வெள்ளி, 15 அக்டோபர், 2021

வெள்ளி வீடியோ : சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்

 இன்று இரண்டு நேயர் விருப்பப் பாடல்கள்.  என் லிஸ்ட்டில் இருந்தாலும் தள்ளிக்கொண்டே போவதால் இன்று அந்தப் பாடல்களை பகிர்கிறேன்.

1976 ல் ஏ ஸி திருலோக்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் பத்ரகாளி.  மகரிஷியின் கதை.  இளையராஜாவின் இசை.  வாலியின் பாடல்கள்.

ஏற்கெனவே பொற்சிலை, தேன் சிந்துதே வானம் ஆகிய இரு படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் மலையாள நடிகை ராணி ஸாஹ்ந்திரா கதாநாயகியாக நடித்த முதல் தமிழ்ப்படம்.  ஆனால் 60% முடிந்த நிலையில் விமான விபத்தில் (அக்டோபர் 11, 1976) மறைந்துவிட, அவரைப்போன்றே இருந்த புஷ்பா என்கிற துணை நடிகையைக் கொண்டு அதிருப்தியுடனேயே மீதிப் படத்தை முடித்தார் ACT.  படம் பெரிய ஹிட்.  விகடன் பாராட்டியது.

இதில் இப்போது பகிரப்படும் காலத்தால் அழியாத, மறக்க முடியாத இந்தப் பாடல் 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' பல வருடங்களுக்கு முன் கங்கை அமரனால் முருகன்மேல் பாடலாய் எழுதப்பட்டு இதே டியூனில் போட்டு வைத்திருந்த பாடலாம்.

என்ன இனிமையான பாடல்...   இதே படம் தெலுங்கு, ஹிந்தி என்று பயணித்தபோது ஹிந்தியில் இந்தக் காட்சிக்கான பாடலையும் யேசுதாஸ்தான் பாடி இருக்கிறார்.  கய்யாம் இசை.  இனிமைதான், ஆனால் தமிழளவு இல்லை.  பாடல் திடீரென பாதையிலிருந்து தொடங்குவது போல இருக்கிறது ஹிந்தியில்.  கேட்க இங்கே சொடுக்கவும்!  கொஞ்சம் 'சாந்த்னி ராத்தோன்மே' சாயலில் இருக்கிறது.  அதுவும் கய்யாம் இசைதான்.  தமிழ் 'ஒரேநாள் உனை நான்' பாடலுக்கான ஹிந்திப் பாடல் அது!

கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை 
கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நான் எடுத்து பாடுகின்றேன் ஆராரோ 
மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ 

உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க 
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ  
உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க 
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ  
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா  
அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது 
உன் அருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது  
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா 
கேட்கும் வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா  

மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி  
வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி  
மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி  
வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி  
கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா 
கண்கள் படக்கூடும் என்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா



இரண்டாவது பாடல் கூட யேசுதாஸ்தான்.  முதல் பாடலில் உடன்  சுசீலாம்மா.  இதில் எஸ் பி ஷைலஜா.  மீண்டும் கோகிலா படத்தில் வரும் அத்தனைப் பாடல்களும் எனக்கு பிடிக்கும்.  மிகவும் பிடிக்கும்.  குறிப்பாக ராதா ராதா நீ எங்கே பாடல் முதலிடத்தில்.  இங் கேட்கப்பட்டிருப்பது 'சின்னஞ்சிறு வயதில்' பாடல். ரசனையான காட்சியமைப்புடன் படமாக்கி இருப்பார் ஜி என் ரங்கராஜன்.  இந்தப் படத்தில் தீபா வேடத்தில் முதலில் ரேகா நடிப்ப்பதாக இருந்தது.  ஒல்லியான ரேகா இடுப்பை கமல் கிள்ளுவது போல படம் கூட குமுதத்தில் வெளியாகி இருந்தது.  பின்னர் ரேகா நடிக்காததால் (அமிதாப் தடுத்து விட்டார் என்று வதந்தி!)  தீபா நடித்தார்!  ஸ்ரீதேவி ப்ராமணப்பெண்ணாக நடித்தது பெரும் பாராட்டைப் பெற்றது.  அவர் தனது முதல் பிலிம்பேர் அவார்டை வாங்கினார்.  அப்போது அவருக்கு வயது 17 தான்.

1981 ல் வெளிவந்த படம்.  கமல் ஸ்ரீதேவி, தீபா நடித்தது.  இரண்டு பாடல்கள் கண்ணதாசன், இரண்டு பாடல்கள் பஞ்சு அருணாச்சலம்.  இந்தப் பாடல் சந்தேகமில்லாமல் கண்ணதாசன்!  இசை இளையராஜா.

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி 
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி 
செல்லம்மா பேசவும் தோணுதடி  
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி 
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி 
செல்லம்மா பேசவும் தோணுதடி  

மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன் 
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான் 
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன் ஊமையைப் போலிருந்தேன் 
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி 
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி 
செல்லம்மா பேசவும் தோணுதடி  

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன் 
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன் 
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன் 
மோதும் விரகத்திலே செல்லம்மா...  


என்னவோ மறந்து விட்டது போல தோன்றுகிறதே...   என்னது...   ஆ...   ஞாபகம் வந்துடுச்சு...  நேயர் விருப்பம் கேட்டது யார் என்றே சொல்லவில்லை இல்லையா...   அதாவது...  இன்றைய நேயர் விருப்பப் பாடல்கள் இரண்டையும் விரும்பிக் கேட்ட நேயர் யாரென்றால் அது...

54 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் இனிய காலை வணக்கம் மா.
    அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துகள்.
    எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற அன்னை
    நமக்கு அருள் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. பாடல்கள் இனிமை. கேட்டவர் இனிமை.
    படங்கள் அருமை. பானும்மாவின் படமும் இனிமை.

    சின்னம்சிறு வயதில் பாடல் எத்தனை தடவை கேட்டாலும்
    அலுக்காது. ஸ்ரீதேவி கமல் நடிப்பும் ,
    டைரக்ஷனும் அந்த மாதிரி க்ரேட்.
    17 வயதா!!! ஸ்ரீதேவி நடிப்பும் கண்களும்
    அழுகையும் வடாம் போடுவதும் ,மடிசாரும்,
    கமல் கிள்ளலும் ரொம்ப ரொமாண்ட்டிக்:)
    கண்ணன் ஒரு கைக்குழந்தை பாட்டும் மிக ஜோர். ராணி சந்த்ரா

    sophisticated artist,

    மிக நன்றியும் விஜயதசமிக்கான வாழ்த்துகளும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா..  சில படங்களையும், சில கேரக்டர்களையும், பல பாடல்களையும் மறக்கவே முடியாது.  மனதில் இடம்பிடித்து விடும்.  வாழ்த்துகளுக்கு நன்றி.  விஜயதசமி வாழ்த்துகள்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துகள். அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய இரு பாடல்களும் அருமை. அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இந்த படங்களில் சிவக்குமார், ராணி சந்திரா, கமல்,ஸ்ரீதேவி ஜோடிப் பொருத்தங்களும் அருமையாக இருக்கும். இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் "ஒளியும், ஒலியும்" நிகழ்ச்சியில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

    படங்களின் விபரங்கள் கோர்வையாக சேர்த்து பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இறுதியில் விரும்பி கேட்டவரின் பெயர் சஸ்பென்ஸாக சொல்வீர்கள் என நினைத்தேன்.அதையும் அவரின் படத்துடனே பகிர்ந்து விட்டீர்கள்.பாடல்களை விரும்பி கேட்ட பானுமதி சகோதரிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள். அனைவரின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு அம்பிகை அருள் புரியவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. மீண்டும் கோகிலா படம் தொலைக்காட்சி தயவில் பார்த்தேன். பத்ரகாளியும் பார்த்தேனோ? ராணி சந்திரா இப்படி அநியாயமாய்ச் சின்ன வயசில் உயிர் துறந்தது வருத்தமானது. பிரபலம் ஆகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென விபத்தில் இறந்து விட்டார். இவரைப் போலவே இன்னொரு கன்னட நடிகையும் சின்ன வயசில் விமான விபத்தில் இறந்தார். பிஜேபிக்குப் பிரசாரம் செய்யப் போனார் என்று சொல்வார்கள். பாடல்கள் இரண்டுமே அடிக்கடி கேட்டு வந்தவை. பிடித்தமானவையும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இன்னொரு கன்னட நடிகை செளந்தர்யா.

      நீக்கு
    2. இருவருமே பாவம்தான்.  ராணிசந்திராவைவிட சௌந்தர்யா இன்னும் பேமஸ் ஆகி இருந்தார்.

      நீக்கு
    3. ஓ! சௌந்தர்யாவா? இவரை ஏதோ ஒரு ரஜினி படத்தில் அவருக்கு ஜோடியாகப் போட்டு வீணடித்துவிட்டதாய்க் கூடச் சொல்வார்கள். என்ன படம் என்றெல்லாம் கேட்காதீங்க! இம்மாதிரிச் செய்திகள் படிப்பதால் ஓரளவுக்குத் தெரியும். அந்த அளவுக்குப் படங்கள் பற்றித் தெரியறதில்லை. :)))) இப்போ முகநூல் தயவால் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !

    விஜயதசமி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்.
    இனிமையான பாடல்கள்.

    இரண்டு கதாநாயகிகள் இப்போது இல்லை. ஸ்ரீதேவி திறைமையான நடிகை. இன்று ஸ்ரீதேவி நடித்த மலையாள படம் பார்த்தேன்,1976 ல் அவர் நடித்த "துலாவர்ஷம்" 15 வயதுதான் இருக்கும். படத்தின் பேர். அவரை நினைத்து வருத்தப்பட்டேன், இங்கு, அவர் நடித்த படப்பாடல்.

    இனிமையான பாடலை நேயர் விருப்பமாய் கேட்ட பானுமதிக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, ஆமாம். இரண்டு நாயகிகளும் இன்று இல்லை என்பது உங்கள் கமெண்ட் பார்த்துதான் உரைக்கிறது.

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. நேயரின் தேர்வு சூப்பர் வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம். விஜயதசமி வாழ்த்துக்கள்! அம்பிகையின் அருளால் எல்லோர் வாழ்விலும் வெற்றியும், சந்தோஷமும் தழைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  13. இரண்டுமே காலத்தால் அழியா பாடல்கள்! மிக மிக இனிமையான பாடல்கள்! காட்சியமைப்பும் மிகவும் புகழ் பெற்றவை!

    பதிலளிநீக்கு
  14. மெசேஜ் போகிறதா என்று செக்கிங்க்...

    பல வருடங்களுக்கு முன் கங்கை அமரனால் முருகன்மேல் பாடலாய் எழுதப்பட்டு இதே டியூனில் போட்டு வைத்திருந்த பாடலாம்.//

    இந்தப் பாட்டிற்கு ட்யூன் கங்கைஅமரன் என்றாவது இசையமைப்பாளர் போட்டிருக்கலாமோ/போடச் சொல்லியிருக்கலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ கருத்து வந்துவிட்டதே!!!! நேற்று எல்லாம் ப்ளாகர் அப்படி படுத்தியது ...

      கீதா

      நீக்கு
    2. கங்கை அமரன் இசை அமைக்கவில்லை.  பாடல்தான் எழுதி இருந்தார்.  அப்பாவும் இளையராஜா டியூன்தான்.

      நீக்கு
    3. ஓ ஓகே ஓகே

      மிகவும் பிடித்த பாடல்கள்,. ரசித்து கேட்டவை. எப்போது கேட்டாலும் ரசிக்கும்படியான பாடல்கள். நல்ல இசையமைப்பு. கேட்டது பானுக்கா என்று தெரிந்துவிட்டது!!! கீழே வந்து பார்க்கும் முன்னரே!!!

      கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் அழகான மோகன ராகம்

      கீதா

      நீக்கு
  15. நான் விரும்பி கேட்ட பாடல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. இரண்டுமே மிக இனிமையான பாடல்கள். பத்ரகாளி பார்த்ததில்லை. மீண்டும் கோகிலாவின் கதை ஹாசன் பிரதர்ஸ் கதை இலாகா என்று டைட்டிலில் போட்டிருந்தார்கள். அதற்கு குமுதத்தில் ஹாசன் பிரதர்ஸ் கதை இலாகாவிற்கு கதை பஞ்சம் என்று விமர்சனத்தில் எழுதியிருந்தார்கள்.
    தீபா அறிமுக காட்சியில் எழுதப்பட்டிருந்த வர்ணனையை,"ரேகாவுக்காக எழுதப்பட்டதோ?"என்று சுஜாதா சாவியில் எழுதியிருந்த விமர்சனத்தில் கேட்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் கோகிலாவின் ரேகா நடித்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கலாம்.

      நீக்கு
    2. ஆமாம், படம் வேறு லெவலுக்குச் சென்றிருக்கும்.

      நீக்கு
  16. பாடலை விரும்பி கேட்டிருந்தவர் பெயரை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை ஶ்ரீராம். பிரிண்ட் மீடியா கோலோச்சிய காலத்தில் அதில் நுழைந்திருந்தால் எங்கேயோ சென்றிருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. (இந்த இடத்தில் ஒரு ஷை ஸ்மைலி போட்டுக்கொள்ளவும்!)

      நீக்கு
    2. பானுக்கா அதே அதே..உங்கள் கருத்தை பலத்த கைத்தட்டலுடன் ஆதரிக்கிறேன்..நேற்றுமே அத்தனை அழகான விவரிப்பு கொலு பொம்மைகளைப் பற்றி..

      ம்ம்ம்ம் ஸ்ரீராம் மைன்ட் ஸ்பீக்கிங்க் - அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேண்டும் என்று!!!

      கீதா

      நீக்கு
    3. - இங்கு ஷை ஸ்மைலி மட்டும்! -

      நீக்கு
  17. //பின்னர் ரேகா நடிக்காததால் (அமிதாப் தடுத்து விட்டார் என்று வதந்தி!)// அப்படியா...? சோழா ஹோட்டலில் ரேகா தங்கியிருந்த அறையில் அவரோடு கமல் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, அதை தெரிந்து கொண்டு அங்கு வந்த வாணி(கமலின் அன்னாள் மனைவி) ரேகாவை கன்னத்தில் அறைய, அவர் கோபித்துக் கொண்டு பம்பாய்க்கு பறந்து விட்டார் என்றல்லவா செய்திகள் வந்தன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் ஊருக்கு அந்த ஊறுகாய். நமக்கு இங்கு இந்த ஊறுகாய்!

      நீக்கு
    2. பானுமதி சொல்கிறாப்போல் தான் நான் கேள்விப் பட்டதும்! ஆனால் அமிதாப் தடுத்ததாகச் செய்திகள் சமீபத்தில் வந்திருந்தன. எது நிஜமோ! கமல்ஹாசன் குணம் தெரிந்து ரேகாவே விலகிக் கொண்டதாயும் சொல்வார்கள்.

      நீக்கு
  18. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  20. சின்னன்சிறு வயதில் பாட்டு ஆபேரி ராகம் என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்.நிறைய இடங்களில் ஆபேரியின் டச் நல்லா தெரிவதால்..

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..   இது புதிது.  ஆபேரி எனக்கு(ம்) மிகவும் பிடித்த ராகம்.

      நீக்கு
  21. இன்றைய பதிவின் இரண்டு பாடல்களும் அருமை.. இனிமை..

    அதிலும் -
    கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் வரிகளும் சரி.. காட்சியமைப்புகளும் சரி.. சில விஷயங்களை சொல்லாமல் சொல்லக் கூடியவை..

    இப்படியொரு பாட்டுடன் இன்னொரு பாட்டும் கூட உண்டு இப்படத்தில்..

    ரெக்கார்ட் டான்ஸ் வேணுமாமே..
    ரெக்கார்ட் டான்ஸ்!..

    இளையராஜாவின் கேட்டேளே அங்கே.. பாடலும், ஓரம் போ.. பாடலும் அகில இந்திய வானொலியில் இன்னமும் ஒலி பரப்பப்படவில்லை என்று நினைக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்துச் சொல்லி இருக்கிறீர்கள்.  ஆம்..  குடும்பம் என்ற அமைப்பு, திருமணமான இளம் தம்பதி, காதல் பாதி, கவர்ச்சி பாதி எனும் கணவனின் எதிர்பார்ப்பு...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!