ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

நடைப்பயிற்சி நேரத்தில் எடுத்த படங்கள்

 

இன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள படங்கள், என் நடைப்பயிற்சி செல்லும் பாதையில் நான் கண்டவை. 

அன்புடன் 

கௌதமன். 

= = = = = = = =

ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலையில் இவ்வளவு மட்டும் வளர்ந்திருந்த மூங்கில்,  அப்புறம் ஆறே நாட்களில், எவ்வளவு வளர்ந்தது என்பதை - கடைசி படத்தில் காணவும். 


பச்சை கோபுரம் !


தொங்கும் தோட்டங்கள் 


என்ன பெயர்? தெரியவில்லை !


செம்பருத்திப் பூக்கள் 


பப்பாளி 


மறைந்திருந்தே பார்க்கும் சில மலர்கள் 


ஒரு மலரும், சில மொட்டுகளும் --


இரண்டு மலர்க் கூட்டங்கள் 


இன்னும் அருகே 


தனிக்கட்சி 


நாம் மூவர் 


ஒற்றை ரோஜா 


ஆறே நாட்களில் - செப்டம்பர் இரண்டாம் தேதி காணப்பட்ட அபரிமிதமான வளர்ச்சி - மூங்கில் காம்பவுண்டு சுவரின் உயரத்தை மிஞ்சிவிட்டது. ! 



= = = = =
எங்கள் ஆசிரியர்கள் சார்பாக, எல்லா பதிவாசிரியர்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடம், பள்ளிப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும், இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். 



= = = = =

 


47 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர் தின வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
    நடைப்பயிற்சியின் போது எடுத்த படங்கள் எல்லாம் அருமை.
    பேர் தெரியாத பூ மரம் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஒரு பாடல் பெற்ற தலத்தில் இந்த மரம் தலமரம். சதுரக்கள்ளி என்று நினைவு.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    ஆசிரியர்களை வணங்கிப் பணிவோம். வாழ்க்கை முழுவதும் தொடரும் பாடங்கள் , அதைத் தரும் குருக்கள்
    நமக்குத் துணை.
    அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. மூங்கிலின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
    பெங்களூர் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி.

    பதிலளிநீக்கு
  5. எல்லாப் படங்களும் அருமை. செம்பருத்திப்
    பூக்கள் இத்தனை உயரத்தில், வீட்டிலிருந்தே
    பறிக்குமாறு சிறப்பாக
    வளர்ந்திருப்பது அருமை.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. பச்சை கோபுரமும் வீட்டு பால்கனியில்
    தொங்கும் மலர்த்தொட்டிகளும் மிக அருமை.

    கலை நயம் மிக்க ,வெகு சுத்தமான
    சுற்றுப்புறம். மிக ரம்யம்.படங்களும் கூடவே பயணிக்கும் எழுத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். எ.பி.ஆசிரிய குழுவினர்க்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    மூங்கிலின் வளர்ச்சி வேகமாகவே உள்ளது.

    அழகிய காட்சிகளின் தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  10. இன்னைக்கும் மட்டும் நினைக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் தினம் தினம் ஆசிரியர் தின வாழ்த்துகள். எ.பி. ஆசிரியர் குழுவினருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அந்தப் பெயர் தெரியாப் பூவின் மரம்/செடி, பாரிஜாதமோனு நினைச்சேன். கோமதி வேறே சொல்றார். பெரிசு பண்ணிப் பார்த்துட்டுக் கண்டுபிடிக்க முடியுதானு பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  12. கண்களுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியான செடி/கொடிகளும் வண்ணமயமான மலர்களும் பாதை நெடுகக் காட்சி தந்தால் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நடக்கலாமே! மூங்கிலின் வளர்ச்சியை எங்க வீட்டில் பார்த்திருக்கேன். இதுவானும் சில நாட்கள். பீர்க்கை காலையில் பார்த்ததுக்கு மதியமும்/மாலையும் அசுர வளர்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. வழக்கம் போல அழகான படங்களுடன் பதிவு..

    வாழ்க வளமுடன்..
    வாழ்க மகிழ்வுடன்!..

    பதிலளிநீக்கு
  14. @ கீதாக்கா..

    // பீர்க்கை காலையில் பார்த்ததுக்கு மதியமும்/மாலையும் அசுர வளர்ச்சியாக இருக்கும்... //

    ஸ்கூல் பரிட்சை முடிஞ்சு சித்தப்பா வீட்டுக்குப் போய்ட்டு வர்றதுக்குள்ளே திகு.. திகு..ந்னு வளந்திருப்பாங்க அடுத்த தெரு பொண்ணுங்க!..

    இதுக்குத்தான் கிராமங்களில் சொல்வார்கள் -

    " பொண்ணு வளர்த்தியோ.. பீர்க்கு வளர்த்தியோ!.." - என்று...

    அதெல்லாம் ஒரு காலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் 'பொண்ணு வளர்ச்சியோ...  புடலங்காய்  வளர்ச்சியோ' என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. புடலை அத்தனை விரைவில் வளராது. பீர்க்கையைப் போல்! பீர்க்கை நிமிஷத்துக்கு நிமிஷம் வளர்ந்து கொண்டிருக்கும்.

      நீக்கு
    3. ஆனால் சொலவடை புடலங்காய்தான்.

      நீக்கு
    4. இது ஸ்ரீராமின் சமீப கால வியாழன் பதிவு போல. க்ளைமாக்ஸ் இந்த வாரம்னு நினைத்தால், தொடரும் னு போட்டுடுவார்.

      நாளை நடப்பதை யாரே அறிவார்?

      நீக்கு
  15. மூங்கில் வளர்ச்சி வியக்க வைக்கிறது.

    பெயர் தெரியாத பூ எங்கள் வீட்டில் ரோஸ் கலர் உண்டு. நாங்கள் தேமா, அவரி,ரெம்பள் றீ என்ற பெயர்களால் அழைப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் தெரியாத மரம் ,பூ.

      Temple tree. Frangipani,.
      பல வண்ணங்களில் மகிழ்விக்கும் பூக்கள் ,மரங்கள்.
      இறைவன் கொடுத்த இயற்கை நறுமணம்.

      நீக்கு
  16. நடைப் பயிற்சியின் போது எடுத்த படங்கள் அனைத்தும் நன்று. மூங்கிலின் வளர்ச்சி - நன்று. சில காணொளிகளில் படிப்படியாக எடுத்து சேர்த்திருப்பதை கண்டிருக்கிறேன். மிகவும் வியப்பு தான் - இயற்கை தான் எத்தனை வியப்பான விஷயங்களை தம்முள்ளே வைத்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!