செவ்வாய், 30 நவம்பர், 2021

ஏணிமலை 1 / 5

 

வலைப்பதிவு எழுத்தாளர் அமானுஷ்யனின் அலைபேசி உயிர் பெற்று " நானே வருவேன் - இங்கும் அங்கும் " என்று பாடியது. அது அவர் அந்த அலைபேசியில் அமைத்து வைத்திருந்த அழைப்பு இசை. 

அமா அலைபேசியை எடுத்து, யாரிடமிருந்து வரும் அழைப்பு என்று பார்த்தார்.  பரிச்சயமில்லாத எண். 

" ஹலோ அமானுஷ்யன் ஹியர் "

" வணக்கம் - நான் டைரக்டர் முனி ரத்னம் பேசுகிறேன். அடுத்த தயாரிப்பாக நான் ஒரு அமானுஷ்யக் கதையை படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். இதுவரையில் வெளிவராத புதிய கதையை வாங்கி படம் எடுக்கலாம் என்று உள்ளேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் வலைப்பதிவு எழுத்தாளராகிய உங்கள் பெயரை சிபாரிசு செய்தார். நீங்கள் எழுதிய சில அமானுஷ்ய கதைகளைப் படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள்." 

" அப்படியா ! ரொம்ப சந்தோஷம். என்னுடைய எந்தக் கதையை படமாக எடுக்க உள்ளீர்கள் ? "

" நாந்தான் சொன்னேனே - இதுவரையில் எதிலும் வெளிவராத கதையாக - புதிய கதையாக வேண்டும்." 

" புதிய கதையா ? எப்போது வேண்டும் ? "

" அவசரம் எதுவும் இல்லை. ஒரு மாதத்திற்குள் நீங்க எழுதித் தரவேண்டும். வீட்டில் உட்கார்ந்து யோசனை செய்தீர்கள் என்றால் கற்பனை அவ்வளவாக ஓடாது. அன்றாடத் தொந்தரவுகளும் உங்கள் கற்பனையைத் தடை செய்யும். அதனால் - நீங்களே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து எனக்கு சொல்லுங்கள். அங்கே நீங்கள் தங்குவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் கம்பெனி செலவில் ஏற்பாடு செய்கிறேன். மேலும் கதை எழுத உங்களுக்கு என்னென்ன தேவை என்பதையும் லிஸ்ட் அனுப்புங்கள். எல்லாவற்றையும் என் உதவியாளர் உங்களுக்காக ஏற்பாடு செய்துவிடுவார். உங்களைப் பொருத்தவரை, நீங்கள் இடம், தேதி, எவ்வளவு நாட்கள் தங்கவேண்டும், என்னென்ன வேண்டும் என்பதை மட்டும் சொல்லிவிட்டால் போதும். எல்லாவற்றையும் என் உதவியாளர் கவனித்துக்கொள்வார். அவருடைய அலைபேசி எண்  என்று முனி சொன்ன ---------- எண்ணை அமானுஷ்யன் தன் குறிப்புப் புத்தகத்தில் குறித்துக்கொண்டார். எனக்கோ அல்லது உதவியாளருக்கோ எப்பொழுதும் குரல் அழைப்பு கூடாது. எல்லாமே எஸ் எம் எஸ் அல்லது வாட்ஸ் அப் செய்தி மட்டுமே அனுப்பவேண்டும். சொன்ன தேதியில் உங்களைத் தேடி பயண டிக்கெட் உட்பட எல்லாம் வந்து சேர்ந்துவிடும். தங்கவேண்டிய இடம் பற்றி எப்பொழுது விவரம் அனுப்புகிறீர்கள்? "

" இன்று மாலைக்குள் அனுப்புகிறேன் சார் "

" தட்ஸ் குட். ஓகே தென்." தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

அமானுஷ்யனால் எதையும் நம்ப முடியவில்லை. தன்னுடைய அலைபேசியில் அழைப்பு எந்த எண்ணிலிருந்து வந்தது என்பதைப் பார்த்து, அந்த எண்ணை true caller ஆப் பயன்படுத்தி வந்த அழைப்பு உண்மையிலேயே முனி ரத்னத்தின் எண்தானா என்று பார்த்தார். ஆம் - true caller " Muni office " என்று காட்டியது. 

எங்கே சென்று தங்கலாம் என்று யோசனை செய்த அமாவின் கண்களில் பட்டது அன்றைய செய்தித்தாளில், வந்திருந்த விளம்பரம். 

" இயற்கைச் சூழலில், மலை நாட்டின் எழிலை இரசிக்க வேண்டுமா? மரகத மலைகளின் மௌன கூட்டத்தில், நீங்களும் தியானத்தில் திளைக்கலாம். 

இன்றே முன்பதிவு செய்யுங்கள் : ஹோட்டல் வெண்ணிலா - இத்தலார் - ஃபெர்ன்ஹில் PIN643004 - குந்தா - உதகை. " 

அமானுஷ்யன், கதை எழுதுவதற்கு, தனக்கு வேண்டிய பொருட்களின் பட்டியலையும், தங்குவதற்கு விரும்பும் இடமாக, ஹோட்டல் வெண்ணிலா விலாசத்தையும், முனியின் உதவியாளர் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பிவைத்தார். 

= = = = = 

செய்தி அனுப்பிய ஒரு மணி நேரத்தில், உதவியாளர் எண்ணிலிருந்து  " எப்பொழுதிலிருந்து, எவ்வளவு நாட்கள் ஹோட்டல் வெண்ணிலாவில் தங்கியிருக்க விரும்புகிறீர்கள்? " என்று கேட்டு பதில் வந்தது. 

அமானுஷ்யன், " அடுத்த வாரம் திங்கள் தொடங்கி, ஏழு நாட்கள் தங்குகிறேன். அதற்குள் கதை எழுதி முடிக்காவிட்டால், மேலும் ஒரு வாரம் தங்க ஏற்பாடு செய்ய இயலுமா?" என்று செய்தி அனுப்பினார். 

" வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் கிளம்பத் தயாராக இருங்கள். சென்னையிலிருந்து கோவை செல்ல விமான பயணச்சீட்டு உங்கள் விலாசத்திற்கு அனுப்புகிறோம். கோவையிலிருந்து டாக்ஸி ஏற்பாடு செய்துள்ளோம். உங்களை இத்தலார் ஹோட்டலில் இறக்கி விட்டுவிடுவார்கள். கதை எழுதி முடித்ததும், எனக்கு செய்தி அனுப்பினால், உங்களை அங்கிருந்து வீட்டிற்குக் கொண்டுபோய் விட ஏற்பாடு செய்துவிடுகிறேன்."

" நன்றி. அவ்வாறே செய்கிறேன்" என்று செய்தி அனுப்பினார் அமா. 

= = = =

ஆயிற்று. தன்னுடைய மடிக்கணினியையும், மாற்று உடைகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் அமா. கோவை வந்து, அதன் பிறகு இதோ டாக்ஸியில் இத்தலார் நோக்கி பயணம். ஊட்டி குளிர் வந்து அமாவை டாக்ஸி ஜன்னல் வழியே அவ்வப்போது தழுவியது. ஊட்டி தாண்டியபிறகு காற்றில் கலந்து வந்த யூகளிப்டஸ் மணம், உருளைக்கிழங்கு வாசனை, பேக்கரி வாசனை என்று விதவிதமான வாசனைகளை அனுபவித்தவாறு பயணித்தார் அமா. 

ஹோட்டல் வெண்ணிலா.   


அமா எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய ஹோட்டல் இல்லை என்றாலும், அந்த ஊருக்கு அது பெரிய ஹோட்டல்தான். 

கீழ் தளம் உணவருந்தும் இடம்.  மேலே மூன்று மாடிகள். 

வரவேற்பாளர் மேஜைக்கு அருகில் சென்று தன் பெயரை சொல்லி 'அந்தப் பெயரில் அறை ஏதாவது முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா' என்று கேட்டார். 

" இல்லையே சார். உங்க பெயரில் ஒன்றும் முன்பதிவு இல்லையே!" 

வரவேற்பாளர், அமாவிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் காட்டி, அதில் விவரங்களைப் பதிவு செய்யச் சொன்னார். 

பெயர், வயது, விலாசம், ஆதார் எண் / பான் கார்ட் எண், அலைபேசி எண், வந்திருப்பதின் நோக்கம், உத்தேசமாக எவ்வளவு நாட்கள் தங்கப் போகிறீர்கள் - என்னும் வினாக்களுக்கு பதில் எழுதி, கையொப்பம் இட்டார். 

வந்திருப்பதின் நோக்கம் " இயற்கையை இரசிக்க, கதை எழுத " என்று குறிப்பிட்டிருந்தார். 

" சார்! நீங்கதான் முனி உதவியாளர் மோகினி, சொன்ன அந்த சினிமா கதாசிரியரா !! வாங்க, வாங்க - உங்களுக்காக மூன்றாவது மாடியில் அறை எண் 302 ஏற்கெனவே மோகினி என்ற பெயரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. டேய் பையா - சாரை மேலே ரூம் நம்பர் 302 க்கு வழி காட் .. " 

அவர் சொல்லி முடிப்பதற்குள் வெளியே தண்டோரா போடும் ஓசை பலமாகக் கேட்டது. தண்டோரா சத்தம் கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன என்று வியந்தவாறே அமா - என்ன சொல்கிறார் தண்டோரா போட்டவர் என்று உன்னிப்பாகக் கேட்டார். 

ஆனால் - சொல்லப்பட்டவை எதுவுமே அவருக்குப் புரியவில்லை. 

வரவேற்பாளரிடம், " அது என்ன? என்ன பாஷையில் சொல்கிறார் - கன்னடமா ? "

" இல்லை சார் அது படுகர் மொழி. இன்று பௌர்ணமி நாளாக இருப்பதால், பெம்பட்டி  சேலை கவுடா பரம்பரையில் வந்தவர்களும், எந்தப் பெண்ணையும் அவளுடைய விருப்பம் இல்லாமல் வலிய அடைந்தவர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், வெளியே வரவேண்டாம். ஏணிமலைப் பக்கம் வாழ்பவர்கள் எல்லோருக்கும் எச்சரிக்கை" இதைத்தான் அவர் சொல்கிறார். 

" எதற்கு இந்த எச்சரிக்கை? "

" அந்த விவரங்கள் எல்லாம் இங்கே இருக்கும் போஜன் என்ற பையனுக்குத்தான் தெரியும். நாளை அவன் டூட்டிக்கு வந்ததும் உங்கள் அறைக்கு அனுப்புகிறேன். நீங்க சினிமா உலகை சேர்ந்தவர் என்று சொல்கிறீர்கள். எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள். இன்று இரவு வெளியே எங்கும் செல்லாதீர்கள். உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? "

" இல்லை"

" அப்போ நீங்க ரொம்ப எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் அறையின் தெற்குப் பக்க ஜன்னல் கதவை மூடி வைத்திருங்கள். இரவில் அந்த ஜன்னல் அருகே செல்லவேண்டாம். " 

அறைக்கு வந்ததும் அவருக்கு திடீரென்று சந்தேகம் வந்தது. யார் அந்த மோகினி! 

(தொடரும்) 

124 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கமும், இனிய நல் வாழ்வுக்கான
    பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  2. கதை விறுவிறுப்பு. அந்தக்கால குமுதம் "மின்னல் மழை மோஹினி" க்கு கொசுவத்தி சுற்றியது!

    எழுதியவர் யாரோ? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பெகாசஸ் உபயோகித்தீர்களா இல்லையா  என்பதற்கு கூறப்பட்ட பதில். 

      நீக்கு
    2. அப்படியா! பெகாசஸ் என்றால் என்ன?

      நீக்கு
    3. பெகாசஸ்னா என்னனு சொல்லவே இல்லையே!

      நீக்கு
    4. The company's flagship product is Pegasus, spyware that can stealthily enter a smartphone and gain access to everything on it, including its camera and microphone. Pegasus is designed to infiltrate devices running Android, Blackberry, iOS and Symbian operating systems and turn them into surveillance devices.

      நீக்கு
    5. ஓ அப்படியா! முன்பு Pegasus awards என்ற பெயரில் reader's digest இதழில் விளம்பரதாரர்களுக்கு / விளம்பர ஏஜென்சிகளுக்கு பரிசுகள் வழங்குவார்கள். அது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பயமுறுத்தும் புதிய தொற்றும் கூடவே ஒரு மாதமாகப் படுத்தும் மழையும் இல்லாமல் உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்நாட்களைக் கழிக்கப் பிரார்த்தனைகள். ஆங்காங்கே உலகெங்கும் மழை/வெள்ளம் எனச் சொல்லிக் கொண்டு தொலைக்கட்சியில் காட்டுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கதையை இன்னமும் படிக்கலை. எழுதினவர் பெயரை சஸ்பென்ஸில் வைச்சிருக்கீங்களோ? இன்னும் ஐந்து பகுதிகள் இருக்குப் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் நான்கு பகுதிகள் - இது ஐந்திலே முதல் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  6. யாரடி அந்த மோகினி? ஶ்ரீராம் எழுதி இருப்பாரோ? ஒரு சில சொற்பிரயோகங்கள் அவரை நினைவூட்டுகிறது. கதையில் வரும் திகிலை விட யார் எழுதி இருப்பாங்கனு யோசிப்பதில் உள்ள த்ரில் தான் சுவாரசியம். அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // யாரடி அந்த மோகினி? ஶ்ரீராம் எழுதி இருப்பாரோ?// எனக்கும் அந்த சந்தேகம் வருது.

      நீக்கு
    2. கீதாக்கா ஸ்ரீராம்? ஓ! அப்ப சமீபத்துல அவர் ஃப்ரென்ட் வேற அமானுஷ்யமான நிகழ்வு வேற சொல்லியிருந்தாரே ஸ்ரீராம்கும் ஆர்வம் உண்டு...காலச்சக்கரம் நரசிம்மா நாவல்கள் வேற நிறைய வாசித்தார் அவரது நாவல்களில் அமானுஷ்யம் உண்டே....நம்ம ஸ்ரீராமும் மோட்டிவேட் ஆகி எழுதியிருப்பாரோ?!!!!

      ஆக்கா போஸ்டட் பை காசு சோபனான்னு இருக்கு அதையும் பாருங்க.~!!!!

      ஆராய்வோம். ரிசர்ச் பேப்பர் போட்டுருவோம்!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. துப்பறியும் நிபுணிகள்!

      நீக்கு
    4. ஆமாம், காசு சோபனாவே யாருனு தெரியலை. சஸ்பென்ஸிலேயே வைச்சிருக்கார் ஶ்ரீராம்/கௌதமன் இருவருமே! சும்மாவானும் நம்மைக் குழப்பக் காசு சோபனா பெயரைப் பயன்படுத்தி இருக்கலாமோ? காசு சோபனா பெயரில் வெளியாவது எனக்குத் தெரிந்து இதான் முதல் முறையோ? முன்னால் எல்லாம் வந்திருக்கா? தெரியலை.

      நீக்கு
    5. அட? சிரிப்பு/வருத்தம்!?????? ஏன்? என்ன ஆச்சு? காசு சோபனா! நெல்லை சொல்வது போல் நீங்க கௌதமன் சாரின் பினாமியா?

      நீக்கு
    6. எனக்குத் தெரியாமல் நான் ஏதாவது எழுதியிருக்கேனா என்று என்னை நான் கேட்டிருக்கேன்.  பதில் வந்ததும் சொல்கிறேன்.

      நீக்கு
    7. வர வர எங்கள் ப்ளாக் பதிவில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. முன்பு எஸ் ஜி எஸ். இப்போ இந்தக் கதை எழுதியவர்.

      நீக்கு
  7. கதை செம த்ரில்லிங்க். த்ரில்லிங்க் கதைகள் மிகவும் பிடிக்கும். விறு விறு என்று கதை போகிறது. சஸ்பென்ஸ்...அடுத்த பகுதிக்கு அடுத்த செவ்வாய் வரை காத்திருக்க வேண்டும். வார இதழ்களைப் போல!!!! உடனே போடக் கூடாதோ!!! சரி நாற்காலி நுனியில் அடுத்த வாரம் வரை உட்கார்ந்திருக்க வேண்டும் போல!!

    கதை எழுதியவர் அமானுஷ்யன்? (புனைப்பெயர்) அல்லது எபி ஆசிரியர் காசு சோபனாவா? (இதுவும் புனைப்பெயர் தானே!)

    கீதா

    பதிலளிநீக்கு
  8. என் புரிதலின் படி அமானுஷ்யன் என்ற பெயரில் மர்மக் கதைகள் எழுதும் என் கணேசன் என்று தோன்றுகிறது. அவரது ப்ளாக் வாசிப்பதுண்டு. அமேசான் கிண்டிலில் நிறைய கதைகள் வந்திருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமானுஷ்யன் ஒரு கதாபாத்திரம் அவரது கதைகளிலும். என் யூகம் சரிதான் என்று நினைக்கிறேன்

      கீதா

      நீக்கு
    2. இருக்காது தி/கீதா. பெயரைச் செல்லமாக "அமா" எனச் சுருக்கி இருப்பதையும் இன்னும் சிலவற்றையும் படித்தால் ஶ்ரீராமோ எனத் தோன்றுகிறது. பார்ப்போம். இன்னும் சிலரும் பட்டியலில் உண்டு.

      நீக்கு
    3. ஓஹோ கீதாக்கா....நான் சில மாதங்களுக்கு முன் பார்த்த வாசித்த ஒன்று இதோ சுட்டி. இதப் பாருங்க....இருக்குமோ என்று தோன்றுகிறது

      http://enganeshan.blogspot.com/2014/08/blog-post_9.html

      கீதா

      நீக்கு
    4. அடேடே ! புதிய தகவல்களாக உள்ளனவே! சுட்டி சென்று படித்துப் பார்க்கிறேன்.

      நீக்கு
  9. என் கணேசன் அவர்கள் என்றால் ....

    அவர் நிறைய காணொளிகளும் போடுவார். ஆன்மீகம் பேசுவார் எழுதவும் செய்கிறார். ஆழ்மனம் பற்றியும் பேசுவார்.

    த்ரில்லர் மற்றும் மனம் பற்றி அறிவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் எழுதுவதை வாசிப்பதுண்டு காணொளிகளையும் பார்ப்பதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. என்.கணேஷன் இல்லை என்றே தோன்றுகிறது. நானும் நிறையப் படிச்சேன் ஒரு காலத்தில். இப்போதெல்லாம் போவதில்லை.அநேகமாக எ.பி. எழுத்தாளர்களில் ஒருத்தர் என்றே தோன்றுகிறது. ஆனால் காசு சோபனாவாக இருக்க வாய்ப்பில்லை என்றும் நினைக்கிறேன். நிச்சயமாய் அப்பாதுரை இல்லை. :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை சார் - நீங்க எழுதலியா!

      நீக்கு
    2. கீதாக்கா அப்பாதுரை ஜியின் நடை வேற மாதிரி இருக்குமேன்னு முதல்ல அவர்தான் நினைவுக்கு வந்து யோசிச்சேன். இந்த ஏணி மலைல பல்கொட்டிப் பேய் போய் உக்காந்து தன் பல்லைத் தேடிட்டு இருக்குமோன்னு...பல்லாவரம் பார்ட்டிங்க எல்லாம் இந்த அமானுஷ்யனின் உதவி நாடி....ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. கெட்டதாக இல்லாமல் இருந்தால் நல்லது. எனக்கு கொலை, இரத்தம் என்றாலே தலை சுற்றும்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய தொடர் திகில் கதை விறுவிறுப்பாக உள்ளது. இன்னும் ஐந்து வாரங்கள் எழுதியவர் யாரென அறிந்து கொள்ள காத்திருக்க வேண்டுமென்ற சஸ்பென்ஸ் வைத்து கதை பகிர்ந்திருக்கும் முறையும் நன்றாக உள்ளது. (அதற்குள் கருத்துரைகளில் வந்திருப்பதை போன்று எழுதியவர் யாரென்ற புதிர் கண்டுபிடிக்கப்படும் என நினைக்கிறேன்.)

    சகோதரர் கௌதமன் அவர்கள் வரைந்த ஓவியம் நன்றாக உள்ளது. அதில் அவர் பெயர் இல்லையென்பதால் ஒருவேளை இது அவர் எழுதும் கதையாக இருக்குமோ?(இல்லை அதுவும் சஸ்பென்ஸா.. :) என் பங்குக்கு நானும் ஒருவரை குறிப்பிட்டு சொல்லியுள்ளேன்) பார்க்கலாம். இது எந்த வாரத்துப் பகுதியில் வெளி வரும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். ஆக கதை பயங்கர சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்த செவ்வாய் கிழமைக்கு இப்போதே காத்திருக்க வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! கௌதமன் சாரின் படத்தை நீங்க சொன்னப்புறமாத் தான் போய்ப் பார்த்தேன். அவரும் முகத்தை மறைத்துப் போட்டு சஸ்பென்ஸைக் காத்திருக்கார். ஆனால் அவராக இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். அமானுஷ்யக் கவிதைகளை அநாயாசமாக இரண்டே வரிகளில் எழுதும் திறமை ஶ்ரீராமுக்கு உண்டு. ஆகவே அநேகமாக எனக்கு எப்படிப் பார்த்தாலும் அவராக இருக்குமோ என்றே தோன்றுகிறது. பானுமதியால் கண்டு பிடிக்க முடிகிறதானு பார்ப்போம்.

      நீக்கு
    2. எனது சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது. நிச்சயம் இது ஸ்ரீராம் வேலைதான் போலிருக்கு.

      நீக்கு
    3. படம் நான் வரையவில்லை. இணையத்தில் சுடப்பட்ட படம் போல உள்ளது.

      நீக்கு
    4. ஒரு வேளை அவரே (சகோதரி பானுமதி) எழுதியதாக இருக்குமோ? கொஞ்சம் இருங்கள்.காலை காஃபியை தயாரித்து குடித்து விட்டு வருகிறேன். அப்புறமாக யோசனையில் எழுதியவர் புலப்படலாம். அதற்குள் கௌதமன் சகோதரரே புதிரை விடுவித்து விட்டால் நல்லது. ஆனால் அது இன்னும் நான்கு வாரங்கள் புதிராகவே இருந்து நம் தலையை காய வைக்குமோ ? தெரியவில்லை.

      நீக்கு
    5. ஓஹோ! பா வெ மேடம் எழுதியதாக இரூக்கும் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    6. கமலாக்கா கௌ அண்ணா பெயர் இல்லையே படத்தில் ஒரு வேளை கௌ அண்ணா சஸ்பென்ஸுக்காக கதை எழுதியவரின் படம் பேக் போஸில்!! யார்னு கண்டுபிடிங்கன்ற புதிர்!!! படம்

      கீதா

      நீக்கு
    7. கௌ அண்ணா ஸ்ரீராம் காணவே இல்லையே. வந்தா ஒரு வேளை எங்கேனும் தான் தான் எழுதியதுன்னு உளறிவிடுவேனோ என்ற பயத்தில் ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறாரோ!!!!!!?

      கீதா

      நீக்கு
    8. உண்மைதான் கீதா ரெங்கன் சகோதரி. நிறைய திருப்பங்களை தருகிறது இன்றைய ஸ்வாரஸ்யமான செவ்வாய். இன்றைய திடுக்கிடும் திகில் கதையை விட அதை எழுதிய கதாசிரியர் யார் என இருக்கும் மூளைகளை (நான் என்னைச் சொல்கிறேன்.:)) கசக்கி துன்புறுத்தும் ஆவலுடன் கண்டுபிடிக்கும் பின்னூட்டங்களையும் அள்ளிக் கொண்டு வருகிறது.

      சகோதரர் கெளதமன் அவர்களும், சகோதரி பானுமதி அவர்களும் தாங்கள் இல்லை என்பதாக தங்களைக் காட்டிக் கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். சகோதரர்கள் ஸ்ரீராமும், நெல்லைத் தமிழரும் மறைந்திருந்து யார் உண்மை
      கதாசிரியரை கண்டு பிடிக்கிறார்கள் எனப் பார்க்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது எழுதிய ஆசிரியரின் மர்மம் அறியும் ஆவலில் மர்மக்கதை ஸ்வாரஸ்யம் குறைவாக போய் விட்டால் என்ன செய்வது என்ற ஐயத்தில் கதை எழுதி மறைந்திருப்பவர்கள் இந்த வாரத்திலேயே வெளிப்படட்டும். ஏனெனில் மேலும் மூன்று வாரங்களின் செவ்வாய்தோறும் வேறு வேலைகள் ஓடாது. ஆனாலும் பொறுமையுடன் காத்திருப்போம். என்ன செய்வது? வேறு வழி.? ஹா ஹா ஹா

      நீக்கு
    9. ஆமாம், இல்ல? படம் வரைந்திருப்பவர் பெயர் போடலை. கௌதமன் சாரோட ஓவியத்துக்கும் இதுக்கும் குறைந்தது ஆறு/ஏழூ வித்தியாசங்கள் இருக்கும் போல!

      நீக்கு
    10. ஓடவில்லை.  ஒளியவில்லை.  இங்கேதான் இருக்கிறேன்.  ஆமாம், யார் எழுதினீர்கள் என்று இப்போது சொல்கிறீர்களா, இல்லை ஐந்து வாரங்கள் கழித்துதான் சொல்வீர்களா?

      நீக்கு
    11. இப்படி பயமுறுத்தினால் சொல்வார்களா?

      நீக்கு
    12. /ஆமாம், யார் எழுதினீர்கள் என்று இப்போது சொல்கிறீர்களா, இல்லை ஐந்து வாரங்கள் கழித்துதான் சொல்வீர்களா/

      அட ராமச்சந்திரா... யார் எழுதியது என ஐந்தாவது வாரமாவது தெரியுமென நினைத்தேனே..! ஐந்து வாரங்கள் கழித்துதான் தெரியுமா? யோசித்து, யோசித்து இருக்கிற கொஞ்ச நஞ்ச தலைமுடியும் கழிந்து விடுமென நினைக்கிறேன்.

      நீக்கு
  14. எப்பொழுதும் வழக்கமாக காலையிலேயே வந்து எல்லோருக்கும் பதில் தருகின்ற ஸ்ரீராம் இதுவரை இங்கே வராமல் இருப்பதைப் பார்த்தால், அவர் ஒளிந்து நின்றுகொண்டு, தன் கதைக்கு என்ன கமெண்ட்ஸ் வருகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌ அண்ணா ஹைஃபைவ்! மேலே பாருங்க நானும் அதே போல கொடுத்திருக்கேன்...பாருங்க!!!

      கீதா

      நீக்கு
    2. ஆனால் ஸ்ரீராம் இல்லை என்றே தோன்றுகிறது. அப்பாதுரை ஜியும் இல்லை..

      ஆனால் சொல்லவும் முடியாது இவிங்க எல்லாம் வேணும்னே ஸ்டைல மாத்தியும் எழுதிப்புடுவாங்க.

      கீதா

      நீக்கு
    3. கரெக்ட். சரியா சொன்னீங்க.

      நீக்கு
    4. ஶ்ரீராம் யாரோட கல்யாணத்துக்குப் போயிருக்காரோ? தெரியலை. இல்லைனால் அவரோட பாஸுக்குக் குளிர் ஜூரம் என்று சொல்லி இருந்தார். அவருக்கு இன்னமும் உடம்பு சரியாகலை போல! எப்படி இருக்காங்க ஶ்ரீராம், உங்களோட பாஸ்?

      நீக்கு
    5. கல்யாணத்துக்கு எங்கும் செல்லவில்லை. அலுவலகம், வீடு.. இப்படி ஓடுகிறது. நடுவில் வீட்டில் எல்லோருக்கும் படுத்துகிறது.

      நீக்கு
    6. எல்லோரும் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.

      நீக்கு
  15. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. திரில்லர் தொடராக? அப்பாதுரையின் ஸ்டைல் இல்லை. ஸ்ரீராம் போலவும் தெரியவில்லை. ஒரு வேளை நெல்லையாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  17. கதை சிறப்பாக தொடங்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. நல்ல விறுவிறுப்பாக செல்கிறது தொடர்...
    மோகினியை நானும் தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! மோகினியைத் தொடரும் கில்லர்! மேற்கொண்டு கதை பயங்கரமாகப் போகும் போலிருக்கே!

      நீக்கு
    2. @ கில்லர்ஜி..

      // மோகினியை நானும் தொடர்ந்து வருகிறேன்... //

      அப்படிப் போடுங்க அருவாளை!..

      மோகினியின் பாடு இனிமேல் திண்டாட்டமா?.. கொண்டாட்டமா!..

      நீக்கு
  19. பதில்கள்
    1. அவர் மர்மக் கதை எழுதுவாரா? (Rvsm)

      நீக்கு
    2. ம்ம்ம்ம், முகநூல் பிரபலமான ஆர்விஎஸ் அவர்களைச் சொல்கிறீர்களோ? இந்தியன் எக்ஸ்ப்ரஸிலோ/ஹிந்துவிலோ எழுதுவார்னு எண்ணம். மன்னார்குடிக்காரர்.

      நீக்கு
    3. // RVSM? //

      ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் இதே கமெண்ட்டை ரமணி ஸார் தளத்திலும் போட்டிருக்கார்.  இங்கு கமெண்ட் செய்ய எண்ணி அங்கு போட்டாரா, அங்கு கமெண்ட் செய்ய எண்ணி இங்கு போட்டாரா, அல்லது இரண்டிலுமே கேட்டு வைப்போம் என்று கேட்டிருக்கிறாரா....   புதிர்.  அபுரி!

      நீக்கு
    4. நானும் அங்கு பார்த்தேன். ஒரே புரியாத புதிராகத்தான் உள்ளது. தலைச்சுற்றல் கொஞ்சம் குணமாகியிருந்தது. அது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது.

      நீக்கு
  20. இந்தப் படம், நிச்சயம் கேஜிஎஸ் சாரின் பேரனின் படத்தைப் பார்த்து (his selfie taking photo-taken by somebody else.mostly KGS sir) வரைந்தது. வரைந்தவர் கேஜிஜி சார். இந்த poseஐ, கேஜிஎஸ் சாரின் ஞாயிறு படங்களில் பார்த்த நினைவு வருகிறது.

    கதை எழுதுபவர் கௌதமன். அவர்தான் காசு சோபனா என்று புது கேரக்டரை ஆசிரியர் குழுவில் வைத்திருப்பவர்.

    கதையை, 'முடிந்தது' என்று போட்ட பிறகுதான் நான் படிக்க ஆரம்பிப்பேன் என்று அனைவருக்கும் தெரியும். ஹி ஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கேஜிஎஸ் அவர்களின் பேரனின் படத்தை நானும் பார்த்திருக்கேன். ஆனால் இப்போ சமீபத்தில் இல்லையே அது! ம்ம்ம்ம்ம்ம்? காசு சோபனாவும் கௌதமன் சாரும் ஒருவரா? ஆச்சரியமா இருக்கே! காசு சோபனா பெண்ணா? ஆணா?

      நீக்கு
    2. காசு சோபனா ஒரு பெண் என்றே நினைச்சிருந்தேன். நெல்லை கௌதமன் சார் தான் காசு சோபனா என்கிறாரே! குரோம்பேட்டைக் குசும்பன் தான் கௌதமன் சாரோட இன்னொரு காரக்டர் இல்லையோ? ம்ம்ம்ம்ம்? இந்த சஸ்பென்ஸும் மண்டையை உடைக்குதே!

      நீக்கு
    3. ஒரே குழப்பாப்பமா இருக்கே..   எழுத்தாளர் குழப்புகிறாரா, வாசகர்கள் குழப்புகிறார்களா?!

      நீக்கு
    4. வாசகர்கள்தான் குழப்புகிறார்கள்.

      நீக்கு
  21. கதாசிரியர் நீலகிரி மலைப்பிரதேசத்தில் வாழ்ந்தவராகத் தெரிகிறது. அரவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் பணியாற்றிய ஸ்ரீராமின் உறவினர் ஒருவர் (கேஜிஜியின் சகோதரர்?) பல வருடங்களுக்கு முன் எனக்கும் அறிமுகமாகியிருக்கிறார். அவர் கதைகள் எழுதும் திறமை கொண்டவர் எனில் கதாசிரியர் அவராக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான யூகம். ஆனால் யூகம் சரியா தெரியவில்லை!

      நீக்கு
  22. கேஜிஜே நடை இது இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  23. பல பின்னூட்டங்கள் கதாசிரியர் பற்றிய ஆராய்ச்சியிலே வீணாகி விட்டதால் கதைப் பகுதிக்கு வருவோம். அதுவே கதாசிரியருக்கு நாம் அளிக்கும் மரியாதை.

    பதிலளிநீக்கு
  24. அமானுஷ்யம், மோகினி, தெற்கு பக்க ஜன்னல் என்று இனம் புரியாத ஒரு திகில் கதைக்கான ஆரம்ப வேலைகளை கனக்கச்சிதமாக முடித்த ஆசிரியர் ----
    அந்த ரூம் பையன் போஜன் பெயரில்
    அறை எண் விஷயத்தில் என்று லேசான வியர்த்தலை ஏற்படுத்தி இருக்கலாம் என்றாலும் படுக இன மக்கள் பெயராக போஜன் பெயரை தேர்ந்தெடுத்தது எந்த விஷயத்திலும் கோட்டை விட்டு விடாத அவரது அசாத்திய எழுத்துத் திறமையை பறை சாற்றுகிறது.

    நான் குன்னூரில் இருந்த பொழுது ஒரு பெளர்ணமி விழாவில் மாட்டிக் கொண்டதும் சட்டென்று நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  25. முனி, மோகினி பெயர் சூட்டலில் ஆசிரியர் (திகில் கதையின் விறுவிறுபைக் கூட்ட இன்னும் என்னன்ன பெயர்கள் வரப்போகிறதோ?) வஞ்சனையில்லாமல் திகிலூட்டுகிறார்.
    பெளர்ணமி விழா, வெண்ணிலா விடுதி, அமா (நேர் எதிராக அமாவாசையோ?) எல்லாமே நிறைய யோசித்து செயல்பட்ட நேர்த்திகள். சொல்லாமல் விட்டால் பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்லச் சொல்லத்தான் எனக்கும் கதையின் அந்த அம்சங்கள் கண்ணில் படுகிறது. எழுதியவர் நீலகிரி பகுதிகளில் பல ஆண்டுகள் இருந்தவர் / இருப்பவர் போலிருக்கு.

      நீக்கு
    2. இருந்தவர்/இருப்பவரில்
      இருப்பவரை நீக்கி விட்டால்
      ஒரளவு புதிர் சுலபமாக அவிழ்ந்து விடும்.

      நீக்கு
    3. ம்ம்ம்ம்ம், நாங்களும் அரவங்காட்டில் 3 வருடங்கள் இருந்தோம். :) ஆனால் நான் எழுதலை இந்தக் கதையை. இத்தனைத் திறமை எனக்கு இல்லை.

      நீக்கு
    4. அப்போ facebook ல நீங்கதான் எழுதினீங்களா என்று கேட்டதற்கு "yes " என்று gif போட்டிருந்தீங்க!!

      நீக்கு
    5. ஹிஹிஹி, நம்ம பங்குக்குக் குழப்பத் தான்! காமாட்சி அம்மா சிரிச்சதைப் பார்க்கலையா?

      நீக்கு
  26. ஹோட்டல் வெண்ணிலா வடக்கத்திய
    மலைப்பிரதேச பாணியில் SBI பின்னணியில் பெரிய கட்டிடம் தான்.
    ஹோட்டலுக்கான தமிழ்ப் பெயர் ஒட்டல் பிரமாதம். கேஜிஜியின் கைவண்ணத்திற்கு ஜே!!

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    ஜீவி சகோதரரின் கதைக்கான அலசல் விமர்சனம் நன்றாக உள்ளது. நானும் அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். கதாசிரியரை கண்டு பிடிக்கும் ஆர்வத்தில் கதையின் மர்மம் நிறைந்த சுவாரஸ்யங்கள் குறைந்து விடப் போகிறதென்று... ஜீவி சகோதரருக்கு பாரட்டுக்களும் நன்றியும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ. இந்தக் கதை தான் என்றில்லை, வேறு எந்தக் கதையிலும்
      கஷ்டப்பட்டு கற்பனையை தன் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்து எழுதுகிறவனின் எழுத்திலிருந்து விலகியிருந்து பின்னூட்டம் போனால் எனக்கு என்னவோ போலிருக்கும்.

      நீக்கு
  28. கதைப் போக்கு யாரையோ நினைவுக்குக் கொண்டு வருகிறது.
    நல்ல டீசண்ட் எழுத்து.

    கதாசிரியர் கொடுத்த பெயரிலிருந்து
    கண்டு பிடிக்க முடியவில்லை.
    காசு சோபனா முன்பு எழுதி இருக்கிறார்.

    முன்னம் ஒரு காலத்துலே.
    சுவாரஸ்யம். இரண்டு விதத்திலும். மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  29. மோகினி வந்து விட்டார்கள் அடுத்து திரில்.....

    பதிலளிநீக்கு
  30. காசு ஷோபனா எழுதிய கதையோ என்று நினைத்தேன், அவர் படித்து பகிர்ந்த கதை சூப்பராக இருக்கிறது.
    அடுத்தது என்ன என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டார். ஹோட்டல் வெண்ணிலா நன்றாக இருக்கிறது.

    கெளதம் சார் ஓவியம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. ஆனால் நான் வரையவில்லை. காசு சோபனா எழுதியதாகக் கூட இருக்கலாம். பார்ப்போம்.

      நீக்கு
    2. ஆமாம், கௌதமன் சாரின் ஓவியங்களுக்கும் இதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!