திங்கள், 30 மே, 2022

"திங்க"க்கிழமை :  நவராத்திரி குருமா  - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 நவராத்திரிக் குருமா!

நவராத்திரியிலே எல்லாருமே சுண்டல் வசூலுக்குப்போயிருப்பீங்க. இல்லையா?? உங்க வீட்டிலே கொலு வைக்காட்டியும், எப்படியாவது சுண்டல் பொட்டலங்கள் சேர்ந்துவிடும். அதைச் சாப்பிடவும் மனசு வராது, பயமா இருக்கும். வாயுத் தொந்திரவு அல்லது காரம் ஒத்துக்காதேனு. அதோட நவராத்திரிச் சுண்டல் வசூல் செய்துட்டு வீட்டுக்கு வரவும் நேரம் ஆயிடும். வந்து ராத்திரிக்கு என்ன பண்ணறதுனு சிலர் யோசிப்பாங்க. முன் கூட்டியே திட்டம் போட்டு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு சப்பாத்தியைச் செய்து வச்சுட்டுப் போயிடுங்க வசூலுக்கு. போதுமான சுண்டல் வசூல் ஆனதும் நேரே வீட்டுக்கு வந்துடுங்க. கூட வரும் தோழி கூப்பிட்டாலும் நோ, இனிமேல் நாளைக்குத் தான்னு சொல்லிடலாம்.

இப்போ ஒவ்வொரு வீட்டிலேயும் ஒவ்வொரு சுண்டலாய் இருக்குமே. சிலர் வீட்டிலே இனிப்புச் சுண்டலாய்க் கூட இருக்கும். எல்லாச் சுண்டலும் இப்போல்லாம் சின்ன ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் தான் தந்திருப்பாங்க. எல்லாம் சேர்த்து ஒரு கப் வரும். நீங்க சுண்டல் வசூலுக்குப் போகும்போது ரங்கு வீட்டிலே சும்மாத் தானே ஈ ஓட்டிட்டு இருப்பார். அவரைத் தக்காளியும், வெங்காயமும் நறுக்கி வைக்கச் சொல்லிட்டுப் போங்க. நறுக்கி வச்சிருப்பார். வந்து ஏதோ புதுசாப் பண்ணித் தரப் போறீங்கனு ஆவலாவும் இருப்பார். அவர் கிட்டே ஒண்ணும் சொல்லிக்க வேண்டாம். ஃப்ரிஜைக் குடைஞ்சு பார்த்து முதல்நாள் இட்லிக்குத் தொட்டுக்க அரைச்ச தேங்காய்ச் சட்னி இருக்கா பாருங்க. இல்லாட்டியும் பரவாயில்லை. சுண்டலிலேயே தேங்காய் போட்டிருப்பாங்களே.

வேறே என்ன சட்னி இருக்கு? தக்காளி, வெங்காயம், புதினா?? எதுவா இருந்தாலும் பரவாயில்லை. எதுவுமே இல்லையா? காலம்பர வச்ச குழம்பு? ரசம்? அது போதும்! இப்போ நீங்க செய்ய வேண்டியது கொஞ்சமாவது பந்தா காட்டணும். அப்பா, ஒரே அலுப்பு, எல்லா வீட்டுக்கும் போயிட்டு வரதுக்குள்ளே முடியவே இல்லைனு சொல்லிக்கணும். நிஜமாவே முடியாதுதான். என்றாலும் அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாச் சொல்லிக்கணும். அப்புறம் மெதுவா ரங்குவையும், குழந்தைங்க இருந்தா அவங்களையும் பார்த்து ஏதாவது சாப்பிட்டீங்களானு அன்போட கேட்கணும். "இல்லை, உனக்காகத் தான் வெயிட்டீஸ்"னு பதில் வரும். அவங்க நினைப்பு உங்களை சந்தோஷப் படுத்தறதா. என்றாலும் அதைக் காட்டிக்காமல் அடுப்படிக்குப் போங்க. 

அடுப்பிலே வாணலியை வச்சு, எண்ணெயை ஊத்துங்க. ஜீரகம், சோம்பு(பிடிச்சா) தாளிங்க. சோம்பு பிடிக்கலைனா வேண்டாம். அப்புறம் மஞ்சள் பொடி சேர்த்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்குங்க. தக்காளியையும் சேர்த்து நல்லா வதக்கவும். இரண்டும் வதங்கியதும், மொத்தமாய் வசூலான சுண்டலை அதிலே கொட்டவும். இனிப்புச் சுண்டல் இருந்தாலும் கவலை இல்லை. இந்த மாதிரி மசாலா ஐடங்களுக்குக் கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் நல்லாவே இருக்கும் ருசியும், மணமும். காலம்பர வச்ச சாம்பாரோ, ரசமோ, அல்லது வத்தக் குழம்போ இருந்தால் அதையும் அதில் சேர்க்கலாம். இப்போ முக்கியமாய்க் கவனத்தில் கொள்ளவேண்டியது இதுக்கு மேலே உப்போ, காரமோ போட்டீங்க தொலைஞ்சீங்க நீங்க! அதனால் கவனமாய் அதைத் தவிர்க்கவும்.

காலைக் குழம்பு எதுவும் இல்லையா? பரவாயில்லை. மிச்சம் வச்சிருக்கும் சட்னியைத் தேவையான அளவு சேர்க்கவும். அதுவும் தேங்காய்ச் சட்னியும், தக்காளிச் சட்னியும் இருந்தால் சூப்பரா இருக்கும். அதுவும் இல்லையா? எதுவுமே வேண்டாம். அப்படியே நல்லாக் கொஞ்ச நேரம் வதக்கிட்டு, கரம் மசாலாப் பொடியைத் தூவிட்டுப் பச்சைக் கொத்துமல்லி, நறுக்கிய வெங்காயம் போன்றவைகளைப் போட்டு அலங்கரித்துப் பரிமாறலாம். புதுசா விருந்தினர் வந்தால் அவங்களுக்குச் செய்து போட்டு இது தான் நவரத்தினக் குருமா, சீச்சீ,நவராத்திரிக்குருமானு சொல்லிடலாம். கணவர் கிட்டே இன்னிக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மெனுனு சொல்லிடலாம். நவரத்தினக் குருமா ஒரு ப்ளேட் சுமாராக 75ரூக்கு மேல் என்று விசாரித்ததில் தெரிய வந்தது. அதனால் அதுக்கான பைசாவை முக்கியமாய் உங்க ரங்குவிடமிருந்து வசூலிக்கவும். சுண்டல் வசூலைவிட இந்த வசூல் முக்கியம். நினைவிருக்கட்டும்.

63 கருத்துகள்:

  1. இருந்தாலும் பில்டப்பு கொஞ்சம் ஓவர் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஃகி,இஃகி,இஃகி/ இது வருதோ வரலையோ!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நேற்று விபரம் அறிந்தேன். அறிந்ததிலிருந்து என் மனமும் மிகவும் வருத்தப்பட்டது. தங்களின் மன வேதனைகளை காலந்தான் துணையாக நின்று கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற வேண்டும். அதற்காக இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. அன்பின் தேவகோட்டைஜி மன ஆறுதல் பெற வேண்டும். அன்னையின் அருள் என்றும் இருக்கும்.

      நீக்கு
  2. அன்பின் கில்லர் ஜி அவர்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  3. ஹிஹிஹிஹி, அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. இப்போல்லாம் திங்கட்கிழமை செய்முறைக்கு யாரும் வரதில்லை போல!

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதலில் போட்ட கருத்து மெயில் பாக்ஸில் மட்டும்.// Geetha Sambasivam ""திங்க"க்கிழமை : நவராத்திரி குருமா - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    ஹிஹிஹிஹி, அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.// இதுவாவது தெரியுமா?

    பதிலளிநீக்கு
  7. இந்தச் செய்முறையைப் பார்த்து அசந்து போனவங்க எல்லாம் கருத்தைத் தெரிவிச்சுட்டுப் போங்க. (யாரையுமே காணோம்) நான் பின்னர் வரேன். இன்னிக்கு அமாவாசை என்பதால் வேலைகள்.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

    இன்றைய திங்கப் பதிவு அருமை. நவரத்னா குருமாவை விட நவராத்திரி குருமா எப்படிச் செய்வது என்ற தங்களின் நகைச்சுவைகளை ரசித்துப் படித்தேன் . (இப்போது இருபது தினங்களுக்கு மேலாக தினமும் கால்வலிக்காக இரவு போடும் தூக்க மாத்திரை கலந்த மாத்திரையின் வழக்கப்படி தூக்கத்தைக் கூட நவரத்தினங்களின் பளபளப்பு கண்களை கூசி எழுப்பி படிக்க வைத்து விட்டது. என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஹா.ஹா.ஹா நவரத்னாவுக்கு நன்றி.)

    /கணவர் கிட்டே இன்னிக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மெனுனு சொல்லிடலாம். நவரத்தினக் குருமா ஒரு ப்ளேட் சுமாராக 75ரூக்கு மேல் என்று விசாரித்ததில் தெரிய வந்தது. அதனால் அதுக்கான பைசாவை முக்கியமாய் உங்க ரங்குவிடமிருந்து வசூலிக்கவும். சுண்டல் வசூலைவிட இந்த வசூல் முக்கியம். நினைவிருக்கட்டும்./

    ஹா.ஹா.ஹா. நல்ல ஐடியா. தங்கள் எழுத்தை மிகவும் ரசித்தேன். ஆனால்,
    எங்கள் வீட்டில் நவராத்திரிக்கு ஒவ்வொரு வீடாக சென்று இப்படி சுண்டல் கலெக்ஷனுடன் நான் வந்தாலும், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்க மாட்டார்கள். பதிலாக கொண்டு வந்த சுண்டல்களை "இப்போதைக்கு இவைகள் எங்கள் பசியாற்றட்டும். அதற்குள் ஏதாவது செய்து கொண்டு வா" என என்னை கிச்சனுக்குள் அனுப்பி விடுவார்கள். ஆக என் கையிலுள்ள சுண்டலும் எனக்கு டேஸ்ட் பார்க்கக்கூட சந்தர்ப்பம் தராமல் மறைந்து விடும். :) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்ம் கமலா, படிக்கவே வேதனையா இருக்குன்னாலும் ஒரு காலத்தில் அதாவது பதினைந்து/இருபது வருடங்கள் முன்னர் எனக்கும் இதே நிலைமை தான். யாரும் உதவிக்கு இருக்க மாட்டார்கள்/ இருந்தாலும் செய்ய மாட்டார்கள். எல்லோருமாய் மொட்டை மாடிக்குப் போய்க் கதை பேசிக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும்/குழந்தைகள்/ரங்க்ஸ் ஆகியோர் கீழே இருப்போம். நான் வேலை செய்து கொண்டே குழந்தைகள் பாடங்களையும் கவனிப்பேன். ட்யூஷனும் எடுப்பேன். பின்னாட்களில் எல்லோரும் அவரவர் குடும்பம் எனச் சேமிக்க ஓட எங்களுக்கு ஓய்வும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கிடைச்சது. மாமாவும் கொஞ்சம் கொஞ்சம் உதவ ஆரம்பிச்சார். பெண் கல்யாணம் ஆகிப் போகும்வரை உதவினாள். பையர் ஹாஸ்டலில் இருந்து லீவில் வரச்சே எல்லாம் உதவி செய்வார்.

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் ஆரோக்கியத்துடன் பரிபூரண
    வாழ்வு வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. ஒரு குருமாவின் கதை என்று பூச்சூடி பொட்டு வைத்து செவ்வாய்கிழமைக்கு அனுப்பி வைத்திருக்கலாம்..

    தலைப்பு இப்படியும் இருக்கலாம்... யார் நம்மைக் கேட்பது?..

    குருமாவும் குல்ஃபியும்

    கோட்டு போட்ட குருமா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! தமி! குருமாவின் கதை என்று எழுதலைனாலும் கதையாகவே எழுதி வைச்சது தான். ஆங்காங்கே வெட்டி, ஒட்டிக் கூட்டிக் கழிச்சுப் பின்னர் சமையல் பதிவாக மாற்றினேன்.

      நீக்கு
    2. தம்பி என எழுதினால் எத்தனை தரம் எழுதினாலும் நான் "தமி" என்றே போடுவேன் என கூகிளார் அறிவிப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  12. அன்பு கீதாமாவின் நவராத்திரி குருமா டாப் க்ளாஸ்.
    திப்பிசத்திலயும் திப்பிசம் மஹா திப்பிசம்.!!!!!

    என்ன ஒரு கற்பனை!!!!!
    நகைச்சுவை கூடிக் குருமா வாகப் பரிமளிக்கும் சுண்டல் மகிமை இன்றுதான் அறிகிறேன்:))
    ஹாஹாஹ்ஹா.


    அத்தனையும் சார் நறுக்கி வச்சதா!!! ஆஹா.

    அருமையான செய்முறைக்கும் அதை நவரசத்துடன் சொல்லி இருப்பதும்
    மனம் நிறைய சந்தோஷம்.
    வாழ்த்துகள் மா.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வல்லிம்மா இப்படி நம் வீட்டில் சில விசேஷத்தில் காலை அல்லது மதியம் மீறும் காய்கள் கிரேவி ஆகிவிடுவதுண்டு. அல்லகது கதம்சாதம் ஆகிவிடுவதுண்டு!!!!!! நான் ஓடி போறேன் நெல்லை வந்து என்னைப் பிடிப்பதற்குள்!!! ஏற்கனவே நம் வீட்டுக் பக்கம் வர யோசிப்பவர், இதை வாசிக்கறப்ப அவ்வளவுதான் வடக்குப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார்!!!!!! மீ எஸ்கேப்.

      கீதா

      நீக்கு
    2. இங்கே வந்தப்புறமா இந்த விசேஷங்கள் போது செய்யும் சமையல் வீணாவதில்லை. கீழே செக்யூரிடி 3 பேர், இஸ்திரி போடும் பெண்/கணவர், எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்/கணவர் என இருப்பதால் அனைவருக்கும் கொடுத்துடுவோம்.

      நீக்கு
    3. ஆனாலும் சில சமயங்கள் மோர்க்குழம்பு தஹி ஆலுவாக மாறும். காலை பண்ணின பொரிச்ச கூட்டு குருமாவாக ஆகலாம். அவியலும் மிஞ்சினால் குருமா தான். :))))

      நீக்கு
    4. கீதா என்ற பெயருடையவர்கள், என்ன என்ன பின்னூட்டங்கள் எழுதறாங்க என்று படித்துப்பார்த்து, அதுக்குன்னு ஒரு டைரி மெயிண்டெயின் செய்கிறேன். யார் வீட்டில், எது சாப்பிடக்கூடாது, எது பாஸிபிள் திப்பிசம் என்றெல்லாம். சில நேரங்களில், இத்தனை பக்கங்கள் நிரம்பிவிட்டதே, பேசாமல், அவங்க வீட்டுக்குப் போனால், நான் தோசை, இட்லி இரண்டைத் தவிர, அதுவும் தொட்டுக்க மிளகாய்ப்பொடி மட்டும்தான், வெளியிடங்களில் சாப்பிடுவதில்லை என்று சொல்வது சுலபமே என்று தோன்றுகிறது. ஹா ஹா

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை, இந்தத் திப்பிசம் எல்லாம் பெரும்பாலும் எங்க வீட்டு மனிதர்களுடன் மட்டுமே. உறவோ/நட்போ எங்க வீட்டுக்கு வந்தால் புத்தம்புதிதாகவே சமைப்போம். போன வெள்ளி வந்திருந்த ஓர் தம்பதியருக்கு சதசதயம், வெள்ளரிப் பச்சடி, உ.கி.கா.க. வா.வறுவல், சின்ன வெங்காயம், முருங்கை போட்டு சாம்பார், தக்காளி ரசம்னு சமைச்சுப் போட்டேன்.

      நீக்கு
  13. இனி எங்க போய்ப் பாட்டெழுதிக் கொடுத்தாலும், இது நீ எழுதினயா இல்லை மண்டபத்துல வேற யாராவது எழுதிக் கொடுத்தாங்களான்னு கேட்பாங்களே மொமன்ட்.

    நவரத்ன குருமால போட்டிருக்கிறதில் எது உங்க வீட்டுது, அதில் எது இப்போ பண்ணினது, எத்தனை வீடுகளில் செய்தது இதில் கலந்திருக்கிறது, குருமாவே இப்போ கலந்ததா இல்லை நவராத்திரி எட்டு நாளும் கலெக்ட் பண்ணி அப்போ அப்போ கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ததா என்றெல்லாம் மனதில் எழும் கேள்விகளுக்கு எழுதியவர் பதில் சொல்வாரா இல்லை புதன் கேள்வியாக அனுப்பணுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தொண்ணூறுகளில் நாங்க ஜாம்நகரில் இருந்தப்போ அங்கே நடந்த நவராத்திரி கலாட்டாக்களைப் பற்றிச் சொல்லும்போது சும்மா எழுதி வைச்சுப் பின்னர் மங்கையர் மலருக்கும் அனுப்பி இருந்தேன். ஜாம்நகர் நவராத்திரி கலாட்டாக்களைப் பற்றி ஆரம்ப காலத்தில் பதிவுகள் போட்டிருந்தேன். அதில் ஒரு வேளை கிடைக்குமோ என்னமோ! போய்த் தேடிப் பார்க்கணும்.

      நீக்கு
    2. ஜாம்நகரில் ஒரு நாளைக்குக் குறைந்தது 10 வீடு போக வேண்டி இருக்கும். பத்து வீடுகளிலும் கொ.க. சுண்டல் கொடுத்திருந்தாலும் எது யார் வீட்டுக் கொ.க.சு. எனக் கண்டு பிடிப்பேனாக்கும். அதில் நான் டாக்டரேட்டே வாங்கி இருக்கேன். ஆகவே நம்ம வீட்டுச் சுண்டல், எதிர் வீட்டுச் சுண்டல், இந்த இந்த வீட்டுச் சுண்டல் போட்டிருக்கேன் என்றெல்லாம் புள்ளி விபரங்கள் ஜமாய்ச்சுட மாட்டேன்?

      நீக்கு
    3. கொசுறு: இப்போல்லாம் இம்மாதிரிப் பண்ண முடியலை. நிறைய ஆயிடுமே! எங்க ரெண்டு பேருக்கு ஜாஸ்தி இல்லையா? அதனால் சாயங்காலமே தயிர்/மோர் சாதம் பிசைந்து மாமாவுக்கு டைனிங் டேபிளில் வைச்சுட்டுத் தொட்டுக்க ஊறுகாயோ/குழம்போ வைச்சுடுவேன். இங்கே வெற்றிலை,பாக்குக்கு ஆட்கள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் அவர் நேரத்துக்கு அவர் சாப்பிட்டுப்பார். பின்னால் பிரச்னை வராது.

      நீக்கு
    4. ஜாம்நகர் அழகான நகரம் இல்லையா? லகோட்டா ஏரி..அரண்மனை...எல்லாம் உண்டே. உறவினர் எடுத்த ஃபோட்டோக்கள் எடுத்ததில் பார்த்திருக்கிறேன். இந்த ஜாம்நகரில் இப்போது ரிலையன்ஸ் பெரிய விலங்கியல் பூங்கா உருவாக்கி டவுன்ஷிப்பும் உருவாக்கி உள்ளது அங்கு மகனின் தோழன் தோழி வேலை செய்கிறார்கள். ரொம்ப அழகாக இருக்கு என்றும் நல்ல அமைப்பு என்றும் சொன்னார்கள். என்னை அங்கு வந்து தங்கி இருந்துவிட்டுப் போகவும் அழைத்தார்கள். இப்போது அதற்கான சூழல் இல்லையே.

      கீதா

      நீக்கு
    5. இப்போல்லாம் அதிகப்படி சுண்டல்கள் எல்லாம் கீழே செக்யூரிடியைக் கூப்பிட்டு உடனே கொடுத்துடுவோம்.

      நீக்கு
    6. தி/கீதா, நாங்க இருக்கும்போது ரிலயன்ஸ் டவுன்ஷிப் வரலை. 95 ஆம் ஆண்டில் ஜாம்நகரில் இருந்து சென்னை மாற்றலில் வந்தோம். ஆனால் எங்க பையர் அங்கே தான் மோர்வியில் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார். அங்கேயே காம்பஸில் எல்&டியில் தேர்வாகி பரோடாவில் 3 வருஷங்கள் வேலையும் பார்த்தார். ஆனால் அதன் பின்னர் நாங்க ஜாம்நகருக்கு மட்டுமில்லாமல் பரோடா, துவாரகா, சோம்நாத், அஹமதாபாத் போன்ற ஊர்களுக்கும் அக்கம்பக்கம் அருகில் உள்ள அம்பாஜி கோயில், மாத்ரு கயா போன்ற இடங்களுக்கெல்லாம் போயிருக்கோம். கடைசியா குஜராத் போனது 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்.

      நீக்கு
  14. செய்முறையை நன்றாக எழுதியருக்கீங்க. இதையே சில பல மாறுதல்களுடன் சிறுகதையாக எழுதியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுகதையாக எழுதியது தான். கீழே தி/கீதாவுக்குச் சொல்லி இருக்கேன் பாருங்க.

      நீக்கு
  15. நவராத்ரி என்பதைவிட நவரத்ன குருமா என்று சொல்வது பெட்டரா இருக்கு இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, உண்மையான தலைப்பு அது தான். நவராத்திரிக்குருமாவா? நவரத்தினக்குருமாவா என்பதே! சாப்பிடலாம் வாங்க தளத்திலும் இந்தத் தலைப்பில் தான் போட்ட நினைவு.

      நீக்கு
  16. ஹாஹாஹாஹா கீதாக்கா இப்படி நம்ம சீக்ரெட் எல்லாம் பப்ளிக்கா போட்டு உடைக்கலாமோ!!!

    நானும் இதேதான் செய்வது உண்டு. ஆனால் நம் வீட்டில் சமாளிப்பு எதுவுமே வேண்டாம்...ஹிஹிஹிஹி

    வீட்டினர் இப்படி வருவதை வீணாக்காமல் செய்வதையும் சாப்பிடுவார்கள். மாலைக்குள் என்றால் இரவுக்கு 6.30 மணிக்குள் செய்துவிடுவதுண்டு. ராத்திரி ஆகிவிட்டால் நம் வீட்டில் ராத்திரி தாமதமாகச் சாப்பிடும் பழக்கம் இல்லாததால், ஃப்ரிட்ஜில்/ஃப்ரீசரில் வைத்து விட்டு காலை உணவுக்கு இது க்ரேவி ஆகிவிடும்!!!!!! ஆனால் உள்ளே வைக்கும் முன் எல்லாம் நன்றாக இருக்கிறதா மறுநாள் நன்றாக இருக்குமா என்று பரிசோதித்துவிட்டு வைக்கப்படும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ரங்க்ஸின் கசின் வீட்டில் இப்படித்தான் வாயே திறக்காமல் (கிடைக்கும் இடைவெளியில்) சாப்பிடுவாங்க. இங்கே நேற்று மாலை நன்கு வதக்கிக் கொத்துமல்லியையும் வதக்கிச் செய்த தக்காளிச் சட்னி இன்னிக்கு நோ! நான் தான் நான் மட்டுமே தான் போட்டுப்பேன். :(

      நீக்கு
  17. கீதாக்கா இப்படி நீங்க பப்ளிக்கா சொல்லிவ்ட்டதால் ஒரு வேளை நெல்லைகிட்ட மாட்டிக்க வைச்சுட்டீங்களே!!!!!

    நம் வீட்டில் எல்லாம் சாப்பிடாத நெல்லை ஒரு வேளை நம் வீட்டுப் பக்கம் வந்தால் நான் ஃப்ரெஷ்ஷாகவே சுண்டல் கிரேவி செய்திருந்தாலும் கூட நெல்லை, "கீதா ரங்கன் க்கா, இது மீந்து போன சுண்டல் கிரேவியா"ந்னு கேட்டு ஹாஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன? நாம் ஶ்ரீமத் ராமானுஜாசாரியாரின் பரம சிஷ்யை! நாம் அறிந்த திப்பிசம் அனைவரும் அறிக என்னும் நல்லெண்ணம் தான் காரணம். :)))))

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹாஅ அப்ப்டிப் போடுங்க!!!! கீதாக்கா

      கீதா

      நீக்கு
  18. அக்கா ஹாஹாஹா காமெடி கதை போல நல்லா சொல்லிட்டீங்க!!!

    நெல்லைகிட்ட மாட்டிக்கிட்டேன் இனி என் திங்க பதிவு வந்தது என்றால்...ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி/கீதா, உண்மையில் நகைச்சுவைக் கதையாக எழுதி நவராத்திரிக் குருமாவா? நவரத்தினக்குருமாவா எனப் பெயர் வைத்து மங்கையர் மலருக்கு அனுப்பி இருந்தேன். அது நான் எழுத்தாளி ஆவதற்கு முன்னால். ஒரு பதிலும் இல்லை. பின்னர் நான் எழுதினதில் சிலவற்றை எடிட் செய்துவிட்டு "சாப்பிடலாம் வாங்க" பக்கத்தில் செய்முறைப் பதிவாகப் போட்டேன். ஏதோ கொஞ்சம் ஓடியது. அதைத் தான் இங்கே வெறும் நவராத்திரிக்குருமா என்னும் பெயரில் எ.பியின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அனுப்பி வைச்சேன். ஶ்ரீராம் இன்னிக்குப் போட்டிருக்கார். :))))

      நீக்கு
    2. கீதாக்கா உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் ம ம வில் இப்படித்தான் பெரும்பாலும் நகைச்சுவைக்கதைகள் என்று வந்ததை நான் எப்போதேனும் உறவினர் வீட்டிற்குச் சென்ற போது அங்கு பெரும்பாலும் மம சரியாக மாதத்திற்கு ஏற்ப அடுக்கி வைத்திருப்பார்கள், எடுத்து வாசித்ததுண்டு.

      இது ஏன் பிரசுரமாகவில்லை என்று வியப்பு. அதுவும் பல வருடங்கள் முன்பே எழுதியிருக்கீங்க!!

      ஹூம் எல்லாத்துக்கும் லாபியிங்க் வேண்டும் போல!

      கீதா

      நீக்கு
    3. உண்மை தி/கீதா. தெரிஞ்சவங்க இருக்கணும். இதை நான் பல விஷயங்களில் அனுபவித்திருக்கேன். பள்ளியில் ஸ்போர்ட்ஸ் போட்டியின் போதும் இப்படித்தான் முதலிடம் வந்தும் பரிசு இன்னொரு பணக்கார வீட்டுப் பெண்ணிற்குக் கிடைத்தது. :(

      நீக்கு
  19. கதம்ப குருமா அசத்தி விட்டீர்கள் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா. நமஸ்காரங்கள்.

      நீக்கு
    2. உங்களுக்குக் கொடுத்த பதில், காணோம். காணவே காணோம். காக்கா உஷ்! :(

      நீக்கு
    3. பாராட்டுக்கு நன்றி அம்மா. அது என்னமோ ப்ளாகருக்கு வருந்தினால் புரியும்போல. உடனே வெளியிடுகிறது. இல்லைனால் ஒரே அடம்!

      நீக்கு
    4. இங்கேயும்! காமாட்சி அம்மா உங்க மெயில் பாக்சுக்கு என்னோட பதில்கள் வந்திருக்கும்.

      நீக்கு
  20. நாம் கருத்து எழுதியதில் முன் பாதி அரோகரா ஆகிவிட்டது ஏதோ ஒரு வரியாவது வந்திருக்கிறது நவராத்திரி குருமா வெங்காயம் சேர்த்தது மிக அருமை அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அநேகமா அனைவரின் பதிவுகளிலும் இப்படி ஆகிறது. அதனால் பதிவுகளுக்குப் போய்ப் பதில் சொல்லவே யோசிக்க வேண்டி இருக்கிறது.

      நீக்கு
    2. அட! ப்ளாகர் பிட் பிட்டாகவும் போடுகிறதா!!!!

      கீதா

      நீக்கு
    3. இதுக்கு நான் காமாட்சி அம்மாவுக்குச் சொன்ன பதில் காக்கா ஊஷ்!

      நீக்கு
    4. காமாட்சியம்மா.... எந்த உணவிலும் வெங்காயத்தை அரைத்து அல்லது நிறைய கட் பண்ணிப்போட்டுவிட்டால், உணவின் originaஐ மறைத்துவிடும் என்று தோன்றுகிறது ஹா ஹா ஹா

      நீக்கு
    5. வெங்காயத்தை விரும்புவர்கள் போட்டுக் கொள்ளட்டுமே நமக்கு என்ன நாம் போடாமல் செய்து கொள்ளலாம் அதுதான் என் கருத்து வேறொன்றுமில்லை அன்புடன்

      நீக்கு
  21. நவரத்தின குருமா நவரசமான குருமா .

    பதிலளிநீக்கு
  22. மாதேவி உங்கள் பின்னூட்டம் அருமை. நவரத்தின இல்லை இல்லை நவராத்திரி குருமா , நவரசமான குருமாவாகி விட்டது.
    மதியம் ரசம் , குழம்பு, மீதியான சட்னிகள் என்று மிக ரசமாக சொல்லி இருக்கிறார்.

    நான் மட்டுமே கொலு வைப்பேன் அதனால் சுண்டல் வசூல் ஆகாது.
    மதுரை வந்த பின்னும் யாரும் அழைக்கவில்லை.நான் மட்டுமே அழைப்பேன், அதனால் எங்கள் வீட்டிலும் சுண்டல் சரியாகி விடும் மீதம் ஆகாது.
    அதனால் உங்கள் செய்முறையை ரசித்து கொள்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையில் இருந்தவரைக்கும் சாயங்காலமாய்க் கொலுவுக்குக் கிளம்பினால் வீடு திரும்ப இரவு ஒன்பது ஆகிடும். சுண்டலை வைத்துத் திப்பிசங்கள் எல்லாம் அம்மா பண்ணினதில்லை. பண்ணினாலும் அப்பாவுக்குப் பிடிக்காது. ஒவ்வொரு வீட்டுச் சுண்டலாகச் சாப்பிட்டுப் பார்த்து ரசித்து, விமரிசித்து இரவு உணவையும் முடித்துக் கொண்டு கோயில்களுக்குக் கிளம்பிடுவோம். திரும்பி வர இரவு பனிரண்டுக்குக் கிட்டத்தட்ட ஆகிவிடும். பள்ளியில் காலாண்டுத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும். ஆனாலும் அதிகம் சிரமம் தெரிந்ததில்லை.

      நீக்கு
  23. எத்தனை திப்பிசம்..... :)

    இந்த திப்பிச வேலை எங்கள் வீட்டில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சப்ஜியாக செய்தது உண்டு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட், சப்பாத்திக்குத் தான் நானும் செய்தேன்/செய்வேன். :)

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!