நெல்லைத் தமிழன்:
1. நியாயம் என்பது என்ன? அது ஏன் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை?
# நியாயம் என்பது சூழ்நிலைக்கேற்ப மாறுவது. எனவே ஒரே மாதிரி இருக்க இயலாது.
& நியாயமான கேள்வி. நியாய தேவதையின் கையில் உள்ள தராசு இரண்டு தட்டுகளும் எப்போதும் காலியாகவே இருக்கிறதே! ஒன்றில் வாதம், மற்றதில் பிரதிவாதம் என்று வைத்துப் பார்க்கவேண்டுமா? அல்லது ஒன்றில் சட்டம் - மற்றதில் சந்தர்ப்ப சூழ்நிலை என்று வைத்துப் பார்க்கவேண்டுமா?
2. 'அ' படம் இப்போதெல்லாம் வராததன் மர்மம் என்ன? யாருக்கு வயதாகிவிட்டது? 'அ' வுக்கா இல்லை 'ஸ்ரீ' க்கா?
# அ-வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அடுத்து யாரை அறிமுகம் செய்யலாம் என்று "ஸ்ரீ" ஆலோசித்து வருவதாகக் கேள்வி.
& யாருக்கு வயதானாலும் - எனக்கு ஆகாது என்கிறார் இவர் :
# எப்போதும் எல்லாவற்றையும் பாராட்டுவது சிக்கல்களைத் தவிர்க்கும் முயற்சி. எல்லா சமயங்களிலும் பயன்தராது.
& ஆஹா - நல்ல கேள்வி! (இது என் நல்ல குணமா - அல்லது உங்களை மயங்கவைக்கும் வெறும் புகழ்ச்சியா? )
4. தன் மனதுக்கு நேர்மையாக தன் குழந்தைகளை வளர்க்காத பெற்றோரும் இருப்பாங்களா?
# சில சினிமா நடிகைகளின் பெற்றோர் அப்படி இருப்பதாக நான் நினைத்தது உண்டு.
& இருப்பார்கள்.
5. தன் பசங்களுக்கு, அவங்களால பிற்காலத்துல நன்மை ஏற்படும் என்ற எண்ணமே கொஞ்சம்கூட இல்லாமத்தான் எல்லாப் பெற்றோரும் வளர்க்கறாங்க. அப்புறம் ஏன், பசங்க மேல பிற்காலத்துல ஏமாற்றமோ வருத்தமோ ஏற்படுகிறது?
# எல்லாப் பெற்றோரும் அப்படித்தான் என்றோ , பிற்காலத்தில் ஏமாற்றம் (அ) வருத்தம் அடைகிறார்கள் என்றோ அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியுமா என்ன?
6. பத்து புத்தகங்கள் (வெவ்வேறு ஆசிரியர்களுடையது) நம் முன்னே இருக்கிறது. அதில் எத்தனை பேர் ஒரு எழுத்தாளரின் புத்தகத்தைப் படிக்க வாங்குகிறார்கள் என்பதைப் பொருத்து எழுத்தாளரின் எழுத்துத் திறமையைக் கணிப்பது சரியா?
# அதைச் சரி பார்க்க ரொம்ப நேரம் ஆகுமே. நான் பார்த்தவரை, நமது படிப்பு அனுபவத்தை வைத்துக் கொண்டு யார் யார் எழுதியதைத் தேடிப்பிடித்து வாங்க வேண்டும் என்று நாம் ஓரளவு முன்பாகவே முடிவு செய்து வைத்து விடுகிறோம்.
& இல்லை. இதை வைத்து புத்தகத்தை எழுதியவரின் எழுத்துத் திறமையை கணிப்பது தவறு. எல்லாப் புத்தகங்களும் - எல்லா இடங்கள் / கடைகளிலும் ஒரே மாதிரி விற்பனை ஆகாது. மியூசிக் அகாடெமி புத்தக அரங்கில் ' சங்கீத சம்பந்தமான புத்தகங்கள் , புத்தகக் கண்காட்சியில் 'சமைத்துப் பார் புத்தகங்கள் என்றெல்லாம் விற்பனை ஆகலாம்.
வைஷ்ணவி:
இந்த வார ‘கர்மா’ தொடரில் பூவிலங்கு மோகன் தன் மூதாதையர்களின் பெயர்களை வரிசையாக சொல்லும்போது அவரவர்களின் பெயரோடு சர்மா, சாஸ்த்ரி, தீஷிதர், கனபாடிகள் என்றெல்லாம் சொல்கிறார். ஒரே குடும்பத்தில் இவ்வாறு வருமா? ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட பொருள் என்ன?
# சர்மா என்று யார் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் " ..... என்ற பெயரை உடையவர் என்று பொருள். சாஸ்திரி சாஸ்திரம் படித்தவர் புரோகிதர். தீட்சை பெற்றவர் தீட்சிதர், வேதம் முறையாகப் பயின்றவர் கனபாடிகள். முன்னோர் எவரேனும் பெற்ற பெருமைகளை அடுத்த தலைமுறையினர் போட்டுக் கொள்தல் சகஜம்.
= = = = =
எங்கள் கேள்விகள் :
1) சமையலில் நீங்கள் பெருங்காயம் உபயோகிப்பது உண்டா? என்ன brand பெருங்காயம்? கட்டியா / தூள் பெருங்காயமா?
2) வெயில் காலத்தில் இது இல்லாமல் நிச்சயம் இருக்கமுடியாது என்று நீங்கள் நினைப்பது (ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பிடவேண்டும் என்றால்)
a ) கை விசிறி
b ) மின்விசிறி
c ) ஏர் கூலர்
d ) ஏர் கண்டிஷனர்
e ) வேறு ஏதாவது?
3) பள்ளிக்கூடத்தில் படிக்கும் பதின்ம வயது பையனுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ள ஒரு பரிசு தரலாம் - என்றால், என்ன பரிசு கொடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
= = = =
படம் பார்த்து கருத்து எழுதுங்க :
1)
2)
3)
///சமையலில் நீங்கள் பெருங்காயம் உபயோகிப்பது உண்டா? என்ன brand பெருங்காயம்? கட்டியா / தூள் பெருங்காயமா?//
பதிலளிநீக்குLG பெருங்காய தூள்தான் நான் உபயோகிப்பது
நாங்களும் முன்னர் அப்படிதான். இப்போது சமீப காலமாக PC பெருங்காயம் உபயோகிக்கிறோம்.
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு//வெயில் காலத்தில் இது இல்லாமல் நிச்சயம் இருக்கமுடியாது என்று நீங்கள் நினைப்பது//
பதிலளிநீக்குமுக்கியமான ஒன்றை விட்டு விட்டீங்க
தயிர்சாதம் வெயில் காலத்தில் மிகவும் விரும்பி சாப்பிடுவது
தயிர் சாதத்தை விட நீர்மோர்!
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு/பள்ளிக்கூடத்தில் படிக்கும் பதின்ம வயது பையனுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ள ஒரு பரிசு தரலாம் - என்றால், என்ன பரிசு கொடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? //
பதிலளிநீக்குஆயிரம் ரூபாய்யையே பரிசாக கொடுத்துவிடுவதுதான் எனது சாய்ஸ்
நானும் அப்படியே நினைப்பேன். அவர்கள் விருப்பத்துக்கு வாங்கி கொள்வார்கள்.
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி தொற்று முற்றிலும் நீங்கி உலகெங்கும் மகிழ்வுடன் வாழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குபோன வாரம் என்னோட மிச்சக் கேள்விகளுக்குப் பதில் வரும்னு சொல்லி இருந்த நினைவு. ஆவலோடு ஓடோடி வந்த என்னை ஏமாற்றியதன் காரணம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஒரு வாரம் தூங்கிட்டீங்க. மார்ச் 23 பதிவில் அப்படி சொல்லி, மார்ச் 30 ஆம் தேதி பதிவில் மீதி இருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டோம் - போய்ப் பாருங்க!
நீக்குஹெஹெஹெஹெஹெ, இப்போத் தான் போய்ப் பார்த்துட்டு வந்தேன். அ.வ.சி.
நீக்குசி வ சி வ !! சாம்பசிவா !!
நீக்குவேதத்தில் "கனம்" என்றொரு பகுதி உண்டு. அதைச் சொல்லும்போது அடி வயிற்றில் இருந்து அந்தக் குறிப்பிட்ட வேத மந்திரங்களின் சப்தம் வரவேண்டும். இது வேதம் ஓதுவதில் ஒரு தனிமுறை. எல்லோராலும் இயலாது என நினைக்கிறேன். ஆகவே "கனம்" ஓதத் தெரிந்தவர்களை, அதில் திறமை பெற்றவர்களை, மற்றவர்க்கும் பயிற்சி அளிக்க வல்லவர்களை "கனபாடிகள்" என அழைப்பார்கள். (எப்போவோ எங்கேயோ படிச்சதும், எங்க குடும்பப் புரோகிதர் சொல்லியும் கேட்டது.) இந்த கனபாடிகள் என்பதை மற்றவர்கள் அதாவது அவருக்கே ஒரு பிள்ளை இருந்தாலோ அல்லது அடுத்து வரும் தலைமுறைப் பேரன்களோ போட்டுக்கொள்ள இயலாது. அவங்களும் முறையாக "கனம்" ஓதக் கற்றிருந்தாலே போட்டுக்கலாம். ஆனால் சர்மா அப்படி அல்ல. எல்லோருக்குமே சர்மா என்பது வரும். வீட்டில் கூப்பிடும் பெயர் ஒன்றாக இருக்கலாம். சர்மாவோடு வரும் பெயர் வேறாக இருக்கலாம். உபநயனத்தின் போது வைக்கும் பெயரிலேயே "சர்மா" கூடவே வரும். உதாரணமாக என் கணவருக்குப் பிறந்தப்போ வைத்த பெயர் சுப்பிரமணியன். ஆனால் உபநயனத்தின் போது "சாம்பசிவ சர்மா" எனப் பெயர் மாற்றம் செய்தார்கள். சிலர் இந்தப் பெயரையே தொடருவார்கள். சிலர் பிறந்தப்போ வைத்த பெயரிலேயே தொடருவார்கள். நம்மவர் சாம்பசிவம் என்னும் பெயரிலேயே பள்ளியிலும் பெயர் கொடுத்திருந்ததால் அதுவே சட்டரீதியான பெயர் ஆகிவிட்டது. சொந்தக்காரங்க/நெருங்கியவங்க எல்லாம் சுப்பிரமணி என்பதைச் சுப்புணி எனக் கூப்பிடுவார்கள்.
பதிலளிநீக்கு"சர்மா" விளக்கம் தவறு. கேள்வி அப்படியல்ல. ரோஹித் சர்மா, ...ஷர்மா, அனுஷ்கா ஷர்மா (ஶ்ரீராம் பாய வேண்டாம் இது வேற ஒருத்தி... கோஹ்லியைக் காணாமலடித்தவர்). அந்த மாமிரி குடும்பப் பெயர். (தமிழகத்திரும் வெங்கடேச சர்பா... என்றிருப்பதைப் போல)
நீக்குஅது சரி... கனபாடிகள் அனேகமாக எல்லோருமே... கன பாடிகளோடு இருப்பதன் காரணம் என்ன?
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு@நெல்லை, அதற்குக் காரணம் அடி வயிற்றில் இருந்து மூச்சை இழுத்தும் விட்டும் சொல்ல வேண்டி இருப்பதால் என்பார்கள். கனம் சொல்லிச் சொல்லி வயிறு பெருத்துவிடுமாம். அதனால் தான் பெண்கள் தினசரி வேதம் ஓத வேண்டாம் என்னும் ஒரு கூற்றும் இருப்பதாகப் பரமாசாரியார் அவர்கள் தெய்வத்தின் குரலில் சொல்லி இருப்பார். கூடவே பெண்களுக்குக் கருப்பைப் பாதிப்பும் ஏற்படலாம் என்பதும் ஒரு காரணம். கனம் சொல்லும் கனபாடிகள் கனமாகவே இருப்பார்தான்.
நீக்குசர்மா/சர்மன் என்று நமக்கு உபநயனத்தின் போது தான் பெயர் வரும். இதைப் பற்றிப் பல புரோகிதர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கேன். பலருக்கும் அவரவர் திருமணப் பத்திரிகையில் கூட உபநயனத்தின் போது சர்மனுக்கு எனச் சொல்லப்பட்ட பெயரையே கொடுப்பார்கள். யாருக்கானும் பெயரைச் சொல்லும்போது கூட அந்தக் கால மனிதர்கள் சர்மனே இந்தப் பெயரா என்றும் கூடக் கேட்பார்கள். வட நாட்டு சர்மாவே வேறே. அதைப் பற்றிப் பின்னர் சொல்றேன்.
நீக்குஎன் கணவர் அவரை விடப் பெரியவங்களுக்கு நமஸ்கரிக்கும்போது "சாம்பசிவ சர்மண: அஹம் அஸ்பிபோ என்றே சொல்லுவார். அதே போல் அவரவர் பெயருக்கு ஏற்றாற்போல் சொல்லி சர்மண: அஹம் அஸ்பிபோ எனச் சொல்லணும்.
நீக்குஎன்னாது...இந்த கீசா மேடம்... சிம்பிள் மேட்டரான, பெயருக்குப் பின்னால் வரும் 'வால்' சர்மா/கனபாடிகள்/சாஸ்திரி போன்றவற்றைப் பற்றிக் கேட்டதற்கு, நிஜ ப்ரோகிதர் போலவே ஆகிவிட்டாரே..
நீக்குஹாஹாஹாஹா, இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் ஜிம்பிளாவா எடுத்துக்கறது? இஃகி,இஃகி,இஃகி! அது வெறும் பெயருக்குப் பின்னால் வரும் வால் எல்லாம் இல்லை. அர்த்தமுள்ளது.
நீக்கு:)))
நீக்குநெல்லை, சில ஆண்டுகள் முன்னர் Freetamil e-books மூலமா நான் எண்ணங்கள் வலைப்பக்கம் எழுதிய உபநயனம் என்னும் தொடர் மின்னூலாக இங்கே கிடைக்கும்.
நீக்குhttps://freetamilebooks.com/ebooks/upanayanam/ சந்தடி சாக்கிலே விளம்பரம் பண்ணிக்கிறேன்.
சாஸ்திரி என்னும் பெயர் பிராமணர்களுக்கு மட்டும் உரியதல்லை. சாஸ்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள் அனைவருமே/அனைவருக்குமே இந்தப் பட்டம் உண்டு. நம்ம லட்சியப் பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரிக்கு அப்படி வந்த பெயர் தான் சாஸ்திரி என்பது. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர். ஆனால் அவரோட பிள்ளைகள் யாரும் சாஸ்திரங்களில் சிறந்தவர்கள் இல்லையானாலும் சாஸ்திரி என்பதைக் குடும்பப் பெயராக ஆக்கிக் கொண்டனர்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஅது போலவே தீக்ஷிதர்களும். தீக்ஷை பெற்றவர்கள் தீக்ஷிதர்கள். சிதம்பரம் தீக்ஷிதர்கள் அனைவரும் அப்படித் தான். இன்னும் சில கோயில்களில் இருப்பவர்கள் மற்றும் முத்துசாமி தீக்ஷிதர், நீலகண்ட தீக்ஷிதர் போன்றோரும் அப்படித் தான். இதையும் வடநாட்டில் பெரும்பாலும் குடும்பப் பெயராக ஆக்கி விட்டனர். அதே போல் வாஜ்பேய ஹோமம் செய்தால் அவருக்கு வாஜ்பேய்/வாஜ்பாய் என்னும் பட்டம் கொடுப்பார்கள். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் ஒரே ஒரு தாத்தா( இப்போ இருக்காரா?) வாஜ்பேய ஹோமம் செய்து அந்தப் பட்டம் பெற்றவர். அவங்க குடும்பத்தினர் இதைக் குடும்பப் பெயராக ஆக்கிக் கொண்டார்கள்.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குவிளக்கமளித்த அனைவருக்கும் நன்றி.
நீக்குடாக்டர் மகன் டாக்டர் என்பது இங்கு செல்லுபடியாகாது போல!
வைஷ்ணவி
ஆம்!
நீக்கு//டாக்டர் மகன் டாக்டர் என்பது// - அப்படீன்னு சொல்லிட முடியாது (சாஸ்திரி, கனபாடிகள் தவிர). வடநாட்டில், த்விவேதி, த்ரிவேதி, சதுர்வேதி என்று பட்டங்கள் இருக்கின்றன. இவை குடும்பப் பெயர்களாக வருபவை. இரண்டு வேதங்களைப் பாராயணம் செய்பவர்கள், மூன்று வேதங்களை பாராயணம் செய்பவர்கள், நான்கு வேதங்களையும் பாராயணம் செய்பவர்கள் என்று. இவை, தலைமுறை தலைமுறையாக சென்ற தலைமுறை வரை நடந்திருக்கலாம் (என் தலைமுறை வரை). அதற்கு அப்புறம், வேலைக்காக பிற இடங்களுக்குச் சென்றவர்களுக்கு இது வெறும் பெயரின் ஒரு பாகமாகத்தான் இருக்கிறது. அவங்களுக்கும் வேதங்களுக்கும் உள்ள நெருக்கம், கரண்டிக்கும் பாதாள கரண்டிக்கும் உள்ள நெருக்கம். என்னுடன், கல்ஃப் தேசங்களில் திரிவேதிகளும் சதுர்வேதிகளும் பணியாற்றியிருக்கிறார்கள். ஜீனிலிருந்து வரும் அந்த அறிவு தீட்சண்யம் அவர்களிடத்தில் கண்டிருக்கிறேன்.
நீக்குஇப்போவும் அங்கே த்ரிவேதி, த்விவேதி, சதுர்வேதிகள் படிச்சவங்க உண்டு. எங்க மாமனார் இறந்தப்போ நாங்க ஜாம்நகரில் இருந்தோம். சாமவேதப் புரோகிதர் ஆனால் சதுர்வேதி தான் மாசா மாசம் வந்து மாசிஹம், சோதகும்பம்னு பண்ணி வைச்சார். என்ன ஒரு பிரச்னைன்னால் நமக்கெல்லாம் வருஷாப்தீஹம் வரைக்கும் மஹாவிஷ்ணு கிடையாது. ஆனால் இவங்க மாசா மாசம் மஹாவிஷ்ணுவிற்கு என ஒரு பிரமசாரியைக் கூட்டி வந்துடுவார். நாங்க வேண்டாம்னாலும் கேட்க மாட்டார். ஆவணி அவிட்டம் (சாமவேதம்) காலை ஏசு/எட்டு மணிக்கு ஆரம்பிச்சால் மத்தியானம் மூன்றுமணிக்கு முடிப்பார்.
நீக்குஇதைத் தவிரவும் அக்னிஹொத்ரி உண்டு. நம் காலத்தில் நமக்குத் தெரிந்து கடலூரில் இருக்கும் மருத்துவர் திரு தி.வாசுதேவன் அவர்கள், அவருடைய மகன் ரமண ஷர்மா ஆகியோர் நித்ய அக்னிஹோத்ரிகள்.
நீக்குஎனக்குத் தனிப்பட்ட முறையில், நம் ப்ரோஹிதர்களிடம் வரும் மதிப்பும் அந்நியோந்யமும் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற நினைப்பும், வட இந்தியரிடம் வருவதில்லை. அதற்குக் காரணம் அவர்களது உடை கலாச்சாரமாக இருக்கும்.
நீக்குஏழு எட்டு மணி என்பதில் தட்டச்சுத் தவறு பரவாயில்லை. சடக்கென்று, த்விவேதி, சாமவேதம் இதெல்லாம் பற்றிப்பேசிக்கொண்டிருக்கும்போது திடுக்கென்று ஏசு இங்கே எங்கு வந்தார் என்று யோசித்தேன். ஹிஹி
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கண்ணு தெரியலையா? ஏழு என்பது ஏசுனு வந்திருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
நீக்குஅது என்னமோ தெரியலை, மருந்தெல்லாம் எடுத்துக்க ஆரம்பிச்சதும் கண் இன்னமும் மோசமா இருக்கு! :(
நீக்குவீக்கம் வலக்கண்ணில் வடியலை! :(
நீக்குநாமக்கட்டி இழைத்து போட்டால் வீக்கம் சரியாகுமே…
நீக்குவைஷ்ணவி
தகவல்களுக்கு நன்றி.
நீக்குநன்றி வைஷ்ணவி. கண்ணுக்குள்ளே இமைகளின் கீழே வீங்கி இருப்பதால் நாமக்கட்டி எல்லாம் போட முடியாதுனு நினைக்கிறேன். கண்ணுக்கு நான்கு வேளைகள் சொட்டு மருந்தும் இரவு படுக்கையில் தடவிக்க ஆயின்ட்மென்டும் கொடுத்திருக்காங்க. அதைத் தவிரத்து உள்ளுக்குச் சாப்பிடவும் மாத்திரைகள். 2,3 நாட்களில் சரியாயிடும்னு நினைக்கிறேன். மீக்க நன்றி.
நீக்குகண்ணு தெரியலையேனு எழுதினேன். அது இப்படிக் "கண்ணு தெரியலையா?" என வந்திருக்கு! :(
நீக்குSorry... எனக்கு சட்னு strike ஆகலை, கண்ணு பிரச்சனை இருக்கு என்பது. சும்மா எப்போதும்போல வம்புக்கு இழுத்துவிட்டேன் கீசா மேடம்
நீக்குபாவம், அந்த இளைஞர்! பின்னால் குழி பறிப்பதை உணரவில்லை.
பதிலளிநீக்குஒவ்வொரு வாரமும் குட்டிப்பாப்பாக்களோடு மிருகங்கள் இருக்கும் மர்மம் என்ன? அல்லது அப்படியான படங்களைப் போடுவதன் அர்த்தம் என்ன? திக் திக் திக்!
என்னதான் செல்லம்னாலும் இப்படிப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல. அதது அதனதன் இடத்தில் இருக்க வேண்டாமோ?
:)))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குபெருங்காயம் இல்லாமல் அநேகமாய்ச் சமைத்தது இல்லை. பிறந்த வீட்டில் பால் பெருங்காயம் தான். அம்மா ஒரு சின்னக் கிண்ணத்தில் ஊறவைத்துக் கரைத்திருப்பார். ஒரு சொட்டு விட்டால் போதும். பின்னர் நான் கல்யாணம் ஆகி அம்பத்தூரில் குடித்தனம் வைத்ததும் கந்தகோட்டம் எதிரே இருக்கும் தெருவில் உள்ள (இப்போவும் இருக்கா) கடையில் வாங்கும் பெருங்காயம் தான் வெகு காலத்துக்கு! வடக்கே போனப்புறமாக் கூட இங்கே வரும்போதெல்லாம் நிறைய வாங்கிப் போயிடுவேன். அதன் பின்னர் சில சமயங்கள் எல்.ஜி. இங்கே வந்தப்புறமா மறுபடி பால் பெருங்காய்ம்.எல்ஜி பவுடர் எப்போவேனும் தேவைக்கு.
பதிலளிநீக்குபெங்களூர்ல ஒரு பிராண்ட் பால் பெருங்காயம் ஒஆங்கினேன். எனக்கு அதன் வாசனை ரொம்பப் பிடிக்கும். நான் மட்டும்தான் உபயோகிக்கிறேன்.
நீக்குஅது என்ன பிராண்ட் ?
நீக்குநன்றி.
நீக்குவெயில் காலத்தில் உகந்த பானம் சுத்தமான பானைத்தண்ணீர். அதன் குளிர்ச்சியை எதாலும் அடிச்சுக்க முடியாது. ஜில்லென்று தொண்டைக்குழியில் இறங்கும் சுகம்!
பதிலளிநீக்குஆயிரம் ரூபாய்ப் பரிசு அவனுக்கு எவ்விதத்தில் பலனாகுமோ அவ்விதத்தில் பயன்படுத்திக்கச் சொல்லிக் கொடுத்துடலாம்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவெயில் காலத்தில் வெறும் தயிர்சாதத்தை விட நீர் ஊற்றிய பழைய சாதம் சிறப்பு. கூடவே சின்ன வெங்காயம், உப்பு, மோர் மிளகாய். அல்லது துண்டம் மாங்காய்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குநெல்லையையும் காணோமே இப்போல்லாம். மறுபடி எங்கானும் பக்திச் சுற்றுலாவா?இன்னிக்கு துரையையும் காணோம்.
பதிலளிநீக்குசுற்றுலாலாம் இல்லை.... வந்துட்டேன். அடுத்த மாதம் பதினைந்து நாள் பத்ரி செல்லப்போகிறோம் என்பது திட்டம்.
நீக்குகூடவே கேதார்நாத்தும் உண்டா? ஹிஹிஹிஹி,உங்க மனைவி என்னை அடிக்க வரப்போறாங்க! :) கோடைக் காலம் என்பதால் தகுந்த உள்ளாடைகள் இல்லாமல் போகாதீங்க. எங்களைப் பொறுத்தவரை இங்கெல்லாம் போகச் சரியான மாதங்கள் ஆகஸ்ட்-செப்டெம்பர் தான். இப்போக் கோடையில் பனி அதிகம் உருகும் என்பதால் குளிரும் அதிகமாகவே இருக்கும்.
நீக்குஇந்தத் தடவை மனைவியுடன் (மனைவி சைடு உறவினர்கள் நிறையபேர் வருகிறார்கள்). எப்போதும் செல்லும் யாத்திரைக் குழுவினரோடு
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குமுதல்ல கோடைக் காலம்னு சொல்றாங்க. அப்புறம் //கோடையில் பனி அதிகம் உருகும் என்பதால் குளிரும் அதிகமாகவே இருக்கும்.//ங்கறாங்க. குளிருமா குளிராதா? கம்பளிப்போர்வை எடுத்துட்டுப் போகணுமா வேண்டாமா? கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க. ஹா ஹா
நீக்குசரியாத்தான் சொல்றேன் நெல்லை. இந்தக் கோடையில் பனி உருகுவதால் குளிர் அதிகமாத் தெரியும். அதே நீங்க தென்மேற்குப் பருவம் முடிந்து ஆகஸ்ட்/செப்டெம்பரில் போனால் பருவகாலம் அமோகமாக ரசிக்கும்படி இருக்கும். இது எங்கள் அனுபவம். உள்ளாடை பற்றிச் சொல்லி இருப்பதை மிஸ் பண்ணிடாதீங்க. கூடியவரை தெர்மல் ஆடைகள் அணிந்த பின்னரே உங்கள் உடைகளைப் போட்டுக்கோங்க. நீங்க எங்கே தங்கினாலும் அங்கே கட்டில், தலையணை, ரஜாய், கம்பளிகள் எனக் கொடுப்பாங்க. சில விடுதிகளில் ஹீட்டர் வசதியும் உண்டு. உங்களோட ஒருங்கிணைப்பாளர் எப்படிக் கூட்டிட்டுப் போறாரோ தெரியாது. நாங்க தனியாவே போனோம். ஒருங்கிணைப்பாளர் மூலமாப் போனது கயிலைப் பயணம், அஹோபிலம், அதுக்கப்புறமா/அல்லது அதன் முன்னர் (?) ட்ராவல் டைம்ஸ் மூலமா பாரத் தர்ஷன்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம், வாங்கோ.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க, வாழ்க!
நீக்குஎன் கணவரைப் பொருத்தவரை பெருங்காயம் இல்லாமல் சமைப்பது க்ரைம். "விட்டால் பாயசத்தில் கூட பெருங்காயத்தை போடச் சொல்வீர்கள்" என்பேன் நான். என்னுடைய சாய்ஸ் எல்.ஜி.கட்டிப் பெருங்காயம்.
பதிலளிநீக்கு:)))) கருத்துரைக்கு நன்றி.
நீக்கு2. தண்ணீர்
பதிலளிநீக்கு3. பள்ளியில் படிக்கும் பதின்ம வயது பையனின் பொருளாதார நிலையை வைத்து முடிவு செய்வேன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஒவ்வொரு வாரமும் குழந்தையோடு விலங்கு இருக்கும் படம்.. பார்க்கவே திக் திக்கென்றிருக்கிறது.
பதிலளிநீக்கு:))
நீக்குஎனக்கு பெருங்காயம் ரொம்பப் பிடிக்கும். எந்த புது பிராண்ட் பார்த்தாலும் வாசனையா இருந்தால் வாங்கிவிடுவேன். தற்போது உபயோகிப்பது வடநாட்டு தூள் பெருங்காயம்.. சட்னு பெயர் மறந்துபோச்சு, கொஞ்சம் அதிக வாசனையா இருக்கும். எல் ஜி கட்டிப் பெருங்காயபும்.
பதிலளிநீக்குநாத்துவாரகால விற்ற பெருங்காயத்தை வாங்கி அது நன்றாக இல்லைனு மனைவி குறை சொன்னாள். போர்பந்தர்ல கட்டிப் பெருங்காயம் (சாக்லேட் சைசுல) மூடை மூடையா விற்றுக்கொண்டிருந்தார்கள். பார்க்க அழகா இருந்தது. ஆனால் ஶ்ரீநாத் துவாரகா அனுபவத்திற்குப் பின், எதற்கு ரிஸ்க் எடுக்கணும்னு வாங்கலை.
சுவையான தகவல்களுக்கு நன்றி.
நீக்குகுஜராத்தில் அரேபியாவிலிருந்து வரும் பெருங்காயம் என விற்பார்கள். தூள் பெருங்காயமும் கூட வெள்ளை வெளேர் என இருக்கும். தொட்டால் வாசம் கையை விட்டுப் போகாது.
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு//தன் பசங்களுக்கு, அவங்களால பிற்காலத்துல நன்மை ஏற்படும் என்ற எண்ணமே கொஞ்சம்கூட இல்லாமத்தான் எல்லாப் பெற்றோரும் வளர்க்கறாங்க// கேள்வியை இன்னும் கொஞ்சம் எளிமையாக கேட்டிருக்கலாமோ?
பதிலளிநீக்குலாமோ ?
நீக்குபதின்ம வயதுப் பசங்களுக்கு, அவங்களுக்கு விருப்பமான புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது சிறந்த பரிசு. காசைக் கொடுப்பது மனதில் நிற்காது. துணி கேட்ஜட் போன்ற அழியக்கூடிய பொருட்கள் என் சாய்ஸ் அல்ல
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஎழுத்துத் திறமையோ பேச்சுத் திறமையோ நம் ரசனையைப் பொறுத்தது அல்லவா? உங்களுக்குப் பிடித்தவர் எனக்குப் பிடிக்காமலும் எனக்குப் பிடித்தவர் பெரும்பான்மை சாய்ஸ் இல்லாமலிருப்பது சகஜம்தானே
பதிலளிநீக்குஆம்.
நீக்குஅநேகமாகக் கல்கியும், தேவனும் எல்லோருக்கும் பிடித்தவர்களாய் இருப்பார்கள் என்பது என் அனுமானம்.
நீக்குவெயில் காலத்தில், நல்ல தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது.
பதிலளிநீக்குநான் எங்கு சென்றாலும் தண்ணீர் சுவை நன்றாக இருக்கா எனப் பார்ப்பேன். பல ஊர்களிலும் தண்ணீர் சுவையாக இருக்காது. மினரல் பாட்டில் வந்து விட்டதால் இதையெல்லாம் நாம் கவனிப்பதில்லை என நினைக்கிறேன்.
அப்படியா!!
நீக்குவட மாநிலங்களின் பெரும்பாலான நகரங்களில் தண்ணீர் நன்றாகவே இருக்கும். எனக்கு எல்லா மினரல் தண்ணீரும் ஒத்துக்கறதில்லை. அதிலும் பிஸ்லேரி என்றால் கிட்டவே வரக்கூடாது. ஆகவே அந்தந்த ஊரின் சுயமான தண்ணீரே பெரும்பாலும்குடிப்பேன். வசதி இருந்தால் காய்ச்சிக் குடிச்சுடுவேன். இல்லைனால் இருக்கவே இருக்கு அக்வா!
நீக்குதமன்னாவின், பழைய, அழகான படத்தைப் போட்டிருக்கீங்க..... இப்போ....ம்ம்... பெருமூச்சு
பதிலளிநீக்கு:))))
நீக்குகலகலப்பான கேள்வி பதில்..
பதிலளிநீக்குவழக்கம் போல நமக்குத் தான் ஒன்னும் புரியலை!..
:)))) ஏன்??
நீக்குஅழகான படத்தைப் போட்டிருக்கீங்க...
பதிலளிநீக்குஇப்போ...
ஏதேது.. பெரிய கூட்டமே இருக்கும் போல இருக்கே!?..
அதே, அதே!!
நீக்குநியாயம் தர்மம் என்பது பெரும்பாலும் எல்லா மக்களுக்கும் தெரிகிறது ஆனால் நடைமுறையில் தனக்கொன்றும், பிறருக்கு ஒன்றும் பேசுகின்றனர்.
பதிலளிநீக்குஉண்மைதான் !
நீக்குகேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குLG பெருங்காயத்தூள். மற்றும் அதில் கட்டி பெருங்காயமும் வாங்கி வைத்து இருக்கிறேன், துவையல், பொடி வகைகளுக்கு கட்டி பெருங்காயம், குழம்பு, ரசத்திற்கு தூள் பெருங்காயம் . முறுக்கு, தேன்குழல் செய்ய பால்பெருங்காயம்.
வெயில் காலத்தில் இப்போது நீங்கள் கேட்டு இருப்பதில் மின் விசிறி இருந்தாலே போதும். ஏதாவது ஒன்று என்று குறிப்பிட்டதால் மின் விசிறி . வெளியே போனால் கை விசிறி(மடக்கு விசிறி) இல்லாமல் போக மாட்டேன். அடுத்து என்றால் தண்ணீரும்தான்.
அவசியம் வேண்டும் கோடை காலத்தில்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநல்ல கேள்வி பதில்கள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகௌ அண்ணா! பங்களூரில் கொஞ்சம் சூடுன்னு நெல்லை சொல்லிருந்ததால் நெல்லையைக் குளிர்ச்சிப்படுத்தவா!!!!!!!!! கூல் கூல்!!!!
பதிலளிநீக்குகீதா
:)))
நீக்குஎந்தக் காலத்து 'த' படத்தையோ போட்டு எனக்கு வயசாகாதுன்னு சொல்லி 'நெ' வை கூல் பண்ண முயற்சி!!!!!!! ஹாஹாஹாஹாஹா
பதிலளிநீக்குபரவால்ல 'த' பொண்ணு நல்லாவே இருக்கு!!!!
கீதா
ஓ ! இது 'த' வுனுடைய பொண்ணா !!
நீக்குதன் மனதுக்கு நேர்மையாக தன் குழந்தைகளை வளர்க்காத பெற்றோரும் இருப்பாங்களா?//
பதிலளிநீக்குகண்டிப்பாக நிறைய இருக்காங்க!!!!
கீதா
அதே, அதே!
நீக்கு1. பெருங்காயம் உபயோகிப்பது உண்டு. பிடித்த மண்ம. தற்போது சம்பூர்ணா ஹோட்டல் பெருங்காயம் என்று நல்ல தரமான பால் பெருங்காயம் போன்று ரொம்ப நன்றாக இருக்கிறது. ஒரு துளி போட்டால் போதும்! நல்ல மணம்.
பதிலளிநீக்குகீதா
நான் முன்பு பால் பெருங்காயம் தண்ணீரில் போட்டுப் பயன்படுத்தியதுண்டு. பெருங்காயம் எங்கு வித்தியாசமாகப் பார்த்தாலும் வாங்கிடுவேன். பிடித்த மணம் என்பதால். இங்கு பல வட இந்திய பெருங்காயம் கிடைக்கிறாது கட்டிகளாகவும். அதுவும் வாங்கியிருக்கிறேன் நன்றாக இருந்தது என்றாலும் அதன் பின் தொடர்நு நான் பயன்படுத்துவது இந்த சம்பூர்ணா தான். புளியோதரைக்கு பெருங்காயம் மணம் ரொம்ப முக்கியமாச்சே!!
நீக்குஇந்த சம்பூர்ணா பெருங்காயம் செம மணம். ப்ரீமியம் க்வாலிட்டி! தண்ணீரில் கரைத்தும் போடலாம். அத்தனை மணம். பாட்டி திருக்குறுங்குடியில் இருந்த போது பயன்படுத்தியது போல மணம். எனவே இப்போது அதுதான்.
கீதா
ஆஹா ! தகவல்களுக்கு நன்றி.
நீக்குவெயில் என்றால் சம்பார மோர் (அதாங்க நீர் மோர்) அப்புறம் எலுமிச்சை பழ ரசம்! பழங்கள். சாலட் நிறைய தண்ணீர்!
பதிலளிநீக்குஇதுதானே உடம்பைக் குளிர்விக்கும்.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎங்கள் வீட்டில் பெருங்காயப் பயன்பாடு மிகவும் குறைவு. பயன்படுத்துவது அபூர்வம் இருந்தாலும் எல் ஜி தூள் தான்.
பதிலளிநீக்குவெயிலுக்கு மின் விசிறிதான். சுற்றிலும் தோட்டம் என்பதால் அதுவே இதுவரை போதுமாக இருக்கிறது. தண்ணீர் நிறைய குடிப்பதுண்டு. பெரும்பாலும் இரவு கேரளக் கஞ்சி சோறு.
துளசிதரன்
எல்லோரும் வளமுடன் வாழப் பிரார்த்தனைகள். வெகு சுவையான புதன் கிழமைப் பதிவை
பதிலளிநீக்குரசித்துப் படித்தேன். எப்பொழுதும் கட்டிப் பெருங்காயமே மேல்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1. எல்.ஜி. பெருங்காயத்தூள்.
பதிலளிநீக்கு2. "கை விசிறி". கரண்ட் போனாலும் கவலைப்பட வேண்டாமே...?? கூடவே ஒரு முதுகு சொரிவான்...!!
3.நல்லறிவூட்டும் புத்தகங்கள்.
கருத்துரைக்கு நன்றி!
நீக்குகேள்வி பதில்கள் நன்று.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு