செவ்வாய், 26 ஏப்ரல், 2022

சிறுகதை - மொழிபெயர்ப்பு - தலகளத்தூர் பட்டதிரி - 3 - ஜெயக்குமார் சந்திரசேகரன் 

 

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

தலைகுளத்தூர் பட்டதிரி.

மொழியாக்கம்

ஜெயக்குமார் சந்திரசேகரன்

பாகம் 3. 


பகுதி 1                                                     பகுதி 2


[தலைகுளத்தூர் பட்டதிரி 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரபல ஜோசியர். இவரது இல்லம் பிரிட்டிஷ் மலையாளத்தில் இருந்தது (மலபார்). ஜாதகக்கணிப்பு, ஜோசியம், பிரச்சனை ஜோசியம் போன்றவற்றில் மட்டுமல்லாது காவியம், நாட்டியம், மருத்துவம், போன்ற பல துறைகளிலும் விற்பன்னர். கதகளி பதங்கள், துள்ளல் பாட்டுகள் என்று பலவும் இயற்றியுள்ளார். ஆனாலும் சோழி உருட்டி பிரச்னை பார்ப்பது இவரது சிறப்பு.]

முன்கதை சுருக்கம்.

பாகம் 1. : குருகுல வாசம். ஜோசிய திறமை வெளிப்படுதல்.

பாகம் 2. : மகன் மரித்தல்-ஜோசியத்தின் மேல் வெறுப்பு-வெறுப்பு நீங்குதல்-கள்ளன் காக்கையை கண்டுபிடித்தல்-வெட்டி முறிச்ச கோட்டை கதை.

இப்படி இருக்கும்போது ஒரு நாள் பட்டதிரிக்கு  தன்னுடைய ஜாதகத்தை கணித்து நோக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல் கணித்து நோக்கியதில் அவருக்கு ஜாதி பங்கம், ஜாதிகலப்பு உண்டாகலாம் என்றும் தெரிந்தது. இந்த விஷயத்தை பட்டதிரி வேறு யாரிடமும் சொல்லவில்லை.

சில நாட்கள் சென்றபின், ஒரு நாள், அடுத்துள்ள ஒரு தரித்திர பிராமணன் பட்டதிரியிடம் வந்து “நீங்கள் பலருக்கும் பல பிரச்சினைகளை ஜோதிடம் பார்த்து தீர்த்து வைக்கிறீர்கள். எல்லாம் சரியாக நடக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம், இப்போது எனக்கு இருக்கும் இந்த தரித்திரம் தீருமா? அப்படி என்றால் எப்போது, எப்படி என்று கூற முடியுமா? “ என்று கேட்டார்.

பட்டதிரி இதைக்கேட்டு, சிறிது நேரம் கண் அடைத்து  பிரார்த்தனை  செய்து பின்னர்  “ஒன்றும் கவலைப்பட வேண்டாம். தரித்திரம் தீரும் நாள் அடுத்து வந்துள்ளது. நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு அதன் படி நடக்க வேண்டும்.” என்றார்.

“வரும் துவாதசி நாள் நடு ராத்திரி ஆகும் போது திருசிவபேருர் வடக்கு நாதன் கோவிலில் வடக்கு கோபுரத்தின் கீழ் நில்லுங்கள். அப்போது அது வழியாக மிக்க தேஜஸ் உள்ள இரண்டு பிராமணர்கள் வருவார்கள். நீங்கள் அவ்ர்களைப் பின் தொடர வேண்டும். பின் தொடரும் உங்களைத் தவிர்க்க அவர்கள் முயற்சிப்பார்கள். ஆனாலும் விடாது பின் தொடர வேண்டும். அவர்கள் ஏதாவது கேட்டால் “நீங்கள் செல்லும் இடத்திற்கு நானும் வருகிறேன்” என்று மாத்திரம் கூறவும். அவர்கள் “இவ்வாறு கூற உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்” என்று கேட்டால் ஒன்றும் பதில் கூற வேண்டாம். இவ்வாறு செய்யுங்கள் உங்கள் தரித்திரம் நீங்கும்.”

“சரி, நன்றி அப்படியே ஆகட்டும். நான் அவ்வாறே சென்று, திரும்பி  வந்து தங்களைக் காண்பேன்” என்று சொல்லி அந்த தரித்திர பிராமணன் விடை பெற்றார். 

பட்டதிரி கூறியது போல் துவாதசி அன்று நடு ராத்திரிக்கு முன்பே அந்த தரித்திர பிராமணன் வடக்கு நாதன் கோயிலின் வடக்கு கோபுரத்திற்குச் சென்று நின்றார். சிறிது நேரம் கழிந்தபின் ஒளி வீசும் தேஜஸ் கூடிய இரண்டு பிராமணர்கள் கோபுரம் வழியே வருவதைக் கண்டார். உடனே அவர்களைப் பின்தொடர்ந்தார். அவர்கள்  இருவரும், இவர் பின் தொடர்வதைத் தவிர்க்க பல உபாயங்களைச் செய்து நோக்கினர். ஆனாலும் பிராமணன் அவர்களை விடவில்லை. பின்தொடர்ந்தார்.

கடைசியில் அவர்கள் பிராமணனை நோக்கி “நீங்கள் எங்கே போகப் புறப்பட்டீர், எங்கள் பின்னாலயே வந்து கொண்டிருக்கிறீர்?” என்று வினவினர்.

தரித்திர பிராமணன்: “நீங்கள் எங்கே போகிறீர்கள்? “

                  பிராமணர்  : “நாங்கள் பத்ரி ஆஸ்ரமத்திற்குச் செல்கிறோம்.”

தரித்திர பிராமணன்: “அப்படியானால்  நானும் அங்கு தான்    

                                              செல்கிறேன்.”

                  பிராமணர்  :  “அதற்கு எங்கள் பின் தான்  வரவேண்டும்

                                              என்றிருக்கிறதா?”

தரித்திர பிராமணன்: “ஆம். அப்படித்தான். நான்தான்  அப்படி

                                               தீர்மானித்தேன். நீங்கள் தயவு செய்து

                                                என்னையும் கூட்டிக்கொண்டு போக

                                                வேண்டும்.

                   பிராமணர் : “இப்படி இன்று இங்கே எங்களைக் காணும்

                                              படி யார் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.

தரித்திர பிராமணன்: “அதை நான் சொல்ல மாட்டேன்.

                                              நிர்பந்திக்காதீர்கள்.” 

இவ்வாறு அப்பிராமணனின் வாக்குகளைக் கேட்டதும் பிராமணர்கள் சிறிது ஆலோசித்தனர். 

“சரி எங்களுக்கு எல்லாம் துலங்கியது. உங்களுக்கு இந்த உபாயம் சொல்லித்தந்தவனுக்கு அதப் பதனம் (நடக்கக்கூடாத கெடுதல்) உண்டாவதாக”  என்று சபித்து விட்டு தொடர்ந்தனர். 

“நேரிட்டு எங்களைக் கண்டு போனதால் உங்களை விட்டு விட்டுப் போக முடியவில்லை. வேறு நிவர்த்தி இல்லை. ஆகவே கொண்டு போகிறோம். “ 

“கண்களை இறுக்க மூடிக்கொண்டு எங்களைத் தொட்டுக்கொள்ளவும். நாங்கள் சொல்லும் வரை கண்களைத் திறக்கக் கூடாது”  என்று கூறினர். 

அவ்வாறே பிராமணன் கண்களை மூடி அவர்களைத் தொட்டுக்கொண்டு இருந்தார். ஒரு மாத்திரை நேரத்தில் கண் திறக்குமாறு மற்ற பிராமணர்கள் கூறினர். கண் திறந்தபோது பிராமணன் பத்ரி ஆசிரமத்தின் அருகில் ஒரு குடிலின் முன்பில் இருப்பதை உணர்ந்தார். 

பிராமணர் “இதோ இந்தக் குடிலில் ஒருவர் மூச்சிரைத்துக் கொண்டு சாகக் காத்திருக்கிறார். இவர் உங்களுடைய தந்தை. உங்களுடைய தகப்பனார் கொஞ்சம் நாள் முன்பு உங்களைப் பிரிந்து காசிக்குப் போனது உங்களுக்கு நினைவிருக்கும். காசிக்கு போய் கங்கா ஸ்நானம் செய்து சில பல தலங்களையும் தரிசித்து கடைசியாக இங்கு வந்து சேர்ந்தார். சிறிது காலமாக இங்கு பூஜை செய்து வசிக்கிறார்.

அவருடைய மரண காலம் அடுக்கிறது. நாங்கள் அவரைக் கொண்டு போக வந்த விஷ்ணு தூதர்கள். அரை நாழிகை நேரம் கழிந்து நாங்கள் அவரைக் கொண்டு போவோம். அதற்கு முன்பே அவரைக் காண வேண்டும் எனில் கண்டு கொள்க.” என்று கூறினர். 

இப்படியாகப் பிராமணர்களாக வந்த விஷ்ணு தூதர்களின் சொல்படி  குடிலுனுள் நுழைந்து நோக்கியபோது தன்னுடைய தகப்பனார் மூச்சிரைத்துக்கொண்டு உயிர் பிரியும் தருவாயில் இருப்பதைக் கண்டார். மரணப் படுக்கையில் கிடக்கும் கிழ பிராமணனுக்கு போதம் (நினைவு) இருந்தது. ஆகவே, கண் திறந்து நோக்கியபோது தன்னுடைய புத்திரன் நிற்பது கண்டு ஆச்சர்யமும், சந்தோஷமும் சேர்ந்து மகிழ்வுற்றார்.

அக்கிழ பிராமணன் வீடு விட்டு வந்த பின் சம்பாதித்தவை எல்லாவற்றையும்  காசுகளாக ஒரு பெட்டியில் பூட்டி குடிலில் வைத்திருந்தார். மகனைக் கண்டவுடன் தலையணைக்கு அடியில் வைத்திருந்த பெட்டி சாவியை எடுத்து மகனிடம் கொடுத்தவுடன் பிராணனும் பிரிந்தது. பிராமணன் தகப்பனாருக்குச்  செய்ய வேண்டிய ஈமக் கிரியைகளை  முறையாகச் செய்து பின்னர் ஊருக்கு திரும்பினார்.

ஊருக்குத் திரும்பிய பிராமணன், பட்டதிரியைக் கண்டு எல்லா விவரங்களையும் அறிவித்தார். விஷ்ணு தூதர்கள் அதபதனம் (கெடுதல்) சம்பவிக்கட்டும் என்று சாபம் தந்ததையும் தெரிவித்தார்.

பட்டதிரி, “இவ்வாறு சாபம் கிடைக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். அது என் ஜாதகத்தில் உள்ளது தான்” என்று கூறினார்.

பிராமணன் கிடைத்த திரவியம் கொண்டு தரித்திரம் நீங்கி வாழ்ந்தான்.

 

                                                                                                     >>>>>>>>   இன்னும் வரும்.


[ இதன் அடுத்த பகுதி மே மாதம் பத்தாம் தேதி வெளியாகும் ]

 

86 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பழையபடி கருத்துப்பெட்டி தகராறு இன்றும் தங்கள் தளத்தில் வந்துள்ளது. செவ்வாய் கதையின் தொடர்ச்சியான இதன் முந்தைய பாகங்களை இப்போதுதான் படித்து வந்தேன். கதை நன்றாக விறுவிறுப்புடன் செல்கிறது. சிறப்பாக மொழியாக்கம் செய்து இக்கதையை நமக்களித்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இன்றைய பாகத்தையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனுக்குப் பண்ணிப்போட்டவற்றில் சில ரெசிப்பிகள் இங்கு பகிர்வாரா?

      நீக்கு
    2. அடுத்த திங்களுக்கே இல்லை.  உடனே பகிர்ந்தால் நலம்!

      நீக்கு
    3. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

      /மகனுக்குப் பண்ணிப்போட்டவற்றில் சில ரெசிப்பிகள் இங்கு பகிர்வாரா/

      ஹா.ஹா.ஹா. நானும் என் மருமகளிடம் இதைத்தான் எதிர்பார்த்தேன். நடக்கவில்லை. (இங்கு வந்து இதை யாரும் படிக்க மாட்டார்கள் என்ற தைரியந்தான்..:).) இருவருக்குமே இங்கு வந்தும் ஆபீஸ் வேலைகள். கெடுபிடிகள் தான். நான் எப்போதும் போல் பத்தாம் பசலித்தனமாய் (அவியல். பொரியல். கூட்டு, மோர் குழம்பு என்ற பழங்கால சமையல்கள்தான் ) செய்து போட்டதை விரு(வெறு) ப்புடனோ ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டார்கள். அது வரை நல்லது என விட்டு விட்டேன்.:) நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      இப்போதெல்லாம் புதிதான ரெசிப்பிகள் நம் எ. பியில் திங்கள் தோறும் வருகின்றன. என் ரெசிப்பிகள் அத்தர் பழசாக இருக்குமே.. . ஆனால் எனக்கும் உங்கள் பதிலை பார்த்ததும் எழுதி அனுப்ப ஆர்வம் வருகிறது. கண்டிப்பாக அனுப்புகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. எங்க..புதுசெல்லாம் வருது. அதே பருப்புருண்டைக் குழம்பு, குருமா.... உங்க கூட்டு, மோர்க்குழம்பு எழுதுங்க. இரு நாட்களுக்கு முன்பு, தொட்டமளூரில் மோர்குழம்பு (வடை போட்டது) சாப்பிட்டேன். கர்நாடகா ஸ்டைல் போலிருக்கு. எனக்குப் பிடிக்கலை.

      நீக்கு
    6. மோர்க்குழம்பு வடை நானும் அடிக்கடி பண்ணுவேன். குழம்பும் சூடாக இருக்கணும், வடையும் சூடாக இருக்கணும். நன்றாகவே இருக்கும்.

      நீக்கு
    7. உளுந்து வடை தான் மோர்க்குழம்பில் நன்றாக இருக்கும். அதை மறந்துட்டேன். ஆமவடை ரசவடைக்கு நன்றாக இருக்கும். பலரும் ரச வடை கூட உளுந்து வடையில் பண்ணுகிறார்கள். அதைவிட இது தான் நன்றாக இருக்கும். தென் மாவட்டங்களில் கடலைப்பருப்புக்குப் பதிலாகப் பட்டாணிப்பருப்பு (சின்னதாகக் கடலைப்பருப்பு மாதிரியே இருக்கும்.) சேர்த்து வடை பண்ணுவார்கள். அதிகமாக மசாலா சேர்ப்பார்கள். சோம்பு, வெங்காயம் எல்லாம்.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  4. வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவில்லை, ஐயா புரியவில்லை. நீங்கள் சொல்லும் உருவகம் புரியவில்லை. இக்கதையில் வேதாளம் இல்லையே! யமதூதர்கள என்றில்லாமல்  விஷ்ணு தூதர்கள் என்று கதையில் உள்ளபடியே தான் மொழி பெயர்ப்பு உள்ளது.

       Jayakumar

      நீக்கு
    2. அவர் கருத்துப்பெட்டி குளறுபடியைச் சொல்கிறார்

      நீக்கு
    3. நான் வேதாளம் என்றது கருத்துரைப் பெட்டியை... செல்போனில் இருந்து எல்லாவற்றையும் தட்டச்சு செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது..

      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
    4. பெட்ரோல் விலை கண்டபடி ஏறிவிட்டதால் இங்கு கருத்துக் பெட்டியில் சிக்கனம் செய்திருக்கிறார்களாம்.

      நீக்கு
    5. உக்ரைன், ரஷ்யா போர் தீவிரமடைந்திருக்கிறதே... கருத்துப் பெட்டி மறைந்துவிடுமா?

      நீக்கு
    6. ஹா.. ஹா... ஹா... அது உலக லெவல்!

      நீக்கு
  5. நுணுக்கமாக முறையில் எப்படியெல்லாம் மூட நம்பிக்கையை புகுத்தி உள்ளார்கள் என்பதற்கு பற்பல கதைகளில் இதுவும் ஒன்று...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூட நம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் உள்ளவை தான். கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களே சில மூட நம்பிக்கைகள் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறோம். ஆகவே கதை என்ற முறையில் இன்றைய பதிவை விட்டு விடலாம். 

      நீக்கு
  6. மிக நன்றாகச் செல்கிறது. ரசித்துப் படிக்கிறேன்

    இதனைப் பகிரும் ஜெகே சாருக்கு நன்றி. ஒத்திப் போடுவதற்கு கேஜிஜி சாருக்கு கண்டனங்கள் ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kgg சாருக்கு நேரமின்மையால் அவர்களுடைய பல வேலைகளை குறைத்திருக்கிறோம் அல்லவா? முக்கியமாக படம் வரைதல். 

       Jayakumar

      நீக்கு
    2. Kgg சாரிடம் அடுத்த பாகத்தை கொடுத்து அதற்கு ஒரு படம் போட சொல்லுங்கள்.

      நீக்கு
    3. பாவம் கேஜிஜி! கிட்டத்தட்ட 2 மாதங்களாக அவருக்கு உதவிக்கு ஆள் இல்லைனு நினைக்கிறேன். விரைவில் சரியாகட்டும் பிரார்த்திப்போம். நாளை புதன்கிழமைக்குக் கட்டாயமாய் வந்துடுவார்.

      நீக்கு
    4. உதவியாளர் 26 ஆம் தேதி மாலை வந்துசேர்ந்தார். நன்றி.

      நீக்கு
  7. மூட நம்பிக்கை என்பதில் முதன்மையானது இது நம் அப்பா என நம்புவது.

    அனுபவம், சின்சியராக பிறர் சொல்லும் தன் அனுபவங்களின் மீது நம்பிக்கை வைத்தல் சாதாரணவர்களின் இயல்பு. அசாதாரண வர்கள் தனக்கு நடந்தால் மட்டுமே, தான் கண்டால் மட்டுமே நம்புவர். இந்த கேடகரியில் வராதவர்கள் தனக்குத் தோதானவற்றை மட்டும் நம்புவார்கள். மனிதர்கள் பல ரகம்

    பதிலளிநீக்கு
  8. கருத்துப் பெட்டியை ஏன் மாற்றினீர்கள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெட்ரோல் விலை ஏறிப்போச்சுங்க...   கரண்ட் வேற கரியால தடைப்படுது...  அதான்!!!

      நீக்கு
  9. // இதன் அடுத்த பகுதி மே மாதம் பத்தாம் தேதி வெளியாகும்.. // ஏன்?... என்ன பிரச்னை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரச்னை ஒன்றும் இல்லை.  ஜெயக்குமார் ஸாரிடமும் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
    2. நடுவில் ஒரு செவ்வாய்க்கிழமையைக் காணோமா? !!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  11. கதை நன்றாக இருக்கிறது படிக்க.
    ஏழைக்கு அப்பாவை பார்க்கும் பாக்கியம், அவர் மூலம் பணம் கிடைக்கிறது. அவர் கஷ்டம் போகிறது. மகனின் சிறு வயதில் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் இரக்கும் போது தான் சேர்த்து வைத்து இருக்கும் பொருளை கொடுத்தாரே!

    //பட்டதிரி, “இவ்வாறு சாபம் கிடைக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். அது என் ஜாதகத்தில் உள்ளது தான்” என்று கூறினார்.//

    சாபம் கிடைக்கும் என்று தெரிந்தும் ஏழைக்கு திரவியம் கிடைக்க உதவியது அருமை.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி, அன்னிக்கு எனக்குச் சரியா இருக்குனு சொன்னேன். இன்னிக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கருத்துப் பெட்டியா இது? ஒரே ஒரு கோடு மட்டும் இருக்கு. அதில் தானா தட்டச்சணும்? இப்படி எல்லாம் கூட வியர்டாக நடக்குமா? நடக்கும் என நம்பியே ஆகணும். அதே போல் இந்தக் கதையின் பட்டத்திரிக்கு நடந்ததையும் நம்புகிறேன்.

      நீக்கு
    2. கருத்துப்பெட்டி எல்லோருக்கும் இனி ஒரு கோடுதானாம்...  அரசாங்கத்தில் மசோதா நிறைவேற்றி இருக்கிறார்கள்.  ஆனால் டைப் அடிக்க அடிக்க இடம் வந்துடுமாம்!

      நீக்கு
    3. அரசாங்கத்தில் மசோதா நிறைவேறினால் போதுமா? ஆளுநர், ஜனாதிபதி போன்றோரின் அனுமதி வேண்டாமா? ஹிஹிஹி

      நீக்கு
    4. அனுப்பியிருக்கோமுல்ல...!

      நீக்கு
    5. கம்முனு போட்டு வைச்சுடுவோமுல்ல!

      நீக்கு
  12. அட? சீக்கிரமாவே கருத்து போய் விட்டது! சில ஜோசியர்கள் சொல்லுவது அப்படியே பலிக்கும் என்பதற்கு நானே சாட்சி! என்னோட கல்யாணத்தைப் பற்றி எங்க அப்பா வீட்டுக்கு வந்து கொண்டிருந்த ஜோசியர் தாத்தா சொன்னது அப்படியே பலிச்சிருக்கு. அதே போல் என் இரு சிநேகிதர்கள் கை ரேகை பார்த்துச் சொன்னதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நடக்கும் வரை நான் எப்படி நம்புவது!


      நாராயணா... நாராயணா... வாய் விடறேனே...... ததாஸ்து எதுவும் சொல்லாம காப்பாத்து....

      நீக்கு
    2. கீசா மேடம் அப்பா: ஜோசியரே... வீட்டுக்கு சாயந்திரமா வாங்க. எல்லாரும் இருப்பாங்க. அவங்களுக்குக் கேட்கிற மாதிரி, இந்த வரன் தான் அமைந்துவிடும் என்று சொல்லுங்க. இல்லைனா, ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி, மாப்பிள்ளை பார்க்கிற படலமே எனக்கு ரொம்ப சிரமமாக இருக்கு.
      ஜோசியர்: அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சு. கொஞ்சம் வெட்டினீங்கன்னா, உடனேயே திருமணம் நடந்தாகணும் என்று கொஞ்சம் கூடவே நம்பிடறமாதிரி சொல்லிடறேன்.

      இதெல்லாம் தெரியாத அப்பாவி கீசா மேடம்: எங்க வீட்டுக்கு ஜோசியர் வந்தார். அவர் சொன்னார், இதுதான் நடக்கும்னு. அப்படியே நடந்துவிட்டது. அவர் கைராசியான ஜோசியர். சொன்னதெல்லாம் நடந்துடும்.

      அப்பாவி நெல்லைத்தமிழன்: அப்படியா? அடடே..அருமை. அந்த ஜோசியர் நம்பர் தர்றீங்களா? எனக்கு என் ஜாதகம் பற்றி முக்கியமான ஒண்ணு கேட்கணும்.

      கீசா மேடம்: இதெல்லாம் நான் உடனே தந்துடுவேன். ஆனால் அந்த ஜோசியருக்கு, என் கல்யாணத்தின்போதே 98 வயசு இருந்திருக்குமே.

      நீக்கு
    3. என் மகன் ஜோசியர் சொன்னார் என்றாலே அதற்கு நேர் மாறாய்த்தான் முயற்சிப்பான்!  அதற்காக மாற்றியும் சொல்ல முடியாது!

      நீக்கு
    4. நெல்லையின் கற்பனை நல்லா இருக்கு. என் அப்பா அந்த மாதிரி எல்லாம் சொன்னது இல்லை. அதோடு எனக்குப் பார்த்ததே ஒரு நாலைந்து ஜாதகங்கள் தான். மாமா ஜாதகத்தைப் பார்க்கவே இல்லை. அவங்க வீட்டில் இருந்து மேலே மேலே அழுத்தம் கொடுக்கவும் அப்பா வேறு வழியில்லாமல் பார்த்தார். இதை என்னோட "கீதா கல்யாணமே வைபோகமே!" புத்தகத்திலும் பார்க்கலாம்.

      நீக்கு
    5. ஶ்ரீராம் பிள்ளையைப் போல் தான் எங்க பிள்ளையும். அதற்கு நேர்மாறாகப் பெண் ரொம்பவே நம்புவாள்.

      நீக்கு
  13. கதை என்பது ஒரு பொழுதுபொக்கு . அதில் சில நிதர்சனங்கள் அவ்வப்போது அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும். மற்றபடி அது மூடநம்பிக்கையை வேரூன்றச் செய்கிறது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி. ஆதிகாலம் முதல் மனிதர்கள் இந்த மாதிரி எதிர்காலம் உரைத்தல், தேவ தரிசனம் போன்ற விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தற்செயலாகவோ என்னவோ அந்தமாதிரியான நிகழ்ச்சிகளில் பல வியப்படையும்படி பலித்திருப்பதாகச் சிலர் நம்பகமாகச் சொல்வதையும் கேட்கிறோம். அந்த வகை சம்பவத் தொகுப்பாகக் கூட இந்தக் கதையைப் பார்க்கலாம். படிக்க நன்றாக இருக்கிறது. அடுத்து என்ன என்ற ஆர்வத்தை வளர்ப்பதாக இருக்கிறது. இது கதை எழுதியவரது பெரிய வெற்றி. இதற்கு மேல் எதிர்பார்ப்பு இல்லாமல் படிக்க வேண்டும் என்பதே எனக்குத் தோன்றுவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை சுவாரஸ்யமானது என்பதில் சந்தேகமே இல்லை.  இது வாத்தியாரை கெட்டவார்த்தையில் திட்டிய அந்த பள்ளி அரசுப் மாணவச்செல்வம் மேல சத்தியம்.

      நீக்கு
    2. ​அரசு பள்ளி பள்ளி அரசாக மாறியுள்ளது. ​

      நீக்கு
    3. இப்போ இருப்பதைச் சொல்கிறாரோ? எனக்கு பானுமதி வெ. திரைப்படங்களை எல்லாம் பார்த்து மாணவர்கள் கெட்டுப் போவதில்லை எனச் சொன்னது தான் நினைவில் வரும். ஏதோ ஒரு திரைப்படத்தில் ஹீரோ இப்படி நடந்துப்பாராம். அதை அப்படியே இங்கே செய்து காட்டுகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் ஆசிரியர் பாடம் நடத்தும்போது கடைசி பெஞ்ச் மாணாக்கர்கள் குத்தாட்டம் போடுகிறார்கள். இன்னொரு வீடியோவில் ஆசிரியரைச் சுற்றிச் சுற்றி வந்து கும்மி அடிப்பது போல் பாவனையுடன் கிண்டல் பாட்டுப்பாடி ஆடுகின்றனர். இவங்க தான் நாளைய இந்தியா! :(

      நீக்கு
    4. ஶ்ரீராம் மாணவர்கள் இப்போ இருப்பதைச் சொல்கிறாரோ? எனக்கு பானுமதி வெ. திரைப்படங்களை எல்லாம் பார்த்து மாணவர்கள் கெட்டுப் போவதில்லை எனச் சொன்னது தான் நினைவில் வரும். ஏதோ ஒரு திரைப்படத்தில் ஹீரோ இப்படி நடந்துப்பாராம். அதை அப்படியே இங்கே செய்து காட்டுகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் ஆசிரியர் பாடம் நடத்தும்போது கடைசி பெஞ்ச் மாணாக்கர்கள் குத்தாட்டம் போடுகிறார்கள். இன்னொரு வீடியோவில் ஆசிரியரைச் சுற்றிச் சுற்றி வந்து கும்மி அடிப்பது போல் பாவனையுடன் கிண்டல் பாட்டுப்பாடி ஆடுகின்றனர். இவங்க தான் நாளைய இந்தியா! :(

      நீக்கு
    5. இதை மட்டுமே 3 தரம் வெளியிட முயற்சி செய்து கடைசியில் ஒரு வழியாய் வந்திருக்கு, .:(

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகுதியும் நன்றாக உள்ளது. ஜோதி டங்கள் சிலது அப்படியே பலித்து விடும். அது நல்லவையாக நடந்து விட்டால் மனதுக்கு நிறைவாக சந்தோஷமாக இருக்கும். கெடுதல் என்றால் அது பலிக்கும் வரையிலும், பலித்த பின்னும் மனது படும் வேதனை சொல்லி மாளாது. அதை விட ஜோதிடமே பார்க்காமல், நம் தலையெழுத்தை அந்த விதியிடமே ஒப்படைத்து விட்டு பேசாமல் இருக்கலாம் என்பது என் கருத்து.

    இந்தக் கதையில் ஜோதிடப்படி அந்த ஏழை பிராமணருக்கு அவர் எதிர்பார்த்த நிதி கிடைத்துள்ளது. ஏற்கனவே அவரின் தந்தையைப் பற்றிய கவலைகள், பாசங்கள் அவரின் நீண்ட நாள் தலைமறைவால் காலப்போக்கில் சிறிது அகன்றிருந்ததால், அவரின் இறப்புச் செயல் அவரை அவ்வளவாக பாதித்திருக்காது. இல்லையெனில் தான் செல்வம் தேடும் முயற்சியில் தன் தந்தையின் மரணத்தை சந்திக்க நேர்ந்த குற்ற உணர்ச்சியில், அந்தச் செல்வத்தின் மீதுள்ள மோகம் அதை அனுபவிக்கும் காலந்தோறும் முள்ளாக உறுத்தி எடுக்கும். அந்த தந்தைக்கும் தான் சேர்த்த செல்வம் இறுதியில் தன் மகனிடமே போய் சேர்ந்து விட்டது என்ற நிம்மதி கிடைத்திருக்கிறது. இதைத்தான் விதி என்கிறேன்.

    ஜோதிடம் சொன்னவருக்கு தன் பலாபலன்கள் ஏற்கனவே தெரிந்திருந்ததால் அவரும் அந்த பிராமணர் சொன்ன செய்தியை கேட்டும் அதைப்பற்றி சிறிதேனும். கவலையுறவில்லை. அதற்கும் ஒரு மன தைரியம், பக்குவம், அந்த ஜோதிடத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை இவையனைத்தும் வேண்டும். அடுத்தப் பகுதியையும் எதிர்பார்க்கிறேன். ஆனால் ஒரு வாரம் விட்டு என தாமதமாகுமென தெரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.


    அப்பாடா.. இதில் என்னைப் போல் நீண்ட கருத்துரைகள் பதிபவர்களுக்கு இந்த முறை சரியாகவே வரவில்லை. எங்கேனும் எழுத்துப் பிழைகள் வந்து பொருள் மாறி விடுமோ என்ற கவலை வருகிறது. இதுவும் நம் விதிதான் காரணம் போலும். ஹா.ஹா.ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க பெ தோற்றம் மாறியுள்ளதே தவிர வேறெதிலும் மாற்றம் இல்லை கமலா அக்கா.

      நீக்கு
    2. //ஜோதிடம் சொன்னவருக்கு தன் பலாபலன்கள் ஏற்கனவே தெரிந்திருந்ததால்.. எங்க ஜோசியருக்கும் தெரிந்திருந்தது. கடைசிக் காலத்தில் வெளிப்படையாகச் சொல்லவும் சொன்னார்.

      நீக்கு
  15. இந்தக் கைப்பேசியில் கருத்திடுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. நாளாவட்டத்தில் பழகி விடும், என்ன.. மனம் தோன்றிய நிறைய கருத்தை திணிக்க கூடாது. சின்ன, சின்னதாக நறுக்கு தெறித்தாற்போல் போட பழக வேண்டும். அவ்வளவுதான்.:)




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் தோன்றிய எனப்படிக்கவும்.

      நீக்கு
    2. //நறுக்கு தெறித்தாற்போல்//

      புரிகிறது!


      // நாளாவட்டத்தில் பழகி விடும்//

      கரெக்ட்.

      நீக்கு
  16. கதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது

    பதிலளிநீக்கு
  17. @ கீதாக்கா..

    // நடுவில் ஒரு செவ்வாய்க்கிழமையைக் காணோமா?..//

    நாலு மாசத்துக்கு முன்னாலேயே யாரோ துண்டு போட்டு வைத்திருக்கின்றார்களாம்!..

    பதிலளிநீக்கு
  18. இந்த வாரப் பகுதி கொஞ்சம் அழுத்தமாக இருக்கின்றது.. எனக்கு சரியாக சொல்லத் தெரிய வில்லை.. ஏதோ ஒன்றை சொல்லாமல் சொல்லிச் செல்கின்றது..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டதிரியின் அனுபவங்கள்! அதான் முக்கியம். விஷயங்கள் தெரிந்த பின்னரும் அவரில் மாற்றமில்லை அல்லவா? அடுத்த வாரம் பட்டதிரியின் ஜாதிக் கலப்புப் பற்றி வருமோ?

      நீக்கு
  19. திருப்பூந்துருத்தி அப்பர் ஸ்வாமிகள் மடத்திற்குச் சென்று விட்டு திரும்பிய நேரம் மதியம் 3:30.. வெயில் தாள முடிய வில்லை.. வீட்டிற்கு வந்து உறங்கியவன் சற்றுமுன் தான் எழுந்தேன்..

    பதிலளிநீக்கு
  20. ஜீவி சார் வருவார் என்று எதிர்பார்த்தேன்.

     இன்றைய பதிவிற்கு கருத்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி. என்னுடைய பங்கு மொழிபெயர்ப்பு மட்டுமே. ஆகவே பாராட்டுகள் ஐதீகத்தையும், அதை வெளிக்கொணர்ந்த ஆசிரியரையும் சாரும். நன்றி. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்தம் 65 பின்னூட்டங்கள். அதில் உங்கள் கதைப் பகுதியை ஒட்டியவை எவ்வளவு என்று எண்ணிப் பாருங்கள்.
      எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறோம் என்றாகி விடும். எனக்குமான உணர்வு இது. அதனால் தான் வரவில்லை. என் பெயரைக் குறிப்பிட்டதினால் என் உணர்வுகளை மறைக்கத் தெரியாது சொல்லத் தோன்றியது. நன்றி, ஜெஸி ஸார்.

      நீக்கு
    2. @ ஜீவி அண்ணா..

      // எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறோம் என்றாகி விடும். எனக்குமான உணர்வு இது..//

      செவ்வாய்க்கிழமைகளில் ஆத்மார்த்தமான நட்புகளைக் காணாவிட்டால் என் மனமும் இப்படித்தான்..

      பாவம்.. அதற்கு எதுவும் தெரியாது..

      நீக்கு
    3. ஒப்புக்காக்
      நம் எழுத்தை மத்தியில் வைத்துக் கொண்டு சம்பந்தமில்லாத வேறு விஷயங்களை அரட்டை அடித்தால் அது எப்படி, தம்பீ?
      எழுத்துக்கான எழுதுவோனுக்கான சுய மரியாதை இது.
      செவ்வாய்க்கிழமை மட்டுமாவது இங்கு எழுதுவோருக்குத் தரக்கூடாதா? இவர்களில் யாராவது இங்கு எழுதினால் தான் இந்த உள்ளுணர்வைப் புரிந்து கொள்ள முடியும்.

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. நான் இங்கு தாமதமாக வந்ததற்காக திருப்பூந்துருத்தி சென்ற காரணத்தைச் சொன்னேன்...

      நீக்கு
    6. ஜீவி சார்... உங்க எதிர்பார்ப்பைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் அது அதீத எதிர்பார்ப்பு. இது இலக்கியத் தளமல்ல. பதிவு பற்றியும், அதன் வழியாக்க் கிளரும் எண்ணங்கள், கலாய்ப்புகள் போன்ற பலவும் கலந்து வரும் அரட்டை என்றே நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    7. பள்ளிக்கூடத்திலேயே பாடங்களுக்கு நடுவே வெவ்வேறு விஷயங்கள், செய்திகள், வரலாறுகள் பரிமாறிக்கொள்ளப்படும் ஆசிரிய மாணவ./மாணவியரிடம். இம்மாதிரிப் பொதுத்தளத்தில் கேட்பானேன்!

      நீக்கு
    8. அன்பு நெல்லை..

      சில உணர்வுகளை எழுதிச் சொல்லி இன்னொருத்தருக்கு
      உணர்த்த முடியாது.
      அவற்றை நீங்களே அனுபவித்து உணர்ந்தால் தான் உண்டு. அதனால் தான் உங்களையும்
      கீதா சாம்பசிவம் அவர்களையும் இந்தப் பகுதிக்கு கதை எழுதச் சொன்னேன்.

      ஸ்ரீராம் கூட ஒரு தடவை 'எல்லாம் ஜாலிக்குத் தானே' என்று இதே மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். அப்பொழுதும் 'அப்படி இல்லை இது' என்று சொன்னேன்.

      அதனால் நீங்களும் சகோதரியும் இந்த செவ்வாய்க் கிழமை பகுதிக்கு கதை ஒன்று அனுப்ப முயற்சிக்க வேண்டுகிறேன். அதனால் இரட்டை லாபம் உண்டு.

      நீக்கு
  21. கதையின் இறுதிக்கு முன்பு பெற்ற தகப்பனை பிள்ளை உயிருடன் பார்ப்பதும், மகனின் தரித்திரம் நீங்க தகப்பன் கொடுத்த பொருளும் இறுதி ஈம கடன்களை செய்ய மகனுக்கு கிடைத்த பாக்கியமும் பாராட்டிற்குரிய சந்தோஷ நிகழ்வுகள்.
    விஷ்ணு தூதர்களாயிருந்து கொண்டு பிறருக்கு நன்மை செய்தவரை சபித்தது ஏற்புடையதாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவ ரகசியங்களை வெளிப்படுத்தக் கூடாது. ஜோசியத்தைத் தொழிலாக்க் கொண்டவர்களுக்கு, அதற்கான பாவம் எப்போதும் வந்து சேரும்.

      சாதாரணவர்களுக்கு இறப்பின்போது யம தூதர்கள் உயிரை எடுக்க வருவதும், விஷ்ணு பக்தர்களுக்கு விஷ்ணு தூதர்கள் வருவதும் நம்பிக்கை.

      இங்கு தேவ ரகசியத்தை வெளிப்படுத்தியதால் சாபம் கிடைக்கிறது. இது தொடர்பாக பக்தர்களின் வாழ்வில் நிகழ்ந்தவற்றை, ஶ்ரீமகா பக்த விஜயம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்ட பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

      நீக்கு
    2. பழைய கருத்துப்பெட்டியில் பின்னூட்டத்திற்கு லாகின் செய்து பெயர்கொடுக்கணும். இங்கு பெயரில்லாமலேயே பின்னூட்டமிடமுடிகிறது. புதிய கருத்துப்பெட்டி தலைவலி

      நீக்கு
    3. இராமகாதை சொல்லும் இடங்களில் அனுமன் வருவார் என்பது ஐதீகம். அதனால் அனுமனின் படமும் அதற்கு முன் பிரசாதங்களும் வைத்திருப்பார்கள்.

      எந்த உருவத்தில் அனுமன் வருகிறார் என்பது ரகசியம். இதையும் பெரியவர்கள் (ஆன்மீகப் பெரியவர்கள், கபீர் போன்று) பிறருக்குத் தெரிவித்த கதையெல்லாம் அந்தப் புத்தகத்தில் வருகிறது.

      ஜோசியத்தில் அனேகமாக எல்லாவற்றையுமே கண்டுபிடிக்க இயலும். ஆனால் அப்படிக் கண்டுபிடித்து பிறருக்கு வெளிப்படுத்தி அதனால் பயன் பெறுதும், பாவம். இதுவே பொதுநலமாக இருந்தால் (கோவில் ப்ரசன்னம் போன்று), அது பாவமில்லை

      நீக்கு
  22. கொட்டாரத்தில் சங்குண்ணியின் தலைகுளத்தூர் பட்டதிரி பற்றிய குறிப்பாக ஐதீகம் சார்ந்த குறிப்புகள் அடங்கிய நிகழ்வுகள் கதைத்தொகுப்பாகச் சுவாரசியமாக இருக்கிறது. கேரளத்தில் இப்படியான ஐதீகங்கள் - கொஞ்சம் உருமாற்றம் பெற்றிருக்கலாம் ஆனால் பொதுவான ஐதீகங்கள் இப்போதும் இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட , பட்டதிரியின் அனுபவங்களாக வருவது வாசிக்கச் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஆ! லாகின் செய்ய மறந்து போய் கருத்துப் போட்டாலும் வருகிறதே ஆனால் பெயரில்லா என்று!! இதைப் பார்த்ததும்தான் ஓ லாகின் செய்ய மறந்து போய்விட்டேன் என்று நினைவுக்கு வருகிறது. ஆனால் இப்படியான ஒன் லைன் கருத்துப்பெட்டி வரும் தளங்களில் மட்டுமேன்னு நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கும்
    திரு ஜயக்குமாருக்கு நன்றி.

    மிக நல்ல உணர்வைக் கொடுக்கிறது கதை. பட்டத்ரி
    சௌகர்யமாக இருக்க வேண்டும்.
    கண நேரத்தில் பத்ரியா!!!!!!
    கொடுத்து வைத்தவர்.மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!