக்கு நரம்புத் தளர்ச்சி நோய் இருந்தது என்றால் ஏன் அவர் அந்த நாட்களில் அதிகம் புகைப்பிடித்து குடித்து ட்ரக் கூட உண்டு என்று எப்போதோ அறிந்த நினைவு அதனால் ஹாஸ்பிட்டலில் எல்லாம் சிகிச்சை பெற்றதாகவும்...ஏற்கனவே இருந்த நோயை அதிகப்படுத்திக் கொண்டாரா இல்லை பழக்கங்களினால் நரம்புத் தளர்ச்சி இருந்ததா என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் அவர் டென்ஷன் பார்ட்டிதான்.
கீதா
ஆம்.. ரஜினியின் வெளிப்படையான பேச்சு, குணம் கவனிக்கத்தக்கது.
நீக்குதமன்னா நல்லாத்தானே இளமையாக இருக்காங்க...இந்த நெல்லைக்குத்தான் வயசாச்சு அதான் தம்ன்னாவை கிழவின்றார்...!!!!! ஹூம்...
பதிலளிநீக்குபாவம் தமன்னா புள்ளை!
//தமன்னா பற்றி செய்தி சொல்லி, அனுஷ் பற்றிச் சொல்லவில்லை என்றால் நெல்லை வருத்தப்படுவார். எனவே அனுஷ் பற்றி ஒரு செய்தி..//
நினைச்சேன் தமன்னா படம் பார்த்ததும் அனுஷ்? நு தோன்றியது..ஆமாம் சைலன்ஸ் சரியா போகவில்லை என்று சொல்லப்பட்டது.
கீதா
இன்னா லாஜிக் இது கீதா ரங்கன்?
நீக்குயாரேனும் பத்மினி அவ்வளவு அழகு, சரோஜாதேவி போல வருமா என்று சொன்னால் அவங்க வயசு 60னு நினைப்பீங்களால்லை 20 என்றா?
மறுபடியும் நினைவுக்கு வராத அந்த சிற்பி கவிதைதான் தொல்லை தருகிறது!
நீக்குஹலோ நெல்லை இந்த் லாஜிக் நேற்றைய சாரி புதன் கருத்தோடும் சேர்த்து சொல்லிருக்கேனாக்கும்!! ஹாஹாஹா
நீக்குகீதா
சிரிப்புத் திருடனை ரசித்தேன்
பதிலளிநீக்குசிரிப்புத் திருடன் முதல் படத்தில் இரண்டாவது முழுசும் இல்லையே
கீதா
பைண்ட் செய்த புத்தகம். இவ்வளவுதான் வருகிறது. ஓட்டுகளை பிக்பாக்கெட் அடிக்க முடிந்தால் சுளுவா எம் எல் ஏ ஆகிவிடுவாராம் சிங்காரவேலு!
நீக்குபாஸ் உங்கள் பதிவுகளை படிப்பதில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் தைரியமாக குறை கூறுகிறீர்கள். படித்திருந்தால் இனி வாரம் முழுவதும் கத்திரிக்காய் கறி தான்.
பதிலளிநீக்குநகரங்களில் தான் 20 30 பதார்த்தங்கள் உண்டாக்கி சாப்பிடவருபவரை குழப்(ம்)பி எல்லாவற்றையும் வீணாக்குகிறார்கள். கிராமங்களில் வசிப்பவர்கள் எல்லாம் பசி பட்டினி பழகியவர்கள். இல்லை என்றால் பட்டினி கிடக்கவும் செய்வார்கள், நிறையக் கொடுத்தால் கொடுத்தது முழுவதையும் சாப்பிடுவார்கள். ருசி ஒன்றும் பெரிதாகப் பார்ப்பதில்லை. உழுபவனுக்கே தெரியும் உழைப்பின் உயர்வு.
கவிதை செப்டம்பர் 17 அன்று எழுதினீர்களோ? அன்று இரண்டு புகழ் பெற்ற தாடிக்காரர்கள் பிறந்த நாள். கடவுளை வைத்து பிழைத்தவர்கள். ஒருவர் இல்லை என்று கூறினால் மற்றவர் கோவில் கட்டுவேன் என்று கூறி வெற்றி பெற்றவர்.
முதலாளி ஜோக் சூப்பர்.
Jayakumar
அது ஒரு டெக்னிக் ஜெயக்குமார் சந்திரசேகர் சார்... த்ராபை பதிவுகளை எல்லாம் 'படி படி படி சூப்பரா இருக்கும்'னு அவ்வப்போ தொந்தரவு செய்தால் அலர்ஜியாகி இந்தப் பக்கமே வரமாட்டாங்க... தைரியமா நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்!
நீக்குஇப்போதெல்லாம் நகரம் ஏது? கிராமம் ஏது? எல்லோரும் ஒரே மாதிரிதான் செய்கிறார்கள், ஆயினும் ஓரிரு ஐட்டங்களோடு விருந்துகளை முடித்துக் கொள்வோரை பார்த்திருக்கிறேன்.
கவிதை செப் 17 எழுதவில்லை. 21 ஆம் தேதி எழுதினேன்! அந்த ரெண்டு தாடிகள் வம்புக்கு நான் போவதில்லை!!!
கத்திரிக்காயை எல்லோரும் விரும்பும் வகையில் சமைப்பது எஜிப்தியர்கள்தான்.
பதிலளிநீக்குஓ.. அப்படியா ஜி?
நீக்குசுவையான விருந்தின் அனுபவம் அருமை...
பதிலளிநீக்குதேவையானதை மட்டும் வாங்கி சாப்பிடுவதே நல்லது...
முன்னரே நிரப்பி வைப்பதை தடுப்பதும் நல்லது...
சிலர் சிறு குழந்தைக்கும் இலை போடச் சொல்லி - - - மூடும் போது முக்கால் வாசி உணவு பண்டங்கள் அப்படியே இருக்கும்...
ஆமாம். அதுவும் ஒன்று இருக்கிறது DD. அதைச் சொல்ல மறந்து விட்டேன்!
நீக்குஎனக்கு என்னமோ குழந்தைகளுக்குத் தனி இலை போடுவது தப்பென்று தோன்றவில்லை. நம் இலையிலேயே எடுத்துச் சாப்பிடுவதை விடத் தனி இலை போட்டு அவங்க கேட்பதை மட்டும் இலையில் கொஞ்சமாக வைத்துத் தானாக எடுத்துச் சாப்பிடப் பழக்கலாம். எங்க குழந்தைகளை நான் இப்படித் தான் பழக்கினேன். என் இலையிலிருந்து நான் சாப்பிடும்/சாப்பிட்ட சாப்பாடைக் கொடுத்ததே இல்லை. ஆயுசு குறையும் என எங்க பக்கம் சொல்லுவாங்க.
நீக்குஎழுத்துரு அருமை...
பதிலளிநீக்கு??? புதிதாக நான் ஒன்றும் செயயவில்லையே...
நீக்கு// எஸ்! என்ன செய்கிறேன் // முதல் // சினிமாவுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் // வரை மற்றும் முடிவில் உள்ள இரு படங்களின் கருத்தும் - வழக்கம் போல் எழுத்துரு...
நீக்குமற்றவை எல்லாம் times new roman எழுத்துரு...!
வேறு ஒன்றுமில்லை... ஏற்கனவே எழுதப்பட்ட பதிவில் சிலவற்றை இணைத்துள்ளீர்கள் என்று தெரிகிறது... Ms-Word-ல் இருந்து copy செய்து இங்கு paste செய்திருக்கும் போது நடந்திருக்கலாம்...
கணினியில் வித்தியாசம் தெரியாது... உங்கள் கைபேசியில் நேற்றைய பதிவையும் இன்றைய பதிவையும் பாருங்கள்...
ஓஹோ... நீங்கள் சொல்லி இருப்பது சரிதான். நான் சேமித்து வைத்திருந்த இடத்தில் டைம்ஸ் நியூ ரோமன் எழுத்துருதான் இருந்திருக்கும். அபப்டியே இங்கு ஒட்டினேன்!
நீக்குஇது போல உணவு வீணாவதைத் தவர்க்க என் பெண்கள் கல்யாணத்தில் என்ன என்ன ஐயிட்டம் என்பதையே பிரிண்ட் செய்து சுவற்றில் அனைவரும் பார்க்கும் படி ஒட்டி வைத்திருந்தோம்..கொஞ்சம் பயன் இருந்தது..
பதிலளிநீக்குஅப்படியும் பயன் பெரிய அளவில் எதிர்பார்த்திருக்க முடியாதுதான் ரமணி ஸார்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமை. மேலும் அருமையான பல்சுவை விருந்துடன் கூடிய கதம்பம். ரசித்தேன்.
உங்கள் பாஸுக்கு கத்திரிக்காய் பிடிக்காதா? ஆமாம்.. நிறைய பேர் அதை தவிர்ப்பதை பார்த்திருக்கிறேன். எங்கள் மாமியாருக்கு கத்திரிக்காய் என்றால் உயிர். அதை வைத்து தினசரி வேறு வேறு வகையில் செய்து தந்தாலும் அலுக்காமல் சாப்பிடுவார். அவ்விதம் எனக்கும் அந்த காய் இப்போது பிடித்து விட்டது.
உணவை ஒதுக்குவது எனக்கும் பிடிக்காத விஷயம். முதலில் பரிமாறியதை சாப்பிட்டு கொண்டிருக்கையில், மேலும் பரிமாற வரும் போதே வேண்டாமென தடுத்து விடுவேன். என்னால் உணவை வேஸ்ட் செய்யாமல் தடுத்து விட்டோம் என்ற ஒரு சிறு திருப்தி எழும். ஆனால் நீங்கள் கூறியபடி, எழுந்து கையலம்ப போகும் போது நிறைய உணவுகள் எல்லோர் இலையிலும் ஒதுக்கப்பட்டு இருப்பதை பார்க்கும் போது மனசு வருத்தப்படும்.
நீங்கள் பொறுப்பாளரிடம் பக்குவமாக எடுத்துக் கூறியதை வரவேற்கிறேன். அவரும் அதை நல்லவிதமாக எடுத்துக் கொண்ட பொறுப்புணர்ச்சியை பாராட்டலாம். சில பேர்கள் அதையும் கண்டு கொள்ள மாட்டார்கள். (அது அவர்கள் கைக்காசு இல்லையே... அந்த அலட்சியம் அவர்களை நம் பேச்சை செவிமடுக்க செய்யாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.) விருந்தில் நடந்ததை நன்றாக எழுதியுள்ளீர்கள். தோசைக்கு தொட்டுக் கொள்ள வடைகறியா? சில இடங்களில் சட்னியுடன் எண்ணெய் கூடிய மிளகாய் பொடி பரிமாறுவார்கள். ஆனாலும்,நீங்கள் எங்களுக்கு பரிமாறிய இலையை கண்டவுடன் பசி வந்து விட்டது. (குறிப்பாக அதில் சிலவற்றை செய்து உண்ணும் ஆர்வம்) மாஹாலயபட்சத்தில் அதில் இருக்கும் சில உணவுகளை உடனடியாக செய்து சாப்பிட முடியாது. ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறுவயதிலேயே கத்தரிக்காயைப் பற்றி தவறான அபிப்ராயத்தை குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக என் பெரியவனுக்கு கத்தரிக்காய் பிடிக்காததற்கு என் பாஸ்தான் காரணம்! முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு "எனக்குப் பிடிக்காது... உனக்கு வேணும்னா போடறேன்" என்பார்!!!
நீக்குபொறுப்பாளரிடம் ஐட்டங்கள் கண்டாய் இருந்தன என்று பாராட்டுப் பத்திரம்தான் வாசித்தேன். குறிப்பாக சொல்லும்போது நிஜமாகவே நன்றாய் இருந்த ஐட்டங்களை பட்டியலிட்டேன்!
நன்றி கமலா அக்கா.
//..பொறுப்பாளரிடம் ஐட்டங்கள் கண்டாய் இருந்தன..//
நீக்குநன்றாய் இருந்தன என்று வாசிக்கவும்.
:((
என் மன்னியும் பாகல்காய் பிடிக்காது என்பதால் குழந்தைகளுக்குப் போட்டால் "கசக்கப் போறது! பார்த்துச் சாப்பிடுங்க!" என்பார். அப்புறமா அவங்க ஏன் தொடறாங்க! :(
நீக்கு/நன்றாய் இருந்தன என்று வாசிக்கவும்./
நீக்குபுரிந்து கொண்டு அப்படித்தான் படித்தேன். நன்றி.
ஆமாம்.. சகோதரி..பாகற்காய் சின்ன வயதில் அதுவும் குழந்தைகளுக்கு பிடிக்காது..அதை சாப்பிட ஒரு பக்குவம் வர வேண்டுமென அந்த காலத்து பெரியவர்கள் சொல்வார்கள். பதினெட்டு வயதிற்கு பிறகுதான் பிடிக்க ஆரம்பிக்கும் என வயதை குறிப்பிட்டும் சொல்வார்கள். சாப்பிட வேண்டும் என ஆர்வமிருக்கும் குழந்தைகளும், அந்த வயதிற்காக காத்திருப்பார்கள். இப்போது குழந்தைகளுக்கு ஒரளவு நிறைய பருப்பு தேங்காய்யுடன் செய்து கொடுத்து உடம்புக்கு நல்லது என்றால் அழகாக சாப்பிடுகிறார்கள். பாகல் ஒருவேளை அதன் கசப்பு சுவையும் காலத்திற்கேற்றவாறு மாற்றிக் கொண்டு விட்டதோ என ஆச்சரியபட வைக்கிறது.:)
ஆமாம்... ஆமாம்.. பாகற்காயும் எங்கள் வீட்டில் அதே கதைதான்!
நீக்குநானெல்லாம் கத்திரிக்காய் ரசிகை. ஆனால் இப்போதெல்லாம் அலுத்துவிட்டது. பின்னே? வாரம் நான்கு நாட்கள் கத்திரிக்காய்னா என்ன செய்யறதாம்?
பதிலளிநீக்குமதன் ஜோக்ஸ் வழக்கம் போல் அருமை. சி.தி.சி.வே. கலக்கல். உங்கள் கவிதை நன்று. வாரம் ஒரு கவிதைனு போட்டுட்டு இருக்கீங்களே! அதை எல்லாம் சேர்த்து வைத்திருந்தது தொலைஞ்சு போச்சே! அப்புறம் எப்பூடி?
நன்றி கீதா அக்கா... மதனின் சி தி சி வே மட்டுமல்ல ரெ வா ரெ முஜாமு எல்லாமே நன்றாய் இருக்கும்!
நீக்குபிளாக்கில் போட்டிருக்கும் கவிதைகளை எடுப்பது எளிது அக்கா. மெதுவாய் ஒரு நாள் செலவு செய்தால் எடுத்து விடலாம். மற்றவைதான் கஷ்டம்.
நேத்திக்குக் கூடச் சப்பாத்திக்குக் கத்திரிக்காய்+உருளைக்கிழங்கு சேர்த்து குஜராத்தி முறையில் கறி.
நீக்குஓ... கத்தரிக்காயுடன் உகி? சேருமா?
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுக்கு முன்னே கூட சுமார் ஒரு லக்ஷம் தரம் எங்க அம்மா கத்திரிக்காய்+உகி+வெங்காயம் சேர்த்துக் கறி பண்ணிப் போடுவார் எங்களுக்கெல்லாம். சின்ன வயசிலே இருந்தே பழக்கம்னு சொல்லி இருக்கேன். :)))))))
நீக்குநேற்றைய கறிக்கு நோ வெங்காயம். நோ கரம் மசாலா. வெறும் ஜீரகம், மி.பொ+த.பொ+ஜீரகப் பொடி+அம்சூர் மட்டும் போட்டு!
நீக்குஅநேகமாய்க் கல்யாணங்களில் நான் சாப்பாட்டைத் தவிர்க்கும் ரகம்.
பதிலளிநீக்கு(ருமானி ரோட்டியாம். கையுறை அணிந்த அந்தப் பெண் அப்புறம் சொன்னார்) //அது ருமாலி ரோட்டி. ருமால் என்றால் கைத்துண்டு. மெலிதாக மடித்து வைப்பார்கள் இல்லையா கைத்துண்டை! அதைப் போல் இந்த ரொட்டியையும் மடித்து வைத்திருப்பார்கள். எடுத்துப் பிரித்தால் பெரிசாக மெல்லிசாக வரும்.
//அது ருமாலி ரோட்டி. ருமால் என்றால் கைத்துண்டு.//
நீக்குஹிஹிஹி... இதெல்லாம் யாருக்குத் தெரியும்? காதில் விழுந்ததைச் சொன்னேன்!
hand kerchief என்று பொருள் கொள்ளவும்.
நீக்குவியாழன் பதிவு வழக்கம் போல் ஸ்வாரஸ்யம். விருந்துகளில் எதையும் வீணாக்கக்கூடாது என்பது என்னுடைய கொள்கையும் கூட. இலையில் வைக்கப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் டேஸ்ட் பார்த்து விடுவேன். உணவு நன்றாக இருந்தால் சமையல்காரரிடம் பாராட்டி விட்டு வருவேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஐட்டங்களைப் பார்த்தால் சமையல் காண்டிராக்டர் கிருஷ்ணகுமார் சுருக்கமாக என்.எஸ்.கே. என்பவரோ என்று தோன்றுகிறது. சிப்ஸ் உட்பட இதே ஐட்டங்கள்தான்.
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு அனுஷ்காவை காண கிடைத்ததில் மகிழ்ச்சி. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு..ஹாஹாஹா!
கவிதை... ம்ம்ம்!
அப்படியா? கான்டராக்டர் பெயர் கேட்டுக்கொள்ளவில்லை. சாதாரணமாக அவர்கள் கார்டை நம் கையில் திணிப்பார்கள். அதுவும் இல்லை. அங்கு வெற்றிலை பாக்கு தட்டில் வைத்திருந்தார்கள். நான் எடுக்கவில்லை.
நீக்குஅறுசுவைக் குழுவினரின் உணவுப் பட்டியல், மும்பைக்காரர் ராஜசேகரன் ஆகியோரும் மெனு கார்டை இலைக்குப் பக்கமே வைப்பார்கள். ராஜசேகரன் எனக்குத் தெரிந்து அதிகம் பணம் வாங்குவார். ஒரே நாளில் மும்பை கல்யாணங்களிலும் செய்வார்/சென்னைக்கும் பொறுப்பு எடுத்துக்கொண்டிருப்பார்.
நீக்குஅடடே... என்ன ஒரு திறமை...
நீக்குஇருக்கலாம் ஶ்ரீராம். ஆனால் எல்லாவற்றிலும் சோபிக்காது. :(
நீக்குஎன் மைத்துனர் கண்டிப்பாக அவரைத் தான் கூப்பிடுவார். ஆனால் எல்லா விழாக்களிலும் சாப்பாடு தரம் குறைந்தே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் சுமாராகவே இருந்தது.
நீக்குஆம். நான் பார்த்த சில இடங்களிலும் இதுமாதிரி உதாரணங்கள் உண்டு!
நீக்குசந்திரமுகி-2வில் நடிப்பது பற்றி எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறாரா அன்ஷ்கா? பொன்னியின் செல்வனில் ஏதோ ஒரு முக்கியமான ரோலுக்கு அழைத்து, இவரிடமிருந்து சம்மதம் வராததால் காத்திருக்கிறார்கள் என்று செய்தி வந்ததே? எந்த ரோலாக இருக்கும்? செம்பியன் மாதேவி? எனக்கென்னவோ நந்தினி பாத்திரத்தில் அம்சமாக பொருந்துவார் என்று தோன்றுகிறது. ஆனால் மணிரத்தினத்திற்கு ஐஸ்வர்யா ராயைத்தானே பிடிக்கிறது.
பதிலளிநீக்குஅனுஷுக்கு என்ன கஷ்டமோ!
நீக்குகல்யாண விருந்துகளில் சாப்பாட்டுக்கும் எனக்கும் பொருந்தாது பலநேரங்களில் வயிறு நிறை யாமல். இருக்கும்மேலும் கத்தரிக்காய் எனக்கு பிடிக்காது
பதிலளிநீக்குஉங்களுக்கும் கத்தரிக்காய் பிடிக்காதா ஜி எம் பி ஸார்? அச்சச்சோ...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகவிதை வழக்கம் போல் அருமை. ரசித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
எஸ. பி.பி பற்றிய செய்தி நன்றாக உள்ளது. தயக்கமில்லாமல் தன் ரசிகரை திருப்தி செய்வதற்காக அவர் விமானம் என்று கூட பாராமல் பாடியது அவரது பெருமைகளுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்.
நீண்ட நாட்கள் கழித்து பாரபட்சமில்லாமல், தமன்னா, அனுஷ்கா படங்களுடன் அவர்களைப் பற்றிய விபரங்களும் நன்றாக உள்ளது.
ஜோக்ஸ்கள் நன்றாக உள்ளது.
நீங்கள் உணவை வீணாக்குவது பற்றி சொல்லும் போது, முன்பெல்லாம் கிராமங்களில்,திருமணம் போன்ற விஷேடங்களுக்கு பந்தி இலை போட்டு பரிமாறும் போது, பல பேர்கள் அருகில் அமர்ந்திருக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் சரி, தங்கள் இலையில் பரிமாறப்படும் பொழுதும் சரி, இனிப்பு,வடை, பட்சணங்கள் இவற்றை தனியாக வாங்கி தாங்கள் கொண்டு வந்துருக்கும் பைகளில் வைத்துக் கொள்வார்கள். "வீட்டிற்குப் போன பின் ஆற அமர சாப்பிட்டுக் கொள்ளலாம். வீணாக இலைகளில் போட்டு தூர எறிய வேண்டாம்." என்பார்கள். அந்த பழக்க வழக்கங்கள் பின் வந்த காலங்களில் நாகரீக மாற்றத்தில் இந்த பழக்கம் மாறி விட்டதென நினைக்கிறேன். நீங்கள் சொன்னவுடன் எனக்கு என்னவோ இது நினைவுக்கு வந்தது. இன்று வைத்திருக்கும் தலைப்பு அருமை. "பணம் பந்தியிலே" என்பது மாறி, "பந்தியிலே பணம்" என வைத்திருப்பதை படித்ததும் எனக்கு இதைச் சொல்லத் தோன்றிற்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்தமைக்கு நன்றி கமலா அக்கா. குறிப்பாக தலைப்பை ரசித்ததற்கு மிக்க நன்றி.
நீக்குநான்/நாங்க இப்போவும் இலையில் போடும் இனிப்பு வகைகள், வடை, சமோசா போன்றவற்றிற்கெனத் தனிப் பை கொண்டு வந்து எடுத்து வைத்துக் கொண்டு முடிந்தால் பின்னர் சாப்பிடுவோம். இல்லை எனில் யாரேனும் ஏழைகளுக்குக் கொடுத்துடுவோம்.
நீக்குகத்தரிக்காய் கதை - ஆஹா!..
பதிலளிநீக்குவியாழன் விருந்து அருமை.. அருமை..
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குதலைப்பும் பதிவும் அருமை.
பதிலளிநீக்குவிருந்துகளில் முன்பே பரிமாறி வைத்து விடுவதும், அதை பார்த்தவுடன் சாப்பிடும் ஆசை போய் விடுவதும் உண்டு.
நாம் அமர்ந்த பின் பரிமாறினால் வேண்டும் வேண்டாம் என்று சொல்லி உணவு வீணா போவதை தடுக்கலாம். இளையில் பரிமாறி விட்டார்களே என்று சாப்பிட்டு விட்டு அவதி பட வேண்டாம்.
அது போல பரிமாறும் அன்பர்களை மேற்பார்வை செய்பவர்கள் விருந்து சாப்பிடும் அன்பர்கள் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் அதை பாராட்டினால் , மீண்டும் வேண்டுமா என்று கேட்டு பரிமாறும் பண்பை வாய் நிறைய பாராட்டி வரலாம். உணவு நன்றாக இருந்தால் எல்லோர் முன்பு பாராட்ட வேண்டும். உப்பு, உறைப்பு போட வேண்டும் என்றால் சமையல் அறை போய் "மாமா உணவு நன்றாக இருந்தது கொஞ்சம் உப்பு போட்டால் மேலும் நன்றாக இருக்கும்" என்றால் மகிழ்வார்கள் அடுத்த முறை கவனமாக இருப்பார்கள்.
குறை சொல்வதையும் மென்மையாகச் சொல்லவேண்டும் என்கிறீர்கள். நல்ல விஷயம். நன்றி கோமதி அக்கா.
நீக்குஉங்கள் கவிதை அருமை.
பதிலளிநீக்கு//பாலு சற்றும் தயங்காமல் பாடத் தொடங்கி விட்டார். அன்று எங்களுடன் பயணம் செய்தவர் அனைவரும் இசை மழையில் நனைந்தனர். //
நல்ல மனிதர். பண்பை பாராட்ட வேண்டும்.
வெகு நாட்களுக்கு பிறகு தமன்னா, அனுஷ் எல்லோரும் வந்து இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.
நகைச்சுவை அருமை.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஇங்கு விஷேச நிகழ்வுகளில் பஃபே தான். தனிநபர் கணக்குத்தான் முன்பே பணம் கட்டிவிடுவார்கள். அவர்கள் பரிமாறமாட்டார்கள்..நாங்கள் எமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.சிலர் அளவுக்கு மீறி வைத்து உணவுகளை வீணாக்குவதும் உண்டு.
பதிலளிநீக்குமதன்ஜோக்ஸ் கலக்கல்.
தமனா,அனுஸ்கா வந்து விட்டார்கள் அடுத்து யாரோ? :)
அடுத்தது.... ம்ம்ம்.... பார்ப்போம்!
நீக்குஇங்கும் இப்போதெல்லாம் வட இந்திய உணவுகள் கல்யாணங்களில் இடம் பெறத் தொடங்கிவிட்டாலும் அத்தனை இல்லை. பெரும்பாலும் கேரளத்துக் கல்யாணங்களில் ஒரே நேர உணவுதானே.
பதிலளிநீக்குமதன் அவர்களின் நகைச்சுவைத் துணுக்குகளை மிகவும் ரசித்தேன்.
ஸ்ரீராம்ஜி உங்கள் கவிதை பிரமாதம், வழக்கம் போல
எஸ்பிபி ரஜனி குறித்த செய்தி சுவாரசியம்.
துளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குபந்தி குறித்த எண்ணங்கள் சரியே. முன்னரே ஒரு ஈடு பரிமாறுவதைத் தவிர்க்கலாம். அவரவர் வசதிப்படி செய்கிறார்கள். எதுவும் சொல்ல முடிவதில்லை.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு.