கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
தலைகுளத்தூர் பட்டதிரி
மொழியாக்கம்
ஜெயக்குமார் சந்திரசேகரன்
பாகம் 5
முன்கதைச் சுருக்கம்.
பாகம் 1. : குருகுல வாசம். ஜோசிய திறமை வெளிப்படுதல்.
பாகம் 2. : மகன் மரித்தல்-ஜோசியத்தின் மேல் வெறுப்பு-வெறுப்பு
நீங்குதல்-கள்ளன் காக்கையை கண்டுபிடித்தல்-வெட்டி
முறிச்ச கோட்டை கதை.
பாகம் 3. : தன்னுடைய ஜாதகம் கணித்து ஜாதி பங்கம் உண்டாகும்
என அறிதல் - தரித்திர பிராமணனுக்கு
தரித்திரம்
போக்கும் வழி சொல்லிக்கொடுத்தல்.
பாகம் 4.
: ஜாதி பங்கம் உண்டாகும் நாள் வருதல் - ஜாதி பங்கம்
சம்பவிக்காதிருக்க நாள் முழுதும் ஆற்றில் படகில்
இருத்தல் - தவறுதலாக கணியாட்டியைப் புணர்தல் -
அதன் மூலம் பிறந்த புத்திரன் பட்டதிரி
போலவே சிறந்த
ஜோசியன் ஆகுதல்.
ஜோசியம் பொய்க்கவில்லை. ஜாதி பங்கம் உண்டாயிற்று. கணியாட்டி மூலம் பிறந்த புத்திரன் பட்டதிரியைப் போலவே புகழ் பெற்ற ஜோசியனாகச் சிறப்புடன் வாழ்ந்தார்.
அப்படி இருக்கும் காலத்தில் கணியாருடைய வீட்டின் அருகில்
உள்ள ஒரு நம்பூதிரியின் அந்தர்ஜனம் கர்ப்பம் தரிக்கவே, நம்பூதிரிக்கு மகவு ஆணோ, பெண்ணோ
என்று அறிய ஆவல் ஏற்பட்டது. கணியாரிடம் கேட்கவே கணியார் “பெண் குழந்தை, ஜாதகம் இப்போதே
எழுதித் தருகிறேன்” என்று அப்பிரகாரம் எழுதிக் கொடுத்தார். ஜாதகத்தில் குறிப்பிட்ட
நாளில் அந்தர்ஜனம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இதே போன்று நம்பூதிரி கணியாரைக் காண்பதும், பெண்குழந்தை
பிறப்பதும் ஒன்பது முறை நிகழ்ந்தது. ஒரு புத்திரன் போலும் உண்டாகவில்லை. அந்தர்ஜனம் பத்தாம் முறையும் கர்ப்பம் தரித்தார்.
நம்பூதிரியும் கணியாரிடம் ஜோசியம் கேட்க, கணியார் பெண்குழந்தை என்று ஜாதகம் எழுதித்
தந்தார். நம்பூதிரிக்கு மிக்க விசனம் உண்டாயிற்று.
இப்படி இருக்கும்போது ஒரு வழிப்போக்கன் பிராமணன் எதேச்சையாக
நம்பூதிரியுடைய இல்லத்திற்கு வந்தார். அந்த பிராமணன் தைக்காட்டுச்சேரியில் தைக்காட்டு நம்பூதிரி
என்று கேள்வி. அந்த பிராமணன் வந்தது மதிய சாப்பாடு நேரம். ஆகவே கிரகஸ்த நம்பூதிரி,
“சீக்கிரம் குளித்து விட்டு வாருங்கள். சாப்பிடலாம்” என்று அவரிடம் சொன்னார். தரித்ரன்
ஆனாலும் கிரகஸ்தன் நம்பூதிரி விருந்தோம்பலில் ஈடுபாடு உள்ளவர்.
இருவரும் சாப்பிட்டு முடித்து திண்ணையில் இருந்து தாம்பூலம்
தரித்து பேசிக்கொண்டிருக்கும்போது கிரகஸ்தன் தன்னுடைய கஷ்டங்களை வழிப்போக்கரிடம் சொன்னார்.
அப்போது வழிப்போக்கன் “அப்படியா, சரி, இப்போது கர்ப்பம் எத்தனை மாதம்?“ என்று கேட்டார்.
அதற்கு கிரகஸ்தன் “முறை தவறி ஒரு மாதம் ஆகிறது”
என்றார்.
“அவ்வளவு தானா? இத்தவணை ஆண் குழந்தை ஆக்கலாம். ஒரு நாற்பது நாட்கள் எனக்கு இருப்பிடமும், ஊணும், செலவுக்குக் கொஞ்சம் பணமும் தந்தால் போதும். கணியார் என்ன, பிரம்மாவே ஆனாலும் சரி, விதிச்சதை மாற்றித் தருகிறேன்.” என்று வழிப்போக்கன் கூறினார்.
“பெண் குழந்தை என்று கணியார் எழுதி கொடுத்திருக்கிறார்.
அவர் எழுதிய எதுவும் பொய்யானதில்லை. இது எப்படி மாறும்?” என்று கிரகஸ்தன் கேட்டார்.
அதற்கு வழிப்போக்கன் “எனக்கு 40 நாட்கள் தங்க இடமும், சாப்பாடும் தரமுடியுமா? அப்படியானால்
சரியாக்க முடியும்.” என்று கூறினார்.
“சரி, அப்படியே ஆகட்டும்.” என்று கிரகஸ்தன் பதில் சொல்ல
வழிப்போக்கன் 40 நாட்கள் அங்கேயே தங்கி அந்தர்ஜனத்திற்கு நெய் ஜபித்து கொடுத்தார்.
“பிரசவ தினம் அன்று நான் இங்கு வருவேன். அன்று கணியாரையும் வரச் சொல்லுங்கள். யார்
சொன்னது பலித்தது என்று அறியலாம்.“ என்று சொல்லி விடை பெற்றார்.
பிரசவ நாள் அன்று வழிப்போக்கன், நம்பூதிரி கிரகஸ்தன்
இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். “நான் முன்னரே இங்கு வந்து தங்கி இருந்ததை பற்றியோ,
நெய் ஜபித்துக் கொடுத்ததைப் பற்றியோ கணியாரிடம் தெரியப் படுத்த வேண்டாம்” எனக் கூறி
உள் திண்ணையில் அமர்ந்தார். அச்சமயம் கணியாரும் விவரம் ஒன்றும் அறியாமல் வந்து வெளித்
திண்ணையில் அமர்ந்தார். அப்போது ஒரு காசிவாசியும் அங்கே வந்து கணியாருடன் வெளித் திண்ணையில்
அமர்ந்தார்.
அந்தர்ஜனத்திற்குப்
பிரசவ வேதனையும் ஆரம்பம் ஆனது. கிரகஸ்தன் கணியாரிடம் “என்ன கணியாரே, இதுவும் பெண் தானே?“
என்று கேட்டார்.“ அடியேன் எழுதித்தந்த ஜாதகங்கள்
எதுவும் பிழையானதில்லை. இதுவும் பெண் தான் “ என்று உறுதியுடன் கூறினார்.
இப்படி இவர்கள் வாதித்துக் கொண்டிருக்கும்போது அருகே
ஒரு பசுவிற்குப் பிரசவ வேதனை தொடங்கியது. அப்போது கிரகஸ்தன் கணியாரிடம் “இப்போது பசு
பிரசவிக்கும் கன்று என்ன கன்றாயிருக்கும்?” என்று கேட்டார். அதற்குக் கணியார் “காளைக் கன்று, நெற்றியில் ஒரு பட்டம் இருக்கும்”
என்றும் கூறினார். காசிவாசி குறுக்கிட்டு“ நெற்றியில் பட்டம் அல்ல, வாலில் கொடி இருக்கும்.”
என்றார். “நமக்கு இப்போது தெரிய வரும்“ என்று
கணியார் கூற பசு ஒரு காளைக் கன்றை பிரசவித்தது. ஆனால் நெற்றியில் பட்டத்திற்கு மாறாக வாலில் கொடி இருந்தது. அப்போது கணியாருக்கு
லஜ்ஜையும், அடக்கமும், காசிவாசியின் மீது ஒரு மரியாதையும் ஏற்பட்டது.
அந்தர்ஜனம் பிரசவித்தார். ஆண் குழந்தைதான். கணியாருக்கு
மனக்கிலேசம் தாங்க முடியவில்லை. காசிவாசியிடம் “நான் சாஸ்திர பிரகாரம் கூறியது எப்படித்
தவறானது? மகானே, இது எப்படிச் சம்பவித்தது? சாஸ்திர பிரகாரம்தானே இரண்டு சங்கதிகளையும்
கூறினேன். அந்த இரண்டும் தவறாகி விட்டனவே. கன்றிற்கு நெற்றிப் பட்டம் இல்லை, இங்கே
ஆண்குழந்தை ஜனனம். சாஸ்திரம் பொய்யாகுமோ?“ என்று புலம்பினார்,
காசிவாசி, “சாஸ்திரம் ஒரு போதும் தவறாகச் சொல்வதில்லை.
சாஸ்திரம் முழுவதும் தெரிந்திருந்தாலும் புத்தி பூர்வம் ஆலோசிக்காமல் எடுத்துச் சொன்னால்
இது போல் தவறாக முடிவது உண்டு. இந்த இரண்டு தவறுகளும் உன்னுடைய ஆலோசனைக் குறைவு கொண்டு
நேர்ந்தவை.“ என்றார்.
கணியார் “தயவு செய்து காரணங்களை விளக்கமாகக் கூற முடியுமா?”
என்று கேட்டார்.
அதற்குக் காசிவாசி
“கர்ப்பம் மூன்று மாதம் திகைவதற்கு முன் குழந்தை
ஆணோ பெண்ணோ, எப்படி வேண்டுமானாலும் இஷ்டம் போல் மாற்றுவதற்குப் பிராமணருக்குச் சித்திக்கும்.
அது அவருடைய வேதத்தின் மஹிமையாகும். ஆகவே கர்ப்பம் மூன்று மாதம் ஆவதற்கு முன்பே ஜாதகம்
எழுதிக் கொடுக்காமல் இருக்க வேண்டும். இங்கு நடந்த பிரசவத்தில் குழந்தையை ஆண் குழந்தையாக
மாற்றிய ஆள் உள்ளே இருக்கிறார். நீ அதைக் கவனிக்காமல், ஆலோசிக்காமல் கர்ப்பம் தரித்தபோது
கணித்த ஜாதகத்தின் படியே பலன்கள் கூறினாய். கொஞ்சம் சிந்தித்திருந்தால் இப்படித் தவறாக
முடிந்திருக்காது. அதே போல கன்று கர்ப்பத்தில் இருந்தபோது அதனுடைய வால் நெற்றியில்
இருந்தது. நீ அதை பட்டம் என்று கருதி அவ்வாறு கூறினாய். இதுவும் சிந்தனைக் குறைவால்தான்.“
இவ்வாறு காசிவாசி கூறியதைக் கேட்டவுடன் கணியாருக்கு இங்கு நிற்பவர் தன்னுடைய அச்சன் என்று அம்மை கூறியிருந்த தலைகுளத்தூர் பட்டதிரி ஆக இருக்குமோ என்று ஐயம் தோன்றியது. அதை அவரிடம் நேரடியாகக் கேட்கவே பட்டதிரியும் அப்படியே என்று சம்மதித்தார். கணியார் அச்சனுடைய பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தார்.
பட்டதிரிக்கும் மகனைக் கண்டதில் சந்தோசம். இருவரும் கணியாருடைய வீட்டிற்குப் புறப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்தது மூவாற்றுப்புழ தாலுக்காவில் பிரவம் என்ற ஊரில் புளிமுற்றத்து
நம்பூதிரி இல்லத்தில் என்று தெரிகிறது.
அவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே நடக்கும்போது
கணியார், “நமக்கு இப்போது பால் பாயசம் கிடைக்கும்” என்று கூறினார். பட்டதிரி “பாயசம்
தீஞ்சதாயிருக்கும்” என்று கூட்டிச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனபின் ஒரு நம்பூதிரி
அவர்களுக்குப் பால் பாயசம் தந்தார். பாயசம் தீஞ்சதாய் இருந்தது. கணியார், “இது என்ன? இன்று நான் சொல்வதெல்லாம் மாறுகிறது.
நான் சாஸ்த்ரப் பிரகாரம் லக்ஷணம் எல்லாம் நோக்கித்தான் எல்லாம் சொன்னேன். ஏன் இப்படி
?“ என்று சொன்னார்.
உடனே பட்டதிரி “லக்ஷணம் சொல்லுவதற்கு சாஸ்திரம் மாத்திரம்
நோக்கினால் போதாது. ஓரொன்றினைக் குறித்தும் முழுவதும் நுணுக்கமாகப் புத்தி பூர்வமாக
ஆராய்ந்து ஆலோசித்துச் சொல்லவேண்டும்.” என்றார்.
அவர் நடந்த
ஒவ்வொரு சங்கதிகளைக் குறித்தும் விளக்கினார். “நம்பூதிரி உன்னிடம் வந்து லக்ஷணங்கள்
சொல்லும்போது அது பெண் குழந்தை என்றே முடிவு செய்ய முடியும். ஆனால் ஒரு பிராமணன் பின்னர்
நெய் ஜபித்துக் கொடுத்து அந்தக் குழந்தையை ஆணாக மாற்றியது நீ அறிந்தில்லை. நீ முன்பே கேட்ட லக்ஷணங்கள் மட்டுமே நோக்கிப் பின்னர்
நடந்தவற்றைக் கிரகிக்காமல் கூறியதால் அது பிழையானது.
அதே போன்றுதான் பசுவின் வால் நெற்றியில் படர்ந்திருந்ததைப் பட்டம் என்று தவறாகக் கருதினாய்.”
என்று இத்தனையும் காசிவாசி கூறியதும் கணியார், “பால் பாயசம் தீஞ்சதாயிருக்கும் என்றது
எப்படி?” என்று கேட்டார். காசிவாசி, “பால் பாயசம் கிடைக்கும் என்று எவ்வாறு தீர்மானித்தாய்.?”
என்று கேட்டார். அதற்குக் கணியார் “நாம் இங்கு வரும்போது ஒரு சக்ரவாகப் பறவை பறந்து
வந்து பாலுள்ள மரத்தின் கிளையில் அமர்வதைக் கண்டேன். அதனால் தான்” என்று கூறினார்.
காசிவாசி, “அந்தக் கிளை ஒரு காய்ந்த கிளை என்பதை நீ கவனிக்கவில்லை. காய்ந்த கிளையில்
அமர்ந்ததால் பாயசம் தீஞ்சதாய் இருக்கும் என்று நான் தீர்மானித்தேன்” என்று கூறினார்.
மூலம் சுட்டி.
>>>>>>> இன்னும் வரும்
மிகவும் இன்டெரெஸ்டிங் ஆகச் செல்கிறது. அறியாத ஒன்றை மொழிமாற்றம் செய்து தருகிறார் ஜெ குமார் சார். பாராட்டுகள்.
பதிலளிநீக்குஆம். சரிதான். பாராட்டுவோம்.
நீக்குபடித்தேன் ரசித்தேன்.... இன்னும் எத்தனை பகுதிகள்? மொத்தமாக படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅடுத்த வாரம் முடிகிறது.
நீக்குசுவாரஸ்யமாக செல்கிறது...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம் ! வாழ்க வளமுடன்!
நீக்கு“லக்ஷணம் சொல்லுவதற்கு சாஸ்திரம் மாத்திரம் நோக்கினால் போதாது. ஓரொன்றினைக் குறித்தும் முழுவதும் நுணுக்கமாகப் புத்தி பூர்வமாக ஆராய்ந்து ஆலோசித்துச் சொல்லவேண்டும்.” என்றார். //
பதிலளிநீக்குஇதைதான் முன்னோர் "மந்திரம் கால், மதி முக்கலால்" என்றார்கள் போலும். எல்லாம் கணக்குதான். (இறைவனின் கணக்குதான்
கதையை நன்றாக சொல்லி போகிறார் சார்.
தொடர்கிறேன்.
கதைக்கு பொருத்தமான படம் அருமை. சார் நன்றாக வரைந்து இருக்கிறார்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅடேங்கப்பா...! ஹா... ஹா...
பதிலளிநீக்குகௌதமன் சார் படம் அருமை. கைகள் கூப்பி நமஸ்காரம் செய்யும் படமாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்கு// கணியார் அச்சனுடைய பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தார். //
நீக்குகைகள் கூப்பியபடி நமஸ்காரம் செய்வது கடவுள் சந்நிதியில் மட்டும்தான் என்று தோன்றுகிறது. ஆசீர்வாதம் வேண்டி செய்யும் நமஸ்காரத்தில் கைகள் இப்படி வைத்திருப்பதுதான் சரி என்று நினைக்கிறேன்.
நீக்குஅப்படியா. சரி. இது எனக்கு தெரியாது. இப்போதைய தலைமுறை எங்கே காலில் வீழ்ந்து நமஸ்கரிக்கிறது. சும்மா காலை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வதுதான்.
நீக்குநமஸ்கரிப்பதில் இரண்டு விதம்தான். ஆண்களுக்கு ஒரு விதம் மற்றும் பெண்களுக்கு ஒரு விதம். இதில் கடவுள் முன்பு, பெரியவர்கள் முன்பு என்று பேதம் கிடையாது
நீக்குஸ்வாமிக்கு முன்னர் கைகள் கூப்பியபடி தான் நமஸ்கரிப்பார்கள். மஹாராஷ்டிரப் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரத்திலேயே நமஸ்கரிக்கையில் கால் பாதங்களை பின்னாலே பின்னிக் கொண்டு விழுந்து வணங்குவார்கள்.
நீக்குஎத்தனை ஐதீகங்கள், நம்பிக்கைகள்! நெய் மந்திரித்துக் கொடுத்து விதிச்சதை மாற்றித் தருகிறேன் என்பது வியப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குஜெகே அண்ணா நிஜமாகவே மலையாள மொழியாக்கம் என்பது அத்தனை எளிதல்ல. நீங்கள் மொழியாக்கம் செய்வதைப் பார்க்கும் போது ...மலையாளத்தை அதிகம் கற்காமல் விட்டுவிட்டேனே என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
கீதா
அருமையான மொழியாக்கம். சுவாரசியமாகச் செல்கிறது. சுட்டிக்குச் சென்றால் எல்லாம் ஜிலேபி மயம்! படிக்க முடியலை. :(
பதிலளிநீக்கு:))
நீக்குஅக்காலத்தில் நிலவிய (ஏன் இப்போதும் கூட இருக்கத்தான் செய்கிறது) ஐதீகம், நம்பிக்கைகள் போன்ற விஷயங்களை வாசிப்பதிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறதுதான்.
பதிலளிநீக்குமலையாளம் எனது தாய்மொழி என்றாலும் நான் தமிழில் வாசித்த அளவு மலையாளத்தில் வாசித்ததில்லை. ஜெயக்குமார் சந்திரசேகரன் சாருக்குப் பாராட்டுகள்!
துளசிதரன்
கௌ அண்ணா படம் பொருத்தமாக நன்றாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குகதை சுவாரசியம்.கதைக்கு பொருத்தமாக பாழூர் மனை படமும் , வணங்கும் வண்ணப்படமும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவாழ்த்துகள், பாராட்டுகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த வாரம் இந்த தொடர் முடியும்.
பதிலளிநீக்குஜீவி ஐயா "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்" என்று ஒதுங்கி விட்டார் போலும். காணவில்லை. சனிக்கிழமை அன்றே பின்னூட்டம் இடுவார் என்று எதிர்பார்த்தேன்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான மர்ம-ஜோதிடக் கதை இது! இன்னும் பத்து அத்தியாயங்களாவது வருமல்லவா?
பதிலளிநீக்குஅடுத்த வாரம் முடிகிறது.
நீக்குஉங்களுடன் பேச விருப்பம். என் செல்பேசி: 9962841761
பதிலளிநீக்குஉங்களுடன் என்றால் யாருடன்? திரு ஜெயக்குமார் சந்திரசேகர் ஸாருடனா?
நீக்கு