வியாழன், 5 மே, 2022

தலைப்பு கொடுங்கள்!

சனிக்கிழமை சிங்கப்பெருமாள் கோவில் சென்ற அனுபவத்தில் செவ்வாய் அன்று திருவள்ளூர் வீராகவப்பெருமாளை சேவிக்க சற்று லேட்டாகவே கிளம்பினோம்!  கோவிலை நெருங்கியதும் எங்கள் வண்டியை அணுகிய ஒரு ப்ரோக்கர் "அய்யர் வேணுமா?  எதாவது வேண்டுதலா?  வெளியூரா?  ஏதாவது ஏற்பாடு செய்யணுமா?" என்று ஒரே மூச்சில் கேட்டார்.  'இல்லை உள்ளூர்தான், சாதாரண தரிசனம்தான்' என்றதும் அசுவாரஸ்யமாய் தள்ளிப்போய் அரட்டையை கன்டினியூ செய்தார் அந்த பேண்ட் அணிந்த மத்திய வயது வாலிபர்.

அவரைத் தாண்டும்போது ஒரு டிப்ஸும் கொடுத்தார்.  "சீக்கிரம் போங்க...  ஏழரைக்கு நடை சாத்திடுவாங்க.."



"என்னாது..  நடையை சாத்திடுவாங்களா...   இப்போதானே திறந்திருப்பாங்க...   ஏதாவது கொரோனா லாக்டவுன் அறிவிப்பு நமக்குத் தெரியாமல் வந்து விட்டதா?"  அப்போதே மணி 6.50.  விரைந்தோம்.  




உள்ளே சென்று விவரம் கேட்டதில் ஏழரைக்கு நடை சாத்தி நித்யப்படி பூஜை செய்து மறுபடி ஒன்பது மணிக்கு திறப்பார்களாம்.

தெரிந்திருந்தால் முன்னரே கூட வந்திருக்கலாம்.  ஆனாலும் நல்லவேளை, நேரம் இருந்தது.  சிங்கப்பெருமாள் கோவிலில் என்னடாவென்றால் ஏழரை மணிக்குதான் அபிஷேக, நைவேத்தியங்கள் முடிந்து சன்னதியை திறந்தார்கள்.  இங்கு இப்படி!


கூட்டமில்லாத தரிசனம்.  சயனப்பெருமாளை சந்தோஷமாக தரிசித்து வெளிவந்து கனகவல்லித் தாயாரையும் சேவித்து ஆசி பெற்று, சன்னதியை வலம் வந்து நிறைவு செய்தோம்.  ஆமாம், ஏன் சடாரி வைக்கவில்லை?  அடடா...   

பக்தர்கள் யாரும் இல்லை என்றதும் உள்ளே இருந்த காவலாளி 'வேணும்னா மறுபடி ஒருதரம் கூட உள்ளே சென்று தரிசனம் செய்ங்கம்மா' என்றார்.  கருணை!

சனிக்கிழமையோ, வியாழனோ வந்திருந்தால் கூட்டம் நெருக்கியடித்திருக்கும்.  மூன்று அமாவாசைகள் இங்கு தொடர்ந்து வந்து ப்ரார்த்தித்துக் கொண்டால் பிரார்த்தனைகள் நிறைவேறுமாம்.



அமைதியான கோவிலில் திடீரென மந்திரம் சொல்லும் சப்தம்.  அடடா..  எங்கிருந்து வருகிறது, நாம் கவனிக்கவில்லையே என்று பார்த்தால் ஆண்டாள் சன்னதிக்கருகே ஒரு பக்தர்தான் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் குரலெடுத்து பாசுரங்கள் சொல்லிக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தார்.  

வாசல் கடையிலிருந்தே கொள்ளை ஆரம்பிக்கிறது இந்தக் கோவிலில்.  

பதினைந்து ரூபாய் பூ அதுவும் முதல் நாளைய பூ நாற்பது ரூபாய்.  உள்ளே நுழையும்போதே ஆரம்பம்!

"முழம் எவ்வளவு?"

"நாற்பது ரூபாய்மா..."

"என்னது நாற்பது ரூபாயா?  நேற்று கூட இருபது ரூபாய்தானே"

"விலை நெதமும் ஏறிகிட்டே இருக்குல்ல...  எவ்வளவு அஞ்சு முழம் போடவா?"

"நானும் இந்த ஊர்தான்மா.."

"அப்போ வீட்டிலிருந்தே பூ எடுத்துக்கிட்டு வந்திருக்க வேண்டியதுதானே?"

காவலாளிகள் உங்களிடம் காசு எதிர்பார்க்கிறார்கள் என்பதை பச்சையாக அவர்கள் ந உ பா களில் காட்டுகிறார்கள். 

தரிசனம் முடிந்து ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும் ஒரு முதிய பெண்மணி வந்து 'பூ வாங்கிக்கோ' என்றார்.  'வேண்டாம் வாங்கி விட்டோம், கிளம்புகிறோம்' என்று சொல்லியும் விடவில்லை.  அதே மாதிரி இவரும் பழைய பூவை வைத்துக்கொண்டு நாற்பது ரூபாய் என்றார். 

சரி, வயதானவராக இருக்கிறார், தர்மம் என்று கேட்காமல் வியாபாரம் செய்கிறாரே என்று இருபது ரூபாயைக் கொடுத்து 'இதற்கு என்ன பூ வருகிறதோ அதைக் கொடுங்கள்' என்றோம்.

பூவைக் கையில் தந்து விட்டு "இன்னும் இருவது ரூபாய் கொடு" என்றார். "என்னம்மா..  வயசானவங்களா இருக்கீங்களே என்று தேவை இல்லாத போதும் உங்களிடம் பூ  வாங்கினால் இப்படி செய்கிறீர்களே" என்றால், "முதல் போணி கொடுத்தாலே ஆச்சு" (அடடே நம்ம ஒரு வியாழன் தலைப்பு...) என்றார்.  அப்புறம் 'பத்து ரூபாயாவது கொடு' என்றார்.  

சொல்ல மறந்து விட்டேனே முதலில் கொடுத்த 20 ரூபாயை "முதல் போணி" சாங்கியங்களுடன்தான் உள்ளே போட்டுக்கொண்டார்.  பணத்தை கண்களில் ஒற்றி, அதை கோபுரத்தை நோக்கிக் காட்டி, எங்களை ஒரு சுற்று சுற்றி...   

ஹப்பாடி........

இவர்தான் பூ விற்ற முதிய பெண்மணி 

இவர் காசுக்கு அல்லாடிக் கொண்டிருக்கையிலேயே ஒரு யாசகப்பெண்மணியும் வந்து கைநீட்ட...(அடடே...  இன்னொரு வியாழன் சப்ஜெக்ட்..  யாசகசாலை!)   நான் அவரிடம் இவர் பூ விற்று காசு கேட்கிறார் என்று எடுத்து இயம்பியும் அவர் அகலுவதாக இல்லை.

பூ விற்ற பெண்மணியிடம் வேறு வழி இல்லாமல் பத்து ரூபாய் கொடுத்து கிளம்புகையில் கவனித்தது, அந்த பத்து ரூபாயை அந்தப் பெண் அந்த யாசகப்பெண்ணிடம் தந்து நகர்ந்ததை.

பூ விற்ற பெண்ணின் அடாவடியை கண்டிப்பதா, இந்தச் செயலைப் பாராட்டுவதா?  வேதாளக்கேள்வி!  மௌனம் கலையும் முன் அடுத்த விஷயத்துக்குச் சென்று விடுகிறேன்.

ஏற்கெனவே இந்த ஏரியாவில் ஒரு "பெரம்பூர் ஸ்ரீநிவாஸா" ஹோட்டல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  எங்கள் அடுத்த பயணம் அதை நோக்கியதாக இருந்ததது.  பக்திப் படலம் முடிந்து பந்திப் படலம்!

ஊரப்பாக்கம் A2B யில் ஏமாந்தது போல இங்கு ஏமாறவில்லை இங்கு.  அருமையான ரவா தோசை, சட்னி, சாம்பார் எல்லாமே சுவை, சுவை, சுவை!  இந்தக் கடைக்கு நல்ல பெயர் உண்டு என்று ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.  பாரம்பரிய மிக்க பழைய கடை. நிறைய கிளைகள் சென்னையில் உண்டு.
ஓரத்துல கொஞ்சம் மொறுமொறுவை காணோம்!  படம் எடுக்கும் முன் ஆர்வம்!

என் அருகாமை டேபிளில் 65 அல்லது 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து அமர்ந்தார்.  சற்று நேரம் கழித்துப் பார்க்கும்போது அவர் சாம்பார் இட்லி (சாம்பாரில் மூழ்கிய இட்லிகள்) சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  இந்தக் கடையில் சாம்பார் இட்லிகளை சாம்பார் வைக்கும் பாத்திரம் போன்ற ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு பரிமாறுகிறார்கள் என்று  தெரிந்தது.  எப்படியும் அந்த பாத்திரத்தில் ஐந்தாறு இட்லி தேறும்.  அதுவும் பெரிய இட்லி.

இப்படிப் பார்ப்பது அநாகரீகம்தான் என்றாலும் அடுத்தவர் விரும்பிச் சுவைப்பதை பார்த்து நமக்கும் ஒரு ஐடியா கிடைக்குமே...  ஹிஹிஹி...  நான் 'பூரி ஆளுக்கு ஒரு செட்' என்றேன்.  'ஒரு செட்டில் மூன்று இருக்கும்' என்றார் சர்வர்.  'அப்புறம் எப்படி அதை செட் என்று சொல்கிறீர்கள்' என்று நான் கேட்டதை அவர் மதிக்கவில்லை, ரசிக்கவில்லை!

இரண்டு செட் என்று சொல்லி, வந்ததை ஆளுக்கு இரண்டு இரண்டு என்று சாப்பிட்டோம்.  

நான் காபிக்கு காத்திருந்த நேரத்தில் அருகாமை 65 அடுத்த ஆர்டர் கொடுத்து வீட்டுக் காத்திருக்கிறார் என்று தெரிந்தது.  எனக்கு காபி வந்தபோது அவருக்கும் அடுத்த ஆர்டர் வந்தது.  மறுபடியும் சாம்பார் இட்லி!

நானும் முன்பு சில சமயங்களில் ஒரே ஐட்டமே இரண்டு முறை ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறேன்.  அட, கல்யாணத்துக்கு முன் ஒருமுறை அதிகாலை காபி சாப்பிடும் கடையில் அன்று காபி நன்றாய் இருந்ததால், ஒன்றை முடித்து இன்னொன்று ஆர்டர் செய்து குடித்திருக்கிறேன்.

ஆனாலும் காலையில் கடை இட்லி பத்து அல்லது பனிரெண்டு என்னால் முடியாது என்றுதான் தோன்றியது!  நான் பார்த்ததை அவர் பாஸோ, அல்லது வீட்டாரோ பார்த்திருந்தால் வீட்டுக்குப் போனதும் அவருக்கு சுற்றி போட்டிருப்பார்கள்!  தனியாகத்தான் வந்திருந்தார், பாவம்.  என்ன நிலைமையோ!

=============================================================================================================

எழுத்தாளர் சார்வாகன் அப்பாவுக்கு அறிமுகமானவர்.  இருவரும் ஒரே இடத்தில் சிலகாலம் பணிபுரிந்திருக்கிறார்கள்.  சார்வாகன் மறைந்த செய்தியைச் சொன்னபோது அப்பா எந்த உணர்ச்சியையும் காட்டக் கூடிய நிலையில் இல்லை.  அப்போது எங்களுக்குத் தெரியாது அடுத்த நான்கு மாதத்தில் அப்பாவும் மறைந்து விடுவார் என்று...

செப்டம்பர் 7 சார்வாகன் பிறந்தநாள்.  அதையொட்டி தினமணியில் 2021 செப்டம்பர் 7 ஆம் தேதி வந்த கட்டுரை...

சார்வாகன்.  தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்.  தொழுநோயாளிகள் நீட்ட மடக்க முடியாத விரல்களுக்கு தீர்வு கண்டு ஐ.நாவால் பாராட்டப்பட்ட டாக்டர்.

சார்வாகன் என்று தமிழ் இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் சீனுவாசன் தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, தொழுநோய் மருத்துவர் மற்றும் மடக்க நீட்ட முடியாத தொழுநோயாளிகளின் விரல்களை நீட்டி மடக்க வைக்கும் மூட நீக்கியால் முறையை அறிமுகம் செய்து ஐ நா வின் பாராட்டையும், இந்திய அரசின் விருதையும் ஒருங்கே பெற்றவர்.


தமிழகத்தின் அன்றைய வடாற்காடு மாவட்டத்தின் வேலூரில் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் தேதி அன்று பிறந்தார்.  இவரின் தந்தை மருத்துவர் ஹரிஹரன், ஆரணியில் முதல் ஆங்கில மருத்துவர்.

ஆரணி நகரில் பள்ளியிறுதி வரை முடித்த சீனிவாசன், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார்.  பின்னர் இங்கிலாந்தில் இரண்டு எப் ஆர் சி எஸ் பட்டங்களை முடித்தார்.  1954 ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார்.  இலண்டனில் திருமணம் நடந்தது.  எண்பதுகளில் மூன்று ஆண்டுகள் போர்ட்லேண்ட் நகரில் இருந்தார்.

இந்தியா திரும்பிய சீனிவாசன் முதலில் முடநீக்கியல் வல்லுனராக தனது பணியைத் தொடங்கினார்.  1960 ல் மங்களூரிலுள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றினார்.

அங்கு தொழுநோயிலிருந்து குணமான அப்துல்லா என்பவரின் நீட்ட, மடக்க முடியாத விரல்கள் மற்றும் கரங்களைக் கண்டு எதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முயற்சி செய்தார்.  ஒரு பிரத்யேக முறையில் முயன்று சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து வியக்கத்தக்க வெற்றியைக் கண்டார்.

.அப்துல்லா இயல்பு நிலையை அடைந்தார்.  அதன்பின் தொழுநோய் குணமானபின்னும் மடங்கிய விரல்கள் நேராகாமல், உணர்ச்சி திரும்பாமல் இருந்த விரல்களுக்கு இவர் கண்டுபிடித்த அறுவை சிகிச்சை முறை பலரது கைகள் இயங்க உதவியாக இருந்தது.

இப்புதிய கரசீரமைப்பு அறுவை சிகிச்சை முறையை ஐ நா சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பு அழைத்துப் பாராட்டியதோடு, "சீனிவாசன் முறை" (SRINIVASAN TECHNIQUE) என்று இவரது பெயரையே இம்முறைக்கு சூட்டியது.  இதற்காக இவருக்கு 1984 ல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனையில் பணியில் சேர்ந்து, அதன் இயக்குனராக உயர்ந்து, 1984 ல் பணிஓய்வு பெற்றார்.

அதன் பிறகு பல்வேறு நாடுகளின் மருத்துவ கழகங்களிலும், உலக சுகாதார அமைப்பின் சார்பாக வருகைதரு பேராசிரியராகவும், எண்ணற்ற மருத்துவ முகாம்களை நெறிப்படுத்துபவராகவும் பணியாற்றினார்.

பார்க்கவே அருவருப்பாக உணரும் தொழுநோயாளிகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணம் செய்தவர்.  எவரிடமும் கட்டணம் என்று எதையும் வசூலித்ததில்லை.

இவரது தாத்தா கிருஷ்ணய்யர் வேலூரில் காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்தராக  இருந்தார்.  அவர் பெரியதொரு நூலகத்தை வைத்திருந்தார்.

அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறிய வயதில் படித்து தனது படிப்பு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.  எழுத்தில் ஆர்வம் கொண்ட இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார்.

இவரின் 'கனவுக்கதை' என்னும் சிறுகதை 1971 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக 'இலக்கியச் சிந்தனை' பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் சில, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன.  இவர் எழுத்துகள் தொகுப்பக 41 சிறுகதைகள், 3 குறுநாவல்கள், என 500 பக்கங்களுடன் 'சார்வாகன் கதைகள்' என்ற பெயரில் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

காந்திய மற்றும் மார்க்சியத்தின்  பற்றுள்ளவராக இவர் கடைசிவரை விளங்கினார்.

அவரது கடைசி நாட்களில் அவரைச் சந்தித்தது பற்றி எழுத்தாளர், கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் குறிப்பிடுகிறார்..

"கடைசியாக ஒருநாள் அவர் என்னை தொலைபேசியில் அழைத்தார்...

"வந்து பார்த்துவிட்டுப் போய்விடுங்கள்...  அடுத்த மாதம் நான் இல்லாமல் போய்விடலாம்.."

எனக்குப் பதற்றமாக இருந்தது.  சென்னையில் இருந்த அவரை  பார்க்க நான் உடனே போனேன்.   தளர்ந்த நிலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் இனிமையும், சிநேகமும்  அவர் முகத்தில் இன்னமும் பரவியிருந்தன.

"உங்களையெல்லாம் ஒரு தடவை பார்த்துவிடலாமென்றிருந்தது.  இன்னும் ஓரிரு நண்பர்களிடமும் சொல்லி விட்டேன்.  டாக்டராக இருபபால் இப்படி ஒரு தொல்லை.  என் உடல்நிலை எனக்கே தெரிந்துபோய் விடுகிறது

என் பழைய அனுபவம் ஒன்றை உங்களுக்குத் சொல்ல வேண்டும்.  உங்களுக்குத் தெரியுமா?  எங்கள் குடும்பத்தில் அத்தனைபேரும் டாக்டர்கள்.  என் மனைவி உட்பட!  என்ன பிரயோஜனம்?  தின்பப்டி வழக்கமாக என் மனைவி என்னைத் தவறாமல் விடியற்காலம் எழுப்பி விடுவாள்.  'வாக்கிங் கெளம்புங்கோ' என்று உத்தரவு போட்டுவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக்கொள்வாள்.  சில காலத்துக்குப் பிறகு விடியலில் அவள் உத்தரவு போடாமலேயே அவள் என்னை விரட்டுவது போல தோன்றி நானே எழுந்து விடுவதும் உண்டு.

பத்து வருஷத்துக்கு முந்தி அன்றும் நான் அப்படிதான் எழுந்து அவளை நன்றாகக் போர்த்தி விட்டு வாக்கிங் போனேன்.  ஒரு மணிநேரம் கழித்த்துதான் வந்தேன்.  நன்றாகத் தூங்கி கொண்டிருந்தாள்.  நான் அவள் தூக்கத்தைக் கலைக்க விரும்பவில்லை.

நானே காபி தயாரித்துக் கொண்டு, கூடத்தில் பேப்பரை விரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.மணி 9.30 க்கு மேல் ஆகிவிட்டது.  அங்கே வந்த என் மகள். "ஏன், அம்மாவை எழுப்பவில்லையா?  இன்னுமா தூக்கம்?" என்றாள்.  

"தூங்கட்டுமேடீ.. ஏதோ அசதியாயிருக்கலாம்" என்றேன்.

"நோ..  நோ...  எழுப்புங்கள்.  நேரமாகி விட்டது" என்று உள்ளே போனாள்.  நான் உள்ளேபோய் விதவிதமாக அவளை எழுப்ப முயன்றேன்.  அவள் கண்விழிக்கவே இல்லை.  கைகள் சில்லிட்டுப் போயிருந்தன.  கலக்கமுடன் அவசரமாக இன்னொரு இதய டாக்டரைக் கூட் டி வந்து காண்பித்தோம்.

"உங்கள் மனைவி இறந்துபோய் இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது" என்றார்.

என்னால் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.  அவள் காலையிலேயே இறந்துபோய் விட்டாள்.   இரண்டு மணி நேரமாக மனைவி இறந்ததை உணராமல் நான் காபி குடித்துக் கொண்டு கூடத்தில் ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.  இப்படி ஒரு விபரீதமான சோகமா எனக்கு?

அவர் கண்ணில் ஈரம் துளிர்த்தது.  "ஆனா இப்ப என் விஷயத்தைப் பாருங்கள்..   என் முடிவு எனக்கு சந்தேகமாக நிச்சயமாகவே தெரிந்து விட்டது.  மாதம், தேதி, கிழமை கூட சொல்லி விடலாம்.  அந்த அளவுக்கு ஆண்டவன் எனக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டார்.

என் மனைவியைப்போல் நான் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் சாகமுடியாது. இப்போது விடிந்தால் எல்லோருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி என் சாவுதான்.  அப்படி ஒரு ராசி எனக்கு!" என்று சிரிக்க முயன்றார்.

அவருக்கு பலமாக இருமல் வந்து விட்டது.  "நிச்சயம் அடுத்த மாதம் வருவேன்.  இதே கதையை மீண்டும் என்னிடம் சொல்லி நீங்கள் சிரித்துக் கொண்டிருப்பீர்கள் சார்...   வரட்டுமா?" என்று விடைபெற்றேன். 

மூன்று நாள்கள் கழித்து, டிசம்பர் 21, 2015 அந்த செய்தி அவர் குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது.
===========================================================================================================

பாஹே தூறல்கள்  


முடியாததா என்ன 

'கீழே விழுந்து விடுதல்' அடிக்கடி நடக்கிறது.  நடக்கையில் அல்ல, நடத்தையில்.  உடல் விழுவது இல்லை, மனம்.

அது ஏன்?  விடை தெரிகிறது.  பயிற்சி போதாது.  பழக்கம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

உடல் விழுவதில் ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை.  மனம் அப்படி அல்ல.அது மேலோங்கியே, ஒரு உன்னத நிலையிலேயே இருந்தாக வேண்டும்.  ஜெயிப்பது என்பதே அதுதானே!

பலவற்றில் ஏற்கெனவே விழுந்தாயிற்று.  இதிலாவது எழ, நிற்க, நீடிக்க முடிந்தால் அதுவே பெரிய விஷயம்.

பாரதி கர்ஜிக்கிறான் 'பெரிதினும் பெரிது கேள்'

==========================================================================
கவிதை முயற்சி - தலைப்பு கொடுங்கள்!

அனைவரையும் போல நானும் அவரை தினமும் பார்க்கிறேன்.
அனைவரையும் போல நானும் அவரை லட்சியம் செய்யாமல் 
என் வேலையை கவனித்துக் கடந்து செல்கிறேன். 
ஆனாலும் அவ்வப்போது உறுத்துகிறது, கேள்வி ஒன்று மனதில் தளும்புகிறது.
பார்க்கின் நடைபெஞ்சில் முடிந்தவரை ஓரமாக அமர்ந்திருப்பார்.  
வெள்ளைக் கதர்  வேஷ்டி, சற்றே பழுப்பான ஆனால் வெண்மை நிறம் கொண்ட 
மேல்பட்டன் கழற்றி விடப்பட்ட மேல்சட்டை 
அருகில் வேறு யாரும் அமர்ந்தால் மெல்லவே எழுந்து 
வேறிடம் தேடிப்போவார். 
வெறும் கைகளில் அலைபேசி கூட இருக்காது 
காலி கதர் பாக்கெட்டில் காசும் இருக்காது. 
மெலிந்த உடலும் இல்லை, பருமனும் இல்லை, 
எனினும் சீக்கிரமே மெலிவார் என்று தெரிகிறது. 
யாருடனும் பேசுவதில்லை.  எதையும் நிலைத்து கவனிப்பதில்லை. மனிதர்களிடம் நம்பிக்கை இல்லாதது போல 
எல்லாவற்றிலிருந்தும் விலகியே இருக்கிறார்.  
காலை சில மணி நேரம்.  மாலை பல மணி நேரம்...  
எப்போது வருகிறார், எங்கிருந்து வருகிறார் 
எப்போது செல்கிறார் என்று இங்கு யாருக்கேனும் 
தெரியுமா, தெரியாது.
" அதை எதுக்கு சார் கேட்டுகிட்டு?  அவரவருக்கு 1000 கஷ்டம்..
எதையாவது கேட்டு யாராண்டையும் பேசாத அவர் வேறு இடம் தேடினால் 
பக்கத்தில் வேறு இடம் கூட கிடையாது, பாவம்..  விட்டுடுவோம்"
- காவலாளி கதிரேசனின் கரிசனம்.
அருகில் சென்றால் விலகிச் செல்லும் அவரிடம் கேட்டு 
எப்படி நான் காரணத்தை அறிவது?
கேட்டுதான் புதிதாய் எதை நான் அறிந்துகொள்வேன்?
அறிந்துதான் என்ன செய்யப் போகிறேன்?
கவனம் செலுத்தாத மகனோ மகளோ வீட்டில் இருக்கக் கூடும்.
அலைபேசியில் மடங்கி, மனித உறவை அலட்சியப்படுத்தும் 
பேரன் பேத்திகள் இருக்கலாம்.
வாழ்வாதாரத்துக்காக வாழ்வின் பாதி 
இவரின் தேவைகளை கவனிக்காம லிருக்கலாம்.
புரிந்து விலகி போதிய இடைவெளி கொடுத்து வாழும் 
பெண்களிடையே 
அனுசரித்துப் போகத் தெரியாத ஆண்களால் நிறைந்தது உலகு!
நானெப்படி இருப்பேனோ?
எனக்கான ஒரு பார்க்கில் அங்கிருக்கும் 
கடைசி பெஞ்சின் ஓரத்தில் எனக்கான இடமொன்றும் 
காத்திருப்பதாய் நினைத்து கடந்து செல்கிறேன் 
என்றும் போல இன்றும்!
==============================================================================================================

ரசிக்க ஒரு படம்..

======================================================================================================

அட, மஞ்சரியில் கூட சினிமா விளம்பரம்! எவ்வளவு சிம்பிளான விளம்பரம்!


ஆர் சூடாமணியை யாரே அறியார்?  இரண்டாம் பரிசு.  துரோணனை நான் அறியேன்!

ஹலோ மை டியர் ராங் நம்பர்....

புது தியேட்டர்னா புதுப்படம்; பழைய தியேட்டர்னா பழைய படம்..  

அந்த முதல் பரிசு பெற்ற தொடர் நாடகம் 'கலங்கரை விளக்கம்' நாடகத்துக்கு கோபுலுவின் ஓவியம்.

மட்டையும் மண்டையும்!  விகடன் ஜோக்!


அடடே...  என்ன இப்படிப் போட்டுட்டீங்க...!
===============================================================================================================

 என்னைத் தேடினீங்களாமே...  உங்களுக்கெல்லாம் தமன்னாவும், இன்னொருத்தர்.. ம்ம்ம்...   அது யாரு..   'அ' வில் ஆரம்பிக்குமே...   அனுஜா..  சே.. இல்லை அனுஷ்க்கா  அவங்களை எல்லாம்தானே பிடிக்கும்?  எப்படி இந்த வாரம் "பை" சொல்ல என்னைக் கூப்பிட்டிருக்காங்க எங்கள் ப்ளாக்ல..




184 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லாருக்கும்!!!

    ஹாஹாஹா இந்த வாரம் பை பாவனா?

    வருகிறேன் எல்லாம் பார்த்துவிட்டு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  வணக்கம்.   ஆமாம், நெல்லை தன் லிஸ்ட்டில் பாவனா பெயர் சொல்லி இருந்தாரே...

      நீக்கு
    2. ஆமாம் ல!!! இப்பத்தான் நினைவு வருது!!! ஹாஹாஹா தமனாவிலிருந்து பாவனாவுக்கா!!!

      ..ஆனால் இது மேக்கப் இல்லாத அழகான படம்!!!

      கீதா

      நீக்கு
    3. பாவனா அவிட் ஆஃப் த இண்டஸ்ட்ரி இல்லையோ!!!???? நெல்லைக்கு வயசாகிப் போச்சு!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. பாவ்னா கேஜிஜி சார் ஆளுன்னு பட்சி சொல்லுது

      நீக்கு
    5. பட்சி சொல்வது என்ன - நம் வாசகர்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தானே !!

      நீக்கு
    6. இப்போ ஏதோ படத்தில் பாவனா நடிப்பதாகக் கேள்வி. இந்தப் படத்தில் இருப்பவர் தான் பாவனாவா? செய்திகளைப் படிக்கும் அளவுக்குப் படங்களைப் பார்த்து மனதில் நிறுத்திக்கொள்ளாமல் இருக்கேன். :))))

      நீக்கு
  2. திருவள்ளூர் கோயில் படங்கள் அசத்தல் ஸ்ரீராம்.

    அட! அங்குக் கூட்டமில்லா தரிசனமா!! அதெல்லாம் எங்களுக்குப் பல வருடங்கள் முன்பு அதன் பின் சென்ற போதெல்லாம் கூட்டம்தான். வரிசையில். ஆனால் நாங்கள் சென்ற சமயம் எல்லாம் பெரும்பாலும் 8,9 மணி அளவில் அல்லது மாலையில் தான். எனக்கோ கூட்டம்னாலே அலர்ஜி.

    நல்ல கூட்டமில்லா தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டமாயிருந்தால் எனக்கும் ரொம்ப அலர்ஜி கீதா..

      நீக்கு
  3. இதுவரை இந்தக் கொள்ளைக்குப் போனதே இல்லை ஸ்ரீராம். எந்தக்கோயில் சென்றாலும் அப்படியே உள்ளே போய் பிரார்த்தித்து வந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.

    இரண்டு வாரத் தலைப்பு அனுபவங்கள் மீண்டும்! ஹாஹாஹா

    //பூ விற்ற பெண்ணின் அடாவடியை கண்டிப்பதா, இந்தச் செயலைப் பாராட்டுவதா? வேதாளக்கேள்வி! //

    ராபின்ஹூட்!!!!! ஹாஹாஹா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு கேட்பது வேறொன்றுக்கு!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம், புரிந்தது எதற்கென்று...

      கீதா

      நீக்கு
    3. இந்தக் கொள்ளைக்குப்

      நீக்கு
    4. அவர் கொள்ளையடிக்கும் கடைக்குப் போவதில்லை என்று சொல்கிறார்.

      நீக்கு
  4. இங்கு அடுத்துகருத்து போட முடியாமல் மத்த பதிவுகளுக்கும் போய் நல்லகாலம் அங்கு போய்விட்டது அப்ப இங்கும் மீண்டும் போகும் என்று வந்தாச்சு.

    தலைப்பு கேட்பது வேறொன்றிற்கா! பார்க்கிறேன்

    நீங்கள் சொல்லியிருக்கும் விவரங்களைப் பார்க்கும் போது அந்த உணவகத்திற்குச்சென்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். என்ன சாப்பிட்டேன் ? நினைவில்லை..நான் பெரும்பாலும் எந்த உணவகம் சென்றாலும் ரவா தோசை சொல்வது வழக்கம்!!!! அல்லது அங்கு ஏதேனும் புதிய பெயருள்ள பதார்த்தம் இருந்தால் அதை முயற்சிப்பது வழக்கம்.

    மூன்று வருடங்கள் ஆகிவிட்டது வெளியில் சாப்பிட்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கியம் எல்லோர் வாழ்விலும்
    நிறைந்து இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலங்கரை விளக்கம் ,கோபுலு படம்!!!!
      அழியாத சித்திரம். என்ன அழகு. என்ன லாவகம். அந்தக் கரங்களை

      மனதார வணங்குகிறேன்.

      நீக்கு
    2. ஆம் அம்மா. திறமையான கரங்கள்.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. பை பை பாவ்னா. இன்னு நடிக்கிறாரா என்ன!!!:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விவகாரமான கேரளச் சம்பவத்துக்குப் பின் தற்சமயம் எதிலோ நடிப்பதாகக் கேள்வி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    "நிரப்ப இயலா வெற்றிடம்" தங்கள் அருமையான உணர்வு மிகுந்த கவிதைக்கு இந்தப் பெயர் பொருந்துமா? முதலில் ஆழ்ந்து படித்த தங்களது கவிதையை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. மண்டையை உடைத்தாரளா, மட்டையை உடைத்தார்களா.

    சந்தேகமா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  11. மருத்துவர் ஸ்ரீனிவாகன்-எழுத்தாளர் சார்வாகன் என்று மட்டுமே தெரிந்திருந்தது. அவரது கதைகள் என்னவாக இருக்கும் என்று இணையத்தில் தேடிய போது விகடனில் வந்த இவரது காந்தீய மார்க்ஸிஸ்ட் சிந்தனை உள்ளவர் என்று அவரைப் பற்றிய சிறு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அவருக்கு இந்த வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை நிறைவாக விடைபெற்றார் என்று வாசித்தது நினைவில் உள்ளது. அது போல இங்குக் குறிப்பிட்டிருக்கும் சந்திப்பு நிகழ்வை வாசித்த போது அங்கும் அதே சொல்லப்பட்டிருந்தது அதுவும்
    //மூன்று நாள்கள் கழித்து, டிசம்பர் 21, 2015 அந்த செய்தி அவர் குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது.//

    இந்த வரிகளைப் பார்த்த போது.....எழுத்தாளர் வைத்தீஸ்வரன் அவர்கள் இதை எழுதியதாகக் குறிப்பிட்டிருந்ததும் நினைவுக்கு வருகிறது.

    விகடன். காம் லும் ஒரு எழுத்தாளர்தான் என்று நினைக்கிறேன் இதையும் சொல்லித்தன் குற்ற உணர்வையும் வெளியிட்டிருந்தார் அதாவது சார்வாகன் எழுத்தை அவர் மறையும் முன்னரேயே முழுமையாக வாசிக்காமல் விட்டுவிட்டேனே என்று.

    எழுதியவரின் பெயர் நினைவில் இல்லை.

    கீதா

    கருத்து போகிறதா இந்த முறையேனும் போக வேண்டும்! இதை அனுப்ப முயற்சி செய்துகொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன்.



    பதிலளிநீக்கு
  12. சார்வாகன் பற்றிய செய்தி ஒரு பக்கம் மருத்துவராக அவரது கண்டிப்பிடிப்பு வியப்பு மறு புறம் எழுத்தாளராக. கடைசியில் மனதை நெகிழச் செய்துவிட்டது அவரது உரையாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இனிமேல் வாராவாரம் கோவில் தரிசன கட்டுரைகளை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நல்லது தான். ஆட்டோ சார்ஜ் கட்டுப்படியாகுதா? 

    சார்வாகன் என்றால் என்ன அர்த்தம். ஒன்றும் விளங்கவில்லை. புதுமைபித்தன் போன்ற பெயர்கள் புரிகின்றன. (புதுமை + விருப்பம்)
    அப்பா உங்களைப்போலவே தத்துவப் பிரியர் போலும். நான் என்பது முன்னிலைப் படுத்துவது எல்லா செயல்களிளுமே. 
    //
    பலவற்றில் ஏற்கெனவே விழுந்தாயிற்று.  இதிலாவது எழ, நிற்க, நீடிக்க முடிந்தால் அதுவே பெரிய விஷயம். //  அந்த இது எது? 

    பாட்டுக்கு பாட்டு. 

    இப்போது புரிகிறது 
    விலகிச்செல்லும் அவரும் நீங்களும்
    ஒத்த துருவங்கள். 
    அதை அவர் உணர்ந்தார் 
    நீங்கள் உணரவில்லை. 

    தமன்னாவும் அனுஷ்காவும் பை சொல்ல வராததுக்கு காரணம்  அவங்க வேற ஆளை பிடிச்சுக்கிட்டாங்க. ஆமா உங்க பேர் என்ன? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்தில் இருந்துகொண்டு இந்த மல்லுவை தெரியாதா !! ஆச்சரியமா இருக்கு!!

      நீக்கு
    2. மேக்கப் இல்லாமல் நடிகைகளை பார்த்தால் அடையாளம் தெரியாதுங்க. மேலும் நான் சினிமா பக்கமே போகமாட்டேன். 

      Jayakumar

      நீக்கு
    3. சார்வாகன் என்பது சமஸ்க்ருத சொல். மெய்யியல் கோட்பாடு சார்ந்த சொல். அதாவது அதாவது கடவுள், மறுபிறவி, மாயை போன்றவற்றை மறுப்பது. ஒரு வேளை இவர் மார்க்ஸிஸ்ட் சிந்தனை உள்ளவராக இருந்ததால் அப்படி வைத்திருக் கொண்டிருக்கலாம். அவரைக் கேட்க முடியுமோ இனி?

      இதன் பொருளை, தமிழில் மிக அழகாக எழுதி வந்த விஜு ஜோசஃப் என்பவர் உலகாயதம் பற்றி எழுதிய போது தெரிந்து கொண்டது. அருமையாக எழுதுபவர் ஆனால் ஏனோ அதன் பின் அவர் தொடரவில்லை.

      கீதா

      நீக்கு
    4. மஹாபாரதத்தில் கூட இப்பெயர் வருமே.

      இதன் தமிழ்ப் பொருள்தான் உலகாயதம். அவர் ஒவ்வொரு கோட்பாடுகள் - சமண மெய்யியல் பற்றி எல்லாம் எழுது வந்த போது சில வலையில் தேடித் தெரிந்துகொண்டதுதான்.

      கீதா

      நீக்கு
    5. வாராவாரா கோயிலா?  இல்லீங்க...  நடுவுல Gap விட்டுடுவோம்!

      நீக்கு
    6. சார்வாஹம் பற்றி நிறைய எழுதலாம். :)) இப்போல்லாம் இல்லை, பயப்படாதீங்க! :))))

      நீக்கு
  14. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  15. //ஏன் சாரி வைக்கவில்லை?// "சடாரி" எனத் திருத்துங்கள். இன்னும் 2,3 கண்களில் பட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்திவிட்டேன் - கண்ணில் பட்டவைகளை

      நீக்கு
    2. நன்றி கேஜிஜி.  பார்க்கிறேன் இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று.

      நீக்கு
  16. பதிவை மேலோட்டமாய்த் தான் பார்த்தேன். நீண்ண்ண்ண்ண்ட பதிவு. மெதுவாய் வரேன். சார்வாகன் மனதைத் தொட்டார்.

    பதிலளிநீக்கு
  17. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலிலும் காலை விஸ்வரூப தரிசனத்தின் பின்னர் ஏழு, ஏழரை போல் நடையைச் சார்த்தி அரை மணி கழித்து மீண்டும் திறப்பார்கள். அதே போல் பத்து/பத்தரைக்கும். பின்னர் மதியம் பனிரண்டரைக்கு நடை சார்த்திப் பின் ஒன்றரை மணிக்குத் திறந்தால் மாலை ஐந்தரை வரைக்கும் தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஒருவேளை கூட்டம் சேரவேண்டும் என்று காத்திருக்கிறார்களோ என்றும் எனக்குத் தோன்றும்!!

      நீக்கு
    2. ஓஹோ.. 

      செல்லும் முன் அந்தந்தக் கோவில்களின் நடைமுறைகள் தெரிந்து கொண்டு போவது நலம்தான்.

      நீக்கு
    3. //ஆம். ஒருவேளை கூட்டம் சேரவேண்டும் என்று காத்திருக்கிறார்களோ என்றும் எனக்குத் தோன்றும்!!// அதெல்லாம் இல்லை. பாஞ்சராத்ர ஆகம முறைப்படி செய்யும் பூஜை முறைகளில் பெருமாளுக்குக் காலை இத்தனை மணிக்குத் திருவாராதனம், அடுத்தது இத்தனை மணிக்கு எனக் குறிப்பிட்ட நடைமுறைகள் உண்டு. அந்த நடைமுறையைப் பின்பற்றும் வைணவக் கோயில்களில் இப்படித் தான். வைகானசம் எனில் வேறு மாதிரி. காஞ்சி வரதருக்கு வைகானசம் என நினைக்கிறேன்.

      நீக்கு
    4. துவாரகையில் கிருஷ்ணனுக்கும் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் நிவேதனங்கள், ஆடை மாற்றுதல் உண்டு. அப்போத் திரை போடுவார்கள். தரிசனம் இருக்காது. ஆனால் நாம் சந்நிதியிலேயே உட்கார்ந்து காத்திருக்கலாம். அதே போல் புரி ஜகந்நாதருக்கும். அங்கே உள்ளூர் மக்களும் ஒரிசாவாசிகள் அனைவரும் ஜகந்நாதரை "மஹாப்ரபு" என்றே சொல்வார்கள்.

      நீக்கு
    5. திருப்பதியிலும் இந்த நடைமுறை உண்டு. நமக்குத் தெரியாது.

      நீக்கு
    6. திருப்பதியில் கொஞ்சம் கொஞ்சம் மாறும். ஆனால் மண் சட்டி நிவேதனம் தான் முக்கியம். தினம் ஒரு புதிய சட்டி.

      நீக்கு
    7. இதுக்குப் போட்ட கருத்தும் மெயிலில் வந்திருக்கு! திருப்பதியில் கொஞ்சம் கொஞ்சம் மாறும் எனவும் நிவேதனத்துக்குப் புது மண் சட்டி ஒவ்வொரு நாளும் எனவும் சொல்லி இருந்த நினைவு. :(

      நீக்கு
  18. நாங்க அம்பத்தூர் நாட்களில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு அமாவாசை அன்று போய் வந்திருக்கோம். காலை எழுந்து சமைச்சு வைச்சுடுவேன். அவர் தர்ப்பணம் முடிச்சதும் கோயிலுக்குக் கிளம்பிப் போயிட்டு மத்தியானம் பனிரண்டு மணி போல் வீட்டுக்கு வந்து சாப்பிடுவோம்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இந்த வார வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தரிசனம் நல்லபடியாக கிடைத்தமைக்கு வாழ்த்துகள். சில சமயங்களில் இறைவனின் இந்த மாதிரி மனதுக்கு நிறைவான தரிசனம் கிடைத்து மறக்க முடியாத ஒன்றாகி விடுகிறது.

    என் கணவரின் நண்பர் வீடு திருவள்ளூர். அவரைக்காண அவர் வீட்டுக்குச் சென்ற போது இந்த கோவிலுக்கு முன்பு எண்பதுகளில் நாங்களும் ஒரு தடவை சென்ற நினைவுள்ளது. ஆனால் கோவிலைப்பற்றிய விபரங்களை சரியாக கூறுமளவுக்கு நினைவாற்றால் இப்போது இல்லை. . .

    கோவிலை விட அந்த இட்லி புராணம் நன்றாக இருந்தது அறுபத்தி ஐந்து (வயது) சாப்பிட்ட அழகை விவரித்த விதத்தை ரொம்பவே ரசித்தேன். (இந்த மாதிரி நன்றாக சாப்பிடும் போது, எத்தனை பேர் நம்மையும் சுற்றிப் போட வைத்திருப்பார்களோ (இதுவரை வீட்டில் வந்து சுற்றிப் போட்டதில்லை) என எண்ணிய போது இனி ஹோட்டலில் சாப்பிடும் போது கவனமாக பார்த்து சாப்பிட வேண்டுமென தொன்றியது. ஹா.ஹா.ஹா.சும்மா தமாஷ்க்குதான் சொன்னேன்.தவறாக நினைக்க வேண்டாம். ) பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. விரிவான கருத்துக்கு நன்றி கமலா அக்கா.  நான் மற்றவர்களை பற்றிக் கவலைப்படாமல் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு விடுவேன்!

      நீக்கு
    3. சில நேரங்களில் ஒல்லிப்பிச்சான்கள் நல்லா சாப்பிட்டு, போதாக்குறைக்கு சிலபல மைசூர் பாக்கு களைச் சாப்பிடும்போது மலைத்து விடுவேன்.

      ஒரு கேரளத்தின், சாதம் குழம்பு காய் கூட்டு எல்லாவற்றையும் கலந்து மலை அமைத்துப் சாப்பிட்டதும் என்னை மலைக்க வைக்கும்

      நீக்கு
    4. முப்பது வயது வரைதான் அளவில்லாமல், விரும்பியதைச் சாப்பிட முடியும் என்று தோன்றுகிறது. 

      நீக்கு
  20. கோபுர தரிசனம் கிடைத்தது.
    //அவரைத் தாண்டும்போது ஒரு டிப்ஸும் கொடுத்தார். "சீக்கிரம் போங்க... ஏழரைக்கு நடை சாத்திடுவாங்க..//
    அவருக்கு வருமானம் இல்லையென்றாலும் உங்களுக்கு தரிசனத்திற்கு உதவி செய்தாரே!

    பூ விற்பவர்கள் என்று இல்லை எல்லோரும் இந்த "முதல் போணி" என்று சொல்வது "முதல் வியாபாரம் " என்றும் சொல்கிறார்கள்.
    வயதானபூ விற்கும் அம்மா யாசக பெண்ணுக்கு உங்களிடம்10 ரூபாய் வாங்கி கொடுக்கிறாரா!

    கவிதை நன்றாக இருக்கிறது. கவிதைக்கு தலைப்பு "தனிமை" பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் தனிமையை நாடி போவதால் அப்படி சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. 'தனிமை' என்று நானும் யோசித்து வேண்டாம் என்று விட்டேன்!

      நீக்கு
  21. பானுமதி வெங்கடேஸ்வரன்5 மே, 2022 அன்று AM 7:46

    திருவள்ளூர் வீரராகவும் பெருமாள் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகும். மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள். வைத்ய வீரராகவன் என்று நாமம். வைத்தீஸ்வரன் கோவிலில் வேண்டிக்கொண்டு உப்பு,மிளகு போட்டு, குளத்தில் வெல்லம் கரைப்பதை போல இங்கும் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். முன்னர் செய்த ஞாபகம் இருக்கிறது. சீக்கிரம் உடல் நலம் பெறுங்கள் பானு அக்கா.

      நீக்கு
    2. ஓ, உடம்பு சரியில்லையா பா.வெ? கவனமாய் இருங்க. அங்கெல்லாம் எப்படினு தெரியலை மருத்துவம். நம்ம ஊர் மாதிரி இருக்காது. கவனம்.

      நீக்கு
    3. அவர் பதிவு பார்க்கவில்லையா? மறுபடி கொரோனா பாதிப்பு.

      நீக்கு
    4. இல்லையே! இன்னிக்கு மத்யமரில் அவருக்குக் கிடைத்த POTW பற்றிப் பார்த்துட்டு வாழ்த்தினேன். ஆனால் அது என்னிக்குத் தேதினு கவனிக்கலை. பல பதிவுகளுக்கும் போய் நாட்கள் ஆகிவிட்டன. வீட்டில் வேலைகள்/அதோடு மேசன் வேலைகள் வீட்டில் நடக்கின்றன. நாளைக்கு முடியும். அடுத்த படலம் என்னனு தெரியலை. ஆகவே கணினியில் உட்கார்ந்தால் நேரம் போதலை. அதோடு கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் "கர்மா" தொடர் பகுதி இரண்டில் ஆழ்ந்து விடுவேன்.

      நீக்கு
  22. //சார்வாகன். தலைசிறந்த தமிழ் எழுத்தாளர். தொழுநோயாளிகள் நீட்ட மடக்க முடியாத விரல்களுக்கு தீர்வு கண்டு ஐ.நாவால் பாராட்டப்பட்ட டாக்டர்.//

    அவரை பற்றி தெரிந்து கொண்டேன். மனைவி தூங்குகிறார் என்று நினைத்து கொண்டு காப்பி குடித்த விஷயம் சொன்னது நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
  23. துரோணன் அந்தக் காலத்து நல்ல எழுத்தாளர்.
    சூடாமணி ஏ எஸ் ராகவன் எல்லோருக்கும் தெரியும்.
    மிக அருமை மா'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட,  அனைவரையும் அறிவீர்களா அம்மா?

      நீக்கு
    2. ஆமாம் பா. என் வாசக வழக்கம் 9 வயதிலியே ஆரம்பித்தது:)

      நீக்கு
  24. ஸ்ரீராம் உங்கள் அப்பா எழுதிய பகிர்வு அருமை.
    மற்ற பகிர்வுகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா5 மே, 2022 அன்று AM 7:51

    மருத்துவர், எழுத்தாளர் சார்வாகன் பற்றிய தகவல்கள் சிறப்பு.
    அனுஷ்கா இடத்தில் பாவனா...??? என்ன கொடுமை? இப்படியெல்லாம் அனுஷ்காவை அவமதிக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  27. சார்வாகன் என்னும் ஒரு மனித நேயமிக்க‌ மருத்துவரை, நல்ல எழுத்தாளரை, மிகச்சிறந்த மனிதரை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி!
    தலைப்பிலா கவிதை மனதை கனமாக்கியது. இப்போதெல்லாம் முதுமை நிறைய சுமைகளைத்தாங்கி தாங்கி ஒரேயடியாய் மெளனமாகி விடுகிறது. அருகில் அமர்ந்து பேசுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது? அதனால் தான் மெளனமே துணையாகிப்போகிறது நிறைய பேருக்கு!
    ' இருவர் கண்டனர்' படித்தது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.
    கோபுலுவின் ஓவியத்தை வெளியிட்டதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! கொள்ளை அழகு இந்த ஓவியம்! அவரின் ஆரம்ப கால ஓவியம் என்பதால் அத்தனை கோடுகளும் நகாசு வேலகளும் அற்புதமாக இருக்கின்றன! அந்த ஆடவரின் உடையைப்பாருங்களேன். அத்தனை மடிப்புகளும் அபாரம்!
    கோபுலு, வினு இவர்களின் கோட்டோவியங்கள் தான் என்னை சிறுவயதிலிருந்து ' ஏகலைவனாக' வளர்த்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் ஒரு ஓவியராய் கோபுலு வின் திறமைகளை சிலாகித்திருப்பது சிறப்பு.

      நீக்கு
  28. அழகிய படங்களுடன் விவரணம் சுவாரஸ்யமாக இருந்தது தரிசனம் நன்று ஜி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    மருத்துவர், மருத்துவம் குறித்த ஆராச்சியாளர், எழுத்தாளர் என்ற பன்முகம் கொண்ட சார்வாகன் பற்றி படித்த போது மனம் கனத்துப் போய் விட்டது. அதுவும் அவர் தம் நண்பரிடம் மனைவியையும், தன்னையும் பற்றி குறிப்பிடும் போது மனம் கலங்கியது .

    எத்தனை அறிவும், திறமையும், புகழும் இருந்தும் கூட மரணம் எப்போதும் தன் பார்வையில் அனைவரையும் சமமாகத்தான் எண்ணும் போல.... சத்தியமான அதன் மனதை மனிதர்களும் பெற்று விட்டால், மனம் எதற்கும் கலங்க சாத்தியமில்லை. நான் கீதையின் பொருளை உணர்கிறோம் என்ற எண்ணம் சிறிது அவ்வப்போது கொள்ளும் போதும், என் மகனின் அறிவுரையான யதார்த்த கீதையை முழுவதுமாக (அது இந்தப் பிறவியில் சாத்தியமில்லை) இல்லாவிடினும் சிறிதளவாவது உணர வேண்டும். எனத் தோன்றுகிறது. என்னவோ பதிவுக்கு சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை பகிர்கிறேன். மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மகன் கீதை பற்றி என்ன சொன்னார் என்று சொல்லுங்களேன் கமலா அக்கா.. யதார்த்த கீதை?

      நீக்கு
  30. எழுத்தாளர் மருத்துவர் சார்வாகனன்
    கட்டுரை மிக மிக மனதை வர்த்துகிறது. இத்தனை
    நோயாளிகளைக் காத்தவர் தன் மனைவியின் மரணத்தை
    அறிய நேரமாகி இருக்கிறது என்பது
    பெரிய சோகம்.
    மிக நல்ல பதிவுக்கு நன்றி மா.

    பதிலளிநீக்கு
  31. இங்கு அடுத்த பகுதிக்காகப் போட்டவை போகாமல் மேலே நின்று கொண்டிருந்தது!!! அங்கு பார்த்த கருத்திற்குக் கருத்து போட்டால் அந்தக் கருத்து போய்விட்டது! என்னவோ போங்க....ப்ளாகர் ஏனோ இப்படிப் படுத்துகிறது.

    பாஹே அப்பாவின் இப்புத்தகம் முழுவதும் தத்துவ சிந்தனைகள்தான்! பல யதார்த்தம். அனுபவத் தத்துவங்கள் இல்லையா? ஸ்ரீராம்?

    கவிதை அடுத்தாற்போல் வந்தது பொருத்தமாகத்தான் இருக்கிறதோ!

    தொலைந்ததை தேடுகிறேன் தொந்தரவு செய்யாதீர்

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இன்றைய பதிவின் ஒவ்வொரு பகுதியும் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  33. ரசித்தப் படம் சிரித்துவிட்டேன்! மூன்று நிமிஷமே ஓவர் இல்லையோ??!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் மூன்று நிமிடம் எப்படி போதும் என்று சொல்வார்கள்!

      நீக்கு
  34. ஜோக்குகள் ஒகே தான்.

    மற்ற பொக்கிஷங்கள் சிறப்பு.

    ஸ்ரீராம், ஆர் சூடாமணியை அறிவேன் உங்களைப் போல துரோணரை நானும் அறியேன். இன்று அறிமுகம் ஆனார். நன்றி ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏ.எஸ்.ராகவன் நம்ம ஷைலஜாவின் அப்பாவாச்சே! சூடாமணியையும் நன்றாகப் படித்து அறிந்திருக்கிறேன். துரோணர் அதிகம் கல்கி, விகடனில் வருவார். படிச்சிருக்கேன். ஆனால் யார் என விபரங்கள் தெரியாது.

      நீக்கு
    2. //ஏ.எஸ்.ராகவன் நம்ம ஷைலஜாவின் அப்பாவாச்சே! //

      ஓ..  நீங்கள் சொன்னதும் அவர் பிளாக்கில் எப்போதோ அப்பிடித்தது நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
    3. இங்கேயும்! "படித்தது" அப்பிடித்ததுனு வந்திருக்கு! :(

      நீக்கு
    4. இந்தத்தவாறு எனக்கு அடிக்கடி நிகழும் கீதா அக்கா.   அவ்வப்போது திருத்துவேன்.  என் இடது கைச் சுண்டு விரல் எப்போதும் பட்டன் A யில் இருக்கும்.  சட்டென அமுங்கி விடும்!

      நீக்கு
  35. கோயில் வாசல் ஏவாரம் எல்லாமே 96% இன்றும் சொல்வதற்கில்லாதவையே!..
    நம்ம ஆட்களும் கோயிலுக்குத் தானே செலவு என்று நகர்ந்து விடுகின்றார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலை அந்திப் பிழைக்க வேண்டியதுதான். கொஞ்சம் நியாயமாக இருந்தால் தேவலாம்!

      நீக்கு
    2. "அண்டிப் பிழைக்க!" கருத்துப் போட்டிருந்தேன். மெயில் வந்திருக்கு. இங்கே வரலை! :(

      நீக்கு
  36. திருவள்ளுர் சேவை மகிழ்ச்சியாக நடந்தது அருமை.
    அவர் வைத்திய வீர ராகவன். எல்லா நோயும் தீரும் என்று சொல்வார்கள்.

    பூக்கார அவஸ்தை சிரிக்க வைத்தது.
    மாட்டிக் கொள்கிறோமே!!!

    கோவில் படங்களும் கோபுரமும் அருமை.
    திருவள்ளூர்க் குளம் பெருமை வாய்ந்தது.
    பார்த்தீர்களா.
    கோவிலில் பணம் கேட்கும் குணம் வந்துவிட்டதா.
    வருத்தம்தான்.
    கோவிலுக்கு வலது புறம் இருக்கும் ஹோட்டலில் தான் எப்பொழுதும் சாப்பிடுவோம்.
    ரவாதோசையும்
    இட்லி சாப்பிட்டவர் மகிமையும் ஜோர்.
    அன்பு வாழ்த்துகள் ஸ்ரீராம். நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அநேகமாய் சாம்பார் இட்லி சாப்பிட்டிருப்பார்னு நினைக்கிறேன், அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் உள்ள பாலாஜி பவனில் சாம்பார் இட்லி நன்றாக இருக்கும். சுமார் பத்து/அல்லது பதினைந்து இட்லிகள். சின்னச் சின்னதாக. சாம்பாரும் நன்றாக இருக்கும். சாம்பாரில் மூழ்க அடித்த இட்லிகள் மேல் நெய்யை ஊற்றி (மனமான நல்ல நெய்) அதன் மேல் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கித் தூவிக் கொடுப்பார்கள். ஆனால் ஒரு ப்ளேட்டுக்கு மேல் சாப்பிடுவது கஷ்டம்.

      நீக்கு
    2. திருக்குளத்தை படம் எடுக்க நினைத்து மறந்து போனது. நன்றாய்ப் பராமரிக்கிறார்கள், ஆனால் தண்ணீர் இல்லை வல்லிம்மா.

      நீக்கு
    3. சாம்பார் இட்லி என்றுதான் சொல்லி இருக்கிறேன் கீதா அக்கா. ஆனால் மினி இட்லி அல்ல! :))

      நீக்கு
    4. ஓஹோ! சாதா இட்லி எனில் சாம்பார் இட்லி இரண்டு தான் தருவாங்க. இவருக்குக் கூட வேண்டி இருந்ததோ என்னமோ! :))

      நீக்கு
    5. இந்த கீசா மேடம் சொல்வதை நம்பிப் போகலாமா? அந்தக் கடை ஓனர் இன்னும் மாறாமல் இருப்பாரா?

      நீக்கு
    6. அவருடைய கொள்ளுப்பேரன் கடையைப் பார்த்துக் கொண்டிருப்பார்.  ஃபிரைய்ட் இட்லி போடுவார்கள்!

      நீக்கு
    7. பாலாஜி பவன் எல்லாம் சங்கிலித் தொடர் ஓட்டல்கள். ஒரே நிர்வாகம். ஆங்காங்கே ஆட்கள் மட்டும் மாறுவார்கள். இதே பாலாஜி பவன் தி.நகர். பாண்டி பஜாரில் ஒரே காரம். ஆந்திராக் காரம்!

      நீக்கு
    8. பாண்டி பஜாரில் கீதா கஃபேயில் (அதே பழைய ஓனரின் பிள்ளை, பேரன் வகையறாக்கள் தானாம், விசாரித்து ஜாதகத்தையே அலசினோம்.) காஃபியும், அடை/அவியலும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  37. கவிதை முயற்சிக்கு அதையே பெயராக வைக்கலாமே!!

    பதிலளிநீக்கு
  38. மஞ்சரி விளம்பரம் அதிசயம். 1963இல் வந்தபடமோ.

    பார்க் பெஞ்ச் சிந்தனை எல்லோருக்கும் வருவதுதான். வெகு யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  39. கோவில் தரிசனம், மூதாட்டி, சார்வாகன், மஞ்சரி விளம்பரம், துணுக்குகள், பாஹே குறிப்புகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சார்வாகன் குறித்த கட்டுரை மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  40. இங்கேயும் கருத்து வெளியிடப்படவில்லை! ஹாஹா.. எனக்கு மின்னஞ்சலில் வந்து விட்டது. ஸ்பேம் ஆக இருக்கலாம்! :( நான் பகிர்ந்து கொண்ட கருத்து கீழே!

    //கோவில் தரிசனம், மூதாட்டி, சார்வாகன், மஞ்சரி விளம்பரம், துணுக்குகள், பாஹே குறிப்புகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சார்வாகன் குறித்த கட்டுரை மனதைத் தொட்டது.//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எனக்கும் கருத்து மெயிலில் வந்திருந்தது!  நன்றி வெங்கட்.

      நீக்கு
  41. சார்வாகன் பற்றி என் ப்ளாகில் எழுதியிருக்கிறேன். இருந்தும் மேலும் படிப்பது சுகமானது - இப்படி ஒரு பன்முகப் பிரமுகர்பற்றி. இருந்தும் (உலக அமைப்பு அங்கீகாரம் கொடுத்தும், இந்திய அரசு கௌரவப்படுத்தியும்) அவர் பிறந்த தமிழ்நாடு அவருக்கு எந்த அங்கீகாரமும் (ஒரு எழுத்தாளராக) கொடுத்ததாகத் தெரியவில்லை. தமிளரசுகளிடம் எதிர்பார்ப்பதுதான் இது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு எழுத்தாளர். ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் படிச்சேன். ஆனால் அவர் பற்றிய இந்த விபரங்கள் எல்லாம் புதுசு. தமிழ்நாடு சுத்தத் தமிழர்களைத் தான் பாராட்டும். மற்றபடி தமிழ் சொல்லிக் கொடுத்துத் தேவாரத் திருவாசகங்களைக் காத்துப் பாதுகாக்கும் ஆதீனகர்த்தர்கள் கூடத் தமிழர்கள் இல்லை அவங்க கணக்குப்படி. :(

      நீக்கு
    2. நீங்கள் அவர் பற்றி எழுதி இருந்தபோது நானும் படித்து கருத்திட்டிருக்கிறேன் ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
    3. தமிழ்நாட்டில் இப்போது அடக்கும் கூத்துகள் பற்றி சொல்ல முடியாது கீதா அக்கா.

      நீக்கு
    4. தமிழ்நாடு சுத்தத் தமிழர்களைத் தான் பாராட்டும்...//

      ஹ்ம்.. சுந்தரத் தெலுங்கின் வாடை வரணும். அப்பதான் திராவிடன்.. ஒரிசினல் தமிளன் !

      நீக்கு
  42. கோவில் உலா படங்கள், விவரங்கள் அருமை...

    காலை உணவிற்கு முன் உள்ள படம் - வலைப்பூ ஞாபகம்...

    முந்தைய பதிவர்கள் சந்திப்பில் யார் புகைப்படம் எடுத்தாலும், "பதிவிற்கு தானே...?" என்பார்கள்...! ம்... அது ஒரு அழகிய கனாக் காலம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... ஆமாம். இப்போது நிறைய நல்ல பதிவர்கள் எழுதுவதே இல்லை.

      நீக்கு
  43. வழக்கமாக இருவர் தானே அடிக்கடி வருவார்கள்...? இன்று காத்து வாக்கிலே மூணாவது...!

    பதிலளிநீக்கு
  44. இன்று நீ... நாளை நான்...

    ஆனால்...

    நிலையாமை...

    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு

    பதிலளிநீக்கு
  45. ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலின் கோபுரக்கலசங்களுக்கு ஒரு கூண்டு! ஆபத்தான அரசிடமிருந்து கலசங்களையாவது காத்துவைப்போம் என்கிற முன் ஜாக்ரதை நடவடிக்கையோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்ம்? திருப்பணி நடக்கிறது என நினைக்கிறேன். கூண்டெல்லாம் இல்லை என்றே தோன்றுகிறது.

      நீக்கு
    2. ம்ம்ம்ம்? இப்போ மறுபடி பார்க்கையில் கலசங்களுக்குக் கூண்டு போலத் தான் தெரிஞ்சது. :( என்னனு தெரியலை!

      நீக்கு
  46. கோபுலு வரைந்திருக்கும் படம் ஆதி மந்தி/ஆட்டன் அத்தி/மருதி மூவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த முக்கோணக் காதல் பற்றிய நாடகம் இல்லையோ? அது துரோணர் தான் எழுதினாரா? நினைவில் இல்லை. எங்க பள்ளியில் வருஷம் ஒரு தரம் இந்த ஆட்டன் அத்தி/மருதி/ஆதி மந்தி பற்றிய நாடகம் வரும். அதில் எப்படி மருதி ஆதி மந்திக்காகத் தியாகம் செய்தாள் என்பதைச் சொல்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஓ, பரிசு பெற்ற மூன்றுமே தொடர் நாடகங்கள் தான். கலங்கரைத் தெய்வம் நினைவில் இருக்கு. மற்ற இருவர் எழுதினது என்னனு நினைவில் வரலை! :)))) வயசாயிடுச்சோ?

      நீக்கு
    2. அடடா..   வரிசையிலிருந்து எடுத்து விட்டு அந்தப் புத்தகத்தை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே...!

      நீக்கு
  47. நகைச்சுவைத்துணுக்குகள் அனைத்தும் நன்றாகச் சிரிக்க வைத்தன! கடைசியில் இவர் தான் பாவனாவா? ஆனால் எனக்கென்னமோ ஒவ்வொருத்தர் முகமும் ஒரே மாதிரித் தெரியுது. :( ஆனால் இவங்க பற்றிய செய்திகள் தினமும் தினமலரில் வருவதால் அவற்றைப் படிப்பேன். முகம் நினைவில் இருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  48. பாஹேவின் தூறல்களில் நிறைய நனைஞ்சாச்சு! புத்தகத்தைத் தேடி எடுத்தேன். :)

    பதிலளிநீக்கு
  49. கோபுலு அவர்களின் ஓவியம் நகைச்சுவைகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  50. வாராவாரம் கோவில் தரிசனம் நாங்களும் இலகுவாக தரிசிப்போம் நன்றி.
    கோபுலு ஓவியம் சூப்பர். ஜோக்ஸ் ரசனை.
    அனுஸ்கா.....தமனா....பாவனா...........அடுத்து வருவது .....யாரோ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி.  அடுத்ததா?  ம்ம்ம்    பார்ப்போம்!

      நீக்கு
  51. //.. கடந்து செல்கிறேன்
    என்றும் போல இன்றும்!

    நன்னா வேணும்..அந்த மனுஷனுக்கு
    இப்படித்தானே கடந்து போய்க்கிட்டிருந்தாரு
    அவரும் அப்பல்லாம்...

    பதிலளிநீக்கு
  52. சார்வாகன் பற்றிய பதிவு மனதைக் தொட்டது. இப்போதெல்லாம் கவுன்சிலர்களுக்கு பத்மஸ்ரீ என்று இருந்ததை மக்களுக்கானதாக மோடி அரசு மாற்றியுள்ளது மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  53. கவிதைக்கு தலைப்பு கேட்டிருக்கிறீர்கள். (இதைக் கவிதை என்று சொல்வது தங்கள் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.) இதற்குரிய தலைப்பு அதன் வரிகளிலேயே அடங்கியுள்ளது: "கடைசி பெஞ்சின் ஓரத்தில்"

    துரோணன் யார் என்று கேட்டிருக்கிறீர்கள். அந்த நாளில் அவர் எல்லாப் பத்திரிகைகளிலும் நன்கு பிரபலமான எழுத்தாளர்!

    இன்னொரு விஷயம்: ஆர் சூடாமணியின் 'இருவர் கண்டனர்' நாடகம் கலைமகளில் வெளிவந்து கொண்டிருந்த போது நான் தொடர்ந்து படித்திருக்கிறேன். (நான் 7/8/ வகுப்பில் இருந்தபோது.) அப்போது ராஜம் கிருஷ்ணனின் 'மலையருவி'யும் அதே இதழில் படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  அதற்குதான் கவிதை முயற்சி என்று கொடுத்திருக்கிறேன்!

      // ஆர் சூடாமணியின் 'இருவர் கண்டனர்' நாடகம் கலைமகளில் வெளிவந்து கொண்டிருந்த போது //

      விகடனில்.

      நீக்கு
  54. கோயில் படங்களும் உங்கள் தரிசன அனுபவமும் நன்று, ஸ்ரீராம்ஜி.

    மருத்துவர், எழுத்தாளர் சார்வாகன் மனித நேயம் மிக்க மருத்துவர் என்பது தெரிகிறது. அவரைப் பற்றிய பகுதி மனதை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதுவும்கடைசி வரிகள் தன் இறுதி நாளைச் சொன்னது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  55. உங்கள் கவிதை பற்றிச் சொல்லவே வேண்டாம். கருத்துள்ள வரிகள்,
    தவிப்பு
    வெறுமை
    வாழ்வின் விசித்திரம்

    தூறல்களின் துளிகள் அனுபவ யதார்த்தம்.

    ஜோக்குகள் நன்று

    துளசிதரன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!