வியாழன், 12 மே, 2022

ஹலோ ஹலோ சுகமா?

 சிலருக்கு சில வழக்கம் உண்டு.  நீங்கள் ஃபோன் செய்தாலும், உங்களுக்கு அவர்கள் ஃபோன் செய்தாலும் அவர்களேதான் பேசுவார்கள்.  உங்களுக்கு பேச சிறு இடைவெளி கூட கொடுக்க மாட்டார்கள்.  தப்பித்தவறி மிகச் சிறிய இடைவெளி கிடைத்து நீங்கள் பேச முயற்சித்தாலும் வியர்த்தம்தான்.  

"அது இல்லை..."   "நான்..."   "இருங்க.."  "அவர்... "  சரியாக டியூன் ஆகாத அந்தக் காலத்து   ஷார்ட் வேவ் ரேடியோ ஸ்டேஷன் போல திக்க வேண்டும்!

இப்படி சிறு சிறு வார்த்தைகளுடன் உங்கள் முயற்சி நின்றுவிடும்!  அவர்கள்தான் பேசிக்கொண்டே இருப்பார்கள்!  அவர்களே முத்தாய்ப்பாக ஒரு கேள்வியும் வைப்பர்.  "நீ ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கறே?"  பேச விட்டால்தானே மக்களே...!  அருகில் நம்மை கவனித்துக் கொண்டிருப்பவர்களில் நம் நிலை தெரிந்து புன்னகைப்பவர்களும் உண்டு.  புரியாமல் கேள்விக்குறியோடு பார்ப்பவர்களும் உண்டு!  நம்மை சந்தேகப்படுவார்கள்!

சரி, அவர்கள் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டார்கள், நாம் பேச நினைத்ததை பேசுவோம் என்று உடனே மறுபடி முயற்சி செய்ததும் உண்டு.  ஊ..ஹூம்.  மறுபடி அதே நிலைதான். சடபடசடபடசடபடசடபட லொடலொடலொட....டொக்!
இப்படியே எதிராளியைப் பேச விடாமல் பேசுபவர்களில்  நீளமாகப் பேசுபவர்களும் உண்டு.  'டு தி பாயிண்ட்' பேசிவிட்டு அரை நிமிடம் ஒரு நிமிடத்தில் வைத்து விடுபவர்களும் உண்டு.

இன்னும் சிலரிடம் 'இவர்களிடம் பேசி நாளாயிற்றே' என்று பேச டயல் செய்தால், "ஹோய்..  இப்பதான் நானே உன்னைக் கூப்பிடணும்னு நினைச்சேன்..  நீயே கூப்பிட்டுட்டே" என்பார்கள்.  ரெகுலர் டயலாக்!  அவர்கள் மனதில் திறமையாய்ச் சமாளிப்பதாய் நினைப்பு!  ஓரிரு சமயங்களில் "அப்போ நீங்க டயல் பண்ணுங்க" என்று வைத்து விட்டதும் உண்டு.

சிலர் நீங்கள் ஒன்று கேட்க, அவர்கள் ஒன்று பதில் சொல்வார்கள்.  வேண்டுமென்று செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா, தவறாகப் புரிந்து கொள்கிறார்களா  எதுவும் புரியாது நமக்கு.  அந்த மாதிரி சயங்களில் நாம் சொல்ல வந்த விஷயத்தை விட்டு விட்டு அவர்கள் புரிந்து கொண்ட விஷயத்துக்கு விளக்கம் சொல்லி புரிய வைக்கவே நேரமாகி விடும்.  அல்லு விட்டுப் போய்விடும்!  நீங்கள் ஒரிஜினலாய் பேச வந்த விஷயமும் நீர்த்துப் போயிருக்கும்; அல்லது மறந்து போயிருக்கும்!

இன்னும் சிலர் நாம் அவர்களிடம் பேசும்போதும் சரி, நம்மிடம் அவர்கள் பேசும்போதும் சரி நம்மைப் பற்றி பேசுவதை விட குடும்பத்தில் இருக்கும் வேறொருவர் பற்றியே அதிகம் விசாரிப்பார்கள்.  அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாம் நம்மிடம் வந்து விழுந்து கொண்டிருக்கும்.  நாம் எப்படி அதற்கு பதில் சொல்ல முடியும்?  'அவர்களிடமே கேளுங்கள்' என்று எடுத்துச் சொன்னாலும், அடுத்தடுத்த முறையும் இது தொடரும்!

சிலருடன் அடிக்கடி பேசிக்கொண்டுதான் இருப்போம்.  அவர்களும் அவ்வப்போது நம்மை அழைத்துப் பேசுவார்கள்தான்.  ஆனால் நாம் அழைக்கும்போது "யார் பேசறது?" என்பார்கள்.  மிகச்சிலர் அழைப்பது யார் என்று சரியாய்ப் பார்க்காமலேயே எடுத்து விட்டவர்களாய் இருப்பார்கள்.  சிலர் நம் எண்ணை சேமித்தே வைத்திருக்க மாட்டார்கள்.  என்ன சிக்கனமோ...   அதற்கு ஏதேதோ சமாதானமும் சொல்வார்கள்.  அவர்கள் நமக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அவ்வளவுதான்.


இன்னாரிடமிருந்து ஃபோன் என்றதும் என்ன விஷயமோ என்று  அவசரமாக, ஆர்வமாக எடுத்து "ஹலோ" என்போம்.  

"ஓ..  உங்களுக்கு கால் பண்ணி விட்டேனா...   நான் இன்னொருத்தரை அழைக்க நினைத்தேன்" என்று உடனே 'கட்' செய்து விடுவார்கள்.  "எம் குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி' படத்தில் பிரகாஷ்ராஜ் எரிச்சலுடன் சொல்லும் வசனம் சட்டென மனதில் ஓடும்.  "அவன் வச்சுட்டான்" 

தப்பில்லைதான்.  நடப்பதுதான்.  ஆனால் நமக்கு டயல் செய்து நம் ஆர்வத்தைத் தூண்டிய அளவில் ஒரு நலமாவது விசாரித்திருக்கலாம் என்று தோன்றுமா, தோன்றாதா?
ஒரே ஒரு முறை ஒரு விபரீதம் நடந்திருக்கிறது.  என்னைப்பற்றி இன்னொருவரிடம் அவருக்கு பேசவேண்டும்.  என்ன குழப்பமோ, அவருக்கு ஃபோன் செய்வதற்கு பதில் எனக்கு செய்து விட்டார்.  கவனமில்லாமல் பேசவும் தொடங்கி விட்டார்.  நான் திகைத்து பதிலேதும் சொல்லாமல் இருக்க, விஷயம் தொடர, திடீரென ஃபோன் தொடர்பு அறுத்து விட்டார்.   அப்புறம் மிக நீண்ட நாட்கள் என்னிடம் தொடர்பில்லாமல் இருந்தார்.  பிறகு தொடர்பு கொண்டாலும் எனக்கு அந்த விஷயம் மறக்கவில்லை ஆயினும் நான் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.  அவருக்கும் நினைவில்லாமல் இருக்குமா என்ன?!!

இன்னொருமுறை வேறுவகை விபரீதம்.  அதிகாரி தொலைபேசி ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்யச் சொல்கிறார்.  நம்மூர் அலைபேசிகளா, நெட்வொர்க் சரியில்லாமல் பாதி காதில் விழுந்தும், பாதி வார்த்தைகள் ஓரிரு எழுத்துகளிலும் மட்டுமே கேட்க, "ஸார்...  ஸார்..." என்று தடுமாறிக் கொண்டிருக்கையிலேயே வேகமாக செய்முறைக் குறிப்புகள் கொடுத்து விட்டு வைத்து விட்டார்.  அதிகார வர்க்கம்!!  என்ன இழவு என்றே தெரியாமல் எதைச் செய்வது?  மறுபடி ஃபோன் செய்து கேட்கவும் தயக்கம்.  ஒன்று ஃபோனை எடுக்க மாட்டார்.  இல்லாவிட்டால் "நாளை என்னை ஹெட் ஆபீசில் நேரில் வந்து பார்" என்பார். 

அதிருக்கட்டும், உங்கள் குரலை நீங்களே ஃபோனில் கேட்டிருக்கிறீர்களா?  வித்தியாசமாக உணர்வீர்கள்.  அப்பா மகன் குரல் நிறைய இடங்களில் ஒன்று போல இருக்கும்.  சில சகோதரர்கள் குரலும் அப்படியே.  எனக்கும் என் சகோதரருக்கும் மட்டுமில்லை, சகோதரர் மகனுக்கும் கூட ஒரே மாதிரி குரல்.  இதை வைத்து என் அக்காவிடமும், மாமாவிடமும் வேறு சிலரிடமும் நாங்கள் விளையாட்டு காட்டியதுண்டு.  அவர் அலைபேசியிலிருந்து நான் பேசினால் அவர்தான் பேசுகிறார் என்றே நினைப்பார்கள்.  அதேபோல என் அலைபேசியிலிருந்து அவர் பேசினால் நான் தான் பேசுகிறேன் என்று நினைப்பார்கள்!  விபரீதத் சம்பவங்கள் அமைத்து கதைகள் புனையலாம்!

வாட்ஸாப் வருவதற்குமுன் எஸ் எம் எஸ் செய்திகள் வெகு பிரபலம்.  அதை பார்வேர்ட் செய்து பரிமாறிக்கொண்ட நாட்களில் ஒருமுறை ஒரு உறவினர் - வயதில் பெரியவர் -  எஸ் எம் எஸ் பெற்றுக்கொண்டதுமே காட்டமாய் ஒரு பதில் அனுப்பினார்.  எனக்கு ஒன்றும் புரியாமல் என்ன என்று கேட்டு எஸ் எம் எஸ்ஸினேன்.  மறுபடி காட்டமாய் ஒரு பதில்.  புரியாமல் விட்டு விட நினைத்தாலும் அடுத்தடுத்து எஸ் எம் எஸ்கள், தன்னிலை விளக்கங்கள்.  

அப்புறம்தான் நான் ஃபார்வேர்ட் செய்து அனுப்பிய எஸ் எம் எஸ்ஸை தன்னைக் குறிப்பிட்டு தாக்குவதாய் அவர் நினைத்திருக்கிறார் என்று புரிந்தது.  ஒருவேளை சுய அலசலாய் இருந்திருக்குமோ என்னவோ..  அவருக்கு 'அது எல்லோருக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்ட எஸ் எம் எஸ் என்று புரியவைக்க முயன்று தோற்றேன்.  அடுத்து சில மாதங்கள் அவருடனான உறவு சீர்கெட்டது! இதெல்லாமே தெரியாமல் இருப்பார்கள்?  ஆம், இருக்கிறார்கள்!
===================================================================================================

பல தினங்கள் மதியானங்களில் காத்திருந்திருக்கிறேன்!  விடைதான் கிடைக்கவில்லை!

===================================================================================================

அந்தக் காலமும் அப்படி ஒன்றும் சுத்தமில்லை, அல்லது அப்போது இதை அவ்வளவு தவறாகக் கருதவில்லை!

========================================================================================================

ரசித்த அல்ல, மனதை நோகவைத்த படம் ஒன்று...


===========================================================================================================
இந்த என் கவிதை முயற்சி சில வருடங்களுக்குள் வல்லிம்மா தளத்திலோ, கோமதி அக்கா தளத்திலோ எழுதியது.  "உங்களுடைய கவிதை என் ப்ளாகில். ஸ்னோ படங்களுக்குப்  பின்னூட்டம்:) "  என்கிற 'அவர்' குறிப்புடன் சேமித்து வைத்திருக்கிறேன்.  ஆனால் யார் என்று குறித்து வைத்துக் கொள்ள மறந்து விட்டேன்!

உறைந்த மரங்கள்
உயிர்த்தெழுதலை
எதிர்பார்த்து
மௌனமாக ஒரு
வெய்யில் விடியலுக்காகக்
காத்திருக்கின்றன!

=======================================================================================================

எழுத்தாளர் இந்துமதி பேஸ்புக்கில் எழுதி இருந்தது...

சென்ற வாரமே சென்னை சென்று விடலாம் என்கிற நிலைமை ஏற்பட்டிருந்ததால் உயிருக்கு உயிரான புத்தகங்களை ஜாக்கிரதையாக அட்டைப் பெட்டிகளில் அடுக்கி திறக்க முடியாது ஒட்டி பத்திரமாக சென்னை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டேன். பெரிது பெரிதாக மூன்று அட்டைப் பெட்டிகளும் போய் சேர்ந்த பின், பத்திரப் பதிவுகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேலும் கிராமத்தில் தங்க வேண்டி நேர்ந்தது. படிக்கப் புத்தகங்களற்ற நிலையில் மூச்சுத் திணறியவளானேன். எதிர் பாராத விதமாக பிஞ்ச் App ப்ரியா நான் எழுதிய தரையில் இறங்கும் விமானங்களும், அக்னி நட்சத்திரங்களும் அனுப்பி வைத்திருந்தார்.

பொதுவாக நான் எழுதி முடித்து புத்தகங்களாக வந்த பின்னர் கூட என் எழுத்துக்களைப் படித்துப் பார்த்ததே இல்லை. அந்த வழக்கமே என்னிடம் கிடையாது. அந்த நேரத்தில் வேறு எழுத்தாளர்களைப் படிக்கலாம் என்று தான் தோன்றியிருக்கிறது. ஆனால் இப்போது வேறு வழியின்றி முதலில் அக்னி நட்சத்திரங்கள் படித்தேன்.

நேற்றிரவு தரையில் இறங்கும் விமானங்கள் கையில் எடுத்தேன். இதை நான் எழுதியது 1975-1976 .

எனக்குத் திருமணமான புதிது. எழுதி நாற்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது படிக்கையில் எனக்கே பிரமிப்பாகவும், பரவசமாகவும் தான் இருக்கிறது.
அந்த வயதின் எண்ண முதிர்ச்சியும், வாழ்க்கை பற்றிய அனுபவங்களும், அனைத்து விஷயங்களை ஒட்டிய சிந்தனைகளும், பார்வைகளும், அழகுணர்ச்சிகளும், அவற்றை வெளிப்படுத்திய விதமும்...

அந்தப் பக்குவமும், எண்ண முதிர்ச்சியும் இப்போதும் இருக்கிறதா என்று என்னை நானே ஆராய்ந்து கொண்டேன். மனசு இன்னும் மென்மையாகி, பழுத்த பழமாகியிருப்பதைத் தவிர வேறு மாற்றமில்லை என்று பட்டது.
இப்போதைய மனசு அழுத்தித் தொட்டாலே நசுங்கி விடும் மனசு‌. சற்று கோபமாகப் பார்த்தால் கூட சுருங்கி விடும் மனசு என்பது தவிர வித்தியாசம் ஒன்றுமில்லை.

உதாரணம்:-. 19 ம் அத்தியாயத்திம் மேலே படிக்க முடிய வில்லை. நெஞ்சைப் பிசைந்தது. நெக்குருகியது. கண்கள் கலங்கின.மனசு வலித்தது.

பரசுவுக்கும் விஸ்வத்திற்குமான மொட்டை மாடிப் பேச்சு.

" நான் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். நடக்கலை. நிறைய சம்பாதிக்கணும்னு நினைச்சேன்.அதும் நடக்கலை. கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கக் கூட இல்லை. ஆனா அது நடந்தது போச்சு.."- இது பரசு.

" அதுக்காக இப்ப கஷ்டப்படறியா என்ன?" --இது வில்வம்.

"இல்லை.ஆனா மத்தவங்களைக் கஷ்டப் படுத்தறேனோன்னு தோணறது."
"மத்தவங்கன்னு யாரைச் சொல்றே.?"

"உனக்கு நிஜமாகவே புரியலையா விஸ்வம்?"

விஸ்வம் பதில் சொல்ல முடியாமல் மௌனமானான்.

"அவளைப் பார்க்கறியே விஸ்வம், அவ எனக்கு ஏத்தவதானா, சொல்லேன்?"
"என்ன பேசுற நீ! அதுக்காக வருத்தப்படற மாதிரி ருக்- மன்னி மூஞ்சி என்னிக்காவது மாறி இருக்கா? அனாவஸ்யமா எது எதையோ இழுத்துப் போட்டுண்டு ஏன் சங்கடப் படறே.?"

பரசு வேதனையாகச் சிரித்தான். "அவ மூஞ்சி எதுக்கும் மாறாது. அவ எங்கேயோ இருக்க வேண்டியவ. எப்படியோ இருக்க வேண்டியவ. அந்த அளவு குணமும்... இந்த அளவு அதிர்ஷ்டத்திற்கு என் கிட்ட என்ன இருக்கு-?"

விஸ்வத்திற்குத் தொண்டையை அடைத்தது. மனசில் ஏதோ கரைந்து நழுவுகிற மாதிரி இருந்தது. 'உள்ளுக்குள்ளேயே இவ்வளவு மருகுகிறானே இவன்! இவனைப் பற்றி நினைத்ததெல்லாம் எவ்வளவு தவறு! இவனை விட மனசில் உயர்ந்து ருக்மிணிக்கு வேறு யார் கிடைத்திருக்க முடியும்? பரசு, எப்படிப்பட்ட மனுஷன் நீ!'- அவனை அப்படியே சேர்த்து கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது...

"பலமான ஏதோ ஒரு சக்தி நம்மை நடத்திண்டு போறது. அந்த சக்திதான் அவளை உன் கிட்ட ஒப்படைச்சிருக்கு. அதுக்குத் தெரியும் யாரை யார் கிட்ட கொடுக்கிறதுன்னு"

அதற்கு மேல் என்னால் படிக்கவே முடியவில்லை. நெஞ்சு நெகிழ்ந்து கரைந்து போனேன் கண்களிலிருந்து நீர் பெருகியது.

இது தான் பழுத்த பழ நிலையோ..?
=============================================================================================


சுந்தா எழுதிய இந்தத் தொடர்கதையின் நடுவே வந்த மூன்று துணுக்குகள் கீழே...!


என்ன ஒரு சமத்காரமான கேள்வி? இதிலிருந்து நீங்கள் அறிந்துகொள்வது...?



என் காதலி... யார் சொல்லவா?


மன்னிச்சுடுங்களேன்....

============================================================================================

சரி.. இந்த வாரம் அவ்ளோதான்... கிளம்பறேன்.... ஸீ யு ஆல் நெக்ஸ்ட் வீக்...

129 கருத்துகள்:

  1. பல்சுவை எப்போதும்போல். ஆனால் ஒவ்வொரு வாரமும் நீங்கள் ஆரம்பிக்கும் டாப்பிக் சிந்திக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.  வடநாட்டு யாத்திரைக்கு நடுவிலும் படித்துக் கருத்திடுவதற்கு!

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்யம், நல்ல செய்திகள் இரண்டுமே என்றும் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. காலில் விழுந்த வெடி!!!! ஹாஹ்ஹா.:)

    பதிலளிநீக்கு
  4. உயிரை விடச் சொன்ன காதலி? ஹையோ.
    ஹாஸ்யம்.

    பதிலளிநீக்கு
  5. பணம் எடுத்த பையன்.. பயங்கரமா இருப்பான் போல இருக்கே!!!

    பதிலளிநீக்கு
  6. // பணம் எடுத்த பையன்.. பயங்கரமா இருப்பான் போல இருக்கே!!! //

    வல்லிம்மா..  உங்களின் இந்தக் கருத்து மெயில் பாக்சில் இருக்கிறது.  இங்கு காணோம்!!

    பதிலளிநீக்கு
  7. இந்துமதி அவர்களின் கதை நினைவில் இல்லை.
    ஆனால் பரசு என்கிற பெயர் நினைவில்:)

    அப்போது உருக்கம் இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களே சொல்லி இருக்கிறார்களே...   தரையில் இறங்கும் விமானங்கள்.

      நீக்கு
    2. ஆமாம்.. அப்போது இது போல எழுத்து
      மிகப் பிடித்தது. வயதானால் எண்ணங்கள் மாறுமோ.

      நீக்கு
    3. இருக்கலாம். ஆனால் அவர் பிரமிக்கிறார்.

      நீக்கு
    4. எனக்குத் தெரிந்து இந்துமதி எழுதியது "தரையில் இறங்கும் விமானங்கள்" மட்டுமே! :)))))

      நீக்கு
    5. பானுமதி வெங்கடேஸ்வரன்15 மே, 2022 அன்று AM 8:46

      @கீதா சாம்பசிவம்: நீங்கள் இந்துமதி எழுதிய 'வீணையில் உறங்கும் ராகங்கள் ' படித்ததில்லையா? அவர் எழுதிய கதைகளில் அவருக்கும், எனக்கும் பிடித்த கதை அது.

      நீக்கு
  8. ஸ்னோ வந்த போது நீங்கள் எழுதிய கவிதை மௌன சாட்சியான
    மரங்களை உயிர்ப்பிக்கிறது.

    என் பதிவாக இருக்க சான்ஸ் இல்லைமா.
    அருமையான பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
  9. அச்சோ பாவம், அந்த ஆடு ராமா.ஆடு.
    என்ன ஒரு சோகம் முகத்தில்!!
    :((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

    பதிலளிநீக்கு
  10. //ஸ்னோ வந்த போது நீங்கள் எழுதிய கவிதை மௌன சாட்சியானமரங்களை உயிர்ப்பிக்கிறது.

    என் பதிவாக இருக்க சான்ஸ் இல்லைமா.
    அருமையான பின்னூட்டம்.////அச்சோ பாவம், அந்த ஆடு ராமா.ஆடு.என்ன ஒரு சோகம் முகத்தில்!!
    :((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((//

    மறுபடியும் உங்கள் இந்த இரண்டு கமெண்ட்ஸ் என் மெயில்பாக்சில் இருக்கிறது.  இங்கு காணோம் அம்மா!

    நான் உங்கள் தளத்தில் என்று நினைத்தேன்.  அப்போ கோமதி அக்கா தாமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. "அது இல்லை..." "நான்..." "இருங்க.." "அவர்... " சரியாக டியூன் ஆகாத அந்தக் காலத்து ஷார்ட் வேவ் ரேடியோ ஸ்டேஷன் போல திக்க வேண்டும்!''
    ஹிஹிஹி.

    சிலசமயம் நான் இப்படித்தான் இருக்கிறேனோ என்ற சந்தேகம் என்னுள்
    வரும்:(
    பிள்ளைகளிடம் பேசுகிற அவசரத்தில் அப்படி ஆகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  என்னிடம் பேசும்போது அப்படி இல்லைம்மா..   சொல்லப்போனால் நம் நண்பர்கள் யாருமே இன்றைய கேட்டகரியில் வரவில்லை!

      நீக்கு
    2. //அச்சோ பாவம், அந்த ஆடு ராமா.ஆடு.என்ன ஒரு சோகம் முகத்தில்!!// ஆட்டைக் காணோமே! ????

      நீக்கு
    3. ஆமாம், எனக்கும் அபுரிதான்!

      நீக்கு
    4. :)))))))))))))))))))))))))))))))))))))))) ஆட்டுவிக்கப்படும் அனுமன். ஆட்டுபவர் குரங்காட்டி.

      நீக்கு
  12. இந்த அலைபேசி உரையாடல் பலரது வாழ்லிலும் நிகழ்ந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரையாடல்கள் என்று இருக்கலாம் இல்லையா?!  நன்றி ஜி.

      நீக்கு
    2. கூப்பிட்டுட்டே" என்பார்கள். ரெகுலர் டயலாக்! அவர்கள் மனதில் திறமையாய்ச் சமாளிப்பதாய் நினைப்பு! ஓரிரு சமயங்களில் "அப்போ நீங்க டயல் பண்ணுங்க" என்று வைத்து விட்டதும் உண்டு.''

      அட ராமச்சந்த்ரா. இவ்வளவு விஷயங்களைக் கோர்த்து
      சொல்வதற்கே நிறைய தெம்பு வேண்டும் ஸ்ரீராம்!!!
      ஆனால் அத்தனையும் உண்மை.

      அற்புதமான பதிவுக்கு மனம் நிறை வாழ்த்துகள் மா.

      நீக்கு
    3. எப்படியோ ஒரு வியாழன் கடந்தது!!

      நீக்கு
  13. நீண்ட நேரம் பேசிவிட்டு, "யாரிடம் ?" என்று கேட்டால், "சும்மா wrong number, பொழுது போச்சி" என்று சொல்பவரும் உண்டு...!

    பதிலளிநீக்கு
  14. யார் அந்த கேவலமான பாடலாசிரியர்...?

    பதிலளிநீக்கு
  15. மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை

    இதற்கு காரணம் :-

    அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு...

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  17. அவர்? குறிப்பு :-
    சூரியகாந்தி பூவை நினைக்க வைத்தது...!

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு. தொலைபேசி உரையாடல் விபரங்கள் எல்லாம் அருமை. நம்ம வீட்டில் மாமா பேசினார் எனில் ஆரம்பத்திலிருந்தே யார் என்றே புரிஞ்சுக்க முடியாது. எதிர்த்தரப்பில் என்ன பேசுவாங்களோ/தெரியாது. இவர், "ஆமாமா!" "ம்ம்ம்ம்" "அதானே" என்றே சொல்லிக் கொண்டிருப்பார். புரிஞ்சுக்கறாப்போல் ஒரு வாக்கியமோ/சொல்லோ வராது. கடைசியில் பேசி முடிச்சுட்டு வைக்கும் வரை நாம பொறுமையாக் காத்திருக்கணும். :)))))) அப்புறமாச் சொல்லும்போதும் பாதி விஷயங்களை மறந்துடுவார். நினைச்சு நினைச்சுச் சொல்லுவார். :))))))

    பதிலளிநீக்கு
  19. வரேன் அப்புறமா. வேலைகள் காத்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  20. 'வெயில் விடியலா’! ஏன், மெட்ராஸ் .. நல்ல மெட்ராஸ்.. இப்போ ஒரே குளுகுளுன்னு இருக்கா!

    என்னமோ போங்க.. இந்த ’விடியல்’ங்கற வார்த்தையைக் கேட்டாலே ஒரு குமட்டல். ‘சடியல்’ன்னு இந்தி வார்த்தை ஒன்னு இருக்கு... இருங்க, இன்னொரு காப்பி குடிச்சிட்டு வர்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  இது 'அதற்கெ'ல்லாம் முன்னாடி எழுதியதுங்க...!

      நீக்கு
  21. ஹாஹாஹா ஸ்ரீராம் இந்த தொலைபேசி அலை பேசி அனுபவங்கள் நிறைய உண்டு. இதிலும் நான் ஒரு அனுபவக் கதை எழுதி...ஹிஹிஹிஹிஹி...இல்லை இல்லை பென் ட்ரைவோடு போகவில்லை. சமர்த்தாக என் மீள் பார்வையை எதிர்பார்த்து, காத்துக் கொண்டிருக்கிறது!!!

    எனக்குப் பல சமயங்களில் உங்கள் குரலும் பாஸின் குரலும் ஒரே போல இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் குரலும் பாஸ் குரலுமேவா?   அட...  என்ன ஒற்றுமை!  குரலொத்த தம்பதியர் போலும் நாங்கள்!

      நீக்கு
  22. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. காலிங்க் பெல் அனுபவம் வாசித்த போது இந்தக் கருத்துகளைப் பார்த்தேனே. நான் அங்கு போட்ட கமென்ட் போகவே இல்லை....

    கீதாக்கா சொல்லாமல் விட்டது சனி ஞாயிறு அதனால் குட்டிப் பசங்க பெல் அடிச்சு ஒளிந்து கொள்ளும் விளையாட்டோ? அதாக இருக்கும் என்று நினைத்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...    போட்டுக் கொடுத்துட்டீங்களே...!!!

      நீக்கு
    2. அந்தக் கருத்தை நானும் தேடினேன் தி/கீதா. கிடைக்கலை. :( என்னவோ போங்க. போட்ட உடனே காணாமல் போகின்றன.

      நீக்கு
  24. இந்த ஹலோ ஹலோ வில் இப்போதைய நெட்வொர்க்கில் பல சமயங்களில் ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்காது அதாவது நெட்வொர்க் அப்படி. மீண்டும் கட் செய்து விளிக்க வேண்டும். அது போராடி போராடி ஒரு வழியாகிவிடும். சும்மா சாதாரண அழைப்பு என்றால் பரவாயில்லை முக்கியமானது என்றால் ஏதேனும் ஒரு வழியில் வாட்சப், எஸ் எம் எஸ் அலல்துமெயிலில் டைப்ப வேண்டும்,

    கீதா

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் வியாழன் கதம்பம் அருமையான பதிவாக உள்ளது.

    எப்படித்தான் வியாழனில் இந்த முதல் பகுதியை எப்போதும் போல் சுவாரஸ்யமாக அமையுமாறு எழுதுகிறீர்களோ? உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    /சிலருக்கு சில வழக்கம் உண்டு. நீங்கள் ஃபோன் செய்தாலும், உங்களுக்கு அவர்கள் ஃபோன் செய்தாலும் அவர்களேதான் பேசுவார்கள். உங்களுக்கு பேச சிறு இடைவெளி கூட கொடுக்க மாட்டார்கள். தப்பித்தவறி மிகச் சிறிய இடைவெளி கிடைத்து நீங்கள் பேச முயற்சித்தாலும் வியர்த்தம்தான்/

    ஹா.ஹா.ஹா உண்மைதான்.. எனக்கும் இந்த இக்கட்டுகள் நேர்ந்துள்ளது. நாம் பேச நினைத்ததை சுத்தமாக மறந்து விடுவோம். அல்லது இடையே நினைவுக்கு கொண்டு வந்து பேச ஆரம்பிப்தற்குள் அவர்கள் அதிக நேரமாகி விட்டதென கூறி தொடர்பை துண்டித்து விடுவார்கள்.

    தெள்ளத்தெளிவாக தொலைபேசி பேச்சுகளின் விவரணைகளை விவரித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  நீங்கள் சொல்லி இருப்பதை - "ஐயோ..  எனக்கு வேலை இருக்கிறது வச்சுடவா?"  - கிட்டத்தட்ட அதையே ஒரு சம்பவமாக எழுத நினைத்து ஆரம்பிக்கும்போது போகப்போக அது இப்படி மாறி விட்டது.

      நீக்கு
    2. நான் நிறையத் தரம் இந்தத் தொ(ல்)லை பேசி உரையாடலில் மாட்டிக் கொண்டு தவித்திருக்கேன். அதிலும் சில உறவினர்கள்! கரெக்டா நான் சமைக்கும்போது பத்தரையிலிருந்து பதினொன்றுக்குள் தான் கூப்பிடுவாங்க. அடுப்பில் வதக்கவோ/பொரிக்கவோ எண்ணெய் வைச்சிருந்தாக் கட்டாயம் தொலைபேசி அழைப்பு வரும். நினைவாக அடுப்பை அணைச்சுடுவேன் என்றாலும் அவங்க தொலைபேசியை வைக்கவே மாட்டாங்க. நேரம் ஆக ஆக மனது கிடந்து பரிதவிக்க நான் மோனோசிலபிளில் பதில்சொல்லுவதைக் கூடக் கண்டுக்க மாட்டாங்க. அப்புறமா வலுக்கட்டாயமாப் பாதி சமையலில் இருக்கேன், அப்புறமாக் கூப்பிடறேன்னு சொல்லிட்டு நான் வைச்சுடுவேன். அவங்க மற்றச் சில உறவினர்களிடம் "கீதாவிடம் பேசவே கூடாது! நமக்கெல்லாம் வேலை இல்லையா என்ன? ரொம்பவே அலட்டல்!" என்று சொல்லுவதாகக் கேள்விப் படுவேன். என்ன செய்ய முடியும்?

      நீக்கு
    3. பெரும்பாலும் மத்தியானம் 2 மணிக்கு மேல் நாலரைக்குள் கூப்பிடுங்கனு சொல்லுவது தான். அந்த நேரம் அவங்க ஓய்வு நேரமா இருக்குமோ என்னமோ! சாயந்திரமும் சிலர் சரியாக ஆறு/ஆறரைக்குக் கூப்பிட்டால் கிட்டத்தட்ட ஏழு மணி வரை வைக்க மாட்டாங்க. இரவு உணவு தயாரிக்கணும்னு சொன்னாக் கூடச் சிலர் புரிஞ்சுக்காமல் இப்போ என்ன மணி ஆறு/ஆறரை தானே ஆகுது? அதுக்குள்ளேயே சாப்பிட்டுடுவியா? காலம்பரச் சீக்கிரமாப் பசிக்காதா? என்றெல்லாம் கேட்பாங்க. மருத்துவர் எங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை அடிக்கடி வருவதால் இரவு உணவைப் படுப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னாடி சாப்பிடச் சொல்லி இருக்கார்னு சொன்னாலும், அவங்கல்லாம் அப்படித் தான் சொல்லுவாங்கனு சாதாரணமா அதைத் தூக்கிப் போட்டுடுவாங்க! :)))))

      நீக்கு
    4. //எப்படித்தான் வியாழனில் இந்த முதல் பகுதியை எப்போதும் போல் சுவாரஸ்யமாக அமையுமாறு எழுதுகிறீர்களோ? //

      அது சுஜாதா கற்றுத் தந்த பாடம். (கற்றதும் பெற்றதும்) சுஜாதா சின்ன சின்ன வாக்கியங்களாக எழுதுவார். ஸ்ரீராம் கொஞ்சம் பெரிய வாக்கியங்களையும் (complex sentences ) எழுதுவார்.

      நீக்கு
    5. சிலர் அவங்க சீரியல் பார்க்கற நேரத்துல கூப்பிடவே மாட்டாங்க, கூப்பிட்டா பேசவும் மாட்டாங்க கீதா அக்கா..  என் அலுவலக அதிகாரி ஒருவர் இரவு ஒன்பதரைக்கு மேலதான் அழைப்பார்!  நான் ஒன்பதுக்கே கொர்ர்ர் டைப்!

      நீக்கு
    6. //ஸ்ரீராம் கொஞ்சம் பெரிய வாக்கியங்களையும் (complex sentences ) எழுதுவார்.//

      Noted!

      நீக்கு
    7. உண்மை. ரசிக்கும் எழுத்துக்கள்.

      நீக்கு
    8. நீங்க வேறே ஶ்ரீராம். சீரியல் பார்க்கறச்சேக் கூப்பிட்டாப் பேசிடலாமே! :) ஆனால் மத்தியானங்களில் வேலைகளை முடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் படுத்து எழுந்துக்கலாம்னு போய்ப் படுத்த உடனே அழைப்புகள் தொடர்ச்சியாக வர ஆரம்பிக்கும். ஸ்டார் ஹெல்த்/எங்களோட ஆரோக்கியத்தை மேம்படுத்த,
      "பெண்"களூரில் இருந்து ட்ரேடிங்கிற்கு/எங்களோட பண வசதியை மேம்படுத்த, திருச்சியில் வீட்டு மனைகள் வாங்க/வீட்டு மனை வாங்கிக் கட்டப் பணத்துக்கு எங்கே போறது? இதைத் தவிர்த்தும் உங்களுக்கு அதில் பரிசு இதில் பரிசு. இந்தக் குறிப்பிட்ட பிரபலத்தோடு நக்ஷத்திர ஓட்டல் உணவுனு வரும் அழைப்புகள். (இது இப்போக் கொஞ்சம் குறைஞ்சிருக்கு) இப்படி தினம் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அழைப்புகள் மத்தியானம் இரண்டு மணியில் இருந்து நான்கு மணிக்குள் வந்துடும். அதன் பின்னரோ/அதன் முன்னரோ வராது!

      நீக்கு
    9. விளம்பர அழைப்புகள் எல்லாம் பெரும்பாலும் அழைப்பே காட்டிக்கொடுத்து விடும்.  இல்லாவிட்டாலும் மறுபடி மறுபடி வரும்பொழுது நம்பர் பழகி எடுக்காமல் இருந்து விடலாம்!

      நீக்கு
    10. பல எண்களை "ப்ளாக்" செய்திருக்கேன். என்றாலும் புதிய எண்களில் அழைப்பார்களே! :(

      நீக்கு
  26. //காலை வணக்கம் சகோதரரே
    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.//

    வாங்க கமலா அக்கா...   வணக்கம்.  பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம் அந்தக் காலம் இந்தக் காலம் என்றெல்லாம் இல்லை. எல்லாக் காலங்களிலும் எல்லாம் உண்டு. அது அப்போது பெரிதாகப் பேசப்படவில்லை. கதாநாயகிகள் கூட அரைகுறை ஆடையில் வந்தார்கள்.

    இதை நான் இங்கு எபியில் புதன்? வியாழன்? பதிவில் ஒரு கருத்தில் சொன்ன நினைவு.

    அப்போது ஒரு வேளை இப்போதைய டிஜிட்டல் படங்கள் போல பளிச்சென்று இல்லாததால் கறுப்பு வெள்ளை அல்லது ஈஸ்ட்மென்ட் கலரில் இருந்ததால் கண்ணில் படலையோ ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்ல வந்ததும் அதுதான்.  எடுத்துச் சொல்லவும் எதிர்த்துச் சொல்லவும் அப்போது ஆட்கள் இல்லை.  கண்டுக்காம போனாங்க...  

      நீக்கு
  28. முருகன் பாடுவதாக அமைந்த பாடல், அதற்கும் முன்னே சங்க இலக்கியத்திலும் இருக்கிறதே இன்னும் இலை மறை காயாகவும், வெளிப்படையாகவே. ஒரு வேளை தமிழின் சுவை முன்னிறுத்தப்பட்டதால் , மொழி மயக்கத்தில் இது தெரியவில்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  29. கவிதை படித்த நினைவில் இல்லை. நகைச்சுவைத்துணுக்குகள் நினைவில் வந்து வந்து போகின்றன. ஶ்ரீவள்ளியில் அது லக்ஷ்மி அம்மா "என்றென்றும்" "குமாரி ருக்மிணி' இல்லையா? படம் பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமாரி ருக்மணி என்றுதான் ஞாபகம். நடிகை லக்ஷ்மியின் பாட்டி இல்லை? கவிதை எப்பவோ வேறு தளத்தில் எழுதியது.
      .

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐஸ்வர்யாவின் பாட்டி. லக்ஷ்மியின் அம்மா.

      நீக்கு
    3. ஓ..  எனக்கு அவ்வளவாய் தெரியாது.  மன்னிக்கவும்!

      நீக்கு
  30. பாவம் அந்தக் குரங்கார்! சோர்ந்து போய் மனம் நொந்து போய் உட்கார்ந்திருக்கார் போல! மனதை வேதனைப் படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  31. பொதுவாக அலைபேசி,தொலைபேசியில் நான் மிகச்சுருக்கமாகத் தான் பேசுகிறேன். மிக நெருங்கிய, பள்ளிக்கால நண்பர்களிடம் பேசும்போது மட்டும் அதிக நேரம் பேசுகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் வாசித்திருக்கிறேன். மிகவும் உணர்வு பூர்வமான கதை. இந்துமதி அவர்கள் கதையின் இடையில் விவரிக்கும் எண்ண ஒட்டங்கள், பரசு மேலே படிக்க ஆசைப்பட்டு முடியாமல் போகும் போது அந்த மனம் எல்லாம் நம் மனதை என்னவோ செய்யும்.

    அவர் சுட்டியிருக்கும் இப்பகுதியை வாசிக்கும் போது நிஜமாகவே ரொம்ப சங்கடப்படும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விகடனில் வந்தப்போப் படிச்சது தான். பின்னர் படிக்கவில்லை. என்றாலும் கதை நினைவில் இருக்கு!

      நீக்கு
  33. பாட்டுக்கு பாட்டு

    என்று முடியும்
    இந்த பனியின் தாக்கம்

    என்று விடியும் என்
    வெயிலின் மோகம்.

    ஜோக்ஸ் ஓகே

    பதிலளிநீக்கு
  34. மூதாதயரைக் கடந்து சென்றுவிட்டேன். முதலில் தியானம் செய்கிறாரோ என்று பார்த்தால் சங்கிலி....முடியவில்லை கடந்துவிட்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  35. துணுக்குகள் - காதலி - ஹிஹிஹி...

    காலிலே வந்து விழுந்த - ஹாஹாஹா...வார்த்தை விளையாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. பைபை ஸ்ரீராம், சமர்த்தா ஸ்கூலுக்குப் போய் படிச்ச பாடமெல்லாம், விளையாடியது, குறும்பு பண்ணினது எல்லாம் ஒண்ணு விடாம அடுத்த வியாழன் இங்க சொல்லணுமாக்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி.. சில குறும்புகள் ரொம்ப அசட்டுத்தனமான இருக்கும்!

      நீக்கு
    2. ஹலோ ....எபி ஆசிரியர்னா வீட்டுப்பாடம் தரமாட்டாங்கனு நினைச்சீங்களா!!!! இது தமிழ் வகுப்புக்கான வீட்டுப்பாடமாக்கும்!

      இந்த வாரம் ஸ்கூல் பையன். சினிமால ஒரே சீன்ல பெரியவராவது போல நீங்களும் ஹோம்வொர்க்குக்குப் பயந்து டபால்னு அடுத்த வாரம் காலேஜ் பையனா வந்து பை பை சொல்லிடுவீங்களோ! ஹோம்வொர்க் அசைன்மென்டாகிடும்!!!

      கீதா

      நீக்கு
    3. இருங்க... பாஸை சிலேட்டு வாங்கி வரச் சொல்லி அனுப்பி இருக்கேன்!

      நீக்கு
  37. கவிதை செம. இன்ஸ்டன்ட், ஆன் த ஸ்பாட் எப்படித்தான் உங்களுக்கு வந்து கொட்டுதோ கவி பனிமழை நல்லகாலம் உறைவதற்குள் கொட்டிட்டீங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
  38. வானரம் கட்டுண்டு கிடக்கும் படம் மிகவும் பழையது.. எவ்வித குறிப்பு எழுத்துக்களும் இல்லாமல் வந்த காலத்திலிருந்து இன்று வரை அந்தப் படத்துடன் ஈவிரக்கம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என்றால் - நீங்களுமா ஸ்ரீராம்?..

    பதிலளிநீக்கு
  39. 1933 படப்பாடல் வரி ப்ரமாதம். ஆரோ எழுதியது!

    பதிலளிநீக்கு
  40. ஃபோன் இருக்கிறதே.. இந்த ஃபோன்...
    மனிதன் என்னதான் தனக்கு வசதி செய்துகொள்வதாக நினைத்து எதை எதையெல்லாமோ கண்டுபிடித்தாலும்.. அவன் விதி ஒருநாளும் அவனை விடாது!

    பதிலளிநீக்கு
  41. @ கீதா..

    // மூதாதயரைக் கடந்து சென்றுவிட்டேன்..//

    சும்மா அது ஒரு கோட்பாடு தானே தவிர அதுவே உண்மையல்ல...

    நாமெல்லாம் மகா முனிவர்களின் வழி வந்திருக்கின்றோம்.. காஸ்யபர், பிரஜாபதி என்பதெல்லாம் மிகப் பெரிய விஷயங்கள்..
    காஸ்யபர் எனும் முனிவரால் தோற்றுவிக்கப் பட்ட மனித உயிர்ளைக் கொண்டுள்ளதால் உலகிற்கு காசினி என்றொரு பெயர்..

    காசியபருக்கு அதிதி, திதி என இரு மனைவியர்.. அதிதி மூலமாக நல்ல குணங்களும் திதி மூலமாக தீய குணங்களும் ரூபங்கொண்டு தோன்றின..

    இதற்கிடையில் காசியபர் மாயை எனும் பெண்ணுடன் நேரங்கெட்ட நேரத்தில் கூடிக் களிக்க சூரபத்மன் முதலான அசுர சேனை.. இது முருகப் பெருமானால் முற்றாக அழிக்கப்பட்டது..

    ஆயினும் இப்போது இருப்பவை தைத்ய வம்சம்.. இது வேறு விதம்..

    ஆகவே , வானரங்களை முன்னோர்கள் எனக் கொள்ள வேண்டாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. __/\__

      நல்ல தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. துரை அண்ணா நன்றி துரை அண்ணா. விவரங்களுக்கு.

      கீதா

      நீக்கு
  42. இன்றைய பதிவு அருமை.. அருமை.. தொலைபேசியுடன் இப்படியானவை எப்போதும் இருந்தது கிடையாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலைபேசி என்றிருந்தால் எல்லா அனுபவங்களும் இருக்கவேண்டுமே!

      நீக்கு
    2. போன் உரையாடல் , ஜோக்ஸ் , பேயார், என நல்ல நகைச்சுவை.

      நீக்கு
  43. அலைபேசி உரையாடல்களில் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களுடன் கூட மற்றொன்றும் சம்பவித்ததுண்டு. குறிப்பாக வீட்டுப் பெண்களுக்கு. ஏதேனும் ஒருவன் இரவில் 11 மணிக்குப் பிறகு அழைத்தல். 11 மணிக்கு மேல் எனும் போது ஏதோ ஒரு டிவியில் மிட் நைட் மசாலா என்று வந்ததே (இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை) அது போன்ற வார்த்தைகள் பேசுவது. தினமும் வந்து கொண்டிருந்தது. அதன் பின் போலீஸில் சொல்லுவோம் என்றதும் அதன் பின் வரவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இது நடந்திருக்கிறது. போலீஸுலும் சொல்லி அவனைக்
      கிண்டியில் பிடித்தார்கள்.பயங்கர அனுபவம்.

      நீக்கு
    2. எனக்கும் வந்திருக்கிறது. யாரென்றும் கண்டுபிடித்தோம். அது தனிக்கதை!

      நீக்கு
    3. நான் இதைக் குறித்துச் சில பதிவுகள் எழுதினேன்.

      நீக்கு
  44. கவிதை அம்சமாக இருக்கிறது. கருத்தினில் கூடக் கவிதை படைக்கும் திறமையைக் கண்டு வியக்கின்றேன்.

    துரை செல்வராஜு ஸாரும் கூட அப்படி எழுதியதை வாசித்து ரசித்திருக்கிறேன்.,

    தற்போது ஜெகே ஸாரும் உங்கள் அணியில் என்று நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  45. ஆபாசங்கள், விரசங்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. அக்காலகட்டத்தில் சினிமா தியேட்டர்களில் மட்டும்தான் காட்சிகள் அல்லது சினிமா போஸ்டர்கள். அவ்வளவுதான். வீட்டில் வரவேற்பரையில் டிவி இல்லாத காலம். இப்போது கைக்குள்ளேயே. இது ஒன்றுதான் வித்தியாசம்.

    நீங்கள் சொல்லியிருப்பது சரிதான், ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரசம் என்று அவற்றுக்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியதில்லை, வாய்ப்பில்லை!

      நீக்கு
  46. நகைச்சுவைத் துணுக்குகளை ரசித்தேன். குமுதத்தில் வந்தவையோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் சகோதரரே

    கவிதை கருத்துடன் நன்றாக உள்ளது.

    புலரும் ஒவ்வொரு நாளின் விடியலும், வெய்யில் உட்பட ஒவ்வொன்றின் உயிர்த்தெழுதலை காணும் எதிர்பார்ப்பான ஒரு ஆவலில்தான் புலர்கின்றன.

    எழுத்தாளர் இந்துமதியின் எண்ணங்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் வீட்டில் மத்தியான அழைப்பு சகோதரி கீதாரெங்கன் அவர்கள் கூறியது போலத்தான் இருக்கும்மென காலையிலேயே நானும் நினைத்தேன். அதை சொல்வதற்குள் இரவாகி விட்டதுதான் கொடுமை. ஹா.ஹா.ஹா

    ஜோக்ஸ் அனைத்தும் அருமை. வெடியின் மன்னிப்பு வெகு அருமையாக உள்ளது. தாமதமான கருத்துரைக்கு நானும் வெடிபோல் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  எல்லாவற்றையும் படித்து, ரசித்து பாராட்டி இருபப்தற்கு..

      நீக்கு
  48. வியாழன் கதம்பம் அருமை.
    போன் உரையாடல், மற்றும் வாட்ஸ் அப் செய்திகள் பகிர்வு எல்லாம் நாம் எப்போது விழிப்பு நிலையில் இல்லை என்றால் கஷ்டம்.

    என் தளத்தில் இந்த கவிதை இடம்பெறவில்லை. அதிரா தளத்தில் இடம்பெற்று இருக்கலாம்,அல்லது ஏஞ்சல் தளத்தில் இடம்பெற்று இருக்கலாம்.
    கீதா சாம்பசிவம் அவர்கள் மத்தியானம் அழைப்பு மணி காரணம் அணிலார் அல்லது குரங்காரா?
    ராமநாமம் கேட்டது நல்லது.

    நகைச்சுவை துணுக்குகள் அருமை.
    மன்னித்து விட வேண்டியதுதான் காலில் விழுந்த வெடி செய்த காயத்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... உங்கள் தளத்திலும் இடவில்லையா? சரிதான். ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
    2. கோமதி தெரிவிச்சிருக்கும் என்னோட அந்தக் கருத்தையே காணோம். அழைப்பு மணி காரணம் பக்கத்து வீட்டு வாண்டுப்பயல்னு சொன்ன நினைவு.

      நீக்கு
  49. @கீதா அக்கா,

    //கோமதி தெரிவிச்சிருக்கும் என்னோட அந்தக் கருத்தையே காணோம். அழைப்பு மணி காரணம் பக்கத்து வீட்டு வாண்டுப்பயல்னு சொன்ன நினைவு.//

    கோமதி அக்கா பதிவில் இடம்பெற்றிருக்கும் விஷயத்தைச் சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அ.வ.சி. அ.வ.சி. காலம்பர இதைத் தேடினது வெட்டி வேலை. இருக்கிறது பத்தாதுன்னு! :)))))))

      நீக்கு
  50. இந்த வார அரட்டை நன்று. தொலைபேசி தொல்லைகள் அனைவரும் அனுபவித்த ஒன்று. துணுக்குகள் அனைத்தும் சிறப்பு. படம் - வேதனை. அடுத்தவர்களுக்குமானது இவ்வுலகு என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  மனிதன் சுயநலவாதி, மற்ற உயிரினங்களை பொறுத்தவரை ஆபத்தானவனும் கூட.

      நீக்கு
  51. பானுமதி வெங்கடேஸ்வரன்15 மே, 2022 அன்று AM 8:30

    தரையில் இறங்கும் விமானங்கள் கதை வந்த பொழுது நான் பள்ளி மாணவி. இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா? என்று என்னை வியக்க வைத்த எழுத்து. என் வாசிப்பு அனுபவத்தை மடை திருப்பிய கதை என்று கூட சொல்லலாம்.
    இதில் வரும் ருக்மணி யின் பாத வர்ணனையை சைபால் க்ரீம் விளம்பரத்தில் பயன் படுத்திக் கொண்டார்கள்.
    ருக்மணி பாத்திர படைப்பில் கமல்ஹாசனின் மன்னி(சாருஹாசன் மனைவி) யின் பாதிப்பு உண்டு என்று இந்துமதி என்னிடம் கூறினார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!