வியாழன், 20 ஜனவரி, 2022

ஒருமனம் இருமனம் திருமணம்

 கருத்தொருமித்த காதலர்கள்.

இந்த வார்த்தை சரியா?  சேர்ந்து இருக்க வேண்டும், திருமணம் செய்து கொள்ளவேண்டும் (அந்தக் கால வழக்கத்தைச் சொல்கிறேன்) என்ற எண்ணத்தில் வேண்டுமானால் கருத்தொருமித்து இருக்கலாம்.  மற்ற விஷயங்களில்?

சினிமாக்களிலும் கதைகளிலும் காதலர்கள் திருமணத்தில் ஒன்று சேர்ந்த உடன் சுபம் போட்டு விட்டு ஓடிவந்து விடுகிறோம்.  அவர்கள் ஜன்னல் பக்கம் தொடர்ந்து நின்றிருந்தால் தெரியும்!  மோகம் முப்பது நாளும், ஆசை அறுபது நாளும்.  அதற்குப்பின் தான் மற்ற விஷயங்கள் தலையெடுக்கும்.

எத்தனை ஜோடிகள் கட்டாயத்துக்காக ஒற்றுமையாக இருக்கிறார்கள்?  சேர்ந்து இருக்கிறார்கள்?   இது நவீன யுகத்தின் சாபமா?

இப்போதெல்லாம் கருத்து வேறுபாடு வந்து விட்டதா, உடனே விவாகரத்துதான், பிரிவுதான் என்று முடிவெடுத்து விடுகிறார்கள்.  அந்தக் காலத்தில் சிறு மனத்தாங்கல்களைப் புறக்கணித்து, மனமொத்து அன்போடு வாழ்ந்தார்கள்.  நாள்பட நாள்படதானே உறவு இறுகும்?


ஆர்யாவும் ஸ்ருதியும் பிரிவது என்று முடிவெடுக்கிறார்கள்.  இடையில் ஒரு சிறு சுவர்.  அவர்களின் ஒன்பது வயதுப் பெண்.

ஆர்யாவாக மாதவன் ...  புகழ்பெற்ற எழுத்தாளர் என்று பெயர்.  சேட்டன் பகத்துக்கு அடுத்தபடி என்று கணக்கிடப்படுவதை ஆர்யா ரசிப்பதில்லை.  தான்தான் அல்லது தானும்தான் முதல் என்று நினைக்கிறார்.   சேட்டன் பத்துடனேயே நிறைய மோதல்கள் நடக்கின்றன.  சேட்டன் கிட்டத்தட்ட ஒரு சிறு வில்லனாகவே இருக்கிறார்.  அதேபோல பொது இடங்களில் ஆர்யாவின் வெளிப்பாடுகள் அவ்வளவு ரசிக்கப்படுவதில்லை.  பிரபலத்துக்காக செய்கிறாரா, இல்லை நிஜமாகவே பாலிசியா..  எதிரிகள் கூடுகிறார்கள்.  மாதவன் மேல் நிறைய பேர்களுக்கு கோபம் கூட வரும்.  

ஷ்ருதி கொஞ்சம் பேமிலிமேன் ப்ரியாமணியை கேரக்டர் வகையில் நினைவு படுத்தினாலும் அவரால் மாதவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  மாதவனின் பேச்சுகள், செய்கைகள் அவர் மீது இவருக்கு கோபத்தையும், எரிச்சலையும், அதிருப்தியையும் உண்டாக்குகின்றன.


"நீ ஆர்யாவை புரிந்து கொள்வதே இல்லை.  எப்பவும் அவருக்கு எதிர் ஸைட் தான் எடுக்கிறாய்" என்கிறாள் பெண் ரோஹிணி. அவள் அப்பாவை அப்பா என்று அழைப்பதில்லை.  ஆர்யா என்றுதான் அழைப்பாள்.

ஷ்ருதி விவாகரத்து செய்துகொள்வோம் என்று சொல்வதை மாதவன் ஏற்க மறுக்கிறார்.  பிறகு வேறு வழியில்லை எனும்போது திருமணத்தை எப்படி ஒரு விழாவாக விமர்சையாகக் கொண்டாடினார்களோ அதே போல பிரியும் நாளையும் விமர்சையாக, அனைவரையும் அழைத்து கொண்டாடிச் சொல்வது என்று தீர்மானிக்கிறார்கள்.  அக்னியை ரிவர்ஸில் வலம் வருவது என்றும் பேசிக்கொள்கிறார்கள்!

Decoupled .  நெட்ப்ளிக்ஸ் சீரிஸ்.  எட்டே பாகம்.  ஒவ்வொன்றும் அரை மணி நேரம்.  எதிர்பாராமல் பார்க்க நேர்ந்த சீரிஸ்.  தலைப்பே புதிதாக இருந்ததாலும், மாதவன் கண்ணில் பட்டதாலும் பார்த்தேன்.  

நெட்ப்ளிக்ஸில் சீரிஸ் வெளியாகி இருக்கிறது.  சீரிஸில் நெட்ப்ளிக்ஸ் வருகிறது, சேட்டன் பகத் சேட்டன் பகத்தாகவே வருகிறார் ('நெட்ப்ளிக்ஸ் என் கதைகளை வாங்காது..  அதற்கு அவர்களிடம் பணம் போறாது' என்கிறார்)  மாதவனும் அவரும் ஒருவரை ஒருவர் காலை வாரிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் புதுசு புதுசாக யோசித்து புதுமையாக, குழப்பமாக, சற்று கான்ட்ரவர்ஸியும் சேர்த்து எடுக்கிறார்கள்.  கடந்த ஒன்றரை மாதத்தில் அதிகம் பார்க்கப்பட்ட சீரிஸ் இதுதானாம்.  பின்னே இருக்காதா?

அக்னி என்ற சாமியார் மாதிரி கேரக்டர், ரசிப்பதா, திட்டுவதா என்று பார்ப்பவர்கள் முடிவெடுக்கட்டும்.  எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும், வாதம் செய்யும் மாதவன் அக்னியிடம் மட்டும் பதில் பெறுவார்!  ஒரு காட்சியில் ஹரே ராமா இயக்கத்தினர் அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகே வர, அவர்களை வெறுப்புடனும் கோபத்துடனும் பார்க்கும் அக்னி, "நம் ஹரே ராமாவை இவர்கள் சொல்வார்கள், அதற்கு பேடண்ட் வாங்குவார்கள்..  பாரசைட்ஸ்...  தீவ்ஸ்...   தீவ்ஸ்" என்று அவர்கள் காதுபடவே திட்டுவார்.  ஒவொன்றுக்கும் அவர் சொல்லும் வியாக்கியானம் புதுரகம்!

டிரைவர் கணேஷ் பாத்திரம்...  ஜோடி பிரியும் மீட்டில் திடீரென அவர் வெளிப்பாடு.. 

சின்னச்சின்ன காட்சிகளில் கவர்கிறார்கள். ஆனாலும் மொத்தத்தில் பார்க்கும்போது கலாச்சாரம் கெடுகிறதே என்று சொல்ல வைக்கக்கூடிய காட்சி அமைப்புகள், கதை.  ஒரு பக்கம் மாதவன் இதில் எப்படி நடித்தார் என்ற கேள்வி.  மறுபக்கம் மாதவன் எப்படி நடித்திருக்கிறார் என்ற வியப்பு.

மாதவனின் மாமியார்-மாமனார் சுவாரஸ்யமான கேரக்டர்கள்.  டிவோர்ஸ் செய்யப்போகிறேன் என்று சொல்லும் மகளிடம் தந்தை 'டிராமா, என் சொத்தை அபகரிக்க இருவரும் போடும் டிராமா' என்று சீறுகிறார்.  மாமியார் வியப்பு ப்ளஸ் சந்தேகத்தோடு கேட்கிறார்..

"ஒரு நிமிஷம்..  உங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை..

"ஆமாம்"

"அதனால் பிரியப்போகிறீர்கள்..."

"ஆமாம்"

ஆனால் அதே சமயம் வெவ்வேறு இடம் செல்லாமல் ஒரே வீட்டில் நண்பர்கள் போல வாழப் போகிறீர்கள்"

"ஆமாம்"

"ஆனால் இதை திருமணம் என்றல்லவா சொல்வார்கள்?"  என்று சொல்லிவிட்டு முறைக்கும் கணவனிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்!  அவருடைய கேரக்டருக்கு பொருத்தமான முகம்!


சீரிஸின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மாதவனும் சுர்வீன் சாவ்லாவும் அளித்த பேட்டி..


அடுத்து அவர்கள் இருவருமே பேசிக்கொள்வது போல ஒரு காணொளி...  இந்த இரண்டு காணொளிகளும் உங்களைக் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தலாம் / கோபப்படுத்தலாம்!


=============================================================================================================================

சமீபத்தில் இரண்டு புகழ்பெற்ற திரையுல ஜோடிகள் பிரிந்தன.  ஒன்று கொஞ்ச நாள் முன்பு நாகார்ஜுன் மகனும், நாகேஸ்வரராவின் பேரனுமான நாகசைதன்யாவும், சமந்தாவும்.  இப்போது தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி.   ஐஸ்வர்யா ரஜினி மகள் என்பதால் சற்று ஆச்சர்யமாக இருக்கும்.  ஆனால் ரஜினியின் இன்னொரு மகள் ஏற்கெனவே ஒரு விவாகரத்து முடிந்து இன்னொரு திருமணம் முடித்திருக்கிறார்.  

சிவாஜி கணேசன், சிவகுமார், ஏன் ரஜினியும் கூட போல இன்னும் பல பிரபலங்கள் பிரியாமல் சேர்ந்து வாழ்ந்தபோது  இவர்களால் ஏன் சேர்ந்து சில ஆண்டுகள் கூட வாழ முடியவில்லை?  எங்கு, யாரால், எதனால் தவறு நேர்கிறது?  அதுவும் பதினெட்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனுஷ்- ஐஸ்வர்யா!  

மேலே நான் பகிர்ந்திருக்கும் சீரிஸ் கதையமைப்புடன் தொடர்பு கொண்டு வருவதால் இதையும் இங்கு சேர்த்திருக்கிறேன்!




இதில் அவர்கள் சொந்த வாழ்க்கை என்பதை மீறி, ரசிகர்களின் தலையீடு, உணர்ச்சிக்கொந்தளிப்பு வேறு!



===================================================================================================================







மேரிலேண்ட்: அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்கள் துறை தலைவரான மருத்துவர் பாஹீம் யூனுஸ் தனக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்த அனுபவத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட 5 பாடங்களை பகிர்ந்துள்ளார்.

இது பற்றி அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: 2 ஆண்டுகளில் 1000 தடவைகளுக்கு மேல் கோவிட் நோயாளிகளைச் சுற்றி வந்திருக்கிறேன். முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளினால் நோய்த்தொற்று ஏற்படவில்லை. ஆனால் தற்போது முகக்கவசமின்றி குடும்ப நிகழ்வில் பங்கேற்ற போது கோவிட் என்னை பிடித்தது. எனவே உங்களால் முடிந்தால் என்95 அல்லது கே.என்.95 முகக்கவசங்களை அணியுங்கள்.

நோய் தொற்று ஏற்பட்டு வென்டிலேட்டரில் உயிருக்கு போராடாமல், 5 நாட்களுக்குப் பின் முகக்கவசங்களுடன் நான் வேலைக்கு திரும்பிவிட்டேன். எனது கதையை சமூக ஊடகங்களில் சொல்கிறேன். இதிலேயே நீங்கள் அறிந்துகொள்ளலாம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் அதன் வேலையைச் செய்துள்ளன என்று. எனவே தடுப்பூசிக்கும், கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்.

எனக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள், ஸ்டெராய்டுகள் பாக்ஸ்லோவிட் போன்றவை தேவைப்படவில்லை. அறிகுறிக்கு தகுந்த சிகிச்சை போதுமானது. ஐவர்மெக்டின், ஹைட்ரோகுளோரோகுயின், ஜிங்க் போன்றவற்றையும் நிச்சயமாக நான் பயன்படுத்தவில்லை. அதே சமயம் கடுமையான நோயாளிகளுக்கான நெறிமுறைகள் வேறுபட்டவையாக இருக்கும்.

கோவிட் இருக்கிறதோ இல்லையோ, உங்கள் மரணத்தை பற்றி அடிக்கடி நினைத்துப் பாருங்கள். இது எல்லாவற்றையும் சரியான வகையில் காண வைக்கும். தைரியமான, அர்த்தமுள்ள முடிவுகளை எடுப்போம். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி நல்லது, மந்தை மனநிலை மோசமானது.

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளுங்கள், என்95 முகக்கவசங்களை அணியுங்கள், அப்படியும் கோவிட் தொற்று ஏற்பட்டாலும், கவலை வேண்டாம் முழுமையாக குணமடைவீர்கள். நான் பங்கேற்ற குடும்ப நிகழ்ச்சி எனக்கு முக்கியமானது. அதனால் அந்த ரிஸ்க்கை எடுத்தேன். ஆனால் உங்கள் ரிஸ்க் அளவு வேறுபட்டதாக இருக்கலாம். அறிவியலை முதலில் மதியுங்கள். பின்னர் மனது சொல்வதை செய்யுங்கள். இவ்வாறு தான் கற்ற அனுபவங்களை ஐந்து பாடங்களாக வழங்கியுள்ளார்.

==============================================================================================================

அடுத்தடுத்து இரண்டு தண்ணீர் செய்தி - பழசு!



தொடர்ச்சி...
என்ன திட்டங்கள் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எம்.பி. தரப்பு அலட்சியத்தால், சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிவிட்டது. இதற்கெல்லாம் எம்.பி.-யிடம் தான் கட்டணம் வசூலிக்கப் போகிறோம் என்றார்.
தருமபுரி எம்.பி. தாமரைச்செல்வன் கூறுகையில், எம்.பி. நிதியை நகராட்சி வசம் தருவது மட்டும்தான் எங்கள் பணி. அதன்பிறகு, போர்வெல் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம், அதிகாரிகள் ஆகியோர்தான் கண்காணிக்க வேண்டும். அவர்கள் குடிநீர்க் குழாயை உடைத்து விட்டு, எங்களைக் குறை கூறுகிறார்கள் என்றார்.
எது எப்படியோ…இன்னும் கொஞ்ச நாளைக்கு சிரித்து மகிழ தருமபுரி நகர மக்களுக்கு சுவையான காமெடிச் சம்பவம் கிடைத்து விட்டது.
[ தி இந்து ]


அடுத்த தண்ணீர்ச் செய்தி...



=============================================================================================================

ஒரு கவிதை முயற்சி...

முதல் ஸ்பரிசம் 

அன்றொரு நாள் மாலை அந்தக் குளிரில் 
அவளும் நானும் அருகருகே அமர்ந்தபடி 
அண்டார்டிகா பனிமலை 
அவ்வளவு சதுர கிலோமீட்டர் 
எப்படி ஏன் உருகியது 
என்று பேசிக் கொண்டிருந்த போதுதான் 
அது நிகழ்ந்தது .

=========================================================================================================

ஓவியமும், நகைச்சுவையும் ஜெ...  என்று அறிக!


அடடே...   ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் போலவே...   பார்த்துவிட வேண்டியதுதான்..  நாளையே ஆன்லைனில் ரிசர்வ் செய்யவேண்டும்!


மேலே இந்த யுகத்து Decoupled சீரிஸ்...  இங்கே அந்தக் காலத்து தாகம் தீர்க்கும் மனைவி..


இதயத்தில் ஓரிடம்...
===================================================================================================================

சிலமுறை பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன் என்றாலும் சகோதரி மாதேவி அவைகளை கவனிக்கவில்லை என்று தெரிந்தது.  பதிவிலேயே சேர்த்தால் படிப்பார் என்று சில நாட்களாகவே நினைத்திருந்தேன்..  எனவே இதோ இங்கு சேர்க்கிறேன்.

"சகோதரி மாதேவி...  உங்களிடமிருந்து எங்கள் பிளாக்குக்கு திங்கள் சமையல், செவ்வாய் கதை, சனிக்கிழமைக்கு 'நான் படிச்ச கதை' போன்றவற்றுக்கு பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.  இதைப் படித்துவிட்டு பின்னூட்டத்தில் சம்மதம் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்!"

146 கருத்துகள்:

  1. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்..

    வாழ்க குறள் நெறி.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நலமே விளையாட்டும்.

    பதிலளிநீக்கு
  4. //அவள் அப்பாவை அப்பா என்று காய்ப்பதில்லை. ஆர்யா என்றுதான் அழைப்பாள்.//

    காய்ப்பதில்லை - அழைப்பதில்லை!

    திருமணம் குறித்த சீரியல் பற்றி வேறு சில இடங்களிலும் படித்தேன். பார்க்க வாய்ப்பில்லை. பரபரப்புக்காகவும், TRP Rating போன்ற காரணங்களுக்காகவும் இப்படியெல்லாம் எடுத்து தள்ளுகிறார்கள். எங்கே போய் முடியுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இதுதான் பார்ப்பவர் உள்ளங்களைக் கெடுக்கிறது. பெண் பார்பபது பற்றி ஒரு சீரிஸ் பார்த்துவிட்டு என் மகன் 'நீ பெண் பார்க்கும் வேகம் சரி இல்லை' என்கிறான் என்னிடம்!.

      நீக்கு

    2. காய்ப்பதில்லை - அழைப்பதில்லை!

      திருத்தி விட்டேன். நன்றி.

      நீக்கு
  5. பதிவின் வழி சொன்ன மற்ற விஷயங்களும் படித்தேன் ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஸ்ரீராம், மற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைவரும் தொற்றில்லா வாழ்வைப் பெற
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. இப்படி எல்லாம் சீரியல்கள் வருகின்றனவா.
    அதையும் பசங்க பார்க்கிறீர்களா. ரொம்பக் கஷ்டம் பா.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதவன் திறமையான நடிகர்மா..   அவர் இழுக்கிறார்.  ஒரே சீசன், எட்டு எபிஸோட்.  தொடருமா, தெரியவில்லை.

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய உளவாக இன்னாத கூறல் ..
      வாழ்க குறள் நெறி.

      நீக்கு
  9. இன்றைக்கு கில்லர் ஜி அவர்களது சாட்டைக்கு நிறையவே வேலை இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  10. எலிக்கும் தவக்களைக்கும் விடுதலை..

    எல்லாம் விதி!..

    பதிலளிநீக்கு
  11. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு - ஒலிச்சுருள் ஒன்று சுற்றி வந்தது...

    ஸ்ரீராம் அவர்களுக்கு நினைவிருக்கும்...

    பதிலளிநீக்கு
  12. கிராமங்களில் சொல்வார்கள் .

    பல கொல்லையில் மேஞ்ச ஆடு பசி அடங்கிப்போகாது- என்று..

    பதிலளிநீக்கு
  13. இத்தகைய வாழ்க்கை முறை எத்தனை பேரை சீரழிக்கக் காத்திருக்கின்றதோ!..

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் தொற்று முற்றிலும் நீங்கி மன அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  15. நாக சைதன்யா/சமந்தா பற்றி அதிகம் தெரியாது. ஆனால் தனுஷ்/ஐஸ்வர்யா முடிவு கொஞ்சம் தாமதம். மற்றபடி இது எதிர்பார்த்ததே! என்றாலும் இதுக்காகப் பொதுமக்கள் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்கறது தான் வேடிக்கையானது.

    பதிலளிநீக்கு
  16. மாதவன் நடிப்பு எனக்குப் பிடிக்கும். ஆனாலும் இப்படியும் ஒரு படம். என்னவோ போங்க! எங்கே பார்த்தாலும் விவாகரத்து என்றே பேச்சு. நேற்று முகநூல் பதிவுகளில் எல்லாம் தனுஷ்/ஐஸ்வர்யா தான். அவங்க அவங்க வீட்டுப் பிரச்னைகளைக் கூட மறந்துடுவாங்க போல! :(

    பதிலளிநீக்கு
  17. உலகமயமாதலினால் உலகம் மட்டும் சுருங்கவில்லை/மக்கள் மனங்களும்! விட்டுக்கொடுத்தல்/பரிவு/நேசம்/பாசம்/ஒருவருக்கொருவர் உதவி செய்வது போன்ற்வை எல்லாம் நாளாவட்டத்தில் பேச்சு வழக்கில் கூட இருக்குமா சந்தேகமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை" என்று பிரிஜ்ஜில் மட்டும் ஒட்டி வைக்கிறோம்!

      நீக்கு
  18. கதம்பத்தின் மற்ற வாசனைச் சேர்க்கைகளும் அருமை. முக்கியமாய் நகைச்சுவைத் துணுக்குகள்.

    பதிலளிநீக்கு
  19. இல்லம்மா. நான் அந்தப் பெண் பார்க்கும் சீரியல் சொன்னேன்.

    அன் கப்பிள்ட் நெட்ஃப்ளிக்ஸில் இருப்பதைப் பார்த்தேன்.
    சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றுகிறது'
    அவர்கள் ரியல் லைஃப் சம்பாஷணை யதார்த்தமாக இருக்கிறது.
    அந்தப் பெண் நல்ல டிரெஸ் போட்டுக்கக் கூடாதோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  டைரக்டர் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது என்று சொன்னாராம்!

      நீக்கு
  20. உருகும் கவிதை புன்னகை வரவழைக்கிறது. க்ளோபல் வார்மிங்க்.!!!

    பதிலளிநீக்கு
  21. காப்பித் துணுக்கு. சுவாரஸ்யம்.. முன்னாட்களின் ரொமான்ஸ்!!!

    பதிலளிநீக்கு
  22. மகன் தந்தைக்கும் ஆற்றும் உதவி.
    அச்சோ பாவம் அந்தப் பிள்ளை!!

    பதிலளிநீக்கு
  23. பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளுங்கள், என்95 முகக்கவசங்களை அணியுங்கள், அப்படியும் கோவிட் தொற்று ஏற்பட்டாலும், கவலை வேண்டாம் முழுமையாக குணமடைவீர்கள். நான் பங்கேற்ற குடும்ப நிகழ்ச்சி எனக்கு முக்கியமானது. அதனால் அந்த ரிஸ்க்கை எடுத்தேன். ஆனால் உங்கள் ரிஸ்க் அளவு வேறுபட்டதாக இருக்கலாம். அறிவியலை முதலில் மதியுங்கள். பின்னர் மனது சொல்வதை செய்யுங்கள். இவ்வாறு தான் கற்ற அனுபவங்களை ஐந்து பாடங்களாக வழங்கியுள்ளார்.""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""மருத்துவர் நலமாக இருக்கட்டும். நல்ல அறிவுரைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓமிக்ரானில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், உடலில் வேறு சில உபாதைகள் இருப்பவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்!

      நீக்கு
  24. ''எத்தனை ஜோடிகள் கட்டாயத்துக்காக ஒற்றுமையாக இருக்கிறார்கள்? சேர்ந்து இருக்கிறார்கள்? இது நவீன யுகத்தின் சாபமா?''


    இத்தனை நாட்கள் சேர்ந்து இருந்ததே அதிசயம்.
    இந்த அம்மா எப்படியோ தெரியாது. அந்த ஐயாவுக்கு அவ்வளவு
    நல்ல பெயர் இல்லை.
    குழந்தைகள் பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த இரண்டுபேர் சேர்ந்திருந்தாலும், விட்டுக் கொடுப்பது, பொறுமை, கண்டுக்காமல் இருப்பது என ஒரு goal வைத்துக்கொள்ளலைனா எப்படி வாழ்க்கை ஓடும்?

      நீக்கு
    2. அந்த ஐயா பாட்டு, கூத்து என வாழ்பவர்!

      நீக்கு
  25. குபேரத் தீவு என்று படம் வந்ததா!!!! அட எனக்குத் தெரியாதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும்!  மாயாஜாலப் படம் என்றால் ஒரு சுவாரஸ்யம்தான்!

      நீக்கு
  26. மனம் இணைய வேண்டும்... முக்கியமாக பணம் இணைந்தால்...? பிரிவு உறுதி...

    அதென்ன முக்கியமாக...? மற்றவை என்ன...? பொருத்தம் பார்ப்பது முதல் பல மூட நம்பிக்கைகள்... ம்ஹீம் எதுவும் தேராது...!

    || முழுமைப் பெற்ற காதல் எல்லாம்
    முதுமை வரை ஓடி வரும்... ||

    அதென்ன முழுமை...? கருத்துரையின் முதல் வரியிலிருந்து வாசிக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருத்தம் உடலிலும் வேண்டும்...புரிந்தவர் துணையாக வேண்டும்..கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும்!

      நீக்கு
  27. ரஜினிகாந்த் வாழ்க்கையே தடங்கல் இல்லாமல் ஓடியருக்கிறதே என்று நான் ஆச்சர்யப்பட்டேன். அவரது ஆன்மீக ஈடுபாடுதான் அவர் வாழ்க்கை ஓடியதன் காரணம். ஒருவேளை அவர் அரசியலில் இருந்திருந்தால்?

    அளவுக்கதிகமான பணப், மற்ற எல்லாவற்றையும், குறிக்காக விட்டுக்கொடுத்தலை அழித்துவிடுகிறது. வேறு என்ன சொல்ல. அவர்களிடம் இருப்பதெல்லாம் போலி மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம்...   அதுதான் முக்கிய காரணம்.  அப்புறம் ப்ராபல்யம்.

      நீக்கு
  28. அனைவருக்கும் வணக்கம்.
    நேற்று நானும், என் மாப்பிள்ளையும் பூஸ்டர் போட்டுக் கொண்டோம். இன்று இருவருக்குமே கடுமையான குளிர், தலைவலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் செல்லும் போக்கைப் பார்த்தால், நீங்கள், பூஸ்டர் நம்பர் ஒன்று போட்டுக்கொண்டோம் என எழுதியிருக்கணும்.

      நீக்கு
    2. நானும் பூஸ்டர் போட்டுக்கொள்ளவேண்டும்.  எப்போது என்று தெரியவில்லை!

      நீக்கு
  29. நேற்றுதான், 3 படத்தை இயக்கியபோது, தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்ட ஐஸ்வர்யாவைப்பற்றிப் படித்தேன்.

    இன்றைக்கு உங்கள் கவிதை

    பதிலளிநீக்கு
  30. கதம்பம் சற்று நீளம்.
    கொஞ்ச நாட்களாக என் ஃபோன் மிகவும் ஸ்லோவாகி படுத்துகிறது. எகஸ்பான்ட் பண்ணுவதும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் தண்ணீர் பற்றிய செய்திகள் படிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா தனுஷ், ரஜினி செய்தியால் நீளமாக தெரிகிறதோ என்னவோ!  மொபைல் ஸ்லோவும் ஒரு காரணமாக இருக்கும்!  ஹிஹிஹ்..

      நீக்கு
  31. லேசாக புன்னகைக்க வைக்கும் கவிதை.
    டீ கப்பிள்டு பார்க்க ஆரம்பித்தோம். மாதவனுக்கு யாரோ குரல் கொடுத்திருக்கிறார்கள். ஒட்டவேயில்லை. அதனால் பார்க்க ப் பிடிக்கவில்லை. மாதவனுக்கு எதற்கு டப்பிங்? நன்றாக ஹிந்தி பேசக் கூடியவர். முதலில் ஹிந்தி சீரியல்களில் நடித்தவர் தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதவனுக்கு யாரோ குரல் கொடுக்கவில்லை.  அவர் குரல்தான் அது.

      நீக்கு
  32. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  33. ஐஸ்வர்யா தனுஷ் விவகாரம் இங்கே
    மும் வந்து விட்டதா?

    பதிலளிநீக்கு
  34. இன்றைக்கு சீரியலோடு நிறுத்தியருக்கலாம். ஐஸ்வர்யா, சமந்தா, ரஜினி போர்ஷனைத் தூக்கியருக்கலாம்.

    நிறையபேர் அது அவர்கள் வாழ்க்கை, அதனால் விமர்சிக்கக்கூடாது என்பார்கள். ஆனால் பிரபலமானவர்கள் சமுதாயத்துக்கு உதாரணமாக இருக்க முயலணும். அது சரி... சாருஹாசன் மனைவி சொன்னதுபோல ஐஸ்வர்யாவும் இருந்திருக்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாழ்வில் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது!

      நீக்கு
  35. அண்டார்டிகா பனிமலை மேலே அருகருகே உட்கார்ந்தால் பேச்சு வருமா...?

    எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி
    கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
    உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

    (பால காண்டம் 598)

    கம்பரும் தாத்தா சொன்னதை ரசித்து இருக்கிறார் :-

    கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல

    ||உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
    உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
    உலகமே சுழலுதே உன்னை பார்த்தாலே ||

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் அண்டார்டிகாவில் உட்கார்ந்து பேசவில்லை. இங்கே அமர்ந்து பொருளற்ற விஷயங்களைத் தொடங்குகிறார்கள்!

      நீக்கு
  36. @ வல்லியம்மா...

    // கொல வெறிப் பாடலா:)))) //

    இது வேற அம்மா!..

    பதிலளிநீக்கு
  37. தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் பிரிவு உலகுக்கு பெரும்பேறு விளைவிக்க போகிறது.

    இன்னும் ஆறு மாதத்தில் ஐஸ்வர்யா திருமணத்தை ஐநூறு கோடி வரதட்சணை கொடுத்து அவளுடைய தகப்பன் செய்து முடிப்பான். இதற்கு முதல்வர் முதல் பிரதமர் வரை வரலாம்.

    எல்லாம் கலிகாலம் சமூகத்தில் எத்தனையோ இருளப்பன்களும், இருளாயிகளும் பிரிந்து விட்டார்களே அவர்களின் குழந்தைகள் வாழ்க்கைதான் திசைமாறும். இந்தக் குழந்தைகளுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கி வைத்தால் போதும்...

    பிறகு அவைகளும் நாயகர்களாக வலம் வரும் ரஜினியின் பெயரன் என்று பதாகைகள் வைத்து பாலூற்றி தனது வாழ்வை பாழாக்கும் பாமரர்கள் தொடர்ந்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... இத்தனையும் கட்டாயம் நடக்கும்! நாமனைவரும் வேடிக்கை பார்க்கலாம்.

      நீக்கு
  38. பிரிவோம் 3, தண்ணீர் தண்ணீர் 2, கவிதை 1 நகைச்சுவை 3, விளம்பரம் 1, அறிவுரை 1. கணக்கு சரிதானே? 

    பிரிவோம் 1 திரையில். மாதவனின் கேரக்டர் சாரு நிவேதிதாவை நினைவூட்டியது. ஆர்யா என்பது பெண்பால் ஆர்யன் என்பதே ஆண்பால் என்று இதுவரை நம்பியிருந்தேன். அக்னி புதுமையான பெயர். விவரமான விமரிசனம். 

    பிரிவோம் 2, பிரிவோம் 3 திரையில் இருப்பவர்களிடம் இருந்து வெளி வருவது. காதலாவது கத்திரிக்காயாவது என்று சொல்லும் பிரிவினை. 

    தருமபுரி தண்ணீர் கண்டுபிடிப்பு சிறிது காலத்திற்க்கு முன் மணலி பெட்ரோலியம் கச்சா எண்ணெய் குழாயில் துளையிடப்பட  எண்ணெய் ஊற்று எடுத்தது நினைவில் வந்தது. 

    ஒளியே அந்தக் கிரகத்திலிருந்து பூமிக்கு வர 750 ஆண்டுகள் பிடிக்கும் என்றால் பீச்சி அடிக்கும் தண்ணீர் பூமிக்கு வர எத்தனை காலம் ஆகும்.ஆக கனவு காண  வேண்டாம். 

    வியாழக்கிழமைகளில் தி இந்து சனிக்கிழமைகளில் தினமலர் என்று ஏதாவது ரூல் உண்டா? 

    கவிதை கில்லர்ஜீயிடம் கடன் வாங்கியது போல் உள்ளது. அவர்தான் எதுகை மோனை சரியாக அமைய இப்படி வார்த்தைகளை விளையாடுவார். அர்த்தங்களை பற்றி கவலைப் படமாட்டார். முதல் ஸ்பரிசம் யாரை? 

    ஜோக்குகள் அந்தக்காலம் என்பதை காட்டுகின்றன. 
     
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீரிஸ் நீங்களும் பார்த்து விட்டீர்கள் என்று தெரிகிறது.  சரிதானா?

      அதுசரி, பீச்சியடிக்கும் தண்ணீர் பூமியை அடைய எத்தனை வருஷங்களாகுமோ!

      வியாழன் இந்து, சனி தினமலர் என்றல்ல, எங்கு எது கிடைக்கிறதோ அது..

      //முதல் ஸ்பரிசம் யாரை?/

      காதலன் காதலியை!  அர்த்தமற்ற பேச்சுகள் மூலம் அணுகல்!

      நீக்கு
    2. //சீரிஸ் நீங்களும் பார்த்து விட்டீர்கள் என்று தெரிகிறது.  சரிதானா?//
      நான் சினிமாக்களின் பக்கமே போக மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியுமே. வெள்ளிக்கிழமை பதிவுகளில் என் கருத்துரை இருக்காது என்பதும் உங்களுக்கு தெரியும். 

      ஆனால் ஒரு காலத்தில் film club அங்கத்தினர் ஆக இருந்து அவார்டு படங்களையும் uncensored படங்களையும் வாராவாரம் வெள்ளித்திரையில் பார்த்தவன். 

      Jayakumar

      நீக்கு
    3. ஆமாம்... வெள்ளிக்கிழமைகளில் உங்களைக் காண முடிவதில்லை. சினிமா பக்கம் போவதில்லை சாய், பாடல்களும் கேட்க மாட்டீர்களா?

      நீக்கு
  39. திரு ஜீவி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்/ நமஸ்காரங்கள். உடல் நலத்தோடும் மன அமைதியோடும் பூரண வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பிறந்த நாள் காணும் சகோதரர் ஜீவி அவர்களுக்கு என்னுடைய அன்பான நல்வாழ்த்துகளும். அவருக்கு உடல்/மன ஆரோக்கியத்தை சகல குறைவின்றி இறைவன் தந்தருள வேண்டுமாய் மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
  40. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீவி ஸார்.  நமஸ்காரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாம்மா, கமலா சகோ, ஸ்ரீராம் -- எல்லோருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி.

      நீக்கு
  41. ஜோக்ஸ்,கவிதை ரசனையாக இருந்தது. திரு.ஜீவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ஸ்ரீராம் அவர்கள் எ பி பங்களிப்புக்கு அழைத்துக்கொண்டது மகிழ்ச்சி இருந்தும் எனது நேரமின்மை நிலையால் பங்களிப்பு செய்ய முடியாமல் இருக்கிறேன் வீட்டு கடமைகள் தனியார் நிறுவனம் என்பதில் இரவு ஒன்பது வரை வேலை பேரன் வளர்ப்பு மொண்டர்சரி எடுத்துப்போவது என்பதற்கிடையேதான் இடையிடையே எனது படிக்கும் ஆவலால் ப்ளாக்ஸ் பக்கம் கைபோனில் எட்டிப் பார்க்கிறேன். தொடர்ந்து வாசகியாக இருப்பேன் பங்களிப்பு என்பது சிரமம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
    எங்கள் ப்ளாக்ஸ் மென்மேலும் சிறப்புடன் இருக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி.  தொடர்ந்து வாருங்கள்.  உங்கள ஆதரவு தொடரட்டும்.  முடியும்போது ஏதாவது எழுதி அனுப்பவும் முயற்சி செய்யுங்கள்.

      நீக்கு
  42. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    இந்த மாதவன் சீரியல் இதுவரை பார்த்ததில்லை. இனியும் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. ஏனென்றால் அந்த வசதியும் எங்கள் வீட்டில் இல்லை. நீங்கள் படம் பற்றி நல்ல விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

    இப்போது திருமணமானவர்களிடேயே மணமுறிவுக்கு கேட்கவா வேண்டும்.? இரவானதும் கணவரின் குறட்டை சத்தம் தன் தூக்கத்துக்கு இடையூறாக உள்ளது என ஒரு மனைவி விவாகரத்து கோரினார் என முன்பு ஒரு செய்தி வந்தது. (அது ஜோக்கா, உண்மையா எனத் தெரியாது.:) )

    அர்த்தமில்லாத நிகழ்வுகள்,அதனால் ஏற்படும் சந்தேகங்கள், வீண் பயங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க காரணமாகி விடுவதாக நினைக்கிறேன். இதற்கு சிலருக்கு அவர்களிடையே இருக்கும் பணமும் ஒரு துணையாக நிற்கிறது.

    கவிதை நன்று. ஜோக்ஸ் அருமை. கவிதையின் பொருளில் உள்ள சாராம்சம், அந்தக்கால மனைவியின் அன்பான காஃபி உபசாரம், அர்த்தமற்ற திருமணமுறிவு என்ற முதல் பதிவு என ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் இன்றைய பதிவு கனமான சங்கிலியால் பிணைத்திருப்பது போல் சேர்ந்துள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    காலையில் பதிவை படிக்க வர முடியாதபடிக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. வருந்துகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரவானதும் கணவரின் குறட்டை சத்தம்// - தன்னிடம் கொஞ்சம்கூட கோபபட்டோ இல்லை டாமினேட் செய்தோ கணவன் இருந்ததில்லை என்பதற்காக, வாழ்க்கை போரடிக்குது என்று சொல்லி ஒரு பெண் மேனாட்டில் விவாகரத்து செய்தாளாம். இன்னொருத்தி, கணவன், 'காது கேட்காதது'போல 20 வருடங்களுக்குமேல் நடித்திருக்கிறான் என்பதை உணர்ந்து விவாகரத்து கேட்டாளாம்.

      இன்னும் க்ளோஸப்ல, உதட்டோடு உதடாக...என்றெல்லாம் ஸ்ருதிஹாசனோடு கணவனை 'நடிக்க'வைத்துப் படம் எடுத்து, இப்போது பாடம் கற்றுக்கொண்டுவிட்டாரோ ஐஸ்வர்யா?

      நீக்கு
    2. ஹா.ஹா.ஹா. விவாகரத்தை பெற எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.? ஒரு வேளை விவாகத்திற்கு பிளான் போடும் போதே இதற்கான யோசனைகளும் மனசுக்குள் அணிவகுத்து வந்து அமர்ந்து விடும் போல....:)

      நீக்கு
    3. மனமுறிவே மணமுறிவுக்கு காரணமாகி விடுகிறது கமலா அக்கா..  'முறிந்து போன காதலைச் சொல்லி கடந்து வந்தபின்னும் அங்கேயே தயங்கி நின்று கொண்டிருக்கிறது அவர்கள் காதல்' என்றொரு கவிதை முன்பு எழுதி இருந்தேன்.

      நீக்கு
    4. ஸ்ரீராம் அட்டகாசமான கவிதை...இது எப்படி விட்டுப் போச் உங்களின் கவிதை கலெக்ஷனில்?

      கீதா

      நீக்கு
  43. வணக்கம் சகோதரரே

    இன்று பிற செய்திகளும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இரண்டு தண்ணீர் செய்திகளும் படித்தேன். குடிநீர் லைனில் துளையிட்டு போர்வெல் போட்டது நகைச்சுவைதான். இந்த செய்தி முன்பே ஒரு முறை நடைபெற்றதாக நினைவு இருக்கிறதே..!

    நட்சத்திர நீர் செய்தியும் அறிந்து கொண்டேன்.

    அனைவரும் கோவிடடுக்கு ஊசி எடுத்து கொள்வது என்பது பயனுள்ள செய்தி.

    குபேரத் தீவு படம் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறது. தேவிகாவும், ஆனந்தனும், நடித்திருக்கும் படமா? இது ஆன்லைன் டி.வி யில் கிடைத்தால் பார்க்கலாம். இன்று அத்தனை செய்திகளையும் கலந்து தந்த கதம்ப பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம், கருத்தொருமித்த என்று சொல்வது அபூர்வம் அப்படி கருத்து ஒருமித்து இருக்கும் ஜோடிகள் என்பது விரல் விட்டு எண்ணிடலாம். இரு மனிதர்கள் எனும் போது கண்டிப்பாகக் கருத்து எல்லாம் ஒருமித்து என்பது ஏதோ ஒன்றிரண்டில் இருக்கலாம் அம்புட்டுத்தான்

    //எத்தனை ஜோடிகள் கட்டாயத்துக்காக ஒற்றுமையாக இருக்கிறார்கள்? சேர்ந்து இருக்கிறார்கள்? இது நவீன யுகத்தின் சாபமா?//

    கண்டிப்பாக சமூகத்திற்காக. குடும்பத்திற்காக என்றுதான்..

    அதிலும் பல வருடங்கள் கழித்தும்பிரியும் ஜோடிகள் அரேஞ்ச்ட் என்றாலும் சரி காதலித்துக் கல்யாணம் என்றாலும் சரி...

    இதோ இப்போது லேட்டஸ்ட் ஏதோ செய்தி அடிபடுகிறதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த இரண்டு மனிதர்களுக்குள்ளுமே 100 % கருத்தொருமித்தல் இருக்க முடியாது இல்லையா?  குணம்நாடி குற்றமும் நாடி அவற்றில் மிகை நாடி மிக்க கொளல் நல்லது.

      நீக்கு
  45. இப்போதெல்லாம் கருத்து வேறுபாடு வந்து விட்டதா, உடனே விவாகரத்துதான், பிரிவுதான் என்று முடிவெடுத்து விடுகிறார்கள். //

    இதைத்தான் சொல்ல வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க.

    சின்ன சின்ன வேறுபாடுகள் சமாளித்துவிடலாம்...பலர் பெரிய கஷ்டங்களைக் கூடச் சுமந்து கொண்டு பிரியாமல் ஏதோ ஓட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் தான்.

    நீங்கள் சொல்லியிருப்பது போல் நாள் பட பட தான் புரிதலும் அதிகரிக்கும் என்றும் சொல்லலாம் இல்லை என்றால் மனப்பக்குவம் அடையும் என்றும்...அதனால் புரிதல் என்றும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் இல்லை கீதா ரங்கன்... அடுத்த வருடத்திலாவது புரிதல் அதிகரிக்கும், என்று எதிர்பார்த்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டிவிடவேண்டும். ஹா ஹா. அடுத்து வருபவன் எரிகொள்ளியா இல்லை எரிமலையா என்று எப்படிக் கண்டுபிடிப்பார்களோ?

      நீக்கு
    2. அடுத்து வருபவன் எரிகொள்ளியா இல்லை எரிமலையா என்று எப்படிக் கண்டுபிடிப்பார்களோ?//

      நெல்லை ஹைஃபைவ்

      இது நான் அடிக்கடி சொல்லுவேன்...ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி

      கீதா

      நீக்கு
    3. அதெல்லாம் இல்லை கீதா ரங்கன்... அடுத்த வருடத்திலாவது புரிதல் அதிகரிக்கும், என்று எதிர்பார்த்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டிவிடவேண்டும். //

      அப்பூடித்தானே வண்டி பலருக்கும் ஓடுது!!!!!!

      கீதா

      நீக்கு
    4. பொதுவாக எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நலம். ஏமாற்றங்கள் குறையும்!

      நீக்கு
  46. இப்படி ஒரு சினிமா வந்திருக்கிறதா..நெட்ஃப்ளிக்ஸ் ம்ம்ம் நோ சான்ஸ் அது ஃப்ரீ கிடையாது இல்லையா? சந்தா கட்டவேண்டும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமா இல்லை, சீரிஸ்!  அதுதானே இப்போதெல்லாம் பிரபலம்!

      நீக்கு
  47. மேலே நான் பகிர்ந்திருக்கும் சீரிஸ் கதையமைப்புடன் தொடர்பு கொண்டு வருவதால் இதையும் இங்கு சேர்த்திருக்கிறேன்!//

    ஆமாம் நானும் நினைத்தேன் இப்ப பிரியும் இரண்டு ஜோடிகள் என்று....அதை முதல் கருத்தில் சொல்லியிருக்கேன் பார்த்தா நீங்களும் சொல்லிட்டீங்க

    அதிருக்கட்டும் தனுஷும் ஐஸ்வரியாவும் பிரியவே போறாங்களா இல்லை ஜஸ்ட் ஒரு கேப் கொடுத்து கருத்துவேறுபாட்டைப் புரிந்து கொள்ள முயற்சிக்கப் போகிறார்களா...பாதைகள் பிரிந்தால் என்ன? எல்லா ஜோடிகளுக்கும் விருப்பங்கள் எல்லாம் ஒண்ணா மண்ணாவா இருக்கு?

    என்னவோ போங்க. ஒருவரின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்து வாழ்ந்தாலே எல்லாம் தானாக வந்த்விடும். ஈகோ தலை தூக்கும் போதுதான் பிரச்சனையே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடக்கிறதாம்.

      நீக்கு
    2. ஆமாம் அப்படித்தான் தோன்றுகிறது. ரெண்டு பேரும் சொல்லியிருக்கறது பார்த்தா ஜஸ்ட் ஒரு கேப் புரிஞ்சுக்கறதுக்குன்னு தான் தோணுது கோர்ட் வரை போகலைன்னு தோணுஅது...நல்லாருந்தா சரி

      கீதா

      நீக்கு
    3. பொதுவா பாத்தீங்கனா இப்பல்லாம் பெர்சனல் ஸ்பேஸ் பத்தி அதிகம் ஓவரா பேசப்படுவதால் இந்த மாதிரி முறிவுகளும் அதிகமாகுது

      கீதா

      நீக்கு
    4. பிரிவதற்கு சேர்வதற்கும் உள்ளுக்குள் இன்னும் என்னென்ன விஷயங்கள் இருக்குமோ...  நாமென்ன அறிவோம்!

      நீக்கு
  48. டாக்டரின் அனுபவக் குறிப்புகள் தேவையான ஒன்று. குறிப்பாக மாஸ்க், பூஸ்டர் டோஸ்.

    எங்க வீட்டில நெருங்கிய சொந்தம் ஓ மைன்னு இருக்காங்க இப்ப...டெஸ்ட் பாசிட்டிவ்...

    அதே டெஸ்ட் தான் போல!! கொரோனா டெஸ்ட் நு தான் சொன்னாங்க...உடம்புவலை பிச்சுடுச்சாம் தலைவலி...அப்புறம் மெதுவா கோல்ட் இருமல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தவர்களில் ஒருவர் ஊருக்குப் போய்ட்டு வந்ததில் அவரால் எல்லாருக்கும்.

      என் மகன் எங்களிடம் முதலில் வைக்கும் வேண்டு கோள் தயவு செய்து எந்தக் கல்யாணம் கருமாதிக்கும் போகாதீங்க. பூஸ்டர் போட தகுதியானதும் போட்டுக்கோங்கன்னு (அது ஏதோ இரண்டாவது டோஸ் போட்டு 9 மாசம் ஆகணுமாமே..)

      கடைக்குப் போகாதீங்க, கூட்டத்தை தவிருங்க இதுதான் சொல்லிக்க் கொண்டே இருக்கிறான்

      கீதா

      நீக்கு
    2. அவர் சொல்லியிருப்பது கிட்டத்தட்ட என் அனுபவத்தை ஒட்டியே இருக்கிறது!

      நீக்கு
  49. வீட்டு நிகழ்வாகவே இருந்தாலும், அண்ணன் தம்பி தங்கச்சியாவே இருந்தாலும் பிள்ளைகளாகவே இருந்தாலும், மாஸ்க் மாஸ்க் மாஸ்க்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  50. அந்தக் கற்பனைக்கெட்டாத நட்சத்திரத்தை கொஞ்சம் பூமிக்குக் கொண்டு வந்தா எப்படி இருக்கும்...அது சரி அதிலிருந்து தண்ணீர் ஓவர்ஃப்ளோ ஆச்சுனா எங்க போகும்? வளிமண்டலத்தில் அப்படியே மேல்நோக்கிப் பாயுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே முழுக்க தண்ணீர் மண்டலமாய் சுற்றி வருமோ!

      நீக்கு
  51. அந்த நட்சத்திரம் பற்றி வியப்பூட்டும் தகவல்.

    என்னாது தமிழகத்துக்குத் தண்ணீர் ப்ரச்சனையா?!!!

    எங்க ஸ்ரீராம் இப்பத்தான் தண்ணீ கண்டு பயந்து நடுங்கி இன்னும் அதுலருந்து வெளிய வரவே இல்லை...அதுக்குள்ள அந்த நட்சத்திரம் பாய்ச்சி அடிக்குமான்னு...அட நானும் இதைத்தானே சொல்லிருக்கேன் மேல!! இதுக்கு முந்தைய கருத்துல பூமிக்குன்னு...

    அதை எழுதியவர் யாரப்பா? அவரோடு நான் ஹைஃபைவ்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... இது பழைய நியூஸ் கீதா... தேதி பார்க்கவில்லையா?!!

      நீக்கு
    2. தலைப்பைப் பார்த்ததும் தேதி பார்க்காம போயிட்டேன் ஸ்ரீராம் நியூஸ் அப்படி ஒரு ஈர்ப்பு...பல கற்பனைகள் விரிஞ்சுருச்சு...

      கீதா

      நீக்கு
  52. முதல் ஸ்பரிசம்!! ஆஹா அசத்தல்

    குளிர்ந்துடுச்சு போல!! ஜோடிகளுக்கு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  53. நகைச்சுவைத் துணுக்கு ஹாஹாஹா பையன் நல்லாவே ஆற்றுகிறான்

    ஆனலைன் ரிசர்வேஷன்// ஹாஹாஹா இப்ப இப்படி ஆகிப் போச்சுல எல்லாமே ஆன்லைன்!!
    எதுக்கு!!! ரிசர்வேஷன்? யுட்யூப்ல சும்மாவே கிடைக்குமே..!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா ஒரு ஜாலிக்கு!  அதில் இனிதான் வெளியாகப்போவதாய் சொல்லி இருப்பதால்!

      நீக்கு
    2. அது புரிந்தது ஸ்ரீராம் ஜாலிக்குன்னு!!!!

      கீதா

      நீக்கு
  54. க்டைசி ஜோக்குகளையும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  55. வெப் சீரிஸ் குறித்த உங்கள் விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
  56. ஸ்ரீராம்ஜி உங்கள் கவிதை அம்சமாக இருக்கிறது. டூயட்டோ? வாசித்ததும் அப்படி கற்பனை விரிந்தது.

    மருத்துவ உலகம் சொல்வது என்னவென்றால் மனிதனின் வாழ்நாள் கூடியுள்ளதாக ஆனால் திருமண வாழ்க்கை நாட்களைக் கடப்பதே அபூர்வமாகி வருகிறதோ என்றும் எண்ண வைக்கிறது. இனி முதல் வருட திருமண நாள் என்பதை விட முதல் மாதத் திருமண நாள் என்றாகிவிடுவது போல் இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், துளசியின் கருத்து - கற்பனையை நினைத்து எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது அதை டைப்பும் போது.

      டுயட்டான்னு கேட்டிருப்பது எனக்கு என்ன தோன்றியதுனா டூயட் முடிஞ்சதும் அடுத்த சீன்லேயே கா விட்டுடுவாங்களோன்னு!!

      கீதா

      நீக்கு
    2. நன்றி துளஸிஜி...

      சும்மா காதலர்கள் உரசிக்கொள்ள வெட்டிப்பேச்சை காரணமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்ல முயன்றிருக்கிறேன்!

      நீக்கு
  57. படம் பற்றியது எனக்குத் தகவல். இது தற்போதைய வெப் சீரீஸ் என்று சொல்லப்படும் வெளியீடா?

    குழந்தை நட்சத்திரம் பற்றிய தகவல் வியப்பூட்டுகிறது

    மருத்துவர் தன் அனுபவத்தைச் சொன்னாலும் மக்கள் கேட்க வேண்டுமே

    நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாமே ரசித்தேன் ஸ்ரீராம் ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், வெப் சீரிஸ்தான்.  ஒவ்வொன்றும் அரைமணிநேரம் என்று எட்டு பாகம்!

      நீக்கு
  58. ஜீவி அண்ணா இப்போதுதான் பார்த்தேன்.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகளோடு என் நமஸ்காரமும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  59. வாழ்த்துக்களோடு ஆசிர்வாதங்களும்
    சகோதரி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!