வெள்ளி, 7 ஜனவரி, 2022

வெள்ளி வீடியோ : சின்னச் சின்ன காரணத்தால் கன்னமதில் நீர்த்துளிகள் என்னை மட்டும் புரிந்து கொண்டால் அத்தனையும் தேன் துளிகள்

 1981 ல் வெளிவந்த திரைப்படம் 'அர்த்தங்கள் ஆயிரம்'.  பார்த்திபன் நடித்த படம் என்று தெரிகிறது.  இசை சங்கர் கணேஷ்.  மற்றபடி படம் பற்றிய விவரங்களை திரட்ட முடியவில்லை.

அந்தக் காலத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த எஸ் பி பி பாடல்களில் ஒன்று இந்தப் பாடல்.  யார் எழுதியது என்றும் தெரியவில்லை.

படம் வெளியாகும்போது மதுரையில் இருந்தேன்.  இன்றைய இரண்டு படங்களுமே அப்படிதான்.  அப்போதிலிருந்தே பாடல்கள் மனதில் தங்கி விட்டன.  இரண்டு படங்களும் சத்தியமாய்ப் பார்க்கவில்லை!!  

பாடல் முழுக்க முழுக்க எஸ் பி பி யின் குரல் வண்ணம்.  சங்கர் கணேஷின் இனிய இசை.

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் 
கவிபாட விழிக்கேன்னா நாணம்?
இளங்காற்று தீண்டாத சோலை 
இளங்காற்று தீண்டாத சோலை மண்ணில் 
எங்கேயும் பார்த்தாயோ 
என் தோட்டப்பூவே 

நீலவான மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு

வனமோகினி வனிதாமனி
புதுமாங்கனி சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்

குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு 
சலங்கி முழங்க நடையில் தாளம் போடு 
குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு 
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு 
தழுவிட வா அலையெனவே...
தழுவிட வா அலையெனவே 
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே 

மோக வீணை என்று உன்னை
நானும் மீட்டி பாடிடவா
பாரிஜாத மாலைபோல
மார்பில் உன்னை சூடிவா
போதை நீயே மேடை நானே
மதன் வீசிடும் கணை பாயுது 
மலர் மேனியம் கொதிப்பாகுது 
நீரோடை நீயே வாவா


அடுத்த பாடலும் எஸ் பி பி தான்.  கடல் பாடல்தான்!  சங்கர் கணேஷ் இசைதான்.  மகரந்தம் படம்.  இதுவும் 1981 ல் வெளியான படம்தான்.  வாலியும் மருதகாசியும் பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.  கே எஸ் கோலாலகிருஷ்ணன் இயக்கம்.  கதாநாயகன் என்று யாரும் கிடையாது.  முக்கிய பாத்திரத்தில் ராதிகா.

இந்தப் படத்தில் "நீயின்றி நானோ.. நானின்றி நீயோ' என்கிற இன்னொரு எஸ் பி பி பாடலும் உண்டு டூயட் பாடல்.  ஓரளவு கேட்கலாம்!

இன்றைய பாடல் காலாண்டில் அலைகள் பொங்கும்.  பாடலை வாலி எழுதி இருக்கக் கூடும்.  ஊகம்தான்!  மறுபடியும் எஸ் பி பி குரலும், சங்கர்கணேஷின் கைவண்ணமும்தான் பாடலின் சிறப்பு.  படம்?  பப்படம் என்று நினைக்கிறேன்.  இன்றைய இரண்டு பாடல்களுமே மனதை விட்டு அகலாத பாடல்கள்.

இந்தப் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத்  தாண்டுமோ
வெறும் தரையைத்  தீண்டுமோ
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத்  தாண்டுமோ
வெறும் தரையைத்  தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவைத்  தாண்டுமோ
வேறு உறவைத்  தீண்டுமோ

சின்னச்  சின்ன காரணத்தால் கன்னமதில்  நீர்த்துளிகள்
சின்னச்  சின்ன காரணத்தால் கன்னமதில்  நீர்த்துளிகள்
என்னை மட்டும் புரிந்து கொண்டால் அத்தனையும் தேன் துளிகள்
என்னை மட்டும் புரிந்து கொண்டால் அத்தனையும் தேன் துளிகள்
தேன் துளியைத்  தேக்கி வைக்கும் தாமரையின்  இதயமம்மா
தேன் துளியைத்  தேக்கி வைக்கும் தாமரையின்  இதயமம்மா
தாமரையை மலர வைக்கும் ஆதவனின் உதயமம்மா

கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத்  தாண்டுமோ
வெறும் தரையைத்  தீண்டுமோ

கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா
கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா
கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா
கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா
நீரடித்து நீர் விலகி  பார்த்ததில்லை பூமியிலே
நீ(ரி)டித்து நீர் விலகி  பார்த்ததில்லை பூமியிலே
நீ பிரிந்து நானிருந்தால் வாழ்க்கையில்லை பொன்மகளே

கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத்  தாண்டுமோ
வெறும் தரையைத்  தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவைத்  தாண்டுமோ
வேறு உறவைத்  தீண்டுமோ

72 கருத்துகள்:

  1. காலை, வணக்கம் ஸ்ரீராம் கௌ அண்ணா மற்றும் எல்லோருக்கும் காலை மாலை வணக்கம்.

    ஸ்ரீராம் படம் பேர் இதுவரை தெரிந்ததே இல்லை ஆனால் இரு பாடல்களும் நிறைய கேட்டிருக்கிறேன். பிடித்த பாடல்கள். வரிகள் பார்த்ததுமே நினைவுக்கு வந்துவிட்டதே!!!!!!

    காரணம், நான் கல்லூரி போய்க் கொண்டிருந்த நேரம். நாகர்கோவில் குளத்து பஸ்டாண்டில் நிற்கும் போது இலங்கை வானொலி பாடிக் கொண்டே இருக்கும்!!! டீக்கடையில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா..  வாங்க..

      ஆம், படம் பெயரும் நான் தெரிந்து வைத்திருப்பேன், அவ்வளவுதான்.  படம் பார்க்கும் ஆவல் வராது.  அந்தப் படத்தில் நல்ல பாடல்கள் இருந்து விட்டால் மனதில் நின்று விடும்.

      நீக்கு
  2. இளங்காற்று தீண்டாத சோலை வரி முதலில் முடியும் போது அருமை இரண்டாவதாக முடிக்கும் போதும் செமையா இருக்கும்!!! அதில் வழக்கமான அவர் கிமிக்ஸ்!! பாட்டு கேக்காமலேயே நினைவில் உள்ளது இது!! அடிக்கடி முணுமுணுத்த பாடல்!! அப்போது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வரிகளில் மட்டுமா,  அப்புறம் வரும் சரணங்களிலும், ஏன், இன்றைய அடுத்த பாடலிலும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாக...

      நீக்கு
    2. ஆமாம் அதே அதே அவரது ஃபுல் யுனிக் ஸ்டைல்! இதைத்தான் போட வந்து போட முடியாமல் போய் கீழ போட்டிருக்கிறேன். இரண்டுமே ரொம்பப் பிடித்த பாடல்கள். பின்னர் வருகிறேன்

      கீதா

      நீக்கு
  3. அனைவருக்கும், ஸ்ரீராம், கீதா ரங்கன்,
    இனிய காலை வணக்கம்.

    நல்ல செய்திகளே காதில் விழ இறைவன்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. வாலி வரிகளூக்கு உயிர் கொடுக்கும் பாலு சார்.

    உயிர் மட்டும் கொடுத்ததோடு
    நிற்கவில்லை. அந்தக் குரலுக்கு
    இருக்கும் மாயம் .....
    பாடல்களே நளினமாக எழுந்து ஆட ஆரம்பிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அம்மா.. உணர்வுகளைக் குரலில் குழைத்துத் தருகிறார் எஸ் பி பி

      நீக்கு
  5. ஸ்ரீராம் முதல் பாடல், இரண்டாம் பாடல் முழுவதுமே எஸ்பிபி அவரது யுனிக் ஸ்டைல் தெரியும் பாடல்கள். சங்கர் கணேஷ் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பார்கள் என்று தெரிகிறது. இசை சங்கர் கணேஷ் என்பதும் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். இனிமையாக, சத்தம் குறைவாக மெலடிஸ் இரண்டும்!! அவர்கள் இசையில்! அப்போது பாட்டு மட்டுமே காதில்!!! வேறு எதுவும் தெரிந்ததில்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா.. சங்கர் கணேஷ் நிறைய நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார். இவையும் அவைகளில் சேர்கிறது.

      நீக்கு
    2. ஆமாம் ஒரு காதல் தேவதை ....வந்தாள் னு ஒரு பாட்டு உண்டு இல்லையா...அது எஸ்பிபி ரொம்ப ஒரு ஹஸ்கி சாஃப்ட் வாய்சில் தொடங்கியிருப்பார்...

      அதுவும் நன்றாக இருக்கும்...கூட சித்ரா?

      கீதா

      நீக்கு
    3. ஆம். கார்த்திக்-ரேவதி நடித்த இதயத்தாமரை படத்தில் இடம்பெற்ற பாடல். நன்றாயிருக்கும். அதில் இன்னும் ஓரிரு பாடல்கள் கூட நன்றாயிருக்கும். கார்த்திக் என்றால் எனக்கு கூடவே 'காணாமல் போன கனவுகள்' ராஜி நினைவுக்கு வந்து விடுவார்!

      நீக்கு
    4. ஆமாம் எனக்கும் ராஜி நினைவுக்கு வந்துடுவாங்க. அவங்க கார்த்திக்கின் விசிறி!!!!!!!

      கீதா

      நீக்கு
  6. இதைப் போட வந்து போகவே இல்லை. சரின்னு வெங்கட்ஜி தளம் போய் கோலங்கள் பார்த்துக் கொண்டே புளி உப்புமா டேஸ்ட் பார்த்துவிட்டு இங்க வந்து மீண்டும் போட்டதும் போய்விட்டது!! அங்கும் கமென்ட் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  நேற்று ஏகாந்தன் ஸார் கமெண்ட் மெயில் பாக்சில் பார்த்தேன்.  பிளாக்கில் போய் தேடினால் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் புதன் அன்று எனக்கு அப்படித்தான் படுத்தியது உங்கள் பெட்டிக்குக் கூட முதலில் வராமல்...

      கீதா

      நீக்கு
    3. போட்டவையும் மறைந்துவிடும் அடுத்த கமென்ட் போடும் போது சரி காணாமல் போனதை மீண்டும் போட்டுவிடலாம் என்று போட்டுவிட்டுப்ப் பார்த்தால் ரெண்டும் வந்திருக்கும்!!!!!!!! ஹாஹா

      கீதா

      நீக்கு
    4. என்ன நடக்கிறது என்று டோட்டலி அபுரி!

      நீக்கு
    5. 22 ஒரு மர்ம வருடம். ஓமைக்ரான் போல ஓமர்மம்!

      நீக்கு
    6. ஆ ஆ ஏகாந்தன் அண்ணா! 22 ஒரு மர்ம வருடம் நு சொல்லீட்டீங்களே!!!...

      அப்ப கண்டிப்பா அடுத்த பார்ட் அமா, டைரக்டர் முனியின் படத்திற்குஎ ழுதிய கதை அதான் கௌ அண்ணா எழுதும் கதை வந்துவிடும்!!!

      ஓமர்மம்!! பெயர் சூட்டல் சூப்பர்..

      கீதா

      நீக்கு
  7. இரண்டுமே கேட்டு ரசித்த பாடல்களே..

    ஆனால் பார்த்தீபன் என்பது இடிக்கிறது சுதாகர் அல்லது சரத்பாபு என்று நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை. நான் படம் பார்க்கவில்லை. படம் பற்றிய நினைவும் இல்லை. இணையத்தில் பார்த்திபன் புவனேஸ்வரி என்று போட்டிருந்தார்கள்.


      நன்றி ஜி.

      நீக்கு
    2. கில்லர்ஜி, ஸ்ரீராம் சொல்லியிருப்பது முதல் பாடலுக்கு....

      //அர்த்தங்கள் ஆயிரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. ராஜ்கண்ணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன்,புவனேஸ்வரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.// இதுதான் நெட்டில் வருகிறது விக்கியில்.

      இரண்டாம் பாடலுக்கு மகரந்தம் படம்...ராதிகான்னு சொல்லியிருக்கிறார்.

      கீதா

      நீக்கு
    3. மகரந்தம் படம் பற்றித் தேடினால் கிடைப்பது இதுதான்...மோகன்ராம், அருணா, ராதிகா நடித்த படம் கே எஸ் ஜி இயக்கம் என்று

      கீதா

      நீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். படம் பெயரோ, பாடல்களோ தெரியாதவை. முற்றிலும் புதிது. பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  10. இரண்டு பாடல்களுமே நன்றாக இருக்கிறது.

    இந்தப் பாடல்களைக் கேட்டதில்லை. இந்தப் படம் வந்தபோது நான் என் மூன்றாம் வேலையில், மேட்டூரில் இருந்தேன். அப்போலாம் படம் பார்ப்பது அபூர்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை அண்ணே!! மாட்டிக்கிட்டீங்களா!!! அப்ப நீங்க எனக்கு அண்ணனேதான்!!!!! அண்ணே!!! ஹாஹாஹா 1981 நான் பி.ஏ முதல் வருடம்!! இல்லை மறந்துட்டீங்களா!!!!

      கீதா

      நீக்கு
    2. இந்தப் பாடல்கள் ரொம்ப ஃபேமஸ் அந்த சமயத்தில். திரைப்படம் வராவிட்டாலும். அதுவும் சிலோன் ரேடியோவில் அடிக்கடி வரும். விருப்பப் பாடல்கள் ..

      மதிய வேளையில் பாடல்கள் கதைகள் என்று ஒரு நிகழ்ச்சி வருமே அதில் காதல் கதைகள் வந்தால் ஏதேனும் ஊடல் கதையில் வந்தால் இந்தப் பாடல் முதல் பாடல் வரும்..

      கீதா

      நீக்கு
    3. Typo error. என் கண்ணில் 91 என்று பட்டது.

      81ல் நான் சேவியர் கல்லூரியில் B Sc

      நீக்கு
    4. ஹாஹாஹா அதானே பார்த்தேன்!!! ஓகே ஓகே நெல்லை தம்பி!!!

      கீதா

      நீக்கு
    5. அப்பாடி...   ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து முடிந்ததா?  நல்ல வேலை.  நான் 81 ஆம் வருடம் ஒன்பதாம் வகுப்பு. 
       
      நல்ல பாடல்களை ரசித்ததற்கு நன்றி நெல்லை.  கேட்டதில்லை என்பது ஆச்சர்யம்.

      நீக்கு
    6. என்னாது?!!!!! ஸ்ரீராம் இது நியாயமா 81ல் 9ஆம் வகுப்பா....மறந்துட்டீங்களா!!!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹா சஞ்சீவியா? தத ரஜனியா??!!!!!!

      கீதா

      நீக்கு
    7. அப்பாடி... ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து முடிந்ததா? //

      ஹாஹாஹாஹா எங்க முடியும்...அது தொடர்ந்து கொண்டே இருக்கும் நெல்லையின் காலை நான் வார நினைக்க அவர் என் காலை புல் பண்ண..

      கிடைச்ச கேப்ல நீங்களும் வீட்டீங்க பாருங்க 9 ஆம்ப்புன்னு!!!!!ஹாஹாஹாஹா

      அடுத்த பஞ்சாயத்து!!

      கீதா

      நீக்கு
    8. 81கள்ல, நான் பாடலைக் கேட்பதைவிட சுஜாதா புத்தகங்கள், சாண்டில்யன் நாவல்கள் போன்றவைதான் படித்தேன். சினிமாக்குல்லாம் அனுமதி கிடையாது.

      நீக்கு
    9. நான் புத்தகங்களும் படித்தேன், படங்களும் பார்த்தேன்.  நண்பர்கள் வற்புறுத்தலுக்காக அவர்களுடன் சேர்ந்து போர்ட்டர் பொன்னுசாமி போன்ற உருப்படாத படங்களுக்கும் போயிருக்கிறேன்!

      நீக்கு
  11. இன்றைய பதிவில் சொல்லப் பட்டுள்ள படங்களைக் கேள்விப் பட்டதும் இல்லை.. பாடல்களைக் கேட்டதும் இல்லை..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
  12. தயாரிப்பாளரை ஓட்டாண்டி ஆக்கிய படங்களில் இவைகளும் சேர்த்தி போல!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் சொல்லலாம், வருமானவரி கணக்குக்காக எடுத்த படங்கள் என்றும் சொல்வார்கள்!

      நீக்கு
  13. ரசித்த பாடல்கள்... இரண்டாவது பாடலை எழுதியவர் 'சுனாமி'யை மறந்து விட்டாரோ...!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு பொங்கும் என்று கவிஞர் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்!

      நீக்கு
  14. முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். இரண்டாவது பாடல் கேட்ட நினைவு இல்லை.
    இரண்டாவது பாடல் இடம் பெற்ற படத்தில் ராதிகா கதா நாயகி என்றீர்கள் ஆனால் படத்தில் அருணா அல்லவோ காட்சி அளிக்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா .மோகன்ராம், அருணா, ராதிகா மூவரும்

      கீதா

      நீக்கு
    2. சில பாடல்கள் கிடைப்பதே அபூர்வமாக இருக்கிறது.  படம் பற்றிய விவரங்களும் அப்படியே.  இந்தப் பாடலை வலையில் ஏற்றியவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் சொல்லி விடுகிறார்கள்!

      நீக்கு
  15. கடலில் அலைகள் பொங்கும்....பாடல் ஆமாம் ஸ்ரீராம் ரொம்பவே உணர்வு பூர்வமாக குரலில் இழைத்து பாடியிருக்கிறார் வரிகளுக்கு ஏற்ப....தலைவர்!!! அப்போதும் ரொம்ப ரசித்த பாடல் இப்போதும் மீண்டும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவர் தலைவர்தான்!  சரணங்களில் இன்னும் அருமையாக இருக்கும்.

      நீக்கு
    2. யெஸ்ஸு யெஸ்ஸு ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  16. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் அருமை. முதல் படம் கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது. இரண்டாவது படம் தெரியவில்லை. பாடல் கேட்ட பின்பு நினைவுக்கு வந்தாலும் வரலாம். ஆனால். முதல் பாடல் வரிகளை பார்த்ததும் பாடல் நினைவுக்கு வந்து விட்டது. அடிக்கடி கேட்டுள்ளேன். இரண்டு பாடல்களையும் சற்றுப் பொறுத்து கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. இனிமையான பாடல்கள் . ஏனோ? இதுவரை இரண்டு பாடல்களும் கேட்டதில்லை இப்பொழுதுதான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? உங்கள் ஊர் ரேடியோவில் அடிக்கடி போட்ட பாடல்களாச்சே!! :)))

      நன்றி மாதேவி.

      நீக்கு
  19. காலையிலேயே சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டுவிட்டேன்

    முதல் பாடல் ராகம் ஆபோகி - ரொம்ப வித்தியாசமாகப் போட்டிருக்கிறார். இந்தப் பாட்டோடு நிலவே என்னிடம் நெருங்காதே மெட்லி பண்ணலாம். சூப்பரா வரும்..

    இரண்டாவது பாடல் அருமையான தேஷ்.

    ரொம்ப அழகா ராகங்களைக் கையாண்டிருக்கிறார்கள் சங்கர் கணேஷ்!

    சங்கர் கணேஷ் என்றாலே இசை சத்தமாக இருக்கும், பிஜிஎம் எல்லாமும். என்று சொல்லபட்டதுண்டு. ஆனால் மெலடிஸும் ரொம்ப நன்றாகப் போட்டிருப்பது தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபோகி, தேஷா?  அதுதான் பாடல்கள் மனத்தைக் கட்டிப்போடுகின்றன...

      நீக்கு
  20. (Testing) உங்கள் வியாழன் பதிவிற்கு எந்த பின்னூட்டம் போட்டாலும் வெளியாவதில்லை.
    இதுவாவது வெளியாகிறதா என்று பார்ப்பதற்கு இது ஒரு testing..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸார்..   கமெண்ட்ஸ் எண்ணிக்கை 200 ஐத் தாண்டி விட்டதால் கன்னுக்குத் தெரியாது.  ஒவ்வொரு முறையும் கீழே உள்ள 'மேலும் ஏற்றுக' என்பதை க்ளிக் செய்தால் 200 வது கமெண்ட்டும் அதற்கு மேலும் உள்ள கமெண்ட்ஸ் கண்ணில் படும்!

      நீக்கு
  21. இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த பாடல்கள். முதலாவது பிடித்த பாடலும் கூட.

    பதிலளிநீக்கு
  22. இதனால் எல்லோருக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் பதிவை தவிர மற்றவர்களின் தளங்களுக்குச் சென்று நான் அளித்த பின்னூட்டங்கள் எதுவும் போய் சேரவில்லை டும் மும் மும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு விடை சொல்வார் யார்?  காத்திருக்கவும்.  ஏகாந்தன் ஸார் காணாமல் போன அவர் கமெண்ட் இப்போது தெரிகிறது என்று சொல்வது போல உங்கள் கமெண்டுகளும் பின்னர் கண்ணில் படும்!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹா, ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம். ஸ்வீட் எடு! கொண்டாடு! எனக்கு எத்தனை பேரோட பதிவுகளில் இந்தப் பிரச்னை வந்தது தெரியுமா? சொன்னப்போ யாருமே நம்பலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  23. கடவுள்தான் கண்ணில் படுவதில்லை என்றால் கமெண்ட்டுகளுமா!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!