வெள்ளி, 27 மே, 2022

வெள்ளி வீடியோ : நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்

உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க, சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இன்றைய தனிப்பாடல்.  "காவிரி சூழ்பொழில்" பாடலுடன் அப்போதெல்லாம் ரேடியோ பக்தி மாலையில் பெரும்பாலும் ஜோடியாக ஒலிக்கும் பாடல்.

​நாராயணா என்னும் பாராயணம் 
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம் 
தேவாம்ருதம் தேவாம்ருதம்

கோவிந்த நாம சங்கீர்த்தனம் குடிகொண்ட நெஞ்சில்தான் பெரும் ஆலயம்
  கோவிந்த நாம சங்கீர்த்தனம் குடிகொண்ட நெஞ்சில்தான் பெரும் ஆலயம்  

படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே பாவங்கள் தீர வேறு வழி இல்லையே
துணையாவதவன் சங்கு சக்ராயுதம் தொழுவார்க்கு  அருள்கின்ற திருவேங்கடம்
திருவேங்கடம்

சித்தி அளித்தொரு முக்தி கொடுத்திட சக்தி படைத்த மலை
தேவர்கள் மூவர்கள் யாவரும் வேண்டிடும் சேடன் அணைத்த மலை
சித்தி அளித்தொரு முக்தி கொடுத்திட சக்தி படைத்த மலை
தேவர்கள் மூவர்கள் யாவரும் வேண்டிடும் சேடன் அணைத்த மலை
தத்துவம் வேதம் உரைத்ததோர் சாரதி நித்தமும் வாழும் மலை
தத்துவம் வேதம் உரைத்ததோர் சாரதி நித்தமும் வாழும் மலை
தாயினும் இனிய ஓர் தூயவன் மாயவன் ஆளும் ஏழுமலை
ஏழுமலை… ஏழுமலை… ஏழுமலை…


============================================================

கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த மிகச் சில ஆரம்ப காலப் படங்களில் இதுவும் ஒன்று.

1977 ல் வெளியான இந்தப் படத்தின் கதை மகேந்திரனுடையது.  இயக்கம் எஸ் பி எம்.  இசை விஜயபாஸ்கர்.  கண்ணதாசன் ஒரு பாடலும், பூவை செங்குட்டுவன் ஒரு பாடலும் பஞ்சு அருணாச்சலம் இரண்டு பாடல்களும் எழுதி இருக்கிறார்கள். 

சங்கீதா என்றொரு நடிகையுடன் இந்தப் பாடல் காட்சியில் கமலஹாசன்.  பாடல் முழுவதும் சைக்கிளில் வருவது போல.  இனிமையான இசை, இனிமையான டியூன்.  இனிமையான குரல். இந்தப் பாடல் பஞ்சு அருணாச்சலம் எழுதியது.

உறவோ புதுமை நினைவோ இனிமை 
கனிந்தது இளமை காதலில் பெருமை 

காற்றினில் ஆடிடும் கொடிமலர் போல
கண்களில் ஆடிடும் ஒளிமலர் கண்டேன் 
பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டேன் 
பாவையின் ஜாடையில் என்னை நான் மறந்தேன் 

தேவன் கோவில் நாதம் உன் மொழியோ 
திருச்சபை ஒலிக்கும் கீதம் உன் குரலோ 
மார்கழி மாதத்து மலர்கள் உன் உடலோ 
மாங்கனி இதழ்களில் தவழ்வதென் உயிரோ 

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் 
எவ்விதம் நாம் இன்று ஒன்றாய்க் இணைந்தோம் 
ஒருவரை ஒருவர் சந்திக்கும் காலம் 
உறவுகள் ஆயிரம் திறந்திடும் காலம் 


நான்கு வருடங்கள் கழித்து 1981 ல் வெளியான திரைப்படம் மீண்டும் கோகிலா.  அதே கமலஹாசன், மீண்டும் (வேறு) ஒரு சைக்கிளில் வந்து பாடும் பாடல்!  இந்தமுறை உடன் தீபா.

தீபா நடிக்குமிடத்து முதலில் ரேகா நடித்து மகேந்திரன் இயக்கத்தில் சில பல காட்சிகள் எடுக்கப்பட்டதும், பின்னர் ஜெமினியின் அறிவுரையின் பேரில் இரண்டாம் கதாநாயகியாய் வேண்டாம் என்று ரேகா ஒதுங்கியதும், இயக்கம் ஜி என் ரெங்கராஜன் கைக்கு சென்றதும், தீபா அங்கு நடிக்க வந்ததும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.  எனவே நான் அதையெல்லாம் இங்கு சொல்லப் போவதில்லை!

அதேபோல கமல் கண்ணை கண்ணை சிமிட்டுவது அப்போதைய கிரிக்கெட் பிரபலம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் மேனரிசம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

கண்ணதாசனும் படத்தில் பாடல்கள் எழுதி இருந்தாலும், இன்றைய இந்தப் பாடலும் பஞ்சு அருணாச்சலம் எழுதியதுதான்.

இளையராஜாவும் எஸ் பி பி யும்தான் இந்தப் பாடலின் ஸ்பெஷல்.  ஆரம்ப இசை முதல் பாடல் முடியும் வரை ராஜாங்கம்தான்!  படத்தின் பாடல்கள் அத்தனையுமே இனிமையானவை.

இந்தப் படத்துக்காக ஸ்ரீதேவி தனது முதல் நேஷனல் அவார்டை வாங்கினார்.  அப்போது அவருக்கு வயது பதினேழாம்.

ஹேய் ஓராயிரம்..  
மலர்களே மலர்ந்தது உலகிலே சுகமே இதுதானோ 
ஹேய்...  ஓராயிரம்..

கீழ்வானிலே இளம்சூரியன் தேரோட்டமே காண 
விடிகாலையின் பூந்தென்றலில் நாம் காண்பது பேரின்பமே 
எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்
புதுமையே இயற்கையை ரசிக்காதோ


நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்  
நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில் 
இளஞ்ஜோடியின் விழி ஜாடையில் 
பேராசைகள் ஒரு கோடியே 
அங்கம் மின்னும் தங்கம் கண்டேன் 
இளமையே இனிமையை ரசிக்காதோ

85 கருத்துகள்:

 1. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு..

  குறள் நெறி வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. நட்பின் நன்மலர்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 3. சீர்காழி அவர்களின் இனிய பாடல் ..

  அடுத்தொரு பதிவில் -

  கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்!..

  பதிலளிநீக்கு
 4. // எனவே நான் அதையெல்லாம் இங்கு சொல்லப் போவதில்லை!.. //

  நமக்கெதற்கு ஊர் வம்பு!..

  பதிலளிநீக்கு
 5. அன்றைய இளைஞர்களின் (!) தூக்கத்தைக் கெடுத்த கண்ணழகி தீபா!..

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. ஆமாம், இங்கு பெருமாள் என்ன அல்லது எதன் குறியீடு!

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமே மேலோங்கி நிம்மதியும் மகிழ்ச்சியும் பெருகப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 8. எத்தனை கருத்துச் சொன்னாலும் அது இங்கே தெரிவதே இல்லை என்பதால் கருத்துச் சொல்லச் சுணக்கம் ஏற்படுகிறது. என்றாலும் மெயில் பாக்ஸிற்கானும் போகுமே என்னும் எண்ணம். நேற்று மட்டும் துரையின் சில பதிவுகளிலும் எ.பியின் வியாழன் பதிவுகளிலும் கொடுத்த எல்லாக் கருத்துக்களும் போகவே இல்லை. அல்லது மறைந்து விடுகின்றன. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இந்த நிலை கீதா ரங்கன் பதிவிலும், செல்லப்பா சார் பதிவிலும் ஏற்பட்டது.  நான் தளத்தை மூடி வெளியே வந்து புதிதாக உடனே அல்லது அப்புறம் திறந்து கமெண்ட் போட்டேன்.  வந்தது!   ஆனால் ஒன்று...  இரண்டு மூன்று முறை ரெஃப்ரஷ் செய்து பார்த்தும் அங்கேயே இருக்கும் கமெண்ட் மறுநாள் காணாமல் போவதும் விந்தை!  நீங்கள் சொல்வது போல இதை யார் கவனித்து சரி செய்வார்களோ...

   நீக்கு
  2. இப்படித்தான் அன்று ஶ்ரீராம் அப்பா பெயரில் தட்டச்சுத் தவறு வந்துவிட, உடனே அதை எழுதி ப்ப்ளிஷ் பண்ணி, அந்தக் கமென்டையும் பார்த்துவிட்டு வேறு தளம் சென்று திரும்பிவந்தால் முதலில் போட்ட கரெக்‌ஷன் பின்னூட்டம் காணோம். சங்கடமாகிவிட்டது. பிளாகை முன்னப்பின்ன பார்த,மிராத கூகுள் ப்லோகிராமர்கள் செய்யும் விபரீத மாற்றங்கள் இவை. கூகுள் கணிணி டீமின் லோ குவாலிட்டி புலப்படுகிறது

   நீக்கு
  3. DD மற்றும் நீச்சல்காரன் இதில் ஏதாவது ஆராய்ச்சி செய்து உதவக்கூடும்.

   நீக்கு
  4. கீதாக்கா ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் எனக்கும் நேர்கிறது. நேற்று துளசியின் கமென்ட் போட முடியவில்லை....நேற்று எனது ஒரு கமென்ட் காணாமல் போய்விட்டது மீண்டும் போட்டேன்.

   வெங்கட்ஜி தளத்தில் போட்டு வெளி வந்த பிறகு அடுத்த கருத்து போடும் போது முதல் கருத்து காணாமல் போகப் போக அவரிடம் கேட்டேன். அப்போது அவர் சொன்னது காணாமல் போன கருத்துகள் எல்லாம் ஸ்பாமில் இருந்தத்தாக.

   உடனே இப்படியும் நடக்கிறதா என்று நான் எங்கள் வலையின் பதிவுகளுக்கு வந்த கருத்துகள் ஏதேனும் கருத்துப் பெட்டியில் வெளியிடாமல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மின் அஞ்சல் பெட்டியிலும் ஸ்பாமிலும் போய்ப் பார்த்தேன் நல்ல காலம் எங்கும் இல்லை. ஏனென்றால் பானு அக்கா கருத்து போகவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்ததால் இப்படி இருக்குமோ என்று...

   சுந்தர் பிச்சையிடம் மனு கொடுக்க வேண்டும்!!!!!!!!

   தமிழ் ப்ளாகர் வலைப்பூக்களில் மட்டும்தானா இல்லை ம்ற்ற மொழி ப்ளாகர் வலையிலுமா என்று தெரியவில்லை.

   கீதா

   நீக்கு
  5. காணாமல் போன கமெண்ட்ஸ் யாவும் ஸ்பாமில் கிடைப்பதுமில்லை கீதா.

   நீக்கு
 9. கமலுடன் நடித்திருக்கும் இந்த சங்கீதா ஆரம்பகாலத்தில் பிரபலம். பின்னால் இந்திப் படங்களுக்குப் போனாரோ என்னும் நினைவு. இவரின் அழகுக் குறிப்புகள் சுவையானவை. பின்னால் ஒரு சங்கீதா வந்து விஜயுடன் நடிச்சிருக்கார். அவரும் ரொம்ப வருடங்கள் தாக்குப் பிடிக்கலை. என்றாலும் அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி அடைந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஜினியுடன் 'கண்மணியே காதல் என்பது' என்று ஆடும் நடிகை பெயரும் சங்கீதாதான்!  ஆனால் அன்பே சங்கீதா படத்தில் பாத்திரத்தின் பெயர் சங்கீதாவே தவிர, நடித்தது ராதிகா!  ஹிஹிஹி..

   நீக்கு
  2. நடிகைகளைப் பற்றி இருவருக,கும் நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கின்றன.

   நீக்கு
  3. யார் அந்த இருவர்? ஆனால் நான் மூன்றாவதாக ஒரு நபரை அறிவேன்!

   நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

   ரஜினியுடன் சங்கீதா பாடி ஆடும் "கண்மணியே காதல் என்பது" என்ற பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். இனிமையான இசையுடன் அடிக்கடி கேட்க வைக்கும் பிரபலமான பாடல். நீங்கள் இன்று பகிர்ந்த கமல், சங்கீதா பாடல் இதுவரை கேட்டதில்லை. இந்தப்பாடலில் சங்கீதா அடையாளமே தெரியவில்லை. இதில்தான் அவர் அறிமுகம் போலும். ஆனால் நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார் என நினைக்கிறேன். இந்த இரு படங்களின் பெயரும் தெரியவில்லை. இன்றைய பாடல் இடம் பெற்ற திரைப்படமும் நீங்களும் பதிவில் குறிப்பிடவில்லை. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

   மூன்றாவதாக நீங்கள் அறிந்திருக்கும் நபர் நம் சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் என நினைக்கிறேன். சரியா?

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  6. ஆம்.  சரியான கெஸ்.  பானு அக்காவைதான் சொன்னேன்.  கண்மணியே காதல் என்பது சங்கீதாவும், இந்த சங்கீதாவும் ஒன்றுதானா என்று எனக்குத் தெரியாது!

   நீக்கு
  7. இங்கே குறிப்பிடும் சங்கீதா வட இந்தியப் பெண். பின்னாட்களில் விஜயுடன் நடித்த சங்கீதா தென்னாட்டுப் பெண். முகம் கொஞ்சம் நீளமாக இருக்கும் இல்லையா?

   நீக்கு
 10. இரண்டு படங்கள்/பாடல்கள் தொலைக்காட்சி தயவில் பார்த்துக் கேட்டு ரசித்தவை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா. வணக்கம். உங்கள் பதிவில் இரண்டு மூன்று கமெண்ட்ஸ் இட்டுள்ளேன். அது வெளியாகும் வரை நிச்சயமில்லை!!!!

   நீக்கு
  2. ஆ... கமெண்ட்ஸ் இடம்பெற்று பதிலையும் பெற்றுவிட்டன! படித்து விட்டேன்!

   நீக்கு
 12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆரோக்கியம் நிறை வாழ்வும். அமைதியும்
  தொடர வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 13. முதல் பாடல் பிடித்த பாடல். அடிக்கடி கேட்கும் பாடல் "சீர்காழி கோவிந்த ராஜன் பாடல்கள்" தொகுப்பில் பதிவு செய்து வைத்து இருந்தோம்.
  ஆடுத்த பாடல் கேட்ட நினைவு இல்லை. படமும் பார்க்கவில்லை.அதற்கு
  அடுத்த பாடல் கேட்டு வெகு காலம் ஆச்சு.
  எல்லா பாடல்களையும் கேட்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 14. என் மன நிம்மதிக்காகக் கேட்கும் பாடல்களில் ஹேய் பாடலும் ஒன்று.
  கேட்டு விட்டு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா?  எனக்கு(ம்) மிகவும் பிடித்த பாடல்.

   நீக்கு
 15. படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே பாவங்கள் தீர வேறு வழி இல்லையே
  துணையாவதவன் சங்கு சக்ராயுதம் தொழுவார்க்கு அருள்கின்ற திருவேங்கடம்
  திருவேங்கடம்''


  திருமலைப் பெருமாளின் நாமம் வாழ்க .
  நாராயணன் நாமம் வாழ்க .
  கோவிந்தன் நாமம் வாழ்க.

  அருள் மழை பொழிபவனின் கருணை உலமெங்கும்
  நிலைக்கட்டும்.

  பதிலளிநீக்கு

 16. @ ஸ்ரீராம்..

  // ஆமாம், இங்கு பெருமாள் என்ன அல்லது எதன் குறியீடு!..//

  அன்றைய இளைஞர்கள் (!) தூக்கம் தொலைத் தனர் தீபாவின் கண்ணழகில்!..

  என்று இளமையின் ஆதங்கத்தைப் போட்டு விட்டு அதற்கு அப்புறமாக -

  பெருமாளே.. பெருமாளே!.. - என்று எழுதினேன்..

  கண்ணழகைக் காணவில்லை..

  பெருமாளே சாட்சி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெருமாள் இதற்கெல்லாம் சாட்சி சொல்ல வருவாரா? 

   நீக்கு
 17. முதல் படம் டிவியில் வந்திருக்கும். நான் பார்த்ததில்லை.
  பாடலைவிட செய்திகள் அருமை.

  மீண்டும் கோகிலா, தீபா அழகு.
  ஸ்ரீதேவிக்கு 17 வயதா!!!!!!!!
  ஸ்பெஷல் ஆக வளர்த்திருப்பார்கள் போல!!
  பாவம். பாடல்களிலும்
  மற்றபடி படமெங்கும் இனிமை தூவி இருக்கும். கமலின் அசட்டுத்தனம், ஸ்ரீதேவின் களங்கமில்லாத கண்கள்,
  மடிசார், பேசும் பாஷை எல்லாமே மிக இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் படம் வழக்கம்போல நானும் பார்த்தது இல்லை! ​இரண்டாவது படம் அமர்க்களமான படம்.

   நீக்கு
  2. வல்லிம்மா... நான் பத்தாம் வகுப்பு ஹாஸ்டலில் இருந்தபோது என்னுடன் ஒருவன் (அவன் பல வருடங்கள் ஒவ்வொரு வகுப்பிலும் ஆழ்ந்து படித்தானா இல்லை நல்ல வளர்ச்சியானு தெரியலை) பத்தாம் வகுப்பு படித்தான். ஶ்ரீமேவியின் கசின் என நினைவு. நாங்கள்லாம், இவ்வளவு அருகில் ஶ்ரீதேவியுடன் வாழும் வாய்ப்பு அவனுக்கு என ஆச்சர்யமா பேசிக்கொள்வோம். ஹாஹா

   நீக்கு
  3. கிழக்கே போகும் ரயில் பிரபலமா?

   நீக்கு
  4. அந்தப் பையன் சிவகாசியைச் சேர்ந்தவன் என்று நினைவு. ஸ்ரீதேவியும் சிவகாசித் தொடர்பு உள்ளவர் என்றும் படித்த நினைவு. சுதாகர்---இவர் பெயரைப் படித்த உடன் எனக்கு பல கிசுகிசுக்கள் நினைவுக்கு வருகின்றன. நான் எதற்கு பா.வெ. பொஸிஷனுக்கு அப்ளை செய்யப் போகிறேன்.

   நீக்கு
  5. பானு அக்காவைக் காணவில்லையே....கருத்து போவதில் பிரச்சனை ரொம்ப இருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

   கீதா

   நீக்கு
  6. @நெல்லைத் தமிழன்,

   ஸ்ரீராம் சொல்லும் சுதாகர் ஆந்த்ர வாடு இல்லை?
   எனக்கு ஸ்ரீதேவிவயதில் எப்பொழுதுமே சந்தேகம்.:)

   நீக்கு
  7. இல்லை நடிகர் சுதாகர் இல்லை.  நான் வத்ராயிருப்பில் பணிபுரிந்தபோது அங்கு பணியில் இருந்த ஒருவர் ஸ்ரீதேவியின் உறவினர் என்று சொன்னார்.  அதுதான் கேட்டேன்.

   நீக்கு
  8. என் அண்ணா/தம்பி ஆழ்வார்ப்பேட்டை ராமசாமி நாயக்கன் தெருவில் இருந்தப்போ எதிர் வீட்டில் ஶ்ரீதேவியின் சொந்தச் சித்தி/சித்தப்பா இருந்தார்கள். ஶ்ரீதேவியின் தங்கைகள் அடிக்கடி அங்கே வருவார்கள். அவங்கல்லாம் சாதாரணமான உயரத்துடனேயே இருப்பார்கள். ஶ்ரீதேவியின் சித்தி நல்ல உயரம்/அழகு/சிவப்பு. ஶ்ரீதேவியும் அந்தக் குடும்பப் பரம்பரையைக் கொண்டிருக்கலாம். அதோடு இல்லாமல் எங்க பக்கத்து வீட்டிலேயே ஒரு பெண் எங்க பெண்ணை விட வயது குறைந்தவள் எங்க பெண்ணை விட வளர்த்தியாகவே இருப்பாள். அவள் அம்மாவுக்குக் கவலையா இருக்கும். இந்தக்குட்டி இப்படி வளர்ந்து இருக்கே. யாருமே பதினைந்து வயசுனு சொன்னால் நம்ப மாட்டேங்கறாங்க என்று வருந்துவார்.

   நீக்கு
  9. ஶ்ரீதேவியின் அந்தச் சித்தி எங்களுடன் பல வருடங்கள் தொடர்பில் இருந்ததோடு அல்லாமல் அம்பத்தூர் வீட்டுக்கும் பல முறை வந்திருக்காங்க. பின்னாட்களில் நாங்க வடக்கே சென்றபிறகு தொடர்பே இல்லை. அவங்க பெண் "ஜானி" ஶ்ரீதேவியைப் போலவே அழகாய் இருப்பாள். ஐந்து வயதுக்கு நல்ல வளர்த்தியாகவே இருப்பாள்.

   நீக்கு
 18. நல்ல பாடல்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
  நன்மைகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 19. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. இரண்டாவது பாடல் கேட்டதுண்டு...

  மூன்றாவது பாடல் பலமுறை...

  இளையராஜா இசை என்றால், பாடல் ஆரம்பித்து 3/4 நொடிகளில் பாடல் வரிகளை மனம் பாடி விடும்...! சில பாடல்கள் வாய்விட்டு பாடவே வைக்கும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு திரைப் பாடல்களுமே நான் விரும்பி அடிக்கடி கேட்பவை!

   நீக்கு
 21. "சைக்கிள் பாடல்" என்றவுடன் முதலில் ஞாபகம் வரும் பாடல் :-

  பாரில் இயற்கை படைத்ததையெல்லாம் -
  பாவி மனிதன் பிரித்து
  வைத்தானே...

  மனிதன் மாறிவிட்டான்...
  மதத்தில் ஏறிவிட்டான்...

  ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ...

  ஆமாம் மதம் பிடித்த அந்த பாவி யார்...? வெள்ளிக்கிழமை கேள்வி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும்தான். விதி விலக்காக ஓரிருவர் இருந்தாலே அதிகம்.

   நீக்கு
  2. சைக்கிள் பாடல் பல இருக்கின்றன... சந்திப்போமா முதல் களத்தூர் கண்ணம்மா பாடல், ஹிந்தியில் ஒரு பாடல் என.. அவரவர் மனநிலைக்கேற்ப பாடல் நினைவுக்கு வரும்!

   நீக்கு
  3. கல்யாணப் பரிசு ஜெமினி./சரோஜா தேவி!

   நீக்கு
 22. குதிரை பாடல் என்றால்...?

  பாட்டு பாட-வா...?
  பார்த்து பேச-வா...?
  பாடம் சொல்ல-வா...?
  பறந்து செல்ல-வா...?

  மேற்கண்ட வரிகளில் வா முன்பு "-" இல்லையென்றால்...?

  கேள்விக்குறி வராது, ஆனால் பாடலின் பொருள் மாறுவதை ரசிக்கலாம்...!

  அப்புறம் குதிரை வண்டி, மாட்டு வண்டி, யானை, பைக், கார், லாரி, ஜிப், விமானம், (இன்னமும் பல) பாடல்கள் என்றால்...?

  வெள்ளிக்கிழமை கேள்வி(கள்) 2...!

  (குறிப்பு : வலைப்பூ வந்த நேரத்தில் இப்படி எல்லாம் தொகுத்து பதிவு எழுதி வைத்திருந்தேன்...! ஏனோ வெளியிடவில்லை...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் முன்பு இப்படி வகை பிரித்து பாடல்கள் பகிர்ந்திருக்கிறேன் DD.  படகுப் பாடல்கள், ரயில் பாடல்கள் என..  இங்கும் பேஸ்புக்கிலும்.

   நீக்கு
  2. டிடி மற்றும் ஸ்ரீராம்!! ஓ...என்ன ஆராய்ச்சி!! முனைவர் பட்டம் கொடுத்துடலாம் உங்க ரெண்டு பேருக்கும்!!!

   கீதா

   நீக்கு
 23. @ ஸ்ரீராம்..
  // பெருமாள் இதற்கெல்லாம் சாட்சி சொல்ல வருவாரா? ..//

  சௌரிராஜன் கதை தான் சாட்சி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சௌரிராஜனுக்கு வருவார்.  உன்னி மேரிக்கு வருவாரா?!!

   நீக்கு

  2. @ ஸ்ரீராம்..
   // அவர் வருவாரா.. //

   வருவார்.. வருவார்!..
   உன்னி மேரிக்கும் வருவார்..
   நஸ்ரியா பானுவுக்கும் வருவார்..

   ஏனெனில் எல்லாருக்கும் வழியானவரே எந்தை ஈசன்!..

   நீக்கு
 24. வணக்கம் சகோதரரே

  இன்றைய தனிப்பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன்.
  / நாராயணா என்னும் பாராயணம் நலம் யாவும் தருகின்ற தேவாமிருதம்../ என்ன அழகான வரிகள்... நாராயணா நாமம் எப்போதும் சொல்லவே இனிதான கொடுப்பினை பெற்றிருக்க வேண்டும். நாராயணா... நாராயணா...
  சீர்காழி அவர்களின் கம்பீரமான குரல் இனிமையில் பாடலை இன்றும் கேட்டு ரசித்தேன்.

  திரைப்பட பாடலில் முதல் பாடல் கேட்டதில்லை. படமும் அறிந்திருக்கவில்லை. இரண்டாவது பாடலும் அடிக்கடி கேட்ட நினைவில்லை. ஆனால் மீண்டும் கோகிலா படம் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். ஸ்ரீ தேவியின் நடிப்பு நன்றாக இருக்கும்.

  இப்போதெல்லாம் நீங்கள் பகிரும் பாடல்களின் இனிமையில், அந்தந்த படங்களை உடனேயோ, இல்லை இரண்டொரு நாட்களிலோ இல்லை நேரம் கிடைக்கும் போதோ யூடியூபில் போட்டு பார்க்கிறேன். போன வார ஆண்டவன் கட்டளை நேற்றைய முன்தினம் பாதி பார்த்தேன். இப்போது மீண்டும் கோகிலாவை மீண்டும் பார்க்க வேண்டும். புதுப்படங்களை விட பழைய படங்கள் எவ்வளவோ நன்றாக உள்ளது. இல்லையா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று இரண்டாம் முறையாக த்ரிஷ்யம்-2 பார்த்தேன். மலையாளத்தில் எவ்வளவு புத்தி பூர்வமாக படங்கள் வருகின்றன.

   ஸ்ரீதேவியின் நடிப்பு - தட்டச்சுத் தவறில்லையே கமலா ஹரிஹரன் மேடம்... நான் முதலில் ஸ்ரீதேவியின் இடுப்பு என்று படித்தேன். ஹா ஹா ஹா. (படம் நினைவிருக்கிறதா)

   நீக்கு
  2. பெரும்பாலான பழைய படங்கள் (அதிலும் சிவாஜி படங்கள்) இப்போ பார்க்க முடியாது. ஓவர் ஆக்டிங், அதீத உணர்ச்சிகள் என்று நகைச்சுவைக் குவியலாக அமைந்துவிடுகின்றன (அதே காட்சிகளை சிறிய வயதில் பார்த்து பிரம்மித்திருந்தபோதும்).

   நீக்கு
  3. நான் முதலில் ஸ்ரீதேவியின் இடுப்பு என்று படித்தேன்//

   ஹாஹாஹாஹா நெல்லைக்குக் கண்ணுல கண்ணாடி போட்டாலும் அப்படித்தான் தெரியும் போல!!!! ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  4. ஹா. ஹா. ஹா. என் தட்டச்சில் ஏதேனும் (குறிப்பாக ந. இ. ஆகி உள்ளதாவென)
   தவறிருக்கிறதா என மீண்டும் மீண்டும் பார்த்தேன். நல்லவேளை.. தவறேதும் இல்லை. பிழைத்தேன். :)
   படத்தின் கதை லேசாக நினைவிருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கு ஒவ்வொரு நினைவுகள் ப்ளஸ் பாயிண்ட். இதில் இடுப்பு. ஹா.ஹா .

   வீட்டில் புதிது புதிதாகத்தான் வந்த படங்களை அனைவரும் பார்க்கின்றனர். நீங்கள் குறிப்பிட்டுள்ள படத்தை நானும் அவர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளேன்.

   உண்மை.. சிவாஜி படங்கள் அவரின் இயல்பான நடிப்புடன் சற்று அதீத நடிப்பும் சேர்ந்து விடும். ஆனால் அப்போது (சின்ன வயதில்) நாம் அந்த கதையோடு ஒன்றி பார்க்கும் போது., என்னவோ நமக்கே அந்த நிகழ்வுகள் வருகிற மாதிரி உணர்ச்சிவசப் பட்டு விடுவோம். ஏன் கண்ணீர் பை கூட அந்த தருணங்களில் காலியாகி இருக்கிறது. இப்போதெல்லாம் அந்த மாதிரி படங்கள் பாதி படம் பார்ப்பதற்கே போரடிக்கிறது. அதனால்தான் ஆண்டவன் கட்டளையில் பாதியைத்தான் பார்த்து கேட்டிருக்கிறேன்.:) மீதி எப்போதோ? அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம். தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
  5. கமலா அக்கா..  நான் பகிரும் நிறைய பாடல்கள் இடம்பற்ற படங்கள் நான் பார்த்திருக்கவே மாட்டேன்.  பாடல் மட்டும் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பேன்.  மீ கோ பார்த்திருந்தாலும் ஆ பு ஆ பார்த்ததில்லை.

   நெல்லை..  ஸ்ரீதேவி நடிப்புக்கு என்ன குறைச்சல்?  இடுப்புக்கும்தான்!  அதுதான்  கமல் கிள்ளுவார்!

   நீக்கு
 25. முதல் பாடல் பலமுறை கேட்டது. மூன்றாவது பாடல் ஹாஸ்டலில் நிறைய முறை கேட்டிருக்கிறேன், ஆனால் காணொளியில் கேட்கும்வரை பாடல் வரிகளைப் படித்து நினைவுக்கு வரவில்லை. (ஹே ஓராயிரம்....என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது). இரண்டாவது பாடல் நினைவுக்கு வரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓராயிரம் என்று தொடங்கும் பாடல்கள் வேறு சிலவும் உண்டே...!

   நீக்கு
 26. முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ஊர்க் கோயிலிலும்....

  மற்ற இரு பாடல்களுமே கேட்டிருக்கிறேன் அதுவும் இரண்டாவது மீண்டும் கோகிலா பாடலில் எஸ் பி பி ஆஹா குரல்!!!

  உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்/// ஹாஹாஹா அந்த லிஸ்டில் நான் இல்லையேஏஏஏஏஏஏஏஏஏ!!! சரி அதனால் என்ன இங்கு தெரிந்து கொண்டேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா அப்படியும் தெரியாதவர்களுக்காகத்தான் நைசாய்ச் சொன்னேன்!

   நீக்கு
 27. ஹப்பா கருத்து வந்துவிட்டது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 28. பாடல்கள் கேட்டிருக்கிறேன். முதல்பாடல் முத்தானபாடல்.

  தீபாவின் கண்ணளகு யாரை எல்லாம் கட்டி இழுத்திருக்கிறது என்பது இப்பதானே தெரிகிறது :) )

  பதிலளிநீக்கு
 29. //இன்று இரண்டாம் முறையாக த்ரிஷ்யம்-2 பார்த்தேன். மலையாளத்தில் எவ்வளவு புத்தி பூர்வமாக படங்கள் வருகின்றன.//


  நெல்லை.. நான் நேற்று ஜீத்து ஜோசப் இயக்கி, மோகன்லால் நடித்து வெளிவந்திருக்கும் 12த் மேன் படம் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 30. இனிமையான பாடல்கள். பாடல்களை மீண்டும் கேட்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!