செவ்வாய், 3 மே, 2022

சிறுகதை - வரம் - துரை செல்வராஜூ

 வரம்

துரை செல்வராஜு 
*******

ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் சூழ்ந்திருப்பதைப் போல் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது - ​ அந்தத் தெருவின் அடையாளமாகிய கற்பக விநாயகர் கோயில்...

நடுத்தரத்திலும் சற்று பெரியது..​  நூறு பேர் கூடி இருக்கும்படிக்கு பரந்து விரிந்த  முன் மண்டபம்..

அந்த மாலை வேளையில் சாமி தரிசனத்திற்காக வருபவர்களைத் தவிர்த்து தனியாக ஒரு கூட்டம்.. ஊடாக அங்குமிங்கும் ஓடித் திரியும் சிறுவர்கள்..

இதற்கிடையே வடக்குப் பக்கமாக சில இளைஞர்கள்..  மாவிலையும் தென்னை ஓலையும் கொண்டு தோரணம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.. பந்தல் அலங்கரித்து அதில் கட்டுவதற்காக வாழைக் கன்றுகள்..

தங்க நிற ஜரிகைத் தாள் ஒட்டப்பட்டிருந்த பலகைகள்  ஒன்றிணைக்கப்பட்டு அவை படிக்கட்டாக உருவாகியிருந்தன..  அந்தப் படிக்கட்டின் உச்சியில் நிறுவுவதற்காக பெரியதான ஐயப்பன் படம் -  துளசி மணி மாலைகளுடன்.. அருகில் ஏற்றி வைப்பதற்காக குத்து விளக்குகள்.. கூடவே ஆரத்தித் தட்டும் பித்தளை அகல் விளக்குகளும்..நாளைக்கு கார்த்திகை முதல் தேதி..  அதற்காகத் தான் இவை எல்லாமும்..

எல்லாவற்றையும் மேற்பார்வை செய்தவாறு நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் - கழுத்தில் ருத்ராட்ச மாலை, காவித் துண்டு, கறுப்பு வேஷ்டியுடன்..

" சாமி.. அங்க பாருங்க!.."

அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த சிறுவர்களின்​ குரல் கேட்டு நிமிர்ந்தவர் கோயிலின் வாசலை நோக்கினார்..

" சாமி.. நாங்க வரலாங்களா!.. "​  கை கூப்பியபடி இளம் பெண்கள் இருவர்.. பதினெட்டு மற்றும் பன்னிரண்டு வயதுடையவர்கள்..

" வாங்க.. தாயி.. வாங்க!.. " கனிவுடன் உள்ளே அழைத்தார் அவர்..

" சாமி.. சரணம்!.. " - என்றபடி  உள்ளே வந்த இருவரும் சந்நிதி விநாயகரை வணங்கி விட்டு, பெரியவருக்கு முன்பாக மண்டியிட்டு பஞ்சாங்கமாக நமஸ்கரித்தனர்...அருகிருந்த தட்டிலிருந்து திருநீறை எடுத்து அந்தப் பிள்ளைகளுக்குப் பூசி விட்டபடி -​ " சொல்லுங்க தாயி!.. " என்றார்..

" நீங்க தான் குருசாமியா?.. "

" குருசாமி விடிய காலை..ல தான் வருவார்!.. "

" சாமி... நாங்க அந்த மூணாவது வீட்ல தான் குடி இருக்கிறோம்.. அப்பா பள்ளிக்கூட ஆசிரியர் .. அம்மா வீட்ல தான்.. நான் புவனி.. இவ.. தங்கை ஜனனி.. "

இருவரையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்...

புவனா தொடர்ந்தாள்..

" போன மாசம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சி.. "

" ஐயப்பா!.. " பெரியவர் முகத்தில் இரக்கமும் கருணையும் பரவின..

" மெடிக்கல் லீவு போட்டுட்டு ட்ரீட்மெண்ட்... ல இருக்காங்க.. கழுத்து..ல வலி..  கால் ஊன்றி நடக்க முடியலை.. முழங்கால் எலும்பு தேஞ்சு போயிருக்காம்.. இதயத்துக்கு எந்த அதிர்ச்சியும் இருக்கக் கூடாது.. ன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க.. "

" என்னால ஆக வேண்டியது என்னம்மா?. பூஜையில உங்க அப்பா பேரைச் சொல்லி ஐயப்பன் கிட்டே வேண்டிக்கிறேன்.. "

" ரொம்ப நன்றிங்க சாமி.. இருந்தாலும்  உங்கக்கிட்ட ஒரு வரம் கேட்டு வந்தோம்!.. "

" வரமா! "

" ஆமாங்க சாமி!.. ஐயப்ப சாமி பூஜை... ன்னா காலை.. லயும் சாயங்காலமும் பெரிய சத்தமா  ஸ்பீக்கர்..ல  பாட்டு எல்லாம் போட்டுட்டு அப்புறமா பஜனை பாடுவாங்க.. பார்த்துருக்கோம்.. " அந்தப் பெண் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்..

சொல்வதெல்லாம் சரி தான்... என்பதைப் போல தலையை அசைத்த அவர் - " நான் உங்களுக்கு என்னம்மா செய்யணும்?.. " - என்றார்..

" நாங்க இந்த தெருவுக்கு குடி வந்த மூனு மாசமா நாள் தவறாம ரெண்டு வேளையும் எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வந்து கோயில் வாசலக் கழுவி விட்டு கோலம் போட்டுக்கிட்டு இருக்குறோம்.. இனிமே சாமிகளுக்கு எடைஞ்சல் இல்லாம இந்த மண்டபம் எல்லாம் கோலம் போட்டுத் தர்றோம்.. "

" ஐயப்பன் விருப்பம் போல ஆகட்டும்மா!.. "

பேசிக் கொண்டிருந்த போது கையில் பெரிய எவர்சில்வர் வாளி, பேப்பர் கப்புகளுடன் புவனாவின் அம்மா கோயில் வாசலில் ..

" சாமி... எல்லாருக்கும் காஃபி கொண்டாந்துருக்காங்க அம்மா!.. "

" ஐயப்பா!.. உங்களுக்கு ஏனம்மா சிரமம்!... சாமீ.. மணிகண்டா.. இங்கே ரெண்டு பேர் வாங்க.. " - குரல் கொடுத்தார் பெரியவர்..

அதற்குள் படியேறி வந்த புவனியின் அம்மா காஃபி வாளியை பக்கத்தில் வைத்து விட்டு பிள்ளையாரை கும்பிட்டு விட்டு வந்தார்கள்..

" சொல்லுங்கம்மா.. "

"  அந்த ஐயப்பன்தான் எல்லாம் எங்களுக்கு.. இந்தப் புள்ளைங்க முகத்துக்காக.. "

அதற்கு மேல் அவர்களால் பேச இயல வில்லை.. கண்ணீர் பொங்கியது..

மனதைத் திடப்படுத்திக் கொண்டு - முதல் குவளை காஃபியை பிள்ளையார் சந்நிதி அருகிலும்  அடுத்த குவளையை ஐயப்பன் படத்தருகிலும் வைத்தார்..

தொடர்ந்து அனைவருக்கும் காஃபியைப் பகிர்ந்தார்.. உடனிருந்த மணிகண்டப் பிள்ளைகள் கூடவே உதவினார்கள்..

" புவனியோட அப்பாவும் மூ​ணு​ வருசம் மலைக்கு வந்தவங்கதான்.. என்னவோ  இந்த வருசம் சிக்கலாகி இருக்கு.. ஐயப்பனுக்கு சேவை செய்ற பாக்கியம் மட்டுந்தான் எங்களுக்கு கிடைச்சிருக்கு.. ஹார்ட் அட்டாக்.. ல இருந்து அவங்க தப்பிப் பிழைச்சதே அவன் கருணை.. "

கண்களைத் துடைத்துக் கொண்டார் புவனியின் அம்மா..

" கவலப் படாதீங்கம்மா.. எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலும் வந்தருள் செய்றவன் ஐயப்பன்..  வீட்ல இப்படி ஆனதுக்கு வருத்தம் இருக்கும்.. "

ஒரு விநாடி நிறுத்தியவர் - " யார் கண்டது?.. அடுத்த வருசம் அவங்க கூட நாங்களும் மலைக்குப் போகிற மாதிரி கூட இருக்கலாம்.. எல்லாம் ஐயப்பன் செயல்!.. " - என்றபடி கை கூப்பினார் அவர்..

" உங்க வார்த்தையே எங்களுக்கு  சந்தோஷம்.. அப்புறம் - இருமுடி கட்றதுக்கு முன்னால  சாமிகள் எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்து பூஜை பண்ணி சாப்பிடணும்!.. "

தழுதழுத்த குரலில் புவனி விண்ணப்பித்துக் கொண்டாள்..

" ஆகட்டும்..மா.. சாமி சரணம்!.. "

" சரிங்க சாமி.. நாங்க புறப்படுறோம்.. "

அவர்கள் சென்றதும் -

" மணிகண்டா!... எல்லாரும் இங்கே வாங்க!.. " - அங்கிருந்தவர்களை அழைத்தார்..

அனைவரும் வந்து அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்..

" இந்த வருஷத்துல இருந்து பாட்டு பஜனை எல்லாம் கோயிலுக்குள்ளேயே வெச்சுக்குவோம்.. தெருவுல ஸ்பீக்கர் கட்டி சத்தம் கிளப்ப வேண்டாம்.. இது ஐயப்பன் திருவுளம்... சாமி சரணம்!.. "​  என்றார் தீர்க்கமான குரலில்..

" சாமியே சரணம் ஐயப்பா!.. " - என்றார்கள் அங்கிருந்த பக்தர்கள்..

அதன் பிறகுதான் அவருக்கு மனதில் பட்டது...

" அந்தப் பிள்ளைகள் ஏதோ வரம் என்று கேட்டார்களே!.. "

காதருகில் குரலொன்று கேட்டது..

" அதுதான் கொடுத்தாயிற்றே!.. "

***

115 கருத்துகள்:

  1. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. இன்று அக்ஷய திருதியை..
    அன்பும் அறனும் பெருகட்டும்..
    தானமும் தவமும் தழைக்கட்டும்..

    கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பல்வேறு சிரமங்களுக்கு இடையே கதையைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகு செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்.  வணக்கம்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. காக்கும் எம் காவலனே..
    காண்பரிய பேரொளியே!..

    ஐயப்பா!..
    அடைக்கலம் நீயே!..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கியம் பூரணமாக நம்முடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. @ வல்லியம்மா
      // இறைவன் அருள வேண்டும்.//

      அனைவரும் பிரார்த்திப்போம்..

      நீக்கு
  6. அன்பின் துரை செல்வராஜு அளித்திருக்கும் மனம் தொட்ட கதை.

    அத்தனை யதார்த்தமான வேண்டுகோளை
    மானசீகமாக உணர்ந்த குருசாமிக்கு எத்தனை
    நன்றி சொல்வது.

    இது பிரத்தியக்ஷமான பிரார்த்தனை ஆயிற்றே.!!!

    அந்தப் பெண்களும் , அவர்களின் அன்னையும்
    சொல்ல வந்ததை அவர் எப்படி உணர்ந்தார்!!!

    அதுவே ஐய்யப்பன் அருள்.
    சாமியே சரணம் ஐயப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லியம்மா அவர்களது வருகைக்கு மகிழ்ச்சி... இறை (ஐயப்ப) வழிபாட்டின் நோக்கமே பிறருக்கு உபகாரமாக இருப்பது தான்..

      தங்களது கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  7. பிள்ளைகள் இருவரும் குருசாமியை வணங்கும் காட்சியைப் பார்த்ததும் அழுது விட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பொருத்தமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது என்பதை நானும் பார்த்து ரசித்தேன்.

      நீக்கு
    2. நன்றி, நன்றி. எல்லாம் அய்யனருள்.

      நீக்கு
  8. கேளாமல் கேட்ட வரம்
    தானாய் த(வ)ந்த வரம்'
    சிறப்பு இந்த வாரம்

    பதிலளிநீக்கு
  9. செவிப்பறைகளில் அதிர்வை ஏற்படுத்தும் ஒலி பெருக்கிகளின் பிரச்சினை
    மிக மிக உண்மையான விஷயம். அதுவும், சமீபத்தில் நோயுற்ற கணவருக்காக
    அந்த மனையும், தந்தைக்காக மகள்களும்
    மனமார உருகி வேண்டுவது அப்படியே மனதில்
    உறைகிறது.
    அந்தக் கவலைகளை அன்பின் துரை எழுதி இருக்கும்
    அழகு மிக நெகிழ்வு.
    அண்மைக் காலத்தில் இது போல முக்கியமான

    சங்கடத்தை இத்தனை அழகாக யாரும் சொல்லி நான்
    படிக்கவில்லை.

    இந்த சத்தங்கள் அறுவை சிகித்சை பெற்ற என் தம்பிக்கும்
    நடந்தது அப்படியே என் நினைவில்.
    என்றும் வாழ்க வளமுடன் துரை.

    உன்னதமான கதைக் கருவுக்கு வாழ்த்துகள். அதைக் கையாண்ட விதத்துக்கும்
    வாழ்த்துகள்.
    இதே போல இன்னும் நிறைய நாங்கள் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ வல்லியம்மா

      //உன்னதமான கதைக் கருவுக்கு வாழ்த்துகள். அதைக் கையாண்ட விதத்துக்கும்
      வாழ்த்துகள்..//

      தங்களது வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  10. இந்தக் கதையை இன்றைய சூழலில் கண்டது மிகவும் ஆறுதலாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  11. படத்தின் பொருத்தம் பிரமிக்க வைக்கிறது.
    என்ன ஒரு தீனமான முகம். எத்தனை கருணை
    பொங்கும் குருசாமி.
    வாழ்த்துகள் கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  12. துரை அண்ணா கதை மிக நன்று. யதார்த்த வேண்டுகோள். சென்னையில் இருந்தவரை வீட்டருகில் ஆடி மாசம் அலறும் பாடல்கள் வீட்டில் பேசக் கூட முடியாத அளவிற்கு இருக்கும். குழந்தைகள் சொன்னதுமே புரிந்துவிட்டது. இனி அலறல் இருக்காது என்பது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகத்தில் வாழும் மக்களது சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இந்த மாதிரி செய்யும் இடையூறுகள் என்றைக்கு மாறுமோ!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோதரி..

      நீக்கு
  13. துரை அண்ணா, என் சிற்றறிவில் எழுந்தது, வரம் என்பது பெரிய அர்த்தமுள்ள சொல் இல்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  15. கருணையே வடிவான கணபதியின் அழகே அழகு..
    கலியுக வரதனின் தோரண மண்டபம் நெஞ்சில் பழைய நினைவுகளை மூண்டெழச் செய்து விட்டது..

    பதிலளிநீக்கு
  16. கதை மிக அருமை.பெண் குழந்தைகளின் (பணிவான வேண்டுகோள் )
    வரம் என்ன என்று புரிந்து கொண்டு கொடுத்து விட்டார்.

    //இந்த வருஷத்துல இருந்து பாட்டு பஜனை எல்லாம் கோயிலுக்குள்ளேயே வெச்சுக்குவோம்.. தெருவுல ஸ்பீக்கர் கட்டி சத்தம் கிளப்ப வேண்டாம்.. இது ஐயப்பன் திருவுளம்... சாமி சரணம்!.. "​ என்றார் தீர்க்கமான குரலில்..//

    ஐயப்பன் திருவுளம் தான்.

    //எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வந்து கோயில் வாசலக் கழுவி விட்டு கோலம் போட்டுக்கிட்டு இருக்குறோம்.. இனிமே சாமிகளுக்கு எடைஞ்சல் இல்லாம இந்த மண்டபம் எல்லாம் கோலம் போட்டுத் தர்றோம்.. "//

    குழந்தைகளின் சேவை பாராட்டப்பட வேண்டியது. வாழ்க வளமுடன்.
    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குழந்தைகளின் சேவை பாராட்டப்பட வேண்டியது. வாழ்க வளமுடன்..//

      இந்த மாதிரி இளம் வயதிலேயே ஆலயப் பணிகளில் ஆர்வத்துடன் தம்மை இணைத்துக் கொள்பவர்களைக் கண்டிருக்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. சாரின் ஓவியம் அருமை, இரண்டு பெண் குழந்தைகளின் பெரியவள், சின்னவள் ஆடைகளில் வித்தியாசம் காட்டி கவனமாக வரைந்து இருக்கிறார்.
    முதல் படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  18. செவ்வாய் என்றால் kgg சாரின் ஓவியம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. படம் நன்றாக உள்ளது. அடுத்த வாரமும் kgg சாரின் படம் ஒன்று எதிர் பார்க்கிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  19. இதயத்துக்கு எந்த அதிர்ச்சியும் கூடாது என்ற வரியை வாசித்தகோதே கதையன் முடிவு தெரிந்துவிட்டது. அது வீக் பாயின்ட்தான். ஆனால் குழந்தைகள் வரமே கேட்காமல் அதைச் செய்யும்படி கொண்டுபோனது அருமை.

    திருவிடைமருதூர் போன்ற கிராம, ஆனால் பெரிய கோவில் உள்ள இடங்கள் மனதில் வந்துபோனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதயத்துக்கு எந்த அதிர்ச்சியும் கூடாது என்ற வரியை வாசித்தகோதே கதையின் முடிவு தெரிந்து விட்டது. அது வீக் பாயின்ட் தான்.. //

      அது வீக் பாயிண்ட். அல்ல..
      இதைப் போன்ற எளிய கதைகளுக்கு அது இயல்பு.
      நிறைவை நோக்கிக் கதை பயணித்த விதத்தைக் காண்க..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. தெருவில் குழாய் கட்டுவது, பாடல்களை அலற விடுவது பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பக்தி முக்கியம் முன்னொரு காலத்தில் தூரத்திலிருந்து வரும் சீர்காழி, டிஎம்எஸ் போன்றவர்களின் பக்திப் பாடல்களைக் கேட்டு ரசித்தவன் நான். ஆனால் சமீப சில வருடங்களாக எல்லா இடத்திலும் அலற விடுவது பக்தியை மலினமாக்கி எல்லோருக்கும் தொந்தரவு தருவதாக அமைகிறது. பக்தியைவிட டாம்பீகம், மற்றவர்களைப்பற்றி மதிக்காத்து கூச்சல் இவைகளே முன்நிற்கின்றன.. அப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சில வருடங்களாக எல்லா இடத்திலும் அலற விடுவது பக்தியை மலினமாக்கி எல்லோருக்கும் தொந்தரவு தருவதாக அமைகிறது...//

      உண்மை.. உண்மை..

      நீக்கு
  21. வயசாச்சு, சப்தம் பிடிக்கலை போலிருக்கு என எண்ண வேண்டாம்.

    கலகருட சேவை, நாச்சியார் கோவிலில் நடக்கும்போது, இயற்கை சப்தமான, நாதஸ்வரங்கள் (7-8 பேர் வாசிப்பாங்க), தவில் ;அதுவும் பலர். அதில் குறிப்பாக ஒருவர் என் கண்முன் நிழலாடுகிறார்.. சாப்பிட்ட சாப்பாடு வயிற்றுக்குள் நர்த்தனம் ஆடும்படியான வாசிப்பு. பார்க்கும் கேட்கும் மக்களுக்கு சாமி வராத குறை)... ஆனால் இவை இயற்கை சப்தம். நம் மனதை உருக்கிவிடும். அந்தத் தெய்வீகச் சூழலில் ஒன்றிவிடுவோம். நிறைய படங்களும் காணொளிகளும் வெவ்வேறு சமயங்களில் எடுத்திருக்கிறேன்.

    இது எவ்வளவு இனிமை. ஸ்பீக்கரில் அலற விடுவது எவ்வளவு கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் இவை இயற்கை சப்தம். நம் மனதை உருக்கி விடும். அந்தத் தெய்வீகச் சூழலில் ஒன்றிவிடுவோம்..//

      தெய்வசந்நிதி.. அருமை..

      நீக்கு
  22. இந்த சப்ஜெக்டைப் பற்றி நிறைய எழுதலாம். இந்தக் கூத்துக்களைப் பார்த்து, பெங்களூரில் பக்கத்து ஏரியாவில் மைக்கை வைத்து நாள் முழுவதும், அல்லாஹு அக்பர்.... என்று இரண்டு வரிகளை, அங்கு குழுமியிருப்பவர்கள் ஒவ்வொருவரும் 108புறை சொல்லச் சொல்லும் கூத்தி நடக்கிறது. பக்தி லவலேசம் இல்லாமல் சமூகத்திற்கு எந்த அளவு தொந்தரவாக இருக்கலாம், எப்படி இடைஞ்சல் பண்ணலாம் என்று நினைப்பவர்களின் செயல்தான் ஸ்பீக்கரை அலற விடுவது, அது ஆடிக் கொண்டாட்டமோ இல்லை ஐயப்பன் கொண்டாட்டமோ இல்லை ஈத் கொண்டாட்டமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அல்லாஹு அக்பர்.... என்று இரண்டு வரிகளை, அங்கு குழுமியிருப்பவர்கள் ஒவ்வொருவரும் 108 முறை சொல்லச் சொல்லும் கூத்து நடக்கிறது. .. //

      அங்கும் இப்படித்தான்.. ஆயிரம் பேர் கூடிக் களைவார்கள்..

      நீக்கு
  23. கன்னிமூல கணபதியை இணைத்து (கதையில் அந்த வரி இல்லாதபோதும்) உருவாக்கின முதல் படத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  24. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. பானு அக்காவுக்கு கருத்து போடுவதில் ப்ளாகர் படுத்தல் என்பதால் கருத்து போகவே இல்லை என்று வருத்தப்பட்டு இங்கு தெரிவிக்கச் சொன்னார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. கௌ அண்ணா படம் நல்லா வந்திருக்கு பொருத்தமாக

    கீதா

    பதிலளிநீக்கு
  27. குழந்தைகள் சொல்வதிலிருந்தே முடிவு யூகிக்க முடிந்தது என்றாலும் அதைச் சொல்லிய விதம் மிக நன்று துரை அண்ணா. உண்மையாகவே இப்படியான அலறல்கள், பிபி, இதயப்பிரச்சனை, நோய் பாதிப்பு உள்ளவர்கள்செவித்திறன் குறைந்தவர்கள் எல்லோருக்கும் மிகவும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒன்று. நான் சென்னையில் இருந்த வரை இப்படிப் பாடல்கள் அலறும் போது அது பக்திப்பாட்டாக இருந்தாலும், கவசமாகவெ இருந்தாலும் சினிமாப்பாடல்கள் ஆல்பம் என்று எது அலறினாலும் வீட்டில் இருந்தால் என் மூன்றாவது காதை கழட்டி எடுத்து வைத்துவிடுவேன். தலை விண்ணென்று அதிரும் என்பதால்.

    நல்ல கருத்துள்ள கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சென்னையில் இருந்த வரை இப்படிப் பாடல்கள் அலறும் போது அது.. //

      இங்கும் அப்படித் தான்.. யாரையும் எதுவும் சொல்ல முடியாது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோதரி..

      நீக்கு
  28. கீதா அக்கா நலம்தானே மெதுவா அப்புறமா வருவாங்க போல!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. அந்த குழந்தைகள் வரத்தை கேட்காமலேயே அதை உணர்ந்தது போல அந்த பெரியவரின் திருவுளவாக்கு அமைந்து விட்டது கதைக்கு மிகப் பெரிய சிறப்பை தந்தது. இறுதியில் ஐயப்பனின் குரல் அவர் காதருகே ஒலித்தது நமக்குள்ளும் ஒரு தெய்வீக சிலிர்ப்பை தந்தது. மனதுக்கு நிறைவான கதை.

    /அடுத்த வருசம் அவங்க கூட நாங்களும் மலைக்குப் போகிற மாதிரி கூட இருக்கலாம்.. எல்லாம் ஐயப்பன் செயல்!.. " - என்றபடி கை கூப்பினார் அவர்./.

    கண்டிப்பாக அவர் ஐயப்பனின் அருளால் உடல்நலம் தேறி அடுத்த வருடம் மலைக்குச் செல்வார். அந்தக் கோவில் பெரியவரின் உள்ளிருந்து சொன்ன ஐயப்பனின் வாக்கு பலிக்கும்.

    ஹரிஹரசுதனின் அருள் இதுபோல் அனைவருக்கும் இன்றைய அக்ஷய திரிதியை யன்று கிடைத்து அனைவரும் நலமாக வளமாக வாழ வேண்டுமென மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இறுதியில் ஐயப்பனின் குரல் அவர் காதருகே ஒலித்தது நமக்குள்ளும் ஒரு தெய்வீக சிலிர்ப்பைத் தந்தது. மனதுக்கு நிறைவான கதை..//

      அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. // இறுதியில் ஐயப்பனின் குரல் அவர் காதருகே ஒலித்தது நமக்குள்ளும் ஒரு தெய்வீக சிலிர்ப்பைத் தந்தது. மனதுக்கு நிறைவான கதை..//

      அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. // இறுதியில் ஐயப்பனின் குரல் அவர் காதருகே ஒலித்தது நமக்குள்ளும் ஒரு தெய்வீக சிலிர்ப்பைத் தந்தது. மனதுக்கு நிறைவான கதை..//

      அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. // இறுதியில் ஐயப்பனின் குரல் அவர் காதருகே ஒலித்தது நமக்குள்ளும் ஒரு தெய்வீக சிலிர்ப்பைத் தந்தது. மனதுக்கு நிறைவான கதை..//

      அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  30. வணக்கம் கெளதமன் சகோதரரே

    இன்றைய கதைக்கேற்றபடி அருமையான ஓவியங்களை வரைந்தமைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். இரண்டாவது மிகவும் தத்ரூபமாக வரைந்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. பஞ்சாங்க நமஸ்காரம் எனக் குறித்திருப்பது கருத்தைக் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்கு உரியது பஞ்சாங்க நமஸ்காரம் தானே..

      தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஆம். பஞ்சாங்க நமஸ்காரம் என்பது சரியே.

      நீக்கு
  32. நல்லதொரு கதை. கேட்காமலேயே குழந்தைகள் நினைத்ததை முடித்துக் கொடுத்தது சிறப்பு. ஓவியம் மிக அழகு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  33. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! இன்றைய கதை தெய்வ அருளுடன் கூடியதாய், அனைவரின் நன்மையையும் பேணும் விதமாய் நன்றாக உள்ளது.
    எங்கள் தெருவிலும் பண்டிகை சமயங்களில் பாடல்களை அலற விடுவது உண்டு. பரீட்சை நேரம், இவ்வாறு படிக்கும் பிள்ளைகளை பற்றி யோசனை இல்லாமல், பக்தி என்ற பெயரில் கூசசலிடுகின்றார்களே என தோன்றுவது உண்டு. நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எங்கள் தெருவிலும் பண்டிகை சமயங்களில் பாடல்களை அலற விடுவது உண்டு. பரீட்சை நேரம், இவ்வாறு படிக்கும் பிள்ளைகளை பற்றி யோசனை இல்லாமல்,..//

      இப்படித் தான் இங்கும் நடக்கின்றது..

      அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  34. அட்ஷய திருதியை நாளில் கிடைத்த வரமும் மனதை தொட்டது . இதுபோல உணர்ந்தால் நன்மையே . நல்லதோர் கருக்கதை வாழ்த்துகள். படமும் படவர்ணமும் கவர்ந்தது வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  35. கதை அருமையாக இருந்தது நோயாளிகளுக்கு எவ்வளவு தொல்லையே தருகிறது ஒலிபெருக்கிகள். மனதைத் தொட்டது கதையும் படங்களும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  36. பானுமதி வெங்கடேஸ்வரன்3 மே, 2022 அன்று பிற்பகல் 5:28

    நல்ல கருத்தை வன்மையாக சொல்லாமல், மென்மையாக சொன்ன விதம் சிறப்பு.
    துவக்கத்தில் இடம்பெற்ற வர்ணனை காட்சியை கண்முன் கொண்டு நிறுத்தியது. பொருத்தமான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. தங்கள் அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. தங்கள் அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  37. தங்கள் அன்பின் வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  38. மிக அழகான வர்ணனைகளுடன் கதை தொடக்கம்.

    பெண் குழந்தைகள் தங்கள் தந்தையின் உடல்நலன் பற்றிச் சொல்லி வரம் வேண்டும் என்று, அலறும் பாடல்கள் பற்றிச் சொல்லியதும் அதைக் கடைசியில் அந்த சாமி நிறைவேற்றியதும், வரம் என்னவென்று குழந்தைகள் சொல்லவில்லையே என்று நினைக்கும் போது காதில் ஒலித்த 'அதான் கொடுத்திட்டியே' என்பது இரு அர்த்தங்களாக...அதாவது அவர்களின் தந்தையும் குணமாகி அடுத்த வருடம் ஐயப்பன் தரிசனத்திற்குச் செல்வதற்கு வரம் என்பதாகவும் கொள்ளலாம்.

    ஒன் லைன் ஸ்டோரி என்று சொல்வது போல் ஒரே வரிக் கதைக் கருவை இவ்வளவு அழகாகச் சொல்லலாம் என்பதும் கதையின் கூடுதல் சிறப்பு.

    பாராட்டுகள், வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  39. துளசிதரன்..
    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    சரணம் ஐயப்பா..

    பதிலளிநீக்கு
  40. கீதாக்கா அவர்களால் இங்கு வருவதற்கு இயலவில்லை என்றதொரு குறை மட்டும் இருக்கின்றது..

    மற்றபடிக்கு
    ஐயப்பா சரணம்..
    சரணம் ஐயப்பா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையைப் படிச்சேன் செவ்வாயன்றே, ஆனால் கருத்துச் சொல்ல முடியலை அவசரம். அதோடு திங்கள் பதிவிலேயே செவ்வாயன்று ஊருக்குக் கிளம்புவது பற்றிக் கோடி காட்டி இருந்தேன். :)))) யாரும் கவனிக்கலை போல. :)))))

      நீக்கு
    2. அக்கா அவர்களின் அன்பு வருகைக்கு மகிழ்ச்சி.. அன்றைக்குப் படித்தது நினைவில் இல்லை.. ஆனாலும் தாங்கள் வெளியூர் பயணத்தில் இருப்பீர்கள் என்றே நினைத்தேன்..
      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  41. சில நிதர்சனமான உண்மைகளை இப்பதிவின் மூலமாக மறுபடியும் கண்டு கொண்டேன்...

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  42. அனைவரும் மனதில் நினைக்கும் ஓர் செயல். ஆனாலும் யாருக்கும் அதன் தீர்வு புரியவில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது? இங்கேயோ அருமையாக ஒரே வரத்தில் குழந்தைகள் சாதித்துக் கொண்டார்கள். குருசாமிக்கும் இப்படி ஒரு வரம் கொடுக்கத் தோன்றியதில் அதிசயமே இல்லை.
    ஸ்வாமி சரணம்! ஐயப்ப சரணம்!

    பதிலளிநீக்கு
  43. பல்வேறு பணிகளுக்கு இடையேயும் பதிவுக்கு வருகை தந்த தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..

    நம்மால் நேரிடையாகப் புகுந்து எதுவும் செய்ய இயலாது.. இறைவன் ஒருவனே எல்லாவற்றையும் சரி செய்ய வல்லவன்..

    இந்தக் கதை எழுதப்பட்டது
    21 நவம்பரில் ..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!