திங்கள், 14 பிப்ரவரி, 2022

'திங்க'க்கிழமை ;   பச்சைப் பட்டாணி புலாவ் - ரேவதி நரசிம்மன் ரெஸிப்பி 

 சென்னையில் உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் இருந்த நாட்கள்.

நாங்கள் மௌண்ட் ரோடில ஏதாவது படம் பார்த்துவிட்டு, உட்லாண்ட்ஸ் வந்து குழந்தைகளுக்கு
ப்ரெட் பீஸ் மசாலா வாங்கிக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு மாமியாருக்கும் கொண்டு வருவோம்.
அந்த கொண்டாட்டம் டிசம்பர் மாத உற்சவம் மாதிரி.  புத்தக சந்தை, சினிமா, டிரேட் ஃபேர் இப்படிச் செல்லும்.

ப்ரெட் பீஸ் மசாலா.
===================

நன்றாக பழுப்பு வண்ணத்தில் டோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டித் துண்டுகள் மீது வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, வதக்கிய வெங்காயத்துடன் கலந்து, உப்பு ,மிளகாய்ப் பொடி தூவி  நல்ல மொறு மொறுப்பாக ரொட்டியின் மேல் உட்கார்ந்து வரும்.  ஆளுக்கு இரண்டு  சாப்பிட்டால், ராத்திரிக்குத் தயிர் சாதம் திங்கள் பதிவு பட்டாணியின் பல அவதாரங்கள்.

சிங்கத்துக்கும் எனக்கும் தில்லியில் ஒரு அத்தையும், ஒரு மாமாவும் இருந்தனர்.  தில்லி அத்தை விமானத்தில் வருவார். மற்றவர்கள் ஜி டியில் வருவார்கள்.  சிங்கத்தின் அத்தை வரும்போது ஒரு ஏர்பாக் நிறைய,ஒரு அடி விட்டம் கொண்ட வெல்லமும், பெரிய பெரிய பட்டாணி பச்சைப் பசேல் என்று வந்து இறங்கும்.

அதென்ன அத்தனை வளப்பம் என்று கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கும்.  என் அத்தையும் மாமாவும் பிஸ்கட், ,மோடா, தண்ணீர் பானை என்று கொண்டுவருவார்கள்:)

இங்கே சொல்ல வந்தது பட்டாணி கலந்த சாதத்தைப் பற்றித்தான்.

பச்சைப் பட்டாணி புலாவ்
----------------------------------------------

தேவை
நல்ல பாஸ்மதி அரிசி. நீண்டு செழிப்பாக இருக்குமே அந்த வகை.
குங்குமப்பூ,
பச்சைப்பட்டாணி,
நறுக்கின வெங்காயம்,
பச்சை மிளகாய்,
அரை மூடி தேங்காய்த் துருவல்.
உப்பு,
ஒரு டீஸ்பூன்  கரம் மசாலாப் பொடி.
நெய்.+எண்ணெய்

சின்னச் சின்னதாய் நறுக்கிய உருளைக் கிழங்கு
உப்பு போட்டு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இது புலாவுக்கு அலங்காரம் செய்ய:)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வெங்காயத்தை இப்படி வேண்டாம், புலாவுக்கு ஏற்றாற்போல பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்!



செய்முறை.

பாஸ்மதி அரிசியை அரைமணி நேரம் ஊறவைத்துக் கொண்டு, அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து நன்றாகச்  சூடாக்க வேண்டும்.


தேவைக்கேற்றபடி கொஞ்சம் தாராளமாக நெய்  கூடவே கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்றாகச் சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கிக் கொண்டு நம் ஹீரோ பச்சைப் பட்டாணியைச் சேர்த்து ஒரு பிரட்டுப் பிரட்டி,

ஊறி இருக்கும் பாஸ்மதியைக் கலந்து உப்பு, குங்குமப்பூ போட்டு, ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தண்ணீர் விடவேண்டும். சிலர் ஒரு பங்கு அரிசி, ஒன்றரைப் பங்கு தண்ணீர் என்றும் சேர்ப்பார்கள்.

தண்ணீர் கொதித்ததும், அரிசி,  பட்டாணி கலவையை மூடி போட்டு மூடி வைத்து  அடுப்பைக் குறைத்து விடவேண்டும்.

25 ஆவது நிமிடம் பட்டாணி புலாவ் தயார்.  மஞ்சள் பொடி சேர்ப்பதில்லை.

அடுத்த அடுப்பில் கொஞ்சம் சோன்ஃப், கொத்தமல்லி, தேங்காய்த் தூள் போட்டு லேசாக வறுத்து, ஏற்கனவே வறுத்து வைத்திருந்த உருளைக் கிழங்கு துண்டங்களுடன் புலாவின் மேல் சேர்க்க வேண்டும்..

 அதற்கான  கண்ணாடி  பாத்திரத்தில் புலாவைச் சேர்த்து மேஜையில் வைக்க வேண்டியதுதான்.


அப்படியே வெள்ளை சாதமும், பொன் வண்ண தேங்காய்ப் பொடி, பழுப்பு வண்ண உருளைக் கிழங்கு, உடன் நம் ஹீரோ பச்சைப் பட்டாணி செழிப்பாகக் காட்சிதரும்:)

இது போதும்.

தொட்டுக்க என்று பார்த்தால்  நல்ல தயிர்ப் பச்சடி வெள்ளரிக்காய் சேர்த்துப் பரிமாறலாம்.

சரியாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.  பிழை ஏதும் இருந்தாலும் மற்ற கில்லாடிகள்
சரியாகச் செய்து விடுவார்கள்.:)

ரெசிப்பி கொடுக்கலாம் என்று சொன்ன கௌதமன் ஜிக்கும், அன்பு ஸ்ரீராமுக்கும் மனம் நிறை நன்றி.

எங்கள் ப்ளாக் செழிக்கட்டும்.

67 கருத்துகள்:

  1. வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

      வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்தித்துக் கொள்வோம்.

      வாங்க கமலா அக்கா..  வணக்கம்.

      நீக்கு
  4. அன்பின் அனைவருக்கும் இனிய காலை
    வணக்கம்.
    ஆரோக்கியம் நிறை வாழ்வு என்றும் தொடர
    வேண்டும்.இறைவன் அருள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர வேண்டும் இறைவன் அருள்.

      வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  அழகிய, சுவையான  ரெசிப்பிக்கு நன்றி.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மேன்மேலும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் மேலோங்கிடப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. கதைபோல ஆரம்பித்திருக்கும் பட்டாணி சாதம்
    இன்று திங்கள் பதிவாக வரப் போகிறது
    என்பதை மறந்துவிட்டேன்.

    அன்பின் ஸ்ரீராமுக்கும், கௌதமன் ஜிக்கும்
    மிக நன்றி.
    கௌதமன் ஜி திங்கள் பதிவு வேண்டும் என்று சொன்ன உடன்,
    இரண்டு நாட்கள் முன்பு செய்த புலவ் பற்றி
    எழுதிக் கொடுக்கலாம் என்று
    தோன்றியது.

    எல்லோரும் எப்போதும் செய்யும் முறைதான்.

    எழுதிப் பதிவு செய்வதில் அவசரம் காட்டி விட்டேனோ
    என்று தோன்றுகிறது.
    அழகாகப் படங்களைச் சேர்த்திருக்கும் ஸ்ரீராமுக்கு நன்றி.
    புலாவின் படம் எங்கள் வீட்டுடையதுதான்.

    வந்து பார்த்துப் படிக்கும் அனைவருக்கும் முன்பாகவே நன்றி
    சொல்கிறேன்.
    நட்புகளுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா. நன்றாகத்தான் கொடுத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. ரெசிப்பியும் பூர்வ கதையும் படிக்க ரசனையாவே இருக்கு.

      நீக்கு
    3. அன்பின் முரளிமா,

      நன்றி.
      அவசரக் கோலமாகத் தெளித்து விட்டேனோ
      என்று பயந்தேன். படத்தில் பட்டாணி
      குறைவாகத் தெரிகிறது. காரணம் அதிகமாக வறுபட்டு
      பழுப்பானதால் :)

      நீக்கு
  7. பட்டாணி புலவு நான் முதல் முதல் சாப்பிட்டது எங்களோட முதல் ஆண்டு கல்யாண நாள்க் கொண்டாட்டத்தில் தான். அப்போ பிக்னிக் ஓட்டல் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பழைய மாதிரிக் கட்டிடத்தில் இருந்தது. அங்கே மாடியில் ரூஃப் கார்டனில் மாலை நேரம் போய்ச் சாப்பிடலாம். அங்கே உட்கார்ந்த வண்ணம் சென்ட்ரலுக்கும் மற்றும் சென்னை ஜார்ஜ் டவுனுக்கும் செல்லும் விறுவிறுப்பான வேகத்தில் செல்லும் வண்டிகளையும், எதிரே தெரியும் அரசாங்க மருத்துவமனையையும் இந்தப் பக்கம் மூர் மார்க்கெட்டின் தோற்றம், கொஞ்சம் பின்னால் அப்போது இருந்த மிருகக் காட்சி சாலை, சர்க்கஸ் மைதானம் ஆகியவற்றையும் பார்க்கலாம். தெரியாத்தனமா அந்த சர்வர்சொல்லியும் இரண்டு புலவ் கொண்டு வரச் சொல்லிவிட்டு! அம்மாடியோவ்! ஒரு ப்ளேட்டே மிஞ்சிப் போச்சு! வீட்டுக்கு எடுத்து வந்தாலும் எங்கே வைச்சுப் பாதுகாப்பது! குல்ஃபியும் அப்போத் தான் முதல் சாப்பிட்டோம். அதன் பின்னர் ராஜஸ்தான் போய்க் குல்ஃபியிலும் பட்டாணியிலும் முங்கிக் குளித்தது தனிக் கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ஹோட்டல் பிக்னிக் ல டிஃபன் சாப்பிட்டது உண்டு.

      நீக்கு
    2. நாங்களும். பழைய நாட்கள் அருமை.
      பிறகு லஸ் கார்னரில் ஒரு பிக்னிக் வந்தது. இப்போது இருக்கிறதா
      தெரியவில்லை.

      நீக்கு
    3. லஸ் கார்னரில் பிக்னிக் வந்தது தெரியாதே! ஆனால் அதன் பின்னர் எங்களுக்கு ஆர்மினியன் தெருவில் இருந்த ஹோட்டல் பாலிமார் தான் ரொம்பப் பிடித்துப் போனது. அங்கே சாப்பிட்ட வத்தக்குழம்பு! அது போல் சுவை வேறே எங்கும் சாப்பிடலை. :)))) அப்போல்லாம் மாலை வேளைகளில் சென்னையையே ஒரு அலசு அலசுவோம். கடைசியில் அருகே எந்த ஓட்டல் இருக்கோ அங்கே சாப்பிட்டுவிட்டுக் கடைசி வண்டியான கோயம்புத்தூரைப் பிடிச்சு அம்பத்தூருக்குப் போவோம். :)

      நீக்கு
  8. புலவு செய்முறையும் புலவின் படமும் நன்றாக இருக்கின்றன. செய்முறை கிட்டத்தட்ட இப்படித் தான் நானும் செய்வேன். ஆனால் தாளிப்பில் மசாலா சாமான்கள் சேர்த்திருக்கேன். இம்மாதிரியும் ஒரு நாள் பண்ணிப் பார்க்கணும். இப்போப் பையர் வந்திருக்கும்போது பனீர் புலவ் பண்ணி இருந்தேன். படம் எடுக்கலை. :( மீண்டும் எப்போவானும் பண்ணினால் நினைவாப் படம் எடுக்கணும். இந்த மாதிரி சமையல் செய்யும் நேரம் படங்கள் எடுப்பது கொஞ்சம் சிரமமாகவே இருக்கு. நினைவில் வரணும். அதோடு பாதிச் சமையலில் நிறுத்திட்டுப் படங்களை எடுத்து வைச்சுக்கணும். அடுத்தடுத்துச் செய்முறையின்போது எடுப்பது எனில் ஒவ்வொரு முறையும் கைகளை நன்றாகக் கழுவிட்டுத் துடைத்துக் கொண்டு எடுக்கணும். இல்லைனா மொபைல் எண்ணெய்/வெண்ணெயில் குளிப்பாட்டப்பட்டுடும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே கேமராவை எடுத்து வெங்காயம், பச்சை மிளகாயுடன் வைத்து விடுங்கள்.  நினைவுக்கு வரும்.  தேவையான பொருட்கள் லிஸ்ட்டில் கேமிரா, அல்லது செல்போன் என்று சேர்த்து  விடுங்கள் நினைவில் இருக்கும்!!

      :)))

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மொபைலையோ, காமிராவையோ மேடையில் எல்லாம் வைச்சால் கை தவறி கீழே விழுந்துடாதோ? அதை விடப் படமே எடுக்காமல் இருந்துடுவேன். :))))

      நீக்கு
    3. கீதாக்கா அண்ட் ஸ்ரீராம், அக்கா சொல்லியிருப்பது போல் - எனக்கும் அதே உண்டு கீதாக்கா. பல சமயங்களில் மறந்துவிடும் என்பதோடு, கை எல்லாம் எண்ணை வெண்ணெய் நெய் என்று இருக்கும், அல்லது ஏதேனும் ஒரு கறை....அப்புறம் கேமராவை அடுப்பு பக்கத்தில் கொண்டு போனால் ஆவியில் லென்ஸ் பழுதடையும் வாய்ப்பு கூடுதல். எனவே பயந்து தான் எடுக்க வேண்டும். ரொம்ப திட்டமிட்டால் மட்டும் தான் முடிகிறது கீதாக்கா.

      ஒவ்வொரு முறையும் அடுப்பை ஆஃப் செய்து விட்டு ஆவி கொஞ்சம் அடங்கிய பிறகு எடுத்துச் செய்யும் போது எல்லாம் தயாராக வைத்து, நேரம் எடுக்கும். ஹாஹாஹாஹா...

      கீதா

      நீக்கு
    4. எந்த ஸ்டெப்பை படம் எடுக்கப்போகிறோம்னு யோசித்து வைக்கணும். சில நேரங்களில் படமெடுக்கிறேன் என்று உணவின் பதம் மாறியிருக்கு. நான் பண்ணும்போது மனைவியை படங்கள் எடுக்கச் சொன்னதும் உண்டு.

      நீக்கு
    5. கீசா மேடம் சொல்வதைப் பார்த்தால், எங்களூரிலிருந்து செல்லும்போது பச்சைப் பட்டாணியைக் கொண்டுபோய்க் கொடுத்து, பெருமாளை சேவித்துவிட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றால் பட்டாணிப் புலவு தயாரா இருக்கும் போலிருக்கே. ஆனால் சொப்பில் செய்பவர்கள் அதே நினைவில் எனக்கும் மூணு ஸ்பூன்தான் பண்ணிப் கோட்டுடுவாங்களோ?

      நீக்கு
    6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    7. அன்பின் அனைவருக்கும் நன்றி.

      நமக்கு செய்யும் போது இருக்கும் பரபரப்பு
      படம் எடுக்கும் போது வருமா என்று தெரியவில்லை. நேற்றுக் கூட வெற்றிலை
      துகையல் செய்தேன்.
      மகன் படம் கேட்டதால் ஒவ்வொன்றாகப்
      படம் எடுத்து அனுப்பினேன்.
      சளிக்கும். தலை சுற்றலுக்கும் வெற்றிலை
      நல்லது என்று சொன்னார்கள்.

      இந்த ஊர் வெற்றிலை ஒரே காரம்.

      நீக்கு
    8. அன்பின் முரளிமா,
      கீதாவை வம்புக்கு இழுக்காமல் உங்களால்
      சும்மா இருக்க முடியாதே.

      பட்டாணி சாதம் நீங்களே செய்து
      டின்னருக்கு உங்கள் குடும்பத்தை அழையுங்கள்.

      சீட்டுக் கச்சேரியை அப்புறம் வைத்துக்
      கொள்ளலாம்:)

      நீக்கு
    9. அன்பின் கீதா ரங்கன்,

      நானும் அப்படித்தான்.
      மேலும் நிறைய கைகளை அலம்பிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
      பிறகு துடைத்துக் கொண்டு ஒரே பேஜார் வேலை!!!
      ஹை ஃபைவ்.

      நீக்கு
    10. புலவு செய்முறையும் புலவின் படமும் நன்றாக இருக்கின்றன. செய்முறை கிட்டத்தட்ட இப்படித் தான் நானும் செய்வேன். ஆனால் தாளிப்பில் மசாலா சாமான்கள் சேர்த்திருக்கேன். இம்மாதிரியும் ஒரு நாள் பண்ணிப் பார்க்கணும்"""


      @ Geetha Sambasivam,

      நன்றாகச் செய்யுங்கள்.
      குழந்தைகள் கூட இருக்கும்போது தனி உற்சாகம் தான்.

      நீங்கள் செய்யாத பலகாரமா.

      மிக மிக நன்றி கீதாமா.

      நீக்கு
    11. @ Geetha Rangan,
      ஒவ்வொரு முறையும் அடுப்பை ஆஃப் செய்து விட்டு ஆவி கொஞ்சம் அடங்கிய பிறகு எடுத்துச் செய்யும் போது எல்லாம் தயாராக வைத்து, நேரம் எடுக்கும். ஹாஹாஹாஹா...

      Absoutely right .பட்டாணியின் பலன்களை எழுத நினைத்து விட்டுப்
      போச்சு.
      சில பேருக்குப்
      பட்டாணி இல்லாமல் சமைக்கவே தெரியாது.
      ஆலு, ப்யாஸ், மட்டர்:)
      மருமகள் சொன்னது.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    தாங்கள் செய்த தங்கள் வீட்டு பட்டாணி புலவ் மிகவும் நன்றாக வந்துள்ளது. பிற படங்களும் அருமை. இதன் செய்முறை விளக்கமும், பிரட் பட்டாணி விபரங்களும் அருமை. நிறைய பட்டாணி சேர்ந்த எதுவுமே நல்ல சுவையானதாக அமையும். அதுவும் உருளையை வறுத்துப் போட்டு இறுதியில் பிரியாணியோடு கலந்து விடுவதால், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இந்த முறையில் ஒரு நாள் கண்டிப்பாக செய்து விடுகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கமலாமா,
      இங்கே சின்னவனுக்கு வெங்காயம் ஆகாது. அவனைச் சாப்பிட வைப்பதற்காக
      உருளை வறுத்துப் போட்டேன்.

      பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது
      கன்னாபின்னான்னு பசிக்கும் . உ.கி யைப்
      பார்த்ததும் கோபம் எல்லாம்
      அடங்கி விடும். பிறகென்ன பாட்டி, தினம் பண்றியான்னு கேட்பான்.

      கருத்துக்கு நன்றி. உங்களுக்கென்ன....பிரமாதமாகச் செய்து விடுவீர்கள்.

      நீக்கு
  10. ஆகா..
    பட்டாணிப் புலவுடன் இன்றைய காலைப் பொழுது..

    உடனேயே எழுதிட வேண்டும் என்று நினைத்தேன்..

    இதே செய்முறையில் பனீர் வதக்கி சேர்ப்பதும் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துரை செல்வராஜு,

      நலமுடன் இருங்கள்.
      நீங்க தான் அந்த குவைத்தில் நளபாகம்
      செய்த வரலாறு மகத்தானது. மஹா பொறுமையுடன் இருந்திருக்கிறீர்கள்.

      கார்ன் சேர்த்து செய்வீர்களா. அதுவும் நல்ல சுவைதான்.
      சற்று இனிப்பாகக் கூட இருக்கும்.
      கற்பனையைக் கொஞ்சம் ஓடவிட்டால்
      சமையலறை சொர்க்கமாகும்.
      நன்றி மா.

      நீக்கு
  11. குவைத்தில் இருந்த வரைக்கும்
    பெரிய வணிக வளாகங்களில் கிடைக்கும் (Baby Corn) இளம் சோளத்தினை வாங்கி வந்து பட்டாணிக்குப் பதிலாகப் பயன்படுத்துவது உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனீர் இங்கே காட்டேஜ் சீஸ் என்று கிடைக்கும்
      அதையும் வதக்கி சேர்ப்பதுண்டு.
      அப்படியே சேர்த்துவ்டுவதும் உண்டு , நன்று துரை செல்வராஜ்.

      நீக்கு
  12. அழகான படங்களோடு செய்முறை விளக்கம் அருமை அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தேவகோட்டைஜி,
      நலமுடன் இருங்கள்.

      கருதுக்கும் பாராட்டுக்கும் நன்றி மா.

      நீக்கு
  13. புலவு படம் அழகாக இருக்கிறது. நான் ஒரு தடவை புலவுக்கும் பிரியாணிக்கும் வித்தியாசம் கேட்டதும் அதற்கு உள்ள பதிலும் நினைவில் வந்தது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜெயக்குமார் சார்.

      ஆமாம் நீங்கள் சொல்லி இருப்பதைப் படித்தேன்.
      என்னமோ சில வார்த்தைகள் புழக்கத்துக்கு வந்து விடுகின்றன.
      ஊரோடு சேர்ந்து வாழ்வது போல
      சொல் பழக்கங்களும் ஒட்டுகின்றன.

      புலவுக்கு வேற்று பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
      கருத்துக்கு மிக நன்றி மா.

      நீக்கு
  14. வல்லிம்மா வாவ்!! சூப்பரான ரெசிப்பி.

    நான் தேங்காய் போட்டதில்லை. அடுத்த முறை செய்யும் போது செய்துபார்த்துவிடுகிறேன். இப்போது ஃப்ரெஷ் பட்டாணி - ஹீரோயின் - ஹாஹாஹா -
    கிடைக்கிறதே!!

    நல்ல ரெசிப்பிக்கு மிக்க நன்றி வல்லிம்மா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதாமா,
      தேங்காயை உபயோகப் படுத்தியே ஆக வேண்டிய
      நிலைமை.
      அதனால் வறுத்து சேர்த்தேன் பா.

      பெரியவனுக்கு அசிடிடி தொந்தரவு வருகிறது.
      நிறைய வேலை. சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை.
      அதற்காக சோன்ஃப்.

      வாசனையாக இருந்ததுமா. நன்றி.

      நீக்கு
  15. நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள் வல்லிம்மா.

    படங்களும் நன்றாக இருக்கின்றன. வெங்காயம் இப்படிப் போட்டாலும் ஒன்றும் குறையில்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாமா,
      மிக நன்றி மா. எல்லோரும் அழகாகச் செய்வார்கள். நீங்கள்
      போடும் , போட்ட படங்கள் மிக அருமையாக
      இருக்குமே.
      வெங்காயம் ரெண்டாம் பட்சம் தான்
      இங்கே. மனசிருந்தால் மார்க்க பந்து:)

      நீக்கு
  16. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்,'

      என்றும் நலமுடன் இருங்கள்.
      வந்து படித்ததற்கு நன்றி மா.

      நீக்கு
  17. என்னடாது... பட்டாணி புலவு என ஆரம்பித்து ப்ரெட் மசாலா வருதேன்னு பார்த்தேன்.

    அதையே இன்னொரு ரெசிப்பியா கொடுத்திருக்கலாம்.

    இங்க பெங்களூர்ல, எல்லா ஐயங்கார் பேக்கரிலயும் இது கிடைக்கும். 10-15 ரூபாய் இருக்கும்னு நினைக்கிறேன். பன் உள்ளேயே மசாலா வைத்து, ஆலுbபன்.. அதுவும் பசங்களுக்குப் பிடிக்கும்.

    நீங்க சொல்லியிருக்கற மாதிரி இரண்டு சாப்பிட்டால் ஒரு வேளை சாப்படு ஆயிடும்.

    எனக்கே இப்போ சாப்பிடும் ஆசை வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜஸ்தான், குஜராத் மற்றும் தில்லியில் இந்த பன்னில் செய்த உணவுகள் விதம், விதமாய்க் கிடைக்கும். மஹாராஷ்ட்ராவிலும் கிடைச்சாலும் அங்கே அதிகம் பாவ் பாஜி தான். :))))

      நீக்கு
    2. அன்பின் முரளிமா,

      எல்லாம் ஒரு ஃப்ளோல எழுதுவது தான்.
      ஆடச் சொல்லி ஓயச் சொல்லும் கதை.:)

      சம்பவம் இல்லாமல் எழுதத் தெரியவில்லை. நம் நண்பர்கள் இருக்கும் இடம் தானே.
      இதில் இன்னோரு தடவை எழுதி, அதற்குப்
      படமும் சேர்க்காமல் ....என்னவோ தோன்றவில்லைமா.

      ஓ. உறவினர்கள் வருகையா. எஞ்சாய்.
      சீட்டு விளையாடுவது எங்கள் வீட்டிலும் உண்டு.
      எல்லாம் கனவு போல இருக்கிறது.

      எப்ப வேண்டுமானாலும் செய்யலாம் முரளிமா.
      ரசிச்சு சாப்பிடுங்கள்.

      நீக்கு
    3. அன்பின் கீதாமா,

      பாம்பேயில் அப்போது பஞ்சவடின்னு ஒரு
      உணவு விடுதி இருந்தது.
      அதில் எல்லா குஜராத்தி சாப்பாடு முறையில் உணவு
      மிக நன்றாகக் கிடைக்கும்.
      இப்போது இருக்கிறதா தெரியவில்லை.

      நீக்கு
    4. குஜராத் கட்ச்சில் புஜ் நகரில் கிடைக்கும் டபேலி மிகவும் பிரபலம். ஒரு முறை சாப்பிட்டால் மறக்க மாட்டீர்கள். மற்ற ஊர்களில் டபேலி சாப்பிட்டிருந்தாலும் இங்கே அது தனி! பன்னுக்குள் தான் ஸ்டஃப் செய்து கொடுப்பார்கள்.

      நீக்கு
  18. பட்டாணி புலாவ் செய்முறை நல்லா இருந்தது.

    முதலில் வெங்காயத்தின் படம் பார்த்துவிட்டு எல்லாமே இணையப் படங்களோ என்று நினைத்தேன். புலவு படம் அவ்வளவு அழகாகவும் சேவையை ஒடித்துப்போட்ட பிரியாணி அரிசி போலவும் இருந்ததால்.

    நீங்கள் செய்த புலவின் படம் என்பது ஆச்சர்யமாக இருந்தது. பார்க்கும்போதே பசிக்கிறது.

    இதில் சிறிதாக கட் செய்த பனீரை உருளைக்கு பதிலா போடலாமோ? ஹைதையில் சின்னவெங்காயத்தை ஒரு விதமாக நூல்தூல் போன்று நன்கு நெய்யில் வறுத்து கலந்து தருவான்.

    இங்ங்ளீஷ் குக்கும்பர் வைத்து செய்யும் தயிர்பச்சடி இதற்கு சூப்பரா இருக்கும்.

    நேற்று இரவு உறவினர்களுடன் 11:45வரை சீட்டாட்டம் (ஆரம்பித்ததே 9 மணிக்குத்தான்) காலை ஒன்பதுக்குத்தான் எழுந்தேன். இப்போ இதைப் பண்ணச் சொல்லி (உணவு மெனு என்னோடது) சொன்னால் மனைவி என்ன சொல்லுவாள் எனத் தெரியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ப்பதற்கு சேவை போல மிகவும் அழகாக வந்திருக்கிறது ருசிக்கு சொல்லவே வேண்டாம் பக்குவமாக தயாரிக்கப்பட்ட ருசியை எவர் தான் விரும்ப மாட்டார்கள் மிகவும் அழகாகவும் ஆர்வமாகவும் தயாரித்து பதிவிற்கு அனுப்பிய உங்கள் பட்டாணி புலவு எனக்கு மிகவும் விருப்பமானது பாராட்டுதல்கள் உங்களுக்கு அருமை

      நீக்கு
    2. அன்பின் முரளிமா,

      எல்லாம் ஒரு ஃப்ளோல எழுதுவது தான்.
      ஆடச் சொல்லி ஓயச் சொல்லும் கதை.:)

      சம்பவம் இல்லாமல் எழுதத் தெரியவில்லை. நம் நண்பர்கள் இருக்கும் இடம் தானே.
      இதில் இன்னோரு தடவை எழுதி, அதற்குப்
      படமும் சேர்க்காமல் ....என்னவோ தோன்றவில்லைமா.

      ஓ. உறவினர்கள் வருகையா. எஞ்சாய்.
      சீட்டு விளையாடுவது எங்கள் வீட்டிலும் உண்டு.
      எல்லாம் கனவு போல இருக்கிறது.

      எப்ப வேண்டுமானாலும் செய்யலாம் முரளிமா.
      ரசிச்சு சாப்பிடுங்கள்.

      நீக்கு
    3. அன்பின் காமாட்சிமா,
      நீங்கள் எல்லாம் செய்யாத செய்முறையா.

      அப்போது ஸ்ரீ கௌதமன் இன்னும் ஒரு வாரத்துக்குதான்
      ரெசிப்பி இருக்கு என்றதும் இதையே அனுப்பலாமே

      என்று தோன்றியது.
      உங்கள் பதிவுகளில் அனேக செய்முறை இருக்குமே.
      அதை எல்லாம் எ பி க்குக் கொடுத்துவிடுங்கள்.
      நாங்களும் ருசித்து ரசிப்போம்..
      நன்றி மா.

      நீக்கு
  19. பட்டாணி புலாவ் அழகிய படங்களுடன் நன்றாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  20. அன்பின் மாதேவி,
    நலமுடன் இருங்கள்.
    பதிவை வந்து படித்ததற்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  21. கருத்து சொன்ன அனைவருக்கும் என் நன்றி.
    முடிந்தவரை பதில் சொல்லி இருக்கிறேன்.
    மீண்டும் பார்க்கலாம்.
    அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் அன்பர் தின நல்வாழ்த்துகள்.
    உலகமெங்கும் அன்பு வழி நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலர் தினம் என்பதை அன்பர் தினம் என்று மாற்றி விட்ட உங்கள் திறமை மெச்சத்தகுந்தது.

      நீக்கு
    2. https://sivamgss.blogspot.com/2011/02/blog-post_5083.html// @பானுமதி! நேரம் இருந்தால் இங்கே சென்று பார்க்கவும். கருத்துரைகளில் கூட அப்பாதுரை போன்ற அம்பேரிக்க வாழ் மக்கள் இங்கே கொண்டாடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். :(

      நீக்கு
  23. சுவையான குறிப்பு. இப்போதும் பட்டாணி சீசன் தான். முன்பைவிட இப்போது தரம் குறைந்துவிட்டது. பார்த்து வாங்க வேண்டியிருக்கிறது. அதிலும் இங்கே கிடைக்கும் பட்டாணியின் சுவை அலாதி.

    பதிலளிநீக்கு
  24. அன்பின் வெங்கட்,
    நலமுடன் இருங்கள்.

    70,80களில் வந்த பட்டாணி அப்படி செழிப்பாக
    இருக்கும். சாப்பிடவும் தித்திப்பு இருக்கும்மா.

    இப்போது தரம் குறைந்துவிட்டது என்றால்
    வருத்தம் தான்.

    பதிலளிநீக்கு
  25. பட்டாணி புலவு நானும் இப்படியேதான் செய்வேன். குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிக்கு நிறைய செய்து கோடுத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பானுமா,

      ஆமாம் பா. வித விதமா செய்தால் தான் அம்மாக்களுக்கு மதிப்பு:)
      நன்றி மா.

      நீக்கு
  26. நீங்கள் செய்த புலாவ் பார்க்க நன்றாக இருக்கிறதே.. டேஸ்ட் பார்க்க சாம்பிள் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ யெஸ் , இங்கே வரவும் அன்பு துரை.
      நிறைய செய்து கொடுக்கிறேன்.
      நன்றி மா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!